OnlinePJ

Thanks for Visiting my Page
இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 பிப்ரவரி, 2014

இது போல ஒரு கூட்டமைப்பு இருந்தால் காட்டுங்கள்..!!!!


அஸ்ஸலாமு அலைக்கும்,

ஆயிரம் முகநூலைவிடவும், அதைவிட அதிகமான வாட்ஸப்பை விடவும் மிகவும் சக்திவாய்ந்த ஒரு ஆயுதம், சாதனம் நம்மிடம் (இஸ்லாமியர்களிடதில்) உள்ளதென்றால் அது வேறொன்றுமில்லை, நமக்கு வலியுறுத்தி சொல்லப்பட்ட வெள்ளிக்கிழமை ஜும்மாதான். ஆனால் அதை இன்று நாம் இஸ்லாமியர்கள் யாருமே சரியாக பயன்படுத்திக்கொள்வதாக தெரியவில்லை. நான் இங்கு சொல்ல போவது இஸ்லாமிய அடிப்படையில் இந்த ஜும்மா நடைபெறுகிறதா என்றில்லை...!!!!! இது வேற மாதிரி...!!!!!!!!!!!!!

இன்று நடக்கும் எந்த ஒரு மார்க்க விளக்க கூட்டமாக இருந்தாலும் ஏதாவது ஒரு இயக்கம் நடத்த வேண்டும் அப்படியே அவர்கள் அழைத்தாலும் அந்த இயக்கத்தை சார்ந்தவர்கள் அதிகமானோர் வருவார்களே தவிர மற்ற இயக்கதினர் அதிகளவில் வருவது கிடையாது. இதில் நாம் எந்த அளவிர்க்கு இஸ்லாத்தை எத்திவைக்க முடியும்? இன்று சமூக வலைதளங்களையும், முகநூலையும், வாட்ஸப்பையும் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலானவர்கள் இருந்தாலும், வயதானவர்கள், சிறுவர்கள், மேலும் பெண்கள் படிப்பறிவில்லாதவர்கள் அடிப்படை கல்வி இல்லாதாவர்கள் இப்படியானவர்கள் யாரும் அதை பயன்படுத்துவதில்லை. அப்படியே அதை பயன்படுத்துபவர்கள் எத்தனை பேர் அதை முழுமையாக தாவாவிலும், நல்லொலுக்கத்தையும் பேணுகிறார்கள், இன்று இயக்கங்களுக்கிடையில் நடக்கும் பனிப்போருக்கு  மட்டுமே இந்த இயக்க வாதிகள் இதை பயன்படுத்துகிறார்கள், அவர்கள் மட்டுமில்லை, இளைய தலைமுறைக்கூட புகைப்படங்களை போடுவதற்க்கும், நண்பர்களின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதற்க்கும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஏன் தௌஹீத் என்று சொல்லிக்கொள்வோர்க்கூட பெருமைக்கு சொல்லவில்லை சொல்லவில்லை என்றுக்கூறிக்கொண்டே பல பதிவுகள் அவர்களுக்கே தெரியாமல் பெருமையாக வருகின்றன என்ன அல்ஹம்துலில்லாஹ், சுபஹானல்லாஹ், மாஷா அல்லாஹ் என்று போடுவது மட்டுமே ஆறுதல்.

இந்த கோட்டைத்தாண்டி நானும் வரமாட்டேன் நீயும் வரக்கூடாது பேச்சு பேச்சாதான் இருக்கணும் இதுதான் இன்றைய இஸ்லாமிய இயக்கங்கள் நடத்தும் மார்க்க கூட்டங்கள் எல்லாமே..!!!!! இஸ்லாமிய ஒற்றுமை என்பது இந்த சமூக வலைத்தளங்களில் வசைபாடுவதில் மட்டும்தான் இருக்கு.

ஆனால் சுபஹானல்லாஹ் அல்லாஹ்வுடைய ஏற்பாட்டை பாருங்க வாரந்தோறும் ஒரு நாள் படிச்சவன் படிக்காதவன், பணக்காரன், ஏழை, சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள், திருடுகிறவன், குடிப்பவன், கூத்தடிப்பவன் ஏன் இன்னும் சொல்லப்போனால் இஸ்லாத்தின் அடிப்படையை கூட தெரியாதவன் இந்த ஜும்மாவில் கலந்துக்கொள்ள செய்துள்ளான் இது எப்பேற்பட்ட ஒரு ஏற்பாடு.....!!!!!!! இதை நாமும், நம்முடைய சமுதாயத்தில் மார்க்கத்தை கற்று அறிந்த ஆலிம்களும், உலமாக்கலும், மதனிகளும் இன்னும் பலர்களும் சரியாக பயன்படுத்துகிறோமா?  என்றால் அங்கே மில்லியன் டாலர் கேள்விகள்தான் மிஞ்சும்.

எத்தனை ஊர்களில் இந்த ஜும்மா மேடையில் நாட்டின் நடப்புகளை பேசுகிறார்கள், கல்வியின் அவசியத்தை சொல்கிறார்கள், அல்லது அந்த அந்த ஊரின் நடப்புகளை  பற்றியாவது பேசுகிறார்களா? பெண்களை குறைந்தது ஜும்மாவிர்க்கு அனுமதிக்கிறார்களா? இன்று தமிழகத்தில் வாராவாரம் பெண்களை ஜும்மாவிர்க்கு அழைத்திருந்தாலே நமது சமுதாய பெண்களை கேடுகெட்ட சீரியல் பார்ப்பதைவிட்டும், பள்ளிலுத்து அண்டை ஆடவருடன் பேசுவதைவிட்டும், அல்லக்கைகளுடன் ஓடிப்போவதை விட்டும் தடுத்திருக்கலாமே. நாமதான் விரலாட்டினாலே விரட்டியடிக்கிறோமே, தொப்பிப்போட்டால் தோரத்துகிறோமே..!!!!!!!!

அப்படி இல்லை நாங்கள் வாராவாரம் பயான் செய்கிறோமே என்று நீங்கள் சொன்னால்?? எதை சொல்கிறீர்கள் தொழுகையைபற்றி, ஈமானைப்பற்றி, நோன்பைப்பற்றி (அதுவும் சீஸன் மாம்பழம் போல அந்த மாதம் மட்டும்தான்) மறுமையைப்பற்றி சந்தோஷம், ஆனால் ஊரில் நடக்கும் சிர்க்காண காரியத்தை எதிர்த்து பேசியுள்ளீர்களா? மௌலீதை எதிர்த்து ஒரு ஜும்மாவில் ஒரு வரி பேசியிருப்பீர்களா? வட்டியின் கொடுமையை விளக்கியிருப்பீர்களா? வரதட்சணை ஒரு வன்கொடுமை என்று ஒரு வார்த்தை சொல்லியிருப்பீர்களா? இன்னும் குடி, வீண்விரயம், நட்பு, சொந்தம், அண்டைவீட்டார் இப்படி எதைப்பற்றியாவது பேசியிருப்பீர்களா? இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையை மட்டுமே பேசி பேசி பேசி....!!!!!!! மற்ற எதையும் தெரிந்தக்கொள்ள வாய்ப்பே அளிக்காமல் இந்த ஜும்மா உரைகளை வீனடித்ததுதான் மிச்சம்.

இஸ்லாத்தில் இரண்டு பெருநாள் தொழுகைக்குக்கூட இந்த அளவிர்க்கு முக்கியத்துவம் குடுக்கவில்லை நபியவர்கள்...!!!!! ஊரில் நடக்கும் அநியாயத்தையும், மார்க்கத்திர்க்கு எதிராக நடக்கும் அவலங்களையும் வாராவாரம் பேசியிருந்தாலே இன்று இயக்கங்களுக்கு வேலை இருந்திருக்காது..!!!!!!!!!!!! இன்று கூட பல ஊர்களில் பல பள்ளிகளில் அதை நிர்வாகிக்கும் நிர்வாகி சொல்வதைதான் பேசவேண்டும் இது மாற்ற முடியாத விதியாக உள்ளதே...!!!!!!!!!!!!!!!! இதுல கொடுமை என்னவென்றால் மார்க்கத்தை கற்று அறிந்த ஹஜ்ரத்மார்களே இந்த மரமண்டை நிர்வாகிகளின் பேச்சைக்கெட்டு இறைவனுக்கும், ரசூலுக்கும் மாறு செய்கின்றனர் என்பதே நினைத்தால்....!!!!!!

இப்படி அனைத்து ஊர்களிலும் ஜும்மா நடக்கும் அனைத்து பள்ளிகளிலும் மக்கள் கூடுவார்களே, இப்படி ஒரு கூட்டம் வேறு எங்காவது கூட்ட முடியுமா?? இஸ்லாமிய சொந்தங்களே சிந்தித்துப்பாருங்கள். நம்முடைய ஜும்மா உலகின் எவராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாதது எந்த இயக்கம், அரசாங்கம் நினைத்தாலும் கூட்ட முடியாத ஒரு ஏற்பாடு இது இறைவனின் ஏற்பாடு அதை சரியான முறையில் இனியாவது பயன்படுத்துவோமா????....!!!!!!!!!!!!!!!!!!!!!!       


குறிப்பு:- எனக்குத்தெறிந்து தௌஹீத்ஜமாத் இந்த ஜும்மா மேடையை சரியான முறையில் பயன்படுத்துகிறார்கள். உங்களுக்கு தெரிந்தது இருந்தாலும் தெரியப்படுத்துங்கள்.

புதன், 27 நவம்பர், 2013

அங்கோலா உண்மை நிலை என்ன???

இன்றைய நாளில் உலகின் ஹாட் டாபிக் இந்த அங்கோலாதான்!!!!!!! ஆனால் அதில் எந்த அளவிர்க்கு உண்மை என்பதை கொஞ்சும் அலசுவோம் அந்த நாட்டின் அமெரிக்க தூதரின் வாயிலாக ..!!!!!!!!!!!!!!

வாசிங்க்டன் D.C  உள்ள அங்கோலாவின் தூதரக அதிகாரி ஒருவர் தொலைபேசி வாயிலாக தெரிவித்த செய்தி என்னவென்றால்,அங்கோலாவில் இஸ்லாத்திற்கு மட்டுமல்ல எந்த ஒரு மதத்திற்கும் தடை இல்லை, இஸ்லாத்திற்கு தடை என்ற செய்தி வெறும் வதந்தி தான் என்றார்.அங்கோலா எந்த ஒரு மதத்தின் விசயங்களுக்கும் உள் நுழையாது.எங்களது நாட்டில் காதொலிக்,பாப்டிஸ்ட்,ப்ரோடோஸ்டேன்ட், முஸ்லிம் என்று பல மதத்தவர்களும் இங்கு வாழ்கிறார்கள்.எங்கள் நாடு அணைத்து மதத்தவர்களுக்கும் சுதந்திர நாடு என்று தெரிவித்து இருந்தார் என்று  International Business Times மேற்கோள் காட்டியுள்ளது.

மேலும் இது சம்பந்தமாக இவர்கள் வெளியிடும் புகைபடங்கள் எல்லாம் உண்மைதான் ஆனால் இவர்கள் நினைப்பது போன்று தற்பொழுது எடுத்தது அல்ல மாறாக அது எல்லாம் 2008 ஆம் ஆண்டு எடுத்தது!!!!!!!!!!!! (International Business Times).. 

ஃபித்னா (குழப்பம்) செய்வதுகொலையைவிடக் கொடியதுஅவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பிகாஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும்மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்;இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்”. 
அல் குர்ஆன் :2:217

தான் காதில் கேட்டதை எல்லாம் உண்மை எது பொய் எது என்று அறியும் முன்னரே பரப்புபவர்களை பொய்யர்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறியுள்ளதை கூட நம் சகோதரர்கள் அறியவில்லையா?அல்லது அறிந்தும் அறியாததுபோல உள்ளார்களா??????

இஸ்லாத்திற்கு எதிராக எந்த செய்தி வந்தாலும் முதலில் பரப்புபவர்கள் நம் இஸ்லாமிய சகோதரர்களாக தன உள்ளார்கள்...என்று இவர்கள் திருந்துவார்களோ!!!!!!

இதில் கொடுமை என்னவென்றால் தௌஹீத் கொள்கையில் உள்ளவர்களும் இதை பரப்பியுள்ளார்கள்!!!!!!!!!!!!!

குறிப்பு:- இதை நான் சில ஆதரத்துடன் எழுதியுள்ளேன் இதில் அந்த அங்கோலா தூதர் பொய்யுரைத்திருந்தால் அதை அல்லாஹ் பார்த்துக்கொள்வான் 


சனி, 3 ஆகஸ்ட், 2013

புனித ரமளானில் முஸ்லீம்கள்


முன்னுரை:-

புனித ரமலானை பற்றி எழுத சொல்லி இருந்தால் ஒரு கஷ்டமும் இருந்திருக்காது. புனித ரமளானில் முஸ்லீம்கள் என்கின்ற தலைப்பில் எழுதுவது சற்று கடினம்தான் இருந்தாலும் நடைமுறை நிலையை விளக்க இது ஒரு நல்ல தருணம். புனித ரமளானில் முஸ்லீம்கள் என்று பலபேர் இஸ்லாமியர்கள் அப்படி இருக்கணும், இப்படி இருக்கணும் பல நல்ல அமல்களை செய்யணும்  என்று எழுதுவார்கள். ஆனால் அது எல்லாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம். என்னுடைய இந்த பதிவு புனித ரமளானில் பெரும்பாலான முஸ்லீம்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதின் அடையாளமாக எனது இந்த கட்டுரை.

பொதுவாக முஸ்லீம்களை பொறுத்தவரை இரண்டு வகையாக பிரிக்கலாம், ஒன்று எப்போதும் அல்லாஹ்விற்க்கு பயந்து 5 வேலை தொழுகைகளை நிறைவேற்றியும், நன்மையான காரியங்களை  செய்துக்கொண்டும், தீமையை தடுத்துக்கொண்டும் குர்ஆன் ஓதிக்கொண்டும்   இருப்பவர்கள் ஒரு வகை, இன்னொன்று வருடத்தில் ஒரு மாதம் அதாவது ரமளானில் மட்டுமே இஸ்லாத்தின் கடமையான நோன்பையும், தொழுகையும், ஜக்காத்தையும் நிறைவேற்றுபவர்கள். மேலும் அந்த ஒரு மாதம் முழு குர்ஆணையும் ஓதி முடிப்பவர்கள். இவர்கள் நன்மையை கொள்ளையடித்துக்கொள்ளுங்கள் என்பதை தவறாக புரிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

நோன்பு, ரமளானில் முஸ்லிம்களின் நிலை:-  

நோன்பு எதர்க்காக நோற்க்கவேண்டும், “பசியின் அருமையை பணக்காரர்கள் அறியவேண்டும் என்பதாலோ, உடல் ஆரோக்கியத்திர்க்காகவோ, மற்ற பல காரணங்களுக்காகவோ அல்ல அப்படி எந்த ஒரு குர்ஆன் வசனமும், ஹதீஸும் இல்லை. அப்படி அவர்களுக்குதான் என்றால் நிச்சயமாக செல்வந்தர்களுக்கும், உடல் ஆரோக்கியம் வேண்டுபவர்களுக்கு மட்டுமே இது கடமையாக்கப்பட்டிருக்கும். நோன்பு எதற்க்காக என்று இறைவன் தன்  திருமறையில் மிக தெளிவாக கூறியுள்ளான்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அல்குர்ஆன் 2:183

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். அல்குர்ஆன் 2:185

மேலே உள்ள வசனத்தின் படி, இறைவனை அஞ்சுவதற்காகதான் இந்த நோன்பே தவிர மற்ற வேற எந்த காரணமுமில்லை என்பதை நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இந்த நோன்பு முஸ்லிம்களின் ஈமானை பரிசோதிர்ப்பதற்க்கே என்பதையும் இதில் இருந்து நாம் விளங்கிக்கொள்ளலாம் அதாவது அந்த ஒரு மாதத்தில் அல்லாஹ்விற்க்கு பயந்து ஹலாலான பல காரியங்களை தவிர்க்கும் நாம் நோன்பு அல்லாத நாட்களிலும் அவ்வாறே நடக்க வேண்டும் என்ற சுய பரிசோதனைதான் இந்த நோன்பு.

ஆனால் இன்று முஸ்லீம்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறோம், நோன்பு திறந்தவுடன் தொழுகைக்கு கூட போவதில்லை சிகரெட் பிடிக்க போகிறார்கள். நோன்பு திறக்க உட்கார்ந்தால் போதும் நமக்கு நப்ஸ் அப்படியே அடித்துக்கொள்கிறது எங்கே நம்ம கொற்றாவில் இறைச்சி இருக்குமா இருக்காதா, நமக்கு ஜூஸ் கிடைக்குமா கிடைக்காதா? நோன்பு திறக்கும் போது கேட்க்கக்கூடிய துவாவை விட்டுவிட்டு பள்ளியில் கிடைக்கும் வாடாவிற்க்கு அலையும் நிலை ரமளானில் முஸ்லிம்களின் நிலை. இதுதான் நாம் படிக்கும் படிப்பினையா???

இந்த நோன்பானது நரகத்தில் இருந்து காக்கும் கேடயம் என்றும், இதில் ஒவ்வொரு நன்மைக்கும் 10 முதல் 700 நன்மைகள் வரை நானே வழங்குவேன் என்றும் இறைவன் வாக்களிக்கின்றான். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1945.

இந்த ஒரு மாதம் மட்டும் அந்த கேடயம் போதுமென்று நினைத்துவிட்டு நோன்பு முடிந்து பெருநாள் தொழுதவுடன் எந்த சினிமா கொட்டகைக்கு போகலாம், எந்த டாஸ்மார்க்குக்கு போகலாம் என்று பல முஸ்லிம் சகோதரர்கள் இன்று நடந்துக்கொள்கிறார்கள். இதை கண்டிப்பாக நாம் யாரும் மறுக்க முடியாது. ஏன் இன்னும் சொல்லப்போனால் பெருநாள் பிறை பார்த்தவுடன் அடுத்த நிமிசமே போயி குடிப்பவர்களும், கும்மாளம் போடுபவர்கள் மறுநாள் காலையில் அந்த தொழுகை விடுவதையும் நாம் கண்கூடாக பார்க்கிறோம்.  

பாவம் செய்யாதவர்கள் யாரும் கிடையாது. அனைத்துப் பாவங்களுக்கும் மன்னிப்பு கிடைப்பதென்பது சாதாரணமானதல்ல!

யார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்” அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 38, 1901, 2014.

அதர்க்காக முன் பாவங்கள்தான் மன்னிக்கப்பட்டுவிட்டதே என்று மறுபடியும் பழைய குருடி  கதவ திறடி என்ற பழமொழிக்க்கேர்ப்ப இவர்கள் பாவம் செய்ய தொடங்கிவிடுகிறார்கள். எப்படி தெரியுமா தொழுகையை தொழாமல் வீண் பேச்சுகளிலும், வெட்டி பந்தாக்களிலும் இவர்கள் காலத்தை கடத்துவார்கள். பள்ளிக்கு அருகையே இருந்தாலும், பாங்கு சத்தம் இவர்கள் காதில் விழுந்தாலும், ஏன் தொழ வைப்பதுக்கூட கேட்டாலும் இவர்கள் காதிருந்தும் செவிடர்களாக இருப்பார்கள்.

மேலும் இந்த ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான காரணம். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.

யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1903, 6057

ஆனால் இன்று பெரும்பாலான முஸ்லீம்கள் என்ன செய்கிறார்கள், பசியோடு இருக்கிறார்கள் ஆனால் பயிற்ச்சி எடுப்பதில்லை, சீரியல் பார்க்கிறார்கள், சன் டிவி பார்க்கிறார்கள், பாட்டுக் கேட்கிறார்கள், புறம் பேசுகிறார்கள் இது போன்று இன்னும் பல நோன்பில் செய்யாக்கூடாத செயல்களை செய்கிறார்கள் கேட்டால் இதில் என்ன தவறு என்று கேட்கிறார்கள். கண்டிப்பாக
டிவி பார்ப்பதும், பாட்டுக்கேட்பதும் எல்லாம் இந்த பொய்யானவற்றையே சேரும், இன்னும் சிலர் இருக்கிறார்கள் யூடுபில் காமெடி பார்க்கிறேன் என்று சொல்லுவார்கள் அதுதான் மிகவும் கொடுமையான பதில்.

நோன்பின் ஆரம்பத்தில் நிறைந்து வழியும் பள்ளிவாயல்கள், பெருநாள் தொழுகை முடிந்தவுடன், ஒரு பெரிய பள்ளத்தில் தள்ளப்பட்டது போன்று ஆகிவிடும் ஆம் அந்த வழியில் போகும் வழிபோக்கர்கள் ஆகிவிடுவார்கள் கடந்த மாத (ரமளான்) முஸ்லீம்கள்.

முடிவுரை:-

எனவே பசித்திருப்பது நோன்பின் நோற்கமல்ல என்பதும் இங்கே விளக்கப்படுகிறது. நோன்பின் மூலம் எடுக்கப்படும் பயிற்சி நம்மிடம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதும் இங்கே விளக்கப்படுகிறது. நோன்பின் மூலம் பெற்ற பயிற்சி, பொய் சொல்வதிலிருந்தும் தீய நடவடிக்கையிலிருந்தும் தடுக்கவில்லை என்றால் அது நோன்பு அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் நோன்பு நோற்றுள்ள நிலையில் நம்முடன் வீண் வம்புக்கு யாரேனும் வந்தால் கூட சரிக்குச் சரியாக அவர்களுடன் வம்புக்குப் போகக் கூடாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வலியுறுத்துகிறார்கள்.

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் சண்டைக்கு வந்தால், யாரேனும் திட்டினால் நான் நோன்பாளி என்று கூறி விடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1894, 1904

நோன்பு என்பது ஒரு ஆன்மீகப் பயிற்சி என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இது தான் நோன்பின் நோக்கம் என்று உணர்ந்தால் தான் அந்த நோக்கத்தை நாம் அடைய இயலும். முப்பது நாட்கள் நோன்பு நோற்றுப் பயிற்சி எடுத்தவர்கள் நோன்பை நிறைவு செய்தவுடன், சினிமாக் கொட்டகைகளில் வரிசையில் நிற்கிறார்கள் என்றால் இவர்கள் பட்டினி கிடந்தார்கள் என்று கூறலாமே தவிர நோன்பு நோற்றார்கள் என்று கூற முடியாது. ரமளானுக்கு முன் எந்த நிலையில் இருந்தோமோ அதே நிலை தான் ரமளானுக்குப் பிறகும் நம்மிடம் இருக்கிறது என்றால் நாம் எந்தப் பயிற்சியும் பெறவில்லை என்பது தான் இதன் பொருள். எனவே இத்தகைய நிலை ஏற்படாதவாறு உங்களையும் என்னையும் இறைவன் பாதுகாப்பானாக.

ஜஜக்கல்லா
அபு சனா 

திங்கள், 8 ஏப்ரல், 2013

இஸ்லாத்தை உண்மைபடுத்தும் உலக நிகழ்வுகள்:-



சமீபத்தில் யூத விஞ்ஞானி ஒருவர் இஸ்லாத்தை தழுவினார் ஏன்?
கருவியல் ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஜெயில்ஹம் ஒரு யூதர் இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். மணவிலக்கு செய்யப்பட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே- அதாவது மூன்று மாதவிடாய் பருவங்களில் இத்தா இருந்த பின்பே மறுமணம் செய்ய வேண்டும் என்று திருக்குர்ஆன் (2:228) கூறுகின்றது. இந்த வசனத்தை படித்தபோதுதான் ராபர்ட் மனம் மாறினார் ஏன்? அப்படி என்ன அதில் அவர் கண்டுவிட்டார்? தொடர்ந்து படியுங்கள்.



ராபர்ட் நீண்ட காலமாக ஓர் ஆய்வை மேற்கொண்டிருந்தார். ஆணுக்குள்ள டிஎன்எ ரேகைப் பதிவு (DNA Finger Printing) தொடர்பானதே அந்த ஆய்வு. ஓர் ஆணின் டிஎன்எ ரேகைப் பதிவானது மூன்று மாதங்களுக்கு பின் அழிந்துவிடுன்ம் என அவரது ஆய்வு கூறியது. இது தொடர்பாக எகிப்த்தில் மருத்துவப் பரிசோதனை துறை பேராசிரியராக உள்ள டாக்டர் அப்துல் பாசித் முஹம்மத் சயீத் கூறுகிறார். அறிவியல் சான்றுகளை அடிப்படையாக கொண்டே ராபர்ட் இஸ்லாத்தை தழுவினார்.

தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆன் தனக்குரிய ரேகையை பெண்ணிடத்தில் விட்டுச் செல்கிறான் அது மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டுப்பிடித்தார். அதர்க்கெர்ப்ப அமெரிக்காவில் ஆப்பிரிக்கா முஸ்லீம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் ராபர்ட் கள ஆய்வில் இறங்கினார். அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவான்மார்களின் ரேகை மட்டுமே பதிவாகியிருந்தது. அதே நேரத்தில் அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோது அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. இவ்வாறு மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களிடம் பதிவாகியிருந்தன.

ராபர்ட் ஜெயில்ஹம் அதிரடியாக இன்னொரு காரியமும் செய்தார். அவர் தம் மனைவியை மருத்துவ பரிசோதனை செய்தார். அவளிடம் மூன்று ரேகைப் பதிவுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதுமட்டுமின்றி தம்முடைய மூன்று மகங்களில் ஒருவர் மட்டுமே தமக்கு பிறந்தவர் என்ற உண்மையையும் அவரைத் தாக்கியது.

ஆக இதிலிருந்து மூன்று மாத “இத்தா” ஏன் என்பதற்க்கு காரண விளக்கமும் கிடைக்கிறது. முந்தைய கணவனின் டிஎன்எ ரேகைப் பதிவு முற்றாக அழியா மூன்று மாதங்கள் பிடிக்கும். அதன்பின் அவள் மறுமணம் செய்துகொண்டாள் டிஎன்எ பரிசோதனையில் குழப்பம் வராது. இல்லையேல் மறுமணம் செய்தபின் பிறக்கும் குழந்தையின் டிஎன்எ வும் முந்தைய கணவனின் டிஎன்எ வும் ஒத்துப்போக நிறைய வாய்ப்புகள் உண்டு.

சத்தியமாக இஸ்லாம் உலக விஷயங்கள் அனைத்திர்க்கும் ஒரு நல்ல தீர்வு.        

திங்கள், 11 மார்ச், 2013

இது என்று நடந்தது என்று தெரியவில்லை,


பெண்கள் வாழ தகுதியில்லா நாடுகளின் பட்டியலில் இந்தியா (சுதந்திர தேசம்) எட்டாம் இடத்தில் உள்ளதாம்!!!!!!!!!!!!!!!

ரொம்ப பெருமையா இருக்கு (அவலம்.......... அசிங்கம்.............அவமானம்)

இரண்டு மணி நேரத்திருக்கு ஒரு முறை ஒரு பெண் வன்கொடுமைக்கு ஆளாகிறாள்

ஆண்களே பெருமை பாடுங்கள்............. உங்களின் அடக்கு முறைகளை நினைத்து.... இதுதான் நமது இந்தியா......................இந்த இழி நிழையில் இங்கே பெண் அங்கம் வகிக்கிறாள்.

சாலையில் நடந்து சென்ற 4 வயது சிறுமியை தெரு நாய்கள் கடித்து குதறியது. பொதுமக்கள் ஆவேசம், பேரூராட்சி நடவடிக்கை, தெருநாய்கள் பிடிக்கப்பட்டன. ஆனால் பாருங்க வயது வித்தியாசமே இல்லாமல் பல பெண்கள் வன்கொடுமை செய்யபடுகின்றனர், அதை செய்த வெறிநாய்யை விட கேவலமானவர்களை இன்னும் யாரும் பிடித்த பாடில்லை.!!!!!!!!!!!!!!!!!!!!!   


உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக் மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப்பாள் மற்றும் காயங்களுக்குப்பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்கு) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்பல்லிக்காதோர் அநீதி இழைத்தவர்கள். (5:45 அல் குர்ஆன்).

