OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 30 ஜனவரி, 2012

சாபத்தை பெற்றுத்தரும் மவ்லித்துகளும்! அருளைப் பெற்றுத்தரும் ஸலாவத்தும்!!அல்லாஹ் தன் திருமறையில்...

நபியே (முஹம்மதே!) உம்மை சாட்சியாகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும், அல்லாஹ்வின் விருப்பப்படி அவனை நோக்கி அழைப்பவராகவும், ஒளிவீசும் விளக்காகவும் நாம் அனுப்பினோம்' (அல்குர்ஆன் 33:45,46)

அல்லாஹ்வின் இறுதித்தூதரான முஹம்மது(ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் உள்ளத்தில் யாரும் அடைந்திடமுடியாத இடத்தை அடைந்திருக்கின்றார்கள். அவர்களுக்காக உயிரையே அர்ப்பணிக்கக் கோடானகோடி மக்கள் காத்திருக்கின்றனர். ஆன்மீகத்தை வாழ்வின் சரியான அம்சமாக வாழ்ந்துக் காட்டியும், அதை மனிதகுலத்துக்கு உணர்த்தியும் காட்டிய அழகான மாமனிதர் அண்ணலார் நபி(ஸல்) அவர்கள்! 
மானிட இனம் செல்லவேண்டிய சரியான திசையை இனங்காட்டியதில் அண்ணல் நபி(ஸல்) அவர்களைப்போன்று உலக வரலாற்றில் எவருமில்லை என்று அடித்துச் சொல்லலாம். 

இதுபோல் இன்னும் எத்தனையோ சீர்மிகு சிறப்புகளையும் மேன்மைகளையும் பெற்றிருக்கும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதமான ரபீவுல் அவ்வல் வந்துவிட்டால் அதில் குறிப்பிட்ட சில தினங்களில் பெருமானார்(ஸல்) அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுகிறோம் என்ற பெயரில் அவர்களை கண்ணியப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு அல்லாஹ்வும் அவனது தூதர் நபி(ஸல்) அவர்களும் காட்டித்தராத, கட்டளையிடாத காரியங்களையெல்லாம் வணக்கமாக நினைத்துச் செயல்படும் அவலநிலை முஸ்லிம் சமுதாயத்தில் நிலவிவருவதை நாம் பார்க்கின்றோம்.

அண்ணல் நபி(ஸல்) அவர்களைப் புகழ்கின்றோம் என்ற பெயரில் மவ்லிது என்ற அரபிப் பாடலைப் பாடுவதும், அதிலிருக்கும் வரம்புமீறிய கருத்துக்களைப் பற்றி கவலைப்படாமல் ராகமாகப் பாடி மகிழ்வதும், அண்ணலாரின் பிறந்தநாள்விழா என்று குறிப்பிட்ட பனிரெண்டு நாட்களிலும் மக்களிடம் காசு வசூலித்து பல பெரிய தேக்சா சட்டிகளில் சோறாக்கி கந்தூரி என்ற பெயரில் உணவுவிழா கொண்டாடுவதையும் பார்க்கின்றோம்.

ஒன்றுக்கு மேற்பட்ட ஜமாஅத்துகள் உள்ள பல ஊர்களில் போட்டி மனப்பான்மையுடன் இரண்டு, மூன்று தேக்சாக்ளை அதிகப்படுத்தி சோறாக்கி வீண் பெருமையடிப்பதை காண்கின்றோம். இதற்காக பல இலட்சம் ரூபாய்களில் பட்ஜெட் போட்டு செலவழித்து ஆக்கப்படும் சோறு போன்றவைகள் அறைகுறையாக சமைக்கப்பட்டு, அதை சரியான முறையில் மக்களுக்கு வினியோகிக்காமல் வீணாகக் கொட்டப்படுவதை பார்க்கின்றோம். இவற்றுக்காக செலவிடப்பட்டிருக்கும் பொருளாதாரமும், உழைப்பும் கணக்கில் அதிகமானவையே! இப்படித்தான் பெருமானார் நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிவிட்டு சென்றார்களா?! அல்லது வாழும்படிதான் கட்டளையிட்டார்களா?!

அதே அந்த முஸ்லிம் ஊர்களில் சுற்றுப்புற சுகாதாரம் மருந்துக்குக்கூட இருக்காது. சாக்கடை-சகதிகள், கொசுத்தொல்லைகள் என்று மக்கள் ஒருவித திணறலுக்கு தங்களை பழக்கப்படுத்திக்கொண்டு வாழ்ந்து வருவார்கள். இப்படிப்பட்ட சூழலை சீரமைக்க முஸ்லிம் ஜமாஅத்துகள் பொருளாதாரம் திரட்டவும், உழைக்கவும் எந்தவொரு முயற்சியும் செய்திருக்க மாட்டார்கள். இப்படி வாழச்சொல்லித்தான் பெருமானார்(ஸல்) அவர்கள் போதித்துள்ளார்களா?

சத்தியத்தைப் பற்றிய தெளிவு, அசத்தியத்தைப் பற்றிய எச்சரிக்கை, ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு, கல்வியின் முக்கியத்துவம் இவைகளெல்லாம் மக்களுக்கு சுவாசம் போன்ற தேவைகளாகும். அதைப்பற்றியெல்லாம் கொஞ்சம்கூட அக்கறையில்லாத முஸ்லிம் ஜமாஅத்துகள் அட்ரஸ் இல்லாத மவ்லிதுகளுக்கும், கந்தூரிகளுக்கும் விழா எடுத்து அதற்கு இஸ்லாம் என்ற பெயரும் கொடுத்து தங்களின் பொன்னான உழைப்பையும், பொருளையும் வீணடிக்கின்றனர். இதுபோன்ற காரியங்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வழிமுறைக்கு பெருமை சேர்க்குமா?! எண்ணிப்பார்க்க வேண்டும் முஸ்லிம் சமுதாயமே!

வல்ல அல்லாஹ் தன் திருமறையில்...

விரயம் செய்வோர் சைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். சைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்' (அல்குர்ஆன் 17:27)

மேலும், நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்...      

நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.   அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: முஸ்லிம் 3243)

இவ்வுலகில் மனிதன் ஒருவர்மீது அன்பு கொண்டுவிட்டால் அந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவரை வரம்புமீறி புகழ்வதும், அதேபோல் புகழப்படும் மனிதர் சில நல்ல செயல்கள் செய்துவிட்டால் அவரை கடவுளின் அந்தஸ்திற்கு உயர்த்துவதும் நடைமுறையில் சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. இது எப்படிப்பட்ட விபரீதமான-அபாயகரமான விளைவை ஏற்படுத்தும் என்பதை மனிதர்கள் அவ்வளவாக உணர்வதில்லை. உண்மையான கடவுளின் அந்தஸ்தை உணராத காரணத்தினால்தான் கண்டதெல்லாம் கடவுள் என்ற அவலம் நிலவுவதைக் காணமுடிகிறது.

இறைவன் எப்போதும் இறைவன்தான். அவன் ஒருபோதும் மனித அந்தஸ்துக்கு இறங்குவது கிடையாது. மனிதன் எப்போதும் மனிதன்தான். அவன் எவ்வளவு பெரிய காரியங்கள் செய்தாலும், எத்தகைய சாதனைகள் புரிந்தாலும் ஒருபோதும் இறைவனின் அந்தஸ்துக்கு உயர்வது என்ன? நெருங்கக்கூட முடியாது. வேண்டுமானால் நல்லறங்கள் செய்து இறைவனின் அன்பைப்பெற்றவனாக ஆகலாமே தவிர மனிதன் ஒருபோதும் இறைவனாக முடியாது. இதை வலியுறுத்தும் விதமாகவே மாநபி(ஸல்) அவர்கள், மனிதர்கள் தங்களுக்குள் வரம்புமீறி புகழ்ந்துகொள்ளும் வாசலை அடைக்கின்றார்கள்.

''கிறித்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியார் தான். அல்லாஹ்வின் அடியார் என்றும் அல்லாஹ்வின் தூதர் என்றும் சொல்லுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிம்பரின் மீது அமர்ந்த படி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரி 3445

நபி (ஸல்) அவர்கள் என்ன காரணத்திற்காக அஞ்சி, தம்மைப் புகழக் கூடாது என்றார்களோ அந்தக் காரணத்தை, புகழ்ச்சியில் வரம்பு மீறுதலை இந்தச் சமுதாயம் அப்படியே நிறைவேற்றுவதை நாம் பார்க்கின்றோம்.

தற்போது தமிழ்பேசும் முஸ்லிம்களிடம் பெரிய அபிமானத்தைப்பெற்ற மவ்லித் புத்தகங்கள் குர்ஆனுக்கும், இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டிற்கும், நபி(ஸல்) அவர்களின் சொல்-செயல்களுக்கும் நேர்மாறானவை மற்றும் நேரடியாக மோதக்கூடியவையாகும். உதாரணமாக, 'யாநபி பைத்' என்ற பாடல் தமிழகமெங்கும் பிரசித்திபெற்றது. அந்த பாடலின் துவக்கமே, ''யா நபி ஸலாம் அலைக்கும், யாரஸல்ஸலாம் அலைக்கும்'' என்று மொட்டையாகவே வருகிறது. அந்த பாடலுக்குப் பெயரே யாநபி பாடல் என்றே கூறப்படும். இந்த வரியைக் கவனியுங்கள்.  

அதில் ''யா நபியல்லாஹ், யா ரஸலுல்லாஹ்'' என்று முறையாக இல்லாமல் குறையாக மரியாதை இல்லாமல், நபி(ஸல்) அவர்களுக்குச் சமமான அந்தஸ்து உடையவர்கள் அவர்களை அழைப்பது போன்று உள்ளது. அத்தோடு மட்டுமல்லாமல் அதில் வரும் ஏழாவது அடியில் ''யாமுஹம்மத்'' என்று நபியவர்களின் பெயரைச் சொல்லி மிகவும் விகாரமாகவே மரியாதையில்லாமல் அழைக்கப்படுகிறது. 

அல்லாஹ் தன்னுடைய திருக்குர்ஆனில் நபி (ஸல்) அழைத்துக் கூப்பிடும் ஒழுங்கைப் பற்றிக் கூறுகையில், உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பதைப் போல் இத்தூதரை அழைக்காதீர்கள்.  (அல்குர்ஆன் 24:63)

இந்த வசனம் இறங்கியதற்கான காரணத்தை அப்பாஸ்(ரலீ) அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள். ''அரபு மக்கள் 'யா முஹம்மத், யாஅபல் காசிம்' என்று கூறிக் கொண்டு இருந்தார்கள். அப்போது தான் நபியவர்களைக் கண்ணியத்தைப் பாதிக்கும் வகையில் அவ்வாறு கூறக் கூடாது என  அல்லாஹ் அவர்களைத் தடுக்கிறான்'' என கூறுகிறார்கள். இதை இமாம் இப்னு கஸீர் அவர்கள் தமது தப்ஸீரில் கூறுகிறார்கள்.

பகிரங்க இணை வைப்பு!

''அல்லாஹ்விடம் மட்டுமே எல்லாப் பாவங்களுக்கும் பாவமன்னிப்பு கேட்க வேண்டும். வேறு யாரிமும் கேட்கக் கூடாது அந்த ஏக வல்ல நாயன் அல்லாஹ்விடம் ஒரு நாள் ஒன்றுக்கு 100 தடவை நான் இஸ்திக்ஃபார் தேடுகிறேன்'' என்று கூறிய அந்த இறைத்தூதரிடத்திலேயே, ''கஃப்பிரூ அன்னீ துனூபீ வஃபு லீ அன் சய்யிஆ(த்)தீ'' (நீர் என் பாவங்களையும் குற்றங்களையும் மன்னித்திடுவீர். நீங்கள் நாசத்தை ஏற்படுத்தும் பாவங்களை மன்னிப்பவர்) என்று கூறும் வரிகளும் இந்தப் பாடலில் தான் இருக்கிறது

இது மட்டுமல்ல! இதுபோன்று ஏராளமான குப்பைகள் இந்த மவ்லித் புத்தகங்களில் மலிந்து காணப்படுகின்றன. இப்படிப்பட்ட பாடல்களை பாடுவதால் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டிற்கும், நபி(ஸல்) அவர்களின் போதனைகளுக்கும் மாறு செய்வதாக ஆகிவிடும். இதை தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் அனைத்தும் இஸ்லாத்தை கேலி செய்வதாக ஆகிவிடும். அதைத்தான் இன்றைய முஸ்லிம்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் புகழ்வதாகக் கூறி இயற்றப்பட்ட மவ்லிதுகள் புகழ் மாலைகளல்ல, பொய் மாலைகள் தான் என்பதையும் இவற்றை ஓதினால் சுவனம் கிடைக்காது, நரகம் தான் பரிசாகக் கிடைக்கும்.
அருளைப் பெற்றுத்தரும் ஸலவாத்!

அப்படியானால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீதுகொண்டுள்ள அன்பை வெளிப்படுத்த வேறு வாய்ப்பே இல்லையா? என்றால் நிச்சயமாக இருக்கின்றது. 

திருமறைக் குர்ஆனில்...

''நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 3:31)
இந்த வசனத்தில், அல்லாஹ்வின் விருப்பத்திற்கேற்ப நபி(ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வழிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் அருளை வேண்டக்கூடிய ஸலவாத்தை ஓதவேண்டும். 

அல்லாஹ் தன் திருமறைக் குர்ஆனில்...

அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள்! (அல்குர்ஆன் 33:56)

இந்த வசனத்தைக் கண்டவுடன் அல்லாஹ்வின் தூதருக்காக ஸலவாத், ஸலாம் சொல்ல வேண்டும் என்று தோன்றுகின்றது. இதற்காக நமது சொந்த வார்த்தைகளைக் கொண்டு புகழ் மாலை தொடுக்கும் போது நிச்சயமாக அது யூத, கிறித்தவர்கள் புகுந்த பாதையில் கொண்டு போய்ச் சேர்த்து விடும். பாழாய்ப் போன ஷிர்க் என்னும் பெரும் பாவத்தில் நம்மைப் புதைத்து விடும். அதனால் தான் மேற்கண்ட வசனம் இறங்கியவுடன் நபித்தோழர்கள் ஸலவாத் சொல்வது எப்படி என்று நபி(ஸல்) அவர்களிடமே கேட்டு, கற்றுக் கொள்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம், ''அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மீது ஸலாம் கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம். ஸலவாத் கூறுவது எப்படி?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ''அல்லா{ஹம்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத், அல்லா{ஹம்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்''      என்று சொல்லுங்கள், என பதிலளித்தார்கள்.          அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி) நூல் : புகாரி 4797
ஒன்றுக்கு பத்து!

''யார் அல்லாஹ்விடம் என் மீது அருள் புரியுமாறு ஒரு தடவை துஆச் செய்கின்றாரோ அவர் மீது அல்லாஹ் பத்து தடவை அருள் புரிகின்றான்'' என்று அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.              அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 577 '

நிச்சயமாக பூமியில் சுற்றித்திரியும் மலக்குகள் அல்லாஹ்விடம் உள்ளனர். அவர்கள் என்னிடம் ஸலாமை எடுத்துரைக்கின்றார்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) நூல்: நஸயீ 1265

ஆகவே அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத்தரும் மவ்லிதுகளை விட்டுவிட்டு அவனது அருளை அள்ளித்தரும் ஸலவாத்தைக் கூறுவோம். அளப்பரிய நன்மைகளை அடைவோம்.

source:tntjpno


ஞாயிறு, 29 ஜனவரி, 2012

அபுதாபியில் வேலைவாய்ப்பு விழா: வெளிநாட்டினருக்கும் வாய்ப்பு


அபுதாபி:தனியார் துறையில் கூடுதல் உள்நாட்டினரை ஈர்க்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அபுதாபியில் பெரிய அளவிலான வேலை வாய்ப்பு விழா3 நாட்கள் நடைபெற இருக்கிறது.

                                              recruitment-show-tawdheef-2012
ஜனவரி 31, பிப்ரவரி 1, 2 தேதிகளில் அபுதாபி நேசனல் எக்ஸிபிஷன் சென்டரில் ‘தவ்தீஃப்’ என்ற பெயரில் இவ்விழா நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நிதி மற்றும் வங்கியல் துறைகளில் செயல்படும் நிறுவனங்கள் உள்பட ஏராளமான நிறுவனங்கள் இவ்விழாவில் பல்வேறு வேலைவாய்ப்புக்கான நபர்களை தேர்வுச் செய்கின்றன.
உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்பை நோக்கமாக கொண்டு இவ்வேலை வாய்ப்பு விழா நடத்தப்பட்டாலும் மூன்றாவது நாள்(பிப்ரவரி-2) அனைத்து வெளிநாட்டினருக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு விழாவில் பங்கேற்கும் வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் வேலைத் தேடுவோர் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
ஜனவரி 31-ஆம் தேதி காலை 11 முதல் மாலை 7 மணி வரை உள்நாட்டினருக்கு(யு.ஏ.இ) மட்டுமே அனுமதி.
பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 11 முதல் மதியம் 2 மணி வரை உள்நாட்டு(யு.ஏ.இ) பெண்களுக்கு மட்டும்.
மதியம் 2 மணி முதல் மாலை 7 மணி வரை உள்நாட்டு(யு.ஏ.இ) ஆண்களுக்கு மட்டும்.
பிப்ரவரி 2-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து வெளிநாட்டினருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த வேலை வாய்ப்பு விழாவில் பங்கேற்க விரும்புவர்கள்  www.tawdheef.ae என்ற இணையதளத்திற்கு சென்று முன்னரே பதிவுச் செய்துக்கொள்ளவும்.
இந்த வேலைவாய்ப்பு விழாவில் பங்கேற்கும் முக்கிய நிறுவனங்கள்: அபுதாபி ஏர்போர்ட்ஸ் கம்பெனி, அபுதாபி கமர்ஸியல் வங்கி, அபுதாபி நேசனல் இன்சூரன்ஸ் கம்பெனி, அபுதாபி நேசனல் ஹோட்டல்ஸ், அபுதாபி போலீஸ், அபுதாபி இன்வெஸ்ட்மெண்ட் அதாரிட்டி, அபுதாபி இஸ்லாமிக் வங்கி, அபுதாபி டூரிஸம் அதாரிட்டி, கமர்ஸியல் பேங்க் ஆஃப் இண்டர்நேசனல், டால்பின் எனர்ஜி, எமிரேட்ஸ் நியூக்ளியர் எனர்ஜி கார்ப்பரேசன், எமிரேட்ஸ் அலுமினியம், எமிரேட்ஸ் ட்ரைவிங் கம்பெனி, இத்திஹாத்(Ethihad), எடிசலாத்(Etisalat),ஃபர்ஸ்ட் கல்ஃப் வங்கி(Firstgulf bank), ஜெனரல் ஹோல்டிங் கார்ப்பரேசன், HSBC வங்கி, முபாதலா, நேசனல் பேங்க் ஆஃப் அபுதாபி, பெட்ரோஃபாக் எமிரேட்ஸ், பிரசிடன்ஸியல் கார்ட், யு.ஏ.இ எக்ஸ்சேஞ்ச், யாஸ் மரினா சர்க்யூட் ஆகியன இவ் வேலைவாய்ப்பு விழாவில் கலந்துக் கொள்வதாக இதுவரை அறிவித்துள்ளன. மேலும் கூடுதல் நிறுவனங்கள் இவ்விழாவில் பங்கேற்கும்.
நிறுவனங்களின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து வேலை தொடர்பாக விசாரிக்கலாம். பயோடேட்டா தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படும். வேலைவாய்ப்பு விழாவையொட்டி பல்வேறு நிறுவனங்களின் மனித வளத்துறைகள் நடத்தும் செமினார்களில் இலவசமாக கலந்துக் கொள்ளலாம்.
உள்நாட்டினருக்கு(யு.ஏ.இ) மட்டும் தனியாக இண்டர்வியூ அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிகமான உள்நாட்டினருக்கு வேலை வழங்குவோம் என பிரபல வங்கிகள் அறிவித்துள்ளன. எமிரேட்ஸ் என்.பி.டி(ENBD) இவ்வாண்டு குறைந்தது 250 உள்நாட்டினரை பணியில் அமர்த்தும். கடந்த ஆண்டு 462 பேரை நியமித்தது.

வியாழன், 26 ஜனவரி, 2012

மூளையை பாதிக்கும் பாத்து காரணங்கள்

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்

மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6.தூக்கமின்மை

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

நன்றி:கடலூர் முஸ்லிம் நண்பர்கள்(முக நூல்)


புதன், 25 ஜனவரி, 2012

இட்லி, தோசை கடை மாவு ஒரு ஸ்லோ பாய்ஸன் (Slow Poisson)

என்ன தலைப்பை பார்த்து பயந்துவிட்டீர்களா? ஆம் இது பெரிய உண்மை. பரோட்டா மைதாவினால் செய்த பன்டம் அதில் உள்ள கெமிக்கல் உடம்புக்கு நல்லது அல்ல என கொஞ்ச நாளுக்கு முன் ஃபேஸ்புக்கில் பெரிதளவில் ஷேர்செய்யபட்ட ஒரு ஆர்டிக்கள். பரோட்டாவது நமது பாரம்பரய உண்வு அல்ல, மற்றும் அதை இளைஞ்ர்கள் தான் உண்ணுவார்கள், ஆனால் இப்பொழுது நமது ஒரு வயது குழந்தை முதல் 80 வயது வயாதனவர்கள் வரை உண்பது "இட்லி" எனப்படும் ஒரு தமிழனின் உணவு. இது போக பேஷன்ட்களும், அறுவை சிகிச்சை செய்தவர்களும்மற்றும் திட உணவு சாப்பிட ஆரம்பிக்கும் எந்த ஒரு பேஷன்டுக்கும் பரிந்துரைக்கும் முதல் உணவு இட்லி எனப்படும் வேகவைத்த "ரைஸ் பேன்கேக்".


இந்த விஷயங்கள் 100% சதவிகிதம் உண்மை. இட்லியை நீங்கள் வீட்டில் மாவரைத்து சாப்பிட்டால் பிரச்சினை கொஞ்சமும் இல்லை இதயே கடையில் வாங்கிசாப்பிட்டால் பல பேருக்கு ஒத்து வராது என்பது மறுக்க முடியாத உண்மை. அப்ப என்னத்தான் பிரச்சினை என்கிறேர்களா, அதற்க்கும் தேவையான் மாவு பற்றி தான் இந்த ஆய்வு கட்டுரை.

ஆம் ஒரு காலத்தில் நாம் ஆட்டுரலில் மாவு அரைத்தோம், பின்பு அது மிக்ஸி மற்றும் எலக்ட்ரானிக் கிரன்டர்ஸ் வந்தது. அதுவும் பரவாயில்லை வாழ்க்கைமாற்றங்களின் காரணத்தால் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகிபோனது. ச்மீபமாக ஒரு முக்கிய திருப்பு முனையாக இட்லி தோசை மாவு ரெடியாக இப்பொழுது பட்டி தொட்டி, அண்ணாச்சி கடை முதல் பெரிய சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கிறது. மக்களும் இட்லி மாவு அரைப்பதையே மெல்ல மறந்து வருகின்றனர்முன்பாவது திடீர் டிபன் ரவா உப்புமாதான் இப்ப்பொழுது நம்ம வாண்டுகளிடம் " தம்பி ஒடி போய் ஒரு பாக்கெட் இட்லி தோசை மாவு தெருமுனை கடையில வாங்கி வா"அப்ப்டின்னு சொல்லி வந்த மாவை இட்லி தோசை ஊத்தி மிச்சத்தை ஃபிரிஜ்ஜில் வைத்து அது முடியும் வரை போகும். இது பேச்சலர்ஸ் கூட இப்ப செய்கின்றனர்.இந்த மாவு ஒரு உயிர்கொல்லி - ஸ்லோ பாய்ஸ்ன் என்பது ஏனோ நிறைய பேருக்கு தெரிவதில்லை. இதன் பயங்கரத்தை இப்பொழுது கூறுகிறேன் கேளுங்கள்விழிப்புனர்ச்சியை பரப்புங்கள்.

1. நீங்கள் வாங்கும் எந்த ஒரு வெட் ஃப்ளோர்-Wet Flour (ஈரபத தோசை மாவிற்க்கு) ஐ எஸ் ஐ-ISI சான்றிதல் கிடையாது. அதனால் இது எந்த ஒருஆராய்ச்சி கூடத்திலும் சோதனை செய்யபடவில்லை.

2. இந்த மாவு சில மட்ட்மான அரிசியும் உளுந்தும் முக்கியமாக மாவுக்கு முன் காலத்தில் புண்ணுக்கு பயன்படும் போரிங் பவுடர் மற்றூம் ஆரோட் மாவுபோடுவதால் மாவு பூளிப்பு வாசைனை கன்டிப்பாக வராது. அது போக மாவும் பொங்கி நிறைய வரும் என்பதால் இதை செய்கின்றனர். இதே மாதிரி வீட்டில் அரைத்த
மாவை ரெண்டு நாள் வைத்து மூனாவது நாள் முகர்ந்து பாருங்கள் புளிப்பு வாசைனையும் வரும் தோசையும் புளிக்கும். ஏன் என்றால் மாவு பக்குவமாவதும்

தயிர் உறைவது ஒரு நல்ல பேக்டீரியாவின் செயலாகும். இதை தவிர்க்க தான் கடையில் வாங்கும் மாவுக்கு 6 நாள் கியாரன்டி அளித்தும் ஒரு வாசனை வராமல்இருக்க காரணம் இந்த் புண்ணிர்க்கு, கேர்ம்போர்டில் Boring Powder போடும் ஆரோட் மாவுதான்.

3. முக்கியமாக இந்த கிரன்டர்கள் கமர்ஷியல் ரகம் இல்லை. அதாவ்து ஒரு நாளைக்கு 3 - 6 மணி நேரம் அரைக்க முடியும். ஆனால் இவர்கள் 12- 18 மணிநேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு பல சமயம் இந்த சிறு கருங்கள் துகள்களால் தான் சமீபமாக நிறைய பேருக்கு சிறு நீரகத்தில் கல் உண்டாகிறது. ஒரு நல்ல கல்லின் ஆயுள் 12 மணி நேரம் அரைத்தல் வெறும் 6 மாதம் தான். கொத்தி போட்டாலும் அடுத்த மூனு மாதம் தான் மேக்ஸிமம்.

4. உங்களுக்கு நன்கு தெரியும் சமையல் செய்யும் ஆட்கள் கை அடிக்கடி அலம்ப வேன்டும் மற்றூம் நகங்கள் வளர்க்கவே கூடாது. ஆனால் இந்த மாதிரி எந்த ஒருசுத்ததையும் இவர்கள் பேனுவதில்லை. ஒவ்வொரு நகத்தின் இடுக்கிலும் உள்ள கிருமிகள் இந்த மாவில்கெட்ட பேக்டிரியாக்கள் மற்றூம் கிருமிகள் ஈஸியாக சேர்ந்து உங்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைந்து மற்றும் வாந்தி பேதி.அடிக்கடி உடம்பு முடியாமல் போவதற்க்கு இது தான் காரணம்.

5. கிரையன்டரை எனக்கு தெரிந்து தாய்மார்கள் பயன்படுத்த தயக்க்ம் இரண்டு விஷயங்கள். 1. கிரையன்டரை சுத்தம் செய்யும் கஷ்டம் 2. கல்லை துக்கி போட வேண்டும் ஒவ்வொரு முறை, பெரிய குடும்பமென்றால் இது சாத்தியம் சிறு குடும்பம் அதனாலயே கடையில் மாவு வாங்குகிரது. ஆனால் இவர்கள் கிரையன்டரை ஒவ்வொரு மாவு முடிந்தும் கழுவுவதில்லை. அதனால் அந்த கிரயன்டரின் கிருமிஅதிகரித்து கொண்டே செல்கிறது. இவர்கள் கமர்ஷியலாக பயன்படுத்த ஒவ்வொரு முறையும் வென்னீர் (Hot Water) உற்றி தான் சுத்தம் செய்ய வேண்டும் ஆனால்,இவர்கள் ஒரு வாரத்திர்க்கு ஒரு முறை கழுவினாலே அதிகம், மாவு பொருட்களினால் எலிகள் மற்றும் பூச்சிகள் அந்த மிச்ச மாவை ருசித்து அந்த மிஷினின் சுத்ததன்மை போய்விடும்.

6. என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீர் தான் ஊற்றீ மாவு அரைக்க வேண்டும். எனெக்கு தெரிந்த தகவல் படி இவர்கள் போரிங் தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரை ஊற்றும் காரணம் உப்பு போட வேண்டிய வேலை இல்லை.

7. அந்த கால ஃபார்முலா படி நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்க்கை ஆன்டி பயாடிக், உடம்பு உஷ்னம், வாய் நாற்ற்ம், அல்சர்க்கு இது ஒரு நல்ல பொருள் ஆனால் இவர்கள் யாரும் வெந்தயத்தை உபயோகிப்பதில்லை.

8. கிரையன்டரில் மாவு தள்ளிவிடும் அந்த ஃபைபர் பிளாஸ்டிக்கை ஆறு மாதத்திற்க்கு அல்லது வருடத்திற்க்கு ஒரு முறை மாற்ற வேன்டும் ஆனால் இவர்கள் அதை மாற்றவே மாட்டார்கள் அதனால் அந்த பிளாஸ்டிக் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து அதுவும் இந்த மாவில்தான்.

9. கிரையன்ட்ர் ஒட அந்த மத்திய குழவியை இனைக்கும் ஒரு செயின் அந்த செயினை இவர்கள் கழட்டி ஒரு கார்பன்டம் பெல்ட்டை மாட்டி இருப்பர்கள் ஒன்று சத்தம் வராமல் இருபதற்க்கும் மற்றூம் மாவு கை தள்ளி விடாமல் அரையும் டெக்னிக்குககாக. அந்த பெல்ட் தண்ணீர் பட்டு பட்டு அந்த பெல்ட் துகள்களும் நமது மாவில்தான்.

10.இந்த மாவை இவர்கள் அரைத்து கடைக்கு பிளாஸ்டிக் பேக் மூலம் சப்ளை செய்கின்றனர். நமது தமிழ் நாட்டு கிளைமேட்படி இதை ஃப்ரீஜரில் தான் வைக்க வேண்டும் அப்பொழுது தன் இந்த மாவில் பாக்டீரியாவின் உற்பத்தியை கட்டுபடுத்த முடியும், ஆனால் நம்மூர் பாதி கடைகளில் ஃப்ரிட்ஜில் தான் இதை வைத்து இப்ப இருக்கிற கரென்டு கட் பிரச்சனையில் இந்த மாவு கண்டிப்பாக பாய்ஸ்னாகிறது.

இந்த மாவில் நிறைய இடங்களில் இப்பொழுது பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டிரைச்சிகளில் கானப்படும் கோலி (E-COLI) எனும் பேக்டீரியா பரவி சிலருக்கு உடனே பிரச்சினையும் சிலருக்கு இந்த மாவுகள் ஸ்லோ பாய்ஸனாக உருவாகிற்து. இந்த ஈகோலி - 24 மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும். அதனால் தயவு செய்து இவர்கள் கொடுக்கும் 6 நாள்.கியாரன்டியில் ஈர்மான இட்லி தோசை மாவை கண்டிப்பாக வாங்குவதை தவிருங்கள். உலர்ந்த மாவு பரவாயில்லை. இதே மாதிரி சிலர் மாவரைத்து நான்கு அல்ல்து ஐந்து பேர் ஷேர் செய்யும் தாய்மார்களும் கண்டிப்பாக கவனம் தேவை.

இப்பொழுது இது ஒரு அங்கிகரிக்கபட்ட தொழில் அல்ல அதனால் சென்னை மாநகராட்சி ரெய்டு செய்து மவு அரைக்கும் இடங்களில் எல்லாம் கைப்டுத்திகிறது.

தயவு செய்து இதை பகிரவும், முடிந்த அளவுக்கு அவார்னஸை பரப்புங்கள்.


நன்றி:கடலூர் முஸ்லிம் நன்பர்க(முக நூல்).

செவ்வாய், 24 ஜனவரி, 2012

கடலூர்:புயலால் இடம்பெயர்ந்த பறவைகள்
"தானே' புயல் கடலூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான வீடுகளைச் சிதைத்து, மக்களைப் புகலிடம் இன்றி தவிக்க விட்டதைப்போல், மரங்கள் அனைத்தையும் சிதைத்து பறவைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கி விட்டது.
பறவைகளுக்கு புயல் நிவாரணம் வழங்க எந்த அரசால் முடியும்? எனவே அவை கடலூர் மாவட்டத்தை விட்டே இடம் பெயர்ந்து சென்றுவிட்டன.
"தானே' புயலில் கடலூர் மாவட்டத்தில் 3.5 லட்சம் வீடுகளுக்கு மேல் சேதம் அடைந்தன. வீடுகளின் கூரைகள் பலவும் காணாமல் போய்விட்டன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் புகலிடம் இன்றி தவித்தனர்.
அரசு புயல் நிவாரணம் வழங்கி, மக்களின் துயரத்தை ஓரளவேனும் துடைத்து இருக்கிறது.   மரங்கள்தான் பறவைகளின் வாழ்விடங்கள். பகல் நேரங்களில் இரைத்தேடி வானில் சிறகடித்து அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தாலும், இரவில் பாதுகாப்பு கருதியும், கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யவும், ஏதேனும் மரக்கிளைகளைத்தான் அவை தஞ்சம் அடைகின்றன. புயலில் கடலூர் மாவட்டத்தில் 2 கோடி மரங்களுக்கு மேல் சாய்ந்து விழுந்து, விறகாகி விட்டன.
இதனால் பறவைகளின் புகலிடங்களும், புயலுக்குப் பலியாகி விட்டன. இந்நிலையில்,  "தானே' புயல் தாக்கத்தையும் தாங்கி, கிளைகளை இலைகளை இழந்து நிற்கும் சில மொட்டை மரங்கள்தான் இன்று, பறவைகளின் சரணாலயங்களாக மிஞ்சி நிற்கின்றன. மொட்டை மரங்களில் பகலில் பறவைகளுக்கு நிழலும் இல்லை, இரவில் கடும் குளிரில் இருந்து பாதுகாப்பும் இல்லை என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.
மொட்டை மரங்கள் எந்த அளவுக்கு பறவைகள் கூடுகட்ட வசதியாக இருக்கும் என்று தெரியவில்லை.புயலில் கடலூரில் ஏராளமான பறவைகள் இறந்தும், கூடுகள் சிதைந்தும் இருக்கக் கூடும் என்றும், புயலுக்குப் பின் புகலிடம் இன்றியும், இனப்பெருக்கம் செய்வதற்கு வசதியாக கூடுகள் கட்ட மரங்கள் கிடைக்காமலும், பிற மாவட்டங்களுக்கு அவை இடம் பெயர்ந்து சென்று விட்டதாகவும் பறவை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆனால் எந்த சூழ்நிலையிலும் வாழும் சக்தி கொண்ட காகங்களைத்தான் இப்போது மாவட்டத்தில் எங்கும் பார்க்க முடிகிறது. மற்ற பறவைகளை பெரும்பாலும் பார்க்க முடியவில்லை.

FOOD AS MEDICINE

HEADACHE?
 EAT FISH! 
Eat plenty of fish -- fish oil helps prevent headaches
So does ginger, which reduces inflammation and pain. 

 


HAVE FEVER? EAT YOGURT! 

Eat lots of yogurt before pollen season.
Also-eat honey from your area (local region) daily. 

 
 
 TO PREVENT STROKE
 DRINK TEA! 
Prevent buildup of fatty deposits on artery walls with regular doses of tea. (actually, tea suppresses my appetite and keeps the pounds from invading....Green tea is great for our immune system)! 

 
 


INSOM NI A (CAN'T SLEEP?)
 HONEY! 
Use honey as a tranquilizer and sedative

 
 


ASTHMA? 
EAT O NI ONS!!!! 
Eating onions helps ease constriction of bronchial tubes. (when I was young, my mother would make onion packs to place on our chest, helped the respiratory ailments and actually made us breathe better). 

ARTHRITIS?
 EAT FISH, TOO!!
 
Salmon, tuna, mackerel and sardines actually prevent arthritis. (fish has omega oils, good for our immune system)

 


UPSET STOMACH?
 BANANAS - GINGER!!!!! 
Bananas will settle an upset stomach
Ginger will cure morning sickness and nausea. 

 
 

BLADDER INFECTION?
 DRINK CRANBERRY JUICE!!!! 
High-acid cranberry juice controls harmful bacteria

 


BONE PROBLEMS?
 EAT PINEAPPLE!!! 
Bone fractures and osteoporosis can be prevented by the manganese in pineapple

 
 

PREMENSTRUAL SYNDROME? 
EAT CORNFLAKES!!!! 
W
omen can ward off the effects of PMS with cornflakes, which help reduce depression, anxiety and fatigue. 
 
 

MEMORY PROBLEMS?
 EAT OYSTERS! 
Oysters help improve your mental functioning by supplying much-needed zinc


COLDS? EAT GARLIC! 
Clear up that stuffy head with garlic. (remember, garlic lowers cholesterol, too.)

 
 


COUGHING? 
USE RED PEPPERS!! 
A substance similar to that found in the cough syrups is found in hot red pepper. Use red (cayenne) pepper with caution-it can irritate your tummy. 

 
 

BREAST CANCER?
 EAT Wheat, bran and cabbage 
Helps to maintain estrogen at healthy levels. 

 

LUNG CANCER?
 EAT DARK GREEN AND ORANGE AND VEGGIES!!! 
A good antidote is beta carotene, a form of Vitamin A found in dark green and orange vegetables. 

 

ULCERS? 
EAT CABBAGE ALSO!!! 
Cabbage contains chemicals that help heal both gastric and duodenal ulcers. 

 
 


DIARRHEA? 
EAT APPLES! 
Grate an apple with its skin, let it turn brown and eat it to cure this condition. (Bananas are good for this ailment)

 


CLOGGED ARTERIES?
 EAT AVOCADO! 
Mono unsaturated fat in avocados lowers cholesterol. 

 

HIGH BLOOD PRESSURE?
 EAT CELERY AND OLIVE OIL!!! 
Olive oil has been shown to lower blood pressure.
Celery contains a chemical that lowers pressure too

 
  
BLOOD SUGAR IMBALANCE?
 EAT BROCCOLI AND PEANUTS!!! 
The chromium in broccoli and peanuts helps regulate insulin and blood sugar

Kiwi:
 Tiny but mighty. This is a good source of potassium, magnesium, Vitamin E &fiber. It's Vitamin C content is twice that of an orange. 

Apple:
 An apple a day keeps the doctor away? Although an apple has a low Vitamin C content, it has antioxidants &flavonoids which enhances the activity of Vitamin C thereby helping to lower the risks of colon cancer, heart attack & stroke

 


Strawberry:
 Protective fruit. Strawberries have the highest total antioxidant power among major fruits &protects the body from cancer causing, blood vessels clogging free radicals. (Actually, any berry is good for you..they're high in anti-oxidants and they actually keep us young.........blueberries are the best and very versatile in the health field........they get rid of all the free-radicals that invade our bodies) 

Orange:
 Sweetest medicine. Taking 2 - 4 oranges a day may help keep colds away, lower cholesterol, prevent & dissolve kidney stones as well as lessen the risk of colon cancer

Watermelon:
 Coolest Thirst Quencher. Composed of 92% water, it is also packed with a giant dose of glutathione which helps boost our immune system. They are also a key source of lycopene - the cancer fighting oxidant. Other nutrients
found in watermelon are Vitamin C &Potassium. (watermelon also has natural substances [natural SPF sources] that keep our skin healthy, protecting our skin from those darn suv rays) 


Guava &Papaya:
 Top awards for Vitamin C. They are the clear winners for their high Vitamin C content. Guava is also rich in fiber which helps prevent constipation

Papaya
 is rich in carotene, this is good for your eyes. (also good for gas and indigestion) 


Tomatoes 
are very good as a preventative measure for men, keeps those prostrate problems from invading their bodies