OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 28 ஏப்ரல், 2014

புரோட்டா வாழ்க.


ஒவ்வொரு பொருளிலும் குறை கண்டு பிடித்துக் கொண்டு இருந்தால் அப்புறம் ஒன்றையும் சாப்பிட முடியாது.

மைதா மாவில் செய்யப் படும் புரோட்டா உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று இப்போது சொல்லுகிறார்கள். புரோட்டா, இன்றோ நேற்றோ கண்டுபிடிக்கப்பட்ட பதார்த்தம் அல்ல. ஏறக்குறைய ஐம்பது வருடங்களாக புழக்கத்தில் இருந்து வரும் ஒரு உணவுப் பண்டம். நமக்கு முந்தி இரண்டு தலைமுறையினர் இந்த புரோட்டாவை சாப்பிட்டு ஜீரணம் பண்ணி வாழ்ந்து செத்துப் போனார்கள். அவர்கள் எல்லாம் ஒன்றும் சொல்லவில்லை. அப்போதும் டாக்டர்கள் இருந்தார்கள்.

சரி, புரோட்டாவை விட்டு விடுவோம். புரோட்டா தவிர மைதா மாவில் வேறு என்னென்ன தின்பண்டங்கள் செய்கிறார்கள் என்று பார்ப்போமா. அனைத்து பிஸ்கோத்துகள், கேக்குகள், முதலான அனைத்து பேக்கரி ஐட்டங்களுக்கும் மூலப் பொருள் மைதாவே. மைதா மாவில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் கணக்கிலடங்கா. அனைத்து ஓட்டல்களிலும் தயாரிக்கப்படும் பூரி, சப்பாத்திகளில் பாதிக்கு மேல் மைதா கலக்கப்படுகிறது. "நான்", "ருமானி" ரொட்டி இவைகளுக்கு மூலப்பொருள் மைதா மட்டுமே.

மைதா மாவிற்கு எதிராக சொல்லப்படும் முக்கியமான குற்றச்சாட்டு, வளர்ந்த நாடுகளில் இதை புறக்கணித்து விட்டார்களாம். அதனால் நாமும் இதை புறக்கணிக்க வேண்டுமாம். வளர்ந்த நாடுகளின் தரக் கட்டுப்பாட்டு முறைகளை நாமும் கடைப் பிடிக்கவேண்டுமென்றால் இந்தியாவில் சாப்பிடுவதற்கு லாயக்கான உணவு வகைகள் எதுவுமே மிஞ்சாது.

மைதா மாவு கோதுமை மாவை வெளுப்பாக்கி செய்யப்படும் ஒரு மாவு. இந்த வெளுப்பாக்குதலுக்கு "பென்சாயில் பெர்ஆக்சைடு" என்னும் போருளை உபயோகிக்கிறார்கள். அதானால் அந்த ரசாயனம் விஷம் என்று சொல்கிறார்கள். ரிபைஃன்டு ஆயில், சர்க்கரை, இரண்டும் இவ்வாறு ரசாயனங்கள் மூலம்தான் வெளுப்பாக்கப்படுகின்றன. இந்த இரண்டும்தான் சமையலறையின் உயிர்நாடி. இவைகளை என்ன செய்யப்போகிறோம்?

நம் கசாப்புக்கடைகளைப் பார்த்தால் வெள்ளைக்காரன் ஆயுசுக்கும் மட்டனை விட்டு விடுவான். நம் ஓட்டல் கிச்சனைப் பார்த்தால் என்றால் அடுத்த வேளை சாப்பாட்டிற்கு அவன் ஊருக்கே ஓடி விடுவான். கல்யாண வீட்டில் உணவு தயாரிப்பதைப் பார்த்தால் நமக்கே வாந்தி வந்து விடும்.

கைக்குத்தலரிசிதான் உடலுக்கு நல்லது. எத்தனை பேர் இதைச் சாப்பிடுகிறோம்? டபிள் பாலிஷ் செய்த அரிசிதான் மார்க்கெட்டில் விற்பனையாகிறது. அந்த அரிசி சாப்பாடுதான் மல்லிகைப்பூ மாதிரி பார்வைக்கு நன்றாக இருக்கிறது. அதைத்தானே சாப்பினுகிறோம்.

இத்தனை சீர்கேடுகள் இருந்தும் இந்தியன் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்றால் அவனுக்கு இந்த உணவு கிடைப்பதே பெரும் அதிர்ஷ்டமாக இருக்கிறது. தரக் கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற்ற உணவைத்தான் சாப்பிடுவேன் என்று இருந்தால் இந்திய ஜனத்தொகை ஒரே வருடத்தில் சுதந்திரம் வாங்கியபோது இருந்த அளவிற்கு வந்து விடும்.

சரி ஐயா, அப்படி மைதாவில் என்ன விஷத்தை கலக்கிறார்கள் என்று பார்த்தால், மாவை வெள்ளையாக்குவதற்கு பென்சாயில் பெர்ஆக்சைடு என்ற பொருளைப் பயன்படுத்துகிறார்கள். இது செற்கையாகத் தயார் செய்யப்பட்டாலும் அடிப்படையில் இது ஒரு அங்ககப் பொருளே. எல்லா அங்ககப் பொருட்களும் குறுகிய காலத்திலேயே வேதியல் மாற்றம் அடைந்து மறைந்து விடும். மைதா மாவு கடைக்கு விற்பனைக்கு வரும்போது இந்த வேதியல் பொருளின் அளவு, மனிதனுக்குத் தீங்கு விளைவிக்காத அளவிற்குத்தான் இருக்கும். இந்த விஷயத்தை அரசாங்கம் கட்டாயம் கவனித்துக்கொண்டிருக்கும்.

ஏன் இப்போது இந்த மைதா மாவு பிரச்சினை தலை தூக்கியிருக்கிறது என்றால், கேரளாவில்தான் முதலில் இந்தப் பிரச்சினை துவங்கியிருக்கிறது. கேரளாவைப் பொருத்த வரையில் தினம் ஒரு போராட்டம் நடத்தாவிட்டால் அவர்களுக்கு தூக்கம் வராது. மைதா மாவை ஒழிப்போம் என்று காலையில் ஊர்வலம் போய்விட்டு மத்தியானம் டீக்கடைக்குப் போய் ரெண்டு புரோட்டாவும் சாயாவும் சாப்பிட்டு விட்டுத்தான் வீட்டிற்குப் போவார்கள். ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்குவதில் வல்லவர்கள் அவர்கள்.

இந்த மாதிரி சமாச்சாரங்கள் இப்போது ஒரு பேஃஷனாகப் போய்விட்டது. மேனகா காந்தி என்று ஒரு அம்மாள் நாய்களுக்காக கோர்ட்டுக்குப் போய் தெரு நாய்களை கொல்லக்கூடாது என்று தீர்ப்பு வாங்கியிருக்கிறாள். நாய்க்கடி பட்டு ஆஸ்பத்திரிக்குப் போவது சாதாரண ஜனங்கள்தான்.

அந்தக் காலத்தில் பால்தான் சரிவிகித உணவு, எல்லோரும் பால் குடியுங்கள் என்று எல்லா டாக்டர்களும் பரிந்துரைத்தார்கள்.

ஆகவே உணவுக் கலப்படத்தைப் பற்றிய சிந்தனையாளர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப் படுகிறேன். தயவு செய்து இந்தக் கருமாந்திரம் பிடித்த ஊரில் குடியிருக்காதீர்கள். அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டிற்குப் போய்விடுங்கள். நாங்கள் நிம்மதியாக புரோட்டா, சால்னா சாப்பிட்டுக்கொண்டு வாழ்ந்து கொள்கிறோம். புரோட்டா இந்தியன் உள்ளளவும் இருக்கும். புரோட்டா வாழ்க.

மறதி நாம் நாட்டின் தேசியவியாதிஅரசியல்வாதிகள் உண்மையை மட்டும் பேசும் ஒரே தருணம் இந்த தேர்தல் பிரச்சாரம்தான். ஆம் எந்த ஒரு அச்சுரத்தலும் இல்லாமல் யாருடைய அடக்குமுறையும் இல்லாமல் தான் செய்ததையும் தன்னுடைய எதிரி செய்ததையும் மிக அழகாக மேடைபோட்டு சொல்லும் ஒரே தருணம் இந்த தேர்தல் பிரச்சாரம்தான். இவனை பத்தி அவனும் அவனை பத்தி இவனும் மாறி மாறி உண்மையை போட்டு உடைக்கும் உன்னதமான தருணம் இந்த தேர்தல் பிரச்சாரம்தான். ஆனால் ரெண்டு பேருமே திருடனுங்கதான். இதுல மூணாவது நம்மாளு ஒருத்தர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால்......ஏய் தம்பி பேப்பர ஒழுங்கா காட்டுடா”....!!!!!!!!!!!!!!

தேர்தல் பிரச்சாரத்தில் மேடைப்போட்டு சொல்லும் சொத்து விவரங்கள் எல்லாமே சிபிஐக்கும், வருமானதுரைக்கும் முன்னரே தெரியாமல் போனதுதான் எப்படி என்று மக்கள் சிந்தித்ட்டுக்கொண்டே இருக்கிறார்கள்....!!!!!!!!!!!!!

ஒவ்வொரு முறையும் இவர்கள் கேட்பது எங்களுக்கு வாக்களிப்பேன் என்று வாக்குறுதி தருவீர்களா? நியாயமா பார்த்தா நாமதான் அவர்களை பார்த்து கேட்க்கவேண்டும் சொன்னதை நீங்க செய்வீர்களா என்று?  அட இதுக்குடா பரவாயில்லை இன்னும் சில பக்கிகள் நடப்பது பாராளமன்றாமா இல்லை நாடாலாமன்றம் தேர்தலா என்றே தெரியாமல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைவாசிகளை குறைபோம்,  எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக்கொடுங்கள் என்றெல்லாம் பேசுகிறார்கள் இவர்களின் மனுதாக்களை அனுமதித்த தேர்தல் கமிஷனை என்ன சொல்வது...!!!!!!!!!!!

தேசிய கட்சிகளும் சாதாரணமாக விடவில்லை. நாங்கள் செய்த பத்தாண்டு சாதனைகளை தொடர வழி செய்யுங்கள் என்று வாய் கூசாமல் புளுகுகிறார்கள். மற்றொருவரோ, அவரின் சாதனையை பட்டியல் போடவே நேரம் இல்லாமல் இருக்கிறார். அந்த சாதனை பட்டியலில் சில வேதனை பட்டியல்கள் மறைந்து விடுகிறது. ஆனால், இவரை தான் இந்தியாவின் எதிர்கால ஒளி விளக்கு, வழிகாட்டி என்று எல்லோரும் நம்புகிறார்கள். ஹ்ம்ம்....நம்பி தானே ஆகணும்... வேற வழி ?
மக்கள் யாரும் யோசிக்கவே மாட்டார்கள் என்று நினைத்து விட்டார்கள். யாரும் செய்திதாள்கள் படிப்பதில்லை; செய்திகள் கேட்பதில்லை என்று அரசியல்வாதிகளின் நினைப்பு. ஆனால் அதுவும் கிட்டதிட்ட உண்மைதான். ஆம். நம் பாரத தேசத்திற்கென்றே பொதுவான வியாதி ஒன்றுள்ளது.

மறதி- நம் நாட்டின் தேசிய வியாதி. இந்த வியாதி இருக்கும் வரை நம்மால் எந்த ஒரு நல்ல தெளிவான முடிவையும் (ஆட்சியையும்) எடுக்க முடியாது. நம் மக்கள், போன ஆட்சியில் நடந்ததை இந்த ஆட்சியில் மறந்து விடுவார்கள்; இந்த ஆட்சியில் நடப்பதை அடுத்த ஆட்சியில் மறந்து விடுவார்கள். யார் அப்போதைக்கு நல்லது செய்கின்றார்கள் என்று மட்டுமே சிலர் பார்கின்றனர்.

இன்று பல பேர்கள் யாராவது கொஞ்சம் நல்லவர் வந்தால் போதும் என்ற மனநிலையில் தான் உள்ளார்கள், ஆனால் யாருமே தகுதியானவர் வரவேண்டும் என்று நினைப்ப்தே இல்லை. தகுதியானவர் வரவேண்டும் என்றால் ஜெயிக்கிற பக்கமே சாய்வோம் என்று நினைக்காமல், துட்டுக்கு விசுவாசமாய் வோட்டு போடாமல் இருந்தாலே போதும் ,நல்ல மாற்றம் வரும்

புதன், 2 ஏப்ரல், 2014

உட்கார்ந்து யோசிச்சது-2014

மகன்:- I am a complan boy
மகள்:- I am a complan Girl 
தந்தை:- என்ன கொடுமைடா இது, நான் பெத்த புள்ளைங்க கண்ட கண்டவன் பேரையெல்லாம் சொல்லிக்கிட்டு திரியுது.

நீதிபதி:- இந்த கோர்ட்டில் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
அரசியல்வாதி:- உங்கள் பொன்னான வாக்குகளை எனக்கே அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் யுவர் ஆனார்.
நீதிபதி:- ????????????????


நீதிபதி:- சாகரதுக்கு முன்னாடி கடைசி ஆசை ஏதாவது இருந்தா சொல்லு
குற்றவாளி :- என்னை தலைகீழா தூக்குள போடணும் எஜமான் .
நீதிபதி:- ????????????????

"உங்க மெஸ்ல, கல்யாணம் ஆனவங்களுக்குதான் வேலை குடுபீங்களா?
"ஆமா அவங்கதான் கீழ்படிதலா வேலைப்பாப்பாங்க
"சரி ... கல்யாணம் ஆனவங்களைதான் மெஸ்லே சேர்ப்பீங்கலாமேய அது ஏன்??
" யோவ் அவன்தான்யா எத குடுத்தாலும் பேசாம சாப்பிட்டுவிட்டு போவான்.. 


"என்னதான் நெருப்புக்கோழியா இருந்தாலும் அவிச்ச முட்டை போடாது!!!!!!!!!!!!!!!

மாணவன்1:- டேய் மாப்ளே தென்னை மரத்துல ஏரிப்பார்த்தாள் ஆர்ட்ஸ் காலேஜ் பொண்ணுங்க எல்லாம் தெரியுதுடா
மாணவன்2:- கைய விட்டு பாரு மச்சி மெடிக்கல் காலேஜ் பொண்ணுங்க எல்லாம் தெரியும் ட.... 

நர்ஸ்:- ஐய்ந்து நிமிடம் கழிச்சு வந்திருந்தால் இவரை காப்பாத்தி இருக்கலாம்
நபர்:- எப்படி??
நர்ஸ்:- டாக்டர் ஊருக்கு போயிருப்பார்!!!!!!!!!!!!!!!!!

படித்ததில் ரசித்தது:- 

எதேச்சையாக தொடும்போது பாக்கெட்டில் மொபைல் இல்லாதது போலத்தோன்றும் அந்த ஒரு நிமிட உணர்வை, நமக்கு அப்படிபட்ட திகில் படத்தாலும் தர முடியாது.....

பாசிடிவ் பதில்:-

ஆசிரியர்:- 10 பேர் சேர்ந்து ஒரு கட்டிடத்தை 20 நாள்ளே கட்டுராங்க. அதே கட்டிடத்தை 20 பேர் சேர்ந்து கட்டினா, எத்தனை நாள்ளே கட்டுவாங்க???
மாணவன்:- ஏற்கனவே கடின கட்டிடத்தை ஏன் சார் மறுபடியும் கட்டனும். 


எப்பவும் இந்த நிகழ்ச்சியில் ஒரு டச்சு வைக்காம இருந்ததில்லை!!!!!!!!!!!!!

கருவறையில் இருக்கும் வரைதான் உன்னை எதிர்ப்பார்க்கும் இந்த உலகம். 
வெளியில் வந்துவிட்டால் நீதா எதிர் கொள்ளவேண்டும் இந்த உலகை...!!!!
#தெருவோரத்தில் அனாதைகள்...!!!!!!!!!!!!!!!!!!!!!!

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

ஏமாற்றாதீர்கள்! ஏமாறாதீர்கள்!!

மார்ச்.31: ஏப்ரல் 1 என்றாலே ஏமாற்றுதல் என்று பொருள் மாறும் அளவிற்கு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி மாறிவிட்டது.
அன்று உலகம் முழுவதும் ஒருவர் மற்றவரிடம் நம்பவைத்து பொய் சொல்லி, நம்பிய பிறகு ஏமாற்றி, அவரை பார்த்து மற்றவர்கள் ஏளனமாகச் சிரித்து மகிழ்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.

இவர்கள் பிறரை ஏப்ரல் ஃபூல் – முட்டாளாக்கி இழிவுபடுத்துவதில் அளாதி இன்பம் அடைக்கின்றனர்.


April Fool’s Day அல்லது All Fool’s Day என்ற ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஏப்ரல் ஃபுல் க்கு பல வரலாறுகள் சொல்லப்படுகின்றது