OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 11 ஜனவரி, 2011

தமிழக முஸ்லிமும், தமிழ் சினிமாவும்.

 இன்று தமிழ் சினிமாக்களில் முஸ்லிம்களை தீவிரவாதியாகவோ, கசாப்பு கடைகாரனாகவோ, சாம்பிராணி ஒடுபவனாகவோ இன்னும் எவ்வாறெல்லாம் கேவலபடுத்த முடியுமோ? அவ்வளவு கேவலப்டுதுகிறார்கள். கொஞ்ச நாட்களுக்கு முன் அம்பேத்கர் பற்றிய ஒரு திரைப்படம்  வெளிவந்தது.
 படத்தின் காட்சியமைப்பில் குறிப்பாக, அதன் தமிழ் மொழியாக்கத்தில் முஸ்லிம் வெறுப்பு அப்பட்டமாகவே வெளிப்படுகிறது. கூர்ந்து கவனித்தால் அது திட்டமிட்டே திணிக்கப்பட்டது போல் தோன்றுகிறது. வட்டமேசை மாநாட்டில் பேசும் போதும், காந்தியடிகளுடன் வாதம் செய்யும் போதும், பிரிவினை கோரும் ஜின்னாவை சந்திக்கும்போதும் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை அம்பேத்கர் பதிவு செய்வதைப் போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்தியச் சூழலில், குறிப்பாக தமிழகத்தில் தலித்துகளும், முஸ்லிம்களும் இணைந்து அரசியல் சக்தியாக வடிவம் பெறுவதை பொறுத்துக்கொள்ள முடியாத ஆதிக்க சக்திகள், முஸ்லிம்களிடமிருந்து தலித்துகளையும், தலித்துகளிடமிருந்து முஸ்லிம்களையும் பிரிக்கின்ற சூழ்ச்சியைக் கையாண்டு வருகின்றனர். அத்தகைய சூழ்ச்சியின் நீட்சிதான் அம்பேத்கர் படத்திலும் எதிரொலிக்கிறது.
அம்பேத்கரை முஸ்லிம்களுக்கு எதிரானத் தலைவராக சித்தரிக்கும் செயலை இந்துத்துவ சக்திகள் நீண்ட காலமாக செய்து வருகின்றனர். அம்பேத்கர் மீது முஸ்லிம்களுக்கு வெறுப்பு ஏற்படவும், முஸ்லிம்களைப் பற்றி தலித்துகளிடம் தவறான எண்ணம் பரவவும் பல்வேறு அவதூறுகளை கட்டவிழ்த்து விடுகின்றனர். எந்தக் காலத்திலும் இரண்டு சமூகங்களும் சேர்ந்துவிடாமல் இருக்க, என்னென்ன வழிமுறைகள் உண்டோ அவை அனைத்தையும் அவர்கள் கையாளுகின்றனர்.
அம்பேத்கரை அரசியல் நிர்ணய சபைக்கும், வட்டமேசை மாநாட்டிற்கும் அனுப்பி வைத்து அழகு பார்த்த சமூகம் முஸ்லிம் சமூகம். ஆனால், அந்த வரலாற்றை மறைத்து விட்டு, வட்டமேசை மாநாட்டில் சென்று முஸ்லிம்களுக்கு எதிராக அம்பேத்கர் பேசுவதுபோல படத்தில் காட்சியமைக்கப் பட்டிருக்கிறது.
பாக்கிஸ்தான் பிரிவினையை ஆதரித்து முதன்முதலில் புத்தகம் எழுதியவர் அம்பேத்கர். ஆனால், ஜின்னாவை சந்தித்து பாக்கிஸ்தான் பிரிவினைக்கு எதிராக அம்பேத்கர் பேசுவது போல சித்திரிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கும், சீக்கியர்களுக்கும் இருப்பது போல எங்களுக்கும் உரிமைகளைத் தாருங்கள் என்று ஒரு முன்னுதாரணத்தைச் சுட்டிக்காட்டி தலித்துகளுக்காக கோரிக்கை வைத்தவர் அம்பேத்கர். ஆனால், 'முஸ்லிம்களுக்கு மட்டும் சலுகை காட்டுகிறார்' என்று காந்தியை அம்பேத்கர் விமர்சிப்பது போல படத்தில் காட்சியமைக்கப் பட்டிருக்கிறது. 
அம்பேத்கர் படத்தில்தான் இப்படி என்றால்...சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த பெரியார் படத்திலும்அதற்கு முன்னர் வெளிவந்த காமராஜர் படத்திலும் கூட முஸ்லிம்களின் நிலை இருட்டடிப்பு செய்யப்பட்டே இருந்தது. காமராஜர் படத்தில் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த எல்லா முக்கியச் சம்பவங்களும் மிக அழகாகத் தொகுக்கப்பட்டிருந்தன. காமராஜரின் எளிமையையும்மக்கள் நலன் சார்ந்த அவரது திட்டங்களையும்டெல்லி அரசியலில் அவர் செலுத்திய ஆளுமையையும்அவரது சமகாலத் தலைவர்களுடனான அவரது உறவையும் தெளிவாக படம்பிடித்திருந்தனர்.
ஆனால்காமராஜரின் அரசியல் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய குடியாத்தம் இடைத் தேர்தலில்முஸ்லிம் லீக்கின் ஆதரவுடன் அவர் வெற்றி பெற்றது குறித்து படத்தில் எந்தப் பதிவும் இல்லை. காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலைத் தீவிரமாக முன்னெடுத்தபோதும்காமராஜரின் வேண்டுகோளை ஏற்று முஸ்லிம் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அவருக்கு ஆதரவாகத் திருப்பிய காயிதே மில்லத் பற்றி எந்தக் காட்சியும் இல்லை. 'வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் முஸ்லிம் வாக்குகள் கிடைக்காமல் போயிருந்தால் நான் தோற்றுப்போயிருப்பேன்என்று காயிதே மில்லத்தின் கரம் பிடித்து காமராஜர் நன்றி கூறிய வரலாறுஅந்தப் படத்தில் இடம் பெறவே இல்லை.
கலைஞர் அரசின் மானியத்துடன்கி.வீரமணியின் திராவிடர் கழகத்தால் தயாரிக்கப்பட்ட 'பெரியார்திரைப்படத்திலும் இந்த அவலம் தொடர்ந்தது.
திராவிட இயக்கத்திற்கும்தமிழக முஸ்லிம்களுக்குமான உறவை வார்த்தைகளில் விவரித்து விட முடியாது. பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரமும் இஸ்லாமிய நேசமும் முஸ்லிம்களிடையே மிகப்பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தியிருந்தது. முஸ்லிம்களின் நிகழ்ச்சிகளிலும்மீலாது சொற்பொழிவு மேடைகளிலும் பெரியார் சிறப்பு அழைப்பாளரானார். அங்கே அவர் முஸ்லிம்களின் அரசியல் பாதுகாப்பு குறித்து முழங்கினார். அது குறித்து அவரது குடியரசு ஏட்டிலும் எழுதினார்.
பெரியார் வழிவந்த அண்ணாவும்கலைஞரும் முஸ்லிம்களுடனான உறவை வலுப்படுத்திக் கொண்டனர். நீடித்து நிலைத்த அந்த உறவு அரசியல் அரங்கில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால்இவை பற்றியெல்லாம் விளக்குகின்ற ஒரு சிறு காட்சி கூட பெரியார் படத்தில் இல்லை.
'இன இழிவு நீங்க இஸ்லாமே அருமருந்துஎன்று மேடைகள் தோறும் முழங்கினார் பெரியார். மதமாற்றத்தை ஆதரித்து தீவிர பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்தவர் பெரியார். மீலாது விழாக்களில் பங்கேற்று 'நபிகளாரின் சிந்தனைகளும்திராவிட இயக்க சிந்தனைகளும் ஒரே சிந்தனைகளேஎன்று வெளிப்படையாக அறிவித்தவர் தந்தை பெரியார். அவரது இந்த முழக்கங்கள் மருந்துக்குக் கூட அந்தப் படத்தில் இடம் பெறவில்லை.
மிக முக்கியமாககாயிதே மில்லத் உடனான பெரியாரின் உறவு முழுவதுமாக அப்படத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தது. காயிதே மில்லத் இறந்தபோது புதுக்கல்லூரியில் வைக்கப் பட்டிருந்த அவரது உடலைப் பார்க்கமுதிர்ந்த நிலையிலும் மூத்திரச் சட்டியைக் கையில் ஏந்தியவாறு ஓடோடி வந்தவர். 'தம்பி போயிட்டீங்களாஎன்று குமுறிக் கொண்டே வந்த அவர், 'நான் போயி இவரு வாழ்ந்திருக்கக் கூடாதாஎன்று குலுங்கினார். உணர்வுப் பூர்வமான அந்த உறவு குறித்து பெரியார் படத்தில் எந்தக் காட்சியும் இல்லை.
பெரியார் படத்தில் ராஜாஜி வருகிறார்அண்ணா வருகிறார்கலைஞர் வருகிறார்வீரமணி வருகிறார். ஆனால் கடைசி வரை காயிதே மில்லத் வரவே இல்லை.
தலைவர்களை புதிய தலைமுறைக்கு நினைவூட்டும் வகையில் அரசு அஞ்சல் தலைகளை வெளியிடுகிறது. காமராஜர்பெரியார்அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. காயிதே மில்லத்தின் அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காமராஜரின் வரலாறும்பெரியாரின் வரலாறும்அம்பேத்கரின் வரலாறும் திரைப்படங்களாக எடுக்கப்பட்டு விட்டன. காட்சி வடிவில் பதிவு செய்யப்படாதஎஞ்சிய ஒரே ஆளுமை நம் காயிதே மில்லத் மட்டும் தான். அவர் அவரது சமகாலத் தலைவர்களைப் பற்றிய படத்திலும் இல்லைஅவரைப் பற்றிய படமும் இல்லை.
தமிழ் சினிமாவில் காட்டப்படும் முஸ்லிம்கள் வந்தேறிகளாகவே உள்ளனர். முஸ்லிம்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் அல்ல எனும் விஷமக் கருத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் நிறுவுகின்ற வகையில் தொடர்ச்சியாக காட்சிகள் அமைக்கப்படுகின்றன.
தமிழ் சினிமாவில் தோன்றும் முஸ்லிம்கள் தமிழுக்கு அறவே தொடர்பில்லாதவர்களாக சித்தரிக்கப் படுகின்றனர். கழுத்தில் தாயத்தும், தலையில் தொப்பியும், லுங்கியும் அணிந்து, கையில் கத்தியுடன் கசாப்புக் கடைகாரனாகவோ, பச்சைத் தலைப்பாகையுடனும் விகாரமான தோற்றத்துடனும் சாம்பிராணி போடுபவராகவோ காட்சியளிக்கும் முஸ்லிம் 'ஹரே பாய்..நம்பல் கீ' என்றுதான் பேசுகிறார்.
இதுதானா தமிழ் முஸ்லிம்களின் அடையாளம்? இதுவா நமது கலாச்சாரம்? 'நாம் இன்னும் பதிவு செய்யப்படாத சமூகம்' என்று இயக்குநர் அமீர் குறிப்பிட்டதை நாம் என்று உணரப்போகிறோம்.ஆனால், தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் முஸ்லிம்கள் ஆற்றிய அரும்பணி பற்றியும், நடைமுறை வாழ்வில் கூட தமிழை வாழவைத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் குறித்தும் யார் படமெடுப்பது?
'சாதம்' என்று உயர் சாதியினர் பேசுவது போல் அல்லாமல் 'சோறு' என்று நல்ல தமிழில் உச்சரிப்பவர்கள் முஸ்லிம்கள். குழம்பை 'ஆணம்' என்றும் பழையதை 'நீர்ச்சோறு' என்றும் தூய தமிழில் பேசுபவர்கள் முஸ்லிம்கள். சாப்பிட்டாயா என கேட்காமல் 'பசியாறினாயா' என்று கேட்பவர்கள் முஸ்லிம்கள்.
பூஜை புனஸ்காரங்கள் என்று சொல்லாமல் 'தொழுகை' என்று அழகுத் தமிழில் அழைப்பவர்கள் அல்லவா முஸ்லிம்கள். இன்னும் எத்தனை எத்தனை தகவல்கள்? இந்த உண்மைகளை யார் பதிவு செய்வது?
இங்கே மேல உள்ள வரிகள் நான் கீற்று என்கின்ற வளைத்ததில் இருந்து எடுத்தேன் நன்றி. அதில் அவர்களின் கருது சினிமாவுக்கும் முஸ்லிம்கள் வேண்டும் என்கின்றார், கண்டிப்பாக நமக்கு அது வேண்டாத விஷயம், தடுக்க பட்ட விசயமும் கூட. சினிமாவில் நுழையாமலே இன்ஷா அல்லாஹ் நாம் யாரென்று அவர்களுக்கு புரிய வைக்க முடியும்.