OnlinePJ

Thanks for Visiting my Page
தமிழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

சில சமயங்களில் சில மனிதர்கள்!!!!!!!!!!!! மீள் பதிவு .

​மின்சாரம் இல்லையா? புகார் கொடுங்க! ரூ.50 பெறுங்கள்!


மின்சாரம் தடைபடும் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும்,  50 ரூபாய் வீதம் நுகர்வோருக்கு, மின் வாரியம் நிவாரணம் தர வேண்டும்,'' என, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

மின் நுகர்வோருக்கான உரிமைகள் மற்றும் நுகர்வோரின் குறை தீர்ப்புக்கான காலக்கெடு குறித்த,  தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவு விவரம்: மின் நுகர்வோர், தங்களது குறைகள் தொடர்பான அனைத்து முறையீடுகளையும், மின் பகிர்மான கழகத்தின் பிரிவு அலுவலகங்களில் நேரடியாகவோ,  தபால் மூலமாகவோ தரலாம். பிரிவு அலுவலர்கள் அல்லது    அவர்களால் அதிகாரம் அளிக்கப்பட்ட நபர்கள்,  மனுக்களை பெற்று,  எழுத்து மூலம் ஒப்புகை தர வேண்டும். இதற்காக, பிரிவு அலுவலகங்கள் உள்ளிட்ட  அனைத்து அலுவலகங்களிலும், பதிவேடு பராமரிக்க வேண்டும். இணைப்பை இடமாற்றுதல், மின்சார தடை, பெயர் மாற்றம், கட்டணப் பிரிவு மாற்றம், கட்டணப் பிரச்னை, தற்காலிக இணைப்பு, வோல்டேஜ் பிரச்னை, வைப்பு நிதி திரும்பப் பெறுதல் மற்றும் அனைத்து வகை மின் நுகர்வு பிரச்னைகளுக்கு மனுக்கள் தரலாம்...

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

இந்த பொறுப்பில்லாத ஊழியர்களை என்ன செய்யலாம்?


உட்பொதிக்கும் படங்கள் 1

ந்த ஆட்சி வந்தாலும் நஷ்டத்தில் இயக்கம் ஒரே துறை போக்குவரத்துத்துறை தான். இத்துறையின் நஷ்டத்தை ஈடுகட்ட பேருந்து கட்டணத்தை உயர்த்தி மக்களின் அதிருப்தியை கட்டிக்கொண்டது தமிழக அரசு. போக்குவரத்து கழகங்களின் இந்த நஷ்டத்திற்கு காரணம், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு மற்றும் வாகன உபகரணங்களின் விலை உயர்வு- ஊழியர்களின் சம்பள உயர்வு போன்ற காரணங்கள் கூறப்பட்டாலும் உண்மையான காரணம் என்னவோ போக்குவரத்து கழகங்களில் பணிகள் முறையாக நடக்கவில்லை என்பதுதான். 

ஞாயிறு, 20 மே, 2012

அம்மா ஆட்சியில் இஸ்லாமிய பெயர் தாங்கி கட்சிகள்


அஸ்ஸலாமு அலைக்கும்


அம்மா ஆட்சியில் பங்கு கொண்டுள்ள இஸ்லாமிய பெயர் தாங்கி கட்சிகள் கூட மதுவிலக்கை வலியுறுத்தாத நிலையில், தினமணி தைரியமாக வாய் திறந்துள்ளது.




மதுவிலக்கை அமல்படுத்தினால் அரசுக்குக் கிடைக்கும் ரூ.15,000 கோடி வருவாய் சமூக விரோதிகளுக்குச் சென்றுவிடும்' என்று தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன்,
சட்டப்பேரவையில் விளக்கம் அளித்திருக்கிறார்.

புதன், 16 மே, 2012

முஸ்லிம் மட்டும் என்ன வெறும் மயிரா?


ஏன் இந்த பாரபட்சம்? (எங்கே போனார்கள் இந்த மமக )

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செய்தியில் உள்ள இரண்டு விபத்துளும் அடுத்தடுத்த நாட்களில் தமிழ்நாட்டில் நிகழ்ந்ததாகும். இரண்டிலும் அப்பாவி மக்கள் சிலர் உயிரிழந்தனர். ஆனால் அதற்கு அரசு கொடுத்த முக்கியத்துவம் தான் பாரபட்சமாக உள்ளது. 



புதன், 25 ஏப்ரல், 2012

தமிழன்டா??????????????????



வணக்கம் தமிழகம்…
சும்மா சொல்லகூடாது…இடியட் பாக்ஸ்னு ஒரு பேரு இருக்கு டி.விக்கு அத விழுந்து விழுந்து பாக்குறதுல நாம தான் இந்தியாவிலேயே ரெண்டவது. நாம எல்லா டி.வியும் பார்போம்….ஒரு சேனல் குறையில்ல….ஆனா பாக்குறது மட்டும் பொழுதுபோக்கா இருக்கனும். எதாவது விஷயம் இருக்குற நிகழ்ச்சிய பார்த்தா அது பெரிய குற்றம்…சேனல்காரனுங்க பார்த்தானுங்க…உலகமே ஒப்பாரி வைச்சப்ப(அதாங்க இலங்கை மேட்டரு…நமக்கு எதுக்கு அதெல்லாம்…) T.R.P ரேட்டிங்கல நம்ம மானட மயிலாட தான் டாப்பு.


இவ்வளவு சொல்றேன்….நான் மட்டும் யோக்கியமா…நிச்சயம் இல்லை…அட நம்மள திருந்த விட்டாத்தானே…கொஞ்சமாவது யோசிக்கிற அளவு எந்த நிகழ்ச்சியும் இப்ப இல்லை…அப்படி போட்டாலும் அது பிரைம் டைம்ல இருக்காது…
ஒன்னு மட்டும் புரியுது…நமக்கு காட்டபடுறத மட்டுமே பாக்க பழகிட்டோம்… அதை தாண்டி நாம கேக்குறதும் இல்ல அவங்களா நல்ல நிகழ்ச்சிகளை போடுறதும் இல்ல….
ஆனாலும் நம்ம முயற்சிய விடாம அடுத்த இடத்த பிடிப்போம்……அதாங்க No.1…….முதல்ல இந்திய…அப்பறம் உலகத்துல…
என்ன பாஸ் கொஞ்சம் சிரிங்க….சீரியஸ் ஆய்டாதீங்க…

புதன், 15 பிப்ரவரி, 2012

எழுமிச்சையிலிருந்து மின்சாரம் :மாணவன் முஹம்மது ஹம்தான் சாதனை


குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருபவர் மாணவன் முஹம்மது ஹம்தான், இவர் எலுமிச்சம் பழத்திலிருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
தென்காசியை சார்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர். காதர் முகைதீன், ஷமீமா தம்பதிகளின்  மகன் முகம்மது ஹம்தான். இவர் பழையகுற்றாலத்தில் உள்ள ஹில்டன் மெட்ரிக் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று பலரின் முன்னிலையில் எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்பதை செய்து காண்பித்து அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
நான்கு எலுமிச்சை பழங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பழத்திலும் இரும்பு ஆணி மற்றும் காப்பர் கம்பியை செருகினார். இதன் பின்னர் காப்பர் கம்பியை தனி வயரிலும், இரும்பு ஆணியை தனி வயரிலும் இணைத்து சிறிய 2 வோல்ட் திறன் கொண்ட சிறிய பல்பினை எரிய வைத்து இந்த சாதனையை நிகழ்த்தி காட்டினார்.
இந்த கண்டு பிடிப்பு குறித்து மாணவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
“எனது தந்தை காதர் முகைதீன் மெக்கானிக்கல் என்ஜினீயர். அவர் கத்தார் நாட்டில் பணிபுரிந்தார். நானும் அங்கு வசித்தேன். நான் அங்குள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்தேன். இந்நிலையில் எனது தந்தை நெல்லையில் ஏற்றுமதி-இறக்குமதி கம்பெனி தொடங்கியதால் நாங்கள் தென்காசி வந்துவிட்டோம். நான் பழையகுற்றாலத்தில் உள்ள ஹில்டன் பள்ளியில் சேர்ந்து 6-ம் வகுப்பு படித்து வருகிறேன். அறிவியல் பாடத்தில் சிட்ரிக் அமிலத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்று படித்தேன்.
அப்போதுதான் புதுவழியில் சிட்ரிக் அமிலத்தில் இருந்து மின்சாரம் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசை வந்தது. எலுமிச்சம்பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளதால் அதி லிருந்து மின்சாரம் எடுக்க நினைத்தேன். அதன்படி எலுமிச்சம்பழத்தில் இரும்பு மற்றும் செம்பு கம்பிகளை சொருகி அவற்றை மின்கம்பி களால் இணைத்து பார்த்த போது மின்சாரம் வந்தது. ஒரு எலுமிச்சம்பழத்தில் இருந்த 0.5 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கும். 4 பழங்களில் இருந்து 2வாட்ஸ் பல்பு எரிகிறது.
மேலும் “எலுமிச்சை, பல்லாரி, உருளைக்கிழங்கு, தக்காளி, கத்தரிக்காய், ஆரஞ்சு, வாழைப்பழம் உள்ளிட்டவைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என எனக்கு பாடம் நடத்திய ஆசிரியை கூறினார்கள். அதனை நான் செயல்படுத்தி மின்சாரம் கிடைப்பதை உறுதிபடுத்திக் கொண்டேன்.”
இவ்வாறு மாணவன் முஹம்மது ஹம்தான் கூறினார்.
நன்றி:இந்நேரம்.காம்

வியாழன், 22 டிசம்பர், 2011

என்ன மலையாளிக்கு மூளை இல்லையா??????


இந்த பதிவு ஒரு வேளாண் பொறியியல் நிபுணரின் எழுத்து, அதை ஒரு பதிவர் அவரின் வலைப்பூவில் போட்டு இருந்தார் அதையே நானும் போட்டு இருக்கிறேன், இதில் எனது சொந்த கருத்து ஒன்றுமில்லை, முல்லை பெரியார் பற்றி எதுவுமே எழுதவில்லை என்பதால் அதை அப்படியே இதில் போட்டுவிட்டேன், முல்லை பெரியார் பற்றி எத்தினை பேர் எழுதினாலும் அதனுடைய அர்த்தம் ஒண்ணுதான் வார்த்தைகள் வேண்டுமென்றால் இடம் மாறலாம்.............கண்டிப்பாக இது நம் தமிழகத்தின் சொத்து..............இதை கண்டிப்பாக நாம் அந்த மூளை இல்லாத மலையாளிகளிடம் விட்டு விட கூடாது............தமிழகத்தில் அவர்களை கண்ட இடத்தில அடிக்க வேண்டும், கேரளாவிற்கு போக கூடிய பாதைகளை மறித்து போராட்டம் செய்வதை விட்டுவிட்டு, அவர்களுக்கு போகின்ற அத்தியாவசிய பொருட்களை நிறுத்த வேண்டும், அவர்களின் வயற்றில் அடித்தால் தான் புத்திவரும், இல்லை என்றால் உள்ளதும் போச்சு நோல்லைகன்னுனு ஆயிடும் இந்த தமிழ் நாடு.............(என்ன ஏற்கனவே அப்படிதான் இருக்கா!!!! அதுசரி).

எதிரிய மன்னிக்கலாம், துரோகிய மன்னிக்க கூடாது என்பது பொதுமொழி, ஆனால் அந்த துரோகிய கூட மன்னிக்கலாம் இந்த மலையாளிய மன்னிக்கவே கூடாது, இவர்கள் கரையான் போன்றவர்கள், அப்படியே அரித்து விடுவார்கள், இவர்கள் சென்னாகுன்னி போன்றவர்கள் அப்படியே சாய்த்து விடுவார்கள், இவர்களை எங்கு கண்டாலும் "அடிடா அவனை, உதைதா அவனை, அவன் தேவையே இல்லை".......................சரி இனி நானம் பதிவிற்கு போவோம்..................நண்பர்களே.......!!!!!!!!!!!!!!!

எப்போதுமே மக்களிடம் சின்ன பொய்களைச் சொல்லி ஆள்வது கடினம். அதனால்பெரிய பொய்களைச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்!'' - கோயபல்ஸ் 

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்ற பொய் முதன்முதலில் பத்திரிகையில் வெளியானது 1962-ல். மக்கள் அதைப் பொருட்படுத்தாதபோதுகேரள அரசு அதையே 1979-ல் பெரிய பொய்யாகச் சொன்னது இன்னொரு பத்திரிகை மூலம். அணையில் யானை புகும் அளவுக்கு வெடிப்புகள் ஏற்பட்டு இருப்பதாகவும்அணை எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்றும்லட்சக்கணக்கானோர் உயிரிழப்பார்கள் என்றும் சொன்னது. இந்த முறை மக்கள் அதை நம்பினார்கள். கொந்தளித்தார்கள். இன்று வரை அந்தப் பொய்யே ஆள்கிறது. 

உண்மை 1: அணைநோக்கங்கள்லாபங்கள்! 

ந்தியாவின் சராசரி மழை அளவு 1,215 மி.மீ. ஆனால்இந்த மழை அளவானது ஒரே மாதிரியானது அல்ல. உதாரணமாகராஜஸ்தானில் ஒரு பகுதியில் 100 மி.மீ மழை பொழியும். மேகாலயாவின் ஒரு பகுதியில் 11,500 மி.மீ. மழை பொழியும். இதேபோலதான்நதி நீர் வளமும். ஒருபுறம் தேவை. இன்னொருபுறம் விரயம். இந்த இரண்டுக்குமான இடைவெளியைக் குறைப்பதே சிறந்த நீர் நிர்வாகம். ஆங்கிலேயே அரசு முல்லைப் பெரியாறு அணையைக் கட்ட யோசித்தது இந்த அடிப்படையில் தான். தமிழகத்தின் பாசனப் பரப்பு நீரின்றிக் காய்ந்த அந்த நாட்களில்கேரளத்தின் நீர்வளம் வீணாகிக் கொண்டு இருந்தது. இங்கு பயிர் விளைந்தால்அங்கு அது உணவாகும் என்ற பார்வை ஆங்கிலேய அரசிடம் இருந்தது. அன்றைக்கு அணை கட்டப்பட வேண்டிய இடம் சென்னை ராஜதானியிடம் இருந்தது. அணையைச் சுற்றி இருக்கும் பகுதிகள் திருவாங்கூர் சமஸ்தானத்திடம் இருந்தன. அந்தப் பகுதிகளையும் ஆங்கிலேயர்களே எடுத்துக்கொண்டுஆறு லட்ச ரூபாயும் அஞ்சியோதங்கச்சேரிபாலம் ஆகிய மூன்று பகுதிகளையும் தந்தால் போதும் என்று கேட்டது திருவாங்கூர் சமஸ் தானம். ஆங்கிலேயர்கள் நினைத்திருந் தால், 999 ஆண்டு குத்தகைக்கு அந்த இடத்தை எடுத்துக்கொண்டதற்குப் பதிலாக இதைச் செய்திருக்கலாம். ஆனால்தமிழர்களும் மலையாளிகளும் சார்ந்திருக்க வேண்டும் என்று அவர் கள் நினைத்தார்கள். இன்றைக்கும் நாம் அவ்வாறே சார்ந்திருக்கிறோம்!முல்லைப் பெரியாறு அணையில் 155 அடி நீர் தேக்கப்பட்டால்தென் தமிழகத்தில் 2.23 லட்சம் ஏக்கர்கள் பாசனம் பெறும். 10 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள். இந்தப் பாசனப் பகுதி முழுவதும் நெல் விளைவிக்கப்படுவதாகக்கொண்டால்அதிகபட்சம் அதன் விளைச்சல் 10 லட்சம் டன்களாக இருக்கலாம். கேரளத்தின் தேவை 50 லட்சம் டன்கள். இதில்வெறும் 10 லட்சம் டன்களை மட்டுமே கேரளத்தால் உற்பத்தி செய்ய முடிகிறது. எஞ்சிய தேவையில்பாதிக்கும் மேல் தமிழகத்தாலேயே பூர்த்தி செய்யப்படுகிறது. அதாவதுமுல்லைப் பெரியாறு மூலம் பெறப்படும் விளைச்சலைப் போலஇரு மடங்கு நெல்லை நாம் அவர்களுக்குத் தருகிறோம். தவிரகாய் கனிகள்முட்டைஇறைச்சி என்று சகல மும் ஒவ்வொரு நாளும் 11 ஆயிரம் லாரி களில் தமிழகத்தில் இருந்து செல்கின்றன.தமிழகத்தின் பார்வையில் இருந்து பார்த்தால்இது ரூ. 1,780 கோடி வணிகம். கேரளத்தின் பார்வையில் இருந்து பார்த்தால்அவர்களுக்கு உணவு அளிப்பவர்கள் தமிழர்கள். கேரளத்திடம் இந்தப் பார்வை இல்லாததே பிரச்னையின் அடிநாதம்!

உண்மை 2: அணையின் வரலாறும் பாதுகாப்பும்!  

பென்னி குயிக்கால் 1886-ல் தொடங்கி 1895-ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணைசுண்ணாம்புக் கலவையைக் கொண்டு கருங் கற்களால் கட்டப்பட்டது. நீர் அழுத்தம்அலைகளால் ஏற்படும் அழுத்தம்நில அதிர்வுகளால் ஏற்படும் தாக்கம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் உறுதிமிக்க புவிஈர்ப்பு விசை வடிவமைப்பின் அடிப்படையில் கட்டப்பட்ட அணை இது. 1979-ல் அணையின் பாதுகாப்பு விவகார மானபோதுகேரள மக்களின் அச்சத் தைப் போக்கும் நல்லெண்ண அடிப்படையில்அணையைப் பலப்படுத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டது. 1980-1994 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வலுப்படுத்தும் பணி களின்போது, 1,200 அடி நீளம், 24 அடி அகலத்துக்குக் கிட்டத்தட்ட 12,000 டன் கான்கிரீட் கலவை அணையின் கட்டமைப்புடன் சேர்க்கப்பட்டது. 120 டன் சக்திகொண்ட எஃகுக் கம்பிகளால் அணை அடித்தளத்துடன் இறுக்கிக் கட்டப்பட்டது. மத்திய நீர்வள ஆணையத் தின் ஆலோசனைப்படிபுதிய வடிகால் மாடங்கள்மதகுகள் அமைக்கப்பட்டன. ஆகபழைய அணையைப் போல மூன்று மடங்கு பலம் கூட்டப்பட்டது. இந்த உறுதித்தன்மை நிபுணர்களாலும் பல முறை ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டது. 1979-ல் தமிழகத்திடம் அணையைப் பலப்படுத்தச் சொன்னவர் அன்றைய மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக இருந்த கே.சி. தாமஸ். கேரளத்தைச் சேர்ந்த இவரே சமீபத்தில், ''அணையின் பாதுகாப்பு தொடர் பான அச்சம் அர்த்தமற்றது'' என்றார்.  

உண்மை 3: கேரளத்தின் உள்நோக்கங்கள்!  

''ணை இருக்கும் பகுதியில் சிறு நில அதிர்வுகள் அடிக்கடி ஏற்படுகின்றன. ஒருவேளை ரிக்டர் அளவுக்குப் பூகம்பம் ஏற்பட்டால்அணை உடையும். அணை உடைந்தால், 35 கி.மீ. கீழே உள்ள இடுக்கி அணைக்கு 45 நிமிடங்களில் வெள்ளம் வந்து சேரும். இடுக்கி அணையையும் இடை யில் உள்ள சிறு அணைகளையும் அது உடைக்கும். இடுக்கிகோட்டயம்ஆலப்புழைஎர்ணாகுளம் பகுதிகள் மூழ்கும். 35 லட்சம் பேர் உயிரிழப்பர். எனவேபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடிகளாகக் குறைக்க வேண்டும்இந்த அணையை இடித்துவிட்டுபுதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும்!'' - கேரளத்தின் வாதம் இதுதான்.முல்லைப் பெரியாறு அணை அமைந்து இருக்கும் இடம்கேரளம் அஞ்சுவதுபோல பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் பகுதி அல்ல. ஒரு வாதத்துக்காக அணை உடை வதாகவே கொண்டாலும்அணையில் இருந்து வெளியேறும் வெள்ளம் இடுக்கி அணையையே வந்தடையும். இடுக்கி அணை முல்லைப் பெரியாறு அணையைப் போல மடங்கு பெரியது. இதற்கு இடையே குமுளிஏலப்பாறா பகுதிகள் மட்டுமே உள்ளன. அவையும் அணை இருக்கும் மட்டத்தில் இருந்து முறையே 460, 1,960 அடி உயரத்தில் உள்ளன. வெள்ளம் எப்படி மூழ்கடிக்கும்?முல்லைப் பெரியாற்றில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 4867 மில்லியன் கன மீட்டர். இதில் கேரளம் பயன்படுத்திக் கொள்வது 2254 மில்லியன் கன மீட்டர். கடலில் கலப்பது 2313 மில்லியன் கன மீட்டர். தமிழகத்தின் பங்கு - அணையின் நீர் மட்டம் 152 அடியாக இருந்தாலும் - 126 மில்லியன் கன மீட்டர்தான் (சுருக்க மாகச் சொன்னால்சற்றே பெரிய குழாய் களில் தமிழகத்துக்குத் தண்ணீர் வருகிறது!) எனில்கேரளம் ஏன் எதிர்க்கிறது?தங்களுடைய இடத்தில் உள்ள ஓர் அணையின் பயனை தமிழகம் அனுபவிப்பதைச் சகித்துக்கொள்ள முடியாத காழ்ப்பு உணர்வே கேரளத்தின் பிரச்னை. தண்ணீர் மூலம் உருவாகும் மின்சாரமும் தொழில் வளர்ச்சியுமே அதன் உள்நோக்கங்கள்.புனல் மின்சார உற்பத்திக்கான கேந்திர முக்கியத்துவம் மிக்க பகுதி இது. கேரளத்தின் தொழில் வளர்ச்சியை மனதில்கொண்டுநாட்டின் பெரிய நீர் மின் உற்பத்தி நிலை யத்தை இங்கு நிர்ணயிப்பது கேரள அரசின் நெடுநாள் கனவு. இடுக்கி அணைகூட அந்தக் கனவின் வெளிப்பாடுதான். நீர்வரத்தை அதிகமாகக் கணக்கிட்டு இந்த அணையைக் கட்டிவிட்டது கேரளம். 780 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் இலக்கோடு கட்டப் பட்ட இந்த மின் நிலையம்முழு அளவில் இயங்க விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் பாய வேண்டும். அது சாத்தியப்படவில்லை. முல்லைப் பெரியாறு அணை இல்லை என்றால்தமிழகத்துக்கு நீர் அளிக்க வேண்டிய தேவை இல்லை என்றால்அது சாத்தியம் ஆகும் என்று கேரளம் நினைக் கிறது. மேலும்சில மின் உற்பத்தித் திட்டங் களை அது மனதில் வைத்திருக்கிறது.முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 155 அடியாக இருந்தால்அதன் நீர்ப்பரப்பு 8,591 ஏக்கர். 136 அடியாக இருக்கும்போது அதன் நீர்ப் பரப்பு 4,678 ஏக்கர். தமிழகம் 8,000 ஏக்கர் பரப் பளவைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறது. ஆனால்அணையைப் பலப்படுத்தும் காலகட்டத்திலும் அதற்குப் பின்னரும் கேரளம் கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாகஅணையில் 136 அடி வரை மட்டுமே நீரைத் தேக்கிவைக்கும் நிலை ஏற்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட கேரளத் தொழிலதிபர்கள் பலர்எஞ்சிய இடத்தை ஆக்கிரமித்தனர். ஏராளமான விடுதிகள்ரிசார்ட்டுகள் கட்டப்பட் டன. சுற்றுலா அங்கு பெரும் தொழி லாக வளர்ந்துள்ளது. நீர்மட்டம் உயர்த்தப்பட்டால்இந்தக் கட்ட மைப்புகள் காணாமல் போகும். கேரள அரசை இந்தப் பின்னணியும் இயக்குகிறது.இவை தவிரஎப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது விவகாரம் பெரிதாக்கப்படக் காரணம்கேரளத் தின் இன்றைய அரசியல் நிலை. வெறும் இடங்கள் பெரும்பான்மை யில் சட்டசபையில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசுஓர் இடைத்தேர்தலை எதிர்கொள்கிறது. இந்தத் தேர்தல் முடிவு காங்கிரஸுக்கு எதிராக அமைந்தால்ஆட்சி பறி போகும் சூழல் உருவாகும்.  முல்லைப் பெரியாறு அணை அரசியல் சூதாட்டத்தின் உள்நோக்கங்களில் இதுவும் ஒன்று.



உண்மை 4: உடையப்போவது அணை அல்ல! 

காவிரியில் தனக்குள்ள பாரம் பரிய உரிமையை நிலைநாட்ட 17 ஆண்டுகள் வழக்காடியது தமிழகம். வழக்கறிஞர்கள் கட்டணமாக மட்டும் 1,200 கோடியைச் செலவிட்டது. இறுதித் தீர்ப்பு வந்தது. ஆனால்இன்னமும் தமிழகத்துக்கு நியாயமாகச் சேர வேண்டிய நீரைப் பெற முடியவில்லை. முல்லைப் பெரியாற்றில்அணை பலமாக இருந்தபோதேஅணையைப் பலப்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டதை ஏற்றுக்கொண்டது தமிழகம். அணையைப் பலப்படுத்தும் வரை நீர்மட்டத்தைக் குறைக்கவும் ஒப்புக்கொண்டது. இதனால்தமிழகத்தில் 38,000 ஏக்கர் தரிசானது. 86,000 ஏக்கர் நிலம் ஒரு போகச் சாகுபடியானது. பாசனப் பரப்பு குறைந்ததாலும் மின் உற்பத்தி குறைந்ததாலும் மட்டும்  4,200 கோடி இழப்பு ஏற்பட்டது. ஆனால்தமிழகம் இவ்வளவு இழப்புகளையும் சந்தித்து அணையைப் பலப்படுத்திய பின்னர்அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோதுகேரளம் அதை ஏற்க மறுத்தது. சட்டசபையில் புதிய சட்டம் இயற்றிஅணையின் நீர்மட்டத்தை 136 அடியாக நிர்ணயித்தது. ''உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை எனில்உச்ச நீதிமன்றத்தின் புனிதத்தன்மை என்னவாகும்?'' என்று கேள்வி எழுப்பியது உச்ச நீதிமன்றம். ஆனாலும்இன்று வரை யாராலும் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீரைப் பெற்றுத் தர முடியவில்லை. கடைசியாகஅணையையும் தமிழகம் இழக்கப்போகிறதா? காவிரியோமுல்லைப் பெரியாறோ வெறும் நதிகள் மட்டும் அல்ல. இந்தியாவில் தேசிய ஒருமைப்பாடு என்ற சொல்லுக்கு நேரடியான அர்த்தம் கொடுப்பவை இவைதான். கர்நாடகமோகேரளமோ தாக்குதல் நடத்துவது தமிழகத்தின் மீது அல்லநம்முடைய தேசிய ஒருமைப்பாட்டின் மீது தான்.ஒரு மாதமாக இரு மாநிலங்கள் கொந்தளிக்கின்றன. அப்பாவிக் கூலித் தொழிலாளிகள் தாக்கப்படுகின்றனர். பக்தர்கள் விரட்டப்படுகின்றனர். பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் படுகின்றனர். வாகனங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. கடைகள் சூறை யாடப்படுகின்றன. மாநில உணர்வு எங்கும் வியாபித்துக் கொப்பளிக்கிறது. வன்முறை நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. பிரதமரேநீங்கள் என்ன செய்கிறீர்கள்?

இனி செயய வேணடியது ?  

'திகள் மீதான அதிகாரம் மத்திய அரசுவசம் இருக்க வேண்டும். தேசிய அளவில் நதி நீர் விவகாரங்களைக் கையாள முழு அதிகாரம் மிக்க தன்னாட்சி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். நதி நீர் விவகாரங்களை இந்த அமைப்பு கையாள வேண்டும். நாட்டில் நீர் வளம் உபரியாக உள்ள பகுதிகளைப் பட்டியலிட்டுஅங்குள்ள நீர் வளத்தைதேவைப்படும் பிற பகுதிகளுக்குப் பிரித்து வழங்கி நிர்வகிக்கும் அதிகாரத்தை இந்த அமைப்புக்கு வழங்கும்படி நீர் வளப் பயன்பாட்டுச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும். இது பொதுவான தீர்வு.முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்த அளவில்தமிழக அரசு அணையைப் பலப்படுத்தும் பணியை மேற்கொள்ள மட்டும் 13 ஆண்டுகளை எடுத்துக்கொண்டது. அதேபோலஇந்தக் காலகட்டத்தில் தமிழகத்தின் குத்தகையில் இருந்த இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதையும் நம்முடைய அரசு கண்டுகொள்ளவில்லை. இன்று நமக்கு ஏற்பட்டு இருக்கும் பின்னடைவுக்கு இது முக்கியமான காரணம். இனி வரும் காலங்களில் இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நீரியல் அளவுகள் ஏதுவாக இருக்குமாயின்தேக்கத்தில் இருந்து நீர் வெளியே செல்லும் கால்வாயின் ஆழத்தை இன்னும் அடி அதிகப்படுத்திநீர்மட்டம் 100 அடியைத் தொட்டாலேநீர் வெளியேறும்படி செய்ய வேண்டும். நீர்த் தேவையின் அத்தியாவசியத்தைப் பொறுத்துநீர்த்தேக்கத்தில் இருந்து விசை பம்புகள் மூலம் நீரை இறைத்து கால்வாய்க்குள் செலுத்துவதற்கு அனுமதி பெற வேண்டும். தமிழகப் பகுதியில் கால்வாய்களை ஆழஅகலப்படுத்துவதுடன் சிறு தடுப்பணைகளுக்கான சாத்தியங்களையும் ஆராய வேண்டும்!''
 
இரா.வெங்கடசாமிநீரியல் மற்றும் வேளாண் பொறியியல் நிபுணர்.  




இங்கே மேலே இருக்கானே அந்த நாதாரி அப்படி ஒரு படத்தை எடுத்து, அந்த மூளை இல்லாத மலையாளிகளை மேலும் உசுப்பேத்தி விட்டது.................இவன் கைல கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று உங்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்................

வியாழன், 8 டிசம்பர், 2011

முல்லைப் பெரியாறு

முல்லைப் பெரியாறு -தமிழ் நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது – உடனடித் தேவை பலமான பதில் தாக்குதல் முல்லைப் பெரியாறு -தமிழ் நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது - உடனடித் தேவை பலமான பதில் தாக்குதல் 

http://vimarisanam.files.wordpress.com/2011/12/mullai-periyaru-dam-2.jpg?w=500&h=401
முல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில் புயலைக் கிளப்பிவிட்டு – தமிழ் நாட்டை
பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேசவைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர். மீடியாக்களில்,டெல்லியில்அகில இந்திய அளவில் கேட்கிறார்கள் -பலமாகக் கேட்கிறார்கள் ! “116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும் எவ்வளவு நாள் தாங்கும் ? 

திங்கள், 5 டிசம்பர், 2011

மின்சாரம் இல்லையா? புகார் கொடுங்க! ரூ.50 பெறுங்கள்!


மின்சாரம் தடைபடும் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும்,  50 ரூபாய் வீதம் நுகர்வோருக்கு, மின் வாரியம் நிவாரணம் தர வேண்டும்,'' என, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

மின் நுகர்வோருக்கான உரிமைகள் மற்றும் நுகர்வோரின் குறை தீர்ப்புக்கான காலக்கெடு குறித்த,  தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவு விவரம்: மின் நுகர்வோர், தங்களது குறைகள் தொடர்பான அனைத்து முறையீடுகளையும், மின் பகிர்மான கழகத்தின் பிரிவு அலுவலகங்களில் நேரடியாகவோ,  தபால் மூலமாகவோ தரலாம். பிரிவு அலுவலர்கள் அல்லது    அவர்களால் அதிகாரம் அளிக்கப்பட்ட நபர்கள்,  மனுக்களை பெற்று,  எழுத்து மூலம் ஒப்புகை தர வேண்டும். இதற்காக, பிரிவு அலுவலகங்கள் உள்ளிட்ட  அனைத்து அலுவலகங்களிலும், பதிவேடு பராமரிக்க வேண்டும். இணைப்பை இடமாற்றுதல், மின்சார தடை, பெயர் மாற்றம், கட்டணப் பிரிவு மாற்றம், கட்டணப் பிரச்னை, தற்காலிக இணைப்பு, வோல்டேஜ் பிரச்னை, வைப்பு நிதி திரும்பப் பெறுதல் மற்றும் அனைத்து வகை மின் நுகர்வு பிரச்னைகளுக்கு மனுக்கள் தரலாம்...


நிவர்த்தி செய்வதற்கான காலக்கெடு: நீட்டிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணி இல்லாத குறை: தாழ்வழுத்தம் 30  நாட்களில்,  உயரழுத்தம் 60  நாட்கள்; டிரான்ஸ்பார்மர் அல்லாத நீட்டிப்பு மற்றும் மேம்பாட்டுப்  பணி: தாழ்வழுத்தம் 90 நாட்கள், உயரழுத்தம் 120  நாட்கள்; டிரான்ஸ்பார்மருடன் கூடிய நீட்டிப்பு, மேம்பாட்டு பணி:  தாழ்வழுத்தம் 90 நாட்கள், உயரழுத்தம் 180  நாட்கள். மீட்டர் அல்லது இணைப்பு இடமாற்றம்: 25 நாட்கள்; மின்தடம் மாற்றுதல்: 60 நாட்கள்; டிரான்ஸ்பார்மர் இடமாற்றம்: 90 நாட்கள்; மீட்டர் புதுப்பித்தல்: 30 நாட்கள்; கட்டண வகை மாற்றம்: 7 நாட்கள்; பெயர் மாற்றம்: 7 நாட்கள்; கட்டண கணக்கு பிழை திருத்தம்: பணம் செலுத்தும் இறுதி நாட்களுக்குள்,  குறைகளை தீர்க்க வேண்டும். இவ்வாறு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம்  உத்தரவிட்டுள்ளது.

மின்வெட்டுக்கு நிவாரணம்: மேலும், அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்தடை பிரச்னைகளை தீர்க்க, மணிக்கணக்கில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட கெடுக்குள் குறைகளை தீர்க்கத் தவறினால், மின்வாரியத்தில் இருந்து, நுகர்வோருக்கு நிவாரணம் தர வேண்டும். பிரிவு அலுவலகங்கள், குறைகளை தீர்க்க தவறும்போதும், நிவாரணத்திலும் திருப்தி  அடையாத நுகர்வோர், அந்தந்த பகுதி மின் வாரிய கண்காணிப்பு பொறியாளர்  அலுவலகத்தில் உள்ள குறைதீர்ப்பு மையத்தில் முறையிடலாம்.

இந்த மையங்கள் குறித்து அலுவலக முகவரி, தொலைபேசி எண்,  மின்னஞ்சல் (இ-மெயில்) உள்ளிட்ட விவரங்களை, மின்வாரிய இணையதளத்தில் வெளியிட வேண்டும். குறை தீர்ப்பகத்தின் உத்தரவை மேல்முறையீடு செய்ய விரும்புவோர், சென்னை எழும்பூரில் உள்ள, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் குறை தீர்ப்பாயத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Source: tntjpno.com 

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

தவறு செய்யும் அதிகார வர்க்கம் திருந்தும். அரசு நடவடிக்கை எடுக்குமா?





ருமுன் காப்போம் என்பது அரசின் தாரக மந்திரமாக இருக்கவேண்டும். ஆனால் நம்மை ஆளும் அதிகார வர்க்கத்திற்கோ நாம் சில இழப்புகளை சந்தித்தபின்தான் அவர்களுக்கு சட்டம் போடவேண்டும் என்ற என்னமோ அல்லது இருக்கும் சட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என்ற என்னமோ, அல்லது பாதுக்கப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற என்னமோ  ஏற்படுவதை நாம் காண்கிறோம்.  ஒரு கல்விக்கூடத்தை நடத்த வேண்டுமெனில், அதற்கென சில விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளின் படிதான் கல்வி நிலையங்கள் இயங்குகின்றதா என்பதை கடுமையாக கண்காணித்து இருந்தால் சில ஆண்டுகளுக்கு முன் கும்பகோணத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட குழந்தைகளை தீயின் கோரத்திற்கு பலிகொடுத்திருக்கமாட்டோம். அதே போல, அரசு கல்வி நிலையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் அரசு காட்டும் அலட்சியம் அப்பாவிகளின் உயிருக்கு கேடாய் முடிகிறது. அரசு பள்ளிகளின் கட்டங்களின் இஸ்திரத்தன்மை பல இடங்களில் பயமுறுத்தும் வகையில் உள்ளன. பல கல்வியங்களின் அடிப்படை பாதுகாப்பு மற்றும்  சுகாதார விஷயங்கள் பொதுப்பணித் துறையின் மெத்தனப் போக்குகளால் மாணவ- மாணவியரின் உயிருக்கு உலைவைக்கும் சம்பவங்களுக்கு காரணியாக அமைந்து விடுகிறது. அந்தவகையில், பத்திரிக்கையில் வந்த செய்தி நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.  

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சுமார் 900க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் பி.எஸ்சி முதலாம் ஆண்டு படிக்கும் நிரவி, கீழராஜவீதியை சேர்ந்த நைனா மரைக்காயர் மகள் மெகபூப்நிசா(வயது 18) என்ற மாணவி கல்லூரிக்கு வந்தார். காலை 9.30 மணிக்கு வகுப்புகள் தொடங்கும் என்பதால் அவர் சக மாணவிகளுடன் கல்லூரியின் 2வது மாடியில் உள்ள தனது வகுப்பறைக்கு அருகில் உள்ள வராண்டாவில் நின்று பேசிக் கொண்டிருந்தார். 
அப்போது முதல்நாள் நடைபெற்ற விருந்தின் போது மாணவிகள் சாப்பிட்டு விட்டு கீழே போட்டிருந்த உணவுப்பொருட்களை சாப்பிட குரங்குகள் கூட்டமாக அந்த பகுதிக்கு வந்தன. மாணவிகளை கண்ட குரங்குகள் திடீரென அவர்களை விரட்ட தொடங்கின.இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அங்கிருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது கட்டைச்சுவர் அருகே நின்று கொண்டிருந்த மாணவி மெகபூப்நிசா நிலை தடுமாறி 2வது மாடியில் இருந்து தலைகுப்புற கீழே விழுந்தார். மாணவி விழுந்த போது முதல் மாடியில் உள்ள வகுப்பறை ஜன்னல் சன்சேடு அவரது நெற்றியில் குத்திக் கிழித்தது. அவர் தரையில் வந்து விழுந்தபோது இடது கால் முறிந்தது. தோள்பட்டையிலும் படுகாயம் ஏற்பட்டது. அவர் கீழே விழுந்ததில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. 
இது குறித்து தகவல் அறிந்த மகளிர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியை மீட்டு ஆம்புலன்சில் அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் இன்றி மாணவி மெகபூப்நிஷா பரிதாபமாக இறந்தார்.
 
அப்போது பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள காரைக்காலுக்கு வந்திருந்த அமைச்சர் ராஜவேலு மருத்துவமனைக்கு சென்று மாணவியின் தாயார் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் கல்லூரிக்கு சென்ற அமைச்சர் ராஜவேலு, மாணவி நின்று பேசிக் கொண்டிருந்த இடம், தவறி விழ காரணமாக இருந்த கட்டைச் சுவர், கீழே விழுந்த இடம் ஆகியவற்றை பார்வையிட்டார். 
தொடர்ந்து கல்லூரி முதல்வர் அறைக்குச் சென்ற அமைச்சர் கல்லூரி முதல்வரிடம் சுவற்றின் உயரத்தை அதிகப்படுத்தி, இரும்பு ஜன்னலை வைக்க வேண்டியதுதானே? என்று கேட்டார். அதற்கு கல்லூரி முதல்வர் இது குறித்து பொதுப்பணித்துறைக்கு பல முறை கடிதம் எழுதி விட்டோம். எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை என்று கூறினார். இதைக்கேட்ட அமைச்சர் அங்கிருந்த பொதுப்பணித்துறை செயற்பொறியாளரிடம், உடனடியாக கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டைச்சுவர்களின் உயரத்தை அதிகப்படுத்தி, இரும்பு ஜன்னல்களை பொருத்த உத்தரவிட்டார்'' என்கிறது அந்த செய்தி.
 
இந்த சம்பவத்தில், சுவற்றின் உயரத்தை உயர்த்திடக் கோரி கல்லூரி நிர்வாகம் பலமுறை பொதுப்பணித் துறைக்கு வேண்டுகோள் விடுத்தபோதும், பொதுப்பணித் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டியுள்ளனர். அதன் காரணமாகவே ஒரு அப்பாவி மாணவியின் உயிர் பறிபோயுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின் அந்த சுவற்றை உயர்த்த அதிரடியாக உத்தரவிட்ட அமைச்சரின் செயல் பாராட்டுக்குரியது எனபதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இவ்வளவு நாளாக இந்த் விஷயத்தை கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் உள்ளிட்ட அடுக்கடுக்ககன சலுகைகள் பெறும் அரசு அதிகாரிகள் அவர் தம் கடமையை செய்யத்தவறினால் அவர்களை கடுமையாக தண்டிக்க அரசு முன்வரவேண்டும். அப்போதுதான் தவறு செய்யும் அதிகார வர்க்கம் திருந்தும். அரசு நடவடிக்கை எடுக்குமா?

சனி, 15 அக்டோபர், 2011

சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது:

சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது: வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம் 

பலரும் சொத்துக்களை வாங்கும் போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களது சொத்து, பத்திரமாக உள்ளதாகக் கருதுகின்றனர்.ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு செய்தல். அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச் சொந்தமாகும்.பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை வகுத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி,

* கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள் கிழமையும், தனது கிராமத்தில் மனுக்களைப் பெற்று, ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.

* மனுதாரர், தனது மனுவுடன், ஆவணங்களின் ஜெராக்ஸ் பிரதியை அளித்தால் போதும். எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மூல ஆவணங்களைக் கொடுக்க வேண்டியதில்லை.

* கிராம நிர்வாக அலுவலர், நிர்வாகக் காரணங்களுக்காக, வேறு கிராமத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகித்தால், செவ்வாய்தோறும், பட்டா மாற்றத்துக்கான மனுக்களைப் பெற வேண்டும்.

* விண்ணப்பித்த தேதியில் இருந்து, இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று, தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து, தனது பட்டா மாறுதல் தொடர்பான உத்தரவைப் பெற்றுக் கொள்ளுமாறு, மனுதாரரிடம் கிராம நிர்வாக அலுவலர் தெரிவிக்க வேண்டும்.

* இந்த மனுக்களின் மீது, தனது அறிக்கையுடன், முதல் வெள்ளிக்கிழமை, தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ., சென்று, சம்பந்தப்பட்ட மண்டல துணை தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஒப்புகைச் சீட்டின் மறுபாதியில், துணை தாசில்தார் கையெழுத்திட வேண்டும். அன்றைய தினமே, அலுவலகக் கணினியில், மனுவின் விவரத்தைத் துணை தாசில்தார் பதிவு செய்ய வேண்டும்.

* ஆவணங்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து, 2வது வெள்ளிக்கிழமை மனுதாரர் வரும்போது, பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல்களை வழங்க வேண்டும். இவ்வாறு, 15 நாட்களில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.

* உட்பிரிவுக்கு உட்பட்ட பட்டா மாறுதல் என்றால், விண்ணப்பித்த தேதியில் இருந்து, நான்காவது வெள்ளிக்கிழமை பட்டா உத்தரவைப் பெற வேண்டும்.

இதைப் பயன்படுத்தி, சொத்து வாங்கியவர்கள் அதற்கான பத்திரங்களின் ஜெராக்ஸ் பிரதிகளுடன், கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து, விரைவில் பட்டா பெற்றுக் கொள்வதே சிறந்தது.


தற்போது பின்பற்றப்படும் நடைமுறையால் ஆபத்து: ஒருவர் அதிகாரப் பத்திரம் மூலம், ஒரு சொத்தை பலருக்கும் விற்கிறார். அவ்வாறு அந்தச் சொத்து பெறும் நபர்கள், பதிவு அலுவலகத்துக்குச் சென்றால், அதே சொத்தைப் பலருக்கும் பதிவு செய்து தர வாய்ப்புள்ளது.இதனால், சொத்து உண்மையிலேயே யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் வரும். பதிவு செய்யும் நபர், அதை பட்டாவாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு, நம் மக்களிடையே இல்லை.

மேலும், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், நூறு பிளாட் போட்டு, நூறு பேருக்கு விற்கலாம். அவற்றைப் பெறுவோர், அதை பத்திரப்பதிவு செய்து வைத்துக் கொள்வர். ஆனால், அதற்காக வருவாய்த் துறையில் விண்ணப்பித்து, பட்டா பெறுவதில்லை. இவ்வாறு விட்டு விடுவதால், அந்த நூறு பிளாட்களில் சிலவற்றை, பூங்காவுக்கும், சமுதாயக் கூடங்களுக்கும் வருவாய்த் துறை ஒதுக்கீடு செய்து விடலாம். நூறு பிளாட்களில், ஏதாவது 20 பிளாட்கள் இவ்வாறு ஒதுக்கப்பட்டு இருக்கும்.

ஆனால், அது தெரியாமல், பத்திரம் உள்ளது என்ற நம்பிக்கையில், சொத்து வாங்கியவர் இருப்பார். ஒரு கட்டத்தில், அங்கு வீடு கட்டச் செல்லும் போது தான், தனது பிளாட், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டது எனத் தெரியவரும்.எனவே, பத்திரப்பதிவு முடிந்ததும், அதை வைத்து, வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்து, பட்டா மாறுதல் பெற்றுக் கொண்டால், இதுபோன்ற சிக்கலில் சிக்க வாய்ப்பில்லை.

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

அவனை நிறுத்த சொல் நான் நிறுத்துகிறேன்

 
க்களை பாதுகாக்க வேண்டிய அரசே, அந்த மக்களை மரணப் படுகுழிக்கு தள்ளும் பாழாய்ப்போன மது வியாபாரத்தை செய்து வருகிறது. மது விற்பனையின் மூலம் கோடிகள் கஜானாவை நிறைப்பதால், என்னதான்  பூரண மதுவிலக்கு கோஷங்கள் எழுப்பப்பட்டாலும் மது எனும் பொன் முட்டையிடும் வாத்தை அறுக்க அரசு தயாராக இல்லை. நேரடியாக பூரண மதுவிலக்கு இல்லை  என்று சொல்ல திராணியின்றி,  அரசு  பல்வேறு நொண்டிச் சாக்குகளை இந்த விசயத்தில் சொல்லி வருகிறது. அதில்  ஒன்றுதான் ''பக்கத்து மாநிலங்கள் மதுவிலக்கு கொண்டு வந்தால்தான் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வர முடியும்' என்ற அமைச்சரின் பதில்.  
 
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பா.ம.க. எம்.எல்.ஏ. கலையரசு (அணைக்கட்டு தொகுதி) பேசும்போது, ''தமிழக அரசின் நிதி நிலையைப் பற்றி கவலைப்படாமல் லாட்டரி சீட்டை ஒழித்ததுபோல, பூரண மதுவிலக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பேச,
 
இதற்கு பதிலளித்த  மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், ''மக்கள் உயிரோடு விளையாடும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. மதுவின் தீமையை இந்த அரசு உணராமல் இல்லை. அதில் மாற்றுக் கருத்தும் கிடையாது. இருந்தபோதிலும், பக்கத்து மாநிலங்கள் மதுவிலக்கை கொண்டு வராத நிலையில், தனித்தீவு போல நாம் மட்டும் மதுவிலக்கு கொண்டு வந்தால் வெற்றி கிடைக்காது. பக்கத்து மாநிலங்களில் மதுவிலக்கை அமல்படுத்தினால்தான், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை கொண்டு வர முடியும். இல்லாவிட்டால், கள்ளச்சாராயத்திற்கும், சமூக விரோத செயல்களுக்கும் அது வழிவகுத்துவிடும்'' என்று கூறியுள்ளார். 
 
அமைச்சரின் பதிலை கூர்ந்து கவனித்தால் எவ்வளவு நகைச்சுவையானது என்பது புலப்படும். அண்டை மாநிலங்களில் பூரணமதுவிலக்கு அமுல்படுத்தப்படாமல் தமிழகத்தில் மட்டும் 
அமுல்படுத்தப்பட்டால் கள்ளச்சாராயத்திற்கும், சமூக விரோத செயல்களுக்கும் அது வழிவகுத்துவிடும் என்கிறார். அமைச்சரின் கூற்றுப்படி,  தமிழகத்தில் தற்போது 'டாஸ்மாக்' மூலம் மதுவிற்பனை அமலில்  இருக்கையில் கள்ளச்சாராயம் அறவே இல்லாமல் இருக்க வேண்டுமல்லவா? ஆனால் இருக்கிறது என்றும் ''மக்கள் உயிரோடு விளையாடும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் இதே அமைச்சர் கூறுகிறார். இதிலிருந்து புரிவது என்ன? மது விற்பனை அமலில் இருந்தாலும், பூரண மதுவிலக்கு அமலில் இருந்தாலும் கள்ளச்சாராயம் விற்பனை என்பது ஆங்காங்கே நடக்கும் என்பதுதான். எனவே பூரண மதுவிலக்கை அமலாக்கினால் அண்டை மாநிலங்கள் வாயிலாக கள்ளசாராயம் பெருகிவிடும் என்ற அமைச்சரின் கூற்று  அர்த்தமற்றது என்பது தெளிவாகிறது.
 
எனவே உப்புச்சப்பில்லாத காரணங்கள் கூறி மதுவிற்பனையை தொடர அரசு நினைப்பதைவிட, பூரண மதுவிலக்கை அமுல்படுத்தி, கள்ளச் சாராயத்தையும் கட்டுப்படுத்தி, தமிழக அரசை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ வழிவகை காண முதல்வர் முயற்ச்சிக்கலாமே?