OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 20 பிப்ரவரி, 2013

இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள்!!!


 
பொதுவாக எல்லோரும் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் மிகவும் கொடூரமானவை, மனிதாபிமான மற்றவைகள் என்று கூறுகின்றனர். இதற்க்கு காரணம் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவதே காரணம்.ஆனால் சற்று நடுநிலையோடு சிந்தித்தால் இந்த சட்டங்கள் தான் மனிதனுக்கு நன்மை விளைவிக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மேலும் இழந்ததை மீட்பது தண்டனைகளின் நோக்கம் அல்ல என்பதை நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். அப்படி என்றால் எதற்காக இப்படியான தண்டனைகள்:-

1.   குடுக்கக் கூடிய தண்டனை மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதிலிருந்து தடுக்க வேண்டும்.
2.   ஒரு குற்றவாளிக்கு வழங்க கூடிய தண்டனையைக் கண்டு மற்றவர்கள் அது போல செய்ய பயப்படவேண்டும்.
3.   குற்றவாளியால் பாதிக்கப்பட்டவன் தனக்கு நீதி கிடைத்துவிட்டது என்று மன நிறைவு அடையவேண்டும். 
இதை தவிர வேற காரணங்கள் இருக்க வாய்ப்பில்லை.

புதன், 13 பிப்ரவரி, 2013


தமிழன் என்று சொல்லிக்கொள்கின்ற எவனும் விஷ்வரூபத்தை ஆதரிக்க மாட்டான்!!!!!!!!!
(காவி சிந்தனையாலணை தவிர)

முதலில் ஒன்றை தெளிவாக பதியவைக்கிறேன், 99% நாங்கள் (முஸ்லீம்கள்) தீவிரவாதத்தை ஆதரிப்பதில்லை, ஆதரிக்கவும் கூடாது. அநியாயமாக ஒருவன் ஒருத்தனை கொன்றால் அதை இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்கிறான் திருமறை குர்ஆனில். 1% முஸ்லீம்கள் இஸ்லாத்தின் சட்டங்களை சரியாக விளங்காமல் ஜிகாத் என்பதை தவறாக புரிந்துக்கொண்டு இந்த மாதிரி பயங்கர செயல்களை செய்கிறார்கள், இந்த 1% இஸ்லாத்தில் மட்டும் என்றில்லை அனைத்து மதங்களிலும் உண்டு இது மறுக்க முடியாத உண்மை.

வலைத்தளங்களில் பதிவு எழுதுபவர்களும் சரி அதனை படித்துவிட்டு கருத்து தெரிவிப்பதும் சரி ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் இஸ்லாமியர்களுக்கு எதிராகவே எழுதுகிறார்கள். இஸ்லாமியர்கள் விஷ்வரூபத்தை எதிர்ப்பதால் உடனே அவர்களை ஆஃப்கானிஸ்த்தான் ஆதரவாளர்கள் என்கிறார்கள். எங்கள் மதத்தை இழிவு படுத்துவதாக இந்த படம் இருக்கு என்பதாலேயே இதனை எதிர்க்கிறோம், இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை???? நாங்கள் என்ன உங்களையா எதிர்த்தோம்??? ஏன் நீங்கள் கமலுக்கு வரிந்துகட்டிக் கொண்டு வருகிறீர்கள்???? மேலும் நாங்கள் கமலை கூட எதிர்க்கவில்லை, அவர் சொல்லிய விஷ கருத்தைதான் எதிர்த்தோம் இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தால் தலைகுனியவேண்டியது தமிழன் தான். கமலின் கதைப்படி அவந்தானே முல்லா உமருக்கு பதுங்கி இருக்க இடம் குடுத்தது.

ஆப்கானிஸ்தானை பற்றி படம் எடுத்தால் உங்களுக்கு என்ன என்று கேட்கும் அறிவு ஜீவிகளே? பாகிஸ்த்தானில் ஒரு பெண்ணை ஒருத்தன் சுட்டால் உங்களுக்கு என்ன? இப்ப மட்டும் எங்கே இருந்து அந்த பாசம் பொத்து கொண்டு வந்தது? சரி ஒரு இறக்கத்தில் வந்துடுச்சு என்றே வைத்துக் கொள்வோம், உங்கள் இறக்கப்படி பார்த்தால் ஏன் பாலேஸ்தீனில் இஸ்ரேல் ஆர்மீகளால் கொல்லப்படும் ஒரு பெண்ணின் மேலோ, குழந்தையின் மேலோ வரவில்லை, அதை ஏன் இந்த ஊடகங்கள் பெரிது படுத்தவில்லை???? இது உங்கள் கண்களுக்கு தீவிரவாதமாக தெரியவில்லையா?  

அப்புறம் இந்த ரிசானா என்ற பெண்ணை சௌதியில் தூக்கு தண்டனை குடுத்ததற்க்கு ஆதரவு என்கின்றோமா? அதனால நாங்கள் தீவிரவாதியாம். அந்த பெண் ஒரு குழந்தையை கொன்ற குற்றவாளி என்று கைது செய்யப்பட்டு, கடந்த ஐய்ந்து வருடங்களாக விசாரணை நடத்தி, இந்த தண்டனையை நிறைவேற்றி உள்ளார்கள். இதனை சும்மா ஊடகங்களில் மட்டுமே பார்த்தும் படித்தும் விட்டு இந்த பதிவர்களும், ஊடகங்களும் சௌதியை சும்மா கிழி கிழின்னு கிழிச்சாச்சு!!!!!!!!!!!!!!! இங்கேயும் நாங்க அதனை ஆதரித்து பேசவில்லை, இந்த கேடுகெட்ட ஜென்மங்கள் இஸ்லாமிய சட்டங்களை பற்றி விமர்சித்தார்கள் அதனைத்தான் எதிர்த்தோம், இதை புரிந்துக் கொள்ள முடியவில்லை உங்களுக்கு எதுக்கு 6 அறிவு ???????????

அப்புறம் அஜ்மல் மற்றும் அப்சல் தூக்கிர்க்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோமாம்? அதனால நாங்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றோம் என்று குதிக்கின்றாராகள் இந்த கூமுட்டைகள்!!! இந்த ரெண்டு பெரும் குற்றம் நிறுப்பிக்கப்பட்டவர்கள் என்றே வைத்துக் கொள்வோம், அப்படி பார்த்தால் இவர்களுக்கு முன்னாள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் நிறுப்பிக்கப்பட்ட அந்த மூன்று பேரை ஏன் இன்னும் தூக்கில் போடவில்லை?????  அப்பாவி மக்களை யார் கொன்றாலும் அவனுக்கு தூக்கு என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. அப்படி பார்த்தால் இந்த நாட்டில் முதலில் தூக்கில் போடப்பட வேண்டியவர்கள் லிஸ்ட்டில் முதல் ஆள் நரேந்திர மோடி!!!!!!!!!!!!!!!

கடைசியாக, டெல்லி பெண் கற்பழித்து கொல்லப்பட்டது, குற்றவாளிகள் இவர்கள்தான் என்று தெரிந்தும், இன்னும் எந்த ஒரு தீர்ப்பும் சொல்லாமல், வைத்திருப்பதும் ஏனோ???????????? அப்புறம் நேற்று வினோதினி, அநியாயமாக ஒரு உயிரை கொண்டிருக்கின்றான், அந்த பெண்ணே மரண வாக்குமூலம் குடுத்துள்ளால் நான் பட்ட வேதனையை அவனும் பட வேணும் என்று” இன்று இதனை ஆதரிக்கும் அதிமேதாவிகளே  இஸ்லாம் கூறுவதும் அதுதான்?????????

அல் குரான் 05:45
உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக் மூக்கு, காதுக்கு காது, பாலுக்கு பள்ளு மற்றும் காயத்திர்க்கு பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்கு) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்பல்லிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.”

அடுத்த பதிவு :- இன்ஷா அல்லாஹ், இந்த இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் பற்றி!!!!!!!!!!!!! விரைவில்   

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

சிங்கத்திற்க்கும் , வவ்வாலிர்க்கும் ஒரு கண்டன பதிவு!!!!!!!!!!!!!!


இந்த பதிவில் வரும் எல்லாம் வெறும் கற்பனையே!!!!!!!!!!!!!!

இந்த பதிவில் வரும் பெயர்கள் வேறயாரையாவது நியாபகம் படுத்தினால் நிர்வாகம் பொறுப்பல்ல.
தமிழ் சினிமாவில் காட்டப்படும் முஸ்லிம்கள் வந்தேறிகளாகவே உள்ளனர். முஸ்லிம்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் அல்ல எனும் விஷமக் கருத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் நிறுவுகின்ற வகையில் தொடர்ச்சியாக காட்சிகள் அமைக்கப்படுகின்றன.

தமிழ் சினிமாவில் தோன்றும் முஸ்லிம்கள் தமிழுக்கு அறவே தொடர்பில்லாதவர்களாக சித்தரிக்கப் படுகின்றனர். கழுத்தில் தாயத்தும், தலையில் தொப்பியும், லுங்கியும் அணிந்து, கையில் கத்தியுடன் கசாப்புக் கடைகாரனாகவோ, பச்சைத் தலைப்பாகையுடனும் விகாரமான தோற்றத்துடனும் சாம்பிராணி போடுபவராகவோ காட்சியளிக்கும் முஸ்லிம் 'ஹரே பாய்..நம்பல் கீ' என்றுதான் பேசுகிறார்.
இதுதானா தமிழ் முஸ்லிம்களின் அடையாளம்? இதுவா நமது கலாச்சாரம்? 'நாம் இன்னும் பதிவு செய்யப்படாத சமூகம்' என்று உணரப்போகிறோம். ஆனால், தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் முஸ்லிம்கள் ஆற்றிய அரும்பணி பற்றியும், நடைமுறை வாழ்வில் கூட தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் குறித்தும் யார் படமெடுப்பது?
'சாதம்' என்று உயர் சாதியினர் பேசுவது போல் அல்லாமல் 'சோறு' என்று நல்ல தமிழில் உச்சரிப்பவர்கள் முஸ்லிம்கள். குழம்பை 'ஆணம்' என்றும் பழையதை 'நீர்ச்சோறு' என்றும் தூய தமிழில் பேசுபவர்கள் முஸ்லிம்கள். சாப்பிட்டாயா என கேட்காமல் 'பசியாறினாயா' என்று கேட்பவர்கள் முஸ்லிம்கள்.
பூஜை புனஸ்காரங்கள் என்று சொல்லாமல் 'தொழுகை' என்று அழகுத் தமிழில் அழைப்பவர்கள் அல்லவா முஸ்லிம்கள். இன்னும் எத்தனை எத்தனை தகவல்கள்? இந்த உண்மைகளை யார் பதிவு செய்வது?
நாம்தானே செய்ய வேண்டும். நமக்குத்தான் நம் வாழ்வியலின் ஆழ அகலம் தெரியும்; வலியும் வேதனையும் புரியும். நமது கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியத்தின் வலிமை தெரியும். இனி நமக்கென்று ஒரு ஊடகம் ஒன்றை நாமே உருவாக்கினால்தான், இந்த காவிதேசத்தில் சத்தியத்தை நிலை நாட்ட முடியும்.
அப்படி இல்லை என்றால் சில சிங்கங்களும், வவ்வால்களும், நம்மை சீண்டிப்பார்க்கத்தான் செய்யும். 

திங்கள், 11 பிப்ரவரி, 2013

உட்கார்ந்து யோசிச்சது


என்ன நடக்கிறது பண்ணையில்:-
இது ஒரு பண்ணை பற்றிய கற்பனை கதை. இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. இந்த கதாபாத்திரங்கள் யாரையாவது நியாபகம் படுத்தினால் அதற்க்கு நிர்வாகம் பொறுப்பில்லை.


கதைக்களம்:- பண்ணை
கதாநாயகர்கள்: சிங்கம் (பண்ணை நிர்வாகி), குள்ள நரி, ஒட்டகம் (தலைவர்), புலி, சிறுத்தை மேலும் சில விலங்குகள் (பெயர்கள்) கதையில் சொல்லப்படும். இது முழுக்க முழுக்க நகைசுவை மட்டுமே.
முதலில் இப்ப உள்ள டீசல் விலை உயர்வை கண்டித்து பண்ணையில் உள்ளவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்று பார்ப்போம்:-
சிங்கம்:- இது குறித்து நான் மௌனமாய் இருப்பதற்குக் காரணம்..என் மௌனம் ஆயிரம் பதிலுக்கு சமம் என்பதால் தான்.

ஒட்டகம்:- மக்கள் பராட்டா விலை உயர்ந்தால் மௌனமாய் உள்ளனர். வாடா விலை உயர்ந்தால் மௌனமாய் ஏற்றுக் கொள்கின்றனர். டீசல் உயர்ந்தால் ஏன் கத்துகிறார்கள்? என்றே புரியவில்லை.

சிறுத்தை:- நாம இருக்க வேண்டிய காட்டை விட்டு இங்கே இந்த பண்ணையில் வந்ததால்தான் இந்த பிரச்சனை எல்லாம் நாம பேசவேண்டியுள்ளது.
குள்ள நரி:- இந்த விலை உயர்வுக்கு ஒற்றுமையை குலைத்த, விலங்குகள் காட்டில்தான் இருக்கும் என்று கூறும் இயக்கத்தை சேர்ந்த மிருகங்களே காரணம். அடுத்தத் தேர்தலில் அவர்கள் நின்றாள் நான் நிர்க்க மாட்டேன்.
புலி:- இந்த விலை உயர்வால் பண்ணையில் இடைதேர்தல் வர வாய்ப்பிருக்கு.

யானை:- இந்த உயர்வுக்கு காரணம் குள்ள நரியும், புலியும் தான். அதற்கான ஆதாரங்களைத் திரட்டிவருகிறேன்.கூடிய விரைவில் இவர்கள் மீது வழக்குத் தொடர்வேன்.

மற்ற விலங்குகள் (கழுதை, எருமை, ஓனாய், காட்டெருமை):- பண்ணையில் இருந்து இந்த உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தபடும்.

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

அமீரக கோர விபத்து!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


இன்று காலை அலுவலகம் வந்தவுடன் கண்ணில் பட்ட செய்தி அமீரகத்தில் உள்ள அல்அயின் இல் நடந்த ஒரு கோர விபத்தில் 24 தொழிலாளர்கள் பலி, இதில் இறந்த அத்தனை பெரும் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள், எனக்கு தெரிந்த வரை இதில் அதிகமாக பங்களாதேசிகளும், இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் அதிகமாக இருப்பார்கள்.

இறந்தவர்களில் இதுவரை 16 நபர்கள் பங்களாதேஷ் எனவும், ஒருவர் இந்தியர் எனவும் தெரியவந்துள்ளன், மீதமுள்ள 7 நபரால் யார் என்று இதுவரை தெரியவில்லை, 75 டன் கொண்ட மணல் லாரி ஒன்று தொழிலாளர்களை ஏற்றி சென்ற பஸ் ஒன்றில் மோதி அதன் மீது கவிழ்ததால் இந்த விபத்து நெர்துள்ளது, இது வரை யார் மீது தவறு என்று தெரியவில்லை, ஆனால் இரண்டு வாகன ஓட்டிகளும் உயிர்பிழைதுள்ளனர், ஒருவர் இரண்டு கால்களும் இழந்துள்ளார்.

இறந்தவர்களின் குடும்பத்தார்கள் மனக்கஷ்ட்டதை போக்க இறைவனிடம் பிராத்திப்போம்.ஒரு கும்கி செய்தி:-
அமீரகத்தில் உள்ள எடிசலாத் (etisalat) தொலைதொடர்பு நிறுவனம் குறைவான சம்பளம் வாங்கும் வெளிநாட்டவர்களை கருதி அவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் உள்ள வாய்ப் (voip) காலிங் கார்டை அறிமுகம் செய்துள்ளது. 

திங்கள், 4 பிப்ரவரி, 2013

தமீழக மக்களுக்கு தேவை விஷ்வரூபமல்ல விஷமிகளின் ரூபங்கள்இதுவரை விஷ்வரூபத்தை பற்றி பல ரூபங்களில் எழுதியாச்சு, இத்துடன் இப்படடம் கடைசி மாதிரி இந்த பதிவுடன் முடித்துக் கொள்வோம், சரி அப்படியும் எதையுமே எழுதாமே இருந்தா தம்பி டீ இன்னும் வரலைன்னு வேற சில குரல்கள். சரி டீய பாத்தியாவது எழுதலாம்னு பார்த்த, வடை போச்சேன்னு சொல்றாங்க. எதையும் ஆக்கபூர்வமாய் எழுதவேண்டும் இல்லையேல் எழுதவே கூடாது என்பது என் கருத்து. சும்மா கோவில் யானையை கும்கி யானையா மாத்தூர வேலை எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது.

சமீபகாலமாய் விஷ்வரூபத்தை பற்றி சும்மா தாறு டாராக அடித்து துவைத்து காயப்போட்டாச்சு. ஆனா கடைசியாக சில காட்சிகளை நீக்கிவிடுகிறேன் என்று சுமூக தீர்வுக்கு வந்துவிட்டனர். இந்த காம(கமல்)ஹாசன் இதை முன்னரே செய்திருந்தால் இத்குடன் சேர்த்து எனக்கு ஒரு 10 பதிவுகள் மிச்சமாகி இருக்கும். ஆனால் என்னை பொறுத்தவரை இதற்க்கு நம்ம இஸ்லாமிய அமைப்புகள் ஒத்துக்கொண்டிருக்கவே கூடாது?? இந்த விஸ்வரூப பிரச்சனையில்தான் எத்தனை காவி சிந்தனையாளர்கள் வெளிச்சத்திர்க்கு வந்தார்கள், அவர்களுக்கு எங்கே புரியும் நமது உணர்வுகள், தலைவலியும், வையித்து வலியும் அவனவனுக்கு வந்தால்தான் தெரியும்!!!!!!!!!!!

என்னதான் காட்சிகளை நீக்கினாலும், பாலில் இருந்து தண்ணியை எப்படி பிரிக்க முடியாதோ அந்த உண்மை படம் பார்த்துவிட்டு போற எல்லோருமே ஒரு நிமிஷமாவது பக்கத்துல தொப்பி வைச்சுக்கிட்டு நடந்து போரவனை பயத்தோட பார்க்கிற பயங்கரம் படத்திலே இருக்கு!!!!!

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

விஷ்வரூபத்தொடர் - கற்பனை வளர்ந்த அளவிர்க்கு மூளை வளரவில்லை


இவனுங்க காமெடிக்கு வர வர ஒரு அளவே இல்லாமல் போய்ட்டே இருக்கு!!!!!!!!!!!!! இவனுங்க எல்லாம் காமெடியன்னு தெரியாமலேயே காமெடி பண்ணிக்கிட்டு இருக்கானுங்க, நீங்களும் பார்த்துட்டு யதாவது பண்ணுங்க!!!!!!!!!!!!!!

http://malaikakitham.blogspot.in/2013/02/blog-post_3.html