OnlinePJ

Thanks for Visiting my Page
Knowledge Sharing லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Knowledge Sharing லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

Abu Dhabi Driving Road Test Tips



Before starts, you have to follow the 3 rule, 1. Adjust the Seat, 2. Adjust the Mirrors and last but  not least 3. Wear Seat Belt. then go for below points.

1.Drive confidently in a relaxed mood at a good speed. Examiners don’t like driving too slow.
2. Always make use of indicators and mirrors while start maneuvering, turning, and approaching a road or intersection.
3. Never change lane unless you are asked to do so. However, shift to low speed lane after taking a U-turn in fast lane from a roundabout.
4. Never start changing your lane while making the ‘shoulder and mirrors’ check. Start moving after completing the check.
5. Speed up your vehicle immediately (within speed limit) after changing lane from slow to fast one.
6. When turning on a main road from secondary road at T-junction, wait until approach is safe and road is clear ahead.
7. After entering the main road from T-junction or intersection, immediately speed up your vehicle to drive the vehicle at a good speed.
8. On roundabouts, slow up your vehicle. After taking exit from the roundabout, immediately speed up your vehicle to drive the vehicle at a good speed.
9. Never enter a roundabout unless you find no vehicle coming from your left side.
10. Change the lane only when there is no fast vehicle coming in the desired lane. Ignore examiner’s order to do so if there is no safe way for doing so. He will appreciate your decision.
11. Always park your car parallel to the road when asked to park by the examiner. Never park in front of any entrance, gate or side road. Use hazard lights if enough space is not available for opening the driving side doors.
12. While exiting from roundabout, always make a shoulder check.
13. Never change lane / or give signal opposite or before a. parking, b. crossing / any entrance road.
14. Always cont indicator while change lane unless if there is any vehicle in a desired lane.
15. While changing lane, first check center, side mirror and do shoulder check, than give indicator and change lane.


BOTTOM LINE: DRIVE FAST WITH CONFIDENCE.

By Abu Sana. 

வியாழன், 21 ஜூன், 2012

மீண்டும் ஒருமுறை.............!!!!!!!!!!!!!!!!!



 ​​​​​​அவர் நாள் வரும் அன்று நீங்கள் உங்கள் பேரபிள்ளைகளிடம் இந்த மேக வன்தட்டின் பயன்பாட்டை விளக்குவீர்கள், எவ்வாறு அதில் கோப்புகளை சேகரிப்பது, சேமித்த கோப்புகளை திரும்பவும் எவ்வாறு எடுப்பது என்று.

சரி ஏற்கனவே மெமரி கார்ட், பிளாஷ் டிரைவ் மற்றும் எக்ஸ்டர்நல் வன்தட்டு போன்றவைகள் பயன்பாட்டில் இருக்கும் போது அப்படி என்ன புதியதாக இதில் உள்ளது என்று நீங்கள் கேட்பீர்களேயானால் அதற்கான பதில்தான் இந்த பதிவு.

இன்று நாம் எத்தனை வகையான சேமிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும், அது எல்லாம் நாம் எங்கு சென்றாலும் எடுத்து கொண்டு செல்லவேண்டும், சில சமயம் மனிதன் என்கின்ற அடிபடையில் நாம் மறந்துவிடுவோம், அதுமட்டுமில்லாமல் அதை அனைத்து கணினியிலும் பயன்படுத்துவது அவ்வளவு சுலபம் கிடையாது, எங்கே வைரஸ் தாக்கிவிடுமோ என்கின்ற பயம் வேறு மனதில், இதை எல்லாம் கணக்கிட்டுதான் கூகில், சுகற்சிங்க், மைக்ரோஸாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்கள் பயனளார்களுக்காக இந்த தொழில்நுட்பத்தை தொடங்கி உள்ளன. சரி வாங்க இதை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.

செவ்வாய், 5 ஜூன், 2012

மேக கணினி பயன்படுதுதல் (Cloud / Cloud Computing)


 ​​​​​​அவர் நாள் வரும் அன்று நீங்கள் உங்கள் பேரபிள்ளைகளிடம் இந்த மேக வன்தட்டின் பயன்பாட்டை விளக்குவீர்கள், எவ்வாறு அதில் கோப்புகளை சேகரிப்பது, சேமித்த கோப்புகளை திரும்பவும் எவ்வாறு எடுப்பது என்று.

சரி ஏற்கனவே மெமரி கார்ட், பிளாஷ் டிரைவ் மற்றும் எக்ஸ்டர்நல் வன்தட்டு போன்றவைகள் பயன்பாட்டில் இருக்கும் போது அப்படி என்ன புதியதாக இதில் உள்ளது என்று நீங்கள் கேட்பீர்களேயானால் அதற்கான பதில்தான் இந்த பதிவு.

இன்று நாம் எத்தனை வகையான சேமிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும், அது எல்லாம் நாம் எங்கு சென்றாலும் எடுத்து கொண்டு செல்லவேண்டும், சில சமயம் மனிதன் என்கின்ற அடிபடையில் நாம் மறந்துவிடுவோம், அதுமட்டுமில்லாமல் அதை அனைத்து கணினியிலும் பயன்படுத்துவது அவ்வளவு சுலபம் கிடையாது, எங்கே வைரஸ் தாக்கிவிடுமோ என்கின்ற பயம் வேறு மனதில், இதை எல்லாம் கணக்கிட்டுதான் கூகில், சுகற்சிங்க், மைக்ரோஸாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்கள் பயனளார்களுக்காக இந்த தொழில்நுட்பத்தை தொடங்கி உள்ளன. சரி வாங்க இதை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.

திங்கள், 12 மார்ச், 2012

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!

தமிழ்…இது எங்களுக்கு மொழிமட்டுமல்ல, எங்கள் வாழ்க்கை, எங்கள் உயிர், இதனால்த்தான் பாவேந்தன் பாரதிதாசன் அன்றே பாடினான் ”தமிழுக்கு அமுதென்று பெயர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்(நிகர்)” என்று, ஆனால் இண்றைய சமுதாயம் ஆங்கிலமோகத்தில் சிக்கித்திளைப்பதால் அதற்குத் தமிழின் பெருமை சரிவரத்தெரிவதில்லை,
சிரட்டையின் மூலம் நாங்கள் உங்களுக்கு கணிதரீதியாக தமிழின் பெருமையை உணர்த்த விளைகின்றோம், உங்களுக்குத் தெரிந்த ஆங்கல இலக்கங்களின் அதிகூடிய இலக்கத்தின் பெயர் என்ன என்று சொல்லமுடியுமா உங்களால், அதற்குப் பெயர் ஸில்லியன் என்பார்கள் அதாவது,
1000000000000000 = ஒரு ஸில்லியன்
அதற்கு அடுத்த பத்தின் மடங்கை உங்களால் ஆங்கிலத்தில் சொல்ல முடியுமா? 100 ஸ்ல்லியன் என்பீர்கள், அதற்கும் அடுத்த மடங்கு??? சொல்லுங்கள் பார்க்கலாம் உங்கள் ஆங்கிலத்தில்….நிச்சயமாக முடியாது உங்களால், ஆனால் எங்கள் தமிழில் தேடிப்பாருங்கள் அதற்கு அடுத்தது மட்டுமல்ல அடுத்ததுக்கு அடுத்த மடங்குக்கும் பெயர் வைத்திருக்கிறான் எங்கள் மூதாதைத் தமிழன், கீழே உள்ள அட்டவணை உங்களுக்கு நிச்சயமாக தமிழின் பெருமையை உணர்த்தும் என நம்புகின்றோம்,

ஞாயிறு, 11 மார்ச், 2012

"செவி வழி மருத்துவம்"


அஸ்ஸாலாமு அலைக்கும்
Description: Description: Description: Description: http://www.vaccinetruth.org/vacci%20nation.gif Description: Description: Description: Description: Vaccines Are Bad For You
பிலட் கேன்ஸ்சராஇன்ஷா அல்லாஹ் நல்லாயிடும்கிட்னி போய்டுச்சாஇன்ஷாஅல்லாஹ் நல்லாயிடும், (ஆனால் ஹாஸ்பிட்டலுக்கு போனிங்கன்ன எதுவுமேநல்லாகாது.)
"செவி வழி மருத்துவம்என்ற பெயரில் ஒரு வீடியோங்க. அட என்னாத்தான் இக்கீது இந்த வீடியோவுலேன்னு பார்த்தா........ ஒரு முஸ்லிமாக இவ்வளவுஆழமாக நாம் இவ்வளவு காலம் யோசிக்கவில்லையே என்றும், மனித உடலைஅல்லாஹ் ஒரு தானியங்கி இயந்திரமாக படைத்திருப்பதை கன்டும் இதைத்தானா அல்லாஹ் குரானில் பல இடங்களில் நாம் உங்களை எப்படி படைத்திருக்கின்றோம் என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேன்டாமா? சிந்தித்து பார்க்கவேன்டாமான்னு சொல்லியுள்ளான். அட அல்லாஹ் இப்படி சிந்திக்காமல் மோசம் போய்ட்டோமேன்னு இந்த வீடியோவை பார்த்த உடன்தான் இவ்வளவு காலாமா நாம் சிந்திக்கவில்லையே  என சற்று வருத்தபட்டோம.
அந்த வீடியோவில் பாஸ்கர் என்ற சகோதரர் உரையாற்றுகிறார் ஆழமான ஆய்வு -கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும் மிக அழகான முறையில் விளக்குகிறார் ஏன்நோய் வருகிறது - அதை உடல் எப்படி எதிர்கொள்கிறது அதை நாம் எப்படி தவறாககையாள்கிறோம் -அதை எப்படி சரி செய்வது மருந்து மாத்திரை இன்றி எப்படிஆரோக்கியத்தை பெறுவது .. என்று மிக நேர்த்தியாக ,வெளிப்படையாக ,நல்லஎண்ணத்தில் அவர் ஆற்றும் உரை பிரம்மிப்பை தருகிறது இதில் அவர் ஆன்மீகத்தைபற்றி பேசவில்லை ஆனால் இஸ்லாத்தை பற்றி பேசுகிறார்அதாவது நாம் சொல்லவருவது என்ன வென்றால் அவர் உடல் கூறு சம்மந்தமாக பேசும்விஷயங்களில் இஸ்லாத்தை , நபி (ஸல் ) அவர்களின் வழிமுறைகளை மெய்பிக்கும்விதமாக இருக்கிறது என்பதே இன்ஷால்லாஹ் அவருக்கு அல்லாஹ் ஹிதாயத்தைதரவேண்டும்)
அனைவரும் கீழே உள்ள வீடியோக்களை பாருங்கள், நல்ல பழக்க வழக்கங்களுக்கு உரியவர்களாக மாறி, நமக்கிருக்கும் நோயை அல்லாஹ்வின் உதவிக் கொண்டு நாமே துடைத்தெரிய முயற்சிப்போம் இன்ஷா அல்லாஹ்.
(குறிப்பு - அவரின் விளக்க உரையில் இஸ்லாத்திற்கு ஒத்துவராத கருத்துக்கள்இருக்கலாம் ஆனால் இந்த இயற்க்கை நோய் எதிர்ப்பு பயிற்சியை பின்பற்றுவதால்கண்டிப்பாக மார்கத்திற்கு முரணாக ஏதும் வராது)
VACCINATION Part II
ORGANS Part V
TASTE THERAPY Part IX
EARTH Part X
WATER Part XI
AIR Part XII
FIRE Part XIII
SLEEP Part XIV
TYPES OF FOOD Part XVI
CONCLUSION Part XVII

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!


*இரு கண்களுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் அவ்வப்போது விரல்களால் அழுத்துவதால் நமக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். மறந்து போன விஷயங்களை ஞாபகத்துக்கு கொண்டுவர இது உதவும். இந்த இடத்தில்தான் நினைவாற்றலுக்கான அக்குப் புள்ளிகள் உள்ளன. இதனால்தான் மறந்துபோன விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவர நெற்றியில் விரல் வைத்து தட்டுகிறார்கள். இது முன்னோர்கள் வழியாக நமக்கும் வந்தது. 

வெங்காயம் உரிக்கும்போது சூயிங்கம் மென்றால் கண்களில் இருந்து கண்ணீர் வெளிவராது. 

*உங்கள் நாக்கு இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் உங்கள் நாக்கு பாக்டீரியா தொல்லையில்லாமல் சுத்தமாக இருக்கிறது என்று அர்த்தம். வெண்மை நிறத்தில் இருந்தால் பாக்டீரியா பாதிப்பு உள்ளது என்று பொருள். 

*வியப்பால் அவள் விழி விரிந்தது என்று கவிஞர்கள் கவிதை புனைவார்கள். விஞ்ஞான ரீதியில் இது உண்மை. அதாவது ஒரு மனிதன் மகிழ்ச்சியான ஒன்றை அல்லது ஆச்சர்யம் தரும் ஒன்றைப் பார்க்கும்போது அவனது கருவிழி 45 விழுக்காடு விரிவடைகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். 

*கடலில் கிடைக்கும் சங்கை எடுத்து காதில் வைத்துக் கேட்டால் அதில் இருந்து அலை ஓசை சத்தம் வருவதுபோல கேட்கும். அதனை சிலர் கடல் அலையின் ஓசை என்று நினைப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. காதுகளில் உள்ள ரத்தக் குழாயில் ரத்தம் பாய்ந்து செல்லும் சத்தம்தான் சங்கில் எதிரொலித்து நமக்கு கடலலை ஓசையாகக் கேட்கிறது.

*ஆயிரக்கணக்கான சிட்டுக்குருவிகளை அறிவியல் ரீதியில் ஆராய்ச்சி செய்ததில் அவைகள் அனைத்தும் கசக்கும் சுபாவமுடைய வேப்பமரத்து இலை-குச்சிகளால் கூட்டை நேர்த்தியாக கட்டியிருப்பது கண்டறியப்பட்டது. மகத்தான மருத்துவ குணம் கொண்ட வேப்பிலையின் கசப்பான நெடிக்கு முட்டைகளையோ, குஞ்சுகளையோ வைரஸ் கிருமிகள் நெருங்குவது கிடையாது. ஆகவேதான் சிட்டுக்குருவிகள் வேப்பிலையால் கூடுகளை கட்டுகின்றன. 

*நீரிலும் நிலத்திலும் வாழும் இயல்புடைய தவளைகள் தமது கண்களால் கேட்கவும் செய்கின்றன. தவளைகளின் கண்களே காதுகளாகவும் இயங்குகிறது. தவளைகளுக்கு அதனுடைய கண்களுக்குப் பின்புறம் மூளையிலிருந்து வரும் நுண்ணிய நரம்பு அமைந்துள்ளது. அதன் காதுகளின் பணியிணைச்செய்கிறது. 

*கண்கவர் நீலகிரி மலைக் காடுகளில் ஒரு வகை பச்சோந்தி வாழ்கிறது. இதனுடைய உடல் நீளம் 5 செ.மீட்டர் தான். இதில் ஒரு வியப்பான செய்தி என்னவென்றால், இதன் நாக்கின் நீளம் 1.25 மீட்டர். இதன் நாக்கு எப்போதும் சுருட்டிய நிலையிலேயே இருக்கும். இது ஒரு மரக்கிளையில் ஒய்யாரமாக உட்கார்ந்தபடியே தனது நீண்ட நாக்கினை நீட்டி மற்ற கிளைகளில் உள்ள புழு, பூச்சிகளை அதில் ஒட்ட வைத்து தின்றுவிடும்

*முதன் முதலில் நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை உருவாக்கியவர் வில்லியம் போர்னே என்னும் இங்கிலாந்துக்காரர். இவர், 1578-ம் ஆண்டு நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை வரைந்தார். எனினும் கார்னிலியூஸ் வான் டிரெப்பல் என்னும் நெதர்லாந்து நாட்டுக் காரர் 1620-ம் ஆண்டு முறையான நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தவர். நீரில் மூழ்கக் கூடிய ஒரு படகைத் தயாரித்த அவர் அதில் பிராண வாயு கிடைப்பதற்காக நீண்ட குழாயை இணைத்திருந்தார். நீருக்குள் மூழ்கியிருப்பவர் துடுப்பு மூலம் படகை இயக்கவேண்டும். 12 படகோட்டிகளுடன் தான் வடிவமைத்த நீர்மூழ்கிக் கப்பலை அவர் லண்டன் தேம்ஸ் நதியில் இயக்கிக் காட்டினார். 3 மணி நேரம் இந்தக் கப்பல் நீருக்கடியில் இருந்தது. 


*ராணுவத்திற்கான நீர்மூழ்கிக் கப்பலை 1776-ம் ஆண்டு டேவிட் புஷ்னல் என்னும் அமெரிக்கர் வடிவமைத்தார். எனினும் சகல வசதிகளுடனும் கூடிய முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஜான் பி.ஹாலண்ட் மற்றும் சைமன் லேக் என்னும் இருவர் 1890-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தயாரித்தனர். ஜானின் நீர்மூழ்கிக் கப்பலின் டிசைனை அமெரிக்காவும் சைமன் லேக்கின் வடிவமைத்ததை ரஷியா-ஜப்பான் நாடுகளும் ஏற்றுக்கொண்டு தயாரிக்க ஆரம்பித்தன. 

*ஒரு மனிதன் தினமும் சராசரியாக ஒரு மணி நேரம் 6 நிமிடங்களை பயணத்தில் கழிக்கிறான். வருடத்திற்கு ஒவ்வொருவரும் சராசரியாக 12 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்கிறார்கள்.உலக அளவில் 53 சதவீதம் பேர் கார்களிலும், 26 சதவீதம் பேர் பஸ்சிலும், 9 சதவீதம் பேர் ரெயிலிலும் இன்னொரு 9 சதவீதம் பேர் விமானங்களிலும் பயணிக்கிறார்கள். சைக்கிள் பயணம் வெறும் 3 சதவீதம்தான். 2050-ம் ஆண்டு அதிகவேக வாகனங்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகி விடும் என்பதால், அப்போது ஒரு நாளில் ஒருவர் பயணம் செய்யும் நேரம் 12 நிமிடங்களாகக் குறைந்து விடுமாம். அப்போது கார்களில் பயணம் செய்வோர் 35 சதவீதம் பேரும், பஸ்சில் 20 சதவீதம் பேரும் அதிகவேக வாகனங்களில் 41 சதவீதம் பேரும் ரெயிலில் 4 சதவீதம் பேரும் பயணம் செய்வார்கள் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள࠯?. 

*உலகின் முதல் போக்குவரத்து சிக்னல் 1890-ம் ஆண்டு லண்டன் நகரில் பயன் படுத்தப் பட்டது. இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அப்போது பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் லண்டனில் எதுவும் கிடையாது. குதிரைகள் இழுத்துச் செல்லும் பஸ்கள் மட்டுமே இயங்கின. அமெரிக்காவில் 1890ம் ஆண்டு இறுதி வாக்கில் தான் கார்கள் அறிமுகமாயின. முதல் தானியங்கி போக்குவரத்து சிக்னல் ஓகியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லாண்ட் நகரில் 1920-ம் ஆண்டு பொருத்தப்பட்டது. 

*வங்கி முறையிலான கடன் கொடுக்கும் பழக்கம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது. பணக் கடன் வழங்கியது, கடனை அடைத்தது போன்றதற்கான ஆதார ரசீதுகள் 14-ம் நூற்றாண்டில் ஏற்பட்டதாகும். காகிதப் பணம் கடன் தருவது 17-ம் நூற்றாண்டில் வேகமாக பரவியது. தானியங்கி பணம் பட்டுவாடா செய்யும் எந்திரங்களில் பணம் எடுப்பதற்கு அட்டை வழங்குவது நமது நாட்டில் 2000-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் வேகமாக வளர்ச்சி கண்டது. எனினும் அமெரிக்காவில் 1951-ம் ஆண்டிலேயே பணம் எடுக்கும் அட்டைகள் புழக்கத்திற்கு வந்து விட்டன. டைனர்ஸ் கிளப் தனது உணவக வாடிக்கையாளர்கள் 200 பேருக்கு நிïயார்க் நகரில் உள்ள தங்களின் 27 உணவகங்களில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் கிரடிட் கார்டுகளை வழங்கியது. காந்த பட்டைகளுடன் கூடிய கிரடிட் கார்டு 1970-ம் ஆண்டு புழக்கத்திற்கு வந்தது. 

*வாலாட்டிக் குருவி எப்போதும் ஏன் வாலை ஆட்டிக் கொண்டே இருக்கிறது தெரியுமா?... 

அது சுவாச உறுப்பாக பெற்றிருப்பது வாலைத்தான். எனவேதான் சுவாசிப்பதற்காக தனது வாலை இடைவிடாது ஆட்டிக் கொண்டே இருக்கிறது 

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

நிறுவனங்கள் மற்றும் வரலாறுகள்

 

Computer and Info Technology -களில் பல ஸ்தாபனங்கள் செயலாற்றி வருவது பற்றி நாமெல்லோரும் அறிவோம். அப்படி பல ஸ்தாபனங்கள் செயலாற்றி வந்தாலும்,  விரல் விட்டு எண்ணக்கூடிய  சில ஸ்தாபனங்களின் பெயர்களை, எப்பொழுதும், நாம் நினைவில் வைத்து இருப்பதோடு, அந்த பெயர்களையும் சதா  சொல்லியப்படி இருப்பதை எவராலும் மறுக்கவியலாது. 

அந்த பெயர்களை, இந்த ஸ்தாபனங்கள், எப்படி பெற்றெடுத்தன? அவற்றின் வரலாறு என்ன? என்று, எப்போதேனும்,  யோசித்து இருக்கிறோமா? சரி! சில நிமிடங்களை இப்போதாவது செலவு செய்து எப்படி பெற்றென என்றுதான் பார்ப்போமே!! 

புதன், 4 ஜனவரி, 2012

பிரசவத்தில் சிசேரியன் எதற்காக?




எத்தனையோ தாய்மார்கள் டாக்டர் நார்மல் டெலிவரி ஆகும் என்று சொன்னார். ஆனால் கடைசியில் ஆபரேஷன் பண்ணி விட்டார் என்று குறைபட்டுக் கொள்வார்கள்.
ஒரு தாயை, அவருக்கு எல்லா சோதனைகளும் செய்து, அவர் நார்மல் டெலிவரிக்கு உகந்தவர் தான் என்று தீர்மானித்து, அவரை நார்மல் டெலிவரிக்கு உட்படுத்துகிறோம்.
ஆனால், பிரசவ வலி வரும்போதுதான், வலியின் தன்மையிலோ, குழந்தையின் தலை திரும்புவதிலோ, கருப்பை வாய் திறப்பதிலோ, குழந்தையின் நாடித்துடிப்பிலோ மாற்றங்கள் ஏற்பட்டு, குழந்தையின் பாதை வழியே பயணப்படுவது தடைபடுவதை உணருகிறோம். இவை அனைத்தும், அந்தக் கணம், பிரசவ வலி கண்ட பின்பு தான் கவனிக்க முடியும். கணிக்க முடியும். அன்றி முன் கூட்டியே தீர்மானிக்க இயலாது.
எனவே, பல சமயங்களில் பிரசவ வலி கண்ட பின்பு, அந்த தீர்மானத்தை மாற்றி, சிசேரியன் செய்ய நேரிடுகிறது.
பெரும்பாலோர் முதல் தடவை சிசேரியன் செய்வதால் இந்த முறையும் டாக்டர் சிசேரியன் செய்து விட்டார் என்று மேம்போக்காகப் புலம்புகிறார்கள்.
முதல் முறை செய்யும்போது, அந்தக் கருப்பையில் தையல் போடுவதால் அது காயப்பட்டு விடுகிறது. அதை வடு என்கிறோம். அந்த வடு எந்த அளவுக்கு உறுதியானது என்று பெரிதாக யாரலும் கணிக்க முடியாது. எனவே முதல் முறை சிசேரியன் செய்தவர்கள், அடுத்த பிரசவத்தில் அவர்களது நார்மல் டெலிவரிக்கான சாத்தியக் கூறுகள் 50% என்று தான் சொல்ல வேண்டும். பிரசவம் நெருங்கும்போது, குழந்தையின் தலை இடுப்பு எலும்புக்கு மேலாக இருப்பது பிரசவ வாய், ஏதுவாக இல்லாமல் இருப்பது போன்ற கண்டுபிடிப்புகள் இருந்தால், அந்தத் தாய்க்கு சிசேரியன் முன் கூட்டியே செய்து விட வேண்டியாதாகிறது. ஏனெனில், அந்தத் தாயை பிரசவ வலிக்கு உட்படுத்தினால், மேற்சொன்ன கண்டுபிடிப்புகளால், குழந்தை பிறக்க நேரமாகி அந்த நேரத்தில் கருப்பையிலுள்ள அந்த வடு, வலுவுற்று கருப்பையே வெடித்து, தாயின் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே நார்மல் டெலிவரி என்ற விஷப்பரீட்சைக்கு இடம் கொடுக்காமல் முன் கூட்டியே சிசேரியன் செய்ய வேண்டியதாகி விடுகிறது.
சரி, சிசேரியன் செய்வது என்றால் வலி கண்ட பிறகு செய்யக் கூடாதா? எதற்காக 10, 15 நாள் முன்பாக செய்ய வேண்டும் என்ற முணுமுணுப்பு எழத்தான் செய்யும். பிரசவ வலி என்பது எந்த நேரத்திலும் முன் அறிவிப்பின்றி வருவது அந்த நேரம்தான் தாய் சாப்பிட்டிருப்பாள். எனவே அவளுக்கு மயக்க மருந்து கொடுப்பதற்கு யோசிக்க வேண்டி உள்ளது. அல்லது அவள் இருக்கும் இடத்திலிருந்து வலி கண்ட பிறகு பயணப்பட்டு வர நீண்ட நேரமாகலாம். அந்நேரத்தில் பிரசவ வலியினால், தாய்க்கோ, குழந்தைக்கோ ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு, இதை எல்லாம் மனதில் கொண்டுதான் குழந்தை முழு வளர்ச்சி அடைந்ததாக கருதப்படும் ஒரு வாரங்களுக்குப் பிறகு, அதாவது 10,15 நாட்கள் முன்பாகவே ஆபரேசன் செய்ய நேரிடுகிறது.
சில சமயம் டாக்டர்கள், தாய்மார்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, நல்ல நாள் நேரம் பார்த்து அந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாகி விடுகிறது.

வியாழன், 8 டிசம்பர், 2011

தெரிந்து கொள்வோம் இன்று ஒரு தகவல்

இன்று உலகத்துல எங்கு பார்த்தாலும் இந்த கள்ள காதலும், பள்ளி பெண்கள் தப்பான வழியில் சென்று அதனால  உண்டான கருவை கலைப்பதும் தான் இன்று மிக பெரிய செய்தியாக அன்றாடம் நாம் காண்கிறோம். இதை பற்றி நாம் இங்கே பார்க்க போறதில்லை, இதனுடன் தொடர்பான ஒரு விசயத்தைதான் பார்க்க போகின்றோம் அப்படி என்னதாங்க அதுவென்றால், வேற ஒன்னுமில்லைங்க இந்த கரு கலைப்ப பத்திதான் பார்க்க போறோம்........................மேல இல்லை கீழ படிங்க.




ஞாயிறு, 4 டிசம்பர், 2011

தெரிந்து கொள்வோம் அமீரகத்தை!!!!!



கடந்த இரண்டாம் தேதி (வெள்ளிகிழமை) இங்கே அமீரகத்தில் அவர்களின் 40 வது தேசிய தினம் கொண்டாடப்பட்டது..............இந்த தருணத்தில் நாம் இந்த அமீரகத்தை பற்றி தெரிந்து கொள்வோம் என்று எண்ணித்தான் இந்த பதிவு..............

நாம் ஏன் இதனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று பல பேர் கேட்கலாம் .........இன்று இந்தியாவில் உள்ள ஜனத்தொகையில் வெளிநாடு வாழ இந்தியர்கள் என்று எடுத்து கொண்டால் அதிக பேர் அமெரிக்காவில் இருப்பதாக எண்ணி கொண்டு உள்ளார்கள் அது முற்றிலும் தவறான ஒரு கணிப்பு..............என்னை பொறுத்தவரை..........அதில் அதிக பேர் இங்கே அமீரகத்தில் தான் இருப்பார்கள் என்பதே என்னுடைய கணிப்பு...................இதை அமீரகத்தில் உள்ளவர்களிடம் கேட்டுபாருங்கள்..............புரியும்......................முக்கியமா இங்குள்ள மலையாளிகளிடம் கேளுங்கள்................இதுதான் இவர்களுக்கு ஒரு குட்டி கேரளாவே............!!!!!!!!!!!!!

செவ்வாய், 29 நவம்பர், 2011

இன்று ஒரு தகவல். தெரிந்து கொள்வோம்.


இந்த உலகத்தில் பெரும்பாலான விசயங்களில் நாம் எல்லோரும் செய்கிறார்கள், அதனால் நாமும் செய்கிறோம் என்று செய்து வருகிறோம். உதாரணமாக எராலமானவைகள் சொல்லலாம்...............ஆனால் இன்று நான் சொல்ல போவது..............தடுப்பு ஊசி பற்றின செய்தி.

அதாவது தடுப்பு ஊசி எதற்கு போடுவார்கள், ஒரு சில கொடிய நோய்கிருமிகள் நம்முடைய உடலை பாதிக்காமல் இருப்பதற்கு என்று நான் மற்றும் நீங்கள் இதுவரை அறிந்து வைத்திருக்கிறோம்..............

ஆனால் இதில் உண்மை என்னவென்றால், தடுப்பு ஊசி போடுவதில் எந்த பயனுமில்லை என்கிறார் ஒருத்தர் அவரை பற்றி கடைசியில் சொல்லுகிறேன்........இப்போ விசயத்திற்கு போவோம்......

நாம் போடுகின்ற தடுப்பு ஊசிகள் அனைத்திலும் எந்த ஒரு நோய் எதிர்ப்பு சக்தியும் கிடையாது, தடுப்பு ஊசி என்கின்ற பெயரில் அவர்கள் நோய் கிருமியைதான் உள்ளே செலுத்துகிறார்கள்...........நம்முடைய உடம்புதான் அது என்ன கிருமி என்று கண்டுபிடித்து அதற்க்கு எதிரான ஒன்றை  நமது ரத்தத்தில் இருந்து தாயாரித்து அதை அழித்து விட்டு அந்த போர்முலாவை நமது உடலில் சேமித்து வைகின்றது...........பின்னர் மீண்டும் அந்த கிருமி நம்மை தாக்குமானால் அதன் பாதிப்பிலிருந்து நம்மை காக்கின்றது இதுதான் தடுப்பு ஊசிகளின் தத்துவம்.................இதை பற்றி மேலும் அறிய கீழே உள்ள லிங்கில் பொய் பாருங்கள்.............

http://anatomictherapy.org/Videos.html

நான் சொன்ன அந்த நபரை பற்றி நீங்கள் இந்த வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி: டாக்டர் பாஸ்கர் 

திங்கள், 14 நவம்பர், 2011

உங்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார் அளிக்க- Online Petition Filing


 

நம்மை சுற்றிலும் தினம் தினம் ஆயிரம் பிரச்சினைகள் உள்ளது. குடிநீர், சாலை வசதி,மின்சாரம் இன்னும் ஏராளமாக சொல்லி கொண்டே போகலாம். நம் ஊரில் உள்ள உள்ள கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளிகடம் சொல்லி சொல்லி அலுத்து போய் இருக்கும். செல்வாக்கு உள்ளவர்கள் பிரச்சினைகளை உயர் அதிகாரிகளிடம் பணம் கொடுத்து வேலையை சுலபமாக முடித்து கொள்வார்கள். ஆனால் அனைவாராலும் இதை செய்ய முடியாது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதன்மையானவர் மாவட்ட கலெக்டர் தான் ஆனால் நாம் அவரை நேரடியாக சந்தித்து புகார் அளிக்க வேண்டுமானால் படாத பாடு பட வேண்டும். இதனால் பெருமாலானவர்கள் பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லை.


ஆனால் நம் தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைன் மூலம் புகார் அளிக்கும் வசதியை உருவாக்கி வைத்துள்ளது.  ஆனால் இந்த வசதி இருப்பதை பல பேர் இன்னும் அறியாமல் உள்ளனர். ஆதலால் இந்த வசதியை அனைவரும் பயன்படுத்தும் விதமாக இங்கு தெரியப்படுத்துகிறேன்.

  • இதற்க்கு முதலில் Online Petition Filing இந்த லிங்கில் செல்லுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் வலது பக்க சைட்பாரில் Select என்ற ஒரு சிறிய கட்டம் இருக்கும்.
  • அதில் கிளிக் செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். 
  • அந்த லிஸ்டில் உள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே இந்த வசதி தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்கள் விரைவில் எதிர்பார்க்கலாம்.
  • உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்தவுடன் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். நான் திருவள்ளூர் மாவட்டத்தை தேர்வு செய்துள்ளேன்.
  • அந்த விண்டோவில் நான் குறிப்பிட்டிருக்கும் இடத்தில் உங்கள் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொள்ள ஈமெயில் முகவரி கொடுக்கப்பட்டிருக்கும். 
  • அதை குறித்து கொண்டும் ஈமெயில் அனுப்பலாம்.
  • அல்லது அதில் உள்ள கோரிக்கை பதிவு என்ற லிங்கை கிளிக் செய்து வரும் விண்டோவில் உங்கள் கோரிக்கையை அனுப்பலாம். 
  • இதில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பினால் உங்கள் கோரிக்கைக்கான ஒரு எண் கொடுப்பார்கள் அதை குறித்து கொண்டு கோரிக்கை நிலவரம் என்ற பகுதியில் இந்த எண்ணை கொடுத்து சோதிப்பதன் மூலம் உங்களின் கோரிக்கை எந்த நிலையில் உள்ளது என அறியலாம்.
  • கோரிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் அந்த கோரிக்கை எண் வைத்து நீதிமன்றங்களில் மேல் முறையீடும் செய்யலாம். 
  • நண்பர்களே இதில் கொடுக்கும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும் போலி விவரங்களை கொடுக்க வேண்டாம்.
  • இந்த தளத்தில் சில மாவட்டத்தை தேர்வு செய்தால் அந்த தளம் error காண்பிக்கும்.ஆனால் சில மாவட்டத்தை தேர்வு செய்தால் அந்த தளம் வேலை செய்கிறது. 
நண்பர்களே இந்த செய்தியை முடிந்தவரை உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிப்பதன் மூலம் அவர்களும் பயனடைவார்கள்

புதன், 17 ஆகஸ்ட், 2011

தெரிந்து கொள்வோம் ஐபோன் பற்றி - 1


நான் ஏற்கனவே என்னுடைய வலைசரத்தில் ஐபோன் பற்றி ஒரு பதிவு எழுதிள்ளேன், அதை தொடர்ந்து..............இன்று ஐபோன் பற்றி ஒரு செய்தி.
இன்று உலகில் எங்கு பார்த்தாலும் இந்த பாலா போன ஐபோன் மோகம் அதிகரித்து கொண்டே வருகின்றது. என்னதான் சாம்சங், எல்ஜி, ஹச்டிசீ போன்ற நிறுவனங்கள் எல்லாம் பலமாதிரியான மொபைல்கள்  தயாரித்தாலும் அது என்னவோ தெரியலை இந்த ஐபோனுக்குதான் ரொம்ப மௌஸ் அதிகமாகி கொண்டே வருகின்றது................அப்படி என்னதான் என்று பார்க்க http://flypno.blogspot.com/2011/06/blog-post_390.html இங்கே கிளிக் செய்து பார்க்கவும். நாம் இப்போது பதிவிற்கு போவோம்,

புதியதாக இந்த ஐபோனை உபயோகபடுதுவோர் அதை முழுவதும் அறிந்து கொள்ள சிறிது காலம் வேண்டும்,..........எனக்கு தெரிந்து  இந்த ஐபோனில் ஈமெயில் உபயோகபடுத்தும் பெரும்பாலானோருக்கு இந்த விஷயம் தெரிந்திருக்காது சோம்பல் காரணமாக கூட மாற்றமால் இருப்பார்கள், அது என்னவென்றால் நீங்கள் ஐபோனில் இருந்து ஈமெயில் அனுப்பினால் அதில் பொதுவாக உங்கள் கையெழுத்து பகுதியில் இப்படி இருக்கும் "Sent from iphone" இதனை எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதை பற்றி இங்கே பாப்போம்.

முதலில் உங்கள் ஐபோன் ஹோம் ஸ்க்ரீனுக்கு போங்கள், பிறகு அங்குள்ள செட்டிங்க்ஸ் திறங்க, அதில் ஈமெயில், காண்டக்ட்ஸ், காலேண்டேர்ஸ் என்ற ஆப்சனை தேர்வு செய்யுங்கள் இப்பொழுது பார்த்தால் அதில் கையெழுத்து (signature) பகுதியில் உங்களுக்கு வேண்டியாவாறு டைப் செய்து கொள்ளுங்கள்.........அவ்வளவுதான்.............மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள படங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.................