OnlinePJ

Thanks for Visiting my Page
ஊடகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊடகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 மார்ச், 2015

இந்தியா கிரிக்கெட்டும், திருந்தாத கிறுக்கர்களும்

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்பது இன்றைய தலைமுறை மறந்திருக்கும். ஆனால் உண்மை என்னவென்றால் அது மறக்கடிக்கப்பட்டிருக்கு என்பதுதான்.

உலகில் இன்று பல நாடுகள் கிரிக்கெட்டில் கால்பதிக்க துவங்கிவிட்டன ஆனால் அப்படி ஒன்றும் பெரிதாக சாதிக்க முடியவில்லை. இந்த கிரிக்கெட்டில் உண்மையிலேயே ரொம்ப விறுவிறுப்பான போட்டி என்னவென்றால் அது ஆஸ்திரேலியா அணியினருக்கும் இங்கிலாந்து அணியினருக்கும் இடையே நடக்கும் ஆஷஸ் என்னும் போட்டிதான். இது தான் ரொம்ப உணர்வுபூர்வமா இருக்கும். ஆனால் பாருங்க இந்தியாக்கும் பாகிஸ்தானுக்கும் நடப்பதுதான் ரொம்ப உணர்வுப்பூர்வமானது போல காட்டுவாங்க.

மக்களின் பகைமை உணர்வை தூண்டிவிட்டு  அதில் பணம்ப்பார்க்கும் ஒரு மாணம்கெட்ட பிறவிகள்....!!!!!!!!!

 நீங்க நல்லா ஒரு விஷயத்தை கவனித்தால் விளங்கும் இவர்கள் எப்படி எல்லாம் மக்களின் உணர்வுகளோடு விளையாடுகிறார்கள் என்று, இவர்களுக்கு எதிராக விளையாடும் எந்த அணியாக இருந்தாலும் அட அது ஒரு சப்பை அணியாக இருந்தாலும், இவர்களும் இவர்களின் முன்னோடிகளும் குடுப்பாங்க பாருங்க ஒரு பேட்டி ஆஹா அந்த சப்பை அணியை ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா அளவிர்க்கு பேசுவாங்க அது மட்டுமில்லை இவர்களுக்கு விளக்கு பிடிக்கும் மீடியா இருக்கே என்னமோ இவனே நேராப்போய் பேட்டி எடுத்த மாதிரி அந்த அணியின் தலைவர் அப்படி பேசினான், இப்படி பேசினான் அப்படி இப்படினு போட்டு அதை திருப்பி திருப்பி தனது செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பி பார்க்கின்ற மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு போட்டியை காணக்கூடிய நேரத்தில் இவர்கள் எதிரணியினரை வாய்க்கு வந்தப்படி திட்டுவதையும் நாம் கண்கூடாக பார்க்கின்றோம்.

 இவர்கள் இப்படி செய்வதால்தான் இந்தியா விளையாடும் எல்லாப்போட்டிகளும் போட்டியாக இல்லாமல் எல்லாம் வெறிப்பிடித்தது போல் ஆக்கப்படுகின்றது. மொத்தத்தில் இவர்கள் சம்பாதிக்க இவர்களின் எதிர் அணியினர் அவர்கள் யாராக இருந்தாலும் மிகப்பெரிய ஒரு எதிரியாக பார்க்கப்படுகிறார்கள் ஏன் அதையும் தாண்டி ஒரு துரோகியாக பார்க்கபடுகிறார்கள் கேட்டால் தேசப்பக்தியாம்.

 

உண்மையிலேயே உலகில் உள்ள நிறவெறி அதிகம் காண்பிக்கப்படுவது இந்தியாவில்தான் அதில் முதன்மை வகிப்பது இந்த கிரிக்கெட் மோகம். இப்படி மக்களின் பகைமை உணர்வை தூண்டிவிட்டு வேடிக்கைப்பாற்பதற்க்கு பதில் இதே போல வேடிக்கைப்பார்க்கின்ற தொழில் ஒன்று இருக்கு அதை செய்யலாம்...!!!!!!!!!!!!

 

புரிந்தவர்கள் புரிஞ்சிப்பாங்க.       

 

வியாழன், 12 டிசம்பர், 2013

ஊடகம் நடத்தும் விபச்சாரம்!!!!!!!!!


ஊடகம் நடத்தும் விபச்சாரம்!!!!!!!!!

இந்த ஊடகங்களை பற்றி பல முறை நான் எழுதியுள்ளேன் இவர்கள் தங்களின் TRP யை ஏற்றிக்கொள்ள எண்ணவேண்டுமென்றாலும் செய்வார்கள் என்று அதற்க்கு மிக அருமையான உதாரணம் சமீபத்திய சிங்கபூர் கலவரம்!!!!!!!!

இதில் ஒருத்தன் குடிபோதையில் போயி பஸ்ஸில் விழுந்து இறந்துவிட்டான் இதற்க்கு இவர்கள் (நம் தமிழர்கள்) செய்தது தேவையற்ற செயல் மேலும் கண்டிக்கதக்கது, இவர்களின் போதைக்கு ஊருகாயாக 27 தமிழர்கள் சிறையில் இதில் அப்பாவிகள் எத்தனை பேர் என்று தெரியவில்லை, அவர்களுக்கு எனது அனுதாபங்கள்!!!!!

நடந்தது இப்படி இருக்க இந்த ஊடகங்களோ ஏதோ நேரில் சென்று பார்த்தது போன்று வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிக்கொண்டிருக்கின்றது என்பதை சிங்கபூர் முகநூல் வாசிகள் மூலம் அறியலாம்!!!!!!!!!! ஆனால் பாருங்கள் இதுவரைக்கு இந்தியாவில் குண்டுவெடிக்கும் போதெல்லாம் இந்த ஊடகங்கள் குண்டு வெடித்த அடுத்த நிமிடமே இஸ்லாமிய அமைப்புகளை குற்றம் சுமத்தி தனது விபச்சார தொழிலை செய்துவிடும் அப்போதெல்லாம் யாரும் முகநூலில் இந்த ஊடகங்களை குறை சொல்லவில்லை, இப்பொழுது அவர்கள் வசிக்கும் நாட்டில் நடந்ததை பற்றி தவறாக சித்தரிக்கும் போது பொங்கி எழுகிறார்கள்!!!!!!!! நான் அனைவரையும் சொல்லவில்லை!!!!!!

உங்களுக்கு வந்தா ரத்தம்!!!!!!!! இஸ்லாமியர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா???????? மனிதர்கள் பெருகும் அதே நேரத்தில் மனிதாபிமான கொன்று புதைக்கபடுகிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை!!!!!!!!!!!

மேலும் இன்று சிங்கபூர் சிறையில் இருக்கும் அந்த 27 பேர்களின் குடும்பத்தின் நிலை???????????? மிகப்பெரிய கேள்விக்குறியாகயுள்ளது!!!!!!!

நம்முடைய கோபம் சரியான காரமில்லாமல் வீண்போகக்கூடாது!!!!!!!!!!!!!! ஆனால் இது தேவையில்லாத கோபம், போதையால் வந்த கொடூரம்!!!!!! கூடி குடியை மட்டுமில்லை ஒரு சமுதாயத்தை அழிக்கும்!!!!!!!! இனி அந்த அரசாங்கம் நமது தமிழர்களுக்கு விசா குடுக்க கெடுபிடிகளை அதிகரித்தல் ஆச்சரியபடுவதர்க்கில்லை!!!!!!!!!!!

வியாழன், 28 நவம்பர், 2013

சமூகத்தை சீரழிக்கும் கோபிநாத்!!!!!!!!




சமீபத்தில் கண்ட நீயா நானா நிகழ்ச்சியின் தலைப்பு வீட்டில் கணவன் மனைவி என்னவெல்லாம் பேசுகிறார்கள்? கணவன் மனைவி என்கிற உறவு அவர்கள் பேசுவது எல்லாமே ரகசியங்கள் காக்கபடவேண்டியது இதை வெளிபடுத்த ஒரு நிகழ்ச்சி தேவையா? நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம், இப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கணவன் மனைவிகளை என்னவென்று சொல்வது. இப்படியொரு தலைப்பில் விவாதம் நடத்திய அந்த கோட் போட்ட கோமாளியை என்னவென்று சொல்வது?

அதில் கலந்துக்கொண்டவர்கள் கொஞ்சம் கூட வெட்க படாமா ஒளிவு மறைவு இல்லாமல் அனைத்தையும் சொல்றார்களே அந்த மானம்கெட்ட தம்பதியர்களை என்னவென்று சொல்வது, நாட்டில் இதை  தவிர வேற பிரச்சனையே இல்லை? தொலைகாட்சி ஊடகங்கள் தங்களின் டி‌ஆர்‌பியை உயர்த்திக்கொள்ள எண்ணவேண்டுமென்றாலும் செய்யுமா? கணவன் மனைவி உறவின் புனிதம் எங்கே போனது? கலாச்சாரம் என்று வாய்க்கிழிய பேசும் சமூக ஆர்வலர்கள் இப்போ எங்கே போனார்கள்???

இன்றைக்கு நம் பெண்களை சீரழிப்பது நாட்கங்கள் மட்டுமில்லை இந்த மாதிரி கேனத்தனமான நிகழ்ச்சிகளும் தான், பேசுவதற்க்கு நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள், மின்சார பற்றாக்குறை, மாநிலத்தில் நதிநீர் பிரச்சனை, ஒரு தலைமுறையை இல்லாமல் ஆக்கும் கூடங்குளம் பிரச்சனை, இன்னும் பசி, வேலை இல்லா திண்டாட்டம், காசுக்காக போட்டி போட்டு மக்களை மொத்தமாக கொள்ளும் டிராவல்ஸ் பேருந்துகள் இப்படி இன்னும் பல கோடி பிரச்சனைகள் இருக்க எதர்க்கும் உதவாத, ஒரு உறவை கொச்சைப்படுத்தும் இது போன்ற தலைப்புகள் தேவையா?? இதையும் சிரித்துக்கொண்டே பார்க்கும் நமது மக்களின் மனநிலை என்ன இவ்வளவு கேவலாம் ஆகிவிட்டதா!!!!!!!!!!!!! இல்லை அடுத்தவன் பொண்டாட்டிக்கிட்டே எப்படி இருக்கிறான் என்பதை பார்க்கும் கேடுகெட்ட என்னமா????????

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல மக்களாய் பார்த்து மாறாவிட்டால் நாம் தமிழகத்தில் மாற்றமே வரப்போவதில்லை.

மாற்றம் ஒன்றே மாறாதது என்றுமே!!!!!!!!!!!!!!

புதன், 27 நவம்பர், 2013

அங்கோலா உண்மை நிலை என்ன???

இன்றைய நாளில் உலகின் ஹாட் டாபிக் இந்த அங்கோலாதான்!!!!!!! ஆனால் அதில் எந்த அளவிர்க்கு உண்மை என்பதை கொஞ்சும் அலசுவோம் அந்த நாட்டின் அமெரிக்க தூதரின் வாயிலாக ..!!!!!!!!!!!!!!

வாசிங்க்டன் D.C  உள்ள அங்கோலாவின் தூதரக அதிகாரி ஒருவர் தொலைபேசி வாயிலாக தெரிவித்த செய்தி என்னவென்றால்,அங்கோலாவில் இஸ்லாத்திற்கு மட்டுமல்ல எந்த ஒரு மதத்திற்கும் தடை இல்லை, இஸ்லாத்திற்கு தடை என்ற செய்தி வெறும் வதந்தி தான் என்றார்.அங்கோலா எந்த ஒரு மதத்தின் விசயங்களுக்கும் உள் நுழையாது.எங்களது நாட்டில் காதொலிக்,பாப்டிஸ்ட்,ப்ரோடோஸ்டேன்ட், முஸ்லிம் என்று பல மதத்தவர்களும் இங்கு வாழ்கிறார்கள்.எங்கள் நாடு அணைத்து மதத்தவர்களுக்கும் சுதந்திர நாடு என்று தெரிவித்து இருந்தார் என்று  International Business Times மேற்கோள் காட்டியுள்ளது.

மேலும் இது சம்பந்தமாக இவர்கள் வெளியிடும் புகைபடங்கள் எல்லாம் உண்மைதான் ஆனால் இவர்கள் நினைப்பது போன்று தற்பொழுது எடுத்தது அல்ல மாறாக அது எல்லாம் 2008 ஆம் ஆண்டு எடுத்தது!!!!!!!!!!!! (International Business Times).. 

ஃபித்னா (குழப்பம்) செய்வதுகொலையைவிடக் கொடியதுஅவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பிகாஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும்மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்;இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்”. 
அல் குர்ஆன் :2:217

தான் காதில் கேட்டதை எல்லாம் உண்மை எது பொய் எது என்று அறியும் முன்னரே பரப்புபவர்களை பொய்யர்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறியுள்ளதை கூட நம் சகோதரர்கள் அறியவில்லையா?அல்லது அறிந்தும் அறியாததுபோல உள்ளார்களா??????

இஸ்லாத்திற்கு எதிராக எந்த செய்தி வந்தாலும் முதலில் பரப்புபவர்கள் நம் இஸ்லாமிய சகோதரர்களாக தன உள்ளார்கள்...என்று இவர்கள் திருந்துவார்களோ!!!!!!

இதில் கொடுமை என்னவென்றால் தௌஹீத் கொள்கையில் உள்ளவர்களும் இதை பரப்பியுள்ளார்கள்!!!!!!!!!!!!!

குறிப்பு:- இதை நான் சில ஆதரத்துடன் எழுதியுள்ளேன் இதில் அந்த அங்கோலா தூதர் பொய்யுரைத்திருந்தால் அதை அல்லாஹ் பார்த்துக்கொள்வான் 


ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

கேடுகெட்ட, மானங்க்கெட்ட தூ!!!!!!!!!!!!!!!!!!!!!!


கேடுகெட்ட, மானங்க்கெட்ட விபச்சார ஊடகங்களே யாரை எங்கே கூட்டிகுடுத்துக்கிட்டு இருக்கீங்க, இதே வருடம் ஆரபத்தில் இந்தியாவின் தலைநகரத்தில் ஒரு பெண் தாந்தோன்றி னமாக சுற்றியதால் சில மிருகங்களுக்கு இரையானால் அதர்க்காக அன்றுதான் இந்தியாவில் முதன் முதலாக கற்பழிப்பு நடந்தது போன்று அனைத்து மீடியாக்களும், இந்தியா மக்களும் (மண்ணாங்கட்டிகள்) சேர்ந்துக்கொண்டு பல போராட்டங்கள் செய்து அந்த மிருகங்களை கைது செய்ய வைத்தனர்.

ஆனால் இன்று நமது தமிழகத்தில் திருச்சியில் பதின்மூன்று வயது சிறுமி ஒருத்தி அதை விட கொடுமையாக வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டு ரயிலில் தூக்கி வீசப்பட்டுள்ளால். இதனை இதுவரை பத்தோடு பதினொன்றாகத்தான் இந்த மீடியாக்கள் வெளியீட்டு வருகின்றன. ஏன் இந்த பாகுபாடு? யாருக்கு இந்த கொலைவெறி என்றே தெரியவில்லை, இந்த நாட்டில் உள்ள  இந்த மாதிரியான மிருகங்களுக்கா அல்லது இந்த மீடியாக்கலுக்கா? பெண் சுதந்திரம் பேசும் போராளிகள் எங்கே? எங்கே அந்த உண்மை உடனகுடன் மீடியாக்கள்!!!!!!!!!!

இல்லை இதற்க்கெல்லாம் ஒரே காரணம் அந்த பெண் ஒரு இஸ்லாமிய பெண், இது ஒன்று போதாதா இந்த காவிய நாட்டில் கொலை செய்யபடுவதற்க்கு. உடனே வந்துவிடாதீர்கள் இதற்க்கு ஏன் மாத சாயம் பூசுகின்றீர்கள் என்று??? இதுவரை இந்தியாவில் நடந்த அனைத்து கலவரங்களும் மாத சாயல் மூலமே நடந்துள்ளது அதுவும் குறிப்பாக இஸ்லாமியர்கள் அழிந்ததுதான் அதிகம்.

இனிமேல எவனாவது அங்கே அந்த பொன்னை கெடுத்தான் இங்கே இந்த பொண்ண கெடுத்தான்னு சும்மா கொடி புடிச்சிக்கிட்டு வாங்க அப்ப வைசிக்கிறேன்!!!!!!!!!!!!!

இந்த பொண்ணுக்கான நீதி எப்படி கிடைக்கணும்னு நாங்க பார்த்துக்குறோம்!!!!!!!!!!!!!!

தமிழக அரசே!! திருச்சியில் துந்துதுண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட 8 ம் வகுப்பு மாணவி சகோதரி தௌஃபிக் சுல்தானா (13 வயது)வை கொலை செய்த காம காவிவெறி நாய்களை கண்டுபிடித்து உடனே தூக்கில் போடு!!!!!!!!!!!!!!!!

புதன், 1 மே, 2013

எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

ஆசிட் வீச்சைத் தடுக்க என்ன வழி ஆசிட் வீச்சைத் தடுக்க என்ன வழி காதலிக்க மறுக்கும் பெண்மீது ஆசிட் வீசுவதைத் தடுக்க ஆசிட் கிடைக்காத வகையில் சட்டம் போடுவதும், ஆசிட் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதும் தீர்வாகுமா? அப்துல்லாஹ், கீழக்கரை காதலிக்கவில்லை என்ற கோபம்தான் இதற்குக் காரணம். 


இந்தக் கோபத்தை வெளிப்படுத்த ஒருவன் ஆசிட்டைப் பயன்படுத்துகிறான். ஆசிட் கிடைக்காவிட்டால் அரிவாளைப் பயன்படுத்துவான். அல்லது வேறு எத்தனையோ சாதனங்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்துவான். எனவே ஆசிட் கிடைக்காமல் செய்வது இதற்கான தீர்வாகாது. ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் அவர்கள் எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளப் பயிற்றுவிக்கப்பட வேண்டும். 

குறிப்பிட்ட மாடலில் ஒரு சட்டை வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அது கிடைக்காவிட்டால், அல்லது கிடைத்து விலை கட்டுப்படியாகாவிட்டால், என்ன செய்கிறோம்? அதை மறந்துவிட்டு கிடைப்பதை வாங்கி அணிந்து கொள்கிறோம். குறிப்பிட்ட உணவுக்கு ஆசைப்படுகிறோம். அந்த உணவு கிடைக்கவில்லை எனில், அதையே ஜெபம் செய்துகொண்டு செத்துப் போகமாட்டோம். அது கிடைக்காவிட்டால் வேறு உணவைச் சாப்பிட்டுக் கொள்கிறோம். மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டால், மருத்துவக் கல்லூரிகளைக் கொளுத்துவோமா? வேறு துறையைத்தான் தேர்வு செய்வோம். இதுதான் எதார்த்தம். இதுதான் வேண்டும்.

இது தவிர வேறு எதுவும் வேண்டாம் என்பது மனநோய். அதுபோல் ஒரு ஆணுக்குப் பெண் தேவை. பெண்ணிற்கும் ஆண் தேவை. ஒருவனை அல்லது ஒருத்தியை விரும்புகிறோம். அவள் இன்னொருவன் மனைவியாக இருக்கலாம். இன்னொருவனை விரும்புபவளாக இருக்கலாம். அல்லது நம்மை அவளுக்குப் பிடிக்காது இருக்கலாம். அதன் காரணமாக அவள் நம்மை நிராகரித்துவிட்டால், வேறு ஒருவரைத் தேடிக் கொண்டால், அதுதான் எதார்த்தம். 

அவன்தான் வேண்டும் - அவள்தான் வேண்டும் என்று அதையே நினைத்துக் கொண்டு இருந்தால், அது மனநோய். இந்த மனநோய்தான் ஆசிட் வீச்சிற்கும் தன்னைப் பிடிக்காதவரை அழித்தொழிக்கவும் காரணம். இந்த மனநோயை அறிவு ஜீவிகள்(?), ஊடகங்கள் போன்ற விஷக்கிருமிகள் காதல் என்ற பெயரில் பரப்புகின்றன. இவன்தான் வேண்டும் - இவள்தான் வேண்டும் என்று உருகுவதுதான் சிறந்தது. அதுதான் தெய்வீகக் காதல் என்றெல்லாம் மக்களுக்கு மனச் சிதைவை இவர்கள் தான் ஏற்படுத்துகின்றனர். 

எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இந்த நிலை மாறாதவரை இதுபோன்ற எழுத்தாளர்கள் ஊடகத்துறையினரில் உள்ள விஷக்கிருமிகளை அடக்கி ஒடுக்க சட்டம் போடாதவரை இதுபோன்ற சம்பவங்களை ஒருக்காலும் தடுக்கவே முடியாது. ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புவதும், ஒரு பெண் ஒரு ஆணை விரும்புவதும் தான் காதல். விருப்பம் நிறைவேறாவிட்டாலும் நான் அவளையே/அவனையே நினைத்து உருகுவேன் என்பது காதல் அல்ல - அது மனநோய்தான். 

தங்களது மகன் அல்லது மகளுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டு, அதையே நினைத்து உருகிக் கொண்டு இருந்தால், ஆகா தெய்வீகக் காதல் என்று ஊடகங்களின் முன்னாள் பாராட்டிக் கொண்டா இருப்பார்கள்? தான் விரும்புவதையே மக்களுக்கும் விரும்புபவன்தான் அறிவாளி. தொலைக்காட்சியில் முகம் காட்ட வாய்ப்புக் கிடைக்கிறது என்பதற்காக பேசுபவன் அறிவாளி இல்லை என்ற விழிப்புணர்வை எற்படுத்தினால், இதுபோன்ற செயல்களை ஓரளவு தடுக்கமுடியாது

 (குறிப்பு ஆசிட் வீசியவன் அவள் தனக்கு கேடு செய்தால் என்பதற்காகவோ தனது சொத்தைப் பறித்துக் கொண்டால் என்பதற்காகவோ ஆசிட் வீசவில்லை. தனக்கு அவள் கிடைக்கவில்லை என்ற வெற்தான் காரணம். அந்த வெறியை அவனுக்கு ஊட்டியவர்கள் அறிவு ஜீவிகள் எனும் விஷக்கிருமிகள் தான்)

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/unarvuweekly/acid_veechai_thadukka_ennavazi/
Copyright © www.onlinepj.com

வியாழன், 25 ஏப்ரல், 2013

தீவியதர்ஷினியை வைத்து டி ஆர் பி யை அதிகமாக்க வேசித்தனம் செய்கிறதா விஜய் டிவி?


கமல்ஹாசனுடன்... நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி.

கமல் தன் படங்களில் தான் யாரையும் குறை சொல்லவில்லை.. அவர்களின் தவறைத்தான் கிண்டல் செய்கிறேன் என்றார். இவர் செய்யும் தவறுகளை நாம் கிண்டல் செய்யலாமா.. 
அவருடைய கம்பானியன் என்ற அறிமுகத்துடன் கௌதமி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.. இதில் என்ன தவறு என்று ஒரு சிலர் கேட்கலாம்..கமல் பயன்படுத்திய சில வார்த்தைகள் அந்த தவறை ஊர்ஜிதபடுத்தியது..

கமலும் கௌதமியும் திருமணமானவர்கள் (வெவ்வேறு துணையுடன்).. இன்று இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்கிறார்கள்.. ஆனால் இவர்களுக்குள் திருமணம் செய்துகொள்ளவில்லை.. என்ன உறவுமுறை என்று தெரியவில்லை.. கமல் சொல்கிறார்.. உடலுறவுக்கு மட்டுமல்ல இந்த உறவு என்கிறார்.. ஒரு பிரபலமானவர் இதுபோல் செய்தால் அது சரி ஆகிவிடுமா..

மேலும், விஜய் டிவியின் மற்ற நிகழ்ச்சியாளர்கள் கமலுடன் சிறு உரையாடல் வேறு.. அவர்களில் பிரியா என்பவர் சொன்னது நமது கலாச்சாரத்திற்கு புதியது..அவர் சொல்கிறார்.."என் மகனிடம் சொன்னேன், உன் அப்பாவை போகசொல்..நான் கமலுடன் வாழ்ந்துகொள்வேன்" ....அருமை..

மற்றுமொரு நிகழ்ச்சியாளர்..டி டி என்று அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி.. இவருடைய விருப்பம் கமல் தன்னை கட்டிபிடித்து ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் என்பது..

இந்த செயல்களை எல்லோரும் கைதட்டி கொண்டாடுகிறார்கள்.. நாடும் மக்களும் நாசமாய் போகிறார்கள் என்பதன் அறிகுறியோ இது???
மேலும் கமல் புற்றுநோய் தாக்கபட்டவர்களைபற்றி சொல்லும்பொழுது "பூட்ட கேசு" "தேறாது" போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்... இந்த வார்த்தைகள் அந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களின் உறவினர்களையும் எப்படி பாதிக்கும் ?

யென் இவர் கூட ஒரு படத்தில் கோமா நிலையில் உள்ள ஒரு நோயாளியை மருத்துவர் பூட்ட கேசு என்று சொல்லும்போது இவர் பேசும் வசனம் அதை சொல்ல நீங்க கடவுள் இல்லையே மருத்துவர்தானே என்பார்!!!!!!!!!!!!!!!!!!! அதெல்லாம் சும்மா காசு அள்ளத்தான் என்பதை நிரூபித்துவிட்டார்!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நல்லவேளை அந்த நடுத்தர வயது அம்மாவும், திவ்ய தர்ஷினியும் கமலை கட்டிப்பிடுத்து முத்தம் கொடுத்தால் போதும் என்ற ஒரு சின்ன ஆசைக் கனவோட நிறுத்திக்கொண்டார்கள்.

"யாராவது ஒரு க்ரேஸி ரசிகை, நான் கமலோட படுத்து எழுவதுபோல்  டெய்லி மாஸ்டர்பேட் செய்வேன் என்று ஏடாகூடமாகச் சொல்லியிருந்தால்க் கூட அதையும் நிறைவேற்ற தயங்கியிருக்க மாட்டார் நம்ம லோகநாயகன்" என்கிறார்கள் குதர்க்கம் பேசும் சிலர்.

ஆமா முத்தத்தில் அநாகரிகம் ஆரம்பிக்கவில்லை என்றால் எங்கே ஆரம்பிக்கிறது? இல்லைனா அப்படி எதுவுமே இல்லையா? தெரிந்தவர்கள் சொன்னால் நல்லாயிருக்கும்!
ரசிகர்களே சிந்திப்பீர் 

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

இந்திய கலாச்சாரம் ஈசிஆர் ரோட்டுல "ஈ"னு பல்லை இளிச்சிக்கிட்டு நிக்குது

டெல்லியில் மட்டுமா பாலியல் பலாத்காரம் நடக்குது....தமிழ்நாட்டிலும்தான்...உணர்வுபூர்வ தலைவர்கள் ஈழத்தில் நடந்த பாலியல் குற்றத்தைப் பகீரங்கமாய் எடுத்துரைத்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் தமிழகத்தில் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு யாருமே அந்த அளவிற்கு குரல் கொடுப்பதில்லையே....அது ஏன் என்றும் புரியவில்லை..

ஒரு தவறு என்று நடக்கும் போது டெல்லியில் நடந்தால்தான் அந்த பிரச்சினை பூதாகரமாக்கப் படுகின்றது. காரணம் கேட்டால் இந்தியாவின் தலைநகரத்தில் இந்த பிரச்சினை நடக்கின்றது என்று சொல்கின்றார்கள். ஒவ்வொரு முதலைமைச்சருக்கும் அவரவர் மாநிலம் முக்கியமானதே!

அவர்கள் மட்டும்தான் பெண்களா? குழந்தைகளா? நாம் பெற்றதெல்லாம் என்ன? ஆட்டு மந்தைகளா? நமது சகோதரிகள், குழந்தைகளும்தானே பாதிக்கப்படுகின்றார்கள்...அது ஏன் அவர்கள் கண்களுக்கு தெரியவில்லை. ஒரு பெண் இறந்த பிறகு அவளது போட்டோவிற்கு அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு மாலை போடுவதும், ஆறுதல் சொல்வதும் என்ன பிரயோசனம் ? டெல்லியில் நடந்த மருத்துவ மாணவி பாலியல் மரணத்திற்கு பிறகு அந்த பிரச்சினை முடிவு பெறவில்லை...அடுத்தடுத்து இரண்டு சம்பவங்கள்....டெல்லி மருத்துவ மாணவி பாலியல் கொடுமை நடைபெற்ற அதே நேரத்தில் தமிழகத்தின் தூத்துக்குடியில் புனிதா கற்பழித்துக் கொல்லப் பட்டாள். அது ஏன் பத்திரிகை கண்களுக்கு பெரிய விசயமாக தெரியவில்லை?
 

ஒரு எழுத்தாளர், ஆளும்கட்சித் தலைவர் , எதிர்கட்சித் தலைவர் ஒருவர், மற்றும் சமூகநல ஆர்வலர். இவர்களை வைத்து விவாதம் நடத்தி வியாபாரம் செய்துக் கொண்டிருக்கின்றார்கள். பரபரப்பாய்  போகும் விவாதத்தில் ஒரு சிறிய விளம்பர இடைவேளை..என்று சொல்லிவிட்டு 
ஒருவன் ஆக்ஸ் பெர்பியூம் போட்டதும் ஐந்தாறு பெண்கள் அந்த ஆணைத் துரத்திக் கொண்டு ஓடுவது போன்ற ஒரு கேவலமான விளம்பரம்...இப்படி பெண்ணை கேவலப்படுத்தும் விளம்பரங்களைப் போட்டுவிட்டு மீண்டும் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களைப் பற்றிய விவாதம் தொடங்குகின்றது, எனது 6 வயது மகள் கேட்கின்றாள், ஏன் அவன் பின்னாடி எல்லோரும் ஓடுறாங்க? நான் என்ன பதில் சொல்லவேண்டும் அவளுக்கு, எனக்குத் தெரியவில்லை! ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டுக் கொள்கின்றார்கள். எழுத்தாளர் மற்றும் சமூக நல ஆர்வலரை அதிகமாய் பேச விடுவதே கிடையாது. 

இதுவா இப்போது முக்கியம்.? பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களை எப்படி காப்பாற்றுவது...அந்த குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்பன போன்ற விவாதங்கள் மற்றும் அதற்க்கு முடிவுகள் கொடுத்தால் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு கிடைக்குமே!

காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கின்றது என்று குறைகூறும் பத்திரிகைகள் மட்டும் என்ன ஒழுங்கா? தூத்துக்குடி மாணவி பாலியல் பலாத்காரம், திருப்பூர் மாணவி பாலியல் பலாத்காரத்தை எந்த அளவிற்கு மக்களிடம் கொண்டு சேர்த்தது? 


டெல்லி மருத்துவ மாணவியின் மரணத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்தது...அந்த முக்கியத்துவம் ஏன் நம் சகோதரி, மகள் , நம் தமிழச்சி புனிதாவிர்க்கு வழங்கப் படவில்லை...அவள் ஏழைப் பெண் என்பதலா? 


என்ன செய்யலாம் ?
 

காவல்துறையில் தனிக்குழு அமைத்து பெண்களுக்கு, பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும்...
 

எப்படி  செய்வது? 


அந்தந்த பகுதி காவல்துறையினர் அருகினில் இருக்கும் பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு காணொளிகள் மட்டும் குறும்படங்களை வெளியிட்டு அந்த பெண் குழந்தைகளுக்கு மற்றும் ஆண் குழந்தைகளுக்கு தனித் தனியாக சொல்லிக் கொடுக்க வேண்டும், இது கட்டாயமாக்குதல் வேண்டும். 


என்னென்ன சொல்லிக் கொடுக்கலாம்? 


துண்டுப் பிரசூரங்கள் சுத்த ஏமாற்று வேலை...இந்த காலத்தில் துண்டுப் பிரசூரங்களை யாருமே முழுதாய் படிப்பதில்லை...பாதி படிக்கும் போதே தூக்கி எறிந்துவிடுவார்கள் அல்லது கிழித்து போட்டு விடுவார்கள். அதுவே பள்ளி ஆரம்பிக்கும் முன் கடவுள் வழிபாடு தொடங்குவதற்கு முன் பாலியல் துன்புறுத்தல் என்பது என்ன? எப்படி பெண் பிள்ளைகள், பெண்கள் விழிப்பாய் இருக்க வேண்டும்..ஆண் பிள்ளைகள் என்னென்ன செய்யக் கூடாது? அப்படி செய்தால் என்னென தண்டனை என்று சொன்னால் நிச்சயம் அவர்கள் மனதில் நன்கு பதியும்! இது சாத்தியமற்ற செயல் கிடையாது..இதை நிச்சயமாக செய்யலாம்..
 

ஒரு நாளைக்கு இத்தனை வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறையை அலைக்கழிப்பதை விட உருப்படியாய் இந்த விசயங்களுக்கு செலவிடலாமே! இதனை சொல்வதால் எந்த விதத்திலும் இந்திய கலாச்சாரம், தமிழக கலாச்சாரம் கெட்டழியாது என்றே நம்புகின்றேன்...
 

ஆண் , பெண் சமம் என்று போதிக்கும் மகளிர் அமைப்புகள் பெண்ணிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் உயரிய கற்பினை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று அவர்களும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டால் மிக்க நல்லது. அறிமுக மில்லாத நபர் அல்லது அப்பாவை த் தவிர வேறு ஒரு ஆண் நெருங்கினால், உடலைச் சீண்டினால் எப்படி தடுக்க வேண்டும் என்பதை ஒரு காணொளி மூலம் சொல்லிக் கொடுக்கலாம். உடனே அப்பா கூட தவறாய் அணுகி விட்டார் என்று பதிவு செய்வார்கள். அப்படி அப்பாக்கள் தப்பாய் நெருங்குவது நூற்றில் ஒரு சதவிகிதமே...
 

எல்லாவற்றையும் விட, செல் போன் மற்றும் மெமரி கார்ட் விற்பனையில் ஒழுங்கு நடவடிக்கையை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். கேமரா செல் விற்பனையில் சில விதிமுறைகள் நடைமுறைக்கு வர வேண்டும்...அப்படி வந்தால் நாம் பல சைபர் குற்றங்களை தடுக்க முடியும், குறைந்த பட்சம் குறைக்க முடியும்! 

தமிழக பத்திரிகைகள் மற்றும் தொலைகாட்சிகள்...பெருச்சாளியாட, குரங்காட எல்லாம் சற்று புறந்தள்ளிவிட்டு தமிழக மக்களின் தலையாய பிரச்சினைகளுக்கு குரல் கொடுங்களேன்...உங்களுக்கு புண்ணியமா போகும்...இதுவரை பாலியல் குற்றங்கள் செய்தவர்கள் எத்தனை பேர், அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது? என்பது உலகிற்கு தெரிய வேண்டும்...மருத்துவ மாணவி நிற்பயாவிர்க்கு நீதி கிடைக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள் போராட்டம் செய்து விட்டு இப்போது ஐபிஎல் மேட்சில் பிசியாகி விட்டார்கள் என்பதே உண்மை. ஐபிஎல் முடிந்ததும் மீண்டும் பாலியல் குற்றங்களை எதிர்த்து போராடுவார்கள் என்று நம்புகின்றோம். முதலில் இந்த ஐபிஎல் போட்டிகளை தடை செய்ய வேண்டும்..

நாங்கள் காசு கொடுத்து வாங்கும் பேப்பர்ல கண்ட, கண்ட கபோதிகளோட பிறந்த நாள் வாழ்த்துப் படம் பாதிப் பக்கத்துக்கு வருது...
உனக்குப் பிறந்த நாள் னா நீ காசு கொடுத்து தனியா ஒரு பேப்பர் போடு...பெரிய பெரிய தலைவர்கள் பிறந்த நாளா? ரொம்ப சந்தோசம்...நாங்க தெரிஞ்சிக்கிறோம்....நாட்டு நடப்பு தெரியரதுக்குத் தான் பேப்பர்...அதுல பிறந்த நாள், சினிமா நடிகை படம் எல்லாம் எங்களுக்கு எதுக்கு? அதைத் தவிர வேற செய்தியே உங்களுக்கு கிடைக்கலியா?

கடுமையா மின்வெட்டு இருக்கு...ஆனா பெரும்பாலான தெருவுல, காலையிலே 10 மணிக்கு வரைக்கும் லைட்டு எரியுது....குடிநீர் குழாயிலே கக்கூஸ் தண்ணி வருது...ஊருக்குள்ளே கடுமையா போக்குவரத்து நெரிசல் இருக்கு....பள்ளி மாணவ, மாணவிங்க இலவச பஸ் பாஸ் வச்சிருக்கிறதால பஸ் ஸ்டாப்புல ஒரு பஸ்சும் நிக்க மாட்டேங்குது...இப்படி எத்தனையோ பிரச்சினை இருக்கே, அதையெல்லாம் போடுங்களேன்...போக்குவரத்து துறை யிலே நடக்கிற பிரச்சினையை எழுதுங்க..
 

இந்த காரை வச்சிருந்த சொப்பன சுந்தரிய யாரு வச்சிருந்தா ங்கிறது எங்களுக்கு முக்கியமில்லை.....ஆனா அதைப் போட்டுத்தான் நீங்க கல்லா கட்டுறீங்க...நடிகை அஞ்சலியாம்...ஒரு பத்து நாளைக்கு பேப்பரு நல்லா சேல்ஸ் ஆகியிருக்கும்....கடைசியிலே அது என்ன ஆச்சு? இது இப்போ நாட்டுக்கு ரொம்ப தேவையா? எத்தனை குடும்பம் டாஸ்மாக்குல  தாலியை அறுத்திட்டு உக்காந்திருக்கு, அதைப் பத்தி செய்தி போடுங்களேன்....குடிச்சா எப்படி குடல் வெந்து போகும்னு படம் போட்டுக் காம்பிங்களேன்....நாட்டை திருத்துறதுக்கு பத்திரிகை நடத்துன காலமெல்லாம் எப்பவோ போயிடுச்சு! நேர்மையா இருக்கிற காவல்துறை அதிகாரிய பத்தி போடுங்க...சாதனை செஞ்ச அரசு மருத்துவரைப் பற்றி முதல் பக்கத்துல போடுங்களேன்...அரசு அதிகாரிய பத்தி போடுங்களேன்...மக்களும் தெரிஞ்சிக்குவான்களே...20 ரூவாய் லஞ்சம் வாங்குனத பேப்பருல போடுறீங்க...200 கோடி லஞ்சம் வாங்கினவங்கிட்டே போயி பிரஸ் மீட்டுக்கு பெர்மிசன் கேட்டுகிட்டு இருக்கீங்க...
 

பாலியல் குற்றம் செஞ்சவனுக்கு வாதாடுறதுக்கு ஒரு வக்கீல் கூட வரக் கூடாது....இந்திய கலாச்சாரம் ஈசிஆர் ரோட்டுல "ஈ"னு பல்லை இளிச்சிக்கிட்டு நிக்குது...அதை தடுக்க பத்திரிகை துறை முன்வரனும்....தமிழக கலாச்சாரம் டாஸ்மாக் குல தடம் புரண்டு தடுமாறிகிட்டு இருக்கு...இது எல்லாம் பத்திரிகை காரங்களுக்கு தெரியலையா? 


கற்பழிக்கப்பட்ட பெண்ணோட குடும்பத்தை வளைச்சு வளைச்சு படம் எடுக்கிறீங்களே..கற்பழிச்சவனோட குடும்பத்தை வளைச்சு வளைச்சு பேப்பருல போடுங்களேன்...அப்போதான் தண்டனை குறையும்...பாதி வழக்குல கற்பழிச்சவன் முகத்தை மூடிக்கிட்டு கூட்டிக் கிட்டு போறாங்க...இது கற்பழிச்சவன் அப்பா, இது கற்பழிச்சவன் அம்மா இது அக்கா, இது அண்ணன், னு  பேப்பருல போட்டாத்தான் அவனுங்க கொஞ்சமாவது பயப்படுவாங்க...எல்லாவத்தையும் விட இவர்தான் கற்பழிச்சவனுக்கு ஆதரவா வாதாடப் போற வழக்கறிஞர் நு காம்பிச்சா ரொம்ப நல்லா இருக்கும்..!
 

அதை எல்லாம் செய்வாங்களா? நம்ம பத்திரிகை நண்பர்கள்.....!

Thanks To:- http://minsaaram.blogspot.in 

திங்கள், 22 ஏப்ரல், 2013

டெல்லியும் கற்பழிப்பும், முகநூலும்!!!!!!!!!!!



இதனால என்னை தேசத் துரோகின்னு சொன்னாலும் சொல்லுவாங்க, டெல்லியில் முதல்ல 21 அப்புறம் 19 அப்புறம் 13 அப்புறம் 5 ரெண்டு நாளைக்கு முன்னாடி 4 வயசு பொண்ணு சாரி குழந்தையை…………………….. டேய் டெல்லி போலீஸ் புண்ணாக்குகளா உங்களுக்கு என்னதாந்த பிரச்சனை!!!!!!!!!!!!!!!! ஒரு வேலை கூட்டிக்கீட்டு குடுக்குறீங்களா???????????

சரி அரபு நாட்டு தண்டனை அப்படின்னு வாயை திறந்தாலே... காட்டுமிராண்டிதனம் அப்படின்னு சொல்லுது ஒரு கும்பல்.. கூப்பிட்டு கும்மி அடிங்க.. திருந்தவே மாட்டாணுங்க.. மைனர் குஞ்சையாவது சுடுங்கப்பா!!!! மேஜர் பொண்ணுங்க தப்பும். என்ன செய்தாலும் கேபதற்க்கு ஆள் இல்லை என்ற தைரியம்தான் இதர்க்கெல்லாம் காரணம் அப்படி மாட்டிக்கிட்டாலும் வக்கீல்களை வைத்து மன நோயாளி, இன்னும் மேஜர் ஆகலை சிறுவர் சீர்திருத்த பள்ளி என்று சென்று விடலாம் என்ற எண்ணம்தான், முதலில் இந்த வக்கீல்களை கூறுபோடவேண்டும்.

இன்னும் ஒருத்தர் எழுதுகிறார், ஒரு பெண்ணின் பாலாத்காரத்திர்க்கு அந்த பெண் அணியும் ஆடைதான் காரணம் என்று சொன்னார்களே, இப்ப இந்த பிஞ்சு குழந்தை மீது யென் நடந்தது என்று கேட்கிறார்??? பாவம் இவர் விஜய் டீவீ சன் டீவீ எல்லாம் பாற்பதில்லை போல அதில் குழந்தைகளை ஆடவிட்டு கைக்கொட்டி பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை போல!!!!!!!!!!!!!!! இன்னும் சிலர் என்கவுன்ட்டரில் போட்டு தள்ளனும் என்கிறார்கள். இது டெல்லியில் மட்டும் நடைபெறவில்லை, ஆனால் இந்த வீணா போன விபச்சார ஊடகங்கள் டெல்லியில் உள்ளவங்க மட்டும் மனுசங்க, மற்றவங்க எல்லாம் மசிருங்க என்ற நினைப்பில் எழுதுகிறார்கள் மூதேவிங்க. இவர்கள் எல்லாம் நடிகர் நடிகைகளுக்கும், அரசியல் வாதிகளுக்கு விளக்கு புடிக்கிறவங்க தானே.

சரி இனி அந்த  மிருகங்களுக்கு என்ன தண்டனை தரலாம்?. ஒரு 7 வருடம் சிறை தண்டனை? 15 வருடம்? அல்லது ஆயுள் தண்டனை? இந்த உலகில் எத்தனை வகை தண்டனை குடுத்தாலும் அந்த குழந்தையின் பெற்றோருக்கு மன திருப்தி வராது, இந்த மிருகத்தை நடு ரோட்டில் பொது மக்கள் முன்னிலையில் தூக்கில் இட வேண்டும், அதை பார்க்கும் மற்றவர்கள் இனி அது போன்ற தவறை செய்ய பயப்பட வேண்டும், இதை உடனே எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் நடத்திட வேண்டும். இதெல்லாம் இந்த இந்தியாவில் சாத்தியமா?

 தண்டனைகள் கடுமையானால்தான், தவறுகள் குறையும், யாரோ சொன்னது மறுபடியும் நியாபகத்திர்க்கு வந்துதொலைகிறது!!!!!!!

மனித நேய ஆர்வலர்களே, தயவுசெய்து இவர்களின் தூக்கிற்க்க்கும் வக்காலத்து வாங்கி கொண்டு வறாதீர்கள், உங்கள் வீட்டிலும் இவளை போன்ற ஒரு குழந்தை இருக்க கூடும்.

யார் எப்படி சொன்னாலும் சரி, இதற்க்கு ஒரே மருந்து இஸ்லாம்தான், இஸ்லாத்தின் குற்றவியல் தண்டனைதான், ஒரே ஒரு முறை செயல் படுத்துங்கள், அடுத்த முறை ஒருத்தன் அந்த தவறை செய்ய துணிவான்.

திங்கள், 25 மார்ச், 2013

மலரட்டும் தனி ஈழம் !!! வெல்லட்டும் தமிழினம் !!!

சில தினங்களாக எல்லா ஊடகங்களிலும் முதன்மை செய்தியாக இருப்பது இலங்கை தமிழர்கள் பிரச்சனையும், தமிழக மாணவர்களின் போராட்டமும் தான். ஆளாளுக்கு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் நானும் எனது கருத்துக்களை பகிர விரும்புகிறேன்.


காஸ்மீரில் என்ன நடக்குது என்றே நம்மில் பலருக்கு தெரியாது .பல உண்மைகளை குழி தோண்டி புதைத்து கொண்டு இருக்கும் ஊனமான ஊடகமே .விக்கிலீக்ஸ் அங்கு நடந்த அநியாயங்களை அட்டுழியங்களை அம்பலபடுத்தியது குறிப்பிடதக்கது . இதற்க்கு எல்லாம் காரணம் கஷ்மீர் அங்கே இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கொலை செய்யலாம் , பெண்களை கூட்டு கற்பழிப்பு செய்யலாம் பாடசாலை செல்லும் மாணவியை வீதியில் வைத்துச் சுடலாம், தாயின் முன் மகளையும், மகனின் முன் தாயையும் பாலியல் வதைகள் செய்யலாம், தந்தையின் முன் மகனையும் மகளையும் அடித்து கொலை செய்யலாம் பஸ்சுக்காக காத்திருப்பவரை கைது செய்து என்ன குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்தலாம், யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கைது செய்யலாம், மைதானங்களில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை அடித்து உதைத்து இழுத்து செல்லலாம் தேவையான போது கொன்று புதைக்கலாம் 

வியாழன், 21 மார்ச், 2013

இன்னும் எத்தனை பேர் தீக்குழித்து இந்த அரசியல்வாதிகளை காப்பாற்ற போகிறீர்கள்?


 
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மானவர்களின் முதல் கோரிக்கை தனிஈழம், இது எல்முனையளவுக் கூட சாத்தியமில்லை. எந்த ஒரு நாடும் தனது நிலப்பரப்பைப் பிரித்து இன்னொரு நாட்டை ஏற்படுத்திவிட்டு ஒதுங்கிக்கொள்ள வாய்ப்பே இல்லை. அடுத்து அமெரிக்கா கொண்டுவந்துள்ள தேர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பது.

இன்னும் சொல்லப்போனால், இங்கு இவர்கள் போராட்டம் செய்ய செய்ய அங்கு மிச்சம் மீதி இருக்கும் தமிழர்களின் மேல் இன்னும், அடக்குமுறை அதிகரிக்குமே தவிர இவர்கள் வேற எதையும் சாதிக்க போவதில்லை. புலிகளின் காலத்தை விட இன்று மிச்சம் இருக்கும் தமிழர்கள்தான் நிம்மதியாக இருக்கின்றார்கள் எப்போ என்ன நடக்குமோ என்ற நிலை மாறி இன்று அமைதியாக இருக்கிறார்கள், இதனை பொறுக்காமல் இவர்கள் தனி நாடு கோரிக்கை வைத்து போராடி தங்களை தானே ஏமாற்றி வருகிறார்கள்.

திராவிட நாடு கேட்டு அண்ணாத்துரை போராடினார். வடக்கு வாழ்கிறது, தெற்க்கு தேய்கிறது என்றெல்லாம் வசனம் பேசினார், கடைசியில் என்ன ஆச்சு? திராவிடநாடு கோரிக்கையை நாங்கள் கைவிடுகிறோம், ஆனால் அதர்க்காண காரணங்கள் அப்படியேதான் உள்ளன என அந்தர்பல்டி அடித்தார் (எத்தனை போட்டி மாறிச்சோ?). ஆயிரம் கணக்கில் உயிர்களை பளியிட்டும் இன்னும் தெலுங்கானா பிறந்தபாடில்லை.

பாகிஸ்தான் பிரிவினையின் போது இருநாடுகளையும் வெள்ளையர்களே பிரித்துத் தந்துவிடு சென்றதால் பாகிஸ்தான் சாத்தியமானது. இல்லையென்றால் இந்த இரு நாடுகளும் ஒரே நாடாகத்தான் இருந்திருக்கும், இன்று முஸ்லிகளின் நிலையில் ஹிந்துக்கள் இருந்திருப்பார்கள். (சிறுபான்மையினராக)!

பங்களாதேஷ் நாடானது முஜிபுர்ரஹ்மானின் ஆவாமிலீக் கட்சியின் போராட்டங்களாலும், கடும் பதிலடிகளாலும் மட்டுமே உருவானதல்ல. அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி ராணுவத்தை அனுப்பியதால் கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேசாக மாறியது.

இது போன்ற எந்தச் சாதகமான அம்ஸமும் இலங்கையில் இல்லாத போது, இங்கிருந்து தனிநாடு கேட்பதை பார்த்தால் உங்களை விட கேனப்பயலுங்க யாரும் இருக்க முடியாது,.

அடுத்து அமெரிக்க தீர்மானம், இன்று போராட்டம் செய்யும் மாணவர்கள் எவனாவது அந்த தீர்மானத்தின் நகலை படித்திருப்பானா? தனது ஆதாயத்திர்க்காக உலகநாடுகளை மிரட்டி காரியம் சாதித்து கொள்வது அமெரிக்காவிர்க்கு கைவந்த கலையாகும். தீர்மானம் கொண்டு வரப்போகிறோம் என்று பயம்காட்டி புரோக்கர் சும்பிரமணியசாமி மூலம் அமெரிக்காவுக்கு சாதகமாகப் பேசவேண்டியதைப் பேசிமுடிக்கத்தான் அமெரிக்கா இந்த நாடகத்தை நடத்துகிறது.

இலங்கை அரசுடன் அரசியல் புரோக்கர் பெச்ச்வார்த்தை முடிந்துவிட்டதால், ராஜபக்சே அரசு தமிழர்கள்ளுக் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த தீர்மானம் உள்ளது என்று கூறி தமிழக போராளிகளின் மூஞ்சில் கரியை பூசிவிட்டது. இதனால் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக்கி அவரை தூக்கிலட போகிறோம் என்ற தமிழகத் தலைவர்களின் கனவு முற்றிலும் கலைந்துவிட்டது. இப்போது அனைவரும் அந்தர்பல்டி அடித்து அமெரிக்க தீர்மானத்தில் இந்திய அரசு திருத்தம் கொண்டு வார வேண்டும் என்று புரண்டு பேசுகிறார்கள்.

ஒரு தீர்மானத்தை ஆதரிக்கும் முன் அதுக்குறித்து அறிட்ந்துவைத்திருக்க வேண்டும் என்ற சிறிய சிந்திக்கும் திறன் கூட இல்லாத ஊடகங்களும், அறிவுஜீவிகளையும் என்னவென்று சொல்வது.

கல்லூரி மாணவர்கள் இல்லை, இந்தே தமிழகமே கொந்தளித்தாலும் இங்கே உள்ள தமிழர்கள்தான் சாவார்களே தவிர மத்திய அரசு இலங்கைக்கும், ராஜபக்சேவுக்கும் எதிராக ஒன்றுமே செய்யாது. ராஜிகாந்தி படுகொலைக்கு கணக்கு தீற்பதர்க்காக எந்த விலையையும் காங்கிரஸ் தமிழகத்தில் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த மாணவர்களை பெற்றவர்களே, உங்களுக்கு கொல்லி வைக்க பிள்ளை வேண்டுமென்றால் ஒழுங்கா படிக்க சொல்லுங்கள், கல்லூரி நிர்வாகிகளே, கல்லூரிகளை திறந்து இவர்களை வார சொல்லுங்கள், இல்லை வராதவர்களுக்கு TC குடுங்கள். இப்படி செய்தால்தான் இந்த தமிழகத்தை காப்பாற்ற முடியும்.