(Xtouch X401, Samsung Galaxy S-II எது சிறந்தது?)
சமீபமாக அமீரகத்தில்
xtouch என்கின்ற
நிறுவனத்தாரின் டாப்லெட்கள் அதிகம்பேரை கவர்ந்துள்ளது. அதற்க்கு காரணம் என்னவென்று
பார்த்தால் குறைந்தவிலையில் சிறந்த தொழிற்நுட்ப்பத்தில் கிடைப்பதால், எல்லோரும் 1500, 2000 திர்காம்ஸ் என்று செலவழித்து வாங்கும்
காலக்ஸி டாபில் நீங்கள் என்ன என்னவெல்லாம் செய்கிறீர்களோ? அதையே
இதிலும் நீங்கள் செய்யலாம். இவர்களின் 7” tablet வெறும் 260 திர்காம்ஸ்
தான் என்றாள் உங்களால் நம்பமுடிகிறதா. இது ஒரு சீன உற்பத்திதான், இருந்தாலும் நல்ல பேரு வாங்கிய நிறுவனங்கள்தான் தரமான பொருளை தரமுடியும் என்று
மக்களே உருவாக்கி கொண்ட விதியில் எனக்கு நம்பிக்கை இல்லை.
என்னடா இவன் தலைப்பிற்க்கும், இந்த கிறுக்கல்களுக்கும்
சம்பந்தமே இல்லையே என்று பார்க்கிறீர்களா? அடுத்து அதுக்குதான்
வரேன், மேலே சொன்னது போல இவர்களின் நிறுவனத்தில் இருந்து மேலும்
இரண்டு புதிய போன்களை அறிமுக செய்துள்ளன, ஒன்று X401, மற்றொன்று X506, இதில் முதலில் உள்ளது 4.3 இன்ச் ஸ்க்ரீனை கொண்டது மற்றொன்று 5 இன்ச் ஸ்க்ரீனை
கொண்டது, இதில் என்னவோரு முக்கியமான விஷயம் அப்படினா? சாம்சங் காலக்ஸிகளை காட்டிலும் விலை மிகவும் குறைவு, அதே நேரம் இவர்களின் தொழில்நுட்பதில் எந்த ஒரு மாற்றமுமில்லை, ஒரு சில சிறிய மாற்றங்களை தவிர உதாரணதீர்க்கு கீழே உள்ள இரண்டு ஒப்பீடுகளை
பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், நான் போன வாரம்தான் ஒன்று வாங்கினேன், கடிப்பாக இது ஒரு சிறந்த தேர்வு, விலை அதிகமாக போட்டு
வாங்குவதற்க்கு இந்த மொபைல் சிறந்தது, இதன் விலையோ வெறும் 500 முதல் 600 திர்காம்ஸ் வரைதான். புத்திசாலிகள் புரிந்துகொள்வார்கள்:-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக