OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 4 ஜனவரி, 2011

புத்தாண்டு கொண்டாட்டமும் உயிர் பலியும்

நான் இதே தலைப்பில் முன்னர் இட்ட இரண்டு பதிவுகளுக்கு மேலும் வலு கூட்டும் விதமாக இந்த பதிவு,


...


வருடா வருடம் புத்தாண்டு கொண்டாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைப் போல் விபத்துக்களும் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இன்றைய இளைஞர்களிடம் டிசம்பர் 31 அன்று பேச்சே மச்சான் இன்னிக்கு எந்த பார் எங்க போகலாம் இந்த பேச்சுத்தான் அதிகமாக இருக்கும். வருடா வருடம் போலீசாரின் கெடுபிடிகளும் அதிகமாக இருக்கும் இந்த வருடம் சென்னையில் ஏகப்பட்ட கெடுபிடிகள் என்று பதிவின் மூலம் அறிந்தேன்.

இந்த வருடம் புத்தாண்டின் போது நடந்த விபத்துக்களை படிக்கும் போது அனைவருக்கும் அனைத்து விசயங்களும் தெரிந்து தான் தவறு நடக்கிறது. இந்த வருடம் நான் படித்த வகையில் 3 மிகப்பெரிய விபத்துக்கள்.

விபத்து 1

சேலம் அருகே 3 இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மிதந்து சென்று தாங்கள் சென்ற காரை சாலை ஓரம் உள்ள ஏரியில் விட்டதால் 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

விபத்து 2

ஏற்காடு மலைப்பாதையில் கார் பள்ளத்தில் பாய்ந்தது. காரிற்குள் இருந்தவர்களை தியணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் (உயிரிழப்பு விபரம் சரியாக தெரியவில்லை)

விபத்து 3

மேட்டூர் அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டையில் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இளைஞர்கள் கேக் கொடுத்து வாழ்த்து சொல்லும் போது எதிர்பாரதவிதமாக லாரிக்குள் விழந்து சம்பவ இடத்திலேயே 25 வயதுமதிக்கத்தக்க இளைஞர் பலி

இந்த விபத்துக்கள் மட்டுமல்லாமல் எங்கள் ஊரில் நடுஇரவில் நாங்கள் கொண்டாடிய புத்தாண்டு கொண்டாட்டத்தில் கை கொடுக்கும் போது மப்பில் வேகமாக ஓடிக் கை கொடுக்கும் போது சாலையில் விழுந்து அருகில் உள்ள கல் மண்டையில் ஏறி இரு இளைஞர்கள் விபத்துக்குள்ளாகினர்.

இச்சம்பவம் அனைத்தும் புத்தாண்டு அன்று இரவு நடந்தது. புது வருடம் பிறந்து இத்தனை உயிர்கள் பலியாகி உள்ளன இந்த விபத்துக்கள் தவிர தமிழகம் முழுவதும் பார்க்கப்போனால் ஏறக்குறைய இன்னும் சில விபத்துக்கள் நிச்சயம் நடந்து இருக்கும். புத்தாண்டு அன்று விபத்து நடப்பதற்கு முக்கிய காரணம் அனைவரும் உற்சாக பானம் அருந்தியதாகத்தான் இருக்கும்.

தற்போதைய கலாச்சாரத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே அது உற்சாக பானம் இல்லாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் ஏறக்குறைய மிக குறைவு. உற்சாக பானம் அருந்துவதோ புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடுவதோ தவறு என்பது என் கருத்து அல்ல அனைத்தும் வேண்டும் மித வேகம் மிக நன்று என்பது போல அனைத்தும் மிதமாக இருந்தால் நிச்சயம் விபத்தில் உயிரிழப்பு இல்லாமல் நமது சந்தோசங்களை கொண்டாடலாம்.

கருத்துகள் இல்லை: