OnlinePJ

Thanks for Visiting my Page
உட்கார்ந்து யோசிச்சது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உட்கார்ந்து யோசிச்சது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 பிப்ரவரி, 2015

உட்க்கார்ந்து யோசிச்சது-2015

 
 
 
 
1. கேட்க்குறவன் கேனயான இருந்தா பழைய நடிகை குயிலியும், பஞ்சாப் அணி பைலியும் அக்கா தம்பினு சொல்லுவாங்க.

2. அழகான பொன்னைப்பார்த்தா நம்ம மனசுல பட்டாம்பூச்சி பறக்குமே அதபுடிச்சி சாகடிச்சிட்டா போதும் வாழ்க்கைல முன்னேறிடலாம்.

3. டை அடிச்சா மண்டையும் பிரண்ட்ஸ் போட்ட சண்டையும் ரொம்ப நாளைக்கு நிலைச்சாதா சரித்திரமே இல்லை.

4. நீங்கள் கம்யூட்டர் முன்னால் அமர்ந்திருக்கும் போது கம்யூட்டர் இப்படி நினைக்கலாம்... ‘ இண்டெல்' உள்ளே... ‘மெண்டல்' வெளியே !!!
 
5. இரண்டு பிச்சைக்காரர்களும், இரண்டு சாப்ட்வேர் என்ஜீனியர்களும் சந்தித்துக் கொண்டால் என்ன பேசுவார்கள்?சோ, எந்த பிளாட்பார்ம்ல நீங்க வொர்க் பண்றீங்க?நான் ஜாவா...அப்டியா..நான் "எக்மோர்" சார்!
நண்பர் 1: மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க? நண்பர் 2: டாக்டர்தான் தலைவலிச்சா, இதை எடுத்து தடவனும்னு சொன்னார்...
நண்பர் 1: ஈஈஈஈஈஈஈஈஈஈ!!! ...
கோவா கடற்கரையில் நம்ம கேப்டன் விஜயகாந்த் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தார். அப்போ அங்கே நடந்த உரையாடல்.
அமெரிக்கர்: "ஆர் யு ரிலாக்சிங்?"
விஜயகாந்த்: நோ ஐ‘ம் விஜயகாந்த்
மற்றொரு நபர்: "ஆர் யு ரிலாக்சிங் ?"உடனே கடுப்பாகிறார் கேப்டன்
விஜயகாந்த்: "நோ ஐ‘ம் விஜயகாந்த்"
பிறகு இடத்தை மாற்ற முடிவு செய்த விஜயகாந்த் நடக்க ஆரம்பித்தார். அப்போது அங்கே கடற்கரையில் ஒருவர் ஹாயாக அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்த விஜயகாந்த் அவரிடம் சென்று, "ஆர் யு ரிலாக்சிங்?" என்று கேட்டார்.உடனே அவர் "யெஸ்" என்று சொல்லவே கடுப்பான கேப்டன், அவர் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டார்." உன்னைத்தாண்டா எல்லோரும் அங்கே தேடிக்கிட்டு இருக்காங்க, நீ என்னடான்னா இங்க உட்காந்துகிட்டு இருக்கே ! " ஆங்ங்ங்...
வங்கி மேனேஜர்: சைக்லோன் என்றால் என்ன?   
சர்தார்: இது கூடத் தெரியாமல் நீங்கள் எல்லாம் மேனேஜராக இருக்கிறீர்கள்.வங்கி
மேனேஜர்: உங்களுக்கு தான் தெரிந்துள்ளதே, கூறுங்கள்.
சர்தார்: சைக்கிள் வாங்க அளிக்கப்படும் லோன்

புதன், 2 ஏப்ரல், 2014

உட்கார்ந்து யோசிச்சது-2014

மகன்:- I am a complan boy
மகள்:- I am a complan Girl 
தந்தை:- என்ன கொடுமைடா இது, நான் பெத்த புள்ளைங்க கண்ட கண்டவன் பேரையெல்லாம் சொல்லிக்கிட்டு திரியுது.

நீதிபதி:- இந்த கோர்ட்டில் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
அரசியல்வாதி:- உங்கள் பொன்னான வாக்குகளை எனக்கே அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் யுவர் ஆனார்.
நீதிபதி:- ????????????????


நீதிபதி:- சாகரதுக்கு முன்னாடி கடைசி ஆசை ஏதாவது இருந்தா சொல்லு
குற்றவாளி :- என்னை தலைகீழா தூக்குள போடணும் எஜமான் .
நீதிபதி:- ????????????????

"உங்க மெஸ்ல, கல்யாணம் ஆனவங்களுக்குதான் வேலை குடுபீங்களா?
"ஆமா அவங்கதான் கீழ்படிதலா வேலைப்பாப்பாங்க
"சரி ... கல்யாணம் ஆனவங்களைதான் மெஸ்லே சேர்ப்பீங்கலாமேய அது ஏன்??
" யோவ் அவன்தான்யா எத குடுத்தாலும் பேசாம சாப்பிட்டுவிட்டு போவான்.. 


"என்னதான் நெருப்புக்கோழியா இருந்தாலும் அவிச்ச முட்டை போடாது!!!!!!!!!!!!!!!

மாணவன்1:- டேய் மாப்ளே தென்னை மரத்துல ஏரிப்பார்த்தாள் ஆர்ட்ஸ் காலேஜ் பொண்ணுங்க எல்லாம் தெரியுதுடா
மாணவன்2:- கைய விட்டு பாரு மச்சி மெடிக்கல் காலேஜ் பொண்ணுங்க எல்லாம் தெரியும் ட.... 

நர்ஸ்:- ஐய்ந்து நிமிடம் கழிச்சு வந்திருந்தால் இவரை காப்பாத்தி இருக்கலாம்
நபர்:- எப்படி??
நர்ஸ்:- டாக்டர் ஊருக்கு போயிருப்பார்!!!!!!!!!!!!!!!!!

படித்ததில் ரசித்தது:- 

எதேச்சையாக தொடும்போது பாக்கெட்டில் மொபைல் இல்லாதது போலத்தோன்றும் அந்த ஒரு நிமிட உணர்வை, நமக்கு அப்படிபட்ட திகில் படத்தாலும் தர முடியாது.....

பாசிடிவ் பதில்:-

ஆசிரியர்:- 10 பேர் சேர்ந்து ஒரு கட்டிடத்தை 20 நாள்ளே கட்டுராங்க. அதே கட்டிடத்தை 20 பேர் சேர்ந்து கட்டினா, எத்தனை நாள்ளே கட்டுவாங்க???
மாணவன்:- ஏற்கனவே கடின கட்டிடத்தை ஏன் சார் மறுபடியும் கட்டனும். 


எப்பவும் இந்த நிகழ்ச்சியில் ஒரு டச்சு வைக்காம இருந்ததில்லை!!!!!!!!!!!!!

கருவறையில் இருக்கும் வரைதான் உன்னை எதிர்ப்பார்க்கும் இந்த உலகம். 
வெளியில் வந்துவிட்டால் நீதா எதிர் கொள்ளவேண்டும் இந்த உலகை...!!!!
#தெருவோரத்தில் அனாதைகள்...!!!!!!!!!!!!!!!!!!!!!!

வியாழன், 30 ஜனவரி, 2014

உட்கார்ந்து யோசிச்சது

 "என் தேசத்தை நாசமாக்கிய சொல் "இலவசம்" 

பஞ்ச்:-
1. கண்ணா பன்னிங்கத்தான் கூட்டமா எக்ஸாம் எழுதும், சிங்கம் சிங்கிலாத்தான் அரியர்ஸ் எழுதும்.
2. தூண்டிலில் சிக்கிய மீனும், காதலில் சிக்கிய ஆணும் துடித்துதான் ஆகணும் அது விதி. 
3. 100 கிலோ அரிசிமூட்டை அதை தூக்குறவனுக்கு அதை வாங்க சக்தி இல்லை, 100 கிலோ அரிசிமூட்டையை வாங்குரவனுக்கு அதை தூக்க சக்தியில்லை (தொழிலாளி மற்றும் முதலாளி)

தத்துவம்:- 

ஒரு பொண்ணுகிட்டே போயி உன் அப்பாட்டக்கருனு சொன்னா தப்பில்லை அதுவே ஒரு அப்பாக்கிட்டே போயி பொண்ணு டக்கருன்னு சொன்னா...???????

டாக்டர் ஜோக்:-

நர்ஸ்:- டாக்டர் எதுக்காக இப்படி அழறீங்க???
டாக்டர்:-  நான் காலைலே ஆப்பேரசன் பண்ணின பேஷண்ட் செத்துட்டாறு...
நர்ஸ்:- யோவ் டுபுக்கு நீன் காலைலே பண்ணினது ஆபேரசனில்லை, போஸ்ட்மார்ட்ம் !!!!

டச்சிங்:- 

மனசுக்கு புடிச்சவங்க முன்னாடி அழுவதும், மனசுக்கு புடிக்காதவங்க முன்னாடி சிரிப்பதும் ரொம்ப கஷ்டம். 

ஆபீஸ் ஜோக்:-

லீவ்லே இருக்கும் பொது ஆபீஸ் கால் வந்தா அட்டென்ட் பண்ண மாட்டீங்களா? ஏன் ?
நீங்க மட்டும் ஆபீஸ் நேரத்துல பர்சனல் பண்ணக்கூடாதுன்னு சொல்றீங்களே அது ஏன் ?

பட்டு சேலை கட்டுனா எல்லாப்பொண்ணுங்களுக்கும் எடுப்பாதான் இருக்கும்.அதை வாங்கித்தரும் புருசனுக்குத்தான் கடுப்பா இருக்கும்



செவ்வாய், 10 டிசம்பர், 2013

இதுவரை நான் எழுதிய முகநூல் வாசகங்கள் சில ...!!!!!!!!!!!!!!!!


  1. பொய்களால் தடவிக்குடுப்பவர்களை விட உண்மையால் அரைபவர்களைதான் இந்த உலகம் ஏற்றுக்கொள்ளும். 
  2. நமக்கிருக்கும் ஒரு வாழ்க்கையை ஏன் நாம் போட்டு கஷ்டபடுத்திக்கொல்கிறோம். 
  3. எவ்வளவுதான் தொழிற்நுட்பம் வளர்ந்தாலும் கடைசியில் கைநாட்டுத்தான் பாதுக்காப்பானது. 
  4. நாம எடுக்குற முடிவுல அடுத்தவங்க சந்தோசப்பட்டால் அதுவும் நமக்கு சந்தோஷம்தான். 
  5. வாழ்க்கை ஒன்றும் ரிமோட் கன்ட்ரோல் இல்லை இருந்த இடத்தில் இருந்தே மாற்றிக்கொள்ள நாமதான் எழுந்திருச்சி மாற்றிக்கொள்ளனும்.
  6. மக்கள்தொகை அதிகாரிக்கும் அதே நேரத்தில் மனித நேயம் கேள்விக்குறியாய் நிற்கிறது. 
  7. மறுத்துவார்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் உயிரை நிரந்தரமாக காப்பாற்ற முடியாது, மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது, அவர்களும் ஒரு நாள் மரணிப்பவர்களே, எந்த ஒரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும். 
  8. வாழ்க்கையை பற்றி பெரிதும் கவலை படாதீர்கள் எப்படியும் நீங்க அதிலிருந்து தப்பா போவதில்லை. 
  9. கைக்கு எட்டாது என்று தெரிந்தும் ஸ்கைப்பில் குடும்பம் நடத்தும் குற்றவாளிகள், வெளிநாட்டில் வாழும் தியாகிகள் 
  10. அடுத்தவர்கள் சுயலாபத்திர்க்காக உன் சுய நலத்தை விட்டால் அப்ப நீதான் இந்த உலகத்தில் ரொம்ப நல்லவன். 
  11. பொண்ணுக்கும் டீ கடையில் தொங்குற பண்ணுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு, ரெண்டுமே மூடாம இருந்தா கேட்டு போயிடும்.
  12. பொண்ணு பார்க்க புகைப்படம் தர மறுக்கும் சமுதாயம்தான் ஸ்டூடியோவில் வளைந்து வளைந்து எடுக்க அனுமதிக்கிறது 
  13. கருத்து என்பது நம்ம கய்யில் கட்டிருக்கிற வாட்ச் மாதிரி ஒவ்வாறுத்தருக்கு ஒரு விதமான மணி காட்டும் ஆனால் எல்லோரும் அவுங்க டைம் தான் சரின்னு சொல்லுவாங்க 
  14. வாழ்க்கையில் தோல்வி மட்டுமே தொடர்ந்து வந்தால் தோற்றுவிட்டோம் என்று அர்த்தமில்லை தோல்விகளை தாண்டி செல்கிறோம் என்று அர்த்தம்.

வியாழன், 28 நவம்பர், 2013

உட்கார்ந்து யோசிச்சது

இந்த தலைப்பில் மீண்டும் உங்களை சந்தோசபடுத்துவதில் சந்தோஷம்.

ரயிவே ஸ்டேஸன்
நபர் 1 : சார் டெல்லி எக்ஸ்பிரஸ் போயிடுச்சா ?
நபர் 2 : போயிடுச்சு.
நபர் 1 : மும்பை எக்ஸ்பிரஸ் போயிடுச்சா?
நபர் 2 : போயிடுச்சி.
நபர் 1 : கொல்கத்தா எக்ஸ்பிரஸ் போயிடுச்சிங்களா ?
நபர் 2 : போயிடுச்சியா நீ எங்க தான் போகணும் எல்லா டிரெயினயும் கேட்டுனு இருக்க ?
நபர் 1 : நான் அவரமா தண்டவாளத்தை தாண்டி அந்தப்பக்கம் போகணும் அதாங்க கேட்டேன்.
நபர் 2 : ! ! !....

என்ன ஆரம்பமே அதிருதுல்லே.............. தொடர்ந்து படிங்க!!!!!!!!!!!!!!

பரிட்சை


ஆசிரியர் : பரிட்சை நேரத்துல ஏன்டா தூங்கற ?

மாணவன் : கேள்விக்கு விடை தெரியலனா ‘முழிச்சிட்டு
இருக்க கூடாதுனு அப்பா சொன்னார். அதான் தூங்கிட்டேன் சார் .

ஆசிரியர் :!!!!!!!!! 

என்ன முடியலையா??? எனக்கும்தாங்க!!!!!!!!!!!!!!!!!!

கர்நாடகா தண்ணீரும்,
கேர்ள்'சின் கண்ணீரும் ஒண்ணுதான்...
ரெண்டுமே கொஞ்சமாத்தான் வரும்...
 
ஆனா பல பிரச்சனைய கொண்டு வரும்..


கேர்ள்ஸ் யாரும் அடிக்க வராதீங்க!!!!!!!!!!!!


டவுட்டு 

ரோடுல பொண்ணைப் பார்த்தா பொறுக்கின்னு திட்டுறாங்க.
வீட்ல போய் பெண்ணைப் பார்த்தா மாப்ளென்னு கும்பிடுறானுங்க. என்ன உலகமடா இது?..


கடைசியாக................... 
பாரதி இன்று இருந்தால்
தமிழன் என்று ஒரு இனமுண்டு
தண்ணீருக்கு பிச்சை எடுக்கும் குணமுண்டு .......என்று பாடியிருப்பார்



புதன், 14 ஆகஸ்ட், 2013

உட்கார்ந்து யோசிச்சது_14/08/2013

அன்பு வாசக பெருமக்களே, உங்களை மீண்டும் இந்த தலைப்பில் சந்திக்க சந்தோசபடுகிறேன். உலகிலேயே மிகவும் கஷ்டமான விஷயம் அடுத்தவர்களை சிரிக்க வைப்பதுதான். அந்த விஷயத்தை சொந்தமாக செய்தாலும் காப்பி அடித்து செய்தாலும் நன்றே (காப்பி அடித்தேன் என்பதை எப்படி நாசூக்காக சொல்ல வேண்டியுள்ளது)!!!!!!!!!!!!



விகடன் வலை பாயுதேவில் ரசித்தது 

"
சைலன்ஸ் ப்ளீஸ் சொல்லாமலே நம்மாளுங்க அமைதியா இருக்கும் ஒரே இடம் லிப்ட் # ஏன்னே புரியலே !
*********
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண " இன்னாபா இப்படி பண்ணிப்புட்டியே " என்று கேட்டு விடல்
*********
உன் நல்லதுக்கு தான் சொல்றேன் என தொடங்குபவர்கள் எல்லாம் ஏனோ கெட்டவர்களாகவே தெரிகிறார்கள்
*********
லிப்டில் கதவு மட்டும் இல்லாட்டி, புட் போர்டு அடிப்பாய்ங்க போல!!!!

திங்கள், 17 ஜூன், 2013

சன் டிவி மேல கேஸ் போடனும்


தடங்கலுக்கு வருந்திகிறோம் 


யாரோ, இங்கே தமிழாசிரியர் யாருன்னு இவரை கேட்டதுக்கு “அடியேன்” அப்படின்னு சொல்லியிருக்காரு.

நீ பூக்கள் மீது உறங்கினால் அது ஃபர்ஸ்ட் நைட். உன் மீது பூக்கள் உறங்கினால் அது லாஸ்ட் நைட். இதான் லைஃப்போட ட்ரூவாலஜி!

இந்த உலகத்தில் காதலிக்கிறவனை ஒரு பர்சன்ட் பொண்ணுங்கதான் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. மத்தவங்க எல்லாரும் பசங்க இமெயில் ஐடிக்கு பாஸ்வேர்டா மாறிடுறாங்க.

அந்த கட்சிக்குள்ள ஏகப்பட்ட கோஷ்டிங்க இருக்குன்னு எப்படிச் சொல்றே..?
ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்த தலைவரை, சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கச் சொல்லி ஒரு கோஷ்டி போராடுதே...
ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா

தத்துவம் 2010
"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!
இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....

காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....


விஜய் : சன் டிவி மேல கேஸ் போடனும்
எஸ் ஏ சி : ஏன் என்னாச்சி
விஜய்: என் அடுத்த படம் வெற்றி பெறும்னு சொன்னதை விளையாட்டு செய்திகளில் காமிச்சிட்டாங்க


நடிகரெல்லாம் நாடாளா முடியுமா எனக் கேட்கும் எதிர்க் கட்சித் தலைவருக்கு சவால் விடுக்கிறேன்'

'
நாங்கள் நாடாள்வது இருக்கட்டும் உங்களால் ஒரு பாட்டுக்கு அசினுடன் ஸ்பீடா டான்ஸ் ஆட முடியுமா?'

புதன், 22 மே, 2013

நடுவுல கொஞ்சம் தொப்பை கறைந்திருக்கும்



ஹாய்... ஹாய்... ஹாய்..! எல்லாத்துக்கும் வணக்கம்! சுகந்தன்னே...? கடந்த இரண்டு வாரம், லீவில் இந்தியாவிர்க்கு பொய்யிருந்ததால் பெருசா பதிவு எதுவும் போட முடியவில்லை.  எதையும் படிக்கவும் எழுதவும் முடியாமப் போனதுல ரொம்ப வருத்தம் எனக்கு. ஐ மிஸ்ட் யூ ஆல்!

ரைட்டு, நாமளும் இருக்கோம்னு அட்டென்டன்ஸ் குடுத்துரலாம்னு தானுங்க இப்ப வந்தேன். அதனால நான் எதுவும் எழுதி உங்களை போரடிக்காம, சின்னதா என்னுடைய இந்த இரண்டு வார நிகழ்வுகள் பத்தி எழுதிடலாம்னு இருக்கேன். (வொர்க் லோடுலயும் அலைச்சல்லயும் மண்டை காய்ஞ்சு போய் எதுவும் எழுத வரலைங்கறத எவ்வளவு நாசூக்காச் சொல்ல வேண்டியிருக்கு. அவ்வ்வ்வவ்!).

ஊரில் இருந்து வந்தாலும் மனசு என்னமோ ஊரில் இருந்து இன்னும் வர மறுக்கிறது. அது சரி நான் எங்கே இருக்கிறேன் என்று கேட்கிறீர்களா? நான் தற்பொழுது அமீரகத்தின் தலைநகரானா அபுதாபியில் இருக்கின்றேன். சரி அப்படி என்னதான் ஊரில் நடந்திருக்கும் என்று என்னும் போதே முதலில் நியாபகம் வருவது நம்ம டாக்டர் அய்யாதாங்க அவரை புடிச்சி இந்த அம்மா உள்ளே வச்சாலும் வச்சிட்டு, ஊர்ல ஒரு பய வெளியூர் போகவே பயந்தாங்க. பல பஸ்கள் கண்ணாடி உடைந்ததுதாங்க மிச்சம். இதனால சில பேர் இறந்தும் போயிட்டாங்க, அவங்க பாவம் கண்டிப்பாக இவர்களை சும்மா விடாது. அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாவத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதுலேயும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், நம்ம தமிழக காவல்துறையினர் அனைவருக்கும் நடுவுல கொஞ்சம் தொப்பை கறைந்திருக்கும்!!!!!!!!!!!!!! சும்மா பெந்தே நிமிதிட்டாங்க!!!!!!!!!!!!!!!!!!! நன்றி அய்யா!!!!!!!!!!!!!!!!

அப்புறம் எங்கே பார்த்தாலும் இந்த பாழாய்போன ஐபிஎல் தொல்லை வேற, எவனை பார்த்தாலும் அவன் இத்தனை ரன், அவன் இதனை விக்கெட்............ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ் முடியலை. இதுல இரு நல்ல விஷயம் என்னவென்றால், நான் இருந்த 15 நாளில் வெறும் மூன்று தினங்கள் மட்டும்தாங்க எங்க ஊரில் (பரங்கிபேட்டையில்) மின்சாரம் தடை அதுவும் வெறும் 6 மணி நேரம்தான். வாழ்க மின்சாரவாரியம். இருந்தாலும் அங்குள்ள மக்களை நினைக்கும் பொது ரொம்ப பாவமாக உள்ளது, சும்மா காட்டு காட்டுன்னு காட்டுதூ வெய்யில், 

காட்டாதா பின்னே, இருக்குற வயல், மரம் எல்லாத்தையும் அழிசுட்டு காசுக்காக எல்லாத்தையும் வித்தா எப்படிங்க மழை வரும், எங்கே இருந்து காத்து வரும். இன்னும் கொஞ்சம் நாளில் தமிழகத்தில் அரிசி கிடைக்கிறதே அதிசயமா இருக்கும் பாருங்கள். 

மத்தபடி வழக்கம் போல நண்பர்களுடன் அரட்டை, ஊர் சுற்றியது, விருந்துகள் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். இதையெல்லாம் விட்டுவிட்டு இங்கே வந்தால்!!!!!!!!!!!!! அதே வேலை, அதே ஆட்கள் இவர்கள் போராடிக்கிறார்கள், ஆனால் அதே நண்பர்கள், அதே குடும்பத்தார்கள் என்றுமே போரடிப்பதில்லை.!!!!!!!!!!!!!!!!!!!!!!!


மீண்டும் போகும் வரை நினைவலைகளுடன்.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

திங்கள், 15 ஏப்ரல், 2013

உட்கார்ந்து யோசிச்சது!!!



இந்த தலைப்பி கைய்யில் எடுத்து கொஞ்சம் நாள் ஆகிவிட்டது, சரி இனி மேலாவது கேப் விடாமா அடிக்கலாம்ன்னு பார்த்தா!!!!!!!!!!!!!!!!!! உட்காரக் கூட நேரமில்லை.... என்ன பன்றது எதையாவது எழுதணுமே!!!!!!!!!!!!!!!!

இந்த வலைப்பூவில் பதிவு போடுறவாங்க எல்லாம் பதிவை நல்ல எழுதுராங்களோ இல்லையோ தலைப்பை மட்டும் சும்மா கடுப்பேத்துரா மாதிரி வைக்கிறாங்க அப்படி பட்ட சில தலைப்புகளை முதலில் பார்க்கலாம்.

கோச்சடையானில் ரெண்டு ரஜினி (முதல்ல இருக்குற ஒரு ரஜினியை ஒழுங்கா நடிக்க வையுங்கடா??????)

நரியிடம் இருந்து பூனையைக் காப்பாத்திய நாய் (உங்ககிட்ட இருந்து எங்களை எல்லாம் யாரு காப்பாத்த போறாங்களோ)

வட கொரியாவிடம் அணு ஆயுதங்கள் உள்ளதா (ஏன் இல்லைன்னா நீ அமெரிக்காகிட்டே இருந்து வாங்கிதரபோரியா??)

பொறியியல் படித்து என்ன பிரயோஜனம் ?? (நீ பொறந்து மட்டும் என்ன பிரயோஜனம்)

விளையாட்டை விளையாட்டா பாருங்க (அப்பா நாங்க என்ன திருட்டாகவா பாக்குறோம் (நான் பிஎல் லை சொல்லலீங்கோ!!!!!!!))

ஸ்டாலின்: தமிழக பத்திரிகைகளுக்கு நம்மீது அன்பு! அட்டையில் போடுகிறாங்க (ஆமாம் நீங்க ஆட்டைய போடுறீங்க அவிய்ங்க அட்டையிலே போடுறாங்க)

ரஜினி, கமல் போன்ற கிழவர்கள் எல்லம் இளம் நடிகையுடன் ஜோடியாக நடிக்கும்போது ஸ்டாலின் இளைஞரணி தலைவராக நீட்டிக்க கூடாதா (No Country for Old Man)

தமிழ்ப் படம் பிடிக்கும்.. ஆனால் தமிழ்ப் பையனைக் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்! லட்சுமி மேனன் சிறப்பு (உங்க மலயாளி நாதாரி புத்தியை தெரியாதா?? இத நீங்க வேற சொல்லனுமா???)

கொசு கடியில் இருந்து தப்பிக்க... பவர் ஸ்டாரின் புதிய கண்டுபிடிப்பு... (டேய் உன்னோட கடியையை தாங்க முடியலை நீயெல்லாம் கொசுக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கிரியா???)

அடுத்து சில அறிவிப்புகள்

பொது இடங்களில் பெண்களை தரக் குறைவாக திட்டக் கூடாது - உயர்நீதி மன்ற நீதிபதி.

#
அப்போ எங்கேயாவது சந்து, பொந்துல வச்சித் திட்டலாமா யுவர் ஹானர்?!

பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள அறிவிப்புப் பலகை
போவதும் இலவசம். வருவதும் இலவசம்
மாட்டிக் கொண்டால் உணவும் இலவசம்!
(
பயணச் சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களுக்காக எழுதப்பெற்றது)

மும்பையில் பிரபலமாக உள்ள beauty parlorல் உள்ள வாசகம்
இங்கேயிருந்து வெளியே செல்லும் பெண்ணைப் பார்த்து விசில் அடிக்காதீர்கள். அது உங்கள் பாட்டியாகக் கூட இருக்கலாம்!

மும்பை ஜூஹு பகுதியில் உள்ள சிகை அலங்காரக் கடையில் உள்ள வாசகம்
தலைவா, உங்கள் தலையை நம்பித்தான் எங்கள் வியாபாரம் உள்ளது!.

அடுத்து சில மொக்கைகள்:-
காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் அது போடுற முட்டை வெள்ளை கலர் தான்.... முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் உள்ள இருக்கிற காக்கா கருப்புதான்..

என்ன தான் Stage-ல பேச முடிஞ்சாலும்.. Coma-Stage-ல பேச முடியுமா???

 “கோல் கீப்பர் னா கோல் போடாமல் தடுக்கனும் - - அப்ப
விக்கெட் கீப்பர் னா?

என்னதான் சென்னை சில்க்ஸ் ஓனர் குழந்தையா இருந்தாலும் பிறக்கும் போது  டிரஸ் இல்லாமதான் பிறக்கும் .

கைபேசியில்  துவங்கிய 
நம்  காதல் - உன் அண்ணன் 
கை பேசியதால் 
முறிந்தது .

#
என்னா அடி ????

சில நக்கல்கள்:-
ஹலோ சூரியன் FM ஆ..??

வணக்கம் சார்.. நான் செங்கோட்டைல இருந்து வரதராஜன் பேசுறேன்..!!

சொல்லுங்க சார் நீங்க யாருக்கு மெசேஜ் சொல்ல விரும்புறீங்க..??

என் பொண்டாட்டி என் கூட சண்டை போட்டுட்டு கதவை பூட்டிட்டு கோச்சிக்கிட்டு உள்ள இருக்கா சார்.. அவளை கதவை திறக்க சொல்லுங்க..

அப்புறம் அவளுக்காக "வாடி பொட்டப்புள்ள வெளியே.. என் வாலிபத்தை நோகடிச்ச கிளியே" பாட்டை டெடிகேட் பண்ணுங்க..!!

நாம என்னைக்கு தத்துவம் சொல்லாம இருந்திருக்கோம்:-
1000, 2000 செலவு செஞ்சு ஊட்டி, கோடை அப்படின்னு ஊரு சுத்தினா TOUR அப்படிங்கிறாங்க.10 பைசா செலவில்லாமா ஊர் சுத்தினா தண்டச் சோறுன்னு சொல்றாங்க . (என்ன உலகமட இது.)

பொண்ணுங்க கிட்ட லவ்
பண்றியான்னு கேக்குறதும் கண்டக்டர்
கிட்ட சில்லறை கேக்குறதும் ஒன்னுதான் 

இருந்தாலும் இல்லைன்னு தான் சொல்லுவாங்க ..!!