OnlinePJ

Thanks for Visiting my Page

சனி, 8 ஜனவரி, 2011

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி: நாளொன்றுக்கு 25 ரூபாய் ஊக்கத் தொகையுடன் தொழில் பயிற்சி‏


கடலூர் : 

          கடலூர் மாவட்டத்தில் தொழில் திறன் பயிற்சியளித்து வேலைவாய்ப்பு வழங்க இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

              தொழில் திறன் பயிற்சி பெற 18 முதல் 35 வதுக்குட்பட்ட இளைஞர்களிடமிருந்து நாளொன்றுக்கு 25 ரூபாய் ஊக்கத் தொகையுடன் வெல்டர், எலக்ட்ரீஷியன், ஸ்டீல் பிட்டர், ஆட்டோ மொபைல் மெக்கானிக், ஏ.சி.ரெப்ரிஜிரேஷன் போன்ற பயிற்சிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

             தற்போது வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்படும் விருத்தாசலம், நல்லூர், மங்களூர், காட்டுமன்னார்கோவில் ஆகிய ஒன்றியங்களிலிருந்து விண்ணப்பிக்கத் தேவையில்லை. மற்ற ஒன்றியங்களில் தகுதி வாய்ந்த இளைஞர்கள், மகளிரிடமிருந்து முகவரி, கல்வித்தகுதி, வருமானச்சான்று, இருப்பிடச் சான்று, ஜாதிச்சான்று, புகைப்படம் போன்ற தகவல்களுடன் பயிற்சி பெற விரும்பும் தொழிலையும் குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம்.

           கடலூர் மாவட்டத்தில் பல்வேறு வேலைவாய்ப்புடன் இணைந்த தொழில் திறன் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு வழங்கிட பயிற்சி நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.போதியளவு கட்டமைப்பு, வசதியுள்ள நிறுவனங்கள், முக்கூட்டு ஒப்பந்தம், வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனம், நிதி வழங்கும் நிறுவனம்

பயிற்சி அளிக்க விருப்பமுள்ள நிறுவனங்கள் 

திட்ட அலுவலர்
மகளிர் திட்டம்
71 சீத்தாராம் நகர்
புதுப்பாளையம் மெயின்ரோடு
கடலூர். 

             என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: