OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 31 ஜனவரி, 2011

புலிகள் கொன்ற முஸ்லிம்களும், தமிழர்கள் தான்.................இதை சீமானும் சரி, தமீமும் சரி மறந்து விடாதீர்கள்.


முஸ்லிம்கள் அரசியல் களத்தில் இறங்காதவரை தங்களின் உரிமைகளை பெறமுடியாது என்ற கருத்தில் எந்த மறுப்பேதும் கிடையாது. த.மு.மு.க அரசியல் அரங்கில் கால் பதித்ததை மனமார வர வேற்கின்றோம். ஆனால் கடந்த ஜனவரி 16 அன்று திருச்சியில் நடைபெற்ற “அயோத்தி தீர்ப்பும் தேசிய அவமானமும்” என்ற கருத்தரங்கில் தேர்தலை மனதில் வைத்து பேசிய நாம்தமிழர் இயக்கத்தலைவர் சீமானும், மமக துணைப் பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரியும் தங்களின் எல்லையை மீறி பேசியதாகவே நமக்கு படுகின்றது. முதலில் அங்கு பேசிய பேச்சுக்களை த.மு.மு.க இணையத்தில் வந்ததை பார்ப்போம்.

ஜனவரி 16 அன்று திருச்சியில் தமுமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அயோத்தி தீர்ப்பும் தேசிய அவமானமும் என்ற கருத்தரங்கில் சீமானும் அழைக்கப் பட்டிருந்தார். அதில் பேசிய சீமான், “கடந்த காலத்தில் புலிகள், முஸ்லிம்கள் இருதரப்பிலும் தவறுகள் நடந்துள்ளன. புலிகள் சார்பில் நடைபெற்ற தவறுகளுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மறந்துவிடுங்கள். அதை மன்னித்து விடுங்கள். புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கையுடையவர்களாக இருந்திருந்தால் நானும், அண்ணன் கொளத்தூர் மணியும் புலிகளை ஆதரித்திருக்கவே மாட்டோம் என்று பகிரங்கமாகப் பேசியதும், அரங்கமே அதை வரவேற்று ஆதரித்தது.

அடுத்துப் பேசிய மமக துணைப் பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, சீமானின் பேச்சை சுட்டிக்காட்டி மன்னிக்கும் மனப்பான்மை முஸ்லிம்களின் குணம் என்றும், ஒருவர் மீது உங்களுக்கு இருக்கும் கோபம், அவர்களின் நியாயங்களை நிராகரிப்பதாக இருக்கக்கூடாது என்ற குர் ஆன் வசனத்தை (5:8) சூரத்துல்மாயிதா) சுட்டிக்காட்டி இன்று ஈழத்தில் அம்மக்களின் துன்பத்தை எண்ணிப்பார்த்து அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை என்றார். மேலும், சீமான் அவர்கள் விடுதலைப் புலிகளின் சார்பில் பகிரங்க மன்னிப்பு கேட்டபிறகு, நடந்துவிட்ட பழைய துயரங்களை இரு தரப்புமே பெருந்தன்மையாக மறந்துவிட்டு, அடுத்தக் கட்டத்தை நோக்கி ஒருவருக்கொருவர் புரிந்துக்கொண்டு பணியாற்ற வேண்டும் என்றும் பேசினார்.

இருவரின் பேச்சும் அரங்கத்தில் கூடியிருந்த அனைவரையும் சிந்திக்க வைத்தது. இது குறித்து ஆரோக்கியமான மனமாற்றம் எழும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. பாலஸ்தீனத்தில் அநீதி  நடக்கும் போதும், காஷ்மீரில் அநீதி நடக்கும் போதும், குஜராத்தில் அநீதி நடக்கும் போதும் நம்மோடு இணைந்து போராடும் நமது தோழர்களுக்கு, அவர்கள் முன்னெடுக்கும் நியாயமான பிரச்சனைகளில் குரல் கொடுப்பது நமது கடமையாகும்.

என்று கூறியுள்ளனர். கூட்டம் நடந்தது இறை இல்லத்தின் வழக்கு தொடர்பானது. அது தொடர்பாக மட்டும் பேசிவிட்டு செல்லுங்கள். இந்தியாவில் இறைஇல்லத்தினை இடித்தார்கள். ஆனால் இலங்கையிலோ, இறைவனின் இல்லத்தில், புனிதமான மாதமான ரமலானில் வணங்கிகொண்டு இருந்த முஸ்லிம்களை, கொன்ற விடுதலைப்புலிகளை மன்னிக்கும்படி கூறி வக்காலத்து வாங்கி இருக்கும் தமீம் அன்சாரியின் செயல் கண்டிக்கதக்கது. அதற்கு ஆதாரமாக குரானின் வசனத்தையும், பாலஸ்தீனத்தில், காஷ்மீரில் குஜராத்தில் நடந்தவைகளுடன் ஒப்பிட்டு இவர் சாதகமாக பயன்படுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது. 

மேலும் இலங்கையில் முஸ்லிம்களும் தவறு செய்தனர் என்று கூறி இருப்பதால், தமீம் அந்த தவறுகளை பட்டியலிடமுடியுமா?. நாம் இலங்கையில் தமிழர்கள் படும் துயரத்திற்கு ஆதரவு கொடுத்தே ஆகவேண்டும். அதற்காக விடுதலைபுலிகளை மன்னிக்கமுடியுமா?. முடியும் என்றால், அதை முடிவு செய்ய வேண்டியவர்கள் இலங்கையில் தங்களின் உறவினர்களை பலிகொடுத்த இலங்கை முஸ்லிம்கள் ஆவார்கள்.

புலிகளை மன்னிக்க இந்த தமீமுன் அன்சாரி யார்?. இவரின் உறவினரை இலங்கையில் இவர் பறிகொடுத்தாரா?. இல்லை சீமான் விடுதலைபுலியா?. அப்படி என்றால் கோயமுத்தூரில் 19 முஸ்லிம்களை அநியாயமாக பறிகொடுத்தோமே, அதையும் மன்னிக்கலாமா?. குஜராத்தில் கோடிகணக்கில் சொத்துகளையும், ஆயிரக்கணக்கில் உயிர்களையும், வயிற்றில் இருந்த கருவையும் கீறி கிழித்து கொன்றார்களே! அதை மன்னிக்கலாமா?. பாபர் மசூதியை பறிகொடுத்தோமே அதையும் மன்னிக்கலாமா?. பள்ளி இடிப்பையும் மன்னிக்கலாம் என்றால் எதற்கு திருச்சியில் கூட்டம் போட்டீர்கள்?. 

வேண்டாம் சகோதரரே!. அரசியலுக்காக சீமானை ஆதரியுங்கள். ஆனால் ஓட்டுக்காக அவரின் விடுதலைபுலிகளின் ஆதரவு நிலைபாட்டை ஆதரிக்காதீர்கள். மன்னிப்பை விடுதலைப்புலிகள் கேட்கட்டும். அதை இலங்கை முஸ்லிம்கள் ஆமோதிக்கட்டும். பின் நாம் இதில் தலையிடலாம்.

நாம் தமிழர் இயக்க தலைவர் சீமானும் மன்னிக்க சொல்லியுள்ளார். இவர் முதலில் முத்துகுமார் மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்ட இந்திய அரசின் செயல்பாட்டை மன்னிப்பாரா?. இலங்கை இனவாத அரசின் கொடுங்கோலன் ராஜபக்சேவை மன்னிப்பாரா?. கருணாநிதியை மன்னிப்பாரா?. மன்னிக்கும் மனப்பான்மை கொண்ட நீங்கள் பின் ஏன் நாம் தமிழர் இயக்கம் கண்டீர்கள்?. முதலில் இவர்களை நீங்கள் மன்னியுங்கள். பின் நாங்கள் முடிவு செய்கின்றோம் புலிகளை மன்னிப்பதா வேண்டாமா என்று!.
சகோதரர் தமீம் அவர்களே!, முதலில் நீங்கள் இலங்கை சென்றுவாருங்கள். துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட பள்ளி வாசலில் இன்னும் இரத்தக்கரையும், சுவற்றில் துப்பாக்கியால் துளைத் தெடுக்கப்பட்ட துவாரங்களும் இன்னும் சபித்துக் கொண்டுதான் இருக்கின்றது. 

அங்கு ஷஹீதான முஸ்லிம்கள் அடக்கப்பட்ட கபுருஸ்தானுக்கு சென்று வாருங்கள். பின் இந்த வார்த்தை உங்களின் உதட்டிலிருந்து வந்ததா?. இல்லை உள்ளத்தில் இருந்து வந்ததா என்று நீங்களே முடிவு செய்வீர்கள்!

நன்றி அதிரை முஜீப். 

7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

பொதுவாக த மு மு க ஒரு பந்தாக்குதான் அரசியல் நடத்துகிறார்கள், நீங்கள் குறிப்பிட்டுள்ள தமிம் அன்சாரி மகா திறமையான பேச்சாளர் ??? ஒரு முறை கலைஞர் பங்கேற பொது கூட்டத்தில் இவர் வாய் கிழிய பேசினார், கலைஞர் தன் அருகில் இருந்தவரிடம் சொல்லி அவரை உட்க்கார வைத்து விட்டார் பாவம், அப்ப எந்த அளவிற்கு முழு முட்டாள் தனமாக பேசக்கூடியவர் இந்த தர்தலை தமிம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். (இதுவெல்லாம் வெத்து வெட்டு)

ali சொன்னது…

very useful information,,,,,,

syed சொன்னது…

Very useful information, but stupid tntj don’t have rights to oppose TMMK, in the election he(PJ) will support DMK & Congress candidates bcoz their all genuine candidates?????? but he will never support our Muslim candidates?? he want show that he is a powerful Muslim leader in TN so he spoil our (Muslims) political future(This time we need strong political back ground) so all TN Muslims brothers ignore TNTJ's statements regarding the elections

பெயரில்லா சொன்னது…

தங்களுடைய வலைபூவில் இலங்கையில் தமிழர்களுக்கும் , முஸ்லிம்களுக்கும் நல்லிணக்கம் ஏற்படுத்தும் வகையில் திருச்சி தமுமுக கருத்தரங்கில் பேசிய சீமான் மற்றும் தமிமுன் அன்சாரியின் உரைகளை மனிதாபிமானம் இன்றி விமர்சித்து உள்ளீர்கள். பாபர் மஸ்ஜித் கருத்தரங்கில் சீமானின் ஈழ செய்திகளும் இடம் பெற்றதால் அன்சாரி அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசினார். அவர் புலிகளின் முஸ்லிம்களுக்கு எதிரான கடத்த கால வன்முறைகளை ஆதரிக்கவில்லை. மாறாக அதை மனதில் வைத்து இப்போது சிங்களர்கள் தமிழர்களுக்கு எதிராக நடத்தும் அரசு பயங்கர வாதத்தை வேடிக்கை பார்க்க கூடாது என்றார். மனித உரிமை மீறல்களை தமிழர்களுடன் இணைந்து எதிர்க்க வேண்டும் . என்பதே அவரின் கருத்து. காரணம் தமிழர்களை ஓடிக்கிய சிங்கள அரசு இப்போது இலங்கை முஸ்லிம்களின் வணிகத்தை ஒடுக்கும் வேலைகளை தொடங்கி இருக்கிறது. இன்னிலையில் அறிவுபூர்வமாக செயல்பட வேண்டிய நிலை இரு சமூகத்துக்கும் ஏற்பட்டு உள்ளது. இந்த கவலையில் தான் கடந்த கால கசப்புகளை நினைத்து கொண்டு, எதிர்கால பாதுகாப்பை தொலைத்து விட கூடாது என்ற நல்எண்ணத்தில் கூறப்பட்ட கருத்தை "அரசியல் லாபத்திற்கு" என கொச்சைபடுத்த கூடாது. பொறுப்புள்ள ஒரு சமுதாய பிரமுகரின் அறிவுரை என எடுத்து கொள்ள வேண்டும்.
அன்சாரி ஈழ தமிழர்களின் துன்பங்களுக்கு தான் வக்காலத்து வாங்கினர். புலிகளின் தவறுகளை ஆதரித்து போல சித்தரிப்பது கண்டனத்துக்கு உரியது.
இப்போது புலிகள் அமைப்பு முடங்கிவிட்டது. அவர்கள் தரப்பில் அதிகார பூர்வமாக மன்னிப்பு கேட்க யாரும் இல்லை. எனவே அவர்களது ஆதரவு சக்திகள் மன்னிப்பு கேட்கும்போது, இலங்கை முஸ்லிம்கள் நடப்பு நிகழ்வுகளை கருத்தில் கொண்டு பரிசிலிக்க வேண்டும் என கேட்பது தவறா?
உங்கள் வலைபூவில் வேறு சில கேள்விகளையும் எழுப்பி உள்ளீர்கள். கோவையில் 19 முஸ்லிம்களை கொள்ள காரணமாக இருந்த கருணாநிதியை தமிழக முஸ்லிம்கள் மன்னிக்க வில்லையா? பாபர் மசூதி இடிப்புக்கு துணைபோன காங்கிரேசை இந்திய முஸ்லிம்கள் மன்னித்து வாக்களிக்க வில்லையா? பாம்பே, மீரட், பகல்பூர், போன்ற இந்திய நகர்களில் பல்லாயிரம் முஸ்லிம்களை கொள்ளுவதற்கு துணைபோன காங்கிரேசை மன்னிக்க வில்லையா? இதுவெல்லாம் காலமாற்றத்தை கருத்தில் கொண்டு முஸ்லிம்கள் எடுத்த முடிவுகள் என்பதை நடுநிலை சிந்தனையாளர்கள் அறிவர்.
சந்தடி சாக்கில் பொதக்குடி tntj வெறியர் அன்சாரியின் மீது தருதலை என்றல்லாம் வசைமாறி பொலிந்து உள்ளார் . அன்சாரி மேடையில் பேசியபோது கலைஞர் கருணாநிதி அவரை இடைமறித்து உக்கார வைத்து விட்டார் என எழுதிஉள்ளார். திருமாவளவனை தான் அந்த மேடையில் கருணாநிதி அப்படி செய்தார். ஒரு பத்திரிகை அதை அன்சாரியை இடைமறித்ததாக செய்தி வெளியிட்டு, அதற்கு அடுத்த வாரமே மறுப்பும் வெளியிட்டு விட்டது. இதை பொதக்குடிகாரர் மறைத்து விட்டு பொறாமையில் புலம்பி உள்ளார். பிஜே போன்ற மூன்றாம் நிலை பேச்சாளர்களை விட வைகோ, திருமாவளவன், சீமான் வருசையில் இடம் பெரும் அன்சாரியை விமர்சிக்கும் போது நல்லவார்தைகளை பயன்படுத்துவது நல்லது.

M.ajit ahamed சொன்னது…

தமிழகத்தில் திருவிடைசெரி பள்ளிவாசலுக்குள் புகுந்து ரமலானில் இரண்டு முஸ்லிம்களை சுட்டு கொன்ற tntj குண்டர்கள் இலங்கையில் கொள்ளப்பட்ட முஸ்லிம்களுக்காக வாதாட தகுதி அற்றவர்கள் . சென்னை கே கே நகரில் பள்ளிவாசலில் இமாம் கமருல்ஜமனை கொன்ற பிஜே கும்பல்களுக்கு விடுதலை புலிகளை கண்டிக்க அருகதை இல்லை

பெயரில்லா சொன்னது…

முஸ்லிம்களில் ஒரு சிலர் இலங்கை உளவு பிரிவின் ஏஜன்டுகளாக செயல்பட்டு புலிகளின் நடவடிக்கைகளை காட்டிகொடுத்து பெரும் பிரச்சனைகளை செய்தனர். இது தான் புலிகளை இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பியது. இதை முஸ்லிம் தலைமை உடனடியாக சரிசெய்து இருக்க வேண்டும். ஆனால் வலிமையான சிங்களர்களோடு உறவாடுவது என்ற சுயநலம் முஸ்லிம்களின் தலைமைகளை மௌனம் காக்க வைத்தது. முஸ்லிம்களை எச்சரிக்கும் விதமாக புலிகள் காத்தான்குடி பள்ளிவாசலுக்குள் புகுந்து பலரை சுட்டு கொன்றனர். இரண்டு மே தவறு தான். ஆனால் இலங்கை முஸ்லிம்கள் தரப்பு தவறே செய்யதது போல நடிப்பதும், புலிகள் மட்டுமே தவறு செய்தது போல் கோப படுவதும் நியாயம் இல்லை. உண்மைகளை ஒப்புக்கொண்டு, பழைய கசப்புகளை மறந்து இருதரப்பும் உறவினர்களாக வாழ முயற்சிப்பது தான் எதிர்காலத்துக்கு நல்லது. இப்போது லண்டன் நகரில் புலம் பெயர்ந்த தமிழர்களும், முஸ்லிம்களும் இது குறித்து முதல் கட்ட பேச்சுவர்தைகளை நடத்தி உள்ளனர். இதை அனைவரும் வரவேற்க வேண்டும். இரு தரப்பிலும் உள்ள வெறியர்களும், விசமிகளும் தங்கள் கடின போக்கை மாற்றிகொல்வது நல்லது.

akbar basha சொன்னது…

முஸ்லிம்களில் ஒரு சிலர் இலங்கை உளவு பிரிவின் ஏஜன்டுகளாக செயல்பட்டு புலிகளின் நடவடிக்கைகளை காட்டிகொடுத்து பெரும் பிரச்சனைகளை செய்தனர். இது தான் புலிகளை இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பியது. இதை முஸ்லிம் தலைமை உடனடியாக சரிசெய்து இருக்க வேண்டும். ஆனால் வலிமையான சிங்களர்களோடு உறவாடுவது என்ற சுயநலம் முஸ்லிம்களின் தலைமைகளை மௌனம் காக்க வைத்தது. முஸ்லிம்களை எச்சரிக்கும் விதமாக புலிகள் காத்தான்குடி பள்ளிவாசலுக்குள் புகுந்து பலரை சுட்டு கொன்றனர். இரண்டு மே தவறு தான். ஆனால் இலங்கை முஸ்லிம்கள் தரப்பு தவறே செய்யதது போல நடிப்பதும், புலிகள் மட்டுமே தவறு செய்தது போல் கோப படுவதும் நியாயம் இல்லை. உண்மைகளை ஒப்புக்கொண்டு, பழைய கசப்புகளை மறந்து இருதரப்பும் உறவினர்களாக வாழ முயற்சிப்பது தான் எதிர்காலத்துக்கு நல்லது. இப்போது லண்டன் நகரில் புலம் பெயர்ந்த தமிழர்களும், முஸ்லிம்களும் இது குறித்து முதல் கட்ட பேச்சுவர்தைகளை நடத்தி உள்ளனர். இதை அனைவரும் வரவேற்க வேண்டும். இரு தரப்பிலும் உள்ள வெறியர்களும், விசமிகளும் தங்கள் கடின போக்கை மாற்றிகொல்வது நல்லது.