மேலும், “தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும். (24:02 அல் குர்ஆன்).

இந்த இரண்டு அல்லாஹ்வின் வார்த்தைகளை தவிர இவர்கள் வேற எதையும் இங்கு சொல்லவில்லை, இது என்று நடந்தது என்று தெரியவில்லை, ஆனால் உண்மை.
பெண்கலுக்கு எதிரான வன்முறைக்கு என்ன தண்டனை கொடுக்கலாம். இஸ்லாமிய தந்தனையே தீர்வு என நீயா நானாவில் அதிகமான பெண்கள் கருத்துக்கூறினார்கள்.


புதன், 20 பிப்ரவரி, 2013

இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள்!!!


 
பொதுவாக எல்லோரும் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் மிகவும் கொடூரமானவை, மனிதாபிமான மற்றவைகள் என்று கூறுகின்றனர். இதற்க்கு காரணம் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவதே காரணம்.



ஆனால் சற்று நடுநிலையோடு சிந்தித்தால் இந்த சட்டங்கள் தான் மனிதனுக்கு நன்மை விளைவிக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மேலும் இழந்ததை மீட்பது தண்டனைகளின் நோக்கம் அல்ல என்பதை நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். அப்படி என்றால் எதற்காக இப்படியான தண்டனைகள்:-

1.   குடுக்கக் கூடிய தண்டனை மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதிலிருந்து தடுக்க வேண்டும்.
2.   ஒரு குற்றவாளிக்கு வழங்க கூடிய தண்டனையைக் கண்டு மற்றவர்கள் அது போல செய்ய பயப்படவேண்டும்.
3.   குற்றவாளியால் பாதிக்கப்பட்டவன் தனக்கு நீதி கிடைத்துவிட்டது என்று மன நிறைவு அடையவேண்டும். 
இதை தவிர வேற காரணங்கள் இருக்க வாய்ப்பில்லை.

புதன், 26 டிசம்பர், 2012

இந்தியாவில் நடக்கும் குற்றங்களுக்கு இஸ்லாதான் ஒரே வழி – பாகம் 2


நேற்றைய தினம் இந்தியாவில் நடக்கும் அக்கிரமங்களுக்கு இஸ்லாம்தான் தீர்வு என்பதை பார்த்தோம், அதன் தொடர்ச்சியாக இந்த பதிவில் மேலும் ஒரு தீர்ப்பும் இஸ்லாம் வழங்குகிறது:-


பெண்களுக்கான பாதுகாப்பு:-
உடலை மறைத்தால்தான் ஆண்களின் தொல்லைகளிலிருந்து பெண்கள் தப்பிக்க முடியும். ஆண்களிடம் குலைந்து பேசக்கூடாது. அப்போதுதான் பாதுகாப்பாக ஒரு பெண் இருக்க முடியும் என இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டுப் பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது பெண்கலுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இதற்க்கு முக்கிய காரணங்களில் ஒன்று நவீன கால பெண்களின் ஆட முறைகளே. பெண்கள் தங்களின் உடலை இஸ்லாம் சொல்லும் முறைப்படி மறைத்தால் மட்டுமே இது போன்ற குற்றங்களை பெருமளவில் குறைக்க முடியும். அதேபோல் பெண்கள் அந்நிய ஆண்களிடம் குழைந்து பேசுவதை தவிற்பதன் மூலம் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும் என குர்ஆன் மனித சமுதாயத்திர்க்கு வழிகாட்டுகின்றது.

“நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலபடுவ்னா. அழகான கூற்றையே கூறுங்கள் (அல் குர்ஆன் 33:32)

திங்கள், 3 செப்டம்பர், 2012

நமது இறைநம்பிக்கை எதனடிபடையில் அமையவேண்டும்



இன்று உலகளவில் முஸ்லிம்களிடம் ஒரு புதிய பழக்கம் தொற்றிக்கொண்டு இருக்கின்றது, அதாவது உலகில் ஏதாவது ஓரிடத்தில் முஸ்லிம் மக்கள் கொன்று குவிக்கபடுகின்றார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் உதாரணம் பர்மா, அதுக்கு பிறகு சில நாட்களில் அங்கே ஒரு பெரிய இயற்க்கை பேரழிவு நடக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள், உடனே நம் மக்கள் அவர்கள் வைத்திருக்கும், வலைதளத்திலும், ஈமைல்களிலும், முகப்புத்தகத்தில்  எழுதுகிறார்கள் இது அல்லாஹ்வின் தண்டனை என்று புழம்பி தள்ளுகிறார்கள், இதுதான் நாம் அல்லாஹ்வின் மீது வைத்துள்ள நம்பிக்கையா இப்படிதான் நம்பிக்கை வைக்க அல்லாஹ் நமக்கு கற்றுக்குடுத்தானா?


சரி பர்மாவில் கொன்றவளுக்கு தண்டனையாக பெரும் வெள்ளம் வந்தது என்று இவர்களின் கருத்துப்படி வைத்து கொள்வோம், இவர்கள் நோன்பு நோற்று துவா செய்தார்களாம், அதனால இந்த அழிவு வந்ததாம். சரி அப்படியே இருக்கட்டும், என்னுடைய கேள்வி? உலகில் பர்மாவில் மட்டும்தான் முஸ்லீம்கள் கொல்லப்படுகிறார்களா? ஏன் பாலேஸ்தீனில், ஈராக்கில், ஆப்கானிஸ்தானில் இன்னும் பல நாடுகள் இருக்கின்றது அங்கேயெல்லாம் கொல்லப்படவில்லையா? இல்லை அவர்களுக்கு இவர்கள் துவா செய்ய மறந்துவிட்டார்களா? இதுவா நாம் இறைவன் மீது வைக்கும் நம்பிக்கை!!!!!!!!!!! நீங்கள் கேட்டவுடன் குடுக்க் அல்லாஹ் என்ன இன்ஸ்டண்ட் நூடுல்ஸா ???? நம்முடைய துவாக்களுக்கு நிச்சயம் பதிலளிப்பான் ஆனால் அது எதுவென்று நாம் அறியமுடியாது!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இன்னுமொரு செய்தி, சில வாரங்களுக்கு முன்னர் ஒரு செய்தி முகப்புத்தகத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்கள் பெற்றது, அதாவது ஒருவர் இறந்துவிட்டார், அவரை அடக்கம் பண்ணிவிட்டு வந்துவிட்டார்களாம், மூன்று தினங்களுக்கு பிறகு இர்னதாவரின் தந்தைக்கு சந்தேகம் தொண்டி பார்த்தால் அந்த மைய்யத் மிக கொடூரமாகவும், கண்கள் எல்லாம் விரிந்து காணப்பட்டதாம், இதையும் நம்பி சில முஸ்லிம்கள் அதற்க்கு ஹிட்களும், கமெண்ட்ஸ் களும் குடுக்கிறார்கள், இதுவா நம்முடைய ஈமான்?

மண்ணறையில் வேதனை உண்டுதான் அதில் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் அந்த வேதனை ஒரு சாதாரண மனிதனால் எப்படி பார்க்க முடியும், அந்த மண்ணறை வாழ்க்கை என்பதன் நியானம் அல்லாஹ் ஒருவனுக்கே தெரியும் இதை பற்றி நாம் சிந்திக்க கூட கூடாது, நம்பதான் வேண்டுமே தவிர!!!!!!!!! அதுதான் நமது ஈமானை பாதுகாக்கும்,

இதை இறைவன் அழகான முறையில் தனது திருமறையில் கூறுகின்றான்:-
“அவன் மறைவானதை அறிபவன், தனது மறைவான விஷயங்களை அவனை பொருந்திக்கொண்ட தூதரை தவிர வேற யாருக்கும் வெளிபடுத்த மாட்டான்” 72:26.

எனவே இதுவெல்லாம் யூத கிறிஸ்துவர்களின் வழி, அவர்கள்தான் குருடனையோ, அல்லது குஷ்டமுள்ளவனையோ செட் செய்துவிட்டு கூட்டத்தில் கர்த்தரிடம் பிராத்திப்பார்கள் உடன் அந்த குருடனோ அல்லது குஷ்டரோகியோ குன்மாவது போல காட்டி அவரகளை தான் மாதத்தின் பால் இழுப்பார்கள், இது போல ஒரு கேடுகெட்ட நிலைமை நமக்கு தேவையில்லை,

நமக்கு அல்லாஹ்வின் வேதமும் அவனின் தூதரின் வழிக்கட்டுதலுமே போதும், மேலும் இன்று அல்லாஹ் உதவியால் பெரும்பாலான் மக்கள் இஸ்லாத்தின் பால் வருகின்றார்கள், அவற்றை எல்லாம் இது போன்ற செய்திகளால், பின்னடைய செய்துவிடாதீர்கள்,

இன்னும் ஒரு முக்கியமான, செய்தி அதுவும் முகப்புத்தகதில் தான், அதாவது ஐ love அல்லாஹ், i love முஹம்மத் போன்ற படங்களை போட்டு இதை ஷேர் பண்ணினால் இத்தனை நன்மை வரும், அது நடக்கும், இது நடக்கும் போன்றவற்றை முற்றிலும் நிறுத்தி விடுங்கள், இதுவும் நமது ஈமானை பலவீனமாக்கிவிடும்.

மேலும் ஒரு இறைவாசனம் கூறி முடித்துக்கொள்கிறேன்

அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள், அல்லாஹ்வை அஞ்சவேண்டிய முறையில் அஞ்சிக்கொள்ளுங்கள், முஸ்லிமாக தவிர மரணிக்காதீர்கள”