OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

மைக்ரோசாப்ட் வோர்ட் பாடம் - 4

வாசகர்களே, நாம் நிறைய செய்திதாள்களில் பார்த்திருப்போம் ஒரு செய்தியை சுருக்கி மூன்று காலத்தில் எழுத்திருபார்கள்  (உதாரணம் இணைப்பை பார்க்கவும்) அது போல நாம் இந்த வோர்டில் எவ்வாறு செய்யலாம் என்பதை பற்றியே இந்த பாடம் வாருங்கள் பயிலலாம் . முதலில் இங்கே கீழே இணைத்துள்ள இணைப்பை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


இந்த இணைப்பு ஒரு உதாரணமே, நீங்கள் உங்களுக்கு தேவையானதை தேர்ந்துடுத்து  கொள்ளுங்கள்.

  • புதிதாக ஒரு மைக்ரோசாப்ட் வோர்ட் பக்கத்தை திறந்து கொள்ளுங்கள், 
  • முதலில் தலைப்பை தட்டச்சு செய்து, என்டர் பட்டனை அழுத்திவிடுங்கள்.
  • இபோழுது 
  • pagelayout (MS WORD - 2007) என்கின்ற மெனுவிற்கு சென்றால் இங்கே கீழே உள்ளது போன்று உங்களுக்கு ஒரு விண்டோ கிடைக்கும் அதில் மோர் columns என்பதை தேர்வு செய்தால் கீழே இரண்டாவதாக உள்ள விண்டோ கிடைக்கும், 


  • அந்த இரண்டாவது விண்டோவில், உங்களுக்கு தேவையா அளவு காலத்தை தேர்வுசெய்து கொள்ளலாம். நான் மூன்று காலத்தை தேர்வுசெய்துள்ளேன். அதன் பின் உங்கள் வலது புறத்தில் உள்ள "Line between" என்பதையும் தேர்வு செய்து கொள்ளுங்கள். 
  • அதன் பின் உங்கள் இடது புறத்தில் உள்ள "Apply To" என்பதில் "This Point Forward" என்பதை தேர்வு செய்துவிட்டு "OK" குடுங்கள்.இந்த "This Point Forward" எதற்கு யென்றால்,உங்களது காலத்தை எதிலிருந்து பிரிக்க வேண்டும் என்பதே இதன் பொருள். இப்பொழு உங்கள் பக்கம் மூன்று column கொண்டதாக மாறி இருக்கும், அதனை காண கீழே உள்ள படத்தை பாருங்கள். 
இதன் நீங்கள் தட்டச்சு செய்ய ஆரம்பித்தால் அது முதல் காலத்தில் தட்டச்சு முடிந்த வுடன் அடுத்த பக்கத்திற்கு செல்லாமல், அடுத்த காலத்திற்கு செல்வதை நீங்கள் காணலாம். 

முயற்சி செய்து பாருங்கள்,.சந்தேகங்களை கமெண்ட்ஸ் இடுங்கள். விளக்கமளிக்க படும். 

கருத்துகள் இல்லை: