துபாயில் பிச்சை எடுப்பது குற்றம்! ரமலான் நோன்பின்போது யார் என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாது இருப்பதைக்கொடுக்க வேண்டும் என்பது இஸ்லாமியர் நியதி. இதை சாதமாகப் பயன்படுத்திக்கொண்டு இந்தியாவிலிருந்து விமானத்தில் வந்து பிச்சை எடுத்த இந்தியர்கள் 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இவர்கள் தமிழ்நாடு, பீகார், உத்தர பிரதேசம் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 16 தமிழர்களும் அடக்கம்! (ராமநாதபுரம், வேலூர், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்)
இதேபோல் ஷார்ஜாவில் வீட்டில் பிச்சை கேட்ட 40 வயதான ஒரு பாகிஸ்தானியரை கைது செய்து அவரின் பையில் சோதனை செய்தபோது பையில் இருந்தது எவ்வளவு தெரியுமா? Dhs 30,000 (இந்திய மதிப்பில் 4.5லட்சம்!)
இந்த பிச்சைக்காரர்கள் ரமலான் மாதத்தை ஒரு வியாபாரமாகவே கருதுகின்றனர். ரமலான் மாதத் தொடக்கத்தில் Visit Visa வாங்கி விமானம் ஏறி துபாய், கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளுக்குச் சென்று தொழிலை ஆரம்பித்துவிடுவர். இதற்கு மொத்தமாய் ஆகும் செலவு 50,000 ரூபாய். ஒரு மாதம் ரமலான் நோன்பு முடிந்ததும் தங்கள் தொழிலை முடித்துவிட்டு சொந்த நாட்டிற்கு திரும்பிவிடுவர். இது எப்படி இருக்கு?
துபாயில் ஊடக நிறுவன இளைஞர் ஒருவர் சில நாட்கள் முன்பு ரோட்டில் நின்று உதவி/பிச்சை கேட்டதில் கிடைத்தது எவ்வளவு தெரியுமா? 1,200 Dhs (ரூ.18,000) இதை பெருமையாக? அவரே கூறியுள்ளார்.
சரி இவர்களைப் போட்டுக்கொடுத்தது யாராக இருக்கும்? நிச்சயம் இன்னொரு இந்தியராககூட இருக்கலாம்! என்னைவிட அதிகம் சம்பாரிக்கிறான் என்ற பொறாமையால் துபாயில் பணி புரிந்துகொண்டிருக்கும் இன்னொரு இந்தியரேகூட போட்டுக்கொடுத்திருக்கலாம் J
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள், இவர்களுக்கு 3 மாதம்வரை சிறை தண்டனை கிடைக்கலாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக