OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 29 நவம்பர், 2011

இன்று ஒரு தகவல். தெரிந்து கொள்வோம்.


இந்த உலகத்தில் பெரும்பாலான விசயங்களில் நாம் எல்லோரும் செய்கிறார்கள், அதனால் நாமும் செய்கிறோம் என்று செய்து வருகிறோம். உதாரணமாக எராலமானவைகள் சொல்லலாம்...............ஆனால் இன்று நான் சொல்ல போவது..............தடுப்பு ஊசி பற்றின செய்தி.

அதாவது தடுப்பு ஊசி எதற்கு போடுவார்கள், ஒரு சில கொடிய நோய்கிருமிகள் நம்முடைய உடலை பாதிக்காமல் இருப்பதற்கு என்று நான் மற்றும் நீங்கள் இதுவரை அறிந்து வைத்திருக்கிறோம்..............

ஆனால் இதில் உண்மை என்னவென்றால், தடுப்பு ஊசி போடுவதில் எந்த பயனுமில்லை என்கிறார் ஒருத்தர் அவரை பற்றி கடைசியில் சொல்லுகிறேன்........இப்போ விசயத்திற்கு போவோம்......

நாம் போடுகின்ற தடுப்பு ஊசிகள் அனைத்திலும் எந்த ஒரு நோய் எதிர்ப்பு சக்தியும் கிடையாது, தடுப்பு ஊசி என்கின்ற பெயரில் அவர்கள் நோய் கிருமியைதான் உள்ளே செலுத்துகிறார்கள்...........நம்முடைய உடம்புதான் அது என்ன கிருமி என்று கண்டுபிடித்து அதற்க்கு எதிரான ஒன்றை  நமது ரத்தத்தில் இருந்து தாயாரித்து அதை அழித்து விட்டு அந்த போர்முலாவை நமது உடலில் சேமித்து வைகின்றது...........பின்னர் மீண்டும் அந்த கிருமி நம்மை தாக்குமானால் அதன் பாதிப்பிலிருந்து நம்மை காக்கின்றது இதுதான் தடுப்பு ஊசிகளின் தத்துவம்.................இதை பற்றி மேலும் அறிய கீழே உள்ள லிங்கில் பொய் பாருங்கள்.............

http://anatomictherapy.org/Videos.html

நான் சொன்ன அந்த நபரை பற்றி நீங்கள் இந்த வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி: டாக்டர் பாஸ்கர் 

முல்லைப் பெரியாறு ?பாமரருக்கு எங்கே புரியும்???


கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை 136 அடியை எட்டியவுடன், கேரள மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் முயற்சிகளும், இந்தத் தருணத்தை அரசியலாக்கும் முயற்சிகளும் தொடங்கிவிட்டன.

முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 155 அடி. 1979-ம் ஆண்டு வரை இந்த அணையில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் 152 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. ஆனால், அணைப் பகுதியில் நிலநடுக்கம் என்ற தவறான செய்தி ஏற்படுத்திய பீதியின் காரணமாக, நீரைத் தேக்கிவைக்கும் அளவை 136 அடி உயரமாகக் குறைத்துக்கொள்ள தமிழக அரசு முன்வந்தது. இப்போது இந்த 136 அடியை தண்ணீர் எட்டியதும், அணை உறுதியாக இருப்பது தானே அம்பலப்பட்டுவிடுமே என்கின்ற பயம் அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது.

மழை காலத்தின் உணவு முறைகள்மழைக்காலம் thodangi தமிழகத்தில் கொட்டோ கொட்டென்று கொட்டி பல ஊர்களை வெள்ளக்காடாக மாற்றிவிட்டு
'இந்த மழை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா' என்பது போல அடுத்தடுத்த புயல் சின்னங்களும் பயமுறுத்தி கொண்டிருகின்றன.
தமிழ் சினிமாவின் பிரபல ஹீரோக்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டு வானிலை ஆய்வு மைய இயக்குனர் திரு.ரமணன் தற்காலிக
புது ஹீரோவாகி இருக்கிறார்.
சரி, விஷயத்துக்கு வருவோம். மழைக்காலம் வந்தால் அதோடு ஒட்டி பிறந்த குழந்தையாக பல்வேறு விதமான வைரஸ் காய்ச்சல்களும் வந்து
பாடாய் படுத்தும்.எனவே மழைக்காலத்தில் நமது அன்றாட உணவு முறைகளை கீழ்கண்டவாறு மாற்றிகொள்வது நலம்.
மழைக் காலங்களில் பழங்களைச் சாப்பிடும் எண்ணம் அவ்வளவாக ஏற்படாது. ஆனாலும் பழத்தை அப்படியே துண்டுகளாக வெட்டிச் சாப்பிட விருப்பமுள்ளவர்கள் சாப்பிடலாம்.
எல்லா சீசனுக்கும் பொருத்தமானது வாழைப்பழம். அதற்காக வாழைப் பழத்தை மட்டுமே சாப்பிடுவதற்கு பதிலாக மற்ற பழங்களையும் சேர்த்து சாப்பிடலாம்.
1. மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு உடனடியாக கொடுக்க நிலவேம்பு கஷாயம் பெஸ்ட். நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது.
இந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும்.
2. மழைக் காலத்தில் நாம் சாப்பிடும் உணவில் இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
3. பால் மற்றும் பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக் கூடாது, ஆனால் மோர் சாப்பிடலாம். உடலுக்கு நல்லது.
4. நம் உணவில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
5. மதிய உணவின் போது தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம்.
6. இரவு தூங்குவதற்கு முன் பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது.
7. நீர்ச் சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை மழை சீசனில் உணவில் சேர்த்துக் கொள்வதை தவிருங்கள்.
8. கண்டிப்பாக மழைக் காலத்தில் நம் உணவுப் பதார்த்தங்களில் மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.
9. இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு, கீரை ஆகியவற்றைச் சேர்க்காதிருத்தல் நல்லது.
10. மழை சீசனில் பிஸ்கட் சீக்கிரம் நமத்துப் போகாமல் இருக்க பிஸ்கட் வைக்கும் டப்பாவில் சிறிது சர்க்கரைத் துகள்களை போட்டு வைக்கவும்.
11. சிலருக்கு சளி, இருமல் இருந்தாலும் விட்டமின் சி சத்து ஒத்துப் போகும். சிலருக்கு மழைக்காலம் வந்து விட்டாலே ஒத்துக் கொள்ளாது. எலுமிச்சம், ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டாலும் ஒன்றும் செய்யாது.
ஆனால் ஒத்துக் கொள்ளாதவர்கள் கண்டிப்பாக சாப்பிடாமல் இருப்பது நல்லது. சாப்பிடும் உணவுகள், லேசான சூட்டில் இருக்கும் படி பார்த்துக் கொண்டால் நல்லது.
12. மழை சீசனில் கீரைகள் அதிகம் சாப்பிடா விட்டாலும் பரவாயில்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் கீரைகளை நன்றாக தண்ணீரில் கழுவி பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கீரைகளால் புதுசாக நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
13. மழை சீசனில் எல்லா காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிலருக்கு தண்ணீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள் ஒத்துக் கொள்ளாது. அத்தகையவர்கள் அவர்களுக்கு ஏற்ற காய்கறிகளை சமைத்துச் சாப்பிடலாம்.
14. அசைவ உணவாக, மீன், முட்டை, கறி, சிக்கன் என்று சாப்பிடலாம், ஆனால் அவை பிரஷ்ஷாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மழைக் காலங்களில் கடைகளுக்குப் போய் வாங்குபவர்கள் குறைவு. அதனால் மீன் போன்றவை பழைய ஸ்டாக் இருக்க வாய்ப்பு உண்டு.

திங்கள், 28 நவம்பர், 2011

இளமையில் கல்…
இளமையில் கல்…
உலகின் மிகப்பெரும் பொருளாதார ஜாம்பவானாக சீனா மாறி வருவதை அனைவரும் அறிவோம். அதே சீனாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஸிங்ஸியாங் மாகாணத்தில் நடத்தப்பட்டு வரும் அரசு வன்முறைகளை பெரும்பான்னையினர் அறிவதில்லை. பத்திரிகை செய்திகள், சீனாவில் இருந்து வரும் மக்கள் தரும் தகவல்கள் மூலமாக அங்கு முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டு வரும் அநியாயங்களை நாம் சிறிது அறிகிறோம்.
சமீபத்தில் ஸிங்ஸியாங் மாகாண முஸ்லிம்கள் குறித்து வந்த ஒரு மின்னஞ்சலில் உள்ள செய்தி அதிசயமாகவும் அதே சமயம் வேதனையாகவும் இருந்தது.
பதினெட்டு வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் மஸ்ஜித்களுக்கு செல்வதோ அல்லது மார்க்க கல்வி கற்கவோ கூடாது என்பதில் அரசாங்கம் மிகவும் கவனமாக உள்ளது என்பதுதான் அந்த செய்தி. மஸ்ஜித்களுக்கு செல்லும் மாணவர்களை கண்காணிப்பதற்கு சிறப்பு உத்தரவுகளும் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதனால் கலக்கமுற்றுள்ள மாணவர்கள் மஸ்ஜித்களுக்கு செல்வதற்கே மிகவும் தயங்குகின்றனர். அது மட்டுமல்லாமல், தங்களின் வீடுகளில் தொழுவதற்கு கூட அவர்கள் மிகவும் தயங்குகின்றனர். எங்கே தாங்கள் வீடுகளில் தொழுவதை யாரேனும் கண்டுவிட்டால், பள்ளிக்கூடங்களில் இருந்து தங்களை நீக்கி விடுவார்களோ என்ற அச்சம்தான் இவர்களை தொழுகையை விட வைக்கிறது.
ஆக முற்றிலும் இஸ்லாத்தை அறிந்து கொள்ளாத, இஸ்லாத்தை தங்கள் வீடுகளில் கூட பின்பற்றாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில் அரசாங்கள் மிகவும் கவனமாக உள்ளது. இஸ்லாத்தை அறிந்து கொள்ளாத இவர்களை அறியாமையிலும் பயத்திலும் எப்போதும் வைத்திருக்க வேண்டும், அதன் மூலம் தங்களின் சுரண்டல்களையும் அடக்குமுறைகளையும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் கணக்கு.
எங்கோ சீனாவின் ஸிங்ஸியாங் பிரதேசத்தில் நடைபெற்று வரும் நிலையை குறித்து சிந்தித்து கொண்டிருக்கும் போதே நமது உள்ளூர் நிலைமையும் நினைவிற்கு வந்தது. ஸிங்ஸியாங் பிரதேசத்தை போன்று மஸ்ஜித்களுக்கு செல்லக்கூடாது என்றோ மார்க்க கல்வி கற்க கூடாது என்றோ நமக்கு எவரும் தடைகளை விதிக்கவில்லை. ஆனால் தற்போதுள்ள தலைமுறையினர் இவற்றை விட்டும் விலகியே இருக்கின்றனர் என்பதுதானே உண்மை.
இருபது வருடங்களுக்கு முன்னர் காலையிலும் மாலையிலும் சாரை சாரையாக கையில் குர்ஆனுடன் மதரஸாக்களுக்கு செல்லும் குழந்தைகளை நம்மால் காண முடியும். அனைத்து மஸ்ஜித்களிலும் உள்ள மதரஸாக்களில் குழந்தைகளின் கூட்டம் அலை மோதும். ஒரு நாள் மதரஸா செல்லவில்லை என்றாலும் வீட்டிலும் மதரஸாவிலும் உள்ள கண்டிப்பை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. அங்கே குர்ஆனுடன் இணைத்து ஒழுக்கமும் ஒரு சேர கற்று கொடுக்கப்பட்டது. இஸ்லாத்தின் அடிப்படைகள் கற்று கொடுக்கப்பட்டன. அது மட்டுமா, இன்று மேடைகளில் முழங்கும் எத்தனையோ பேச்சாளர்கள் அன்று முதலில் முழங்கியது அந்த வகுப்புகளில் தானே!
இந்த சிந்தனையில் வளர்க்கப்பட்ட தலைமுறை இஸ்லாத்தை மேலும் கற்பதில் ஆர்வம் காட்டியது. அத்துடன் கற்ற இஸ்லாத்தை தனது வாழ்க்கையிலும் பிரதிபலித்தது. இஸ்லாத்தை கற்ற இந்த தலைமுறையிடம் ஒழுக்க வீழ்ச்சியும் கிடையாது, கோழைத்தனமும் கிடையாது, ஏமாற்றும் கிடையாது. பள்ளிக்கூடங்களுக்கு இணையாக இருந்த அந்த மதரஸாக்கள் மக்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தன என்பதை எவரும் மறுக்க முடியாது.
ஆனல் இன்று நிலை என்ன? அவசரமும் போட்டியும் நிறைந்த உலகில் இந்த மதரஸாக்கள் எங்கே சென்றன என்பதே தெரியவில்லை. உலக கல்வியின் மீதுள்ள மோகம் குர்ஆனை அறியாத ஒரு தலைமுறையை உருவாக்கி வருகிறது. குழந்தைகளில் கல்விக்காக சொந்த ஊரை விட்டு வெளியூர்களுக்கு கூட செல்லும் நாம், மார்க்கத்தை கற்று கொடுப்பதற்கு சிறிதளவேனும் முயற்சி செய்கிறோமா என்பது கேள்விக்குறிதான். மதரஸாக்களில் செல்லாத இவர்களிடம் ஒழுக்க வீழ்ச்சியும், சுயநலமும், கோழைத்தனமும் தான் மிஞ்சியிருக்கும். இத்தகைய ஒரு தலைமுறையால் குடும்பத்திற்கோ சமுதாயத்திற்கோ எவ்வித பலனும் இல்லை.
இளமையில் கற்கும் கல்விதான் ஒரு மனிதனை வார்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன என்பதை அனைவரும் அறிந்தே உள்ளோம். ஒழுக்கமுள்ள தலைமுறையை உருவாக்குவதற்கு நமது குழந்தைகளின் கைகளில் குர்ஆன் தவழ வேண்டும். இதனை அடைவதற்கு மூடப்பட்ட மதரஸாக்கள் திறக்கப்பட வேண்டும்.

நன்றி: ஏர்வை ரியாஸ் .

இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ளவேண்டிய செய்திவேகமாக    கடந்து செல்லும் நாட்கள்,கணினி மையாக்கப்பட்ட உலகம் இதற்கு நடுவே நாம் தெரிந்து கொண்ட விஷயங்கள் கையளவு இருந்தாலும் தெரியாத விஷயங்கள் உலக அளவு உள்ளது.அந்த வகையில் நம் காதுகளை அடிக்கடி தொட்டு செல்லும் வார்த்தை தான்  "பணவீக்கம்".முட்டை விற்கும் முகமது  முதல் முள்ளங்கி விற்கும் முனியம்மா வரை இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி தான் இது.

“நேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை!அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
நேரமில்லை! – இது நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை! அதிலும் குறிப்பாக தொழுகை, நஃபிலான வணக்கங்கள், மார்க்கக் கல்வியை பயில்வது போன்ற இபாத்களைப் பற்றி பேசப்படும் போது அதிகமாக உபயோகப்படுத்தும் வார்த்தை!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி...!அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது.

அனைத்து நாடுகளின் கரன்சிகளும், அமெரிக்க டாலருடன் ஒப்பிடப்பட்டே மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி ஒரு அமெரிக்க டாலருக்கு எத்தனை இந்திய ரூபாய்கள் என்பதை வைத்தே ரூபாயின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.

ஞாயிறு, 27 நவம்பர், 2011

அன்பு குழந்தைகளின் எதிர்காலம்…

அன்பு குழந்தைகளின் எதிர்காலம்…
அன்பின் சகோதரர்களே,எண்ணற்ற இஸ்லாமிய இயக்கங்களில் ஒரு இயக்கத்தின் ஆதரவு இணையதளத்தில் ஏர்வை ரியாஸ்
என்ற ஒரு முகம் தெரியா சகோதரர் எழுதிய இந்த கட்டுரை நிகழ்கால குழந்தை வரர்ப்பின் கசப்பான உண்மையை உணர்த்தும்படியாக இருந்ததால் இதை நீங்களும் தெரிஞ்சிக்கணும் என்ற நோக்கத்திற்காக இங்கே பதிகிறேன்.குழந்தைகள் நமக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பிட முடியாத அருட்கொடைகள். ஒவ்வொரு நாட்டின் வருங்கால தூண்கள். நாளைய தேசத்தை வழிநடத்த இருப்பவர்கள். இத்தகைய குழந்தை செல்வங்கள் சிறப்பான முறையில் வளர்க்கப்பட வேண்டும். இல்லையென்றால் இவர்கள் மிகவும் எளிதாக வழி தவற வாய்ப்புள்ளது.
சிறு வயதில் குழந்தைகள் பழகும் பழக்கங்கள், அவர்களின் மனப்பான்மை அனைத்தும் அவர்களின் வாழ்க்கையை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. வழி தவறிய குழந்தைகளால் குடும்பத்திலும் நாட்டிலும் குழப்பமும் வேதனையும் தான் மிஞ்சும்.
தற்போதுள்ள சூழ்நிலைகள் அடுத்த தலைமுறையினர் சந்திக்க இருக்கும் குழப்பங்களை குறித்து அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. குழந்தைகளுக்கு தேவையான துணிமணிகள், விளையாட்டு பொருட்கள் என எந்தவொரு பொருளை வாங்குவதற்கும் அதிகமான சிரமப்பட வேண்டியுள்ளது. எங்கு நோக்கினும் நாம் சிறிதும் விரும்பாத உருவங்கள்தான் விகாரமாக காட்சி தருகின்றன. பார்ப்பதற்கு எந்தவிதத்திலும் சகிக்காத ஸ்பைடர் மேன், பென்டன் வகையறாக்கள் தான் எங்கும் நீக்கமற உள்ளன. குழந்தைகள் அதிகமாக விரும்பும் பார்பி கேர்ள் பொம்மையும் இப்போது அரைகுறை ஆடையுடன்தான் வருகிறது.
திரையில் குழந்தைகள் எதிர்கொள்ளும் இத்தகைய கதாபாத்திரங்கள், அவர்களின் உள்ளத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 1990-களின் இறுதியில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சக்திமான் தொடரை பார்த்த குழந்தைகள், சக்திமான் என்னை காப்பாற்றுவார் என்று கூறிக்கொண்டு, மாடியில் இருந்து குதித்ததையும் தனது உடம்பில் தீ வைத்து கொண்டதையும் நாம் மறக்க முடியாது. ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் என எல்லா மேன்களுக்கும் இது பொருந்தும். ஆனாலும் இந்த நிழல் உலக ஹீரோக்களின் படையெடுப்பு நிற்பதாக இல்லை. இது குறித்து பல முறை எழுதப்பட்டாலும் இவர்களின் மீதான மோகம் குறைவதாக இல்லை.
நிழல் உலக ஹீரோக்களின் ஆக்கிரமிப்பால் குழந்தைகள் நிஜ ஹீரோக்களை மறந்து விடுகின்றனர். சமூக முன்னேற்றம் மற்றும் சீர்திருத்தத்திற்காக பாடுபட்டவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் என அனைவரும் இன்று வரலாற்று புத்தகங்களில் மட்டுமே இடம் பிடிக்க முடிகிறது.
ஸ்பைடர்மேன், பென்டன், சூப்பர்மேன் போன்ற கதாபாத்திரங்கள் குழந்தைகள் மனதில் அபரிதமான கற்பனைகளையும் வன்முறையையும் சத்தமில்லாமல் வளர்க்கின்றன. திரையில் காணும் சாகசங்களை தங்களால் நிறைவேற்ற முடியாத போது குழந்தைகள் மனதளவில் தோல்வியை உணர்கின்றன. இதனால் குழந்தைகளிடம் ஒருவித தாழ்வு மனப்பான்மை உருவாகவும் வாய்ப்பு உள்ளது. நேரத்தை போக்குவதற்கும் பள்ளியில் இருந்து சோர்வாக வரும் குழந்தைக்கு உற்சாகமாகவும் இருக்கும் என்ற எண்ணத்தில் பெற்றோர்களே இத்தகைய நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு அனுமதி அளிக்கின்றனர். ஆனால் இது அவர்களின் வாழ்க்கையை திசை திருப்பும் முயற்சி என்பதை அறியாதவர்களாகவே உள்ளோம், இல்லையென்றால் தெரிந்தும் அலட்சியமாக உள்ளோம். எதிர்கால சந்ததியினரை சீரழிப்பதற்கான முயற்சிகள் இவை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இது மட்டுமல்லாமல், கலாச்சார சீர்கேடு இன்னொரு விதத்திலும் சப்தமில்லாமல் அரங்கேறி வருகிறது. ஆயத்த ஆடைகள் வடிவத்தில் இன்று நம்முடைய கலாச்சாரம் புதை குழியை நோக்கி அழைத்து செல்லப்படுகிறது. தனது பெண் குழந்தைக்கு துணிகள் வாங்க சென்று திணறிய விதத்தை சமீபத்தில் ஒரு சகோதரி மிகவும் அழகாக பதிவு செய்திருந்தார். ஐந்து, ஆறு வயது குழந்தைகளுக்கு அறைகுறை ஆடைகள் மட்டுமே இருப்பதை கண்ட அவர், தன்னுடைய குழந்தைகளுக்கு புத்தாடைகளை வாங்காமலேயே அந்த கடையில் இருந்து வெளியேறியதாக தெரிவித்தார். ஆனால் பலரும் அந்த அரைகுறை ஆடைகளை வாங்கிய கையோடு தான் வெளியே வருகின்றனர் என்பதை நாம் கண்டு வருகிறோம். குழந்தைகளுக்கு ஒரு கண்ணிமான ஆடையை வாங்க முடியாமல் தடுமாறும் அவலத்தை எங்கு சென்று சொல்வது?
சில சிறுமிகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் அணிவிக்கும் ஆடைகள் மற்றவர்களை முகம் சுழிக்க வைக்கிறது. சிறுவர்களுக்கான உடைகளையும் விளையாட்டு சாமான்களையும் தேடிச் சென்றால் அதே கோரமான முகங்கள்தான் எங்கும் நிறைந்து இருக்கின்றன. நிஜ வாழ்க்கையில் சிறிது விகாரமாக யாரும் உடை அணிந்திருந்தால் அதனை விரும்பாத நாம், இத்தகைய கோரமான முகங்களையும் உடைகளையும் எப்படித்தான் சகித்து கொள்கிறோம் என்பது புரியவில்லை.
மாடல் அழகிகளையும் சினிமா நடிகைகளையும் போன்று தங்கள் குழந்தைகளுக்கு ஆடைகளை அணிவித்து மகிழ்பவர்கள், எத்தகைய சந்ததியினரை உருவாக்குகின்றனர்? மேலை நாட்டு கலாச்சார மோகமும் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறையும் இந்த குழந்தைகளை வழி நடத்தி செல்கின்றன. வளர்ந்த பின்னரும் இந்த கலாச்சார மோகத்தில் இருந்து விடுபட முடியாமல் அதிலேயே தங்களின் வாழ்க்கையை தொலைக்கின்றனர். விதிவிலக்காக ஒரு சிலர் மட்டும் இதில் இருந்து வெளியேறுகின்றனர்.
நம்மையும் அறியாமல் நம்முடைய கலாச்சாரம் சீரழிக்கப்பட்டு நாம் விரும்பாத விதத்தில் நம்முடைய குழந்தைகள் வளர்ந்து வருகின்றன. இதிலிருந்து குழந்தைகளை காப்பாற்றுவதில் பெற்றோர்களுக்கு தான் முக்கிய பங்கு இருக்கிறது. சினிமா நடிகைகளும் சூப்பர்மேன்களும் நமக்கு முன் மாதிரிகள் கிடையாது என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். அவர்கள் அணியும் ஆடைகளும் செய்யும் செயல்களும் கண்ணியமான நிஜ வாழ்க்கைக்கு ஒத்து வராது என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
நம்முடைய குழந்தைகள் டாக்டராகவும் எஞ்சினியராகவும் தொழில்நுட்ப வல்லுனராகவும் வர வேண்டும் என்று ஆசை கொள்கிறோம். ஆனால் அவர்கள் நல்ல மனிதர்களாக வளர வேண்டும் என்று ஆசை கொள்கிறோமா? பதில் நம்மிடம்தான் உள்ளது.

வியாழன், 24 நவம்பர், 2011

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...

நண்பர் சாதிக் அலி குமுதம் இதழில் இருந்து அவர் சுட்டதை அனைவருக்கும் பகிர்ந்திருந்தார். இதோ நானும் ஒன்றை சுட்டு இங்கே பகிர்கிறேன்.ஒரு சிறு வித்தியாசம் , இது குமுதத்தில் இருந்து சுட்டது அல்ல. ஒரு துபாய்வாசியின் மனைவியின் குமுறலில் இருந்து சுட்டது.இதோ உங்களுக்காக...

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்துவிட்டு..
ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல...
மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல...
மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!
அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...
பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்...அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகைசொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனை தீ தள்ளி வாழ்வள்ளி என்று சென்றுவிட்டாய்...
என் துபாய் கணவா!
கணவா... - எல்லாமே கனவா.......?
கணவனோடு இரண்டு மாதம்...
கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ...
5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ...
2 வருடமொருமுறை கணவன் ...
நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
இது வரமா ..? சாபமா..?
அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்...
முகம் பூசுவோர் உண்டோ ?
கண்களின்அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?
நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில்நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்
வாழ்வின் அர்த்தம் புரிந்துவாழலாம்
விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவைபுரிந்து...
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...
வார விடுமுறையில் பிரியாணி... காசில்லா நேரத்தில் பட்டினி...
இப்படி காமம்மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்
இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!
தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
விரைவுத்தபாலில் காசோலை வரும்காதல் வருமா ?
பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?
நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு
ஒட்டியிருக்கிறது என்இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்
விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ
என் இதயத்தை?
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு...
நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே
பாலையில் நீ, வறண்டது என் வாழ்வு!
வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல்
ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!
உன் துபாய் தேடுதலில்...
தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
விழித்துவிடு கணவா! விழித்து விடு -
அந்த கடவுச்சீட்டு வேண்டாம்...கிழித்துவிடு!
விசாரித்து விட்டு போகாதே கணவா
விசா ரத்து செய்துவிட்டு வா!
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...

புதன், 16 நவம்பர், 2011

நோகாம நொங்கு எடுத்தல்............!!!!

என்னங்க தலைப்பை பார்த்தவுடனே, எதாவது ஏடாகூடமா இருக்குமேன்னு பார்தீங்களா. அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை, இன்று குமுதம் நாளிதழ் படித்தேன்......அதிலிருந்து சுட்டவைகள்தான் இந்த பதிவு..............அதைதான் இப்படி நோகாம நொங்கு எடுத்தல் அப்படின்னு சொல்லுறேன்.............இன்னும் தெளிவா சொல்லனும்னா..........சுட்டது......................சரி அப்படி என்னத்தைதான் சுட்டேன்னு பாப்போம்............வாங்க............

தத்துவம்:-
மேல விழுந்தால் அது பேரு அருவி
அதே கீழே இருந்து மேல போனா அது பேரு குருவியோசனை:-
ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் கொண்டாடும் பொது - ஏன்
தாலி கட்டி காதலர்தினம் கொண்டாட கூடாது.

பஞ்ச்:-

 1. வாழ்கை ஒரு பட்டாம்பூச்சி மாதிரி லேசா பிடிச்சா பறந்துடும், இறுக்கி பிடிச்சா இறந்திடும்............
 2. என்னதான் ஒருத்தர் வாழ்கையில் படி படியா ஏறி முன்னுக்கு வந்தாலும் அவர் எத்தனை படி ஏறி வந்தார்னு யாரும் சொல்ல முடியாது.


பீலிங்க்ஸ்: 
மாணவி (இறைவன் குடுத்த காதலி)
அம்மா (இறைவன் குடுத்த வரம்)
நண்பன் (இறைவன் குடுத்த அமுதசுரபி) யாருப்பா அங்கே ஒசியான்னு கேட்குறது.............அப்படி எல்லாம் கேட்க கூடாது..............

கடைசியாக ஒரு சர்தார்ஜி:-


சர்தார்ஜி: ஏய் என்னை பார்த்தா பாரினர் மாதிரியா இருக்கு.
நண்பர்: இல்லையே?
சர்தார்ஜி:- அப்புறம் ஏன் அமெரிக்க பொய் இருந்தப்ப என்னை எல்லோரும் பாரினரான்னு கேட்டாங்க ......!!!!!!!!!!
நண்பர்: ??????????????????????

ஒரு டாஸ்மார்க் தத்துவம்:-

பத்து ரூபா குடுத்து வாங்குற தோசைக்கு எத்தினை வகை சட்னி குடுக்குறாங்க, என்பது ரூபா குடுத்து வாங்குற குவாட்டருக்கு ஒரு ஒருகை கூட குடுக்க மாட்டேங்குறாங்க:
இப்படிக்கு
ஊறுகாயும் வெறும் கையுமாய் அலைவோர் சங்கம்.............இங்கே மேல உள்ள படத்திற்கு வசனம் தேவயில்லை...............

திங்கள், 14 நவம்பர், 2011

உங்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார் அளிக்க- Online Petition Filing


 

நம்மை சுற்றிலும் தினம் தினம் ஆயிரம் பிரச்சினைகள் உள்ளது. குடிநீர், சாலை வசதி,மின்சாரம் இன்னும் ஏராளமாக சொல்லி கொண்டே போகலாம். நம் ஊரில் உள்ள உள்ள கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளிகடம் சொல்லி சொல்லி அலுத்து போய் இருக்கும். செல்வாக்கு உள்ளவர்கள் பிரச்சினைகளை உயர் அதிகாரிகளிடம் பணம் கொடுத்து வேலையை சுலபமாக முடித்து கொள்வார்கள். ஆனால் அனைவாராலும் இதை செய்ய முடியாது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதன்மையானவர் மாவட்ட கலெக்டர் தான் ஆனால் நாம் அவரை நேரடியாக சந்தித்து புகார் அளிக்க வேண்டுமானால் படாத பாடு பட வேண்டும். இதனால் பெருமாலானவர்கள் பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லை.


ஆனால் நம் தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைன் மூலம் புகார் அளிக்கும் வசதியை உருவாக்கி வைத்துள்ளது.  ஆனால் இந்த வசதி இருப்பதை பல பேர் இன்னும் அறியாமல் உள்ளனர். ஆதலால் இந்த வசதியை அனைவரும் பயன்படுத்தும் விதமாக இங்கு தெரியப்படுத்துகிறேன்.

 • இதற்க்கு முதலில் Online Petition Filing இந்த லிங்கில் செல்லுங்கள்.
 • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் வலது பக்க சைட்பாரில் Select என்ற ஒரு சிறிய கட்டம் இருக்கும்.
 • அதில் கிளிக் செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். 
 • அந்த லிஸ்டில் உள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே இந்த வசதி தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்கள் விரைவில் எதிர்பார்க்கலாம்.
 • உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்தவுடன் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். நான் திருவள்ளூர் மாவட்டத்தை தேர்வு செய்துள்ளேன்.
 • அந்த விண்டோவில் நான் குறிப்பிட்டிருக்கும் இடத்தில் உங்கள் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொள்ள ஈமெயில் முகவரி கொடுக்கப்பட்டிருக்கும். 
 • அதை குறித்து கொண்டும் ஈமெயில் அனுப்பலாம்.
 • அல்லது அதில் உள்ள கோரிக்கை பதிவு என்ற லிங்கை கிளிக் செய்து வரும் விண்டோவில் உங்கள் கோரிக்கையை அனுப்பலாம். 
 • இதில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பினால் உங்கள் கோரிக்கைக்கான ஒரு எண் கொடுப்பார்கள் அதை குறித்து கொண்டு கோரிக்கை நிலவரம் என்ற பகுதியில் இந்த எண்ணை கொடுத்து சோதிப்பதன் மூலம் உங்களின் கோரிக்கை எந்த நிலையில் உள்ளது என அறியலாம்.
 • கோரிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் அந்த கோரிக்கை எண் வைத்து நீதிமன்றங்களில் மேல் முறையீடும் செய்யலாம். 
 • நண்பர்களே இதில் கொடுக்கும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும் போலி விவரங்களை கொடுக்க வேண்டாம்.
 • இந்த தளத்தில் சில மாவட்டத்தை தேர்வு செய்தால் அந்த தளம் error காண்பிக்கும்.ஆனால் சில மாவட்டத்தை தேர்வு செய்தால் அந்த தளம் வேலை செய்கிறது. 
நண்பர்களே இந்த செய்தியை முடிந்தவரை உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிப்பதன் மூலம் அவர்களும் பயனடைவார்கள்

தேன் மருத்துவம்!


Honey
தேன் என்ற வார்த்தையைக் கேட்டாலே அனைவரின் நாவிலும் எச்சில் ஊறும். இயற்கையின் கொடைகளில் தேனும் ஒன்று. தேன் எத்தனை வருடங்கள் ஆனாலும் கெடாது. தன்னுடன் சேர்ந்த பொருட்களையும் கெடாமல் பாதுகாக்கும். சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்தலாம். தேனில் குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற சர்க்கரை பொருட்கள் உள்ளன.
தேனில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு தேனுக்கும் தனித்தனி மருத்துவ குணங்கள உண்டு.

ஞாயிறு, 13 நவம்பர், 2011

புகை ?

ஒரு மிதமான பொழுதுபோக்கிற்காக, நண்பர்களுடன் கலந்துரையாடும்போது பிடிப்பதாக இருந்த இந்த வெண்சுருட்டுகள் இன்று அனைத்து தரப்பிலும், பழக்கமாகிப் போய், அதை விட்டொழிக்க முடியாமல் தள்ளாத வயதிலும் தடுமாற்றத்தோடு அதை தவறாமல் புகைத்து வருகிறார்கள். புகைப்பவருக்கு புகை பல்வேறு நோய்களை தருவது மட்டுமின்றி, அருகில் இருப்பவர்களுக்கும் சேர்த்து இலவசமாக நோய்களைத் தந்து விடுகிறது என்பதுதான் புகைப்பவர்கள் தன்னையும் அறியாமல் செய்யும் கொடும் செயல்! அப்படி என்னதான் புகையால் தீமைகள் ஏற்படுகின்றன? என்றால், முதலில் புகைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதே தீய எண்ணம்தான்! ஒரு வெண் சுருட்டில் மட்டும் தார், நிக்கோட்டின், துத்தநாகம், சல்பர் போன்ற 148 வகையான வேதிப் பொருட்கள் இருக்கின்றன. இந்த நூற்றுக்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் ஒரு சேர பாதிக்கும். நச்சுகளின் மொத்த நாசகாரக் கலவைதான் இந்த வெண் சுருட்டுகள்!உலக நலவாழ்வு அமைப்பின் கூற்றுபடி ஒரு நாளைக்கு 20 வெண் சுருட்டுகள் வீதம், 20 வருடங்களுக்கு தொடர்ந்து புகைத்தால் நுரையீரலில் புற்று நோய் வர வாய்ப்புள்ளது. ஆனால் இது பல வருடங்களுக்கு முன்பு வரையறை செய்யப்பட்ட ஒரு கணிப்புதான்! ஆனால் இப்போது காலம் மாறி கிடக்கும்போது, பத்து வருட அளவிலேயே பெரும் கேடுகள் நிகழ்ந்து விடுகின்றன. முதலில் பாதிக்கப்படுவது சுவாச மண்டலம்தான். ஒவ்வாமை, தும்மல், சளித் தொந்தரவுகள், இடைவிடா இருமல், இழுப்பு போன்றவை வரும். பிறகு இது ஆஸ்துமாவாக, மூச்சிரைப்பாக மாறும். சிலருக்கு காசநோயும் வரலாம். இவற்றின் தொடர்ச்சியாக நுரையீரல் புற்றுநோயும் வரலாம். இது விளையாட்டான செயல் அல்ல. கடும் விளைவுகளில் சிக்கிக்கொண்டு சிதறுண்டு போவதற்கான ஒரு முன்னோட்டமாக அமைந்து நம்மை அழித்து விடும். பிறகு பாதிக்கப்படுவது இதயம். இதயத்தின் ரத்தக் குழாயில் நச்சுக்கள் படியும்போது இதயத்தில் சுவர்கள் தடித்து வீங்கி, ரத்தக்குழாயின் அளவு சுருங்கி மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன.சுருங்கச் சொன்னால் சுத்தமான குடிநீரில் அசுத்தமான கழிவு நீர் இரண்டறக் கலப்பது போலத்தான் இங்கும் நடக்கிறது. இதயத் தமனியின் வீக்கம், நுரையீரல் நீர்க்கோவை, இதயத் தசைகளின் செயலிழப்பு என்று ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு விடுகின்றன. சில சமயங்களில் மூச்சு மண்டல - இதய செயலிழப்பும் ஒரு சேர ஏற்பட்டு அது உயிரை உடன் பறித்து விடுகிறது. புகைப்பவர்கள், தேநீர் குடித்துக்கொண்டே புகைக்கும்போது பசி உணர்வு இல்லாமல் போகிறது. இப்படி தொடர்ந்து வினைகள் நடக்கும்போது எதிர்வினையாக குடற்புண்ணும், குடற் சுருக்கமும் ஏற்பட்டு பசி இல்லாமல் போகிறது. இந்நிலை நீடித்தால் குடற்புற்று நோய் வரும். இதில் சிக்கல் என்னவென்றால் ஒரு முறை புகையை உள்ளிழுத்து வெளியில் ஊதிய பிறகு மனம் முழுவதாக நிறைவடைவதில்லை. மூளையின் முன் பக்க செல்கள் வேதிப் பொருட்களை தொடர்ந்து சுரந்து மீண்டும், மீண்டும் புகைக்கும் ஆவலை ஏற்படுத்துகின்றன. இல்லை என்றால் ஒரு விதமான பயம் - பதட்ட உணர்வு நிலைக்கு அழைத்து செல்கின்றன. இந்த நரம்பு சார்ந்த வேதிகளின் அதாவது 'கார்ட்டிசால்', 'அட்ரீனலின்' போன்றவை பழக்கத்திற்கு அடிமையாக்குகின்றன. இல்லை என்றால் மனம் குழம்பிய நிலையை தற்காலிகமாக தோற்றுவித்து விடுகின்றன. இந்த நிலைமைகளை சமாளிக்க முடியாத மனிதன் மீண்டும் அந்த நெருப்பை பற்றவைத்து விடுகிறான். அதே நெருப்பிலேயே வெந்தும் சாகிறான். மன உறுதி, தியானம், உடற்பயிற்சி, மனநல ஆலோசனை, சுயக் கட்டுப்பாடு, யோகா போன்றவற்றால் மட்டும்தான் இந்த பழக்கத்தை விட்டொழிக்க முடியும். புகை பிடிக்காமல் இருந்தால் எப்போதும் நிம்மதி கிடைக்கும். அந்த பழக்கத்திற்கு அடிமையானால், அதற்கு என்றென்றும் அடிமைதான். எதற்கும் அடிமையாகாமல் இருக்க புது உறுதி ஏற்போம். புகையை அடியோடு மறப்போம்...

புதன், 9 நவம்பர், 2011

இது சும்மா ஒரு தமாஸ்தாங்க.


இது சும்மா ஒரு தமாஸ்தாங்க.......இருந்தாலும் கொஞ்ச சிந்திக்க கூடியதுதான்.............


நமக்கு வருடத்திருக்கு மொத்தம் 365 நாட்கள் இதுலதாங்க பிரச்சனையே அது என்னென்னு நீங்களே கீழே படியுங்கள்................

 1. வருசத்துல மொத்தம் 52 நாயிற்றுகிழமைங்க, அப்போ மீதமிள்ளது வெறும் 313 நாட்கள்தான்.
 2. அப்புறம் இதுல கொடைவிடுமுரைன்னு பார்த்தா எப்படியும் ஒரு 50 நாள் வந்துடும் இப்போ மீதமிருக்கிறது 263 நாட்கள்தான்.
 3. இதுல ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தூகம்ம்னு வைத்தால் வருடத்திற்கு 122  நாள் ஆகுது, நமக்கு இருப்பது மீதி 141  நாள்தான் 
 4. சரி இந்த விளையாட்டுன்னு பார்த்தா தினமும் ஒரு ஒரு மணிநேரம் அப்போ வருடத்திற்கு 15 நாள் . மீதி 126 நாட்கள்தான் .
 5. இதுல தினமும் இரண்டு மணி நேரம் சாப்பாட்டுக்கு ஒதுக்கினால் வருடத்திற்கு 30 நாட்கள் அதையும்  கழித்தால் வெறும் 96 நாட்கள் தான்.
 6. இதுல நாம ஒருநாளைக்கு பேசுறது மட்டும் ஒரு மணி நேரம் என்றாலும் அதிலேயும் ஒரு 15 நாட்கள் போய்டும் மீதம் இருப்பது 81 நாட்கள்.
 7. இதுல பள்ளியில் பரீட்சை நாட்கள் என்று பார்த்தல் குறைந்தது ஒரு 35 நாட்கள் வந்துடும், மியயுறது 46 நாட்கள்தான்.
 8. இதுல கால் பரீட்சை, அரை பரீட்சை மற்றும் பண்டிகை தேதி விடுமுறைன்னு பார்த்தல் அதுலே எப்படியும் ஒரு 40 நாட்கள் போய்டும் மீதி வெறும் 6 நாட்கள்தான்.
 9. இந்த ஆறு நாட்களில் மருத்துவ விடுமுறைன்னு ஒரு மூன்று நாளும், சினிமா மற்றும் கேளிக்கைகள்ன்னு இரண்டு நாளும் பொய் விட்டால் கடைசியாக மிஞ்சுவது வெறும் ஒரே நாள்தான்................
 10. அந்த ஒரு நாளும் உங்களின் பிறந்த நாலா போய்டும்...............................
இப்ப சொல்லுங்க எப்படிதாங்க படிக்கிறது??????????????? மாணவன் எப்படிதாங்க வெற்றி அடைவது.................................ரொம்ப கஷ்டம்........................

ஆனால் இங்கே ஒட்டு போடுவது ரொம்ப ஈசி 

வியாழன், 3 நவம்பர், 2011

பெருநாள் வாழ்த்துக்கள்....

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பார்ந்த வாசகர்களே, நாளை முதல் எனக்கு விடுப்பு தொடங்க இருப்பதை 
முன்னிட்டு என்னுடைய பெருநாள் வாழ்த்தை............இன்றே கூறிகொள்கிறேன்.
உண்மையைச்சொல்லப்போனால் அனைவரின் மனதிலும் ஒரே விதமான
மகிழ்ச்சி குடியேறியிருக்கும் போது நேரம் போவது தெரியாதுதானே.

சந்தோசத்தில் மிகப்பெரிய சந்தோசமே மற்றவர்களை சந்தோசப்படுத்திப் 

பார்ப்பதுதான் என்று சொல்வது போல். இந்த நாளில் நம்மால் இயன்ற அளவு, 
நம்மை சுற்றி ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு உதவி செய்து, அவர்களும் பெருநாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு உதவி செய்வோமாக.


இதே மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து

 கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் எனது இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துகள்.

இந்த நன்னாளில் நாமும், நமது குடும்பமும் மற்றும் நம்மை சுற்றியுள்ள 

அனைவரும் அனைத்து வளங்களையும் பெறவும், நமக்கு வரும் பிரச்சனைகளை லேசாக்கி, தீர்த்து வைக்கவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

புதன், 2 நவம்பர், 2011

லிபியா-கதாஃபி : 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்'
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல்... இராணுவப்புரட்சி மூலம் சண்டையின்றி இரத்தமின்றி ஆட்சியை கைப்பற்றிய...கதாஃபி...(லிபிய மக்களுக்கு) மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..! தந்நாட்டு மக்களை அநியாயமாக கொன்று குவித்து கொலைகாரன் ஆகாதவரை..!

இந்த லிபிய மக்கள் கடாஃபியின் கீழ் எப்படி வாழ்ந்தார்கள்..? ஆட்சியாளரான கடாஃபியின் ஆட்சி எப்படி இருந்தது..? அது பற்றி மேற்கத்திய சியோனிச ஊடகங்களால் மறைக்கப்பட்ட உண்மைகளை இனியும் நாம் அறியாதிருக்க கூடாது சகோ..!அவற்றில் சில உங்கள் 
ஆச்சர்ய பார்வைக்கு..!

செவ்வாய், 1 நவம்பர், 2011

கொள்ளை அடிக்கப்படும் இராக் எண்ணெய்....கொழிக்கும் குள்ள நரிகள்...ண்ணெய் வளமிக்க மேற்காசிய நாடுகளில் இராக் முதலிடம் வகிக்கிறது. இராக்கில் பூமிக்கடியில் 505 பில்லியன் (ஒரு பில்லியன் 100 கோடி) பீப்பாய்கள் (Barrel) அளவுக்கு பெட்ரோல் உண்டு. அவற்றில் 134 பில்லியன் பீப்பாய் பெட்ரோல் வெளியே எடுப்பதற்கு ஏற்ற நிலையில் உள்ளது.