OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

பிறை விசயத்தில் விளையாடும் குழப்பவாதிகள் – பகுதி 2




முரண்பாடா? உடன்பாடா?
அப்துல்லா பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்து வரும் அறிவிப்புகளில் அபூ உசாமா மற்றும் அப்துல்லா பின் நுமைர் அப்துல்லாஹ் பின் தீனார் ஆகிய மூவருடைய அறிவிப்பில் முப்பதாக என்ற வாசகம் வந்துள்ளது. இது முஸ்லிமிலும் , புகாரியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அல்லாத மற்றவர்களின் அறிவிப்பிலும் 30 என வரவில்லை என்பதால் அம்மூவரின் அறிவிப்பும் பலவீனமானது என்று கூறக்கூடாது.
ஆதாரம்:- 1796 முஸ்லிம் மற்றும் 1907 புகாரி

ஏன் பலவீனமாது என்று கூறக்கூடாது என்றால், 29 ஆக கணக்கிட்டுக்கொள்ளுங்கள் என்று பலர் கூறி ஒருவர் மட்டும் 30 ஆக என்று கூறினால் இதை முரண் என்று கூறலாம், ஆனால் பலர் எந்த எண்ணிக்கையேயும் குறிப்பிடாமல் அறிவித்து ஒருவர் அந்த எண்ணிக்கையை தெளிவுபடுத்தும் விதமாக 30 எட்ன்ரு கூறினால் இதை முரண் என்று அறிவுள்ளவர்கள் கூற மாட்டார்கள். மற்றவர்கள் விட்டதை இவர் கவனமாக குறிப்பிட்டுவிட்டார் என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.

முப்பதாக என்று இவர்கள் மட்டும் அறிவிக்கவில்லை, ஏராளமான நபி தோழர்கள் அறிவிதுள்ளனர் என்பதை முன்பு பார்த்தோம் எனவே இந்த அறிவிப்பை பலவீனம் என்று கூறுவது சத்தியதிர்க்கு புறம்பான கருத்தாகும்.


மாதம் என்பது ஏத்தினை நாட்கள்?
நபி (ஸல்) அவர்கள் மாதம் என்பது 29 நாட்களாகும் என்று கூறினார்களே தவிர எங்கேயும் 30 நாட்கள் என்று கூறவில்லை என்பது இவர்களின் வாதம்.
பிறை தென்படாவிட்டால் 30 ஆக பூர்த்தி செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதற்க்கு முன்பு பல ஆதாரங்களை சுட்டிக்காட்டியுள்ளோம். இந்த ஆதாரங்களின் அடிபடையில் சிந்தித்தால் ஒரு மாதத்தில் முப்பது நாட்களும் வரும் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.
இது மட்டுமின்றி மாதத்தில் 30 நாட்களும் வரும் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவாக முஸ்லிமில் 1805 ஹதீஸில் கூறியுள்ளார்கள்.

மேலும், இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:-
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷிபா (ரஹ்) அவர்கள் இதைக்கொருகையில், இரு கைகளையும் மூன்று முறை கொத்துக்காட்டி, மூன்றாவது தடவையில் பெருவிரலை மடித்துக்கொண்டார்கள்.
ஆதாரம்:- முஸ்லிம் 1969.

இதில் இப்ன் உமர் (ரலி) அவர்கள் கூறியது அறிவிப்பாளர் சந்தேகத்துடன் கூறியுள்ளார், எனவே இதை ஆதாராமாக எடுக்க இயலாது என்று வாதிடுகின்றனர். வாதிடுகின்றனர். இங்கே அறிவிப்பாளர் சந்தேகத்துடன் கூறினாலும் இவர் கூறியது சரியானத்தகவல் தான் என்பதை பின் வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும், முப்பது நாட்களாகவும் இருக்கும். பிறையை நீங்கள் கண்டால் நோன்பு வையுங்கள், அதை பார்த்தே நோன்பை விடுங்கள், உங்களுக்கு மேக மூட்டம் குறுக்கிட்டால் எண்ணிக்கையை முழுமைபடுத்துங்கள்.
அறிவிப்பாளர்:- அபூஹுரைரா
நூல்:- நஷாயீ ஹதீஸ் 2109

அந்த காலத்து மக்கள் மாதம் முப்பது நாட்கள்தான் என்பதை அறிந்து வைதிருந்தனர், இதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை, இந்த நம்பிக்கை தவறானது என்று நபி (ஸல்) அவர்களும் கூறவில்லை, ஆனால் ஒரு மாதத்தில் 29 நாட்களும் வரும் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் இதை அறிந்து கொண்டனர், இதை பின் வரும் ஹதீஸில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

உம்மு சலாமா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்;-

நபி (ஸல்) அவர்கள் “ஒரு மாதம் தம் மனைவியருடன் சேர்வதில்லை” என்று சத்தியம் செய்திருந்தாட்கள்; 29 நாட்கள் முடிந்ததும் (இல்லம்) திரும்பினார்கள். அவர்களிடம் “நீங்கள் ஒரு மாதம் வார மாட்டீர்கள் என்று சத்தியம் செய்திருந்தீர்கள் என்று கேட்க்கப்பட்டது அதற்க்கு அவர்கள் “ஒரு மாதம் என்பது 29 நாட்களாகவும் அமையும் என்றார்கள்
நூல்:- புகாரி 1910
இந்த ஹதீசிலிருந்து தெள்ள தெளிவாக நமக்கு விளங்குகிறது, 29 நாட்கள் முடிந்துவிட்டால் பிறை பார்க்க வேண்டும் எட்ன்ரும், 30 நாட்கள் முடிவடைய வேண்டும் என்று காத்திருக்க வேண்டியதில்லை என்பதை தெளிவுபடுத்தவே மாதம் 29 நாட்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

மூடர்களின் வாதம் சரியா?

ஷாபான் 30வது நாளில் பிறை தென்படாவிட்டாலும் அன்று ரமளான் என்று இவர்கள் கூறுவது அறிவீனமாக உள்ளது. 30வது இரவில் பிறை தெரிந்தாலும் ரமளான் மாதம் தொடங்கிவிடும், பிறை தென்படாவிட்டாலும் ரமளான் மாதம் தொடங்கிவிடும் என்றால்..............இங்கு சில விடையே இல்லாத வினாக்கள் எழுகின்றன!!!!!!!!!!!!!!!!!!!!!

1.   அந்த இரவில் ஏன் பிறையை பார்க்கவேண்டும்?
2.   பிறையை பார்க்க வேண்டிய அவசியமே இல்லையே?
3.   பிறை பார்க்காமல் ரமளான் மாதத்தை முடிவு செய்யாதீர்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு அர்த்தம் இல்லாமல் போகிறதே?
4.   எந்த காலத்திலும் முப்பது என்பதே வராமல் போய்விடுமே?
5.   முப்பது நாட்கள் என்ற கருத்தில் அமைந்த எல்லா ஹதீஸ்களும் மறுக்கபடும் நிலை ஏற்படுமே?

இதை எல்லாம் பற்றின கவலை இந்த கேடு கேட்ட மூடர்களுக்கில்லை. தங்களுக்கு நியானமும், அறிவும் இல்லாத விஷயங்களில் இறங்கி மக்களை வழிகெடுப்பது மட்டும்தான் இவர்களின் ஒரே குறிக்கோள் என்பது இதிலிருந்து வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
யாராவது ஒருவர் இரண்டு மூன்று ஹதீஸ்களை காட்டி ஒரு வாதத்தை வைத்தால் அதை அப்படியே நபிவிடக்கூடாது. எந்த மார்க்க சட்டமாக இருந்தாலும் அது தொடர்பான அனைத்து செய்திகளையும் படித்த பிறகே அந்த ஆய்வு சரியானதா? தவரானதா? என்ற முடிவுக்கு வரவேண்டும்.

ஒரு ஆய்வில் ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர்களை பார்ப்பது எவ்வல்வு முக்கியமோ அது போன்று அனைத்து ஆதரங்களையும் பார்த்து முடிவெடுப்பது முக்கியமானதாகும்.

சும்மா முழங்காளுக்கும் உச்சி மண்டைக்கும் முடிச்சு போடுகின்ற வேலை எல்லாம் கூடாது…………………

அடுத்த பதிவில் 28 வது நாளில் பிறை தெரிந்தால்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கருத்துகள் இல்லை: