OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 31 மே, 2012

முஸ்லிம் ! இந்தியாவிலே முதலிடம்!!

 

இம்பால்: மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ)-2012 ஆம் ஆண்டிற்கான 12-வகுப்பு தேர்வில் இந்தியாவிலேயே முதலிடத்தை மணிப்பூரைச் சார்ந்த முஸ்லிம் மாணவன் முஹம்மது இஸ்மத் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

வடகிழக்கு மாநிலத்தில் இருந்து ஒரு மாணவர் இந்திய அளவிலான சி.பி.எஸ்.இ 12-ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெறுவது இதுவே முதன் முறையாகும்.

முஹம்மது இஸ்மத் சி.பி.எஸ்.இ +2 தேர்வில் 500க்கு 495 மதிப்பெண்களை (99.6%) பெற்றுள்ளார். இவர் மணிப்பூர் மாநிலம் தவ்பால் மாவட்டத்தில் லிலாங்கில் Haoreibi MayaiLeikai என்ற ஊரைச் சார்ந்தவர். இவரது தந்தை மவ்லானா பஸீருர் ரஹ்மான் ப்ரமைரி மதரஸா ஆசிரியர் ஆவார். தாயார் இஸ்மத்தின் சிறுவயதிலேயே மரணமடைந்துவிட்டார்.

7 சகோதரிகளை கொண்ட இஸ்மத் குடும்பத்தில் கடைசி நபர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தபோதும் இஸ்மத் படிப்பில் கெட்டிக்காரர். இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா?இவர் வசிக்கும் கிராமத்தில் தினமும் 2 அல்லது 3 மணிநேரமே மின்சாரம் இருக்கும். இதனால் அவர் தனது பெரும் பகுதி நேரத்தை பள்ளிக்கூடத்திலேயே கழிப்பார். தினமும் 8 to 10 மணிநேரம் படிப்பார்.

இவர் ஸெனித் அகாடமியில் பயின்று வந்தார். இஸ்மத்துக்கு +2 பயிலத் துவங்கும் பொழுது ரெஜிஸ்ட்ரேசன் ஃபீஸ் கட்ட இயலாத சூழல் இருந்தது அவரது நிலைமையை புரிந்துகொண்ட ஸெனித் அகாடமியின் செயலாளர் எஸ்.எம்.சிங், கட்டணத்தை செலுத்தியுள்ளார். மேலும் அவருக்கு படிப்பதற்கு தேவையான பொருட்களையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இஸ்மத் உடல்ரீதியாக பலவீனமானவர் என்பதால் நீண்ட படிப்பதையும் அவர் கைவிடும் சூழல் உருவானதாக எஸ்.எம்.சிங் கூறுகிறார்.

இவரது தந்தை கூறுகையில்,இஸ்மத்தின் பலவீனமான உடல்நிலையும், பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையும் கல்வி கற்க தடைக் கற்களாகும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர், தனது மகன் இத்தகைய தடைகளை தாண்டி வெற்றியை ஈட்டியுள்ளதற்கு உதவிய அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதாக கூறினார்.

இஸ்மத் டெல்லியில் உள்ள ஸ்டீஃபன் கல்லூரியில் பயில விரும்புகிறார். இயற்பியல்(பிசிக்ஸ்) பாடத்தை பயின்று விஞ்ஞானியாக மாறவேண்டும் என்பதே இஸ்மத்தின் நோக்கமாகும். மேலும் பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்த பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதவேண்டும் என்பதும் அவரது ஆர்வமாகும்.

ஸெனித் அகாடமி அவரது அடுத்த கட்ட படிப்பிற்கான அனைத்து பொருளாதார உதவிகளையும் அளிப்பதாக தெரிவித்துள்ளது. லிலாங் தொகுதி எம்.எல்.ஏவும் மாநில விவசாய அமைச்சருமான முஹம்மது அப்துல் நாஸிர் ரூ.1,11,111 பரிசுத் தொகையை அறிவித்துள்ளார்.

இஸ்மத் தனது வெற்றியின் சூத்திரமாக கூறுவது என்னவெனில், “ஒருவர் தனது ஆசையை கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நோக்கி அவரது நடவடிக்கைகள் அமையவேண்டும். ஆடம்பரமாக நவநாகரீகமாக வாழ்வதை விட எளிமையாக வாழ்வதிலும், அதிகமாக சிந்திப்பதிலும் ஒருவர் கவனம் செலுத்தவேண்டும். ஒரு மனிதன் தீர்மானித்து செயல்பட்டால் எல்லாம் சாத்தியமே.” என்றார்.!

புதன், 30 மே, 2012

எனக்கு ஏற்ப்பட்ட அனுபவங்கள்............!!!!!!!!!!!!!!!!!இன்று உலகத்தில் எங்கு எடுத்து கொண்டாலும்
, ரத்த சொந்தமே இல்லாத ஒரு உறவு என்றாள் அது நட்பு என்கின்ற உறவுதான். இதை யாராலும் மறுக்கமுடியாது, உலகில் எவ்வளவு பெரிய கெட்டவனாக ஒருவன் இருந்தாலும், அவனையும் நேசிக்கும் ஒரு நண்பன் இருப்பான்.


இப்படி நட்பு என்பது எந்த ஒரு எதிர்பார்ப்புமில்லாமல் வரும். ஆனால் இந்த நட்பை பார்தீங்கன்னா மூன்று காலகட்டமாக பிரிக்கலாம். முதலில் நாம் வீட்டை விட்டு வெளியில் விளையாட ஆரம்பிப்போம், அப்பொழுது நமக்கும் பக்கத்து வீட்டில் உள்ளவனுக்கும் இடையில் ஏற்படும் அதுவே காலப்போக்கில் பள்ளிக்கூட நட்பாக மாறிவிடும், இந்த நட்பானது எப்படியும் பள்ளிக்கூட வாழ்க்கை முடியும்வரை தொடரும், அதாவது 12-ம வகுப்பு வரை, பிறகு சில பேர் அதை அப்படியே கல்லூரிகளிலும் தொடர்வார்கள், இது இரண்டாம் கட்டம், கல்லூரிகளில் இன்னும் வெவ்வேறு திசைகளில் உள்ளவர்களும் நட்ப்பாவார்கள், ஆனால் அவர்கள் எல்லாம் கல்லூரி நாட்கள் முடிந்தவுடன், வெறும் தொலைபேசியிலும், இமெயில் களிலும்தான் தொடர்வார்கள் அதுவும் காலபோக்கில் குறைந்துவிடும் ஆனால் மறைந்து விடாது, இதில் கடைசியாக பார்த்தால் கல்லூரி முடிந்து வேலைக்கு போகுமிடத்தில், இதில் வயதுவித்தியாசம் எல்லாம் கிடையாது, இப்படி இந்த மூன்றிலும், கடைசிவரை நிலைத்து நிற்பது, நமது பள்ளிக்கூட காலங்களில்  நமக்கு கிடைத்த சொந்த ஊர் நண்பர்கள்தான், இந்த மூன்று நிலை நட்பில் பலப்பிரச்சினைகள் வரும், மனிதன் அத்தனை பெரும் ஒரு மாதிரி இருப்பதில்லை என்கின்ற கருதுப்படி பிரச்சினைகள் மாறி மாறி வரும்.

சில நண்பர்கள் எதற்கெடுத்தாலும் குறைகூறிக்கொண்டே இருப்பார்கள், நான் உனக்கு கால்  பண்னினேன், நீ எனக்கு திரும்பி பண்ணலையே, சிலபேர் எப்ப எது சொன்னாலும் வெறும் பொய் மட்டும்தான் பேசுவார்கள், இன்னும் சிலர் நிறையவிசயங்களை பகிர்ந்துகொள்ளவே மாட்டார்கள், ஒரு நல்ல விஷயம் நடந்தாலும் தெரிவிக்கமாட்டார்கள், இன்னும் சில பேர் இருக்கிறார்கள், நண்பர்களிடையில் போட்டுக்குடுத்து கொண்டு குளிர்காய்வார்கள், இது போல நிறைய விஷயங்கள், இதுல உண்மையான நண்பன் புரிந்துகொள்வான். கடைசில பார்த்தா இதுல உண்மையா நட்பா இருக்கிறவங்க மட்டும்தான் மிஞ்சுவாங்க, மற்ற எல்லோரும் பிச்சிப்பாங்க.....................!!!!!!!!!!!!!!!!!!!!!

மேலும் ஒரு உதாரணம், இரண்டு நண்பர்கள் ஒன்றாக இருந்தாலும், ஒருத்தன் இன்னொருதனுடைய தங்கையை காதலித்தால் நண்பந்தான் என்று ஏற்றுக்கொள்ள மறுப்பான்,ஏன் இந்த முரண்பாடு? ஒண்ணுமே தெரியாத ஒருத்தனுக்கு கட்டிக்குடுப்பதைவிட உன் நண்பனுக்கு கட்டிகுடுத்தால்  குறைந்தா போய்விடுவாய்? இதுல நம்பிக்கைதுரோகம் என்றெல்லாம் புழம்புவர்களும் உண்டு, இதில் கொடுமை என்னவென்றால் அவனும் யாரையாவது லவ் பண்ணுவான் அதற்க்கும் இவன்தான் உதவி செய்திருப்பான். அடுதவன் தங்கச்சியை பண்ணினால் லவ், இவன் தங்கச்சியை செய்தால் நம்பிக்கைதுரோகம், உங்க நேர்மை எனக்குக் பிடிதிருக்கு.

மற்றொன்று உயிருக்குயிராய் நட்பாய் இருப்பார்கள்,  சரி இவனுக்கு நமது தங்கையை கட்டிகுடுக்கலாம் என்று செய்தபின்பு, அவன் இவனிடத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுவான், இப்போ நட்பு என்ற பார்வையை விடுத்து மச்சான் (மனைவியின் அண்ணன்) என்று பார்ப்பான், இங்கே தான் மிக பெரிய பிரச்சனை ஆரம்பிக்கும், முன்னர் நண்பனாக தெரிந்தவன் இப்பொழுது உறவுக்காரன், இப்போ இவன் எது சொன்னாலும் கேட்கமாட்டான். நான் புடிச்ச முயலுக்கு மூணு காலூன்னு நிப்பாங்க.

அதனால நட்புன்னு வந்துட்டா, பிரித்து பார்க்க கூடாது, அதுக்காக கூட இருந்துகொண்டே கழுத்தை அறுக்கும் நண்பர்கள் சிலர் இருப்பார்கள் அவர்களை பிரித்துதான் பார்க்கவேண்டும், உதவி செய்ய முடியாலைனாலும், கெடுதல் நினைக்காமல் இருந்தாலே போதும், அதுவே மிக பெரிய உதவி.

என்றும் நட்புடன்...........................


பெட்ரோல் விலை ஏற்றத்தின் விளைவு


பேட்மேன் சென்னையில் இருந்து இருந்தா அந்த ஆளுக்கும் இதுதான் நிலமை.....

என்னத்தான் இருக்கிறது நபிமொழியில்..?

"மூன்றுப்பேர் இருக்கும் இடத்தில் ஒருவரை விட்டு இருவர் மட்டும் தனியே ரகசியம் பேசாதீர்கள்..! " (1)

இப்படி தனிமனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு மட்டுமின்றி அத்தகைய செயல் அந்த மூன்றாம் நபருக்கு மனரீதியாக உளைச்சலை ஏற்படுத்தும் என்பதை தெளிவாக அறிந்து இந்த செயலை தவீர்க்க சொன்னது யாரென்று உங்களால் ஊகிக்க முடிகிறதா...?
முஸ்லிமல்லாதவர்களுக்கு பெரும்பாலும் இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. குறைந்தபட்ச முஸ்லிம்களுக்கே அதிலும் மார்க்க சூழலில் வளர்ந்த முஸ்லிம்களுக்கே இவை நபிமொழிகள் என அறிய வாய்ப்புகள் இருக்கிறது. இதற்கு யார் காரணம்...? எது காரணம்..?

தாடி வைப்பதும் , தொப்பி அணிவதும், வார நாட்களில் மற்றும் குறிப்பிட்ட தினங்களில் நோன்பு வைப்பதும், உபரியான தொழுகைகள் நிறைவேற்றுவதும் மட்டுமே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் வழிமுறை (சுன்னத்) என பொதுவாக இச்சமூகத்தில் முஸ்லிம்களால் புரிய வைக்கப்பட்டு முஸ்லிமல்லாதவர்களால் புரிந்துக்கொள்ளப் படுகிறது.

வெறும் ஆன்மிகத்தை மட்டுமே போதிக்க வந்தவர்களாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் இருந்தால் அவர்களை அல்லாஹ் குர்-ஆனில் அகிலத்தாருக்கு அழகிய முன்மாதிரி - என கூற வேண்டிய அவசியமில்லை. ஆக ஆன்மிகம் மட்டுமில்லாது., அரசியல் தொடங்கி அனைத்துத்துறைகளிலும் மக்களுக்கு உரித்தான பாடங்கள் அவர்கள் வாழ்க்கையிலிருந்து கிடைக்கபெற வேண்டும் என்பதைதான் மேற்கண்ட இறைவசனம் பறைச்சாற்றுகிறது.

பொன்மொழிகள் எனபன மனித வாழ்க்கைக்கு தேவையான விசயங்களை அறிவுரீதியாகவும், அனுபவரீதியாகவும் விளக்கிக்கூறுவதே. ஒருவர் கூறும் பொன்மொழிகளை அவரது வாழ் நாள் முழுவதும் பின்பற்றி நடந்திருப்பார் என்பதற்கு எந்த வித ஆதாரமும் தெளிவாக இல்லை!

ஆனால் நபிமொழிகள் எனபன அப்படியல்ல., நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் தம் வாழ்வில் செயல்படுத்தியது. பிறரை செயல்படுத்த தூண்டியது மற்றும் செயல்படுத்தியதற்கு அங்கீகாரம் கொடுத்தது. இவை முழுவதும் தொகுக்கப்பட்டவையே நபிமொழிகள் என அழைக்கப்படுகிறது.

ஞாயிறு, 27 மே, 2012

இப்பொழுது சொல்லுங்கள்! இரட்டை கோபுரத்தை இடித்தது யார்?

இரட்டை கோபுரத்தை இடித்தது யார் என்று கேட்டால் அனைவரும் சொல்வது ஒசாமா பின்லேடன். ஒரு வீட்டை இடிப்பதற்க்கே 20லிருந்து 30 நபர்கள் தேவைப்படும்போது, உலகத்திலேயே மிக உயர்ந்த கட்டிடம் என்று பெயர் பெற்ற ஒரு கட்டிடத்தை ஒரு தனி மனிதனால் இடித்து தரை மட்டமாக்க முடியுமா? முடியாது என்பதே பலரின் பதில். இரட்டை கோபுரத்தை இடித்ததில் தனி ஒரு மனிதனின் பெயரை குறிப்பிடுவதை விட அதை செய்தது ஒரு கூட்டம் என்று சொல்வதே சரியானது. அப்படியானால் இரட்டை கோபுரத்தை இடித்தது எந்த கூட்டம்? அலசுவோம் வாருங்கள்...


இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நிகழ்விற்க்குப் பிறகு நடந்த சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தோமேயானால், இடித்தது எந்த கூட்டம் என்ற முடிவுக்கு வரலாம்: இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதில் பலருக்கும் பல சந்தேகம் உள்ளது. 

புதன், 23 மே, 2012

பசும்த்தோல் போர்த்திய நரிகள் இந்த நடுநிலைவாதிகள்!!!!!!!!!!!!!!!!!நாங்கள் எந்த இயக்கத்தையும் சாராதவர்கள் என்று சொல்லும் தௌஹீத்வாதிகள் TNTJ வை மட்டும் மறைமுகமாகவோ, நேரடியாகவோ வேறுபடும், சாடுவதுமாக உள்ளனரே ஏன்?

எந்த இயக்கத்தையும் சாராதவர்கள் என்பது ஒரு போர்வை தான். தௌஹீத் ஜமாஅத்தின் பக்கம் மக்கள் நம்பிக்கை  வைத்து செல்வதைப்பார்த்து பிடிக்காத சிலர் அவதூறு பரப்பி மக்கள் மத்தியில் வெறுப்பை விதைப்பார்கள். அதை சாதாரண மக்களும் புரிந்து கொள்வதால் உரிய முறையில் இதை நாம் எதிர்கொள்ள முடியும்.

தௌஹீத் ஜமாஅத் மீது அவதூறு பரப்பினாலும் அதன் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை என்பதை காணும் சிலர் தந்திரமான முறையில் மக்களை தௌஹீத் ஜமாத்தில் இருந்து அப்புறப்படுத்தும் வேலையை செய்வார்கள்.

நமக்கு யாரும் வேண்டாம், நாம் எதிலும் சேராமல் இருப்போம் என்று கூறுவது தான் அந்த தந்திரம். இவர்கள் அவர்களை குறை சொல்கிறார்கள், அவர்கள் இவர்களை குறை சொல்கிறார்கள். நாம் இவர்களை விட நல்லவர்களாக எதிலும் சேராமல் இருப்போம் என கூறி நடிப்பார்கள்.

ஆனால் இவர்களுக்கும் தோல்விதான் கிடைத்து வருகிறது. என்ன தான் மறைக்க முயன்றாலும் அவர்களின் உண்மையான தோலை வெளிபடுத்தும் வகையில் தௌஹீத் ஜமாத்துக்கு எதிராக இயக்கங்களின் நிகழ்ச்சிக்கு ஆள் பிடிக்கும் போதும், அது போன்ற பிரசூரங்கள் வெளியிடும் போதும் இவர்கள் முனாஃபிக்குகள் என்பது வெளிச்சமாகிவிடுகிறது. மக்களும் இவர்களை அடையாளம் கண்டு கொள்கின்றனர்.

ஒருவன் மோசடி செய்கிறான். இவன் செய்வது மோசடி என்று இன்னொருவன் சொல்கிறான். இதைப்பார்க்கும் இந்த நரிகள் கூட்டம் மோசடி செய்பவனுக்கு எதிராக இருக்காமல் இருவரும் சண்டையிடுவதால் நான் நடுநிலை வகிக்கப்போகிறேன் என்று கூறினால் இவனும் திருடந்தானே?

திருட்டில் பங்கு போடுவதர்க்காக அல்லது நாளை நாம் திருடும் போது மற்றவர்கள் சப்போர்ட் செய்ய வேண்டுமென்பதர்க்காக நாங்கள் நடுநிலை என கூறிக்கொண்டு தௌஹீத் ஜமாத்தை மட்டும் எதிர்பதற்க்கு காரணம் இதுதான்.

நடுநிலை வேஷம் போடுவோரில் ஆயிரத்தில் ஒருவர் அனைவரையும் சம்தூரத்தில் வைத்து நடந்து கொள்கிறார். அவர் துரோகம் செய்யவில்லை, நடிக்கவில்லை, ஆனாலும் நல்லவர்களையும் கேட்டவர்களையும் சம தூரத்தில் வைக்கும் குற்றம் செய்தவராக ஆகிறார். ஆனால் அதிகமான நடுநிலைவாதிகள் சந்தர்ப்பவாதிகளாகவும் சத்தியதுக்கு எதிராக காலம் இறங்கியவர்களுக்கு பலம் சேர்ப்பவர்களாகவும் தான் உள்ளனர்.

தௌஹீத் ஜமாத்துக்கும் மற்ற இயக்கங்களுக்கும் போராட்ட வழிமுறைகள் உள்பட பல வேறுபாடுகள் உள்ளன.

போராட்டம் நடத்துவது நம்முடைய இருப்பைக்காட்டி கொள்வதற்க்கு அல்ல. கோரிக்கைகளை வென்றெடுக்க தான் போராட்டம் நடத்த வேண்டும். ஆனால், அதிகமான முஸ்லிம் இயக்கங்களை எடுத்து கொண்டால் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு பெரிய கட்சியுடன் கூட்டணி வைக்கிறார்கள். தேர்தலின் பொது ஆதரவு அளிப்பதுடன் நீர்க்காமல் தொடர்ந்து அதில் நீடிக்கிறார்கள்.

இவர்கள் திமுக கூட்டணியில் இருந்தால் அந்த கட்சியின் கேடுகளை எதிர்த்து போராட மாட்டார்கள். அதிமுக கூட்டணியில் இருந்தால் அதன் தீமைகளை எதிர்த்து போராட மாட்டார்கள்.

திமுக ஆட்சி நடக்கும் பொது அக்கட்சியுடன் கூட்டணி கண்டவர்கள் இட ஒதுக்கீட்டுக்காக கூட போராடியதில்லை,.

அதிமுகவுடன் கூட்டணி கண்டவர்கள் அக்கட்சியின் முஸ்லிம் விரோத நடவடிக்கைக்காக போராடியதில்லை.

இரண்டு கூட்டணிகளில் இருந்து வெளியேற்றப்பட்டால்தான் போராட்டகாலத்திருக்கே வருகிறார்கள்.
அப்படியானால் இவர்களின் நோக்கம் கோரிக்கைகள் அல்ல, தாங்கள் கூட்டணிக்கட்சிக்கு ஆதரவாக மக்களை மாற்றுவதும் அதைக்காட்டி அரசியல் ஆதாயம் அடைவதும் தான்.

இப்படி நன்றாக தெரியும் போது நாம் எப்படி அவர்களுடன் சேர்ந்து போராட முடியும்? நாளைக்கு கோரிக்கைகளை கைகழுவி விட்டு நீர்த்து போக செய்து விட்டால் நடத்திய போராட்டம் அர்த்தமில்லாமல் போய்விடும்.
தௌஹீத் ஜமாத்தும் ஒரு நேரத்தில் அதிமுகவை ஆதரித்துள்ளது, ஒரு கட்டத்தில் திமுகவை ஆதரித்ட்டுள்ளது ஆனால் தேர்தல் முடிந்த கணமே ஆதரித்த கட்சி தவறு செய்யும் போது எதிர்த்து களமிறங்க தயங்கவில்லை.

ஜெயலலிதாவை 2001 சட்டமன்ற தேர்தலில் ஆதரித்தோம், தேர்தல் முடிந்தவுடன் நரேந்திர மோடிக்கு 64 வகையான உணவளித்து விருந்து அளித்த போது உடனே ஜெயலைத்தாவை கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடத்தினோம். அது போல சென்ற நாடாலாமன்ற தேர்தலில் திமுகவை ஆதரித்தோம் ஆனால் அதை தொடர்ந்து முதல்வர் வீடு முற்றுகை உள்ளிட்ட பலபோராட்டளை தௌஹீத் ஜமாஅத் நடத்த தயங்கவில்லை.

இது போல ஒருபக்க சார்பு இல்லாமல் முஸ்லிம் இயக்கங்கள் செயல்படுவதில்லை என்பதால் அவர்களின் சுயநலனுக்கு நாம் உதவ கூடாது என்பதர்க்காக நாம் மற்றவர்களின் போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை.

சில லெட்டர் பேடு இயக்கங்கள் தங்களை வளர்த்து கொள்வதர்க்காக சார்பற்ற போராட்டங்கள் நடத்தினாலும் அவர்கள் மார்க்கத்தில் சமரசம் செய்கின்றனர். தாரை தப்பட்டை அடித்தும், தனிநபர் துதி பாடியும் இன்னும் பல சமரசங்களை செய்வதையும் பார்க்கிறோம். முஸ்லிம் அல்லாதவர்களையும் இஸ்லாம் பற்றி அறியாதவர்களையும் அழைத்து கவுரவப்படுத்தும்வகையிலும் அவர்களை சமுதாயத்தின் காவலர்களாகவும் சித்தரிக்க முயல்கின்றனர்.

இவற்றில் தௌஹீத் ஜமாத்த்ரிக்கு கடுகல்வும் உடன்பாடு இல்லாததால் மற்றவர்களின் போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை.

சுருக்கமா சொல்லனும்னா!!!!!!!!! தூங்குறவனை எழுப்பிடலாம், தூங்குற மாதிரி நடிக்கிறவனை எழுப்ப முடியாது. இந்த நடுநிலைவாதி, போலி ஒற்றுமை பேசுறவாதிகள் இவர்கள் எல்லாம் ஒரே வகைதான்.................
  

ஞாயிறு, 20 மே, 2012

அம்மா ஆட்சியில் இஸ்லாமிய பெயர் தாங்கி கட்சிகள்


அஸ்ஸலாமு அலைக்கும்


அம்மா ஆட்சியில் பங்கு கொண்டுள்ள இஸ்லாமிய பெயர் தாங்கி கட்சிகள் கூட மதுவிலக்கை வலியுறுத்தாத நிலையில், தினமணி தைரியமாக வாய் திறந்துள்ளது.
மதுவிலக்கை அமல்படுத்தினால் அரசுக்குக் கிடைக்கும் ரூ.15,000 கோடி வருவாய் சமூக விரோதிகளுக்குச் சென்றுவிடும்' என்று தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன்,
சட்டப்பேரவையில் விளக்கம் அளித்திருக்கிறார்.

புதன், 16 மே, 2012

முஸ்லிம் மட்டும் என்ன வெறும் மயிரா?


ஏன் இந்த பாரபட்சம்? (எங்கே போனார்கள் இந்த மமக )

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செய்தியில் உள்ள இரண்டு விபத்துளும் அடுத்தடுத்த நாட்களில் தமிழ்நாட்டில் நிகழ்ந்ததாகும். இரண்டிலும் அப்பாவி மக்கள் சிலர் உயிரிழந்தனர். ஆனால் அதற்கு அரசு கொடுத்த முக்கியத்துவம் தான் பாரபட்சமாக உள்ளது. செவ்வாய், 15 மே, 2012

ரொம்ப நேரம் உட்கார்ந்து யோசிச்சது!!!!!!!!!!!!!!ரொம்ப நாள் ஆச்சு இந்த மாதிரி மொக்கை பதிவு போட்டு, கொஞ்சம் சோம்பரிதனத்தின் காரணமாக போட முடியவில்லை, அதுவுமில்லாமல் என்னுடைய நண்பர்களில் சிலர் ஓசில வாழ்க்கையை ஒட்டினாலும், நம்முடைய பதிவை வைத்து கிண்டலடிப்பது குறையவில்லை, அதனால இந்த முறை அவர்களை வெறியேத்தவே கொஞ்சம் நீளமாக இந்த பதிவு.
ஞாயிறு, 13 மே, 2012

நிலநடுக்கம் ஓர் ஏச்சரிக்கைவிஞ்ஞானம் அசுர வளர்ச்சி அடைந்துவரும் நேரத்தில் விஞ்ஞானிகளால் தடுக்கமுடியாத பெரும் சேதங்களும் உலகத்தில் நடக்கத்தான் செய்கின்றன.
விஞ்ஞான வளர்ச்சியில் உச்சத்தில் இருக்கும் ஜப்பான்அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கூட மிகப்பெரிய சேதங்கள் ஏற்படுகின்றன. சுனாமி போன்ற பேராபத்துகள் வளர்ச்சியடைந்த பெருநாடுகளைக்கூட விட்டுவைக்கவில்லை.

2004 ஆம் ஆண்டு இந்தியாஇலங்கை போன்ற நாடுகளைத் தாக்கிய சுனாமியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். பல அதிசயமான நிகழ்வுகளையும் ஆச்சரியக் கண் கொண்டு பார்த்தவர்கள் ஏராளம். இவ்வளவு பெரிய பயங்கரம் நடக்குமாஎன்று கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு பனைமரம் உயரத்திற்கு கடல் அலைகள் ஏற்பட்டு பல லட்சம் மக்களை அள்ளிக் கொண்டு சென்றது.
பூமி பல அடுக்குகளாக அமைந்திருப்பதும் பூமிக்குள் நெருப்பு குழம்புகள் இருப்பதும் இது போன்ற நில நடுக்கங்கள் ஏற்பட காரணமாக அமைகிறது.
பூமியின் மேற்பரப்பு பெரும் பாளங்களாக அமைந்துள்ளது. இவை நகரும் பிளேட்டுகளாக இருக்கிறது. நிலப்பரப்பிலும்நீரின் அடியிலுமாக உள்ள இவற்றில் ஏழு பிளேட்டுகள் மிகப் பெரியதாகவும்குறைந்தது ஒரு டஜன் சிறிய பிளேட்டுகளும் உள்ளன.
இந்தப் பிளேட்டுகள் சுமார் 80 கி.மீ. வரை தடிமன் கொண்டதாக இருக்கிறது. இதனடியில் பாறைகள் கொதிக்கும் குழம்பாக இருப்பதாலும்பூமியின் சுழற்சி வேகத்தில் இந்தப் பாறைக் குழம்பு நகர்வதாலும்மேலே இருக்கும் பிளேட்டுகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதுடன் நகர்ந்தும் செல்கிறது.
இந்தப் பிளேட்டுகள் ஒரு வருடத்திற்கு ஒரு செ.மீ. முதல் சுமார் 13 செ.மீ. வரை நகர்கிறது. இது நமது உலக வேகத்திற்கு மிக சிறியதாக இருந்தாலும் இந்த பிளேட்களின் லேசான உராய்வும் கூட பெரும் பூகம்பம் ஏற்படுத்தக் கூடியவை.
சிறிய உராய்வு கூட ஒரு நாட்டையே தலைகீழாக மாற்றிப் போடும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இந்தியாவில் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ ஆரம்பித்துள்ளது.
இந்தோனேஷியாவின் சும்தரா தீவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு அதைச் சுற்றியுள்ள நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
மனிதர்களைச் சோதிப்பதற்காக அல்லாஹ் இது போன்ற இடர்களை ஏற்படுத்துவான். மனிதர்கள் தங்கள் செயல்களை மதிப்பீடு செய்வதற்காகவும் இதன் பின்னர் திருந்தி வாழ்வதற்காகவும் இதுபோன்ற சோதனைகளை ஏற்படுத்துவதாக அல்லாஹ் கூறுகிறான்.
ஒவ்வொரு வருடமும் ஒரு தடவையோஇரண்டு தடவைகளோ தாங்கள் சோதிக்கப்படுவதை அவர்கள் உணர மாட்டார்களாபின்னரும் அவர்கள் திருந்திக் கொள்ளவில்லை. படிப்பினை பெறுவதுமில்லை. 
[அல்குர்ஆன் 9:126]
இதை உணர்ந்து நடக்கும் நல்லவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்வானாக.