OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 31 மார்ச், 2011

.இந்தியா vs பாகிஸ்தான் விகிலீக்ஸ் அறிக்கை

நேற்றைய தினம் நடந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியில்..............இந்தியாவிடம்..............தோற்க்கவேண்டும் என்று ஐசிசி இன் தலைவர் பாகிஸ்தானிடம் கேட்டு கொண்டாராம்......................அதனாலதான் அந்த அணி தோல்வி உற்றதாக.....................விகிலீக்ஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளது..............

இது எந்த அளவுக்கு உண்மை என்று கொஞ்சம் பொறுத்திருந்து பாப்போம்..............

தமிழக மக்களை ஏமாற்றமுடியாது !

புதன், 30 மார்ச், 2011

தயவு செய்து சிந்தியுங்கள்!

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்’தின் தேர்தல் ஆதரவு நிலையை தொடர்ந்து பல்வேறு கேள்விகளை முன் வைக்கும் நம் சகோதரர்கள் அனைவரும் இந்த மடலை ஒரு முறையேனும் முழுதாக படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நாமெல்லாம் முதன் முதலில் ஓர் அடிப்படையை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

தி.மு.க வாக இருந்தாலும் அது அ.தி.மு.க வாக இருந்தாலும் ரெண்டுமே இஸ்லாமிய சமுதாயத்திற்கு பாதகங்களைத்தான் அதிகம் செய்திருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க இயலாது.

அரசியல் என்றாலே அரசியல்வாதிகள் என்றாலே ஊழல், அவரவர்களுக்கு சொத்து சேர்த்துக்கொள்ளுதல், அடக்குமுறைகள், லஞ்சம், சிறுபான்மை சமுதாயத்தை நசுக்குதல்... இவையெல்லாம் அவர்களோடு ஒட்டி பிறந்த ரெட்டை குழந்தைகள். இதில் அவர்களுக்குள் யாருக்கும் விதிவிலக்கில்லை.

இந்த நாட்டில் சிறுபான்மையாக இருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தில் வாழும் நாம் இந்த அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய போகிறேன் என கிளம்பினால், முழுநேர அரசியலில் ஈடுபட்டால் - முஸ்லிம் அல்லாத மற்ற மற்ற சமுதாயத்தவர்களின் ஆதரவையும் பெற்றால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதற்காக வளைந்து கொடுக்க ஆரம்பித்து; அனைத்து விழயங்களிலும் வளைந்துகொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு; இறுதியில் படைத்த இறைவனுக்கு இணைவைக்கும் பகிரங்க வழிகேட்டு காரியங்களும் நம் கண் முன்னே நடக்கும்போது அதை தடுக்க திராணியற்றவர்களாக மாறி,இறுதியில் அரசியல் சாக்கடையில் விழுந்த பன்றிகளாக உருவெடுப்போம்,தள்ளப்படுவோம். நமது ஒரே உயர் நோக்கமான மறுமை வாழ்கையை பாழாக்கி கொள்வோம். மரணத்திற்குப்பின் நிரந்தர நரகத்தில் தள்ளப்படுவோம்.

இங்கே தான் அறிவுள்ள ஒவ்வொரு இஸ்லாமியனும் சிந்தித்து செயல்பட வேண்டும்.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த தேர்தலில்களில்தான் ஒவ்வொருஅரசியல்வாதியும் மக்களுக்கு என்னென்ன தேவை இருக்கிறது? அதில் எவற்றையெல்லாம் பூர்த்தி செய்தால் (அல்லது) பூர்த்தி செய்வேன் என உறுதி அளித்தால் அவர்களுடைய ஓட்டை நாம் அறுவடை செய்யலாம்,அதன்மூலம் நாம் ஆட்சி அதிகாரத்தில் அமரலாம் என சிந்திப்பார்கள்.

இந்த சந்தர்ப்பத்தைத்தான், இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில், அதே நேரத்தில் நமது இஸ்லாமிய சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் விதத்தில் எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை ஒவ்வொரு இஸ்லாமியனும் சிந்திக்க வேண்டும். அதைத்தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்து வருகிறது.


"தி.மு.க வாக இருந்தாலும் அ.தி.மு.க வாக இருந்தாலும் - அரசியல்வாதிகள் செய்யற அனைத்து அட்டூழியங்களைத்தான் நீங்கள் ஒவ்வொருவரும் தவறாமல் மாறி மாறி செய்திட்டு வர்றீங்களே,உங்களை நல்லவங்களா மாத்தறது எங்கள் வேலையுமில்லை,அதற்காக நாங்கள் முழுநேர அரசியலில் ஈடுபட்டு எங்கள் மறுமை வாழ்கையை பாழாக்கிக்கொள்ள விரும்பவுமில்லை. ஆக, எங்கள் இஸ்லாமிய சமுதாயத்துக்கு நீ என்ன செய்வாய் (அல்லது) போன தேர்தல் வாக்குறுதிகளில் செய்யறேன்’னு சொன்னதை இதுவரைக்கும் என்னென்ன செய்து முடித்தாய்; அதை சொல்லு? அதில் உள்ள சாதக பாதகங்களை அலசிப்பார்த்து முஸ்லிம்களாகிய நாங்கள் உனக்கு ஒட்டு போடலாமா வேணாமா என்பதை முடிவு செய்வோம்." என்ற வழிமுறையைத்தான், என்ற அடிப்படையைத்தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒவ்வொரு தேர்தலிலும் பின்பற்றி வருகிறது. அனைத்தையும் அல்லாஹ் அறிந்தவன்.


“எங்களுக்கு 3 சீட்டுக்கள் கொடுத்தால் போதும், எங்கள் இஸ்லாமிய சமுதாயத்தின் முன்னேற்றதிற்கு நீங்கள் எவ்வித வழிவகைகளையும் செய்யவில்லையானாலும் பரவாயில்லை, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையானாலும் பரவாயில்லை (அல்லது) எதிர்கால சமுதாய விடிவுக்கான வாக்குறுதிகளே இதுவரை நீங்கள் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை - எங்கள் ஆதரவு உங்களுக்கே” என்று அடிமை சாசனம் எழுதி கொடுக்கும் சமுதாய இயக்கங்கள் மத்தியிலே எங்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டும் நன்மை என்ற ரீதியில் வந்தால் மட்டும் தான் ஆதரவு, மற்றபடி தலைவர்களின் தனிப்பட்ட வேறு எந்த கோரிக்கைகளுக்குமோ துளியளவும் இடமில்லாத காரணத்தால் தான் இறைவனின் மாபெரும் கிருபையினால் இன்றைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எல்லா தரப்பு மக்கள் மத்தியிலும் ஒரு தன்னிகரற்ற இடத்தைப்பெற்றுள்ளது என்பதை மறுக்க முடியாது. எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே

யாராக இருந்தாலும் ஏதாவது சமுதாய‌ கோரிக்கை சார்பாக தவ்ஹீத் ஜமாஅத் அழைத்தால், இவர்களை நம்பி போகலாம், இவர்கள் யாருடனும் விலை போக மாட்டார்கள் என்ற ரீதியில் தவ்ஹீத் ஜமாஅத் மீது முழு நம்பிக்கை வைத்து அலைகடலென திரண்டு வருவது என்பது ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் கிடைத்த பாக்கியம். (எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே). சமுதாயப் பணிகளை சளைக்காமலும் சுய நலமில்லாமலும் (அல்லாஹ்வின் மாபெரும் உதவியைக்கொண்டு) செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இதுவரை எதிர்கொண்ட எந்த தேர்தலாக இருந்தாலும் (அல்லாஹ்மேல் தவக்கல் வைத்து) முஸ்லிம் சமுதாயத்தின் நன்மையை மட்டுமே முன்வைத்து எதிர்கொள்ளத் தீர்மானித்து வருகிறது.

2004 இல் "அல்லாஹ்வுடைய மிகப்பெரும் உதவியைக்கொண்டு" நாம் தஞ்சை பேரணியை துவக்கி நம்முடைய மாபெரும் மக்கள் கூட்டத்தை முதன் முதலாக காட்டி, நமது வாழ்வாதார கொள்கையான தனி இட ஒதுக்கீடு கொள்கையை முன் வைத்தோம்; அப்போதைய தி.மு.க - நாம் ஒரே மூச்சாக முன்னெடுத்து சென்ற முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டு கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்ததால் அந்த பாராளமன்ற (M.P.) தேர்தலில் தி.மு.க.வுக்கு ஒட்டுமொத்த ஆதரவு தெரிவித்து40க்கு 40 என்ற கணக்கில் வெற்றி பெற உறுதுணையாக இருந்தோம்.(அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ஆட்சியை வழங்குகிறான்).


அந்த 2004 பாராளமன்ற (M.P.) தேர்தலில் வெற்றி பெற்ற பின் தி.மு.க. தான் தந்த வாக்குறுதியை வசதியாக மறந்தது.

பின்னர், (நாம் த.மு.மு.க.விலிருந்து விலகிய பின்) 2 ஆண்டுகள் கழித்து, 2006தமிழக சட்டசபை (M.L.A) தேர்தலின் போது கும்பகோணத்தில் "அல்லாஹ்வுடைய மிகப்பெரும் உதவியைக்கொண்டு" மீண்டும் ஒரு மாபெரும் மக்கள் கூட்டத்தை கூட்டி , நம் வாழ்வாதார கொள்கையான இட ஒதுக்கீடு கொள்கையைத்தான் ஆணித்தரமாக மீண்டும் முன் வைத்தோம்.

அப்போது, ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியை வசதியாக மறந்த தி.மு.க., 2006 தமிழக சட்டசபை (M.L.A) தேர்தலில் 234 தொகுதிகளிலும் மீண்டும் வெற்றி பெற செய்யுங்கள், நாங்கள் இட ஒதுக்கீட்டை தந்துவிடுகிறோம் என தனது ஏமாற்றும் வேலையை அரங்கேற்றியது.

அப்போது, ஒரு முஸ்லிம் இரண்டு முறை ஏமாறமாட்டான் என்பதற்கேற்ப தி.மு.க.வின் ஏமாற்று வாக்குறுதிகளுக்கு அடிபணியாமல்; மறுபுறம் இட ஒதுக்கீடுக்கு வழிவகுக்கும் ஆணையத்தை ஜெயலலிதா அமைத்ததால் நாம் அ.தி.மு.க வுக்கு ஆதரவு தெரிவித்தோம்.
இருப்பினும் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது.(அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ஆட்சியை வழங்குகிறான்).

ஆனால், அந்த 2006 சட்டசபை தேர்தலில் இஸ்லாமிய சமுதாயத்தின் மொத்த ஓட்டுக்களும் அ.தி.மு.க.வின் பக்கம் சாய்ந்ததால் , தி.மு.க. பல தொகுதிகளில் மிக சொற்ப ஓட்டுக்களின் வித்யாசத்திலேயே வெற்றி பெற்று,பெரும்பான்மையை இழந்து, ஒரு மைனாரிட்டி ஆட்சியைத்தான் தமிழகத்தில் அமைக்க முடிந்தது.

இதில் நன்கு பாடம் பெற்ற தி.மு.க. முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியது. எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

இட ஒதுக்கீட்டை வழங்கிய பின்னும் அதை முஸ்லிம்கள் முழுமையாக பயன்படுத்தாத விதத்தில் அதில் நிறைந்திருந்த பல்வேறு குளறுபடிகளை பல போராட்டங்களின்மூலம் தமிழக அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எடுத்துக்காட்டிய பின் அதில் உள்ள குளறுபடிகளை ஒத்துக்கொண்ட தமிழக முதல்வர் அதற்கான முறையான ஆவணங்களை செய்வதாக உறுதியளித்தார். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

2009 பாராளமன்ற (M.P.) தேர்தலின்போது, தமிழகத்தில் இட ஒதுக்கீட்டிற்கானவாசலை திறந்து வைத்து அதை முதன் முதலாக வழங்கிய தி.மு.க. வுக்கு - "ஒரு முஸ்லிம் கொடுத்த வாக்குறுதியை ஒழுங்காக நிறைவேற்றுவான்" என்று பறைசாற்றும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு தெரிவித்து அதன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.(அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ஆட்சியை வழங்குகிறான்).

2011 தமிழக சட்டசபை (M.L.A) தேர்தல் வரும் முன்னரே; சென்ற வருடம் 2010ஜூலை 4ல் சென்னையில் "அல்லாஹ்வுடைய மிகப்பெரும் உதவியைக்கொண்டு" மீண்டும் ஒரு மிகப்பெரும் மக்கள் வெள்ளத்தை கூட்டி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் படி மத்திய அரசு முஸ்லிம்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடுத்தகோரிக்கையை ஆக்ரோஷமாக முன் வைத்தது. டெல்லி சென்று பிரதமரையும், சோனியா காந்தியையும் நேரடியாக சந்தித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் அதற்குண்டான கோரிக்கை மனுவையும் சமர்ப்பித்தனர். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

இப்பொழுது 2011 தமிழக சட்டசபை (M.L.A) தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில்முஸ்லிம்களுக்கு இப்பொழுது இருக்கும் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 5சதவீதமாக உயர்த்தி தரும் அணிக்கே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு தெரிவிக்கும் என; அதாவது ஆளும் தி.மு.க அரசு இடஒதுக்கீட்டு அதிகரிப்பை இப்போதே சட்டமாக்க வேண்டும். அப்படி சட்டமாக்கினால் தி.மு.க.வை ஆதரிப்பது என்ற ஒரே முடிவு. அவ்வாறு நடைபெறாவிட்டால் அ.தி.மு.க அவர்களின் தேர்தல் அறிக்கையில் சொல்ல வேண்டும். தி.மு.க இந்தச் சட்டத்தை நிறைவேற்றாமல் அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொன்னால் அ.தி.மு.க.வை ஆதரிப்பது என்ற செயல்திட்டம் சேலம் பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. இதை பல மாதங்களுக்கு முன்னரே அரசியல் தலைவர்கள் காதில் விழும் அளவுக்கு பத்திரிக்கை செய்திகள் மூலமாகவும், ஊர் ஊராக போஸ்டர் அடித்தும் ஒட்டியது. இப்பொழுது நடைமுறையில் இருக்கும் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இருக்கும் குறைபாடுகளை களைய தனி கண்காணிப்பு ஆணையம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது.

இதில் இட ஒதுக்கீட்டின் சதவீதத்தை இப்பொழுதே உயர்த்தி தரும் இடத்தில(ஆட்சியில்) இருக்கும் தி.மு.க. அதை செய்யாமல், இரண்டாம் கோரிக்கையான வெறும் கண்காணிப்பு ஆணையத்தை மட்டும் அமைத்தது.


இதனால், தி.மு.க.வினர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் இடஒதுக்கீட்டை அதிகரித்து சட்டமாக்காமல் சென்றதால் பொதுக்குழு முடிவுப்படி அ.தி.மு.கவை ஆதரிக்கும் செயல்திட்டத்தோடு சென்னை தி.நகரில் அவசர செயற்குழு கூட்டி முடிவு செய்யப்பட்டது (இந்த நேரத்தில் அதிமுக தலைமை தவ்ஹீத் ஜமாத்தோடு இந்த இடஒதுக்கீடு விசயத்தில் நெருங்கி வந்திருந்தது). ஆனாலும் அரசியல்வாதிகள் எப்படி வேண்டுமானாலும் அல்வா கொடுப்பார்கள் என்ற ரீதியில் அதே நிலைபாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதாவது அ.தி.மு.க இடஒதுக்கீட்டை அறிவித்தால் அவர்களுக்கு சீரிய ஆதரவு என்றும், அறிவிக்காவிட்டால் சும்மா கடமைக்கு தார்மீக ஆதரவு என்றும் செயற்குழுவில் அறிவிக்கப்பட்டது. செயற்குழு முடிந்தும் கூட தி.மு.க.வினர் தலைமையைத் தொடர்ந்து தொடர்புகொண்ட போதும் அவர்களை நிராகரித்து அனுப்பியது தலைமை. ஆனாலும் அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தொடர்ந்து தொடர்பிலேயே இருந்தார்கள். அ.தி.மு.க. இரண்டாம் நிலை அமைச்சர்கள் பல தடவை நம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்திற்கு நேரடியாக வருகை தந்து ஜெயலலிதா உங்களை சந்திக்க விரும்புகிறார்கள் என கூறினார்கள். ஆனால்,இதை ஏற்றுக்கொள்ளாத நாம் நீங்கள் தேர்தல் அறிக்கையில் இட ஒதுக்கீட்டை உயர்த்தி தருவோம் என அறிவிக்காதவரை நாம் (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்) யாரையும் சந்திக்க வர மாட்டோம் என திட்ட வட்டமாக தெரிவித்து விட்டோம். ஏனென்றால், இட ஒதுக்கீட்டை பற்றி ஒரு அறிவிப்பும் வெளிவராத நிலையில் நாம் போய் ஜெயலலிதாவை சந்தித்தால் அந்த சந்திப்பையே பயன்படுத்தி பத்திரிக்கைகளுக்கு செய்தி கொடுத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அ.தி.மு.க. வையே ஆதரிக்கிறது என பரப்பி விடுவார்கள் என நாம் அஞ்சினோம்.

ஆனால், அ.தி.மு.க. தலைமை நிர்வாகிகள் “உங்கள் கோரிக்கையான சமுதாய இடஒதுக்கீடு அதிகப்படுத்தும் செய்தி ஒரு எழுத்து கூட விடுபடாமல் தேர்தல் அறிக்கையில் தயாராகி விட்டது என சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ஆனாலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தன்னுடைய செயற்குழு முடிவை மூடியே வைத்து மவுனம் காத்தது. இந்நிலையில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை முதலில் வெளிவந்தது.வழக்கம் போல் இலவசங்களை அள்ளி வீசும் தேர்தல் அறிக்கையாக அது இருந்தாலும், நம் இஸ்லாமிய சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் விதமாக என்னென்ன அம்சங்கள் கூறப்பட்டிருக்கிறது என்பதை நோக்கும்போது அதில் முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதை பற்றி பரிசீலிக்கப்படும் என தி.மு.க.அறிவித்திருந்தது.


எனினும், நாம் சென்னை செயற்குழுவில் ஏற்கனவே முடிவுசெய்தபடி ஆட்சியில் இருந்தவர்கள், (தி.மு.க.) இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்திஅறிவிக்கக்கூடிய இடத்தில இருந்தவர்கள்; அதை அதிகரித்து சட்டமாக ஆக்காமல் தேர்தல் அறிக்கையில் மட்டும் குறிப்பிட்டிருப்பதால் நாம் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் அமைதியாக இருந்தோம்.

இதன் பின்னர் வெளிவந்த அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை நம்மை மிகப்பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வரிக்கு வரி தி.மு.க.வின் இலவச தேர்தல் வாக்குறுதிகளை இரண்டு மடங்காக காப்பி அடித்த ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை பற்றிய ஒரே ஒரு வாசகத்தை கூட இடம்பெற செய்யாமல்; “இஸ்லாம்” என்றோ “முஸ்லிம்” என்றோ ஒரேயொரு வார்த்தையை கூட அ.தி.மு.க. வுடைய தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்யாதது நமது இஸ்லாமிய சமுதாயத்துக்கு ஜெயலலிதா இப்பொழுதே துணிந்து செய்த ஒரு மிகப்பெரும் துரோக செயலாகவே நமக்கு தெரிந்தது.

இதை பொறுத்துக்கொள்ளாத நாம், நம்மை இடைவிடாது வந்து சந்தித்த அ.தி.மு.க. தலைமை நிர்வாகிகளை தொடர்புகொண்டு கேட்டதற்கு , முதலில் மழுப்பிய அவர்கள் பின்னர் இவ்வாறு "முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவிப்பதால் அது எங்கு மற்ற சமுதாய ஓட்டுக்களை பிரித்துவிடுமோ என அஞ்சித்தான் அம்மா அவர்கள் இதை தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்யவில்லை" என கூறினார்கள்.

என் அருமை இஸ்லாமிய சகோதரர்களே, இங்குதான் நாம் விழித்துக்கொள்ள வேண்டும். இன்னும் தேர்தலே நடக்கவில்லை அவர்கள் வெற்றியடைவார்கள் என்பதே உறுதி செய்யப்படவில்லை,இப்படி இருக்கும் பொழுது “புதிதாக அல்ல, ஏற்கனவே” எதிர் (தி.மு.க.) அணியினால் அவர்கள் ஆட்சியில் வழங்கபட்டிருக்கிற இட ஒதுக்கீட்டை உயர்த்தி கொடுப்போம் என்ற ஒரு வார்த்தையை (அதுவும் எதிர் (தி.மு.க.) அணி ஏற்கனவே அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் சேர்த்துவிட்ட்ட ஒரு வார்த்தையை) இவர்களுடையதேர்தல் அறிக்கையில் சேர்க்க இவர்களுக்கு மனம் வரவில்லை என்றால், அதை சேர்த்தால் எங்கு மத்த சமுதாய ஓட்டுக்களை அது பிரித்துவிடுமோ என இப்பொழுதே அவர்கள் அஞ்சுவார்கலேயானால்;இப்படிப்பட்டவர்கள் தேர்தலில் ஜெயித்தபின் இட ஒதுக்கீட்டை உயர்திக்கொடுப்பார்கள் என எப்படி ஒரு முஸ்லிம் நம்புவான்?இவர்களை நம்பி எப்படி ஒட்டு போட ஒரு முஸ்லிம் முன் வருவான்?இப்பொழுதே, ஒரு வாக்குறுதி கொடுப்பதற்கே பின் வாங்கும் இவர்கள் நாளை இட ஒதுக்கீட்டை உயர்திகொடுப்பார்கள் என்பது எப்படி நிச்சயம்?

இதையெல்லாம் யோசித்துபார்த்து ஒரு சரியான முடிவை எடுப்பதற்காகத்தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மீண்டும் அவசரமான பொதுக்குழுவை கூட்டியது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை எந்த வியசத்தையும் தன்னிச்சையாக எடுக்கக்கூடிய தனிநபர் முடிவுக்கு வேலையே இல்லை என்பதை அனைத்து மக்களும் நன்கறிவார்கள். எந்த தேர்தல், சமுதாய பிரச்சனையாக இருந்தாலும், செயற்குழு பொதுக்குழு ஆகியவற்றைக்கூட்டி அப்போது முன்னிருக்கும் பிரச்சனைகளை மக்கள் மன்றத்தில் முன்வைத்து அதில் இருக்கும் சாதக பாதகங்களை விளக்கமாக எடுத்து சொல்லி,சமுதாயத்தின் நலன் கருதி என்னமுடிவு எடுக்கலாம் என்பதை ஒழுங்கான வாக்கெடுப்பை நடத்தி அதில் அதிகமானவர்களின் ஆதரவு பெற்ற கருத்து என்னவாக முடிவுக்கு வருகிறதோ அதைதான் (அல்லாஹ்மேல் தவக்கல் வைத்து) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பின்பற்றி வருகிறது. (அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்).


இந்த பொதுக்குழுவில் - செய்யவே மாட்டேன் என சொல்பவனும்,வாய்ப்பிருந்தால் செய்வேன் என சொல்பவனும் சமமாக மாட்டான். அதே ரீதியில் தான் தி.மு.க.வினரின் இன்றைய நிலையும், அ.தி.மு.க. வினரின் இன்றைய நிலையையும் மக்கள் மன்றத்திலே வைக்கப்பட்டது. சமுதாயத்திற்கு அதிமுக (இப்பொழுதே, தேர்தலுக்கு முன்னதாகவே) செய்த நம்பிக்கை துரோகத்தை விட, திமுகவின் துரோகம் கொஞ்சம் குறைவு என்ற ரீதியிலும், தவ்ஹீத் ஜமாஅத்திடம் வாக்குறுதி கொடுத்து ஒட்டுமொத்த சமுதாயத்தையே ஏமாற்ற நினைத்த ஜெயலலிதாவுக்கு சரியான பாடம்புகட்ட வேண்டும் என்ற ரீதியிலும் இரண்டு விசயங்கள் வாக்கெடுப்புக்குவைக்கப்பட்டன.

1) இந்த தேர்தலில் நம் சமுதாயத்திற்கு யாருமே நன்மை செய்துவிடவில்லை, இரண்டு கட்சிகளுமே துரோகம் தான் செய்தார்கள். எனவே யாருக்கும் ஆதரவு இல்லை. ஜமாஅத் பெயரையும் கொடியயும் பயன்படுத்தி யாருக்கும் வேலை செய்யக் கூடாது. ஆனால் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் சிந்தித்து ஓட்டளிக்கலாம்.

2) திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லி இருப்பதும் ஜெயலலிதா தேர்தல்அறிக்கையில் சொல்ல மறுத்ததும் சமமானதல்ல என்பதால் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பது.


என்ற இரண்டு விசயங்கள் மக்கள் மத்தியில் வாக்கெடுப்புக்கு வைக்கப்பட்டன. மக்களுக்கு வாய்ப்பளித்து முதல் கோரிக்கை சராசரியாக 20 % வாக்குகளைப் பெற்றது. அதே போல இரண்டாவது கோரிக்கை மக்களின் ஏகோபித்த தீர்ப்பாக ஏறத்தாழ 80% வாக்குகளைப் பெற்றது.

ஆக, மக்களின் ஏகோபித்த முடிவைத்தான் தலைமையே ஏற்றுக் கொள்ளும் என்ற ரீதியில் திமுக அணியை 234 தொகுதிகளிலும் ஆதரிப்பது என்ற மக்களின் முடிவை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமை அறிவித்தது. இது எந்த நிலையிலும் தன்னிச்சையான முடிவு அல்ல. அனைத்தையும் அல்லாஹ் அறிந்தவன்.

மூணு சீட்டு கழகத்தின் மூன்று காமெடி பீசுகள்........................
NO COMMENTS


செவ்வாய், 29 மார்ச், 2011

கிரிக்கெட்டிற்கும் தேசபக்திக்கும் என்ன சம்பந்தம்?


இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் உடைகளை பன்னாட்டு நிறுவனங்களின் முத்திரைதானே அலங்கரிக்கின்றது? போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்யும் பெப்சி, சோனி, ஹோண்டா போன்ற நிறுவனங்களெல்லாம் உலகமெங்கும் தொழில் செய்கின்றன. இவர்களின் தயவில் இந்தியாவின் தேசபக்தி எப்படி? இந்தியா ஒரு போட்டியில் வென்றதும் மகிழ்ச்சியில் கூட இரண்டு புரோட்டாவையும், பீயரையும் முழுங்குவதுதான் தேசபக்தியின் விளைவுகள். தேசபக்தி இவ்வளவு சுலபமானது என்றால் டாஸமாக்தான் இந்தியாவின் மிகப்பெரிய தேசபக்தி நிறுவனமாக இருக்கும்.
ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் வீட்டில் பாரதமாதா படத்திற்கு பூஜை செய்வதை தேசபக்தி என்கிறார்கள். கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்தில் கமான் இந்தியாஎன்று கூவுவதை தேசபக்தி என்கிறார்கள். இந்தியாவில் கிரிக்கெட்டை இளைஞர்களின் மதமாக மாற்றி நுகர்வு கலாச்சார சந்தையில் சக்கை போடு போடும் நிறுவனங்களை அம்பலப்படுத்த, தேசபக்தி போதையில் மூழ்கியிருக்கும் தருணம் பார்த்து இவர்கள் உங்களது சட்டைப்பையிலிருக்கும் பணத்தை திருடும் வழிப்பறிக்கொள்ளயை தடுத்து நிறுத்த வேண்டுமென்றால் நாம் பாக் அணியை ஆதரித்தே ஆக வேண்டும்.
தேசம் என்பது அங்கு வாழும் மக்களை குறிக்கும். அந்த மக்களது வாழ்க்கை நலனுக்காக செய்யும் நடவடிக்கைகளே தேசபக்தியோடு தொடர்புடையவை. காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது, குஜராத்தில் முசுலீம் மக்கள் வேட்டையாடப்பட்டது, தமிழக மீனவர்கள் கடலில் கொல்லப்படுவது, விவசாயிகள் தற்கொலை இதற்கெல்லாம் ஏதாவது சிறு துரும்பையாவது செய்தீர்களென்றால் அது தேசபக்தி எனலாம். அப்படி எதுவும் செய்யாமல் டி.வியை பார்த்து ஐந்தாம் ஜார்ஜ் மன்னனை வாழ்த்தி எழுதப்பட்ட ஜனகனமனவை எழுந்து நின்று பாடி, பின்னர் உருளை சிப்சை விழுங்கி, பெப்சியை அருந்திக் கொண்டு டெண்டுல்கர் பாடில் ஸ்வீப் அடிப்பதை சிலாகித்தால் அது தேசபக்தியா? இல்லை இதுதான் தேசத்துரோகம்.
பாக்கிஸ்தான் நமது அண்டை நாடு மட்டுமல்ல நமது ரத்தமும் கூட. பாக்கிஸ்தான் மக்கள் நமது சகோதரர்கள். நம்மிடமிருந்து அந்தநாடு பிரிந்ததற்கு ஆங்கிலேயர்கள், காங்கிரசு மற்றும் இந்துமதவெறி கும்பல்தான் முதன்மையான காரணம். இன்று இந்திய ஆளும் வர்க்கங்களால் ஏழை நாடாக வாழ வேண்டிய அவல நிலையில் இருப்பவர்கள். அமெரிக்காவுடன் கூடிக் குலவும் பாக் ஆளும் வர்க்கத்தால் சொந்தநாட்டில் பயங்கரவாத நிகழ்வுகளோடு செத்துப் பிழைக்கும் துர்பாக்கியவாதிகள்.
பாக் கிரிக்கெட் அணியையே எடுத்துக் கொள்ளுங்கள். இலங்கை அணியோடு நடந்த டெஸ்ட் போட்டியில் தீவிரவாதிகள் தாக்கிய பிறகு எந்த அணியும் அங்கே செல்வதில்லை. இந்த உலகப் போட்டியும் கூட அங்கு நடக்க வேண்டியது, ரத்து செய்யப்பட்டது. பாக் கிரிக்கெட் வாரியத்திற்கு கூட ஏதோ கொஞ்சம் நட்ட ஈடு கொடுத்து வாயை அடைத்தார்கள். மற்ற அணி வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும்போது அவர்களுக்கு அந்த வாய்ப்புகள் இல்லை. எளிதாக மேட்ச் பிக்சிங் புரோக்கர்கள் கைகளில் விழுகின்றனர்.  மேட்ச் பிக்சிங் விவகாரத்தில் இந்தியா உட்பட மற்ற நாட்டு அணிகளது யோக்கியர்களும் அடக்கம் என்றாலும் பாக் அணிதான் இதில் மிகவும் கெட்ட பெயரை சம்பாதித்திருக்கிறது. தற்போது கூட பாக் உள்துறை அமைச்சர் பாக் அணி வீரர்களை நேரடியாகவே மேட்ச் பிக்சிங் குறித்து மிரட்டியிருக்கிறார். அவர்களது ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படுகிறது என்று எச்சரித்திருக்கிறார். இதையெல்லாம் ஏற்றுக் கொண்டு அடிமைகளைப் போல ஆடவேண்டிய நிலைமையில் அந்த அணி இருக்கிறது.
இந்தியா பாக் இரண்டு நாடுகளின் மேட்டுக்குடி சூதாடிகள் மொகலியில் நடைபெற இருக்கும் ஆட்டத்தை வைத்து பத்தாயிரம் கோடிக்கு சூதாடப் போவதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் அப்பாவி இரசிகர்களோ தமது நாடு வெல்லப் போவதை எண்ணி காத்திருக்கிறார்கள். விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் இப்படி ஒரு போலி தேசபக்தி சண்டைக்கு என்ன அவசியம் இருக்கிறது?
தற்போது மவுனமோகன்சிங் அழைப்பின் பேரில் பாக் பிரதமர் கிலானி வர இருக்கிறார். இதை கண்டித்து எழுதும் பால்தாக்கரே அப்படியே கசாப், அப்சல் குருவுக்கும் டிக்கெட் எடுத்துக் கொடுத்து அழையுங்கள்என்று கேலி செய்கிறார். முன்னர் போல ஆடுகளத்தை சேதம் செய்யும் பலம் இன்று சிவசேனாவிற்கு இல்லை என்றாலும் இந்துமதவெறியரின் மனப்போக்கிற்கு இதுதான் எடுத்துக்காட்டு. பாக்குடன் எந்த உடன்பாடும் காணாதபடி இருப்பதையே இவர்கள் விரும்புவார்கள். இவர்களது திமிருக்காக இருநாட்டின் ஏழை குடும்பங்களிலிருந்தும் இராணுவத்திற்கு சென்று வாழும் சிப்பாய்கள் மட்டும் சுட்டுக் கொண்டு சாகவேண்டும். ஆர்.எஸ்.எஸ் அம்பிகளோ பூட்டிய அறைக்குள் பாதுகாப்பாக நின்று பாரத்மாதாகி ஜெய் என்று முழங்குவார்கள்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் நடந்த கால்பந்து போட்டியில் ஈரான் வென்றதை அந்நாட்டு மக்கள் அரசியல் வெற்றி போல கொண்டாடியதை கூட ஆதரிக்க முடியும், புரிந்து கொள்ள முடியும். ஆனால் இரண்டு பரதேசி நாடுகள், ஏழைகளை அதிகம் கொண்டிருக்கும் நாடுகள் இப்படி மோதிக் கொள்வதையும், விளையாட்டு வெற்றியை போர் வெற்றி போல சிலாகிப்பதையும் எப்படி ஆதரிக்க முடியும்?
எனவே இந்த போலி தேசவெறியை தோலுரிக்கும் வண்ணம் நாம் பாக் அணியை ஆதரிக்க வேண்டும். இந்திய-பாக் மக்களின் ஒற்றுமை மூலமே இந்தியா பாக் ஆயுத போட்டியை நாம் தட்டிக்கேட்க முடியும். உடனே சில தேசபக்த குஞ்சுகள் கசாபை அனுப்பிய நாட்டிற்கா நமது ஆதரவு என்று வெடிப்பார்கள். சரி சம்ஜூத்தா எக்ஸ்பிரசுக்கு சங்க பரிவாரங்களை அனுப்பியது மட்டும் என்னவாம்? அதில் கொல்லப்பட்ட பாக்கின் அப்பாவி மக்களது உயிர் மட்டும் மலிவானதா?
பொதுவில் கிரிக்கெட் என்பதே சோம்பேறித்தனமான விளையாட்டு. மனித உடலின் அதீத சாத்தியங்களுக்கும், கொண்டாட்டத்திற்கும் அங்கே இடமில்லை. கால்பந்து, ஹாக்கி போல மனதுக்கும், உடலுக்கும் வேலை கொடுத்து ஆற்றுப்படுத்தும் சக்தி அதற்கில்லை. வீரர்கள் பெரும்பான்மை நேரங்களில் அசையாமல் இருப்பதுதான் கிரிக்கெட்டின் பண்பு. அதனால்தான் அதை ஆங்கிலேய துரைகளின் மத்தியில் பிரபலமாக இருந்தது. இந்தியாவில்கூட பெறும்பான்மை ஆதிக்கசாதிகளை சார்ந்தோரே  கிரிக்கெட்டில் நுழைந்து பெரிய ஆளாகும் வாய்ப்பை இன்றும் பெறுகிறார்கள்.  இந்திய அணியின் பலவீனமாகக் கருதப்படும் வேகப்பந்து வீச்சாளர்கள் குறைவுக்கும் இது முக்கிய காரணம். மற்ற அணிகள் மூன்று வருடத்துக்கு ஒரு அதிவேக பந்து வீச்சாளர்களை தயார் செய்துவிடும் போது இங்கே முப்பது வருடத்துக்கு ஒரு நட்சத்திர ஆட்டக்காரர் வருவது பெரிய பாடாக இருக்கிறது. மாட்டுக்கறி சாப்பிட்டு வளர்ந்தால்தான் நூறு மைல் வேகத்தில் பந்து போட முடியும். பார்ப்பனிய மேல்சாதியினர் பிடியில் இந்திய கிரிக்கெட் இருக்கும் போது இது இப்போதைக்கு சாத்தியமில்லை.  அந்த வகையில் மேல்சாதி இந்திய அணிக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் பாக் அணியைத்தான் ஆதரிக்க வேண்டும். வட இந்தியாவில் இருப்பது போன்ற இந்து தேசிய வெறி தமிழகத்தில் இல்லை. இதன் பாதிப்பில்தான் சென்னையில் இந்திய அணிதோற்றாலும் வெற்றிபெற்ற அணியை இரசிகர்கள் எழுந்து நின்றுபாராட்டுவார்கள் என்பது உலகறிந்த செய்தி. என்ன இருந்தாலும் பெரியார் பிறந்த மண் அல்லவா?
வெல்லட்டும் பாக் கிரிக்கெட் அணி ! ஒழியட்டும் போலி இந்திய தேசபக்தி !!

பாகிஸ்தான் அணித்தலைவர் அப்ரீடி சொன்னது என்ன?

கடந்த சில நாட்களாக எந்த நியூஸ் சேனலை திறந்தாலும் இதுதாங்க செய்தி, பாகிஸ்தான் அணித்தலைவர் நம்மூர் சச்சினை பற்றி ஏதோ தவறாக சொல்லிவிட்டார் என்று.....................அவர் அப்படி என்னதான் சொன்னார்...........
அதாவது 


"எங்களுக்கும் இந்தியாவிற்கும் இடையில் நடக்கவிருக்கும் அரை இறுதியில், சச்சினை அவருடைய நூறாவது சதத்தை எட்டவிடமாட்டோம்" .

இதுதாங்க அவரு சொன்னது இதுல என்ன தப்பு இருக்குன்னு எனக்கு தெரியலை, இதை இந்த இந்திய மீடியாக்கள் ஏதோ அப்ரீடி சச்சினோட பொண்டாட்டிய இழுத்துட்டு ஓடினமாதிரி பேசுறானுங்க.................இதை ஏன் இந்த மீடியாக்கள் வேறு விதமாக பார்க்கவில்லை என்கின்ற கருத்தையும் அப்ரீடி இன்று தெரிவித்துள்ளார்...............

அதாவது ஒரு அணியின் தலைவராக நான் சொன்னது உண்மைதான், அதிலிருந்து வெளியே வந்தால் கண்டிப்பாக சச்சின் ஒரு தலைசிறந்த வீரர் என்பதில் அவருக்கு ஒரு போதும் சந்தேகமில்லை என்கிறார். அதுமட்டுமில்லை, இதியாவிற்கு எதிராக விளையாட கூடிய எந்த ஒரு நாட்டின் அணித்தலைவரும் சொல்லமாட்டார் நாங்க அவுங்களை நல்லா ரன் எடுக்க விடுவோம் என்று.............இது கூட புரியாத இந்த மூதேவி மீடியாக்கள் என்னமோ பெரிய போர் நடக்க போவதை போலதான் சித்தரிகிறார்கள்.  

ஒரு வேலை மற்றவர்களையும் நம்ம தோணி போல சொரணை கெட்டவனு நினைத்து விட்டார்களோ என்னமோ..............அப்புறம் இந்த மீடியாதான் இப்படினா இங்கே வலைபதிவு எழுதுறவங்க இருக்காங்களே அவங்க அதுக்கு மேல, எல்லா படிச்சவங்கதான்................ஆனால் அதுக்கு உண்டான அறிவு கொஞ்சம் கூட இல்லை......................

நான் ஏற்கனவே சொன்னது போன்று விளையாட்டை விளையாட்டா பாருங்க....................

சனி, 26 மார்ச், 2011

ஏன் இளைத்தாய் என் எழுச்சிமிகு சமுதாயமே?

ஏன் இளைத்தாய் என் எழுச்சிமிகு சமுதாயமே?வாசகர் பகுதி - முனைவர் முஹம்மத் அலி IPS பக்கம்
"பேட்டை முதலாளி" என்று செல்லமாக அழைக்கப்பட்டவரும் தோல் வியாபாரத்தில் தமிழகத்தில் கொடிகட்டிப் பறந்தவருமான கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள், தமது உடல்javascript:void(0), பொருள், ஆவி அத்தனையும் இஸ்லாமிய சமூகத்திற்காக அர்ப்பணித்தவர். தமிழகத்தில் மட்டுமல்லாது முஸ்லிம்களை இந்திய அளவில் தலைநிமிர்ந்து நிற்க வைத்த பெருமை படைத்த அப்பழுக்கற்ற அரசியல்வாதி. நாட்டுப்பற்று மிக்கவர். தமிழகத்தில் மூதறிஞர் ராஜாஜி, பகுத்தறிவுப் பகலவன் பெரியார், ஏழைப்பங்காளன் காமராஜர் போன்றவர்களுடன் இணையாகப் பேசப்பட்டவர் காயிதே மில்லத் அவர்கள். 1967ஆம் ஆண்டு நான் புதுக்கல்லூரி மாணவனாக இருந்தபோது நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக எவரும் எதிர்பார்க்காத அமோக வெற்றியை ஈட்டியது. பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பினை ஏற்றபோது குரோம்பேட்டையிலிருந்த காயிதே மில்லத் அவர்களது வீடு தேடிச் சென்று வாழ்த்துப் பெற்றார். அந்த அளவிற்கு உயர்ந்தவர் காயிதே மில்லத் இஸ்மாயில் ஸாஹிப். தமது நீண்ட மேலாடையில்(ஓவர்கோட்) மெலிந்த உருவமானாலும் உயர்ந்து விளங்கினார்.

அவருக்கு உறுதுணையாக சிம்மக் குரலோன் திருப்பூர் மொய்தீன், ரவணசமுத்திரம் பீர்முகம்மது, இலக்கியச் செல்வர் அப்துல் லத்தீப், முகவை எஸ்.எம். ஷரீஃப், வந்தவாசி வஹாப், பத்திரிக்கையாளர் மறுமலர்ச்சி யூஸுஃப், கொள்கைச் செம்மல் ஏ.கே அப்துஸ்ஸமது, இளைஞர் சிங்கம் செங்கம் அப்துல் ஜப்பார் போன்றவர்கள் அனைவரும் அப்போது ஒருமித்து இருந்ததால் இந்திய நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனித்தன்மையுடன் இரட்டைப்படை எண்ணிக்கையில் பதவி வகித்து, சமுதாயத்தின் குரலினை ஒலிக்கச் செய்தது.

ஆனால் அதே முஸ்லிம் லீக், இன்று தங்கள் கட்சியினைத் தேர்தல் அங்கீகாரம் பெறமுடியாத அளவிற்குக் காயிதே மில்லத்தின் பேரன் தாவூத் மியான்கானுடைய ஒரு சிறுகட்சி, சவால் விடுவதும் தி.மு.கவின் பின்னால் ஒளிந்து கொள்ளும் அளவிற்குத் தேய்து விட்டதும் பரிதாபமாக இல்லையா?

சமீபத்தில், கள் இறக்கப் போராட்டம் நடத்திய, தமிழகத்தின் மேற்குப் பகுதியில் மட்டும் பெரும்பான்மை சமூகமாக உள்ள கொங்கு வேளாளர் கட்சிகூட 2011 தேர்தலில் போட்டி போடுவதற்கு ஏழு இடங்களைப் பெற்று விட்டது. வட மாவட்டங்களில் மட்டும் பெரும்பான்மை சமூகத்தினை வைத்திருக்கும் பா.ம.க மற்றும் விடுதலை சிறுத்தைக் கட்சிகள் முறையே 31, 10 இடங்களைப் பெற்றுக் கொண்டன. ஆனால் தமிழகம் முழுதும் பரவலாக வாழும் ஏழு சதவீத முஸ்லிம்களுக்கும் அரசியல் ரீதியில் கட்சிகளாகத் கண்ணுக்குத் தெரியக்கூடிய முஸ்லிம் லீக் கட்சியும் த.மு.மு.கவின் மக்கள் மனிதநேயக் கட்சியும் முறையே தி.மு.க மற்றும் அதிமுக கூட்டணிகளில் இணைந்து போட்டிபோட வெறும் தலா மூன்றே மூன்று தொகுதிகள் பெற்று இளைத்திருப்பதிற்கும் ஏற்கனவே நல்ல பங்கு ஒதுக்கப் பட்டவர்கள் "எங்களுக்கு இன்னும் வேண்டும்" என்று கேட்டால் பிடுங்கிக் கொடுப்பதற்கு, 'இருக்கவே இருக்கிறதுஇளிச்சவாய் முஸ்லிம் கட்சி' என்று நினைப்பதற்கும் யார் காரணம் சகோதரர்களே?

சரி, தலா மூன்று தொகுதியில் போட்டி போடும் வோட்பாளர்கள் ஆறு முஸ்லிம்களும் வெற்றி பெற்று விடுவார்களா? அததற்கும் உறுதி ஏதுமில்லை. காரணம், அந்தத் தொகுதிகளை ஒதுக்கிய தி.மு.கவும் அதிமுகவும் போட்டியிட ஒதுக்கும் இடங்களில் இரு முஸ்லிம் கட்சிகளும் எதிரெதிராக மோதிக் கொள்வர். ஆகவே கடைசியில் மிஞ்சப் போவது இரண்டு முஸ்லிம் வேட்பாளர்கள். எண்ணிக்கை என்பது இப்போது இருப்பது போலத்தான் இருக்கும் என்பதே நம் சமுதாயத்தின் யதார்த்த நிலை.

ஒரு நாட்டில் தேர்தல் நடக்கும்போது, கட்சிகளின் கொள்கைகளை அந்தந்தக் கட்சிகள் தேர்தல் அறிக்கையாக வெளியிட வேண்டும். அதுபோன்ற கொள்கைப் பட்டியலில்,

முஸ்லிம்களுக்கு 5 சதவீத ஒதுக்கீடு வேண்டும்,
இதுவரை 3.5 சதவீத ஒதுக்கீட்டில் பயனடைந்த முஸ்லிம்களின் பட்டியலினை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்,
முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் முன்னேற, பிரதமரின் 15அம்ச சிறப்புக் கொள்கையின்படி முஸ்லிம்களுக்குத் தனித் தொழில் பேட்டைகள் ஆரம்பிக்க வேண்டும்,
ஆக்கிரமிப்பில் உள்ள வக்ஃபுச் சொத்துகள், மற்றும் கணக்கில் வராத தர்ஹாச் சொத்துகள் கைப்பற்றப்பட வேண்டும்.
ஆகிய நியாயமான உரிமைக் கோரிக்கைகளை, முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகச் சொல்லிக் கொள்ளும் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையாக வெளியிட முடியுமா?

ஒருக்காலும் முடியாது! காரணம், முஸ்லிம் லீக், தனிச்சின்னத்தில் போட்டியிட முடியாமல் தி.மு.கவின் சின்னத்தில்தான் போட்டியிட முடியும். தமுமுகவின் மனிதநேய மக்கள் கட்சியின் பிரதான கூட்டணித் தலைமையான அதிமுக, நான் மேலே குறிப்பிட்ட முஸ்லிம் நலத் திட்டங்களுக்கு எதிரானது என்பதால், கூட்டணித் தலைமைக்கு எதிராக ம.ம.கவும் மேற்காணும் கொள்கை விளக்கம் வெளியிட முடியாது.

ஒரு சமுதாயக் கட்சியினை நடத்துகிறவர்கள், அந்தச் சமுதாயம் மேம்பட அரசியல்வாதிகளாக மட்டுமல்லாது அந்தச் சமுதாயத்தினை மேம்படுத்த, முற்போக்குத் திட்டங்களைச் செயல்படுத்தும் செயல் தலைவர்களாகவும் இருக்க வேண்டும். அதாவது ஆங்கிலத்தில் சொல்வதென்றால் வெறும் Politiciansகளாக இல்லாமல் Statesmenஆகவும் இருக்க வேண்டும். சமுதாய இயக்கங்களை அரசியல் கட்சிகள் தங்கள் இஷ்டம்போல ஆட்டிப்படைக்கவும் கருவேப்பி்லையாகக் கருதவும் நாம் அனுமதிக்கலாமா?

நமது சமுதாயத்திற்கு என்று ஒரு எம்.பி. இருக்கிறார். அதுவும் தி.மு.க எம்.பியாகத்தான் இருக்கிறார். நெருக்குதல் அதிகமாகி, மத்திய அரசிலிருந்து தி.மு.க விலகி, கொள்கை அளவில் மத்திய அரசிற்கு ஆதரவு கொடுப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த நிலையில் தி.மு.கவிலுள்ள முஸ்லிம் எம்.பியின் நிலையென்ன? அவரும் கொள்கை அடிப்படையில் ஆதரவு கொடுப்பாரா? ஏனென்றால் முஸ்லிம் லீக்கின் கேரள எம்.பியும் அதன் தலைவருமான ஓர் அமைச்சர் மத்தியில் அங்கம் வகிப்பதினால் அதுபோன்ற ஒரு முடிவினை தமிழக எம்.பி எடுக்க முடியுமா? அல்லது தமிழக முஸ்லிம் லீக்தான் அந்த முடிவினை எடுக்குமா? போன்ற கேள்விகள் முஸ்லிம்கள் மத்தியில் எழும்பிக் கொண்டுதான் உள்ளன. முஸ்லிம் லீக், சார்புநிலையற்ற தனிக் கட்சியாக விளங்குமானால் இதுபோன்ற தர்ம சங்கடமான நிலை அந்தக் கட்சிக்கு வரப் போவதில்லையல்லவா?

சென்னையில் ஜனவரி மாதத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் தமிழக முதல்வர், "முஸ்லிம்கள் இட ஒதுக்கீட்டை ஐந்து சதவீதமாக உயர்த்துவதற்கு அவர்கள் அனைவரும் சேர்ந்து கோரிக்கையினை வைத்தால் அதுபற்றி அமைச்சர்களுடன் கலந்தாலோசனை செய்து முடிவெடுக்கப்படும்" என்று அறிவித்தார். அதாவது, முஸ்லிம்கள் எப்படியும் ஒன்றுசேரப் போவதில்லை என்ற திடமான நம்பிக்கை முதல்வருக்கு.

திருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கு எல்லாரும் கலந்து முன்னர் ஆலோசனை செய்தது போன்று முஸ்லிம் கட்சிகளும் சமுதாய இயக்கங்களும் முதல்வருடைய பேச்சைத் தங்கள் சமுதாயத்துக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, சமுதாயத்துக்குக் காலாகாலத்துக்கும் நன்மை விளைவிக்கும் வாய்ப்பான 5 சதவீத ஒதுக்கீட்டுக்கு எல்லாரும் இணைந்து ஒருமித்த முடிவினை எடுத்து முதல்வரிடம் தெரிவித்து அதற்கான ஆணையினைத் தேர்தல் அறிவிப்பு வருமுன்பே பெற்றுக் கொள்ளும் வாய்ப்பைத் தவறவிட்டது ஏன்? என்ற கேள்வி என் போன்றோர் மனதில் எழாமல் இல்லை. அதற்குள்ளாக யார் யாரோ அந்தக் கண்துடைப்பு அறிவிப்புகூட, "தங்கள் கோரிக்கையினால்தான் வந்தது" என்று தம்பட்டம் அடித்து அறிக்கையும் நோட்டீசும் வீதி தோறும் ஒட்டப் புறப்பட்டு விட்டனர்.

தேர்தலும் அறிவிப்பும் வந்து விட்டது. ஆகவே அப்படி நோட்டீஸ் அடித்தவர்கள் தாங்கள் ஏமாறி விட்டோமே என்று தாங்கள் யாருக்கும் ஓட்டுப் போடப் போவதில்லை என்ற முடிவினை, விதி 49ஓவினை உபயோகிக்கப் போவதாக இணைய தளச் செய்திகள் சொல்கின்றன. ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் தங்கள் கருத்துகளை தைரியமாகச் செயல்வடிவில் காட்டுவதற்கு, தங்கள் சமுதாயத்திற்கு யார் சிறப்பாக சேவை செய்வார்கள் என்று தேர்ந்தெடுக்கும் முடிவினை எடுப்பதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த உரிமையே ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுத் தேர்தல் வந்தால் அல்லது எப்போதாவது இடைத் தேர்தல் வந்தால்தான் பயன்படுத்தப் படுகிறது. அப்படி இருக்கும்போது ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வரும் தேர்தலினைப் புறக்கணிக்கும் செயலை ஜனநாயக விரேதச் செயலாகக் கருத வேண்டும். ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகரினை உள்ளடக்கிய நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தேர்தல், இம்மாதம் 26ந்தேதி நடக்கவிருக்கின்றது. அதில் என்ன விசேஷம் என்றால், வாக்காளர்கள் கட்டாயம் வாக்களித்தாக வேண்டும்; இல்லையெனில், அது தண்டனைக்குரிய குற்றச்செயலாக அங்குக் கருதுகிறார்கள். அப்படி இருக்கும்போது விதி 49ஓவினை நமது சமுதாய அமைப்புகள் தேர்ந்தெடுப்பது சரியான செயலாக ஆகாது.

இந்திய நாட்டினை 500 ஆண்டுகள் ஆண்ட சமுதாயம்.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பல விழுப்புண்களைத் தழுவிய சமுதாயம்.
சுதந்திர இந்தியாவின் கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் முக்கிய பங்காற்றிய சமுதாயம்.
கண்ணியமிகு காயிதே மில்லத் போன்ற அப்பழுக்கற்ற ஜனநாயகவாதிகள் நிறைந்திருந்த சமுதாயம்.
நாட்டின் விஞ்ஞான முன்னேற்றத்தில் அப்துல் கலாம் போன்ற அறிஞர்களைப் பெற்றத் தந்த சமுதாயம்.
தி.மு.க ஆட்சியில் மிகவும் சக்திமிக்க இலாக்காக்களான ரெவின்யூ, பொதுத்துறை போன்ற இலாக்காக்களைத் தம் கையில் வைத்திருந்த அமைச்சராக இருந்தும் கடைசிவரை தமக்கென ஒரு சொந்த வீடு இல்லாமல் பட்டினப்பாக்கம் அரசுக் குடியிருப்பில், சாகும்வரை வாழ்ந்த சாதிக் பாட்சா போன்றவர்கள் வாழ்ந்த சமுதாயம்
இந்திய நாட்டினை 500 ஆண்டுகள் ஆண்ட சமுதாயம் முஸ்லிம் சமுதாயம். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பல விழுப்புண்களைத் தழுவிய சமுதாயம் முஸ்லிம் சமுதாயம். சுதந்திர இந்தியாவின் கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் முக்கியப் பங்காற்றிய சமுதாயம் முஸ்லிம் சமுதாயம். கண்ணியமிகு காயிதே மில்லத் போன்ற அப்பழுக்கற்ற ஜனநாயகவாதிகள் நிறைந்திருந்த சமுதாயம் முஸ்லிம் சமுதாயம். நாட்டின் விஞ்ஞான முன்னேற்றத்தில் அப்துல் கலாம் போன்ற அறிஞர்களைப் பெற்ற சமுதாயம் நமது சமுதாயம். தி.மு.க ஆட்சியில் மிகவும் சக்திமிக்க இலாக்காக்களான ரெவின்யூ, பொதுத்துறை போன்ற இலாக்காக்களைத் தம் கையில் வைத்திருந்த அமைச்சராக இருந்தவர், கடைசிவரை சொந்த வீடு இல்லாமல், இன்று இடிக்கப்படும் அந்தப் பழைய சென்னைப் பட்டினப்பாக்கம் அரசுக் குடியிருப்பில், சாகும்வரை வாழ்ந்த சாதிக் பாட்சா போன்றவர்கள் வாழ்ந்த சமுதாயம் முஸ்லிம் சமுதாயம். ஆனால் இன்று பதவியில்லாவிட்டாலும் சொகுசுக் கார்களில் பவனி வந்து, பங்களாக்களில் குடியிருந்து தங்கள் குடும்ப சொத்தாகக் கட்சியினையும் முஸ்லிம் சமூக இயக்கங்களையும் தலைவர்கள் தன்னலத்துடன் இயக்கிக் கொண்டிருப்பதால் அவை நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டு வருகின்றன என்பதை சமீபகால நடவடிக்கைகள் காட்டுகின்றன.

இளைத்துப் போய்க் கிடக்கும் இந்தச் சமுதாயத்தினைத் தட்டியெழுப்பி, தனது பழைய எழுச்சியினைப் பாடமாகக் கொண்டு, வழி நடத்திச் செல்ல, படித்த இளைய இஸ்லாமிய சமுதாயம் முன்வருமா? என்ற கேள்விக்குக் காலம்தான் பதில் கூறவேண்டும் என் சொந்தங்களே

--

சூரத்துல் பகராவின் சிறப்புகள்

அல்லாஹ் தஆலா இந்த சமுதாயத்திற்கு வழங்கியிருக்கும் அருட்கொடைகளில் மிகப்பெரிய அருட்கொடையாக திருக்குர்ஆன் திகழ்கிறது. அந்த குர்ஆனை ஓதுபவர்களுக்கு பல சிறப்புகளையும் அல்லாஹ் வழங்கியுள்ளான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

யார் அல்லாஹ்வுடைய வேதத்திருந்து ஒரு சொல்லை ஓதுவாரோ அதற்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை என்பது அது போல் பத்துமடங்குவரை உண்டு. ”அஃப் லாம் மீம்” என்பதை நான் ஒரு எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக அப் ஒரு எழுத்து லாம் ஒரு எழுத்துமீம் ஒரு எழுத்து என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி­), நூல் : திர்மிதீ (2835)

இதே போன்று சில குறிப்பிட்ட சூராக்களுக்கு குறிப்பிட்ட சிறப்புகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பது ஆதாரப்பூர்வமானஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திரு குர்ஆனில் சிறப்பித்து கூறப்படும் அத்தியாயம் தொடர்பாக உள்ள ஹதீஸ்களில் ஆதாரமற்ற ஹதீஸ்கள் அதிகமாக உள்ளது

ஆகவே அவற்றை தவிர்த்து கொண்டு .. ஆதாரமான ஹதீஸை மட்டும் பின்பற்றுவோம்

பகரா அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக வரும் ஹதீஸ்களின் தரத்தை பற்றிப் பாப்போம்ஆதாரமான ஹதீஸ்கள்

விரண்டோடும் ஷைத்தான்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் உங்கள் இல்லங்களை (தொழுகை ஓதல் நடைபெறாத)சவக் குழிகளாக ஆக்கிவிடாதீர்கள் அல்பகரா எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஓதப்படும் இல்லத்தி­ருந்து ஷைத்தான் வெருண்டோடிவிடுகிறான்.
அறிவிப்பாளர்:அபூஹரைரா(ர­)
நூல்: முஸ்லிம் 1430, திர்மிதி 2802, அஹமது 7487 , 8089, 8560, 8681பரிந்துரை செய்யும் அத்தியாயம்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் குர்ஆனை ஓதிவாருங்கள் ஏனெனில் குர்ஆன் ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும் இரு ஓளிச்சுடர்களான அல்பகரா மற்றும் ஆலு இம்ரான் ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதிவாருங்கள் ஏனெனில் அவை மறுமை நாளில் நிழல்தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும் அல்பகரா அத்தியாயத்தை ஓதிவாருங்கள் அதைக் கையாள்வது வளம் சேர்க்கும் அதைக் கை விடுவது இழப்பைத் தரும் இவ்வசத்தியாயத்திற்கு முன் சூனியக்காரன் செய­ழந்துபோவார்கள்.
அறிவிப்பாளர் அபூ உமாமா (ரலி­)
நூல்: முஸ்­ம் 1440 அஹ்மத் 21126, 21136, 21169, 21186


இறைவனிடம் வாதம் செய்யும் சூரா.
நபி (ஸல்) அவர்கள் மறுமை நாளில் குர்ஆனும் அதன்படி செயலாற்றியவருர்களும் அழைத்து வரப்படுவார். அப்போது அல்பகரா அத்தியாயமும் ஆலு இம்ரான் அத்தியாயமும் முன்னே வரும் என்று கூறிவிட்டு இ(வ்விரு அத்தியாயங்களும் முன்னே வருவ)தற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வரும்) மூன்று உவமைகளைக் கூறினார்கள்.அவற்றை நான் இதுவரை மறந்திடவில்லை. அவ்விரு அத்தியாயங்களும் (நிழல் தரும்) மேகங்களைப் போன்று அல்லது நடுவே ஓளியுள்ள இரு கரும் நிழல்களைப் போன்று அல்லது அணி அணியாகப் பறக்கும் இரு பறவைக் கூட்டங்களைப் போன்று (முன்னே வந்து) தம்மைக் கையாண்டவருக்காக (இறைவனிடம்) வாதாடும்.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி­)
முஸ்லிம் 1471, திர்மிதி 2808, 16979ஷைத்தானை விரட்டும் சூரா.
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் அல்லாஹ் வானம் பூமியை படைப்பதற்கு ஆயிரம் வருடத்திற்கு முன்பு ஒரு கிதாபை எழுதினான் அந்த கிதாபி­ருந்து இரண்டு ஆயத்தை இறக்கி சூரத்துல் பகராவை முடித்திருக்கிறான் எந்த வீட்டில் மூன்று இரவுகள் ஓதப்படுகிறதோ அந்த வீட்டில் ஷைத்தான் நெருங்க மாட்டான்.
திர்மிதி 2882 தாரமி 3253

அதென்ன அல்சர்?

சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. கேட்டா அல்சர்னு சொல்வாங்க. அல்சர் வந்தவங்க வயிறை காலியா விடக்கூடாது. அடிக்கடி கொஞ்சமா எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்.

அதென்ன அல்சர்?

நம்ம வயிற்றுக்குள்ள, வயிற்றைப் பாதுகாக்க வழவழப்பான திரை அமைப்பு இருக்கு. ஜீரண நீர் சுரந்து, உணவோடு சேர்ந்து செரிமானமாகும். சாப்பாட்டுல காரமோ, புளிப்போ, உப்போ அதிகமானா, அது அந்தத்திரை அமைப்பை சீண்டிப் பார்க்கும். லேசா கிழிஞ்சாகூட, நேரடியா வயிறு அல்லது குடலுக்குத்தான் பாதிப்பு. இதன் காரணமா அடி வயித்துல வலி, புளிச்ச ஏப்பம், நெஞ்செரிச்சல், சாப்பிட்டது செரிக்காம அப்படியே தொண்டைலயே நிக்கிற மாதிரி உணர்வு... இதெல்லாம் இருக்கும். இதுதான் அல்சர்.

அல்சர் ஏன் வருது?

முதல் காரணம் நேரங்கெட்ட நேரத்து சாப்பாடு, காலை உணவைத் தவிர்க்கிறது, மதிய சாப்பாட்டைத் தள்ளிப் போடறது, அடிக்கடி காபி, டீயா குடிச்சு வயிற்றை நிரப்பறது....

சாதாரண தலைவலி, காய்ச்சல்னா உடனே மாத்திரை போடற பழக்கம் பலருக்கு உண்டு. இப்படி தானாவே எந்தப் பிரச்சினைக்கும் அடிக்கடி மாத்திரை சாப்பிடறவங்களுக்கும் கட்டாயம் அல்சர் வரும்.

ரொம்ப சக்தி வாய்ந்த ஆன்ட்டிபயாடிக்ஸ் சாப்பிடறதும் காரணம். ஏதோ சுகமின்மைக்காக டாக்டரைப் பார்க்கறோம். டாக்டர் ஆன்ட்டிபயாடிக் எழுதிக் கொடுப்பார். ஆன்ட்டிபயாடிக் கொடுக்கிறப்ப, பி-காம்ப்ளக்ஸூம், லேக்டோ பேசிலஸூம் கலந்த மாத்திரையும் அவசியம் கொடுக்கணும். இதை சில டாக்டர்ஸ் செய்யறதில்லை. டாக்டர்ஸ் எழுதிக் கொடுத்தாலும், 'சத்து மாத்திரை வேணாம்'னு சொல்லி ஆன்ட்டிபயாடிக் மட்டும் வாங்கிச் சாப்பிடுறவங்களும் இருக்காங்க. சில வகை மருந்துகளை சாப்பிடறப்ப, வயிறு வலி, நெஞ்சு எரிச்சல் வர்றதை உங்கள்ல பல பேர் ஃபீல் பண்ணியிருப்பீங்க... காரணம் இதுதான்.

அதிக காபி, டீ, ஃபாஸ்ட்ஃபுட் அயிட்டங்கள், சிகரெட், கோலா கலந்த பானங்கள், ஊறுகாய், காரமான உணவுகள்... இதெல்லாமும் அல்சருக்கு காரணம்!

மூட்டுவலி போன்ற சில பிரச்சினைகளுக்கு காலங்காலமா மருந்து எடுத்துப்பாங்க சிலர். மாத்திரைகள் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கலாம். அதுக்கேத்தபடி சாப்பாடு இருக்கணும். தவறினா, அல்சர்ல போய் முடியலாம். அபூர்வமா சிலருக்கு பரம்பரையாகவும் அல்சர் பாதிக்கலாம். அடிக்கடி உணர்ச்சிவசப்படறவங்களுக்கு அல்சர் இருக்கும்.

எடை குறையறது, ரத்த சோகை, வாந்தி... இதெல்லாம்கூட அல்சரோட அறிகுறிகளா இருக்கலாம். எந்த அறிகுறியும் தினசரி தொடர்ந்தா உடனே டாக்டரை பார்க்கணும். அல்சரை முழுமையா குணப்படுத்திடலாம். வந்ததைப் போக்க சிகிச்சைகள் உண்டு. வராம இருக்க...? சரியான நேரத்துக்கு சாப்பாடு, சரிவிகித சாப்பாடு - ரெண்டும் முக்கியம். கோபத்தைக் குறைச்சுக்கணும்.

அல்சர் வந்தவங்களுக்கான டிப்ஸ்...

நார்ச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்கணும். குழைய வேக வச்ச அரிசி சாதம், அவல், பொரில கஞ்சி மாதிரி செய்து சாப்பிடலாம். கீரை, காய்கறிகளைக்கூட நல்லா வேக வச்சு, மசிச்சு, சாப்பிடணும். பாலுக்குப் பதில் மோர் அதிகம் சேர்த்துக்கலாம். ஸ்ட்ராங்கான காபி, டீ வேண்டாம். அதிகமான தாளிப்பு, இனிப்புகள், பொரிச்ச உணவுகள், பாதி பழுத்தும் பழுக்காத பழங்கள், பச்சை காய்கறிகள் (வெங்காயம், வெள்ளரி உள்பட), இஞ்சி, கரம் மசாலா, காரமான கிரேவி- இதெல்லாம் அறவே தவிர்க்கணும். மூணு வேளை மூக்கைப் புடிக்க சாப்பிடாம, கொஞ்சமா, அடிக்கடி சாப்பிடலாம். எதையும் கடிச்சு, நன்கு மென்று பொறுமையா சாப்பிடணும்.

நீரிழிவு வந்தவங்களுக்கு சொல்ற மாதிரிதான் அல்சர் வந்தவங்களுக்கும்... விருந்தும் கூடாது... விரதமும் கூடாது!

நன்றி: Mohamed Ghouse Cuddalore Port.

புதன், 16 மார்ச், 2011

அதை எதிர்கொள்ள நாம் தாயாராக இருக்கிறோமா?

நான் இதை எழுத நினைத்திருக்கவில்லைஆனால் இந்த நிகழ்வில் இருக்கும் படிப்பினையை நம் மக்களும் புரிந்து கொள்ளட்டுமே என்று தான் தொடங்குகிறேன்.

தொடர்ந்து படியுங்கள்.
விண்டோஸ் கமான்ட் ப்ராம்டின் பயன்பாடுகள்....................

இன்று உலகில் பெரும்பாலனவர்கள் ஏதோ அத்தியாவசிய பொருள் மாதிரி இந்த கணினியும் வாங்க ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் பெரும்பாலனவர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளத்தைதான் உபயோகபடுத்துகிறார்கள். ஆனால் அதில் உள்ள அனைத்தும் அவர்களுக்கு தெரியுமா என்றால் தெரியும் என்று சொல்பவர்கள் வெறும் 50 ௦ சதவிகிதம் தான். சரி நாம வந்த வேலையை பாப்போம்.

windows command prompt:

இந்த விண்டோஸ் command prompt பயன்பாடினை  நாம் அனைவரும் அறிந்து இருக்க வேண்டிய ஒன்று, மௌஸ் இல்லாமலேயே சில கட்டளைகள் மூலம் நமக்கு தேவையானதை திறக்க முடியும் அதற்கான கட்டளைகளை நான் இங்கே கீழே குடுத்து உள்ளேன். முயன்று பாருங்கள்.................முதலில் ஸ்டார்டில் போய் ரன் என்பதை கிளிக் செய்யுங்கள் உங்களுக்கு கீழே உள்ளவாறு ஒரு விண்டோ கிடைக்கும் 

செவ்வாய், 15 மார்ச், 2011

கோத்ரா தீர்ப்பு: பொய் ஆதாரங்கள் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது... உண்மைகள் ஒருநாள் வெளியாகும்...! சுவாமி அக்னிவேஷ்

கோத்ரா தீர்ப்பு: பொய் ஆதாரங்கள் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது... உண்மைகள் ஒருநாள் வெளியாகும்...! சுவாமி அக்னிவேஷ்
WEDNESDAY, 09 MARCH 2011 21:58
2002ஆம் ஆண்டு கோத்ராவில் நிகழ்ந்த அசம்பாவிதத்தை சாக்காக வைத்து ஆயிரக் கணக்கான முஸ்லிம்களை படுகொலை செய்த மோடி அரசு. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையாளர் என்ற அழியாத அவப்பெயரை பெற்றார் நரேந்திர மோடி. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் நுழைய மோடிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.கோத்ரா ரயில் விபத்தை படுகொலை என அவதூறாக சித்தரித்து தனது கொலைப் படையின் சதிகளை நியாயப்படுத்த கோத்ரா வழக்கை பயன்படுத்திக் கொண்டார். பாதிக் கப்பட்ட மக்களையே சதிகாரர்களாக சித்தரித்து பொய்மையை உண்மைபோல் உருவகப்படுத்திய கோத்ரா நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நாடெங்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

முதலில் தீர்ப்பு வெளிவந்தது. நீதியைப் பரிகாசம் செய்த தீர்ப்பு என கடந்த வாரம் கட்டுரை வெளியானது. மார்ச் ஒன்றாம் தேதி தண்டனை விவரம் வெளி யிடப்பட்டது. இதில் பதினோரு பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனையும் வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது. இது நாடெங்கும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. சமூக ஆர்வலர்கள் இந்த தீர்ப்பு குறித்து தங்கள் கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்தனர்.

மோடி அரசினால் அமைக்கப்பட்ட நானா வதி கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ரயில்வே துறையின் அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவால் அமைக்கப்பட்ட யு.சி. பானர்ஜி கமிஷன் வழங்கிய தீர்ப்பின் உண்மையான சாராம்சங்களை சிறிதும் பரிசீலனை செய்யாமல் உண்மைகளைப் புறக்கணித்து வழங்கப்பட்ட தீர்ப்பாகக் கருதப்படும் இந்த தீர்ப்பினை புகழ்பெற்ற சமூக ஆர்வலரும் ஹிந்துசமய ஆன்மீக வாதியுமான சுவாமி அக்னிவேஷ் விமர்சித் துள்ளமை தேசிய அளவில் பெரும் அதிர் வினை ஏற்படுத்தியுள்ளது.

கோத்ராவில் நிகழ்ந்த அசம்பாவிதத்தை ஒரு சதித்திட்டம் போல் சித்தரித்துக் காட் டிய அன்றைய முக்கிய ஊடகங்களைக் கண்டித்த சுவாமி அக்னிவேஷ், இந்தத் தீர்ப்பு பலவீனமான அஸ்திவாரத்தின் மீது கட்டப்பட்ட கட்டிடம் போல் தோற்ற மளிக்கிறது. இந்த வழக்கு நிச்சயம் உயர் நீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டுக்கு வரும் போது உண்மைகள் வெளிவரும், அதனை யாராலும் தடுக்க முடியாது என அக்னிவேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நம்பிக்கை ஏற்படுத்தாத ஆதாரங்களை வைத்து வழங் கப்பட்ட தீர்ப்பு இது எனவும் சுவாமி அக்னி வேஷ் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் அளிக் கப்பட்ட துயரமான தீர்ப்பு என குஜராத் மாநில மக்கள் உரிமை கண்காணிப்பக தலை வர் பந்தூக்வாலா குறிப்பிட்டிருக்கிறார். 2002ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலையில் பந்தர் வாடா பகுதியில் 40 முஸ்லிம்களைப் படுகொலை செய்து லூனாவாடா பகுதியில் உள்ள நதிக்கரையில் ரகசியமாக புதைத்த கயவர்கள் 30 பேரை இதே கோத்ரா மாவட்ட நீதிம ன்றம் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்தது என்றும் மனம் வெதும்பி குறிப்பிட்டார்.

கோத்ரா ரயில் விபத்து வழக்கும் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தே விசாரிக்கப்பட வேண்டும், அவ் வாறு நிகழ்ந்தால் மட்டுமே குஜராத் இனபடுகொலை குறித்த விவகாரங்களில் நீதியை நிலைநாட்ட முடியும் என்றும் பந்தூக் வாலா தெரிவித்துள்ளார்.

கோத்ரா வழக்கின் முக்கியக் குற்றவாளியாக சித்தரிக்கப்பட்ட மவ்லவி உமர்ஜி விடுவிக்கப்பட்டதில் இருந்தே இந்த வழக்கின் தீர்ப்பில் பலவீனம் வெளிப்பட்டுள்ளதாக சமூகநல ஆர்வலரும் கத்தோலிக்க கிறிஸ்தவ சமயத்தின் முக்கியப் பிரமுகருமான பாதிரியார் செட்ரிக் பிரகாஷ் தெரிவித்தார். சதித்திட்டம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ள காரணம் முழுக்க முழுக்க ஓட்டைகள் நிரம்பியது என்றும் தெரிவித்தார்.

இனப்படுகொலையாளர்கள் குஜராத் மாநிலம் முழுவதும் சுதந்திரமாக சுற்றித் திரியும்போது, வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்ட 63 பேர் ஒன்பது ஆண்டுகள் சிறையில் வாடியது மிகவும் சோகமானது, மன்னிக்க முடியாதது; அதற்கான இழப்பீட்டை தரப்போவது யார்? என பிரபல் மனித உரிமை ஆர்வலர் தீஸ்தா செதல்வாட் வினா எழுப்பியுள்ளார்

திங்கள், 14 மார்ச், 2011

நமது நூறாவது பதிவு............................நாங்களும் செஞ்சுரி போடுவோம்லே..............

நூறாவது பதிவுக்கு வந்துட்டோம்.................ஆனா என்ன போடுரதுனுதான் தெரியலை...............ஆனா எதாவது மொக்கையாச்சும் போட்டாகனும்................அதுக்காக உட்கார்ந்து யோசிச்சதுதான் இது.........................கொஞ்சம் படிங்க..........................

சட்டங்கள் செயல்பாட்டிற்கு வருமா?


மிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ள தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பல்வேறு தேர்தல் கட்டுப்பாடுகள்  பற்றி கூறியுள்ளார் அவற்றில் சில........


ஞாயிறு, 13 மார்ச், 2011

போலி ஒற்றுமை பேசும் போலி இயக்கங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

வாய்ப்புகள் மாறும்போது அல்லது வழக்கத்திற்கு மாற்றமாக ஏதாவது நடக்கும்போது அதை பூசி மொழுகுவதற்காக ஏதாவது காரணங்களை கண்டுபிடித்துச் சொல்லும் வழக்கம் நம்மிடையே அதிகமாகிவிட்டது.

பேசுவது எதையும் நேரடியாகப் பேசவேண்டும்.
கொங்கு வேளாளருக்கு ஏழு தொகுதி கொடுத்தால் அதற்கு காரணம் பிஜே,
முஸ்லிம் லீக் இளச்சவாயர்கள் என நினைத்து மிகக் குறைவாகக் கொடுத்ததிலிருந்து ஒன்றை பிடுங்கினால் அதற்கு காரணம் பிஜே,
தமிழகத்தில் அரசியல்வாதிகளிடமும் இயக்கவாதிகளிடமும் ஒற்றுமை இல்லை என்றால் அதற்கு காரணம் பிஜே என்றா வாதங்கள் எல்லாம் ஏதாவது காட்டுவாசிகளுக்கான அடிப்படை பாடமாக அமைத்து கற்றுக்கொடுத்தால் எடுபடலாம். இங்கே எடுபடாது என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

நாங்கள் தெர்தலில் நிற்கமாட்டோம் என்று கூறியவர்கள் தேர்தலில் நின்றால் அவர்களுக்கான தண்டனை என்பது ஆம் போகட்டும், மன்னித்து விடுவோம் என்பதும்.....

நாங்கள் முஸ்லிம்களுக்கான இயக்கம் என்று கூறியவாறே முஸ்லிமல்லாதவர்களை உட்புகுத்தி அரசியல் நாடகமாடும் எஸ்டிபிஐ போன்றவர்கள் அடிப்படையே இல்லாமல் அரசியல் செய்தால் அதுவும் நம்ம சமுதாயம்தானே என்ற பொது மன்னிப்பும்....

டெல்லி மாநாட்டில் இந்திய அரசில் பங்கு கொள்வதும், ஆட்சியாளர்களாக ஆவதும் ஓரிறைக் கொள்கைக்கு எதிரான செயல் என்று கூறிக் தீர்மானமெடுத்த ஜமாஅத்தே இஸ்லாமிகள் தற்போது அரசியல் கட்சி துவங்கிளால் அதைக்கூட மன்னித்துக்கொண்டிருக்கும் நாம் ஏன் மேற்படியாளர்களை ஒன்றிணைக்கும் வேலையை செய்யவில்லை?

தமிழக இயக்கம் மற்றும் கட்சிகளாக அமைந்திருக்கும் கூமார் 56 இயக்க-கட்சிகளில் எனக்குத் தெரிந்து 4 இயக்கங்கள் தவிர மீதி இஅனைவரும் தமஜழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைகள் - செயல்பாடுகள் - முடிவுகள் ஆகியவைக்கு எதிராக நடக்கும் இயக்கம்-கட்சிகள் ஆகும்.

ஆக குறிப்பிட்ட நான்கைத் தவிர்த்து மீதமுள்ளவர்கள் ஒன்றிணையாவிட்டால் அதற்கு காரணம் பிஜே என்று கூறுவதைவிட வேறு ஏதாவது கெட்டவார்த்தை பேசிக்கொண்டிருந்தால் அது மிக நல்லதாகவே அமையும்.

எதற்கும் ஒரு வரையறை இல்லையா?

  • பிஜே பிரித்தார் பிஜே பிரித்தார் என்று கூறும் இயக்கவாதிகள் பி ஜே எங்களை நெருங்கவிடாமல் குறுக்கே நிற்கின்றார் என்று ஏன் அறிவிப்பதில்லை?
  • புலனாய்வுக்காகவும் போலி கோஷத்திற்காகவும் ஒன்றிணையுமு; (19) போன்ற இயக்க-கட்சிகள் தங்களுகு;கான தேர்தல் எனும்போது ஏன் 150 அணிகளாக மாறுகின்றனர்.
  • தங்களுக்கிடையேயான இயக்கவெறிகளையும் அரசியல் மோகங்களையும் மறைப்பதற்காக இன்னொருவரை குற்றம் சுமத்துவதைப்போன்றதொரு கீழ்த்தரமான வேலை வேறு உள்ளதா?

ஒருவன் கடித்தான் என்றால் கடித்தான் என்றே சொல்லவேண்டும். அதை விட்டுவிட்டு தமிழக போலீஸ் சொல்வதைப்போல் வலைவீசித் தேடி அமுக்கிப்பிடித்து கைது செய்து துருவித்துருவி விசாரணை செய்கின்றனர் என்பது போன்ற பேச்சு முஸ்லிமுக்கு அழகல்ல!

இப்போதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை.

கருணாநிதியை ஆதரிப்பவர்களும் ஜெயாவை ஆதரிப்பவர்களும் ஆதரவுக்காக கூறும் காரணம் ஏற்புடையதா இல்லையா என்பதை பேசித் தீர்த்தாலும் அவர்களிடம் மாற்றம் வரப்போவதில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் ஒரு முஸ்லிம் என்ற அடிப்படையில் இரு திராவிடக் கட்சிகளும் முஸ்லிம்களுக்கான கட்சி அல்ல என்பதை உணர்ந்து.....

  • அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரளவேண்டும்.
  • முஸ்லிம்களுக்கு அதிக தொகுதி ஒதுக்கும் அணியில் சேருவது என முடிவு செய்யவேண்டும்.
  • 25 முதல் 30 தொகுதிகள் வரை நிச்சயமாக எளிதில் பெற முடியும்.
  • பெற்றுக்கொள்ளும் தொகுதிகளை அடித்துச் சாகாமல் முறையே பங்கிட்டு களத்தில் இதற்குத் தயாரானால் நாளையே புதியதொரு திருப்பம் வரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
  • 25 முதல் 30 தொகுதிகள்வரை கையில் வைத்துக்கொண்டு இருக்கும் முஸ்லிம்கள்தான் ஆட்சியாளர்களை நிற்ணயிக்கும் நிலைக்கு வருவார்கள்.

அல்லாஹ்வையும் - தூதரையும் - ஸஹாபாக்களையும் - தியாகத்தையும் மேடைக்காக பேசிக்கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களுக்கு என்று வரும்போது மட்டும் சுக்கு நூறாகப் பிரியாமல் ஒன்றிணைந்து நிற்பார்களா

  • அனைவரும் ஒன்றிணையவேண்டும் எனக் கருதும் ஒரு முஸ்லிம் லீக் ஆதரவாளர் இங்கே உண்டா?
  • அனைவரும் ஒன்றாக இணைந்து போட்டியிடவேண்டும் எனக் கருதும் ஒரு தமுமுக ஆதரவாளர் இங்கே உண்டா?
உண்டு எனில் அந்த கருத்தைச் சொல்லுங்கள். அதை ஏற்காத தலைமையை துரத்திவிடுங்கள். சும்மா எதற்கெடுத்தாலும் பாகிஸ்தான்தான் காரணம் என்று கூறும் அத்வானியின் பாணியை தொடராதீர்கள். எதற்கெடுத்தாலும் பீஜே என்கின்ற வாதத்தை விடுத்தது உங்களால் வெற்றி பெற முடியுமென்றால் முயன்று வெற்றியை தேடி கொள்ளுங்கள்...........

மேலும் சமீபத்தில்...........நடிகர் விஜய் அவர்கள் ஒரு பத்திரிகைக்கு பெட்டி குடுத்து இருந்தார். அதில் அவர் கூறியதாவது ""என்னுடைய படத்தை எதிர்பவர்கள்...........பிறகு ஏன் அவர்களின் தொலைகாட்சி சேனல்களில் தீபாவளி, பொங்கல் போன்ற தினங்களில் என்னுடைய படங்களை ஒளிபரப்ப வேண்டும்.............ஆக என்னை எதிர்க்க என்னுடைய முகம்தான் அவர்களுக்கு தேவை படுகிறது................''''

இதை போலதான் இன்று, தௌஹீதை எதிர்பதுக்கு இவர்கலுக்கு பீஜே தேவைபடுகின்றார்...........ஆனால் கண்டிப்பாக தௌஹீதான் வெற்றிபெறும்.............வீண் பேச்சுக்கள் என்று நிலைக்காது.

ததஜ அரசியல் கட்சியல்ல.  ஆகையால் ததஜ வை விட்டுவிட்டு அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் (அடுத்த தேர்தலிலாவது)ஈடுபட வேண்டும். அதுபோன்றதொரு நிலை வந்து, அப்போது ததஜ இந்த முஸ்லிம் கூட்டணியை எதிர்த்தால், மக்கள் கண்டிப்பாக ததஜ வை ஊதித்தள்ளிவிடுவார்கள். நாலு பேரை வைத்து, 40 கட்சிகளை நடத்திக்கொண்டு, நம்மிடையே ஒற்றுமை இல்லாமல் வேற்றுமையின் மொத்த உருவமாக இருந்து கொண்டு, ஒரு இயக்கத்தை நோக்கி சுட்டு விரலை நீட்டிக்கொண்டிருப்பதில் எந்த அளவுக்கு நியாயம் இருக்கிறது என்று தெரியவில்லை.

இந்தியாவை கதற கதற க...........................த.................தென்னாப்பிக்கா............

நேற்றைய தினம் நாக்பூரில் நடந்து முடிந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவை தென்னாப்பிரிக்க அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது...........................இதை முழுவதும் எழுத தேவையில்லை என்னுடைய தலைப்பே சொல்லி இருக்கும்........................மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள படங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..........