OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 20 ஜனவரி, 2011

மைக்ரோசாப்ட் வோர்ட் பாடம்-3

இன்று நாம் மைக்ரோசாப்ட் வோர்டில் எவ்வாறு அட்டவணை அமைத்து, அதனை ஒழுங்கு படுத்துவது என்பதை பார்போம்.


முதலாவதாக, மைக்ரோசாப்ட் வோர்டை திறந்து கொள்ளுங்கள். இதில் நீங்கள் 2003 பயன்படுத்துபவராக இருந்தால், அதில் டேபிள் என்ற மெனு தனியாக இருக்கும்,. 2007 யென்றால், அதில் இன்செர்ட் மெனுவில் டேபிள் என்பதனை தேர்வுசெய்யவேண்டும். அதற்கான படங்களை கீழே காண்க.


இதில் முதலில் உள்ள படம் இந்த பாடத்திற்கான ஒரு உதாரணம் மற்றும் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதும் அதில் உண்டு.

இப்போது நாம் பாடத்திற்கு வருவோம், இங்கே உள்ள மாதிரி காலத்தையும், ரோவையும் தேர்வு செய்த பின் ஒக்கே பட்டனை அழுத்தி வெயில்வரவும்.
அதன் பின் உங்களுக்கு கீழே உள்ளவாறு ஒரு அட்டவணை கிடைக்கும்,
 அதில் உள்ள மாதிரி டைப் செய்த வார்த்தைகளோடு கிடைக்காது அதை நீங்கதான் டைப் செய்யணும்,. டைப் செய்து பின்னர், மொத்த அட்டவணையும், தேர்வு செய்துவிட்டு, அதன் மேல் ரைட் கிளிக் செய்தால் நீங்கள் கீழே உள்ள மாதிரி உங்களுக்கு ஒரு மெனு கிடைக்கும், அது முழுவதும் இந்த அட்டவணையில் நாம் என்னவெல்லாம் மாறுதல்கள் செய்யலாம் என்பதனை பற்றி இருக்கும்,
இந்த மெனுவில் நமக்கு முக்கியமானது, கடைசியில் உள்ள அட்டவணையின், ப்ரோபெர்டீஸ் மெனுதான். இந்த ப்ரோபெர்டீஸ் மெனு எப்படி இருக்கும் என்பதை நீங்கள் அதனை கிளிக் செய்தால் வரும் விண்டா இங்கே கீழே தரப்பட்டுள்ளது,
இந்த விண்டோவில், முதலில் டேபிள் என்கிற டாப் இருக்கும், இதில் நீங்கள் மொத தாபிலும் உங்கள் வோர்ட் பக்கத்தில் எங்கே அமைக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து கொள்ளாலாம், அடுத்து உள்ள ரோ என்கிற டாபில் உங்கள் ரோ களின் உயரத்தை அதிக படுத்தி கொள்ளலாம், அத போல காலம். அடுத்த டாப் செல் இதில் உங்கள் எழுத்துக்கள் இடம் பெரும் அவற்றை எவ்வாறு சீரமைப்பது பற்றி அதில் இருக்கும், அதற்க்கான படங்கள் கீழே குடுக்க பட்டுள்ளது,


இதில் உங்களுக்கு வேண்டியாவாறு உங்கள் அட்டவனையை அழுகுபடுதி கொள்ளலாம், அடுத்து அட்டவணையில் எவ்வவ்று இரண்டு செல்களை, ஒரே செல்லாக மாற்றுவது பற்றி பார்போம்,
முதலில் மற்ற வேண்டிய செல்லை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டு, பின்னர் கர்சொரை வைத்து rightclick செய்யவும், அதில் mergecell என்பதை தேர்வுசெய்யவும், இபோழுது உங்கள் அட்டவனையை காண்க,
மேலும் இதில் உள்ள borders and shading மூலம் உங்கள் அட்டவணைக்கு அழகான கட்டமைப்பை, வண்ணங்களை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். இன்செர்ட் என்கின்ற மெனுவில், தேவையான இடல் ரோ மற்றும் காலத்தை சேர்த்து கொள்ளாலாம், ஒரு முறை முயன்று பாருங்கள், முயற்சி திருவினையாக்கும்.