OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 28 பிப்ரவரி, 2011

ஈமானை இழந்த ம.ம.கட்சி


மேற்கண்ட தமுமுக வின் அறிவிப்பு பலகையில் எழுதி இருக்கும் வாசகங்கள் என்னவென்று தெரிகின்றதா?

கடலூர் மாவட்ட ஆயங்குடி தமுமுக அறிவிப்பு பலகையில், மவ்லூது ஓதுவதி தப்ரூக் வழங்கப்படும் வாழைப்பழம் மற்றும் லட்டு, பூந்தி, ஜிலேபி போன்ற பொருட்களுக்கு இந்த ஆண்டு ஒரு தலைக்கட்டிற்கு ரூபாய் 250 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அதை ம.ம.கட்சி தலைவர் புர்ஹானுதீனிடம் ஒப்படைக்குமாறும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதை தான் நீங்கள் மேலே உள்ள அறிவிப்பில் பார்க்கின்றீர்கள்.

இவர்கள் தேர்தலில் சீட்டுகேட்டு 3 தொகுதி பெற்று மானம் இழந்து நிற்பது ஒருபுறமிருக்க, மானத்தை இழந்தது போல, தற்போது ஈமானையும் இழந்து நிற்கின்றனர்.

இறைவனுக்கு இணைகற்பிக்கும் மவ்லூது பாடல்கள் பாடப்பெற்று அதற்கு பிறகு வழங்கப்படும் தப்ரூக்கிற்கு வசூல் செய்து தீமைக்கு ஒத்துழைப்புக்கொடுத்து ஈமானை இழக்கும் நிலைக்கு இவர்கள் ஆளாகியுள்ளனர்.

இவர்களுக்கு நபிகளாரின் ஒரு எச்சரிக்கையை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு முந்தைய சமுதாயத்தார் மத்தியில் அல்லாஹ் அனுப்பிய ஒவ்வோர் இறைத் தூதருக்கும் அவருடைய சமுதாயத்திலேயே சிறப்பு உதவியாளர்களும் நண்பர்களும் இல்லாமல் இருந்ததில்லை. அவர்கள் அந்த இறைத்தூதரின் வழிமுறையைக் கடைப்பிடிப் பார்கள்; அவரது உத்தரவைப் பின்பற்றி நடப்பார்கள். அந்தத் தோழர்களுக்குப் பிறகு சிலர் வருவார்கள். அவர்கள் தாம் செய்யாதவற்றைச் சொல்வார்கள். தமக்குக் கட்டளையிடப்படாத வற்றைச் செய்வார்கள். ஆகவே, யார் இ(த்தகைய)வர்களுடன் தமது கரத்தால் போராடுவாரோ அவர் இறைநம்பிக்கையாளர் ஆவார். யார் இவர்களுடன் தமது நாவால் போராடுவாரோ அவரும் இறைநம்பிக்கையாளர் ஆவார். யார் இவர்களுடன் தமது உள்ளத்தால் போராடுவாரோ அவரும் இறைநம்பிக்கையாளர்தாம். இவற்றுக்கப்பால் இறைநம்பிக்கை என்பது கடுகளவுகூட கிடையாது

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
முஸ்லிம் – 80

ஒரு தீமையைக்காணும்போது அதை கையால் தடுக்கமலோ, அல்லது நாவால் தடுக்காமலோ, அல்லது குறைந்தபட்சம் மனதாலாவது வெறுத்து ஒதுக்காமலோ யார் இருக்கிறாரோ அவருடைய உள்ளத்தில் ஈமான் என்பது கடுகளவுகூட இல்லை என நபிகளார் எச்சரித்திருக்க, இவர்கள் மவ்லூது என்ற அப்பட்டமான இணைவைத்தலுக்கு ஆதரவாக தப்ரூக் என்னும் சீரணி வாங்கித்தர தங்களது நிர்வாகிகளே களமிறங்கி. தங்களது அறிவிப்பு பலகையிலேயே அறிவிப்பு வெளியிடுகிறார்கள் என்றால் இவர்களுடைய ஈமானின் தரத்தை இந்த நபி மொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

இந்த ம.ம.கட்சியின் நிர்வாகியிடத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது தவ்ஹீத் காரர்கள் இருந்ததால்தான் தங்களது இயக்கம் வளரவில்லை எனவும், அவர்களை துரத்தியடித்த பிறகுதான் தங்களது இயக்கம் அசூர வளர்ச்சிகண்டதாகவும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். மவ்லூது ஓத தப்ரூக் வழங்குவதற்கு பணம் வசூலித்து தருபவருடைய கருத்து இதுவாகவல்லாமல் வேறு என்னவாக இருக்கும்? அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

-நுஃமான்

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

உலககோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானிடம், தமிழர்களின் பரம எதிரி இஅலங்கை படுதோல்வி.

தற்பொழுது, எங்கு பார்த்தாலும் இந்த உலககோப்பை கிரிக்கெட் மோகம் தொற்றி கொண்டுள்ளது, எவனை பார்த்தாலும் என்ன ஸ்கோர் எத்தனை விக்கெட் இதை பற்றிதான் பேசிகிட்டு இருக்கானுங்க.............
இந்த வலைபூவிலும் அதனை பற்றி எழுதிக்கொண்டுதான் இருகிறார்கள். என்ன வழக்கம் போல ஒன்றிரண்டு பேரை தவிர யாருமே இந்த பாகிஸ்தான் வெற்றிபெற்றால் மட்டும் எழுதுவதே கிடையாது இவங்களுக்கு ஏன் இந்த கொலை வெறின்னு தெரியலை. சரி அவனுங்களை விடுவோம் அவினுங்க எல்லாம் நடுநிசி நாய்கள் போன்ற செக்ஸ் படத்துக்கு விமர்சனம் எழுததான் லாயக்கு.

பாகிஸ்தான் Vs இலங்கை, 
நேற்றைய ஆட்டத்திற்கு முன்பாக, பல பாசிச பத்திரிகைகள் பாகிஸ்தான் அணி இலங்கையை எதிர்த்து வெல்லுமா???????? என்று மிகபெரிய கேள்விகளையும், கிண்டல்களையும் அவர்கள் பத்திரிகளில் எழுதி கிழித்தார்கள், அவர்கள் நினைத்து கொண்டார்கள், பாகிஸ்தானியரும் இவர்களை போன்று சாம்பார் தின்கிற ஆளுகள் என்று..............சரி நாம போட்டிக்கு வருவோம். 

நேற்றைய தினம் கொழும்புவில் நடைபெற்ற உலககோப்பையின் 10 வது போட்டியில் பாகிஸ்தானும் இலங்கையும் மோதின, இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் பூம் பூம் அப்ரிடி பேட்டிங் தேர்வுசெய்தார். 


உணவுக்காக... ஒரு உலக மகா யுத்தம்.

உலகம் இதுவரை இரண்டு உலகப் போர்களை சந்தித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜெர்மன், இங்கிலாந்து உட்பட ஏராளமான நாடுகள், இந்தப் போர்களில் பங்கேற்றன. நிலத்திற்காகவும், அதிகார பலத்தை நிரூபிக்கவும் மட்டுமே இவை நடந்தன. 1945ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்த பின்னர், எந்த நாடுமே பெரிய அளவில் சண்டைக்கு தயாராகவில்லை. ஆனால் மூன்றாவதாக ஒரு உலகப் போர் ஏற்படப் போவதாக வரலாற்று ஆசிரியர்களும், நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுவும் உணவுக்காக போர் என்பது பெரிய கொடுமை. தங்கள் நாட்டில் ஏற்படும் உணவு பஞ்சத்தை தீர்ப்பதற்காக எல்லா நாடுகளும் இந்த யுத்தத்தில் ஈடுபடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஒவ்வொரு நாடும் வளர்ச்சி அடைவதற்காக பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றன. தொழில் துறையில், பண பலத்தில் தன்னிறைவு பெறுவது மட்டுமே வளர்ச்சி என்று நினைத்து, அதற்காக கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இதற்காக அவர்கள் முதலில் அழிப்பது விவசாய நிலத்தையும், இயற்கை வளங்களையும்தான். நாட்டின் வளர்ச்சிக்காக இன்று இயற்கையை அழிக்கும் நாடுகள், வரும் காலங்களில் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க உள்ளன. விவசாய நிலங்களின் அளவு குறையும்போது உணவு உற்பத்தியும் தானாகவே குறைந்து விடும். இதனால் நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படும். நவீன விவசாயம் மூலம் உற்பத்தியை பெருக்கினாலும், இயற்கைக்கு ஈடுகொடுக்க முடியாத நிலை ஏற்படும். இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலைக்கு ஒரு கிலோ அரிசி விற்கப்படும். அதையும் கொடுக்க மக்கள் தயாராக இருந்தாலும் அரிசி கிடைக்காது. இந்த நிலை அரிசிக்கு மட்டுமல்ல, அனைத்து உணவுப் பொருட்களுக்கும்தான். இதுபோன்ற நிலை வரும்போது மக்கள் அனைவரிடமும் தங்கம் அதிகமாக இருக்கும். ஆனால் உணவுப் பொருட்கள் இருக்காது.

இப்போது மிகப்பெரிய பிரச்னைகளாக பேசப்படும் அணுசக்தி, எரிபொருள் போன்றவை அனைத்து நாடுகளிடமும் இருக்கும். ஆனால் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வதென்று தெரியாது. இதை நம்புவதற்கு நமக்கு தயக்கம் ஏற்பட்டாலும், இந்த நிலை வரும் என்கின்றனர் நிபுணர்கள். அப்படி ஒரு நிலை ஏற்படும்போது உணவுக்காக பிற நாடுகளுடன் போரிட வேண்டிய கட்டாயத்திற்கு அரசாங்கம் தள்ளப்படும்.

தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்கும் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளும், பெட்ரோல் போன்ற எரிபொருள் வளம் மிகுந்த அரபு நாடுகளும் 90 சதவீதத்துக்கும் அதிகமான உணவு பொருட்களை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கின்றன. இந்த நாடுகளில் உள்ள நிலங்களில் விவசாயம் செய்ய முடியாது. இயற்கையும் அதற்கு ஒத்துழைக்காது. உணவு பொருட்களை உற்பத்தி செய்த இந்தியா போன்ற விவசாய நாடுகளும் தற்போது தொழில்நுட்பத்திற்கு மாறி வருகிறது. இதனால் விவசாயம் தடைபடும்போது, உற்பத்தி பாதிக்கப்பட்டு ஏற்றுமதியும் தடைபடும். இதனால் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்வதை இந்த நாடுகள் நிறுத்தும்போது, இதனால் பாதிக்கப்படும் வளர்ந்த நாடுகள், இந்த நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும்.

இயற்கையாகவே உள்ள விவசாய நிலங்களை வறண்ட நிலமாக மாற்றுவதற்கு 2 வாரங்கள் போதும். ஆனால் வறண்ட நிலத்தை விவசாய நிலமாக மாற்றுவதற்கு பல ஆண்டுகள் உழைக்க வேண்டும். இதையும் வரும் காலங்களில் செய்ய முடியாத அளவிற்கு இயற்கை மாறி விடும். இதை உணராமல் விவசாய நிலங்களையும், வனங்களையும் இன்றைய தேவைக்காக அழித்து வருகிறோம்.

ஆசியா, ஆப்ரிக்காவில் அதிக பாதிப்பு

உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்கள், ஆசிய கண்டத்தில் வசிக்கின்றனர். உணவு தட்டுப்பாட்டால் அதிகம் பாதிக்கும் நாடுகளும் ஆசியாவில்தான் இருக்கும்.
ஆப்ரிக்காவில் 40 சதவீத விவசாய இடங்கள் முற்றிலும் காணாமல் போய்விட்டது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் ஆப்ரிக்கா கண்டத்தில் 2025ம் ஆண்டில் 25 சதவீத மக்களுக்கு மட்டுமே உணவு பொருட்கள் கிடைக்கும் என்று கானா நாட்டில் உள்ள யூ.என்.யூ என்ற அமைப்பு அறிவித்துள்ளது.

மீண்டும் காலனி ஆதிக்கம்

வளர்ந்த நாடுகள், பிற நாடுகளில் நிலங்களை வாங்கி பயன்படுத்துவதால் மீண்டும் காலனி ஆதிக்கம் ஏற்படும் என ஜேக்யூ டயோப் என்ற வரலாற்று ஆசிரியர் எச்சரித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘‘தங்கள் நாடு வறுமையில் வாடும்போது, வெளிநாட்டினரின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் மட்டும் உணவு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும். இதனால் மக்கள் கலவரத்தில் ஈடுபட்டு உணவு பொருட்களை கைப்பற்றுவார்கள். இந்த பிரச்னை வளர்ந்து போரில் முடியும். பின்னர் வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டு மக்களின் தேவைக்காக ஏழை விவசாய நாடுகளை ஆக்கிரமிக்கும் போரில் ஈடுபடும். வெளிநாடுகளில் லீசுக்கு இடங்களை வாங்கியுள்ள அரபு நாடுகள், அதற்கு பதிலாக பெட்ரோல், காஸ் போன்ற எரிபொருட்களைதான் கொடுக்கின்றனர். பண்டைய காலங்களில் வணிகம் செய்ய வந்த இங்கிலாந்து நாட்டினர், இதேபோல பண்டமாற்று முறையில்தான் நாட்டையே அடிமைப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக வங்கி எச்சரிக்கை

உணவுப் பொருட்கள் விலை ஆபத்தான அளவிற்கு உயர்ந்து வருகிறது. மளிகை பொருட்களுடன் காய்கறி விலைகளும் உயர்ந்து விட்டதால், கடந்த 7 மாதத்தில் மட்டும் வளரும் நாடுகளில் 4.4 கோடி பேர் வறுமை கோட்டுக்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இது கவலை அளிக்கும் செய்தி என்று உலக வங்கி தலைவர் ராபர்ட் ஜோலிக் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலும் லீசுக்கு இடம்

அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் (ஆம்வே) இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நிலங்களை பல ஆண்டுகளுக்கு லீசுக்கு எடுத்துள்ளது. இங்கு விவசாயம் செய்து அதிலிருந்து கிடைக்கும் பொருட்களை கொண்டு சோப்பு, முக அழகு கிரீம், டூத் பேஸ்ட் மற்றும் வாசனை திரவியங்களை தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்கிறது.

கருகிப்போன பூமி பந்து

1969ம் ஆண்டு நிலாவுக்கு சென்ற நீல்ஆம்ஸ்ட்ராங், நிலாவில் இருந்து பூமியை பார்க்கும்போது பச்சை நிற பந்துபோல தெரிகிறது என்றார். ஆனால் இப்போது விண்வெளிக்கு சென்று திரும்பியவர்கள், தீயில் கருகிப்போன பந்து மாதிரி பூமி தெரிகிறது என்கின்றனர். கடந்த 40 ஆண்டுகளில் உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இயற்கையை வேகமாக அழித்து வருகின்றன.

வெளிநாட்டில் வாடகைக்கு விவசாய இடம்

சவுதிஅரேபியாவில் விவசாய நிலங்களே இல்லை என்பதால், ஆப்பிரிகா கண்டத்தில் உள்ள கென்யா என்ற ஏழை நாட்டில் பல லட்சம் ஹெக்டேர் நிலங்களை லீசுக்கு எடுத்துள்ளன. அங்கு விவசாயம் செய்து அதில் கிடைக்கும் உணவு பொருட்களை தங்கள் நாட்டிற்கு கொண்டு செல்கின்றன. ஆசியாவுக்கும், ஆப்பிரிக்காவுக்கும் இடையில் உள்ள மடகாஸ்கர் தீவை தென்கொரியா லீசுக்கு எடுத்து மக்காச்சோளம் பயிரிட்டு, அதிலிருந்து பயோ ப்யூல் தயாரித்து தங்கள் நாட்டிற்கு கொண்டு செல்கின்றனர். உக்ரைனில் 2.5 லட்சம் ஹெக்டேர் நிலங்களை லிபியா லீசுக்கு எடுத்துள்ளது. இதேப்போல, சூடான், எத்தியோப்பியா, எகிப்து, கசகஸ்தான், கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளில் உள்ள விவசாய இடங்களை வெளிநாடுகளுக்கு லீசுக்கு கொடுத்துள்ளன. இதேப்போல பல அரபு நாடுகள் வெளிநாடுகளில் இடங்களை வாங்கி விவசாயம் செய்கின்றன. மேலும் பல நாடுகள் வெளிநாடுகளில் இடங்களை வாடகைக்கு பிடிக்க மிகப்பெரிய திட்டங்களை தயாரித்துள்ளன.

60 லட்சம் குழந்தைகள் பலி

அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகிய இரண்டும் உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு அடிப்படைக் காரணம். விலை 2 சதவீதம் கூடும்போது ஒவ்வொரு முறையும் ஒரு சதவீத மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் தள்ளப்படுகின்றனர் என்று ‘யுனிசெப் ‘ அறிவித்துள்ளது. உணவு பொருட்களின் கடுமையான விலை உயர்வு, தட்டுப்பாடு மற்றும் வறுமையால் உலகில் ஆண்டுக்கு 60 லட்சம் குழந்தைகள் இறக்கின்றனர். ஒரு நாளில் மட்டும் 17 ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றனர். 80 கோடி பேர் சத்துக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ‘யுவான்’ என்ற ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.


Thanks To Mr.Ghouse Cuddalore Port

வியாழன், 24 பிப்ரவரி, 2011

இது இந்துகளுக்கு அல்ல......பகுத்தறிவு இல்லாதவர்களுக்கு

றைவனின் படைப்பில் சிறந்தது மணித  இனமே. அதற்கு காரணம் மனிதனுக்குள்ள பகுத்தறிவே.  அந்த பகுத்தறிவு மூலமே படைப்பினங்களை ஆராய்ந்து, அதன் மூலம் படைத்தவனை அறிந்து அவனை வணங்குகிறோம். நாம் வணங்கும்  இறைவன் எல்லாவகையிலும் சிறந்தவனாக, எவருக்கும்-எதற்கும் ஒப்பற்றவனாக இருக்கவேண்டும். இத்தகைய இறையிலக்கனத்தை  மனிதர்களில் பெரும்பான்மையோர் மறந்த காரணத்தினால்தான், மனிதனை விட பலவீனமான  இன்னும் சொல்லப்போனால் மனிதனால் உருவாக்கப்பட்டவையே அவனுக்கு கடவுளாக கற்பித்துக் கொண்டான். 

10 வகையான கணினி எலியின் தொல்லைகள்..............
இன்று உலகில் எலிகள் அதிகம் இருக்கோ இல்லையோ, இந்த கணினி எலிகளின் தொல்லை தாங்க முடியலை, இன்று நாம் எல்லோருடைய வீடுகளிலும் எப்படியும் இது இடம்பெற்றுவிடுகின்றது, அதனுடைய பயன்கள் பலர் அறிந்து வைத்திருந்தாலும், பெரும்பாலானோர் இன்னும் சரியாக இதை பயன்படுத்துவதாக தெரியவில்லை. அதன்லாதான் இந்த பதிவு..................இதை நான் www.computerhope.com என்கின்ற வலைத்தளத்தில் இருந்து எடுத்தேன். நம் அனைவருக்கும் உபயோகப்படும் என்பதற்காக. 

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

சட்ட படிப்பு படிக்க CLAT நுழைவு தேர்வு


இந்தியாவில் உள்ள 11 சட்ட பல்கலை கழகங்களில் சட்ட படிப்பு படிக்க CLAT (Common Law Admission Test) என்ற நுழைவு தேர்வு நடத்தப்படுகின்றது. இதற்க்கான விண்ணப்ப படிவம் தற்போது விணியோகிக்கப்பட்டுகொண்டு இருக்கின்றது. பொதுவாகவே இந்த நுழைவு தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைவு, சுமாராக படித்தாலே இந்த தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம். தற்போது பெரிய அளவில் மாணவர்கள் சட்ட படிப்பில் ஆர்வம் காட்டாததால் இந்த தேர்வில் அதிகம் போட்டிகள் இருக்காது. சட்ட படிப்பில் ஆர்வம் உள்ள மாணவர்கள் இந்த தேர்வை எழுதி எளிதில் சட்ட படிப்பு படிக்கலாம்.

சீதைக்கு ராமன் சித்தப்பாவா?


'விடிய விடிய கதை கேட்டு, விடிஞ்சப்புறம் சீதைக்கு ராமன் சித்தப்பாவா?ன்னு கேட்குறியே என்று சிலர் சொல்வார்கள். இது உவமைக்காக சொல்லப்பட்டாலும், சீதைக்கு ராமன் உடன்பிறந்த அண்ணன் என்ற செய்தி உங்களுக்குத் தெரியுமா? இது என்ன புதுக்குண்டு என்கிறீர்களா?

இது திரைவிமர்சனமில்லை...........ஒரு மதத்தின்மீது போடபட்டிருக்கும் திரையின் விமர்சனம்இது திரைவிமர்சனமில்லை...........ஒரு மதத்தின்மீது போடபட்டிருக்கும் திரையின் விமர்சனம்

திங்கள், 21 பிப்ரவரி, 2011

இந்தியாவின் கேவலமான கிரிக்கெட் மோகம்

.


வட நாட்டுக்காரங்க எப்படி தங்கள் பிள்ளைகளுக்கு பெயர்வைகிறார்கள்

இதை பற்றிய என்னுடைய நண்பர் எனக்கு இமெயிலில் அனுப்பி இருந்தார் அதை அப்படியே இங்கே பதிவு செய்து உள்ளேன். நேரமில்லை என்ற காரணத்தால், அதிகமாக பதிவு போட முடியவில்லை, சரி சும்மா விட்டாலும் சரி வரத்து என்பதால் இந்த காப்பி விரைவில் முக்கிய பதிவுடன் வருகின்றேன்..........

சனி, 19 பிப்ரவரி, 2011

குறட்டை / Snoring‏

குறட்டையால்... அருகிலிருப்பவர்க்கு மட்டும‌ல்ல குறட்டை விடுபவருக்கும்கூட‌ இடைஞ்சல்தான் என்பதையும், எளிதாய் தவிர்க்கும் முறைகளையும் விளக்கமாய் சொல்லியிருக்கும் காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவர், ரவிராமலிங்கம் அவர்களுக்கு நன்றி.

குறட்டையை தடுக்க வழிகள்

நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.

ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.

இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே. கே. ஆர். காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரவிராமலிங்கம். அவர் கூறியதாவது:-

காரணங்கள்:

நாம் தூங்கும் போது தலைக்கு வைத்து கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக உயரமாக வைத்துக் கொள்வதால் ஏற்படும். சில வகையான ஒவ்வாமை காரணமாக சுவாசக் குழாயில் ஏற்படும் சளி, சிலருக்கு உடல் பருமன் காரணமாகவும் குறட்டை ஏற்படுகிறது.

முழு தூக்கம் இருக்காது:

யாராவது குறட்டை விட்டு தூங்கினால் அவனுக்கென்ன நிம்மதியாக தூங்குகிறான் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு. குறட்டை விடுபவர் நன்றாக தூங்க முடியாது என்பதுடன் பல பாதிப்பு நிலைக்கும் தள்ளப்படும் நிலையும் வரலாம். குறட்டை விடுபவர் மனம் தெளிவாக இருக்காது.

உடல் மிகவும் களைப்பாக இருக்கும் உடலில் சக்தி குறைவாக இருக்கும். தெளிவற்ற சிந்தனை வரும். அதிகமாக கோபம் வரும். இதுமட்டுமின்றி உடலுக்கு போதிய அளவு பிராணவாயு கிடைக்காது. இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் பக்கவாதம் போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

அத்தோடு மிக தீவிரமாக குறட்டை விடுபவர்கள் உறக்கத்திலேயே இறந்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதனால் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை:

சுவாசப் பாதையில் தேவையின்றி சதை வளர்ந்தால் சீராக காற்று போக வழியின்றி குறட்டை ஏற்படலாம். எனவே சதை வளராமல் இருக்க உடல் எடையில் கவனம் வேண்டும். பக்க வாட்டில் படுக்க வேண்டும். 4 அங்குல உயரத்திற்கு மேல் தலையணை வைத்து தூங்க கூடாது.

சாப்பிட்ட உடன் படுக்க போக கூடாது. புகை பிடிக்க கூடாது. அளவுக்கு அதிகமான மருந்துகள் சாப்பிடக் கூடாது. மருந்து அருந்த கூடாது. அத்தோடு இதனால் பாதிக்கப்படுபவர்கள் தொண்டை மூக்கு, காது நிபுணரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

3 வகை நோயாளிகள்:

குறட்டையின் தீவிரத்தன்மையைப் பொறுத்து நோயாளிகளை 3 குழுக்களாக வகைப்படுத்தலாம்.

1. மெல்லிய குறட்டை- அடுத்திருக்கும் அறையில் ஒலியைக் கேட்க முடியும். மூச்செடுப்பதில் சிரமம் இல்லை.

2. உயரமான குறட்டை- கதவு மூடி இருந்தாலும் கூட அடுத்துள்ள அறையில் ஒலியைக் கேட்கலாம்.

3. உறங்கும் போது மூச்சுத் திணறுதல், நேரத்துக்கு நேரம், மூச்சு 10 வினாடிகளுக்கு மேலாக நிறுத்தப்படும்.

மாரடைப்பு அபாயம்:

7 மணி நேர நித்திரையின் போது 30 முறை மூச்சு திணறல் ஏற்பட்டால் இது ஆபத்தானதாக இருக்கலாம். பெருமூச்செடுத்த வண்ணம், நேரத்துக்கு நேரம் நோயாளி தூக்கம் கலையலாம்.

ரத்தத்தில் காணப்படும் குறைவான செறிவுடைய ஆக்சிஜன் இதயம், சுவாசப்பை மற்றும் மூளையை பாதிக்கலாம். ரத்த அழுத்தம் உயர்வடைவதால், மாரடைப்பு ஏற்படும்.

கட்டிலில் மரணம் கூட ஏற்படலாம். இந்த நோயாளிகள் பகலில் கூட நித்திரைத் தன்மையை, சோம்பேறித்தனத்தை உணர்வார்கள். டாக்டர் தூக்க வரலாற்றை சோதிக்கும் போது, இந்த பிரச்சினை பற்றி கூடுதலாக அறிந்த நோயாள ரின் துணையும் இருக்க வேண்டும்.

ஆபத்தான நோய்:

டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்சினைகள் ஏற்படும் போதோ சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்சினைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும். அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது.

கழுத்தைச் சுற்றி அளவுக்கு அதிகமான தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப் படுகிறது.

ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது கண்கள் வேகமாக அசையும், அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளியேறும். இதற்கு `அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே' என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு நேரத்திற்கு 18-க்கும் மேற்பட்ட முறை நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளிவருகிறது.

குறட்டை விடும் போது திடீரென நின்று திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால் நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து இதய அடைப்பு திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.

இந்தியாவில் அதிகம் பேர் பாதிப்பு:

இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து `ஸ்லீப் அப்னியே' நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன.

உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதாப என்பதை அவர்கள் கண்டறிந்து விடுவர். காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத் திக்கொள்ளலாம். டான்சில் அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.

குறட்டையை குறைக்க:

ஆக்சிஜனை உடலில் தேவையான இடத்திற்கு எடுத்து செல் லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.

குறட்டையைக் குறைக்க மேலும் சில கருவிகள் விளம்பரப் படுத்தப்படுகின்றன. விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என பல வகைகள் உள்ளன. குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு திருப்பி படுக்க வைத்தாலே குறட்டை ஒலி குறையும்.

ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை.

யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தினமும் 45 நிமிடம் யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடை பயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால் இளவயது பருமனைக் குறைக்கலாம். திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.

சிகிச்சை முறை:

குறட்டை பிரச்சினையை அறுவை சிகிச்சை மூலம் குணப் படுத்தலாம். எல்.ஏ.யு.பி. என்னும் லேசர் சிகிச்சை மூலம் குறட்டையைக் குறைக்க முடியும். குறட்டைக்கு முதல் சிகிச்சை உடல் எடையை குறைப்பதுதான்.

அடுத்து காற்றுச் செல்லும் பாதையிலுள்ள அடைப்பு அதிகமாக இருந்தால் மூக்கு, உள்நாக்கு, தொண்டை போன்ற பகுதிகளை பரிசோதித்து அடைப்புள்ள இடத்தைக் கண்டறிந்து லேசர் கிச்சையின் மூலம் அடைப்பை சரி செய்யலாம்.

காற்றடைப்பை கண்டறிய மருத்துவ மனையில் நவீனமான சிலிப்லேப் என்கிற முழுதும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட தூங்கும் அறையுள்ளது. உடலில் ஒன்பது இடங்களில் கம்ப்யூட்டரோடு இணைக்கப்பட்ட கேபிள்கள் பொருத்தப்பட்ட‌ நிலையில், நோயாளியை ஒரு இரவு முழுவதும் தூங்க விட்டு அவர் தூங்குவது, குறட்டை விடுவது எத்தனை முறை விழிப்பு வந்து புரண்டு படுத்தார், எந்தப் பக்கமாக படுக்கும்போது குறட்டைகளின் தன்மை எப்படியிருந்தது. ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, மூளைக்கும், மார்புக்கும் காற்று சென்று வந்த நிலை, அடைப்பு எங்கேயிருக்கிறது என்பதை துல்லியமாகக் கண்டறிந்து விடலாம்

முற்றிய நிலையிலிருக்கும் நோயாளிக்கு ஆபரேஷன் செய்தாலும் சரியான தீர்வளிக்காது என்பதால் சிறிகிறி என்கிற மாஸ்க்கை ஒவ்வொரு நாளும் தூக்கத்தின்போதும் அணிந்துகொள்ளத் தருகிறோம். அதை அவர்கள் அணிவதால், அந்த மாஸ்க்கிலுள்ள ஆக்சிஜன் அடைப்புள்ள இடத்தில் வேகமாக அழுத்தம் கொடுத்து அடைப்பை விலக்கி, காற்று நன்கு செல்ல உதவுகிறது. இதனால் அவர்கள் குறட்டை பிரச்சினையில்லாமல் ஆழமான தூக்கத்தை அனுபவிக்க முடிகிறது.

என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம்


Thanks to MR.Mohamed Ghouse cuddalore Port.

புதன், 16 பிப்ரவரி, 2011

உயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா?valentineகிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளன.
எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.
நமது இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல! மேற்கத்திய கலாச்சாரத்தை இங்கும் கடைபிடிக்கின்றனர்,
இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதரண விஷயம் என்பதையும் தாண்டி ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு கவுரவமான விஷயமாக மாறி விட்டது.

பள்ளி சீருடையும், பாலியியல் குற்றங்களும்

வருங்காலத் தூண்கள், எதிர்கால இந்தியா என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டாலும், நம் குழந்தைகள் வாழ, ஒரு ஆரோக்கியமான சமூக சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவில்லை. குறிப்பாக பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளைப் பார்த்தால், ஆக., 15 அர்த்த ராத்திரியில் அறிவிக்கப்பட்ட சுதந்திரம் ஆண்களுக்கு மட்டும்தான் என்றே நம்ப வேண்டியிருக்கிறது.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களையும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்க்க கோரி – அவசர தந்தி!சோனியா காந்தி, ராஹுல் காந்தி, தமிழக முதல்வர் கருணாநீதி ஆகியோருக்கு அனுப்ப வேண்டிய தந்தி வாசகம்:
Please urge the government to include emigrants also in Indian population final total

அனுப்ப வேண்டிய முகவரிகள்:
Smt. Sonia Gandhi
10, Janpath
New Delhi.
Tel. (O) : 23792263, 23019080
Tel. (R) : 23014161, 23014481
Fax : 23018651
Rahul Gandhi, MP
12, Tughlak Lane
New Delhi
Tel. (O) : 23019056, 23019080
Tel. (R) : 23795161
Fax (R) : 23012410
Tamil Nadu CM
New No.15, Old No.18,
4th Street, Gopalapuram,
Chennai 600086
பிரதமர், மற்றும் குடியரதசு தலைவருக்கு அனுப்ப வேண்டிய தந்தி வாசகம்
Please include emigrants also in Indian population final total
அனுப்ப வேண்டிய முகவரிகள்:
The Prime Minister’s Office
South Block, Raisina Hill,
New Delhi,
India-110 101.
Telephone: 91-11-23012312.
Fax: 91-11-23019545 / 91-11-23016857
The President of India
Rashtrapati Bhavan
New Delhi – 110 004

Source:  www.tntj.net

திங்கள், 14 பிப்ரவரி, 2011

இந்திய தேர்தல் முறையும், வழிமாறும் இஸ்லாமிய இயக்கங்களும்

இப்படியொரு தலைப்பை போட்டுவிட்டோம், இனியாரையாவது பற்றி குற்றம் சொல்லியே ஆக வேண்டும் என்று நீங்கள் எல்லாம் நினைப்பது எனக்கு தெரிகிறது, இருந்தாலும் மேல படிங்க கண்டிப்பாக இது யாரையும் குறை கூறவோ குற்றம் சுமத்தவோ இல்லை, உண்மையை மக்களுக்கு புரிய வைபதர்க்கே. 


முதலில் இன்றைய இந்திய தேர்தல் முறையை எடுத்துகொள்வோம், உண்மைலேயே மக்கள் போடும் ஓட்டிற்கு மதிப்பு இருக்கா யென்றால், கண்டிப்பாக இல்லை, மக்களும் ஏதோ கடைமைக்காக தான் ஒட்டு போடுகிறார்கள். அது ஏன் தெரியுமா? ஏனென்றால் இந்தியாவில் நடைபெறுவது ஒரு ஜனநாயக முறை அரசியல் இல்லை என்பதே மக்கள் அனைவரும் அறிந்த ஒன்று. உண்மையான ஜனநாயகம் எது என்பதை பற்றி நாம் இங்கு முதலில் பார்போம்

சனி, 12 பிப்ரவரி, 2011

மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ?

மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ?மின்மினி பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். மின்மினி பூச்சிகள் Coleoptera என்ற குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகள் ஆகும். மின்மினி பூச்சிகளில் உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன.
மின்மினி பூச்சிகள் முட்டை புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ? என்ற கேள்வி பல நாட்களாக எனக்குள் இருந்தது அதற்கான விடையை தேடி எடுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
இது ஒரு சிக்கல் நிறைந்த உயிர்வேதியியல் (bio-chemical) முறையாகும். இம்முறை bioluminescence எனப்படும். மெழுகுவர்த்தி, மின்விளக்கு ஆகியன தரும் ஒளி வெப்பம் நிறைந்தது. ஆனால் இங்கே வெப்பம் ஏதும் உண்டாவதில்லை. மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரி
பொருளாகப் பயன்படுவது லூசிஃபெரின் (luciferin) என்ற வேதியியல் கூட்டுப் பொருள். இது
பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் (light emitting organ) நிறைந்துள்ளது.

இந்த லூசிஃபெரின், லூசிஃபெரெஸ் என்ற என்ஸைமில் (enzyme) உள்ள உயிர்வளி (oxygen), உயிரணுக்களில் (cells) நிறைந்துள்ள ATP என்ற வேதியியல் பொருள், மற்றும் மக்னிசியம்
ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி உண்டாகிறது.


இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிடினும் ஒளியுண்டாகாது. மின்மினிப் பூச்சி விட்டுவிட்டு ஒளிர்வதற்குக் காரணம், அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்கள் (nerve impulses) விட்டு விட்டுச் செல்வதேயாகும்.
மின்மினி பூச்சிகள் பற்றிய ஒரு பார்வை பெண் வண்டுகள் மண்ணில் முட்டை வைக்கும். சுமார் 4 வாரங்களில் முட்டையில் இருந்து புழு வந்துவிடும். புழுக்கள் கோடையிலும், வேனில் காலத்திலும் நன்கு சாப்பிட்டுவிட்டு ‘ஹாயாக’ டார்ச் பிடித்துக் கொண்டு வளைய வரும். குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் பதுங்கி விடும். பெரும்பாலும், இவை மண்புழு மற்றும் நத்தை ஆகியவற்றையே தின்னும். இவை இரையைப் பிடித்துத் தின்னும் முறையே அலாதியானது. இரையைக் கண்டுபிடித்தவுடன் அதை முதலில் மயக்கமடையச் செய்துவிடும். இதற்கென்றே இதன் முகத்தில் ஒரு பிரத்தியேக அரிவாள் போன்ற கொடுக்கு நீட்டிக்கொண்டு இருக்கும். அதைக் கொண்டு இரையின் உடலினுள் மயக்கமடையச் செய்யும் வேதிப்பொருளை செலுத்திவிடும்.
பிறகு இரைக்குள் செரிமான நொதிகளை செலுத்தும். சில மணி நேரத்தில், இரையின் உடலினுள் உள்ள அவயங்கள் கூழ்மமாக மாறிவிடும். உடனே மின்மினி பூச்சிகளின்புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து, ஜூஸ் குடிப்பது போல உறிஞ்சிவிடும். பிறகு ஜாலியாக ரவுண்ட்ஸ் போக தொடங்கும். அப்போது அதன் உடலில், அதாவது அடிவயிற்றின் முடிவில் விளக்கு எரிந்துகொண்டு இருக்கும். ஒரு சில பறவைகள்கூட, ஒளிக்காக இந்த புழுக்களைப் பிடித்து வந்து, தங்கள் கூட்டில் வைத்திருக்கும்.
மின்மினிப் பூச்சிகள் இரவுகளில் சில குறிப்பான இடங்களில் திரண்டிருப்பதைப் பார்க்கலாம்.
ஏன்? அங்கே ஆணும் பெண்ணும் மினுமினுக்கின்றன. தங்கள் துணை தேடுவதற்காக என்கிறார்கள் ஜார்ஜியா தென் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகள்.
பெண் பூச்சிகள் மினுமினுப்பு மூலம் தங்கள் இருப்பிடத்தைக் காட்டுகின்றன. ஆண் பூச்சிகள் இதற்குத் தகுந்தாற் போல அதே வித மினுமினுப்புகளை உண்டாக்கிக் காட்டுகின்றன.
பின்னர் ஜோடி சேர்கின்றன. பெண்களில் ஒரு சிறு சதவீதம் ஆண் பூச்சிகள் மினுமினுப்புக்கு இசையாமல் அல்லது இசைய முடியாமல் இறந்துவிடுகின்றன. பரிணாம விதியில் இப்படி அழிவதும் சரிதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
Thanks to Mohammad Sultan.visit.intjonlinee.blogspot.com

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

எச்சரிக்கை! :- பேஸ்புக் பாவனையாளர் புகைப்படங்கள் பாலியல் தளங்களில்

!

நீங்கள் வலையில் மேய்ந்து கொண்டிருக்கும் போது பாலியல் டேட்டின் தளத்தில் அல்லது அதன் விளம்பரத்தில் உங்களது புகைப்படத்தைப் பார்த்தால் எப்படி இருக்கும். நீ என்ன லூசா ? என்று என்னைப் பார்த்து நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் இதை மறுக்க முடியாத உண்மை. பேஸ்புக்கில் இருந்து இதுவரை 250,000 உறுப்பினர்களின் விவரங்களை டேட்டிங்க தளங்கள் திருடி உள்ள செய்தி வெளியாகி உள்ளது.
 
லவ்லி பேசஸ் என்னும் இணையதளம் சமீபத்தில் வெளியானது. இதில் இப்படியாக பேஸ்புக் பக்கங்களில் இருந்து பல்லாயிரக் கணக்கானோரின் விவரங்களைத் திருடி வெளியிட்டு இருந்தனர்.

சீமான் புலியா? இல்லை அன்சாரி இலங்கையில் சுடப்பட்ட முஸ்லீமா?


என் இனிய வாசகர்களே, நான் கடந்த ஜனவரி மாதம் 31 ம் தேதி. தாமூமூகவின் அன்சாரி அவர்களும் தமிழ் போராளி சீமான் அவர்களும் சந்தித்த சந்திப்பை பற்றி ஒரு பதிவு போட்டு இருந்தேன், அதனுடைய தொடர்ச்சியாக இதோ மற்றுமொரு பதிவு.
நான் என்னுடைய அந்த பதிவில், இலங்கையில் 1990 ம் ஆண்டு புலிகளால் பள்ளிவாசலில் கொல்லப்பட்ட முஸ்லிம்களும் தமிழர்கள்தான் என்பதையும் சுட்டி காட்டி இருந்தேன், மேலும் இவர்கள் இருவரும் மன்னிப்பு கேட்டு கொண்டார்கள், அதாவது முஸ்லிகள் சார்பில் அன்சாரியும், புலிகள் சார்பில் சீமானும், அதனால் என்னுடைய அந்த பதிவில், இவர்கள் யார் மன்னிபதர்க்கு என்று கேட்டு இருந்தேன், அது தொடர்பாக சில அன்சாரி தோழர்கள் இல்லை அன்சாரிவாதிகள், சற்று கூட சிந்திக்காமல்,. சில விதண்டாவாதங்களை எழுப்பி உள்ளார்கள் கருத்து என்ற பெயரில், சரி அது அவர்களின் தலைவிதி என்று விட்டு விடலாம், நான் இதில் மேலும் சில கேள்விகளை வைக்கிறேன், அதற்க்கு என்ன விடை என்று நீங்களே சிந்தியுங்கள்.

திங்கள், 7 பிப்ரவரி, 2011

உட்கார்ந்து யோசிச்சதுஸ்பெக்ட்ரம்  ஊழல்:
நிருபர்: ஊழல்ல கொள்ளை அடிச்சா பணத்தை என்ன செய்தீங்க.
ராஜா: கலைஞர் ஐயா கிட்ட குடுத்துட்டேன்.
நிருபர்: ஏன்?
ராஜா: "Money" ய நான் வைச்சுக்கிறேன் என் பொண்ணு "கனி" ய நீ வைச்சுகோன்னு  சொன்னாரு. பட் அந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சு இருந்தது ஒத்துகிட்டேன்.
நிருபர்: தூ..................!
இதுலிருந்து  ஒரு தத்துவம் நமக்கு தெரியுது "Adjustment is always better than argument"


ஆடுகளம்:
தனுஷ்: நாங்கெல்லாம் சுனாமிலேயே ஸ்விம்மிங் போடுறவங்க.
கவுண்டர்மனி: யாரு நீ! ஏன்டா fan போட்டாலே பறந்து போய் சுவத்துல பல்லி மாதிரி ஒட்டிப்பே, நீ சுனாமிலே ஸ்விம்மிங்.................அட வெட்கம் கெட்டவங்களா,,,,,,,,,,,,யாருக்கு எந்த வசனம் குடுகுறதுன்னு ஒரு வெவஸ்தை வேணா??தூ..........................புன்னகை என்பது எதிரியை கூட நண்பனாக்கும்ஆனால் brush பண்ணாம
சிரிச்சால் நண்பனைக் கூட எதிரியாக்கிவிடும்.
எனவே….சிரிங்கநல்லா சிரிங்க ஆனால்..பல்லை துலக்கிட்டு சிரிங்கஒரு பையன் பரிட்சையில் பெயில் ஆகிவிட்டான்.
அப்பா: இனிமேல என்னை அப்பான்னு கூப்பிடாதே.
பையன்: அப்பா, இது வெறும் ஸ்கூல் டெஸ்ட் தானப்பா , இது ஒன்னும் DNA டெஸ்ட் இல்லை கவலை படாதீங்க..................


பிளாக்கும் கலர்தான், ஒயிட்டும் கலர்தான், ஆனால் Black & White டிவி கலர் டிவி ஆகமுடியாது.........இப்படிக்கு வெறித்தனமா யோசிகிறவங்க சங்கம். 


ஒரு பள்ளிகூடத்தில்.
டீச்சர்: டேய் நான் பாடம் நடத்தும் போது அவன் ஏன்டா வெளில போறான்.
மாணவன்: விடுங்க டீச்சர் அவனுக்கு தூக்கத்துல நடக்குற வியாதி. 


ஒரு குட்டி கதை.
ஒரு ஏழை மீன் பிடித்து கொண்டு வந்தான், ஆனா அவன் மனைவியாலே அதை சமைக்க முடியலை, ஏன் என்றால், அவன் வீட்லே விலைவாசி ஏற்றம் காரணமாக மின்சாரம் இல்லை, காஸ் இல்லை, ஆனியன் இல்லை, ஆயில் இல்லை.
உடனே அந்த ஏழை பாவம் இந்த மீனாவது பொலைத்து  போகட்டும்னு போய் திரும்பவும் ஆத்துலே விட்டுதான், உடனே அந்த மீனு தண்ணிக்கு மேலே வந்து சொல்லிச்சு 
"உயிர் காக்கும் திட்டம் குடுத்த கலைஞர்க்கு நன்றின்னு". 
தத்துவம்:
மின்சாரமே இல்லை "இலவச டிவி"
சோத்துக்கு வழி இல்லை "இலவச வீட்டு திட்டம்"
 வருமானதிற்கு வழி இல்லை "இலவச வேட்டி சட்டை"


ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

வஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்?

குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றுவோம் என்று சொல்லுகிறவர்களைப் பார்த்து அல்லது தவ்ஹீத்வாதிகள் என்று பேசுபவர்களைப் பார்த்து வஹ்ஹாபிகள் என்று கூறப்படும் போது இந்த பெயர் எப்படி வந்தது இதன் அர்த்தமென்ன என நாம் தெரிந்திருப்பது மிகவும் அவசியமாகும்.


இந்த பெயரின் அர்த்தமென்ன?


இந்தப் பெயர் அல்லாஹ்வுடைய அழகு திருநாமங்களில் ஒன்றாகும்.வஹ்ஹாப் (வள்ளல்) பார்க்க குர்ஆன் 3:8,38:9,38:35
'வஹ்ஹாபி' என்றால் 'அல்வஹ்ஹாப்' என்ற அல்லாஹ்வின் பெயருடன் இணைக்கப்பட்டு அல்லாஹ்வைச் சேர்ந்தவன் என்று பொருள்படும். உண்மையில் இப்படி நம்மைப் பார்த்து யாரவது அழைத்தால் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.
(பாய் காபி சாப்பிடுகிறீர்களா டீ சாப்பிடுகிறீர்களா? என்று அன்போடு கேட்க வேண்டும்) ஏனென்றால் நம்மைப் பார்த்து இவர்கள் அல்லாஹ்வை சேர்ந்தவர் என்று சொல்வது சாதரணவிஷயமா?


இந்த பெயர் எப்படி தவ்ஹீத்வாதிகளை குறிக்கும் சொல்லாக மாறியது?


முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப்(ரஹ்)
(அப்துல் வஹ்ஹாபுடைய மகன் முஹம்மத்) என்பவர் மிகப்பெரிய அறிஞர். சவூதியில் ரியாத்தை சேர்ந்தவர்.

பழங்காலத்து ரியாத் சிட்டிஇஸ்லாமிய உலகில் (அக்கீதா) அடிப்படைக் கொள்கையில் மிகப்பெரிய சரியான மாற்றத்தை ஏற்ப்படுத்தியவர். அவர்கள் வாழ்ந்த காலக் கட்டத்தில் அதாவது 18ம் நூற்றாண்டு(கி.பி 1700) ஹிஜ்ரி கணக்குப்படி1000 மாவது ஆண்டு இந்த காலப்பகுதியில் இமாம் அவர்கள் தோன்றிய காலப்பகுதியாகும். அல்லாஹ் இந்த இஸ்லாத்தை பாதுகாப்பது என்று பொறுப்பெடுத்திருக்கிறான். இப்படி நபிமார்கள் ஒவ்வொருவரும் தொடராக ஒருவர் வந்து சென்றததற்குப் பின்னால் சமூகம் மீண்டும் தவ்ஹீதை விட்டும் மார்க்கம் ஏவியிருக்கின்ற எனைய அசலான கடமைகளை விட்டும் தூரமாகின்ற போது அடுத்த இறைத்தூதர்களை இறைவன் அனுப்பிக் கொண்டே இருந்தான். இறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் வருவதில்லை. வரவும்முடியாது ஆனால் சமூகம் சரியான மாற்றத்திலேயே இருப்பார்களா என்றால் இல்லை. காலம் செல்ல செல்ல மக்கள் சரியான கொள்கைகளிலிருந்து மாற்றமடைந்துக் கொண்டே இருப்பார்கள். ஆக முஹம்மது நபி (ஸல்) அவர்களோடு இறைத்தூதுத்துவோம் முற்றுப் பெற்றால் வரலாற்றிலே அவர்களுக்குப் பின்னால் ஏற்ப்படுகின்ற சீர்கேடுகளை யார் சீர்ப்படுத்துவது யார் சமூகத்தை வழிநடத்துவது அல்லாஹ் ஒவ்வொரு காலப்பகுதியிலும் ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஏதோ அடிப்படையில் ஒரு சீர்த்திருத்தவாதியை ஏற்ப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறான்.
இது இஸ்லாமிய வரலாற்று ரீதியான உண்மை.
இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் அவர்களுடைய காலத்தில் இஸ்லாத்தின் தூணாக விளங்கினார்கள். அவர்களின் காலப்பகுதியில் அடிப்படைக் கொள்கை சம்பந்தமாக நிறைய குழப்பங்கள் தோன்றிய போது இமாமவர்கள் அதற்கு முகம் கொடுத்து சரியான இஸ்லாத்தை நிறுவினார்கள். எனவேதான் அவர்களை நாம் இமாம் சுன்னத் வல் ஜமாத் என்கிறோம் (அஹ்லே சுன்னத்தின் தலைவர் என்று பொருள்) அதற்கு முன்பு முஹம்மது நபி (ஸல்) மரணத்திற்குப் பின்னால் அபுபக்கர் (ரலி) அவர்களைக் கொண்டு இறைவன் இந்த இஸ்லாத்தை பாதுகாத்தான். இந்த அடிப்படையில் ஹிஜ்ரி 1100 பகுதிகளிலேயே இமாம்.முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப்(ரஹ்) அவர்களை ஒரு சீர்த்திருத்தவாதியாக இறைவன் உருவாக்கினான்.
அவர்கள் தோன்றிய காலப்பகுதி விரிவாக
இமாவர்கள் பிறந்தது ஹிஜ்ரி 1115ல் நஜ்தியிலே(இன்றைய புதிய பெயர் ரியாத்) உள்ள அல் உயைனா என்ற ஊரில் பிறந்தார். அது இப்போது ரியாத்திலிருந்து வடமேற்கில் 70 கிலோ மீட்டர்க்கு அப்பால் இருக்கிறது.
அவர்கள் பிறந்த காலப்பகுதி எப்படி இருந்தது என்றால், இருளான காலப்பகுதியாக இருந்தது. மக்களிடம் பழைய அறியாமைக் கால பழக்கவழக்கங்களைப் பின்பற்றிக் கொண்டிருந்தனர். குறிப்பாக ஹிஜ்ரி 900க்குப் பிறகு உலகளாவிய இஸ்லாமிய உலகம் உறங்கிக் கொண்டு இருந்தது. எல்லா விஷயங்களிலும் அறிவுத்துறையில், அரசியல்துறையில், பொருளதாரத்துறையில் ஏனைய மார்க்கத்துறையில் அனைத்திலும் விழ்ச்சியில் இருந்த சமூகத்தை தட்டி எழுப்பியவர் ஒருவர் இருப்பாரென்றால் அவர்தான் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப்(ரஹ்)
அவர்கள் வெறும்(இணைவைப்பை) ஷிர்க்கை மட்டும் விமர்சிக்கவில்லை அனைத்து துறைகளிலும் தனது கவனத்தை செலுத்தினார்கள்.
கப்றுகளை,குகைகளை, மரங்களை வணங்கக்கூடியவர்களாக அக்கால மக்கள் இருந்தனர். அதேபோன்று சூனியம் தலைதூக்கியிருந்தது போதை வஸ்துக்களின் பிடியில் மக்கள் இருந்தனர். இக்காலக்கட்டத்தில் பிறந்த இமாமவர்கள் சிறுவயதிலேயே ஒரு தேர்ச்சியுள்ள நுணுக்கமான ஆற்றல் உள்ளவராக வளர்கிறார் சிறு வயதிலேயே குர்ஆனை மனனம் செய்திருந்தார் அவருடைய தந்தையும் ஒரு பெரிய காரி(நீதிபதி) குர்ஆனை மனனம் செய்துயிருந்த மார்க்க அறிஞர். முதலில் இமாமவர்கள் தனது தந்தையிடம் கல்வி பயின்றார்கள். சிறுவயதிலேயே நிறைய விஷயங்களை தந்தையிடம் கற்றுக் கொண்டார்கள் இந்த சூழலில் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் அவர்கள் தனது 13 ஆம் வயதில் ஹஜ் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். அவர்களுடைய தந்தையும் அனுமதி அளித்து ஹஜ்க்கு அனுப்பி வைக்கிறார். அக்காலங்களில் ஹஜ் செய்வதென்றால் மிகவும் சிரமான காரியம். நீண்டபயணம் செய்ய வேண்டும். ஆனால் இமாமவர்கள் இதுபோன்ற பயணங்களின் ஊடாக சரியான இஸ்லாத்தை கற்றுக் கொண்டார்கள். அக்காலத்தில் மக்காவிலே நான்கு மிகாரபுகள்(தொழுகைக்காக இமாம் நிற்கும் இடம்) கஃபாதுல்லாவை வளைத்து இருந்தது. எந்த அளவுக்கு அந்த சமகால மக்களிடம் மார்க்கத்தைப்பற்றிய தெளிவில்லையென்றால் நான்கு மத்ஹபுகளுக்கும் தனிதனியாக தொழகை இடங்கள் இருந்தன. ஒரு வக்து தொழகையை நான்கு தடவை நிறைவேற்றப்படும். அதாவது ஹஜ் வந்த ஹாஜிகளை ஹனபி,ஷாபி, மாலிக்கி, ஹம்பலி என்று நான்கு பிரிவுகளாக பிரித்து தனி தனி பிரிவினரின் இமாம்களோடு தொழுகை நடக்கும்.
(இதை பிற்காலங்களில் வஹ்ஹாபி இமாமவர்கள் ஒரே தொழுகையாக்கி மற்ற தவறான பழங்கங்களை ஒழித்தார்கள். இன்றும் இதே நிலை தொடர்வதற்க்கும் வஹ்ஹாபி இமாம் அவர்களே காரணம்) இன்னும் மக்காவிலே தாஃய்ப்பிலே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு கப்ர் கட்டி வைத்திருந்தனர்.அங்கு பெரிய மினார கட்டி அதை ஹஜ்க்கு வருபவர்கள் எல்லாரும் தொட்டு முத்தமிடுவதும், அவர்களிடம் பிரார்த்திப்பதும்,
தேவைகளை கேட்பதும் அதே மாதிரியே மக்காவிலே ஹதீஜா (ரலி) அவர்களுடைய கப்ர் என்று ஒன்றும் இருந்தது. இவையெல்லாம் அன்றைய மக்களிடம் பிரபலமானவை. இது போன்று மக்காவை சுற்றி ஏகப்பட்ட தர்ஹாக்கள் இருந்தன. அக்காலகட்டத்தில் உலமாக்கள் கூட எந்த அளவுக்கு தெளிவில்லாமல் இருந்திருக்கிறார்கள்.

பழைய காஃபத்துல்லாஹ்இந்த சூழலில் இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் 13ம் வயதில் ஹஜ்க்கு வந்திருந்த போது மக்காவில் காஃபாவில் ஒரு உலமா இஸ்லாமிய பயான்(சொற்பொழிவு) நடத்திக்கொண்டிருந்தார்.ஆழமான அறிவுள்ள அழைப்பாளரான அவர் சிறந்த முறையில் ஹதீஸ் குர்ஆன் அடிப்படையில் பயான் செய்து கொண்டிருந்தார். அந்த சொற்பொழிவாள் ஈர்க்கப்பட்டு முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் முழுபயானையும் கேட்கிறார்கள். அழகான பேச்சாக இருக்கிறது ஆனால் பேச்சை முடித்து விட்டு எழுந்திருக்கும் போது யா காஃபதுல்லாஹ் என்று எழுந்திரிக்கிறார். ஹதீஸ் குர்ஆன் அடிப்படையில் பேசிய அவர்கூட சரியான இஸ்லாத்தை விளங்காமல் யாஅல்லாஹ் என்று அழைப்பதற்கு பதில் யா காஃபதுல்லாஹ் என்று அழைக்கிறார். இதனைக் கண்ட அப்துல் வஹ்ஹாப் அவர்கள் மிக நுணுக்கமாக இவர் பெரிய அறிஞராக இருக்கிறாரே இவரிடம் எப்படி அவர் செய்த தவறை சுட்டிக்காட்டுவது என்று யோசித்துக் கொண்டே அவரிடம் சென்று உங்களிடத்தில் நான் எனக்கு தெரிந்த சின்ன சின்ன அல்குர்ஆன் வசனங்களை ஓதி காட்டுகிறேன் நான் சரியாக ஓதுகிறேனா என்பதை நீங்கள் சரி பார்த்துச் சொல்லுங்கள் என்று சொன்னார்கள். ஏனென்றால் அப்துல் வஹ்ஹாப் அவர்கள் அப்போது சிறுவர். உடனே அந்த அழைப்பாளர் தாராளமாக நான் சரிபார்த்து சொல்கிறேன் என்றவுடன் சரி நான் குல் அவூது பி(B)ரப்பி(B)ன்னாஸ் சூரத்துன்னாஸிருந்து தொடங்கி ஒவ்வொன்றாக ஓதி காண்பிக்கிறேன் நீங்கள் தவறு இருந்தால் சரி பண்ணுங்கள் என்றார். அவரும் சரி ஒதுங்கள் என்றார் உடனே இமாமவர்கள் சூரத்துன்னாஸ், சூரத்துல் ஃபலக்,இக்லாஸ், தப்பத், அந்நஸ்ர், இப்படி ஒவ்வொன்றாக ஓத தொடங்கி இந்த சூரத்துல் குரைஷ் என்ற சூரா வந்தவுடன் நாம் எப்படி ஓதுவோம்
லிஈலா(F)பி குரைஷ்
ஈலா(F)பிஹிம் ரிஹ்ல(த்)தஷ் ஷி(த்)தாயி வஸ்ஸை(F)ப்
(F)பல்யஃ(B)புதூ ர(B)ப்ப ஹாதல்(B)பைத்
என்றுதான் தொடராக ஓதுவோம் அவர்கள் எப்படி ஓதினார்கள் என்றால்
ர(B)ப்ப ஹாத என்பதை விட்டுவிட்டு (F)பல்யஃ(B)புதூ (B)பைத் என்று ஓதினார்கள் உடனே அதனை உலமா சுட்டி காட்டீனார்கள் (F)பல்யஃ(B)புதூ (B)பைத் என்றால் என்ன அந்த வீட்டை அவர்கள் வணங்கட்டும் என்று பொருள்.
(F)பல்யஃ(B)புதூ ர(B)ப்ப ஹாதல்(B)பைத் என்றால் இந்த வீட்டின் இரட்சகன் எவனோ அவனை வணங்கட்டும் என்று பொருள்.
அல்லாஹ் இந்த வசனத்தில் என்ன சொல்கிறான் காஃபாவை யாரும் வணங்க வேண்டாம் அதை எவன் படைத்தானோ அவனை வணங்கட்டும் என்று சூரத்துல் குரைஸில் அல்லாஹ் சொல்லுகிறான். எனவே தான் இஸ்லாத்தை விளங்கிய எந்த முஸ்லிமும் காஃபாவை வணங்குவதில்லை
இமாமவர்கள் (F)பல்யஃ(B)புதூ (B)பைத் இந்த வீட்டை வணங்கட்டும் என்று வேண்டுமென்றே ஓதினார் உடனே அந்த உலமா தவறாக ஓதுகிறாய் அது எப்படி வீட்டை வணங்குவது காஃபாவை வணங்கக் கூடாது என்கிறார். உடனே இமாமவர்கள் உங்களுடைய செயலில் அப்படித்தானே பார்த்தேன் நீங்கள் எழுந்திருக்கும் போது யா காஃபதுல்லாஹ் என்று எழுந்தீர்களே அதுமட்டும் சரியா என்று கேட்டார்கள். உடனே அவர் அன்றுதான் அவர் தன்னுடைய தவறை உணர்ந்து சரியாக விளங்கிக் கொண்டார்.


Thanks http://valaiyukam.blogspot.com

'தெஹல்கா லீக்ஸ்'... அடப்பாவிகளா...!

உச்சநீதிமன்றம் நியமித்த Special Investigation Team (SIT), உச்சநீதிமன்றத்திடம்  சமர்ப்பித்த அறிக்கையை நைசாக 'சுட்டு' தெஹல்கா நேற்று முன்தினம் வெளியிட்டுவிட்டது..! குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு தெளிவான பங்கிருப்பதாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) கண்டறிந்துள்ளது.

2002-ல் குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலையை உலகம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. 3000 முஸ்லிம்கள் துடிக்கத்துடிக்க சங்பரிவார பயங்கரவாதிகளால் கண்டந்துண்டமாக வெட்டியும், பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டும், குழந்தைகள் கூட நெருப்பிலிடப்பட்டும் கொல்லப்பட்டனர்.

வியாழன், 3 பிப்ரவரி, 2011

இந்தியர்கள் ஏழை, இந்தியா ஏழை நாடில்லை.

தலைப்பை சொன்னது நான் இல்லீங்கோ............சுவிஸ் வங்கிங்கோ....................

ஆமாங்க இந்திய பணம் சுமார் 280 lacs crore (280,00,000,000,0000) சுவிஸ் வங்கியில் நம்மூர் திருடர்கள் அதாவது அரசியல் வாதிகள், பணக்கார முதலைகள் மூலம் சேமித்து வைக்க பட்டு  இருக்காம். என்னங்க அமௌண்டை பார்த்த வுடனே சும்மா தலை சுத்துதா, அப்படி சுத்தலைனா தொடர்ந்து படிங்க கண்டிப்பாக சுத்தும்.
இதையெல்லாம் வைத்து வரியில்லாம 30 வருடத்திற்கு பட்ஜெட் போட்டு நம்ம இதியாவில் நாம் என்னவெல்லாம் செய்யாலாம்னு ஒரு லிஸ்ட் போடுறாங்க பாருங்க.................அதெல்லாம் நடக்காது இருந்தாலும் என்னவென்று பார்போம்.............

  1. 60 கோடி இதியர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாகலாம்.
  2. இந்தியாவில் உள்ள எந்த ஒரு கிரமத்தில் இருந்தும் டில்லியை இணைக்குமாறு நான்கு வழி சாலை அமைக்கலாம். 
  3. காலத்துக்கும் இலவசமாக 500 கும் மேற்பட்ட சமுக நலன்களுக்கு உபயோகபடுத்தலாம்.
  4. வருடத்திற்கு 20 ௦ கோடி மாணவர்னு 50 வருடத்திற்கு இலவசமா கல்வி வழங்கலாம்.  
  5. மாசம் 2000  ௦௦௦ ரூபாய் வீதம் எல்லாம் குடிமக்களுக்கும்  (நாட்டின்) 60 வருடத்திற்கு பணம் வழங்கலாம்.
  6. நமக்கு உலக வங்கியில் இருந்து கடன் வாங்க வேண்டிய அவசியமே கிடையாது. 
என்ன வாசகர்களே எப்படி நம்ம உழைப்பை எல்லாம். திருடி இருக்கானுங்க இந்த அரசியல் வாதிகள். அதனாலே நமக்கு அவனுங்க மேல நடவடிக்கை எடுக்க முழு உரிமை உண்டு. எந்த ஒரு காரணத்தை கொண்டும், 2g ஷ்பெக்ட்ரும் ஊழல், CW கேம்ஸ் மற்றும், ஆதர்ஷ் கட்டிட ஊழால் சமீபத்தில் பெங்களூர் ஊழல்.......இன்னும் ஏராளம் இருக்கு......மறந்துவிடவேண்டாம். .....

இவ்வளவு பணத்தை அங்கே போய் பதுக்கி வைச்சிட்டு இங்கே இவனுங்க என்ன பண்றாங்கன்னு தெரியலை..........அதுல ஒரு ௦0.5 சதவிகிதம் செலவு செய்றதுக்குள்ள இவன் மண்டைய போட்ருவான் அதுக்கு எதுக்கு இந்த மொள்ள மாறி தனம்...........எல்லாம் நம்மளை சொல்லணும்............தேர்தல்ல ஒருதானும் ஒட்டு போடாமா இருந்தான்னு வைங்க...............எல்லாம் சரியாய்டும்.............என்ன தேச துரோகம்னு சொல்லறீங்களா.................இது தேச துரோகம்னா. இந்த நாதாரி பயல்வோ செய்யுறது என்ன..................??????????????

நேற்றுதான் நம்ம ராசாவை கைது செய்திருகிறார்கள்..................அது போல இதுல சம்பந்தமான அனைவரும் கைது செய்ய பட வேண்டும்.............அப்படி இல்லேன்னா............இதற்க்கு ஒரே முடிவு................சிட்டிசன்  படத்துல சொல்லுற மாதிரி...........மக்கள் எல்லாம் ஒன்று கூடி ரேசன் கார்ட்களை அரசாங்கத்தில் ஒப்படைத்தால்தான் எல்லாம் ஒழுங்கா நடக்கும்.................சும்மா மனு குடுக்குறது, போராட்டம் பண்றது எல்லாம் வீண் வேலை...............

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

இஸ்லாமிய குண நலன்கள்-I

1. வீரம் உள்ள செயல் எது என்று கூறலாம் ?

பிறர் செய்யும் தீங்கை மன்னித்தல் வீர செயல் ஆகும்.

(காண்க அல்குர்ஆன் 31:17ஃ 42:43)

சிறந்த வீரம்-கோபத்தை அடக்கிக் கொள்ளுதல்.(நபிமொழி)

2. மறுமையில் இறைவனை சந்திக்க நாம் என்ன செய்யவேண்டும் ?

நற்செயல்களை செய்தலும், தன் இறைவனுக்கு இணைவைக்காமல் இருப்பதும். (காண்க அல்குர்ஆன்18:110ஃ29:4

3. இறைவனின் திருப்தி பெற்றோரின் திருப்தியில் உள்ளதா ?

தந்தையின் திருப்தி :

இறைவனின் திருப்தி தந்தையின் திருப்தியில் உள்ளது இறைவனின் கோபம் தந்தையின் கோபத்தில் உள்ளது.

(அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அம்ர்) தப்ரானி.

தாய்க்கு நன்மை செய்வது :

இறைதூதர் அவர்களே நல்லது செய்யப்படத்தகுதியுடையவர் யார்? எனக் கேட்டேன். உனது தாய் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்யப்படத் தகுதியுடையவர் யார்? என்று கேட்டேன் உனது தாய் என்று கூறினார்கள்.(மீண்டும்) நல்லது செய்யப்பட தகுதியுடையவர் யார்? எனக்கேட்டேன். உன் தாய் தான் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்ய தகுதியானவர் யார்? எனக் கேட்டேன் உனதுதந்தை அடுத்து (உன்) நெருங்கிய உறவினர்கள், அதற்கும் அடுத்து உறவினர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள் என தன் பாட்டனார் மூலம் தந்தை வழியாக பஹ்ஷ் இப்னுஹகிம் அவர்கள் அறிவிக்கிறார்கள் (ஆதாரம்) திர்மிதி, அபு தாவூத்,

மேலும் காண்க அல்குர்ஆன் 17:24ஃ 31:15)

4 . பெற்றோருக்கு கேட்கக் கூடிய பிரார்த்தனை என்ன?

ரப்பிர்ஹம்ஹூமா கமா ரப்பயானி ஸஃஈரா (பார்க்க அல்குர்ஆன் 17:24)

பொருள்: என் இறைவனே சிறு வயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடனும், பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறே இவர்கள் மீது நீ கருணை புரிவாயாக

5 . பெற்றோரை திட்டாமல் இருப்பது ?

ஒருவன் தன் பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்று ஆகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் (அது) எப்படி ஒருவன் (தன் பெற்றோரைத்) திட்டுவான்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். ஒருவனை இவன் திட்டுவான் அவனோ இவனது தாயையும், தந்தையையும் திட்டுவான்(இது அவனே பெற்றோரை திட்டுவதற்கு சமமாகும்) என்றுநபி (ஸல்) கூறினார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்:புஹாரி,முஸ்லிம்,அபுதாவூத்,திர்மிதி)

கிரிக்கெட் : பாகிஸ்தான் அணி வெற்றி

நிறைய வலைபதிவாளர்கள், உலகில் இந்தியா எங்கு போய் விளையாடி தோத்தாலும், சரி ஜெயித்தாலும் சரி அதை பற்றிய செய்திகளை எழுதுகிறார்கள், ஏன் மற்ற எந்த அணி விளையாடினாலும், அதை பற்றி கிறுக்குகிறார்கள்,. ஆனால் இந்த பாகிஸ்தானை பற்றி மட்டும் குறைகளை மட்டுமே எழுதுகிறார்களே தவிர அவிங்க ஜெயித்தாலும் எழதுறது கிடையாது, ஏன் இந்த கொலை வெறின்னு தெரியலை, விளையாட்ட விளாயாட்ட பார்க்காம ஏன் இப்படி வெறித்தனமா பார்க்குறீங்க.

மதராசபட்டினம்.................சில பின்குறிப்புகள்....

என்ன தலைப்ப  பார்த்தவுடன் ஏதோ சினிமா விமர்சனம்னு நினைசீன்களா அதான் கிடையாது..........எப்பவுமே சினிமா சினிமான்னு அலைய கூடாது.................கொஞ்சம் மற்றதையும் யோசிக்கணும்...................

இங்கே வலைபதிவில் நிறையப்பேர் சென்னை வாழ் எழுத்தாளர்கள் இருக்காங்க அவுங்களுக்காக இந்த தகவல் மற்றும் படங்கள்.