OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

சர்வதேச பிறை சாத்தியமா? சத்தியமா இல்லை!


எனது முந்தைய பதிவுகளில் பிறை சம்பாதமாக பல ஆதாராபூர்வமான சான்றுகையால் குரான் மாற்று ஹதீஸ்களைன் அடிபடையில் விளக்கி, அதில் ஹிஜ்ரி கமிட்டி கணித்துள் பிறை காலேண்டர் அடிபடியில் நோன்பையும், பெருநாளையும் நிர்ணயிக்க கூடாது, அது மார்க்கத்திர்க்கு முரணானது என்பதை பார்த்தோம்.
இனி இந்த பதிவில், இஸ்லாமியர்களில் இன்னும் சிலர் என்ன சொல்கிறார்கள் என்றால், உலகின் எந்த மூலையில் பிறை பார்த்தாலும் அதை வைத்து நோன்பு பிடிக்கலாம், இல்லை அதை வைத்து பெருநாள் கொண்டாடலாம் என்று வாதிடுகின்றனர்.
இது முற்றிலும் சாத்தியமில்லை என்பதை இங்கு குரான் ஹதீஸ் மூலம் நாம் நிரூபிப்போம். 


உலகத்தில் எல்லாருக்கும் ஒரே சமயத்தில் ரமளான் மாதத்தை அடைய முடியாது என்று அல்லாஹ் தன் திருமறை குரானில் மிக அழகாக கூறியுள்ளான். அதாவது ஸுரத்துல் பகராவில் 185 வது வசனத்தில் கூறுகின்றான்:-
“ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக்கொன்றதாகவும். (நன்மை – தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப்பட்டது. ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் நோன்பு நோற்க்கட்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களில் நோன்பை) பின்வரும் நாட்களில் நோர்க்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இளகுப்வானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமானதை நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டு போனதை) பூர்த்தி செய்யவும். உங்களுக்கு நேர்வழி காட்டியதார்க்காக அல்லாஹ்வின் மாகாதுவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதர்க்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).

இங்கே மேலே உள்ள வசனத்தில் சிகப்பு வண்ணத்தில் உள்ளதை நன்றாக திரும்ப திரும்ப படியுங்கள். அதாவது உங்களில் எவர் அம்மாதத்தை  அடைகிறாரோ.............................. சரி இனி விசயதிர்க்கு வருவோம், அல்லாஹ் ஏன் இவ்வாறு குறிப்பிடுகின்றான் என்றால், மாதத்தை அடைகின்ற ஒரு கூட்டமும், அடையாத ஒரு கூட்டமும் இருக்கின்றது என்பது  பாமரனுக்கு புரிகின்ற சாதாரண ஒரு வாக்கியம். இது அறிவில், ஆய்வில் சிறந்தவர்கள் என்று கூறி கொள்பவர்களுக்கு விளங்குவதில்லை.

சரி இதுக்கு ஒரு உதாரணம், மலக்கு மார்களிடத்தில் உங்களில் யார் போயி பேசுகின்றீர்களோ அவர்களுக்கு நரகம் என்று அல்லாஹ் சொல்லவில்லை, மாறாக மனிதர்களை பார்த்து சொல்லி இருக்கின்றான், ஏன் என்றால் மலக்கு மார்களில் போயி பேசுபவர், உண்மை பேசுபவர் என்று இரண்டு கூட்டம் கிடையாது, ஆனால் மனிதர்களிடத்தில் உண்டு, அதுபோலத்தான், அல்லாஹ் சொல்லுகின்றான் உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறார்களோ அவர் நோன்பு நோற்கட்டும் என்றால் அதை அடையாத இன்னொரு கூட்டம் இருக்கு என்பது தெள்ள தெளிவாக விளங்குகிறது, இதிலிருந்து உலகில் அனைவருக்கும் ஒரு மாதமானது ஒரே சமயத்தில் வராது என்பது இறைவனுடைய வார்த்தை,  ஆகையால் உலகில் ஒரே நாளில் நோன்பு நோர்க்க முடியும், பெருநாள் கொண்டாட முடியும் என்கின்ற வாதம் இறைவாசனத்திர்க்கு எதிரான ஒரு வாதம் என்பதை தெளிவா நாம் விளங்கிக்கொள்ள முடியும். இது அறிவியல் முறையில் பார்த்தாலும் ஒரே நாளில் உலகம் முழுவது பிறையை காண முடியாது என்பதற்க்கு சாட்சியாக moonsighting.com என்கின்ற வலைதளத்தில் பார்த்தாலே தெரியும் ஒவ்வொரு நாட்டிள்ளும் கண்ணால் தென்படும் பிறை என்பது நாட்கள் வித்தியாசபடும்.

அதுமட்டுமில்லாமல் நாம் இந்த வசனத்தை வைத்து மட்டும் நாம் சர்வதேச பிறை தவறு என்று கூறவில்லை, இதோ மேலும் சில விளக்கங்கள்.

நபி (ஸல்) கூறினார்கள்:-
பிறையை பார்த்து நோன்பு வையுங்கள், பிறையை பார்த்து நோன்பை விடுங்கள், உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால் முப்பதாக கணக்கீட்டு கொள்ளுங்கள்.
நூல்:- புஹாரி (1909),  அறிவிப்பவர் ;- அபு ஹுரைரா

இந்த ஹதீஸ் தான் பிறையை கண்ணால் காணவேண்டும் என்பதற்க்கு ஆதராம், இதில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு இருக்கிறது அதையும் பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் பிறையை பார்த்து நோன்பு வையுங்கள், பிறையை பார்த்து நோன்பை விடுங்கள், இதோடு மட்டும் நிறுத்தியிருந்தால் உலகில் எங்கு பிறை பார்த்தாலும் நோன்பு வையுங்கள், நோன்பை விடுங்கள் என்கின்ற வாதத்தில் நியாயம் இருக்கு, ஆனால் அதன் பிறகு தொடர்ச்சியாக, உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால் முப்பதாக கணக்கீட்டு கொள்ளுங்கள்.
 இதில் மேகமூட்டமாக இருந்தால் என்கின்ற வார்த்தை இருக்கிறதே, அது கண்ணால் பார்க்கவேண்டும் என்ற கருத்தையும் உள்ளடக்கியுள்ளது, உலகம் ஒரு இடத்தில் பார்த்தால் அது வேற இடத்தை கட்டுபடுத்தாது ஒரு குறிப்பிட்ட பகுதிக்குதான் அந்த செய்தி பொருந்தும் என்கின்ற கருத்தையும் உள்ளடக்கியுள்ளது, எப்படி?

 பிறையை மேகமூட்டம் எப்பொழுது மறைக்கும், கணித்தாலும்  மறைக்காது, satellite மூலமோ, இல்லை ஃப்ளைட் மூலம் பார்த்தாலும் மறைக்காது கண்ணால் பார்த்தால் மட்டும்தான் மறைக்கும். ஆக இது பிறையை கண்ணால் தான் பார்க்கவேண்டும் என்பதற்க்கு ஒரு சான்றாக இருக்கிறது, அதுமட்டுமில்லாமல், உலகம் முழுவதும் ஒரே நாளில் மேகமூட்டமாக இருக்கவே இருக்காது (இதில் யாருக்கும் மாற்று கருத்திருக்காது என்று நம்புகின்றேன்). அப்ப மேகமூட்டம் ஏற்பட்டால் முப்பதாக பூர்த்தி செய்துகொள்ளுங்கள் என்கின்ற செய்தி, தெளிவாக ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்தான் பொருந்தும் என்பது விளங்குகின்றது. உலகில் எங்கோ பிறை பார்த்த செய்தி வந்தால் அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள தேவை இல்லை என்பது இதிலிருந்து புரிகின்றது.

அதுமட்டுமில்லை, மேலும் செய்தி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
மாதம் என்பது 29 நாட்கள் தான், எனவே பிறையை காணாமல் நோன்பு நோர்க்காதீர்கள், மேகமூட்டமாக இருந்தால் எண்ணிக்கையை முப்பதாக பூர்த்திசெய்யுங்கள்.
நூல் :- புகாரி (1907) அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
அப்ப இதிலிருந்து மாதம் என்பது 29தான், அது 28 ஆக முடியாது அதேபோல் 31ம் ஆக முடியாது என்பது தெரிகிறது. சரி இப்ப இந்த சர்வதேச பிறை இருக்கிறதே இவர்களின் கருத்தை நாம் ஏற்று கொண்டோமெயானால் இந்த ஹதீஸிர்க்கு முரபடும், எப்படி?

இப்ப நாம நோன்பு வைதுள்ளோம், பிறை பார்த்த செய்தி வந்தால்  உடனே நோன்பை விடவேண்டும் இதுதான் மார்க்கத்தின் சட்டம். சரி இப்ப சவூதி அரபியாவில் வந்து 29 வது நோன்பு முடிந்து ஒரு 7 மணிக்கு பிறை பார்க்கிறார்கள் என்று வைத்து கொள்வோம் அப்பா அமெரிக்காவில் அப்பதான் 29வதுநோன்பை வைத்துவிட்டு தூங்குவாங்க, அப்ப சவூதி அரபியாவில் பார்த்த பிரையின் அடிபடையில் அவர்கள் நோன்பை விட வேண்டும், அப்ப அவர்களுக்கு 28 நோன்பு கணக்குதான் வரும். மாதம் 28 ஆக முடியாது என்பது நபிகள் நாயகத்தின் செய்தி, அப்ப இந்த வாதம் ஹதீஸிர்க்கு எதிரான ஒரு வாதம் இங்கே இது அடிபட்டு போகுது.

மேலும் இந்த சர்வதேச பிறை பொறுத்தவரை யார் யாரெல்லாம் பஜ்ரை அடையவில்லையோ அவர்கள் நோன்பு நோற்கட்டும் என்று கூறுகிறார்கள், இது எப்படின்னு பார்ப்போம், இப்ப உதாரணமாக இந்தியாவில் 29வது நோன்பு முடித்துவிட்டு பிறை பார்க்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், அந்த சமயத்தில் உலகில் வேற ஒரு நாட்டில் பஜ்ர் நேரம் என்று வைத்து கொள்வோம் அங்கேயும் உள்ள ஊர்களில் அனைத்து ஊர்களிலும் பஜ்ர் நேரம் ஒரே நேரமாக இருக்காது சில ஊர்களில் முன்னே பின்னே பஜ்ருடைய பாங்கு சொல்லப்படும், அப்ப ஒரு ஊரில் 5 மணிக்கு பாங்கு என்று வைத்து கொள்ளுங்கள் அவர்கள் நோன்பு பிடிக்க வேண்டும், ஒரு ஊரில் 4:30 என்று வைத்து கொள்ளுங்கள் அவர்கள் நோன்பை விட வேண்டும், இதிலும் இந்த வாதம் அடிபட்டுவிடும்,

மேலும் நபிகள் நாயகம் சொல்வதாக நஸயிலே ஒரு செய்தி வருகின்றது
ஒரு வாகனக்கூட்டத்தார் தூதர் (ஸல்) அவர்களிடம் மதீனாவில் இருக்கும் பொது வந்து நாங்கள் நேற்று பிறையை கண்டதாக கூறுகின்றார்கள் அதற்க்கு நபி(ஸல்) அவர்கள், அவர்களை நோன்பை விடுமாறு கூறிவிட்டு, நாளை பெருநாள் தொழுது கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள் இந்த ஹதீஸ் நஸாயிலும் பதியப்பட்டுள்ளது.
இதில் நல்லா கவனியுங்கள் பிறைபார்த்தும் அவர்கள் நோன்பு வைத்துவிட்டு வருகிறார்கள், அவர்கள் இந்த மாதிரி கூறியவுடன் அவகளை நோக்கி நீங்கள் நோன்பை விடுங்கள், நாளை பெருநாள் தொழுது கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள், இங்குதான் முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டும், நபி (ஸல்) அவர்கள் மதீனா மக்களை கூறியிருந்தால் நாங்களும் நாளை பெருநாள் தொழுவோம் என்று கூறியிருப்பார்கள் ஆனால் அவ்வாறு கூறாமல் நீங்கள் நோன்பை விடுங்கள் என்றுதான் கூறுண்கின்றார்கள்.
இதிலிருந்து விளங்குகிறதும் ஒரு இடத்தில் பார்த்த பிறை வேறு ஒரு இடத்தை கட்டுபடுத்தாது என்று.

இதே போன்ற இன்னொரு ஹதீஸ் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது,

முவாவியாவியாவின் ஆட்சியின் போது மதீனாவில் இருந்து ஹுரைப் என்பவர் சிரியா நாட்டிற்க்கு அனுப்பபடுகிறார், அப்போது அங்கு ஒரு வெள்ளிக்கிழமை இரவு (வியாக்கிழமை சாயங்காலம்) ரமளான் பிறை பார்க்கப்படுகிறது, உடனே அங்குள்ள மக்கள் நோன்பு நோர்க்க தொடங்கிவிடுகிறார்கள், இவரும் நோன்பு நோர்க்கிறார் பின்னர் ரமளான் முழுவதும் அங்கேயே இருந்துவிடு ரமளானின் கடைசி பகுதியில் அங்கு பிறையை பார்த்துவிட்டு மறுநாள் மதீனாவிர்க்கு வருகிறார், அப்போது இப்னு அப்பாஸ் அவர்கள் ஹுரைபாவிடம் நீங்கள் எப்போது பிராயை பார்தீர்கள் என்று கேட்கிறார் அதற்க்கு அவர் நாங்கள் ஒரு வெள்ளிக்கிழமை இரவு பார்த்தோம் என்கிறார் அப்படியா நாங்கள் சனிக்கிழமை இரவுதான் பார்த்தோம், எனவே நாங்கள் கண்ணால் பிறையை பார்துதுதான் நோன்பை விடுவோம், இல்லை என்றாள் முப்பதாக பூர்த்தி செய்வோம் என்கிறார், உடனே ஹுரைப் அவர்கள் கூறுகிறார் “ஏன் சிரியா நாட்டில் நாங்கள் வெள்ளிக்கிழமை இரவு பிறை பார்த்து நோன்பு பிடித்தோம், அங்குள்ள மக்கள் அனைவரும் பிடித்தார்கள், மூவவியா பிடித்தார் இது போதாதா என்றார், உடனே இப்னு அப்பாஸ் அவர்கள், இல்லை இவ்வாறு நபி அவர்கள் எங்களுக்கு கற்றுக்குடுக்கவில்லை என்றார்”

இந்த ஹதீஸ் ஒரு ஆதாரபூர்வமான ஒரு ஹதீஸ். இந்த ஹதீஸ் பற்றி இமாம்கள் குறிப்பிடும் போது அவர்கள் இட்ட தலைப்பே இதுதான் “ஒரு ஊரில் பார்க்கப்பட்ட பிறை மற்ற ஊரை கட்டுபடுத்தாது”

எனவே பிறை என்பது அந்த அந்த பகுதியில் பார்க்க பட வேண்டும், அப்படி மேகமூட்டமிருந்தால் நபியின் கட்டளையின் படி முப்பதாகதான் பூர்த்தி செய்ய வேண்டும், அந்த பகுதியில் என்றாள் எவ்வாறு எல்லைகளை கணிப்பது என்ற ஒரு கேள்வி வருவது நியாயம்தான் அதற்க்கும் நபியின் செய்தி ஒன்று இருக்கிறது

நபிகள் (ஸல்) சொல்லுகின்றார்கள், “உங்களை நான் எதில் விட்டுவிட்டேனோ அதில் நீங்கள் என்னை விட்டுவிடுங்கள்” என்று. நபி அவர்கள் ஒரு விஷயத்தில் விட்டுவிட்டால் அதில் நமக்கு நன்மை இருக்கின்றது என்று நாம் எடுத்து கொள்ள வேண்டும், என்ன நன்மை?
எல்லையை பொறுத்தவரை நாமே முடிவு செய்துகொல்லாம், ஏன் இதே திண்ணையில் ஒரு நண்பர் கூட சொல்லி இருந்தார் எல்லைகள் எல்லாம் நாமே வகுத்து கொண்டது என்றும் அதர்க்காக தான் நபியவர்கள் விட்டிருக்கலாம் இதிலும் ஒரு நண்மைதானே?

இதை நானாக சொல்லவில்லை திர்மிதியில் வரும் ஒரு ஹதீஸ் கூறுகின்றது, அதாவது நபி அவர்கள் கூறுகின்றார்கள், “நீங்கள் எப்போது நோன்பு என்று தீர்மானிக்கின்றீர்களோ அதுதான் நோன்பு, நீங்கள் எப்போது பெருநாள் என்று தீர்மானிக்கின்றீர்களோ அதுதான் பெருநாள்

இதில் மக்கள் தீர்மானம் என்று ஒரு அதிகாரத்தை குடுக்கிறார்கள், மக்கள் அதிகாரம் எனபது நாம நினைத்த மாதிரி எல்லாம் தீர்மானிக்கிறதில்லை, நபிகளின் சொல்லிற்க்கும், குராணிர்க்கும் முரண்பாடாமல், பிறையை பார்த்து தீர்மானிக்கிறது, வேறு ஒரு நாட்டில் சொன்னதையும் ஏற்க்க கூடாது என்பதற்க்கு போதிய ஆதாரங்களைதான் நாம் மேலே பார்த்தோம்.
எல்லைகளை எப்படி வகுப்பது, அல்லாஹ்வின் உதவியால், அந்த பிரச்சனை இன்று இல்லை, உதாரணமாக தமிழ் நாட்டில் பிறை பார்த்தால் அதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளட்டும், கேரளாவில் பிறை பார்த்தால் கேரளா மக்கள் ஏற்றுக்கொள்ளட்டும்.

ஆக மொத்தத்தில் சர்வதேச பிறை என்பது வழிகெடுதான், குரான் ஹதீஸிர்க்கு மாற்றமானதுதான்!!!!!!!!!!

நன்றி:- onlinepj.com

கருத்துகள் இல்லை: