OnlinePJ

Thanks for Visiting my Page
Child Care லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Child Care லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 மே, 2012

பிஞ்சுகளின் சுமையைக் குறைக்க அரசு முன்வருமா?

ரு காலத்தில் ஐந்து வயதில் தான் பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பார்கள். இன்றோ தாய்மையின் அரவணைப்பு தேவைப்படும் இரண்டு வயது மூன்று வயதிலெல்லாம் பிள்ளைகளை ஆங்கில வழிக்கல்வியில் சேர்த்துவிட்டு விடுகிறார்கள். மேலும், ஐந்தாம் வகுப்புவரை ஒரு சிலேட்டும், சில புத்தகங்களும், ஒன்றிரண்டு நோட்டுகளும் இருந்த நிலை மாறி, இன்று 
L .K .G. பிள்ளைகள் கூட ஒரு பொதி அளவு புத்தகங்களை சுமக்க முடியாமல் சுமத்து செல்வதைக் காணமுடிகிறது. இவ்வாறு பிஞ்சுகள் கஷ்டப்படுவதை யாரும் பெரிய அளவில் அலட்டிகொள்வதில்லை. ஆனால் இவ்வாறு பிள்ளைகள் புத்தகச் சுமையை சுமப்பது அந்த குழந்தைக்கு பாதிப்பை உண்டாக்கும் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.



பள்ளி செல்லும் சிறுவர்கள் புத்தகபை சுமந்து செல்வதால் ஏற்படும் பாதிப்பை கண்டறிவதற்காக சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட 10 முக்கிய நகரங்களில் வசிக்கும் பள்ளிச்சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் அஸ்சோசம் என்ற சுகாதார அமைப்பு ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வில் 5 முதல் 12 வயதுள்ள பள்ளிச்சிறுவர்கள் அளவுக்கு அதிகமாக முதுகில் புத்தக சுமையை தினமும் சுமந்தபடி செல்வதால் அவர்கள் கடுமையான முதுகுவலியால் அவதிப்படுவதாகவும், முதுகில் சுமை ஏற்றப்பட்டு குனிந்தவாறு செல்வதால் 12 வயதுக்குட்பட்ட 1500 குழந்தைகள் முதுகெலும்பு பாதிக்கப்பட்டு அவதிப்படுவதாகவும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் குறைந்த வயதில் அதிக சுமையை சுமப்பதன் மூலம் அந்த குழந்தைகளின் முதுகு தண்டு வடம் பாதிக்கப்படும் அபாயமும், சதைபிடிப்பால் பாதிக்கப்படும் அபாயமும் இருப்பதாக சுகாதார ஆய்வு நிறுவன கமிட்டி தலைவர் பி.கே.ராவ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் குழந்தைகள் நலனில் அக்கறை காட்டும் வகையில் வெளிநாடுகளில் இருப்பதுபோன்று பாடத்திட்டங்களை நவீனப்படுத்தி, புத்தகங்களை குறைப்பதன் மூலம் பிஞ்சுகளின் சுமையைக் குறைக்க அரசு முன்வருமா?

வியாழன், 6 ஜனவரி, 2011

குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!



குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் இன்று செல்பேசியும் இடம் பெற்றுவிட்டது. அம்மாவுடைய போன், அப்பாவுடைய போன் மற்றும் மாமா, மாமிகள் வைத்திருக்கும் செல்போனை அந்தக் குழந்தைகள் வாங்கி பெரியவர்கள் பேசுவதுபோலவே காதில் வைத்து ஹலோசொல்வதை பெரும் பேறாகக் கருதி உள்ளம் மகிழ்வார்கள்.
என்னமா பேசுது பாரு; அதுல என்னென்ன ஆப்ஷன் இருக்குன்னு எனக்குத் தெரியாது. அதுக்கு நல்லா தெரியும்பெருமை பொங்க தன் பிள்ளை செல்போன் நோண்டுவதை பெற்றோர் ரசிப்பார்கள்.

குழந்தை முன் செய்யக் கூடாதவைகள்

 குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாதசொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால்அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம்.

புதன், 5 ஜனவரி, 2011

உங்கள் குழந்தையின் உணர்வைப் புரிந்து கொள்ளுங்கள்!


குழந்தைகளுக்கு வகைவகையான உணவுகளை ஆக்கித் தருகிறீர்கள். விதவிதமான உடைகளை வாங்கித் தருகிறீர்கள். இது போதுமா நிச்சயம் போதாது. குழந்தையின் மன உணர்வுகளைப் புரிந்துக்கொண்டு அதற்கேற்ப நாம் நடந்து கொள்ளவேண்டும். ஆனால் நாம் என்ன நினைக்கிறோம்?நம்முடைய இயல்புகளைப் புரிந்துக்கொண்டு அதற்குத் தகுந்தபடி குழந்தை இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம். இது தவறானது. குழந்தைகள் பெற்றோர்களிடம் பாதுகாப்பை மட்டுமல்லபரிவையும் எதிர்பார்க்கிறார்கள். அன்புடன் அக்கறையையும் தங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மையையும் எதிர்பார்க்கிறார்கள். உங்கள் குழந்தைகளை நீங்களே புரிந்து கொள்ளாவிட்டால் பின்பு யார் புரிந்து கொள்ளப் போகிறார்கள்அடுத்தவர்களின் உணர்வுகளை மதிக்கும் தன்மை மனிதர்களிடம்காணப்படுகிற ஒரு விசேஷப் பண்பு. உங்கள் குழந்தை உங்கள் சக மனிதர்தான். அடிமைகளைப் போல அவர்களை நடத்தாமல் நண்பர்களிடம் நடந்து கொள்வதைப் போல நடந்து பாருங்கள். உங்கள் குழந்தை வளர்வதை உணர்வீர்கள்.

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

உங்கள் குழந்தை மேதையாக வளர வேண்டுமா?

சின்ன வயது முதல உங்கள் குழந்தையை அறிவுள்ளதாக வளர்க்க முடியும்.எவ்வளவுக்கு எவ்வளவு சின்ன வயதிலேயே தொடங்க முடியுமோ,அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.

**
படிப்பை ஒரு விளையாட்டாகச் சொல்லிக் கொடுங்கள்.

**
தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரம் குழந்தையுடன் இருப்பது என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

**
இரவுச் சாப்பாட்டின் போதுகுழந்தையின் வகுப்புப் பற்றியும்,பாடத்தைப் பற்றியும்,நண்பர்கள் பற்றியும் பேச்சுக் கொடுங்கள்.

**
அகராதியில் தினசரி ஒரு வார்த்தை கற்றுக் கொள்ளப் பழக்குங்கள்.

**
வெளியூருக்குப் போனால் அவ்வூர் இருக்கும் இடம், போகும் வழி பற்றி விளக்குங்கள்.

.**
குழந்தையை மனப்பூர்வமாகப் பாராட்டுங்கள்.மிகச் சிறிய சுலபமான விஷயத்திற்குப் பாராட்டுவது தவறு.

**
ஒரு புதிய விஷயத்தைக் குழந்தைக்குச் சொல்லித்தர வேண்டுமானால் ,அதற்குப் பழக்கமான வேறொன்றைக் காட்டி விளக்குங்கள்.

**
எங்காவது செல்லும் போது,வழியில் காணப்படும் அறிவிப்புப் பலகைகளுக்கு விளக்கம் கொடுங்கள்.

**
சாலை விதிகளைப் பற்றிச் சொல்லிக் கொடுங்கள்.

**
குழந்தையிடம் அடிக்கடி சொல் விளையாட்டு விளையாடுங்கள்.

**
ஓரிடத்துக்குப்போய் வந்த பின் அதைப்பற்றி வர்ணித்துப் பேசக் குழந்தையைக் கேளுங்கள்.

**
குழந்தைகளை அடக்காமல் ,நிறையக் கேள்விகேட்க இடம் கொடுக்க வேண்டியது அவசியம்.புரிகிற மாதிரி முழுமையாகப் பதில் கொடுங்கள்.

**
படிப்பது ஒரு சந்தோசமான விஷயம் என்பதை உங்கள் குழந்தை அறியும் வண்ணம் படியுங்கள்.
**முக்கியமாக குழந்தைகளை முடிந்த அளவு அடிப்பதை தவிர்த்து விடுங்கள், மிரட்டுங்கள் ஒரு அளவிற்கு, தயவு செய்து அடிக்காதீர்கள்.