OnlinePJ

Thanks for Visiting my Page
General Knowledge லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
General Knowledge லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 ஏப்ரல், 2013

நிலநடுக்கம் ஏற்பட்டால் குறைந்தபட்சம் எப்படி நாம் நடந்துக்கொள்ளவேண்டும்



புயல், சூறாவளி போன்று இந்த நிலநடுக்கத்தை எடுத்துக்கொள்ள முடியாது இது எப்ப ஏற்படும் என்று படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரியும். சரி அப்படி ஏற்படும் பொது நாம் என்ன பாதுகாப்பு செய்யவேண்டும். இது வெறும் முயற்ச்சிதான் அன்றி முற்றிலுமான தீர்வு அல்ல. ஏன் என்றால் இறைவன் நாடிவிட்டால் நாம் என்ன செய்தாலும் அதை தடுக்க முடியாது.

கட்டிடத்தின் உள்ளே இருப்பவர்கள்:- (பெரிய கட்டிடங்களில் இருப்பவர்களுக்கு மட்டும்)
1.   உடனே தரையில் உட்கார்ந்து கொள்ளவேண்டும்.
2.   அங்குள்ள ஏதாவது ஒரு மேஜையின் கீழே ஒழிந்துக்கொள்ளவேண்டும், அல்லது கைகளால் தலை மற்றும் முகத்தினை மறைத்துக்கொள்ளவேண்டும்.
3.   அங்குள்ள கண்ணாடிகள், ஜன்னல்கள், கதவுகள், சுவர்கள் மேலும் கீழே விழக்கூடிய பொருட்களில் இருந்து தள்ளி இருக்க வேண்டும்.
4.   படுத்திற்க்கும்போது அப்படியே இருக்கவேண்டும், ஏதாவது தலையணை கொண்டு உங்கள் முகத்தை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் அதிர்வு நிர்க்கும் வரை.
5.   உங்கள் அருகாமையில் இருக்கும் வெளியேறும் வழியாக வெளியேறவேண்டும்.
6.   முடிந்தவரை அதிர்வு நிற்க்கும் வரை உள்ளேயே இருக்க வேண்டும்.
7.   எக்காரணத்தைக் கொண்டும் லிஃப்ட் உபயோகிக்க கூடாது.

வெளியே உள்ளவர்கள்:-
1.   கட்டிடடங்கள், மின் கம்பங்கள், மின் வோயர்களை விட்டு தள்ளி இருக்க வேண்டும்.
2.   அதிர்வு முழுமையாக அடங்கும் வரை பொறுமையாக இருக்க வேண்டும்.
வாகனத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்கள்:-
1.   நிதானமாக வண்டியை பாதுக்காபான இடத்தில் நிறுத்த வேண்டும், வண்டிய விட்டு இறங்க கூடாது.
2.   வண்டியை மரங்கள், கட்டிடடங்கள், மின் கம்பங்கள் போன்றவற்றில் இருந்து தள்ளி நிறுத்த வேண்டும்.
இடிபாடுகளுக்கிடையே சிக்கி இருப்பவர்கள்:-
1.   உங்களுக்கு அத்தனை வலுவிருக்காது.
2.   உங்கள் நிலையில் இருந்து நகர முயற்ச்சி செய்யாதீர்கள்.
3.   தூசுகளை தட்டாதீர்கள்.
4.   உங்கள் மூக்கு மற்றும் வாய்யை சேர்த்து எதேனும் துணியால் மறைத்துக்கொள்ளுங்கள்,
5.   அருகில் உள்ள சுவர் அல்லது பைப் போன்றவற்றில் தட்டி ஒலி எழுப்புங்கள், யாராவது அருகில் இருந்தால் உங்களுக்கு உதவ கூடும்.
6.   யாரையும் கத்திக்கூப்பிடாதீர்கள், விசில் அடித்து கூபிடலாம் முடிந்தால்.

ஆனால் இதை எல்லாம் மீறி நம்மை படைத்தவனிடம் கேட்கும் துவா மிக முக்கியம்.

    

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

ஏலே மக்கா ஓசில டிக்கெட் குடுக்குராங்களாம்டா!!!!!!!!!!


இக்காமா, விசா, ஹுருப் போன்ற பிரச்சனைகளில் சவூதி சட்டத்திர்க்கு புறம்பான வகையில் தங்கியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களை அவரவர் நாட்டிற்க்கு அனுப்பும் (டிக்கெட்) போன்ற செலவினங்களை சவூதி உந்துரை அமைச்சகம் (ஜவ்ஸாத் - general Directorate of Passports) ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சோர்ஸ்:- www.saudigazette.com.sa


திங்கள், 8 ஏப்ரல், 2013

இஸ்லாத்தை உண்மைபடுத்தும் உலக நிகழ்வுகள்:-



சமீபத்தில் யூத விஞ்ஞானி ஒருவர் இஸ்லாத்தை தழுவினார் ஏன்?
கருவியல் ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஜெயில்ஹம் ஒரு யூதர் இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். மணவிலக்கு செய்யப்பட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே- அதாவது மூன்று மாதவிடாய் பருவங்களில் இத்தா இருந்த பின்பே மறுமணம் செய்ய வேண்டும் என்று திருக்குர்ஆன் (2:228) கூறுகின்றது. இந்த வசனத்தை படித்தபோதுதான் ராபர்ட் மனம் மாறினார் ஏன்? அப்படி என்ன அதில் அவர் கண்டுவிட்டார்? தொடர்ந்து படியுங்கள்.



ராபர்ட் நீண்ட காலமாக ஓர் ஆய்வை மேற்கொண்டிருந்தார். ஆணுக்குள்ள டிஎன்எ ரேகைப் பதிவு (DNA Finger Printing) தொடர்பானதே அந்த ஆய்வு. ஓர் ஆணின் டிஎன்எ ரேகைப் பதிவானது மூன்று மாதங்களுக்கு பின் அழிந்துவிடுன்ம் என அவரது ஆய்வு கூறியது. இது தொடர்பாக எகிப்த்தில் மருத்துவப் பரிசோதனை துறை பேராசிரியராக உள்ள டாக்டர் அப்துல் பாசித் முஹம்மத் சயீத் கூறுகிறார். அறிவியல் சான்றுகளை அடிப்படையாக கொண்டே ராபர்ட் இஸ்லாத்தை தழுவினார்.

தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆன் தனக்குரிய ரேகையை பெண்ணிடத்தில் விட்டுச் செல்கிறான் அது மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டுப்பிடித்தார். அதர்க்கெர்ப்ப அமெரிக்காவில் ஆப்பிரிக்கா முஸ்லீம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் ராபர்ட் கள ஆய்வில் இறங்கினார். அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவான்மார்களின் ரேகை மட்டுமே பதிவாகியிருந்தது. அதே நேரத்தில் அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோது அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. இவ்வாறு மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களிடம் பதிவாகியிருந்தன.

ராபர்ட் ஜெயில்ஹம் அதிரடியாக இன்னொரு காரியமும் செய்தார். அவர் தம் மனைவியை மருத்துவ பரிசோதனை செய்தார். அவளிடம் மூன்று ரேகைப் பதிவுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதுமட்டுமின்றி தம்முடைய மூன்று மகங்களில் ஒருவர் மட்டுமே தமக்கு பிறந்தவர் என்ற உண்மையையும் அவரைத் தாக்கியது.

ஆக இதிலிருந்து மூன்று மாத “இத்தா” ஏன் என்பதற்க்கு காரண விளக்கமும் கிடைக்கிறது. முந்தைய கணவனின் டிஎன்எ ரேகைப் பதிவு முற்றாக அழியா மூன்று மாதங்கள் பிடிக்கும். அதன்பின் அவள் மறுமணம் செய்துகொண்டாள் டிஎன்எ பரிசோதனையில் குழப்பம் வராது. இல்லையேல் மறுமணம் செய்தபின் பிறக்கும் குழந்தையின் டிஎன்எ வும் முந்தைய கணவனின் டிஎன்எ வும் ஒத்துப்போக நிறைய வாய்ப்புகள் உண்டு.

சத்தியமாக இஸ்லாம் உலக விஷயங்கள் அனைத்திர்க்கும் ஒரு நல்ல தீர்வு.        

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

இன்று ஒரு தகவல்



இன்று காலை கூகிள் வலைதளத்தை திறந்தேன், அதில் ஒரு அரபியர் வானத்தை நோக்கியாவரு போஸ் குடுத்து கொண்டு இருந்தார், வானத்தில் முழு நிலா வேற, நான் கூட என்னடா இது ஒரு வேலை நாம பிறைகளை பற்றி விளக்கி கொண்டு இருக்கிறோமே, இதுவும் அதை பற்றி ஏதாவது ஒரு விளக்கமாக இருக்குமா என்று பார்த்தால், அதில் இருப்பவர் ஒரு இஸ்லாமிய பண்டிதர்,



அவர் பெயர் அபு ரெய்ஹன் அல்-பிருணி, இவர் 973-ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5 ஆம் தேதி காத் என்னும் ஊரில் பிறந்தார், இந்த ஊர் உஸ்பெகிஸ்தானில் உள்ளது. இவர் ஒரு சிறந்த இஸ்லாமிய பண்டிதர் மட்டுமில்லை, மேலும் வின்னியல், கணிதவியல், வரலாற்றுத்துறை போன்றவற்றில் மிக சிறந்தவர். இவர் சோரஸ்மீயன், பெர்ஷியன், அரபிக், சான்ஸ்கிரிட் மற்றும் கிரீக், ஹெப்ரூ மற்றும் சிரியாக்.
இவர் வாழ்க்கையின் அதிகமான காலங்களை இன்றைய ஆப்கானிஸ்தானில் உள்ள காஃஜ்ணி என்னும் ஊரிலே கழித்தார். 1017-ஆம் ஆண்டு இவர் இந்தியாவிர்க்கு வந்தார், இவர் இந்தியாவிர்க்கு வந்து inodlogy என்னும் ஒன்றை உருவாக்கினார் (அதாவது இந்தியா கலாச்சாரங்கள், மொழிகள், வரலாறுகள்).இவர் பூமி பற்றின அறிவியலிலின் தந்தை எனவும் கூறபடுகிறார்.

இறுதியில் இவர் 1048-ஆம் ஆண்டு டிசெம்பர் 13-ஆம் தேதி இயற்க்கை எய்தினார். 

திங்கள், 3 செப்டம்பர், 2012

பெட்ரமாஸ் லைட்டெதான் வேணுமா?


(Xtouch X401, Samsung Galaxy S-II எது சிறந்தது?)



சமீபமாக அமீரகத்தில் xtouch என்கின்ற நிறுவனத்தாரின் டாப்லெட்கள் அதிகம்பேரை கவர்ந்துள்ளது. அதற்க்கு காரணம் என்னவென்று பார்த்தால் குறைந்தவிலையில் சிறந்த தொழிற்நுட்ப்பத்தில் கிடைப்பதால், எல்லோரும் 1500, 2000 திர்காம்ஸ் என்று செலவழித்து வாங்கும் காலக்ஸி டாபில் நீங்கள் என்ன என்னவெல்லாம் செய்கிறீர்களோ? அதையே இதிலும் நீங்கள் செய்யலாம். இவர்களின் 7” tablet வெறும் 260 திர்காம்ஸ் தான் என்றாள் உங்களால் நம்பமுடிகிறதா. இது ஒரு சீன உற்பத்திதான், இருந்தாலும் நல்ல பேரு வாங்கிய நிறுவனங்கள்தான் தரமான பொருளை தரமுடியும் என்று மக்களே உருவாக்கி கொண்ட விதியில் எனக்கு நம்பிக்கை இல்லை.  

என்னடா இவன் தலைப்பிற்க்கும், இந்த கிறுக்கல்களுக்கும் சம்பந்தமே இல்லையே என்று பார்க்கிறீர்களா? அடுத்து அதுக்குதான் வரேன், மேலே சொன்னது போல இவர்களின் நிறுவனத்தில் இருந்து மேலும் இரண்டு புதிய போன்களை அறிமுக செய்துள்ளன, ஒன்று X401, மற்றொன்று X506, இதில் முதலில் உள்ளது 4.3 இன்ச் ஸ்க்ரீனை கொண்டது மற்றொன்று 5 இன்ச் ஸ்க்ரீனை கொண்டது, இதில் என்னவோரு முக்கியமான விஷயம் அப்படினா? சாம்சங் காலக்ஸிகளை காட்டிலும் விலை மிகவும் குறைவு, அதே நேரம் இவர்களின் தொழில்நுட்பதில் எந்த ஒரு மாற்றமுமில்லை, ஒரு சில சிறிய மாற்றங்களை தவிர உதாரணதீர்க்கு கீழே உள்ள இரண்டு ஒப்பீடுகளை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், நான் போன வாரம்தான் ஒன்று வாங்கினேன், கடிப்பாக இது ஒரு சிறந்த தேர்வு, விலை அதிகமாக போட்டு வாங்குவதற்க்கு இந்த மொபைல் சிறந்தது, இதன் விலையோ வெறும் 500 முதல் 600 திர்காம்ஸ் வரைதான். புத்திசாலிகள் புரிந்துகொள்வார்கள்:-

செவ்வாய், 17 ஜூலை, 2012

தேனீக்கள் (Honey Bee)


உலகில் இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம் பூச்சி (Insect) இனமாகும். இவை இதுவரை ஒரு மில்லியன் எண்ணிக்கை வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவிலும் கூட புதிய புதிய வகைகள் கண்டறியப்படுகின்றன. இத்தகைய பிரமாண்ட எண்ணிக்கையில் அமைந்துள்ள இந்த இனத்தில் மனிதனைக் கடித்து நோயைப் பரப்பி தீங்கை விளைவிக்கக் கூடிய வகைகளும் உண்டு. மனிதனின் இரத்தத்தை உறிஞ்சி வாழக்கூடியவைகளும் உண்டு. மனிதனுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தாவரங்களை அழித்து பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய பல வகைகளும் இருக்கின்றன. இருப்பினும் தேனீக்கள் போன்று மனிதனுக்கு நன்மையே பயக்கக் கூடிய ஈ இனம் வேறு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இவற்றால் உற்பத்தி செய்யப் படும் தேன், பல நோய்களுக்கு மருந்தாகப் பயனாகின்றது. இத்தகைய பிரம்மாண்ட எண்ணிக்கையில் அமையப் பெற்ற இந்த இனத்தில் மிக அதிக அளவிற்கு அறியப்பட்டவைகளில் தேனீக்களும், எறும்புகளும் முதல் இடத்தை வகிக்கின்றன. இதில் இந்த தேனீக்கள் பல அம்சங்களை விதிவிலக்கான அம்சமாக அமையப் பெற்றுள்ளன. இவற்றைப் பற்றி மிக விரிவான அளவில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட பல அதிசயத் தக்க விஷயங்கள் நம்மை வியப்படைய வைக்கின்றன.

தேனீக்களின் பூர்வீக பூமி ஆப்பிரிக்காவாகும். அங்கிருந்து ஐரோப்பாவிற்கும் பிறகு ஆசியாவிற்கும் பரவின. காலனி ஆதிக்கத்தின் போது அமெரிக்காவிற்கும் பரவி இன்று அன்டார்டிகாவை தவிர்த்து பூமியின் எல்லாப் பகுதிகளிலும் எல்லா தட்பவெட்ப நிலைகளிலும் தேனீக்கள் காணப்படுகின்றன. 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய தேனீக்களின் உடற்படிவம் மரப்பிசினிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தேனீக்களின் அமைப்பிலேயே மாற்றமின்றியே காணப்படுகின்றன.
தேன் கூடு என்பது மூன்று வகையான தேனீக்களின் கூட்டணியாகும். ஒவ்வொன்றும் வெவ்வேறான உடல் அமைப்பைப் பெற்று விளங்குகின்றன. இதுவே இவற்றின் பிரதான வேறுபாட்டு அம்சமாகும்.

1. இராணித் தேனீ (Queen-Productive Female)
2. ண் தேனீக்கள் (Drone)
3. வேலைக்காரத் தேனீக்கள் (Workers Bee-Non Productive Female)

இம்மூன்றும் மூன்று விதமான உடல் அமைப்பையும் மூன்று விதமான செயல் பாடுகளையும் உடையதாகும். வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டு இவற்றால் உருவாக்கப்படும் கூடு என்ற இவற்றின் ஒரு சமுதாயம் (Colony)நமக்கு விடை பகர முடியாத பல செயல்பாடுகளை உள்ளடக்கியதாகும். பொதுவாக ஒரே உயிரினத்தில் பாலினத்தை வேறுபடுத்திக் காட்டும் சில வேறுபாட்டைத் தவிர பெரிய வேறுபாடுகள் எதுவும் காணப்படுவதில்லை. ஆனால் இந்த தேனீக்கள் இனத்தில் விதிவிலக்காக உள்ளுறுப்புக்கள், வெளியுறுப்புக்கள் மற்றும் செயல்பாடுகளிலும் குறிப்பிடத்தக்க வேறு பல வித்தியாசமான அம்சங்கள் காணப்படுகின்றன. அவற்றை வரிசைப் படுத்தி காண்போம். 

புதன், 1 பிப்ரவரி, 2012

மருந்து மாத்திரைகள் வாங்கும் போது… சில எச்சரிக்கை குறிப்புகள்!!



மருந்து வாங்கும் போது… கீழ்க்கண்ட விஷயங்களை அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இது உயிர் பற்றிய விஷயம். எனவே அக்கறை அவசியம்.
1. மருத்துவரின் சீட்டு இல்லாமல்வாங்காதீர்கள்!
தமிழ் சினிமாவின் பிரபல வசனங்களில் ஒன்று, யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும. யார் வெட்டினாலும் கத்தி வெட்டும். மருந்து, டாக்டர் எழுதிக் கொடுத்தாலென்ன… கடைக்காரரே கொடுத்தால் என்ன? என்று நினைப்பவர் அநேகர். அது உண்மையல்ல. குடும்ப மருத்துவருக்குக் கொடுக்கும் பணம் உங்கள் உடல்

நலத்திற்கான முதலீடு என்பதை உணருங்கள். நீங்கள் சரியான மருத்துவரிடம் 50, 100 ரூபாய் கொடுத்தால் அவர் குறைந்தது 5 மடங்கு பணம் மிச்சப்படுத்தும் வேலையைச் செய்வார்!

இப்போது பெரும்பாலான மருத்துவர் கள் தங்கள் மருந்துச் சீட்டை தெளிவாக, தனித்தனியாக கொட்டை எழுத்துக்களில் தான் எழுதித்தருகின்றனர். சிலர் கம்ப் யூட்டர் மூலம் பிரிண்ட் செய்யப்பட்ட மருந்துச் சீட்டை கொடுக்கிறார்கள்.
கையெழுத்துப் புரியவில்லை என்றால் கேட்டு விடுங்கள்! கோபிக்க மாட்டார்! சிலர் பழைய சீட்டை வைத்தே வருடக் கணக்கில் வாங்குவார்கள். அதுவும் தவறு! அவ்வப்போது மருத்துவரைப்பாருங்கள்!
2. செல்போனில் மருந்துச் சீட்டு
நீண்ட காலத்திற்கு சாப்பிட வேண்டிய உயிர் காக்கும் மருந்துகளின் பெயர், டோஸ் அளவு போன்றவற்றை Cell Phone™ மெஸேஜ் ஆக எழுதி பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த Message  வீட்டில் உள்ள அனைத்து செல்ஃபோனி லும் இருக்கட்டும். அவசரத்தில் சிகிச்சை யளிக்க மருத்துவர் கேட்கும்போது இது உயிர் காக்க உதவும்.
3. பில் இல்லா மருந்து மருந்தல்ல எங்கே வாங்கினாலும், எவ்வளவு வாங்கினாலும் எவ்வளவு அவசர மானாலும், பில் இல்லாமல் மருந்துகளை வாங்காதீர்கள்.
பில்லில் உங்கள் பெயர், மருத்துவரின் பெயரும் இருக்கட்டும். மருத்துவரின் மருந்துச் சீட்டுடன், பில்லை வைத்து கவனமாக சரிபார்த்து, வாங்குங்கள். சந்தேகம் இருக்கும் பட்சம் மருத்துவரிடமோ அவரது உதவியாளரிடமோ Cross Check செய்து கொள்ளுங்கள்.
4. உதிரிகள் வேண்டவே வேண்டாம்..
மருந்தின் பெயர், மருந்துப் பொருட்களின் பெயர், தயாரித்த கம்பெனியின்  பெயர், விற்கும் கம்பெனியின் பெயர் மருந்தின் வீரிய அளவு, மருந்து தயாரித்த தேதி காலாவதி தேதி ஆகியவற்றை முழு அட்டையாக மாத்திரை வாங்கும் போதுதான் கவனித்து வாங்க முடியும். எனவே கூடுமானவரை உதிரியாக மாத்திரை வாங்குவதை தவிர்த்து விடுங் கள். உதிரி மாத்திரைகள், காலாவதி, போலி, சாம்பிள் மாத்திரைகளாகக் கூட இருக்கக் கூடும். எனவே கூடுதல் கவனம் தேவை.
5. வீரியமில்லாமல் காரியமில்லை
மாத்திரை பெயர் பார்த்து வாங்கும் போது அதன் அளவு 2 மிலி, 5 மிலி, 10 மிலி என வீரியத்தின் அளவு பார்த்து வாங்க வேண்டும். இது மிக முக்கியம்.
6. காலாவதி மாத்திரை
காலனிடம் சேர்க்கும் எந்த மருந்தையும் நீங்களாகப் பார்த்து, காலாவதி தேதி சரிபாருங்கள். சில மாத்திரைகளில், 18 மாதங்கள், 24 மாதங்கள். தயாரித்த தேதியிலிருந்து என போட்டிருப்பார்கள். அதையும் சரிபாருங்கள்.
ஒரே வகையான மருந்து 6 மாதம் ஒரு கம்பெனியும் மற்றொரு கம்பெனி 3 வருடம் கழித்தும் காலாவதி தேதியை குறிப்பிட்டிருக்கும். அது மருந்து தயாரிக் கும் முறை, மருந்தின் உட்பொருட்கள் பொறுத்து மாறக்கூடும். நீங்களாக ஒரு முடிவுக்கு வர வேண்டாம்.
சில மருந்துகள் 1 நாள் தாண்டினால் கூட விஷமாக மாற வாய்ப்பு உண்டு. உதாரணம் டெட்ராசைக்ளின் வகை மருந்துகள். சில மருந்துகளில் காலாவதி தேதி நீண்ட நாட்கள் இருந்தாலும், குறிப்பாக குழந்தைகளுக்கு பவுடர் வடிவில் கொடுக்கப்படும் ‘ஆன்டி பயாடிக்Õ வகை மருந்துகள், காய்ச்சி ஆறவைத்த நீரில் கலந்து 5 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என சிறிய எழுத்தில் எழுதியிருப்பார்கள். அதுபோன்ற மருந்து களை 5 நாட்களுக்கு மேல் வைக்கக் கூடாது.
7. நீண்ட நாட்களுக்கு…
நீண்ட நாட்களுக்கு சாப்பிட வேண்டிய, தினசரி தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள் குறைந்தது 1 வாரத்துக்கான அளவாவது வீட்டில் இருக்கட்டும். இரவு ஒரே மாத்திரை இருந்து அதுவும் கீழே தவறி விழுந்துவிட்டால், தேவையில்லாத, பயம், பதட்டம், கவலை, அலைச்சல் டென்ஷன் இதை தவிர்க்க கைவசம் சற்று மாத்திரைகள், பர்ஸ், அல்லது ஹேண்ட் பேகில் இருக்கட்டும்.
8. குறைந்த செலவில் நிறைய மருந்துகள் சில
மொத்த மருந்து வியாபாரிகளின் சில்லறை விலைக் கடைகளிலோ, சேவை நிறுவனங்கள் நடத்தும்

கடைகளிளோ, 10 முதல் 20% வரை எம்.ஆர்.பி. விலையில் இருந்து தள்ளுபடி விலையில் மருந்து கிடைக்கும். ஒரு மாதத்திற்குத் தேவை யான மருந்துகளை இதுபோன்ற கடை களில் வாங்கினாலே கணிசமான பணம் மிச்சமாகும். சில கடைகளில் போனில் ஆர்டர் கொடுத்தால் இலவச டோர் டெலிவரி வசதியும் உண்டு. பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரத்தை மிச்சப்படுத்துங்கள்.

9. அதே மருந்து…
வேறு கம்பெனி சில மருந்து கம்பெனியின் தயாரிப் புகள் இல்லாதபோது நீங்களாகவே வேறு கம்பெனி மருந்துகளை மருத்துவரின் அனுமதியில்லாமல் வாங்காதீர்கள். போலி கம்பெனியா, தடைசெய்யப்பட்ட மருந்துகள் கலந்துள்ளனவா என்பதை உங்கள் மருத்துவர் அறிவார். குறிப்பாக வலிப்பு/ சர்க்கரை வியாதி/ ரத்தக் கொதிப்பு மாத்திரை வாங்கும்போது, வீரியம் அதிகரித்தாலோ, குறைந்தாலோ, தேவையில்லாத பாதிப்புகள் ஏற்படக் கூடும்.
அதுபோலவே மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்தை நீங்களாகவே குறைத்துக் கொள்ளவோ அதிகரித்துக் கொள்ளவோ வேண்டாம்.
என் நண்பர் ஒருவர் ‘விருந்துக்குப் போய்விட்டு வந்தால் சர்க்கரை மாத்திரை இரண்டாகப் போட்டுக் கொள்வேன்’ என்பார். தலைக்கு மேல் கத்தி தொங்கு வது போன்றது இது. எப்போதும் ஆபத்து நேரலாம்.
10. மருந்துகள் பாதுகாக்க குழந்தைகள் கைக்கு எட்டாமல் வைக்கவும்.
பல மாத்திரைகள் கலர் கலராக ஜெம்ஸ் மிட்டாய் போல இருப்பதால் குழந்தைகள் வாயில் போட்டுக் கொள்ளும் ஆபத்து அதிகம்.
சில மருந்து மாத்திரைகள் குறிப்பாக நெஞ்சுவலி மாத்திரைகள் போன்றவை கைக்கு எட்டும் வகையிலும், தேவைப்பட்டால் ஒவ்வொரு அறையிலும் இருப்பது நலம்.
சில மருந்துகளை குளிர் சாதனப் பெட்டியில் தான் (இன்சுலின் போன்றவை) வைக்க வேண்டும். ஆனால் ஓபஸ் பெட்டியில் (ப்ரீஜரில்) வைக்கக் கூடாது.
பொதுவாக எல்லா மருந்துகளையும் வெயில், சூடுபடாத, ஈரம் இல்லாத உலர்ந்த இடத்தில் வைப்பது அவசியம். அடுப்பு அருகே, ப்ரிட்ஜின் மேல், சூடான பாத்திரம், ஹீட்டர் அருகே அல்லது வெயில்படும் இடங்களில் மருந்துகளை வைத்தால் மருந்து கெட்டுப்போக வாய்ப்பு உண்டு. சிலவகை தடுப்பு

மருந்துகளில், மருந்தின் வீரியம் கெட்டுப் போனதை அந்த லேபிள் கலர் மாறு வதைப் பொறுத்து கண்டுபிடிக்க இயலும்

source:kalvikalanjiam.

செவ்வாய், 10 ஜனவரி, 2012

பொது அறிவு



o தும்மலலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.

o ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்து உரு வாகின்றன.

o கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல் பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.

o ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

o கம்ப்ïட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.

o ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

o 60 வயதாகும்போது நாக்கின் சுவை மொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.

o மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.

o சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

o 6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக் கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.

o ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.

o உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.

o மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.

o மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.

o மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.

o ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக் கும்.

o ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறார்.

o ஒரு கண்ணில் பார்வை போய்விட்டால் பாதி கண் பார்வை போய்விட்டது என்று அர்த்தம் அல்ல. பார்வைத் திறனில் ஐந்தில் ஒரு பங்கு பார்வைதான் குறைந்து போகிறது.

o கங்காருக்களால் பின்னோக்கி நடக்க முடியாது.

o எலித்தொல்லை அமெரிக்காவில் பெருந்தொல்லையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 24 ஆயிரம் பேர் அங்கே எலியால் கடிபடுகிறார்கள்.

o இளம் பருவ ஆண்-பெண்களின் முடியில் 25 சதவீத நீளம் எந்த வித முறிவும் இல்லாமல் இருக்கும்.

o பெரும்பாலான கனவுகள் 5 முதல் 20 நிமிடம் வரை நீடிக்கின்றன.

o பெண் ஒட்டகச்சிவிங்கி குட்டியை ஈன்றெடுக்கும்போது 6 அடி கீழ் நோக்கி விழுகின்றன. ஆனாலும் குட்டிகளுக்கு எந்தக் காயமும் ஏற்படுவதில்லை.

o சுறாமீன்கள் எதிரே வரும் மீன்களை அறிந்து வேட்டையாடுவது எப்படி என்பது தெரியுமா?... வெகு தூரத்தில் இருக்கும் மீனின் இதயத்துடிப்பைக் கூட சுறா மீன்களால் கேட்க முடியும். இதனால் சுறாமீனிடமிருந்து எந்த மீனாலும் தப்பிக்க முடியாமல் போகிறது.

o பெங்குவின் பறவைக்கு ஒரு அபூர்வ மகிமை உண்டு. உப்புத் தண்ணீரைக் கூட அது நன்னீராக மாற்றிவிடும்.

o 10 நிமிடம் வீசும் கடும் புயல்காற்று உலகில் உள்ள அணு ஆயு தங்களின் பாதியளவிற்கு இணையான சக்தியை வெளிப்படுத் துகிறது.

o உலகில் 50 சதவீதம் பேருக்கு தொலைபேசி அழைப்பு வரு வதில்லை. அவர்கள் வேறு யாருடனும் தொலைபேசியில் பேசு வதும் கிடையாது.

o ஒவ்வொரு காரும் தனது ஆயுள்காலத்தில் விடும் புகை 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றுப்புறச் சூழல் பாதிப்பை உரு வாக்கும்.

o அண்டார்டிகா கண்டத்தின் நிலம் மட்டும்தான் இந்த உலகில் எந்த நாடும் உரிமை கொண்டாட முடியாத இடமாகும்.

o மிக அதிகமாக மின்சக்தியை வெளிப் படுத்தும் ஈல் மீன்கள் பிரே சில், கொலம் பிய, வெனிசுலா, பெரு ஆகிய நாடுகளில் காணப் படுகிறது. இந்த ஈல் மீன்கள் வெளிப்படுத்தும் மின்சக்தியின் அளவு 400-முதல் 650 வோல்ட்டுகள் ஆகும்.

நன்றி:கடலூர் முஸ்லிம் நண்பர்கள்(முக நூல்)

செவ்வாய், 8 மார்ச், 2011

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா? ஒரு நிமிடம் இதையும் பாருங்களேன்.




பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்கள் கவணிக்கவேண்டியவை :

முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்
https://passport.gov.in/pms/Information.jsp
Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து
எடுக்கவும்.
அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.

சனி, 12 பிப்ரவரி, 2011

மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ?

மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ?



மின்மினி பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். மின்மினி பூச்சிகள் Coleoptera என்ற குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகள் ஆகும். மின்மினி பூச்சிகளில் உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன.
மின்மினி பூச்சிகள் முட்டை புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ? என்ற கேள்வி பல நாட்களாக எனக்குள் இருந்தது அதற்கான விடையை தேடி எடுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
இது ஒரு சிக்கல் நிறைந்த உயிர்வேதியியல் (bio-chemical) முறையாகும். இம்முறை bioluminescence எனப்படும். மெழுகுவர்த்தி, மின்விளக்கு ஆகியன தரும் ஒளி வெப்பம் நிறைந்தது. ஆனால் இங்கே வெப்பம் ஏதும் உண்டாவதில்லை. மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரி
பொருளாகப் பயன்படுவது லூசிஃபெரின் (luciferin) என்ற வேதியியல் கூட்டுப் பொருள். இது
பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் (light emitting organ) நிறைந்துள்ளது.

இந்த லூசிஃபெரின், லூசிஃபெரெஸ் என்ற என்ஸைமில் (enzyme) உள்ள உயிர்வளி (oxygen), உயிரணுக்களில் (cells) நிறைந்துள்ள ATP என்ற வேதியியல் பொருள், மற்றும் மக்னிசியம்
ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி உண்டாகிறது.


இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிடினும் ஒளியுண்டாகாது. மின்மினிப் பூச்சி விட்டுவிட்டு ஒளிர்வதற்குக் காரணம், அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்கள் (nerve impulses) விட்டு விட்டுச் செல்வதேயாகும்.
மின்மினி பூச்சிகள் பற்றிய ஒரு பார்வை பெண் வண்டுகள் மண்ணில் முட்டை வைக்கும். சுமார் 4 வாரங்களில் முட்டையில் இருந்து புழு வந்துவிடும். புழுக்கள் கோடையிலும், வேனில் காலத்திலும் நன்கு சாப்பிட்டுவிட்டு ‘ஹாயாக’ டார்ச் பிடித்துக் கொண்டு வளைய வரும். குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் பதுங்கி விடும். பெரும்பாலும், இவை மண்புழு மற்றும் நத்தை ஆகியவற்றையே தின்னும். இவை இரையைப் பிடித்துத் தின்னும் முறையே அலாதியானது. இரையைக் கண்டுபிடித்தவுடன் அதை முதலில் மயக்கமடையச் செய்துவிடும். இதற்கென்றே இதன் முகத்தில் ஒரு பிரத்தியேக அரிவாள் போன்ற கொடுக்கு நீட்டிக்கொண்டு இருக்கும். அதைக் கொண்டு இரையின் உடலினுள் மயக்கமடையச் செய்யும் வேதிப்பொருளை செலுத்திவிடும்.
பிறகு இரைக்குள் செரிமான நொதிகளை செலுத்தும். சில மணி நேரத்தில், இரையின் உடலினுள் உள்ள அவயங்கள் கூழ்மமாக மாறிவிடும். உடனே மின்மினி பூச்சிகளின்புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து, ஜூஸ் குடிப்பது போல உறிஞ்சிவிடும். பிறகு ஜாலியாக ரவுண்ட்ஸ் போக தொடங்கும். அப்போது அதன் உடலில், அதாவது அடிவயிற்றின் முடிவில் விளக்கு எரிந்துகொண்டு இருக்கும். ஒரு சில பறவைகள்கூட, ஒளிக்காக இந்த புழுக்களைப் பிடித்து வந்து, தங்கள் கூட்டில் வைத்திருக்கும்.
மின்மினிப் பூச்சிகள் இரவுகளில் சில குறிப்பான இடங்களில் திரண்டிருப்பதைப் பார்க்கலாம்.
ஏன்? அங்கே ஆணும் பெண்ணும் மினுமினுக்கின்றன. தங்கள் துணை தேடுவதற்காக என்கிறார்கள் ஜார்ஜியா தென் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகள்.
பெண் பூச்சிகள் மினுமினுப்பு மூலம் தங்கள் இருப்பிடத்தைக் காட்டுகின்றன. ஆண் பூச்சிகள் இதற்குத் தகுந்தாற் போல அதே வித மினுமினுப்புகளை உண்டாக்கிக் காட்டுகின்றன.
பின்னர் ஜோடி சேர்கின்றன. பெண்களில் ஒரு சிறு சதவீதம் ஆண் பூச்சிகள் மினுமினுப்புக்கு இசையாமல் அல்லது இசைய முடியாமல் இறந்துவிடுகின்றன. பரிணாம விதியில் இப்படி அழிவதும் சரிதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
Thanks to Mohammad Sultan.visit.intjonlinee.blogspot.com

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

மதராசபட்டினம்.................சில பின்குறிப்புகள்....

என்ன தலைப்ப  பார்த்தவுடன் ஏதோ சினிமா விமர்சனம்னு நினைசீன்களா அதான் கிடையாது..........எப்பவுமே சினிமா சினிமான்னு அலைய கூடாது.................கொஞ்சம் மற்றதையும் யோசிக்கணும்...................

இங்கே வலைபதிவில் நிறையப்பேர் சென்னை வாழ் எழுத்தாளர்கள் இருக்காங்க அவுங்களுக்காக இந்த தகவல் மற்றும் படங்கள்.

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

உலகின் மிக உயர்ந்த செயற்கை நீருற்று

உலகின் மிக உயர்ந்த செயற்கை நீருற்று துபையில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலீபாவிற்கு முன்னால்தான் அமைத்துள்ளது.
இதனுடைய நீளம் சுமார் 900 அடிக்கு மேல், அதில் எழும்புகின்ற நீரின் உயரம் சுமார் 500  ௦௦ அடிக்கு  மேல் என்கிறார்கள். அது எவ்வாறு இருக்குனு கீழே உள்ள படங்களை பார்த்து என்ஜாய் பண்ணுங்க.









எல்லாத்தையும் பார்த்துட்டு அப்படியே போய்டாதீங்க, உங்க கருத்துகளையும் அனுப்புங்க. 

திங்கள், 17 ஜனவரி, 2011

ஏஞ்சல் பால்ஸ் - உலகிலேயே மிக அதிக உயரத்தில் இருந்து விழ கூடிய நீர்வீழ்ச்சி

ஏஞ்சல் நீர் வீழ்ச்சிதான் உலகிலேயே மிக உயரமான நீர் வீழ்ச்சி, இது வெனிசுலாவில் உள்ள கனைமா பார்க்கில் அமைந்துள்ளது, இதனுடைய உயரம் 979 மீட்டர் அதாவது 3212 அடி. இதனுடைய ஆழம் (அதாவது விழ கூடிய இடத்தின் ஆழம்) 807 மீட்டர் அதாவது 2647 அடி, இந்த அருவியானது 1993 நவம்பர் மாதம் 16 ம் தேதிதான், அமெரிக்க விமானி ஜிம்மி என்பவரால் எதேச்சையாக கண்டுபிடிக்க பட்டது, அது வரை இப்படியொரு அருவி அங்கு இருப்பதாக இந்த உலகம் அறிந்திருக்கவில்லை.   என்ன கேட்கவே அதிசயமா இருக்கா, அப்போ அதனுடைய படத்தையும் உள்ளே போய் பாருங்கள்.