OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 27 ஜனவரி, 2011

சாஸ்திரி பவனா? சாகடிக்கிற பவனா?


இன்று ஏதாவது பதிவு போடலாம் என்று எண்ணியபோதுதான் எனக்கு இந்த தலைப்பில் பதிவு போடவேண்டும் என எண்ணினேன், கடந்த வருடம் நான் சாஸ்திரிபவனில் பட்ட அவஸ்தைகளை பற்றியதுதான் இந்த பதிவு.

கடந்த வருடம் நான் எனது குழந்தைக்கு பாஸ்போர்ட்  விண்ணப்பம் செய்வதற்கு  சென்னையில் உள்ள சாஸ்திரிபவன் செண்டிருந்தேன், அதற்க்கு முன்னரே அதனுடைய விண்ணப்பத்தை நான் ஆன்லைனில் முழுவதும் பூர்த்தி செய்து அதனை பிரிண்ட் எடுத்தும் மேலும் அதற்க்கு தேவையான டாகுமென்ட்ஸ் அனைத்தையும் தயார்படுத்தி கொண்டுதான் சென்றேன் (சில தகவல்கள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதை நான் பட்டவுடன்தான் தெரிந்து கொண்டேன்).எனக்கு நவம்பர் மாதம் 15 ம் தேதி நேரம் ஒதுக்க பட்டது, இந்த நேரம்குறிப்பது என்பது சும்மா ஒரு பேருக்குதான்அங்கே போன உடனேதான் தெரிஞ்சுது. 

நம் அனைவருக்கு தெரியும் அரசு அலுவலங்கள் காலை 09:30 மணிக்குதான் ஆரம்பிப்பார்கள் என்று. நான் சென்னை கிடையாது அதனால் எனது ஊரில் இருந்து இரவு கிளம்பி,  காலை எட்டு மணிக்கு சாஸ்திரிபவனை அடைந்தேன், போன வுடனேயே என்னக்கு பெரிய அதிர்ச்சி, என்ன வென்றால் அங்கே அவ்வளவு நீளமான ஒரு வரிசை. என்னடா இது இப்படி இருக்கேன்னு ஒரு நிமிஷம் ஆடிபோயிட்டேன், சரி வந்தது வந்துட்டோம், வேலை முடியாம போக கூடாது அப்படின்னு, அங்கே இருந்த ஒருவரிடம் விசாரித்தேன், குழந்தைக்கு தட்கல்ல விண்ணப்பிக்க எந்த வரிசை என்று அதற்க்கு அவர் சொன்னார் அது இரண்டாவது மாடி என்று அப்பாட ஒரு வழியா அந்த கூட்டத்தில்ருந்து தப்பித்தோம் என்று எண்ணி கொண்டே இரண்டாவது மாடிக்கு சென்றேன். முதல் மாடியில்  தகவல்தொடர்புகள்   (அதாவது ஏதாவது விண்ணப்பத்தில் தவறு, இல்லை பிழை திருத்தும் போன்றவைகளை   பற்றிய தகவல் அறிவதற்கு).கீழே உள்ளது பொதுவாக பாஸ்போர்ட் விண்ணப்ப செய்வது. இந்த இரண்டு வரிசையிலும் அப்படி ஒரு பயங்கரமான கூட்டம், அந்த மாதிரி ஒரு கூட்டத்தை நான் ரஜினி படத்துக்கு கூட பார்த்தது இல்லை. 

சரி இப்ப விசயத்துக்கு வருவோம், இரண்டாவது மாடி, அங்கே குழந்தை மற்று சீனியர் சிடிசன் இவர்களுக்கென்று தனியாக ஒரு கவுன்ட்டர் இருந்தது. அதில் குறைந்த பட்சம் ஒரு இருபத்தைந்து பேருதான் இருந்தார்கள் நான் போகும் போது அப்போதான் எனக்கு நிம்மதியானது. அப்போது என்னை போன்றே குழந்தைக்கு விண்ணபிக்க ஒருவர் வந்து இருந்தார், அவரும் என்னுடை வயதை  ஓட்டியவர் அதனால் நாங்கள் சிரித்து நேரத்தில் நண்பர்களானோம். பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பற்றிய தகவல்களை பரிமாரிகொண்டோம், பின்னர் மணி ஒன்பதானது, அங்கே ஒரு பணியாளர் வந்து வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக விண்ணப்பத்தை பார்த்து ஒரு சீல் போட்டு குடுத்து கூட ஒரு டோக்கனும் தந்தார். அதில் என்னுடைய அந்த புதிய நண்பரின் என் பதினெட்டு எனக்கு பத்தொன்பது. 
அதன் பின் நாங்கள் மற்றொரு கவுன்டருக்கு சென்றோம், அங்கே ஒரு அரைமணி தியாலம் காத்திருந்தோம், அதன் பிறகுதான் அங்கே உள்ள ஊழியர்கள் வந்து தங்களுடைய இடத்தில அமர்ந்தார்கள், டிஜிட்டளில் எங்கள் எண் கூறப்பட்டு மக்கள் அழைக்க பட்டார்கள், எங்கள் கவுன்டரில் இருந்த பெண்மணிக்கு எப்படியும் ஒரு 50 வயதிருக்கும் அந்த பெண்மணியை பார்த்தவுடனேயே தெரிந்தது இவ அவா என்று.மேலும் அவர் முகத்தில் கொஞ்சம் கூட சிரிப்பே (பல்லு இருந்தாச்சுனு கேட்காதீங்க அந்த மூஞ்சியே என்னாலே பார்க்க முடியலை அதுல பல்ல வேறயா நான் பார்ப்பேன்) இல்லை பாவம் வீட்லே பேரன் பேதி ரொம்ப தொல்லை குடுப்பாங்க போல. அந்த பெண்மணி எங்களுக்கு முன் சென்ற அனைவரிடமும் கடுபாகவே பதில் அளித்து கொண்டிருந்தார். 
இதில் எங்களுடைய முறை வருவதற்கு ஒரு மணி தியாலங்கள் ஆகிவிட்டது, எனக்கு முன் அவர் சென்றார், அதை வாங்கிய அந்த பெண் மணி, முதல் பக்கத்தை ஒரு இரண்டு வினாடி கூட பார்க்கவில்லை, அதற்குள் அடுத்த பக்கத்துக்கு போனார் அங்கே ஒரே வினாடிதான் ஏதோ தவறு என்று ஒரு கிராஸ் கோடு போட்டு போய் சரிசெய்து கொண்டு வருமாறு அவருடைய விண்ணப்பத்தை கையில் குடுப்பதற்கு பதிலாக, தூக்கி எறிந்தார் (வெளியில் இல்லை, கவுன்டரில் தான்). அடுத்து நான் கொஞ்சம் கடுப்போடு போனேன், எனக்கும் அத கதிதான், நான் வெளியில் வந்து விட்டேன், நேராக கீழே வந்து அந்த நண்பரை தேடினேன் அவர் தொலைபேசியில் யாருடனோ உரையாடி கொண்டிருந்தார், அவரின் உரையாடல் முடிந்தவுடன். அவரிடம் என்ன பிழை என்று கேட்டேன், நல்லா இரண்டு பேருக்கு ஒரே மாதிரியான பிழைதான், அவர் அதை பற்றி உரையாடி என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு கூறினார், அதை சரி செய்து விட்டு, கொண்டு போய் அதே பெண்மணியிடம் சமர்ப்பித்தோம் இருவரும், இப்ப கூட அந்த பெண் ஒழுங்காக பேசவில்லை என்னவோ எவன் ஊட்டு எழவோ பாய போட்டு அழுவுன்கிற மாதிரி வேலை செய்யுது. வாங்குற காசுக்கு வேலை செய்யுற மாதிரி அங்கே தெரியலை. சரி நம்ம காரியம் முடிந்தால் சரி என்று வாங்கி கொண்டு ஒக்கே என்று சீல் போட்டதே போது என்று வந்துவிட்டேன்.வெளியே வந்து நானும் அந்த நண்பரும் பெசிகொண்டோம் என்ன இந்த மாதிரி அநியாயம் செயிராங்கனு. 
இதுல என்ன அப்படி நான் கஷ்டபட்டேனு கேட்குறீங்களா? கொஞ்சம் கீழேயும் படிங்க. 
  1. இங்கே வளைகுடா நாடுகளில், அந்த நாட்டு பிரஜை அங்குள்ள ஒரு அரசு அலுவலகத்திற்கு சென்றால் அவனுக்கு இருக்கும் மரியாதை நம்மூருளே புதுமாப்பிள்ளைக்கு மாமியா வீட்லே கிடைக்குமே அந்த மாதிரி இருக்கு. ஆனால் நம்ம இதியாவுல!!!!!!!!!!!!!!!!!!!!.
  2. இந்த பாஸ்போர்ட் ஆபீஸ் இருக்கே அது மக்களுக்கு சேவை செய்ய கூடியதுல வருகின்றது, அப்படி இருந்தும் அங்கே மக்களை மதிகிறது கிடையாது, ஏன் ஒரு மிருகத்தை விட கேவலமா நடத்துறாங்க, 
  3. ஒரு மிருகதுக்குக் கூட புழு கிராஸ் என்ற அமைப்பு இருக்கு ஆனா நமக்கு மூஞ்சில கிராஸ் போடாம இருந்தா சரி. இதையும் நீங்க சொல்லலாம் நமக்கு தான் Human Rights irukke endru, இருக்குதான் ஆனா அவங்களாலே ஒண்ணுமே செய்ய முடியாது, அவுங்க செய்யுறது என்ன தெரியுமா? எவனாவது கொலை, கற்பழிப்பு போன்றவற்றிக்காக மரணதண்டனை பெற்றவனுக்கு பாடுபடுவாங்க, மத்தவங்க எல்லாம் அவர்கள் பார்வையில் மனிதர்கள் கிடையாது. 
  4. மேலும், நீங்க ஒழுங்கா விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொண்டு போக வேண்டியது தானே யென்றால், அதை நான் ஒத்துகொள்கிறேன் , அப்படியே தவறு இருந்தால் அதை பற்றி விளக்க வேண்டு இப்படி தூக்கி எறிய கூடாது.  படித்தவர்கள் பரவில்லை எப்படியாவது சமாளிப்பார்கள், படிக்காதவர்கள் என்ன செய்வார்கள், 
  5. அதிலும் வயது வித்தியாசம் கூட பார்க்க மாட்டேன்கிறார்கள். அதுமட்டுமில்லை, இந்த வயது அதிகம் உள்ள எருமைகளை எல்லாம் விளக்கி விட்டு இன்று நிறைய இளைஞர்கள் வேலை இல்லை இருகிறார்கள் அவர்களை பணிக்கு அமர்த்தினால் நன்றாக இருக்கும். சாகுற வயசுலே, அடுத்த வங்களை சாகடிகுதுங்க.
  6. சரி பிழை சரி பார்பதர்க்குதான் தனியாக கவுன்ட்டர் இருக்கேன்னு நீங்க சொல்லலாம், நான் ஏற்கனவே சொன்ன மாதிரி உள்ளூர் யென்றால் பரவில்லை இன்று இல்லை யென்றால் நாளை பார்த்து கொள்ளலாம், வெளியூர் காரன் என்ன பண்ணுவான். அவ்வளவு கூட்டம் அங்கே நிக்குது எல்லாத்துக்கும் காரணம் அவர்களேதான். 
  7. அட அந்த பெண்மணி தான் அப்படின்னு பார்த்த, கொய்யாலே அங்கே வேலை செய்கின்ற சாதரன் ஊழியன் கூட அப்படிதான் இருக்காங்கே. அது ஒருதான் என்னை ரொம்ப கடுபெதிட்டான், இத்தனைக்கும் அவன் ஒரு பிவுன் தாங்க. அவனை எல்லாம் கொய்யாலே அந்நியன் லே பாம்பை விட்டு கொல்ற மாதிரிதாங்க கொல்லனும்.
இதுல நம்ம மக்கள் (என்னையும் சேர்த்துதான்) மேலேயும் தவறு இருக்கு, எதாவது புதுப்படம் வந்தால் அங்கே மட்டும் டிக்கெட் கிடைக்கலைனா சத்தம் போடுறாங்க, பாருங்க பாஸ்போர்ட் என்பது நமது உரிமை, இந்தியாவிட்டு வெளில போக தேவைபட கூடிய அரசு அங்கீகாரம் அதனை வாங்குறதுக்கு பம்புறாங்க. என்னய்யா இது வேடிக்கை................................

மக்களின் மனநிலை என்று மாறுது அன்றுதான் இது போன்று மக்களை மதிக்காதவர்கள் மாறுவார்கள். 

ஒரு விஷயம் அங்கே நல்லா இருந்தது, அங்கே வெளில உள்ள டீ கடைல டீ ரொம்ப நல்லா இருந்துச்சுங்க>>>>>>>

2 கருத்துகள்:

Speed Master சொன்னது…

நல்ல தகவல்

வீர மரைக்கான் சொன்னது…

அபு சான நீங்கள் விரைவில் பத்திரிக்கை ஆசிரியராக வருவீர்கள்! என்ன நான் சொல்லுறது!!!!