OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 25 டிசம்பர், 2013

இது பிரியாணி பட விமர்சனமில்லை..!!!


இன்று முஸ்லீம்களை வேரோடு அழிக்க நினைக்கும் யாருமே அவர்களுக்கே உரித்தான இந்த பிரியாணியை கண்டால் வியர்க்க வியர்க்க தின்பதை பார்க்கிறோம், இதில் அவாளும் அடங்குவார்கள்..!!! சரி இந்தே பிரியாணியின்  பிறப்பிடம் எதுவென்று நம்மில் எத்தனை பேருக்குத்தெரியும்??

பிரியாணி என்பது அரிசிமசாலாப் பொருட்களுடன் முட்டைஆடுகோழிமீன் அல்லது காய்கறிகள் சேர்த்து சமைக்கும் உணவை குறிக்கும். பொதுவாக, பிரியாணி செய்ய பாசுமதி அரிசியைப் பயன்படுத்துவார்கள். பிரியாணி என்னும் சொல் வறுத்த என்ற பொருள் தரும் bery(பெ) (بریان) என்னும் பாரசீகச் சொல்லில் இருந்து வந்தது. 
பிரியாணி சமைக்கும் முறை பாரசீகத்தில் தோன்றி அந்நாட்டு வணிகர்கள், உலகம் சுற்றுவோர் மூலம் தெற்காசியாவுக்கு வந்தது. இன்று நாம் பிரியாணியைச் சமைக்கும் முறை இந்தியாவிலேயே உருவானது. தெற்காசியாவில் மட்டுமல்லாதுதென் கிழக்கு ஆசியாவிலும் அரபு நாடுகளிலும் மேலை நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தெற்காசியர்களும் பிரியாணியின் உள்ளூர் வகைகளை விரும்பி உண்கிறார்கள்.

இதை தயாரிக்க தேவையான பொருள்கள்:-

நெய், ஜாதிக்காய், மின், மிளகு, கிராம்பு, ஏலக்காய், கறுவா, பட்டை இலைகள், கொத்தமல்லி, புதினா இலைகள், இஞ்சி, வெங்காயம், மற்றும் பூண்டுஎன்பன பிரியாணியில் பயன்படுத்தப்படும் சில நறுமணப் பொருள்களும் தாளிதப் பொருள்களும் ஆகும். உயர்ந்த வகைகளில் குங்குமப்பூவும் சேர்க்கப்படும். சிலர் நறுமணப் பொருட்களை ஒரு துணியில் முடிந்து பிரியாணி வேகும்போது போட்டுவைத்துவிட்டு, சாறு இறங்கியதும் எடுத்துவிடுகிறார்கள். அசைவ பிரியாணிகளில் இந்த நறுமணப் பொருட்களுடன் முதன்மை சேர்பொருளாக இறைச்சிமாட்டிறைச்சி, கோழிக் கறி,ஆட்டு இறைச்சி, மீன் அல்லது இறால் இருக்கும். பிரியாணியுடன் தயிர் பச்சடி(இது ராய்த்தா(கன்னடம்) எனவும் வழங்கப்படுகிறது.), குருமா, கறிகள்,சாலட், சுட்ட கத்தரித் துவையல் அல்லது அவித்த முட்டை ஆகியனவும் துணை உணவாகத் தரப்படும்.
நறுமணமிக்க பாசுமதி அரிசியைத் தனியாக வேகவிட்டு இறைச்சி அல்லது தாவரக் கறிகள் தனியாக சமைக்கப்பட்டு இரண்டையும் ஒன்றன் மேல் ஒன்றாக விரவிப் பரிமாறுவது பிரியாணித் தயாரிப்பின் தனித்தன்மையாகும். உண்பவர் நறுமணமுள்ள சோறு, அடுத்து சுவையூட்டப்பட்ட கறிகள் என மாறி மாறி உண்பதில் இன்பம் பெறுகிறார்.

பிரியாணியின்  வகைகள்:-

இந்திய வகைகள்

ஆம்பூர் பிரியாணி
ஐதராபாத் பிரியாணி
தலைப்பாக்கட்டி பிரியாணி
திண்டுக்கல் பிரியாணி
சங்கரன்கோவில் பிரியாணி
பட்கல் பிரியாணி
கச்சி பிரியாணி
இலக்னோவி (அவத்) பிரியாணி
கொல்கத்தா பிரியாணி
தலைச்சேரி அல்லது கண்ணூர் பிரியாணி

ஏனைய நாடுகளில்

சிந்தி பிரியாணி
மெமோனி பிரியாணி
தஹரி
பர்மிய பிரியாணி
தாய்லாந்து பிரியாணி
இலங்கை பிரியாணி
ஈரானிய பிரியாணி
மத்திய கிழக்கில் பிரியாணி
மலேசியாவில் நாசி பெரியாணி
சிங்கப்பூர்
பிலிப்பைனில்
மொரீசியசு பிரியாணி
நாசி கெபூலி

பொதுவான வகைகளாக

மட்டன் பிரியாணி
சிக்கன் பிரியாணி
இறால் பிரியாணி
மீன் பிரியாணி
தால் பிரியாணி
வெஜிடபிள் பிரியாணி

திங்கள், 16 டிசம்பர், 2013

இட ஒதுக்கீடும், இஸ்லாமியர் பொறுப்பும் - மீள் பதிவு

இட ஒதுக்கீடும், இஸ்லாமியர் பொறுப்பும்.இந்த கட்டுரை இனிய திசைகள் என்கின்ற மாத இதழில் வெளிவந்தது, உங்கள் பார்வைக்காக!!!! இஸ்லாமியகள் இட ஒதுதுக்கீடு என்றதும், பலபேர் பலவிதமாக பேசுவார்கள் ஆனால் இந்த கட்டுரை எழுதியவர் மிகவும் சரியான கருத்துக்களை அலசி ஆராய்ந்து கூறியுள்ளார் என்றே தோன்றுகிறது.ஏன் முஸ்லிம்களிலேயே சில பேர் இது தேவையில்லை என்ற ஒரு கருத்தை பரப்பி வருகிறார்கள், அவர்களுக்கு ஒன்று புரியவில்லை, இந்தியாவில் இடஒதுக்கீடு இல்லாமல் ஒரு சமுதாயம் முன்னுக்கு வராது என்று!!!!!

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

நாம் உண்மையாக இருக்கோமா??இன்று உலகில் உள்ள எவரும் சொல்ல முடியாது நான் பொய்யே சொன்னதில்லை என்று!!!!!!!!!! இன்று ஒவ்வொரு வாழ்க்கையிலும் இந்த பொய்யானது ஒரு அத்தியாவசிய பொருள் ஆகிவிட்டது. பொய் சொல்லாமல் வாழவே முடியாது என்ற நிலையில்தான் இருக்கிறான் மனிதன்.

ஏன் நம்மால் பொய் சொல்லாமல் இருக்கவே முடியாதா?? கண்டிப்பாக முடியாது...!!! ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நம்மை அறியாமலே சொல்லிவிடுவோம். இந்த பொய் சொல்லும் பழக்கம் நம்முடைய குழந்தைப்பருவத்தில் இருந்தே நமக்கு நிலாச்சோருடன் ஊட்டப்படுகின்றது ஆம் அன்று நம் அன்னை நிலாவைக்காட்டி அதில் பாட்டி வடைசுடுகிறாள் பார் என்று பொய்ய்யான ஒன்றை சொல்லித்தான் நமக்கு சோத்துடன் சேர்த்து பொய்யும் ஊட்டப்படுகிறது…!!!!!

இந்த பொய் எப்படியெல்லாம் சொல்லப்படுகின்றது என்று பார்த்தால், பள்ளியில் வாத்தியாரிடம், பெற்றோர்கள் பிள்ளைகளிடம், பிள்ளைகள் பெற்றோரிடம் கணவன் மனைவியிடம், மனைவி கணவனிடம், நண்பர்கள் மத்தியில் என்று எந்த ஒரு பாராப்சமுமின்றி சொல்லப்படுகின்றது..!!!!!!!!!! இதில் 90% சதவிகித பொய்கள் பெரும்பாலும் சின்ன சின்ன விசயங்களுக்கு மட்டுமே சொல்லப்படுகின்றன. அதுவும் இந்த மொபைல் டெக்னாலஜி வந்த பிறகு முகம்தெரியாது என்பதால் இந்த விளையாட்டுப்பொய்கள் இன்னும் அதிகமாகிவிட்டன...!!!!!!!!!!!!!!

இப்படி நாம் சொல்லும் பொய்களானது மூன்றாவது நபர்கள் வேண்டுமென்றால் கண்டுக்காம இருந்துவிடுவார்கள், ஆனால் உங்களையே ரொம்ப நேசிக்கும் ஒருத்தரிடம் நீங்கள் விளையாட்டாய் சொல்லும் இந்த பொய்யானது அது ஒரு வகையில் நீங்கள் உங்களை நம்பியவருக்கு செய்யும் நம்பிக்கை துரோகம்...!!!!!!!!!!! எதிரியை கூட மன்னிக்கலாம் ஆனால் துரோகியை மன்னிக்க கூடாது என்று பேச்சு பழக்கத்தில் உண்டு....!!!!!!!!!!!! அந்த மாதிரி ஒரு நிலை நமக்கும் நாம் உயிராய் நேசிக்கும் உறவுக்கும் வர வேண்டுமா?????

நேசிப்பவருக்கும் நெருக்கமாய் இருப்பவருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு, ஆனால் நெருக்கமாய் நேசிப்பவர்களை வெறுக்காமல் இருக்க இந்த விளையாட்டாய் சொல்லும் பொய்களை தவிர்ப்போமே!!!!!!!!!!!!!

பொய்ய்யான இந்த உலகவாழ்வில் உண்மையாக வாழ்வோமே!!!!!!!!!

வியாழன், 12 டிசம்பர், 2013

ஊடகம் நடத்தும் விபச்சாரம்!!!!!!!!!


ஊடகம் நடத்தும் விபச்சாரம்!!!!!!!!!

இந்த ஊடகங்களை பற்றி பல முறை நான் எழுதியுள்ளேன் இவர்கள் தங்களின் TRP யை ஏற்றிக்கொள்ள எண்ணவேண்டுமென்றாலும் செய்வார்கள் என்று அதற்க்கு மிக அருமையான உதாரணம் சமீபத்திய சிங்கபூர் கலவரம்!!!!!!!!

இதில் ஒருத்தன் குடிபோதையில் போயி பஸ்ஸில் விழுந்து இறந்துவிட்டான் இதற்க்கு இவர்கள் (நம் தமிழர்கள்) செய்தது தேவையற்ற செயல் மேலும் கண்டிக்கதக்கது, இவர்களின் போதைக்கு ஊருகாயாக 27 தமிழர்கள் சிறையில் இதில் அப்பாவிகள் எத்தனை பேர் என்று தெரியவில்லை, அவர்களுக்கு எனது அனுதாபங்கள்!!!!!

நடந்தது இப்படி இருக்க இந்த ஊடகங்களோ ஏதோ நேரில் சென்று பார்த்தது போன்று வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிக்கொண்டிருக்கின்றது என்பதை சிங்கபூர் முகநூல் வாசிகள் மூலம் அறியலாம்!!!!!!!!!! ஆனால் பாருங்கள் இதுவரைக்கு இந்தியாவில் குண்டுவெடிக்கும் போதெல்லாம் இந்த ஊடகங்கள் குண்டு வெடித்த அடுத்த நிமிடமே இஸ்லாமிய அமைப்புகளை குற்றம் சுமத்தி தனது விபச்சார தொழிலை செய்துவிடும் அப்போதெல்லாம் யாரும் முகநூலில் இந்த ஊடகங்களை குறை சொல்லவில்லை, இப்பொழுது அவர்கள் வசிக்கும் நாட்டில் நடந்ததை பற்றி தவறாக சித்தரிக்கும் போது பொங்கி எழுகிறார்கள்!!!!!!!! நான் அனைவரையும் சொல்லவில்லை!!!!!!

உங்களுக்கு வந்தா ரத்தம்!!!!!!!! இஸ்லாமியர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா???????? மனிதர்கள் பெருகும் அதே நேரத்தில் மனிதாபிமான கொன்று புதைக்கபடுகிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை!!!!!!!!!!!

மேலும் இன்று சிங்கபூர் சிறையில் இருக்கும் அந்த 27 பேர்களின் குடும்பத்தின் நிலை???????????? மிகப்பெரிய கேள்விக்குறியாகயுள்ளது!!!!!!!

நம்முடைய கோபம் சரியான காரமில்லாமல் வீண்போகக்கூடாது!!!!!!!!!!!!!! ஆனால் இது தேவையில்லாத கோபம், போதையால் வந்த கொடூரம்!!!!!! கூடி குடியை மட்டுமில்லை ஒரு சமுதாயத்தை அழிக்கும்!!!!!!!! இனி அந்த அரசாங்கம் நமது தமிழர்களுக்கு விசா குடுக்க கெடுபிடிகளை அதிகரித்தல் ஆச்சரியபடுவதர்க்கில்லை!!!!!!!!!!!

செவ்வாய், 10 டிசம்பர், 2013

இதுவரை நான் எழுதிய முகநூல் வாசகங்கள் சில ...!!!!!!!!!!!!!!!!


 1. பொய்களால் தடவிக்குடுப்பவர்களை விட உண்மையால் அரைபவர்களைதான் இந்த உலகம் ஏற்றுக்கொள்ளும். 
 2. நமக்கிருக்கும் ஒரு வாழ்க்கையை ஏன் நாம் போட்டு கஷ்டபடுத்திக்கொல்கிறோம். 
 3. எவ்வளவுதான் தொழிற்நுட்பம் வளர்ந்தாலும் கடைசியில் கைநாட்டுத்தான் பாதுக்காப்பானது. 
 4. நாம எடுக்குற முடிவுல அடுத்தவங்க சந்தோசப்பட்டால் அதுவும் நமக்கு சந்தோஷம்தான். 
 5. வாழ்க்கை ஒன்றும் ரிமோட் கன்ட்ரோல் இல்லை இருந்த இடத்தில் இருந்தே மாற்றிக்கொள்ள நாமதான் எழுந்திருச்சி மாற்றிக்கொள்ளனும்.
 6. மக்கள்தொகை அதிகாரிக்கும் அதே நேரத்தில் மனித நேயம் கேள்விக்குறியாய் நிற்கிறது. 
 7. மறுத்துவார்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் உயிரை நிரந்தரமாக காப்பாற்ற முடியாது, மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது, அவர்களும் ஒரு நாள் மரணிப்பவர்களே, எந்த ஒரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும். 
 8. வாழ்க்கையை பற்றி பெரிதும் கவலை படாதீர்கள் எப்படியும் நீங்க அதிலிருந்து தப்பா போவதில்லை. 
 9. கைக்கு எட்டாது என்று தெரிந்தும் ஸ்கைப்பில் குடும்பம் நடத்தும் குற்றவாளிகள், வெளிநாட்டில் வாழும் தியாகிகள் 
 10. அடுத்தவர்கள் சுயலாபத்திர்க்காக உன் சுய நலத்தை விட்டால் அப்ப நீதான் இந்த உலகத்தில் ரொம்ப நல்லவன். 
 11. பொண்ணுக்கும் டீ கடையில் தொங்குற பண்ணுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு, ரெண்டுமே மூடாம இருந்தா கேட்டு போயிடும்.
 12. பொண்ணு பார்க்க புகைப்படம் தர மறுக்கும் சமுதாயம்தான் ஸ்டூடியோவில் வளைந்து வளைந்து எடுக்க அனுமதிக்கிறது 
 13. கருத்து என்பது நம்ம கய்யில் கட்டிருக்கிற வாட்ச் மாதிரி ஒவ்வாறுத்தருக்கு ஒரு விதமான மணி காட்டும் ஆனால் எல்லோரும் அவுங்க டைம் தான் சரின்னு சொல்லுவாங்க 
 14. வாழ்க்கையில் தோல்வி மட்டுமே தொடர்ந்து வந்தால் தோற்றுவிட்டோம் என்று அர்த்தமில்லை தோல்விகளை தாண்டி செல்கிறோம் என்று அர்த்தம்.

வியாழன், 28 நவம்பர், 2013

உட்கார்ந்து யோசிச்சது

இந்த தலைப்பில் மீண்டும் உங்களை சந்தோசபடுத்துவதில் சந்தோஷம்.

ரயிவே ஸ்டேஸன்
நபர் 1 : சார் டெல்லி எக்ஸ்பிரஸ் போயிடுச்சா ?
நபர் 2 : போயிடுச்சு.
நபர் 1 : மும்பை எக்ஸ்பிரஸ் போயிடுச்சா?
நபர் 2 : போயிடுச்சி.
நபர் 1 : கொல்கத்தா எக்ஸ்பிரஸ் போயிடுச்சிங்களா ?
நபர் 2 : போயிடுச்சியா நீ எங்க தான் போகணும் எல்லா டிரெயினயும் கேட்டுனு இருக்க ?
நபர் 1 : நான் அவரமா தண்டவாளத்தை தாண்டி அந்தப்பக்கம் போகணும் அதாங்க கேட்டேன்.
நபர் 2 : ! ! !....

என்ன ஆரம்பமே அதிருதுல்லே.............. தொடர்ந்து படிங்க!!!!!!!!!!!!!!

பரிட்சை


ஆசிரியர் : பரிட்சை நேரத்துல ஏன்டா தூங்கற ?

மாணவன் : கேள்விக்கு விடை தெரியலனா ‘முழிச்சிட்டு
இருக்க கூடாதுனு அப்பா சொன்னார். அதான் தூங்கிட்டேன் சார் .

ஆசிரியர் :!!!!!!!!! 

என்ன முடியலையா??? எனக்கும்தாங்க!!!!!!!!!!!!!!!!!!

கர்நாடகா தண்ணீரும்,
கேர்ள்'சின் கண்ணீரும் ஒண்ணுதான்...
ரெண்டுமே கொஞ்சமாத்தான் வரும்...
 
ஆனா பல பிரச்சனைய கொண்டு வரும்..


கேர்ள்ஸ் யாரும் அடிக்க வராதீங்க!!!!!!!!!!!!


டவுட்டு 

ரோடுல பொண்ணைப் பார்த்தா பொறுக்கின்னு திட்டுறாங்க.
வீட்ல போய் பெண்ணைப் பார்த்தா மாப்ளென்னு கும்பிடுறானுங்க. என்ன உலகமடா இது?..


கடைசியாக................... 
பாரதி இன்று இருந்தால்
தமிழன் என்று ஒரு இனமுண்டு
தண்ணீருக்கு பிச்சை எடுக்கும் குணமுண்டு .......என்று பாடியிருப்பார்சமூகத்தை சீரழிக்கும் கோபிநாத்!!!!!!!!
சமீபத்தில் கண்ட நீயா நானா நிகழ்ச்சியின் தலைப்பு வீட்டில் கணவன் மனைவி என்னவெல்லாம் பேசுகிறார்கள்? கணவன் மனைவி என்கிற உறவு அவர்கள் பேசுவது எல்லாமே ரகசியங்கள் காக்கபடவேண்டியது இதை வெளிபடுத்த ஒரு நிகழ்ச்சி தேவையா? நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம், இப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கணவன் மனைவிகளை என்னவென்று சொல்வது. இப்படியொரு தலைப்பில் விவாதம் நடத்திய அந்த கோட் போட்ட கோமாளியை என்னவென்று சொல்வது?

அதில் கலந்துக்கொண்டவர்கள் கொஞ்சம் கூட வெட்க படாமா ஒளிவு மறைவு இல்லாமல் அனைத்தையும் சொல்றார்களே அந்த மானம்கெட்ட தம்பதியர்களை என்னவென்று சொல்வது, நாட்டில் இதை  தவிர வேற பிரச்சனையே இல்லை? தொலைகாட்சி ஊடகங்கள் தங்களின் டி‌ஆர்‌பியை உயர்த்திக்கொள்ள எண்ணவேண்டுமென்றாலும் செய்யுமா? கணவன் மனைவி உறவின் புனிதம் எங்கே போனது? கலாச்சாரம் என்று வாய்க்கிழிய பேசும் சமூக ஆர்வலர்கள் இப்போ எங்கே போனார்கள்???

இன்றைக்கு நம் பெண்களை சீரழிப்பது நாட்கங்கள் மட்டுமில்லை இந்த மாதிரி கேனத்தனமான நிகழ்ச்சிகளும் தான், பேசுவதற்க்கு நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள், மின்சார பற்றாக்குறை, மாநிலத்தில் நதிநீர் பிரச்சனை, ஒரு தலைமுறையை இல்லாமல் ஆக்கும் கூடங்குளம் பிரச்சனை, இன்னும் பசி, வேலை இல்லா திண்டாட்டம், காசுக்காக போட்டி போட்டு மக்களை மொத்தமாக கொள்ளும் டிராவல்ஸ் பேருந்துகள் இப்படி இன்னும் பல கோடி பிரச்சனைகள் இருக்க எதர்க்கும் உதவாத, ஒரு உறவை கொச்சைப்படுத்தும் இது போன்ற தலைப்புகள் தேவையா?? இதையும் சிரித்துக்கொண்டே பார்க்கும் நமது மக்களின் மனநிலை என்ன இவ்வளவு கேவலாம் ஆகிவிட்டதா!!!!!!!!!!!!! இல்லை அடுத்தவன் பொண்டாட்டிக்கிட்டே எப்படி இருக்கிறான் என்பதை பார்க்கும் கேடுகெட்ட என்னமா????????

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல மக்களாய் பார்த்து மாறாவிட்டால் நாம் தமிழகத்தில் மாற்றமே வரப்போவதில்லை.

மாற்றம் ஒன்றே மாறாதது என்றுமே!!!!!!!!!!!!!!

புதன், 27 நவம்பர், 2013

அங்கோலா உண்மை நிலை என்ன???

இன்றைய நாளில் உலகின் ஹாட் டாபிக் இந்த அங்கோலாதான்!!!!!!! ஆனால் அதில் எந்த அளவிர்க்கு உண்மை என்பதை கொஞ்சும் அலசுவோம் அந்த நாட்டின் அமெரிக்க தூதரின் வாயிலாக ..!!!!!!!!!!!!!!

வாசிங்க்டன் D.C  உள்ள அங்கோலாவின் தூதரக அதிகாரி ஒருவர் தொலைபேசி வாயிலாக தெரிவித்த செய்தி என்னவென்றால்,அங்கோலாவில் இஸ்லாத்திற்கு மட்டுமல்ல எந்த ஒரு மதத்திற்கும் தடை இல்லை, இஸ்லாத்திற்கு தடை என்ற செய்தி வெறும் வதந்தி தான் என்றார்.அங்கோலா எந்த ஒரு மதத்தின் விசயங்களுக்கும் உள் நுழையாது.எங்களது நாட்டில் காதொலிக்,பாப்டிஸ்ட்,ப்ரோடோஸ்டேன்ட், முஸ்லிம் என்று பல மதத்தவர்களும் இங்கு வாழ்கிறார்கள்.எங்கள் நாடு அணைத்து மதத்தவர்களுக்கும் சுதந்திர நாடு என்று தெரிவித்து இருந்தார் என்று  International Business Times மேற்கோள் காட்டியுள்ளது.

மேலும் இது சம்பந்தமாக இவர்கள் வெளியிடும் புகைபடங்கள் எல்லாம் உண்மைதான் ஆனால் இவர்கள் நினைப்பது போன்று தற்பொழுது எடுத்தது அல்ல மாறாக அது எல்லாம் 2008 ஆம் ஆண்டு எடுத்தது!!!!!!!!!!!! (International Business Times).. 

ஃபித்னா (குழப்பம்) செய்வதுகொலையைவிடக் கொடியதுஅவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பிகாஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும்மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்;இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்”. 
அல் குர்ஆன் :2:217

தான் காதில் கேட்டதை எல்லாம் உண்மை எது பொய் எது என்று அறியும் முன்னரே பரப்புபவர்களை பொய்யர்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறியுள்ளதை கூட நம் சகோதரர்கள் அறியவில்லையா?அல்லது அறிந்தும் அறியாததுபோல உள்ளார்களா??????

இஸ்லாத்திற்கு எதிராக எந்த செய்தி வந்தாலும் முதலில் பரப்புபவர்கள் நம் இஸ்லாமிய சகோதரர்களாக தன உள்ளார்கள்...என்று இவர்கள் திருந்துவார்களோ!!!!!!

இதில் கொடுமை என்னவென்றால் தௌஹீத் கொள்கையில் உள்ளவர்களும் இதை பரப்பியுள்ளார்கள்!!!!!!!!!!!!!

குறிப்பு:- இதை நான் சில ஆதரத்துடன் எழுதியுள்ளேன் இதில் அந்த அங்கோலா தூதர் பொய்யுரைத்திருந்தால் அதை அல்லாஹ் பார்த்துக்கொள்வான் 


ஞாயிறு, 10 நவம்பர், 2013

பிரிவுகளும், இழப்புகளும்.


இந்த உலகில் ஒவ்வொரு நொடியும் ஒரு உயிரிழப்பு நடந்துக்கொண்டுதான் இருக்கின்றது அது நம்ம படைத்த இறைவனின் நாட்டப்படி. இன்னும் சொல்லப்போனால் மக்கள் கூட்டம் கூட்டமாகவும் உயிரிழக்கிறார்கள் கொல்லபடுகிறார்கள். ஆனால் நான் இங்கு சொல்ல வருவது ஒவ்வொரு தனிமனிதனும் நினைக்கின்ற பிரிவுகளும், இழப்புகளை பற்றிதான்.

இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் எதையும் இழக்காமல் அதையும் பெற முடியாது என்பதே மறுக்க முடியாத உண்மை. இருந்தாலும் பெரும்பான்மையான (90%) மனிதர்களுக்கு அந்த இழப்பானது அல்லது பிரிவானது அவர்களின் மனதை விட்டு அவ்வளவு சீக்கிரம் போகாது. எல்லாமே இறைவனின் நாட்டப்படிதான் நடக்கின்றது என்று சொல்லிக்கொண்டாலும் மனம் வேதனை அடைவது என்னவோ உண்மை.

புதன், 6 நவம்பர், 2013

“இந்தப் படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் கற்பனையே … யாரையும் குறிப்பிடுபவை அல்ல”

“இந்தப் படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் கற்பனையே … யாரையும் குறிப்பிடுபவை அல்ல”
என்ற எச்சரிக்கையோடு தொடங்கும் படங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில், யாரையோ குறிப்பிட்டபடியே வெளிவருகின்றன. நடிகர் அஜித் குமார் நடித்து, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் “ஆரம்பம்” அப்படியொரு படம்தான்.
தீபாவளிக்கு 2 நாட்கள் முன்னமே வெளியாகிவிட்டதால் நிச்சயம் ரூ.100 கோடி வசூலைத் தாண்டிவிடும் என ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கிறார்கள். இந்தப் படத்தின் திரை மொழி, இசை, காட்சிகள் என நுணுக்கமான ஆய்வுகளை பல விமர்சகர்களும் செய்யக் கூடும். அவற்றையெல்லாம் காத்திருந்து பார்ப்போம். இப்போது, கதையில் நகலெடுக்கப்பட்டுள்ள உண்மைகளைப் பேசுவோம்.
மர்மான முறையில் மரணித்த காவல் அதிகாரி:
கதை: “காவல்துறை அதிகாரி அசோக் (அஜித்) தனது நண்பருடன் ஒரு தீவிரவாதத் தாக்குதலை எதிர்த்து களமிறங்குகின்றனர். அந்த தாக்குதலில் அசோக்கின் உயிர் நண்பர் மரணமடைய – அதற்கு காரணம் என்ன என்ற ஆய்வைத் தொடங்குகிறார் அசோக்”
Hemant_Karkareஉண்மை: நேர்மையான காவல்துறை அதிகாரி ‘ஹேமந்த் கார்கரே’ – பயங்கரவாத குண்டுவெடிப்புகள் நடக்கும்போது, உரிய விசாரணையைச் செய்யாமல் தவறான நபர்களை  காவல்துறை பலமுறை கைது செய்திருக்கிறது. அதுவும் அரசியல்வாதிகள் கொடுக்கும் அழுத்தம் தாளாமல், யாரோ ஒரு முஸ்லிமைக் கைது செய்துவிடுவதும், அப்பாவிகள் நீதிமன்றக் காவலில் அவதிப்பட, உண்மையான குற்றவாளிகள் யார் என்பது தெரியாமல் போய்விடுவதும் உண்டு. (பார்க்க)  அப்படி ஒரு வழக்காக முடிந்திருக்க வேண்டிய ‘மாலேவ்கான் குண்டுவெடிப்பு‘ வழக்கை, காவல்துறை அதிகாரி ஹேமந்த் கார்கரே விசாரித்தார். குண்டுவெடிப்புக்கு பின்னால் இருந்த ‘இந்து’ மத அடிப்படை தீவிரவாதிகளின் சதியை அவர் வெளிக் கொண்டுவந்தார்.
எந்த மத அடிப்படைவாதமாக இருந்தாலும் அது அப்பாவிகளின் கொலையிலேயே முடியும். இதனை தனது விசாரணையின் மூலம் நிரூபித்த ஹேமந்த் கார்கரே – மும்பையில் நடந்த ’26/11′ பயங்கரவாத தாக்குதலில் நேரடியாக களத்தில் உயிர்களைக் காப்பாற்றினார். பாதுகாப்பற்ற கவசம் வழங்கப்பட்டதாலேயே மரணம் நடந்ததா? என்று சந்தேகம் எழுப்பப்பட்ட நிலையில், இதுகுறித்த விசாரணை நடத்த முடியாத வகையில் ஆவணங்கள் தொலைந்தும் போயின.
கதை: “மர்ம மரணம் அடைந்த காவல்துறை அதிகாரியின் நண்பரை தேச துரோகியாக சித்தரிக்கிறது அரசு. அத்தோடு அவரின் மனைவிக்கு ரூ.2 கோடி கொடுப்பதாக பேரம் நடக்கிறது. ‘நான் பேரம் பேசினால் எதுவும் படியாம போகாது என்பது உங்களுக்கே தெரியும். ஆனா என்னாலயே முடியல’ என்றபடி தரகர் ரம்யா வெளியேறுகிறார்”
உண்மை: ஹேமந்த் கர்கரே மலேகாவ்ன் வெடிகுண்டு தாக்குதலை விசாரித்து சாத்வி பிரஞ்யா, ராணுவ லெப்டினன்ட் கர்னல், சில சுவாமிகள் கைது செய்யப்பட்டதும். பாஜக, விஎச்பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள் போன்ற அமைப்புகள் அவரை தேச துரோகியாக சித்தரித்தன.
ஆனால், தீவிரவாதிகளின் துப்பாக்கி குண்டுக்கு அவர் பலியானதும் மும்பைக்கு வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இந்தத் தாக்குதலில் பலியான மும்பை போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்தார். ஆனால், நாட்டுக்காக கடமை செய்து தவறு செய்தவர்களை சட்டத்தின் பிடியில் கொண்டு வந்த தனது கணவரை வில்லனாக சித்தரித்த இவர்களிடமிருந்து எந்த நிதியுதவியையும் பெற மாட்டேன் என ஹேமந்த் கர்கரேவின் மனைவி திட்டவட்டமாக அறிவித்தார்.
கதை: “ரம்யா – அரசியல்வாதிகளோடும், தொலைக்காட்சி நிறுவனங்களோடும் இணைந்து செயல்படுகிறார். பலவிதமான தரகு வேலைகளில் களத்தில் நிற்கிறார்”
உண்மை: காங்கிரஸ் ஆட்சியில் வெளிவந்த, வரலாறு காணாத – 2 ஜி முறைகேடு வழக்கில், டாட்டா Nira-Radia-CBI-Raid-e-khabarமற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கும், அதிகார வர்க்கத்துக்கும் இணைப்பு பாலமாக செயல்பட்டவர்  நீரா ராடியா. வைஷ்ணவி கம்யூனிகேசன்ஸ் என்ற நிற்வனத்தை வைத்துக் கொண்டு அவர் நடத்திய உரையாடல்கள் வெளிவந்தன. (முழு உரைகளும்) இதுபோன்ற தரகர்கள், நமது நாட்டுக்கு அமைச்சராக யார் வரவேண்டும் என்பதை முடிவு செய்யும் லாபியிலும் ஈடுபடுகிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. இதற்கு ஆதாரமாக, அவர்களின் தொலைபேசி உரையாடல்களும் வெளியாகின.
Barkha_Dutt_World_Economic_Forum_Nov_2010இந்த உரையாடல்களின் மூலம் புகழ்பெற்ற NDTV செய்தி சேனலின் செய்தியாளர் பர்கா தத், அதிகார பேரங்களில் நேரடியாக தொடர்பு கொண்டிருந்ததும் செய்தியானது. பெரும் நிறுவனங்களின் கோடிக்கணக்கான லாபங்களுக்காக அவர்கள் அரசின் சொத்துக்களை தரகு பேசுகின்றனர். இதே நீராராடியாதான் டாடா நிறுவனத்துக்கு அடிமாட்டு விலையில் குஜராத் அரசின் நிலத்தையும், நிதி உதவியையும் பெற்றுக் கொடுத்தார் என்பதும் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. (http://deshgujarat.com/2010/11/25/was-gujarati-bahu-niira-radia-a-nano-link-between-modi-and-tata/)
கதை: “பிணையில் உள்ள தீவிரவாதியை விடுவித்துக் கொடுக்க ஒரு மாநிலத்தின் உள்துறை அமைச்சரே பேரம் பேசுகிறார். அதற்கான தொகை துபயில் கை மாறுகிறது”
உண்மை: இன்று நடக்கின்ற தீவிரவாத தாக்குதல்களுக்கெல்லாம் உளவுத்துறை சரியில்லை, எங்கள் ஆட்சியில் அப்படியில்லை என்று சொல்லும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில், கந்தகார் விமானக் கடத்தல் நடந்தது. (நாடாளுமன்ற வளாகத்திலேயே துப்பாக்கிச் சூடும் நடந்தது மற்றொரு அவமானகரமான நிகழ்வு)
இதுபோன்ற தாக்குதல்களை உளவுபார்த்து கண்டுபிடிப்பதை விட – இப்படியொரு சம்பவத்தை வைத்து இந்திய முஸ்லிம்கள் மீது வெறுப்பை ஏற்படுத்துவது அரசியலுக்கு பலன் கொடுக்கும் என நினைத்தார்களோ என்னமோ? அவர்களின் உளவுத்துறை வேலை செய்யவில்லை. இறுதியில் இந்தியாவின் பிணையில் இருந்த தீவிரவாதியை விடுவித்தனர்.
கதை: “ஆயுதம், பீரங்கி தொடங்கி சவப்பெட்டி வரையிலும் ஊழல்”
bangarulaxman_stingop
இந்தப்படம் கிரியேட்டிவ் காமன் உரிமம் பெற்றதல்ல – நன்றி: ராய்டர்ஸ்)
உண்மை: “ஆயுதம், பீரங்கி தொடங்கி சவப்பெட்டி வரையிலும் காங்கிரசும் பாஜகவும் மாற்றி மாற்றி  ஊழல்”
கதை: “ஊழல்வாதியையும், ஊழல்வாதிகளுக்கு துணையாக இருந்தவர்களையும். அவர்களோடு கூட்டு சேர்ந்த தீவிரவாதிகளையும். அசோக் உள்ளிட்ட ‘நல்ல’ கதாப்பாத்திரங்கள் அழிக்கிறார்கள்’.
உண்மை: உண்மையில், நமது நாட்டிற்கு விடப்பட்டிருக்கும் சவாலான ஊழலையும், அப்பாவி மக்கள் கொலைகளின் மூலம் தனது அரசியல் வெற்றியை சாதிக்க கணக்குப் போடும் சக்திகளிடமிருந்தும் இந்தியாவை விடுவிப்பது நமது கைகளில்தான் உள்ளது. சரியான மாற்று எது என்பதை அறிந்து, அதன் வழியே இந்தியாவை திருப்புவது இளைஞர்களாகிய நமது கடமை.
ஆம். இது ‘ஆரம்பம்’ மட்டுமே …

புதன், 2 அக்டோபர், 2013

இன்று காந்தி ஜெயந்தி, இந்தியா அரசாங்கத்தின் பூந்தி!!!

காந்தியை கொன்ற போது கோட்சே யென் தன்னுடைய கைய்யில் இஸ்மாயில் என்று இஸ்லாமிய பெயரை பச்சை குத்திக்கொண்டு வார வேண்டும். 

காந்தியை கொன்றது ஒரு இஸ்லாமியன் என்று அவசர அவசரமாக இந்தியா முழுவதும் இந்துதுவா ஆதரவாளர்கள் ஏன் பொய் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

காந்திக்கொள்ளப்பட்ட சில மணிநேரத்திற்குள் நேரு வானொலி மூலமாக காந்தியை சுட்டது இஸ்லாமியர் அல்ல ஒரு இந்து என்று அறிவிப்பை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்?

அப்படி செய்யாவிட்டால் இந்தியாவில் பல்லாயிரம் கணக்கான இஸ்லாமியர்களை படுகொலை செய்திருப்பார்கள். இப்படி எல்லாத்துக்கும் என்ன காரணம் என்று தெரிந்தும் அதை எல்லாம் முறையாக விசாரிக்காமல் வருடா வருடம் காந்தி ஜெயந்தி கொண்டாடும் இந்திய அரசாங்கத்தை என்ன செய்யலாம்??????????

பூந்திதான் குடுக்க முடியும்