OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

மதராசபட்டினம்.................சில பின்குறிப்புகள்....

என்ன தலைப்ப  பார்த்தவுடன் ஏதோ சினிமா விமர்சனம்னு நினைசீன்களா அதான் கிடையாது..........எப்பவுமே சினிமா சினிமான்னு அலைய கூடாது.................கொஞ்சம் மற்றதையும் யோசிக்கணும்...................

இங்கே வலைபதிவில் நிறையப்பேர் சென்னை வாழ் எழுத்தாளர்கள் இருக்காங்க அவுங்களுக்காக இந்த தகவல் மற்றும் படங்கள்.




இப்போ நாம மேட்டருக்கு போவோம்.

  1. மும்பைக்கு அடுத்த படியா நம்ம சென்னையில்தான் அதிகபடியான வேலை வாய்புகள் உருவாகின்றன, வருடத்திற்கு 35000  ௦ வேலை வாய்புகள்.
  2. இந்தியாவிலேயே அதிகமாக இரண்டு சக்கர வாகனம் சென்னையில் தான் உள்ளதாம். அதுமட்டுமில்லை...
  3. சென்னைதான் இந்தியாவின் மோட்டர் நகரம் என்று அழைக்கப்படுகின்றது. இங்கு இந்தியாவின் 40  சதவிகித மோட்டர் வாகனங்களின் பாகங்கள் உற்பத்தி செய்யபடுகின்றன .
  4. சென்னை, இந்தியாவின் நான்காவது பெரிய நகரம். உலகத்திலேயே 50௦ நகரங்களின் கணக்கெடுப்பில் சென்னைக்கு 35 வது இடம்.
  5. மருத்துவ வசதியில் சென்னைதான் இந்தியாவிலேயே முதன்மை வகிகின்றது .
  6. மேலும், கல்வி வசதியிலும் முதலிடம் சென்னைக்கு தான்.
  7.  சென்னை மெரீனா கடற்கரைதான் உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையாக உள்ளது (ஆனா அங்கு என்ன நடக்குதுன்னு நமக்குதானே தெரியும்).
  8. சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையம்தான் தென் ஏசியாவின் மிகபெரிய பேருந்து நிலையம்.
  9. சென்னையில் உள்ள வண்டலூர் விலங்கியல் பூங்காதான் இந்தியாவிலேயே முதலில் உருவான பூங்கா (1855 ).
  10. கடைசியாக, சென்னையில் உள்ள கான்சர் மையம்தான் இந்தியாவின் பழைமை வாய்ந்த ஒன்று (1920 )
இதுக்கு மேல உங்களுக்கு தெரிந்ததை தெரியபடுத்துங்கள். தயவு செய்து உலகத்திலேயே டாஸ்க் மார்க் தான் அரசால் நடத்த படுகின்ற சாராயக்கடை என்று சொல்லிடாதீங்க...........அதுக்கு நான் பொறுப்பு இல்லை. 














உங்கள் ஓட்டும், கருதும் வரவேற்கபடுகின்றது..............உங்களை திருடுரவனுகேல்லாம் ஒட்டு போடுறீங்க, எனக்கு போடா மாட்டீங்களா............

கருத்துகள் இல்லை: