வாசகர்களே, இந்த ஜனவரியில் , இங்கே அமீரகத்தில் மக்கள் எல்லோரும் குளிரை ரொம்பவே என்ஜாய் பண்றாங்க, நிறைய பேரு குடும்பத்தோடு விடுமுறைகளில் வெளியிலே பார்க், பீச்னு போறாங்க, அவர்களுக்கு சில டிப்ஸ்.
- குளிர் அப்படி ஒன்னும் ஐரோப்பா நாடுகளை போல இல்லை என்றாலும், இதுதான் மனிதன் ரசிக்க கூடியா குளிராக உள்ளது.
- இரவில் எப்படியும் 18 முதல் 13 வரை temperature குறைகிறது.
- அப்புறம் குளிர் காரணமாக அதிகமானவர்களுக்கு தொண்டை வலி, ஜுரம் அப்படின்னு வந்து கொண்டு இருக்கு இது வந்தால் எப்படியும் ஒரு வாரம் நீடிக்கும்,
- அதனால அமீரகத்தில் உள்ளவர்கள், வெளியில் போகும் போது எதாவது ஸ்வெட்டர் போட்டு செல்லுங்கள்,உங்கள் காதுகளை மூடி கொள்ளுங்கள்,
- இல்லை நான் வைரம் பாஞ்ச கட்டை சும்மாதான் போவேன்னு அடம்பிடிசீங்கனா அதுக்கு அப்புறம் ஒரு வாரம் நீங்க மெடிக்கல் லீவ் போடணும், இப்படி ஆரம்பத்துலேயே லீவ் எடுத்து விட்டால், வருட கடைசியல ஊருக்கு போனால் மெடிக்கல் லீவ் எல்லாம் எடுக்க முடியாதே எனவே இப்பவே கொஞ்சம் உசாரா இருங்கள்.
- முடிந்தவரை குளிர் நாட்களில் சாபாட்டுகளில் மசாலாவை குறைத்து கொள்ளுங்கள் செரிக்க நேரமெடுக்கும்,
- இந்த நாட்களில் பால் டீக்கு பதிலாக வெறும் டி(சுலைமானி - உங்க பாஷையிலே ராவா) சாப்பிடுங்கள் ரொம்ப நல்லா இருக்கும்.
- முடிந்தவரை குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்த்து விடுங்கள்.
- தண்ணீரை கொஞ்சம் சூடாக குடியுங்கள்.
இதையெல்லாம் முடிந்தால் கடைபியுங்கள், அப்படியே இந்த படங்களையும் பார்த்துடுங்க,
2 கருத்துகள்:
//அப்புறம் குளிர் காரணமாக அதிகமானவர்களுக்கு தொண்டை வலி, ஜுரம் அப்படின்னு வந்து கொண்டு இருக்கு இது வந்தால் எப்படியும் ஒரு வாரம் நீடிக்கும்,//
உண்மைதான் தலவரே! முடியல...........
ஸலாம்,
அருமையான் டிப்ஸ்...
கருத்துரையிடுக