OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

ரொம்ப நாளைக்கு அப்புறம் உட்கார்ந்து யோசிச்சது!!!


நன்றியுடன் தொடங்குகிறேன்......!!!!!!!!!!!

 இது வரை எனது வலைப்பூவை பார்வையிட்டோர்களின் எண்ணிக்கை 22,611அத்தனை வாசகர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இனி வழக்கம் போல எனது பாணியில் இந்த பதிவும் உங்கள் சோகங்களை மறந்து வாய்விட்டு சிரிப்பதற்க்கு!!!!!!!!!!வாழ்க்கை தத்துவம்

சுகர் இல்லாத (TEA) டீயும் .... பிகர் இல்லாத வாழ்க்கையும் கசப்புத்தான் ..
ஆனால்....!! உடம்புக்கு நல்லது ....அவ்வ்வ்வ்வ்

ஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா மாவாட்ட சொல்லுவாங்க.
அப்ப, பஸ்ல காசில்லைன்னு சொன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?
Teaயில ஒரு பல்லி செத்துக்கிடந்தா பாய்ஸன்!
அதுவேபிரியாணியில ஒரு கோழியே செத்துக் கிடந்தா ..? பங்ஷன்.!.

ராவா குடிச்சவனும், ராபகலா படிச்சவனும் நல்ல இருந்ததா சரித்திரமே இல்லை – இப்படிக்கு பரீட்சை எழுதி இடிஞ்சு போனோர் சங்கம்.
லவ்வுல ஒன் சைடு இருக்கலாம்
டூ சைடு இருக்கலாம்  ஆனால்
சூசைடு மட்டும் இருக்கவே கூடாது

பொண்ணுங்க மனசு தோசை போல ஒரு பக்கம் வெள்ளை ஒரு பக்கம் கருப்பு
ஆனா பசங்க மனசு இட்லி போல எப்படி பார்த்தாலும் வெள்ளைதான்

இன்னொசெண்ட் லவ்

LKG பொண்ணு :-   புரிஞ்சுக்கோ லவ் எல்லாம் வேண்டாம் .
LKG  பையன்:-    ஏன் எதுக்காக இப்படி பண்ற , உனக்காக நான் எதெல்லாம்   இழந்திருக்கேன் தெரியுமா 
LKG பொண்ணு:- நான் ஒன்னும் பன்ன முடியாது
LKG பையன்:-  அப்போ என் சிலேட் வாங்கி எழுதினியே அது லவ் கிடையாதா?   என் ரப்பர் வாங்கி எரஸ் பன்னியே அது லவ் கிடையாதா? எத்தனை நாள் என் வாட்டர் பாட்டிலிருந்து தண்ணி குடிச்சுருப்ப
என்ன , ஏமாத்திட்ட நீயும் மத்த பொண்ணுங்க மாதிரி தான
LKG பொண்ணு:-  எனக்கு ஒன்ன பிடிக்கும் ,ஆனா அது லவ் இல்ல ,புரிஞ்சுக்கோ
 LKG பையன்       -   தெரியும்டி உங்களைப் பத்தி

வெறுப்புடன் , மச்சி ஒரு ஹார்லிக்ஸ் சொல்லு 


கொஞ்சம் சிரிப்பதற்க்கு
கணக்கு ஆசிரியர்:- 18க்கும் 81க்கும் என்ன வித்தியாசம்னு சொல்லு?
மாணவன்:- 18 வயசு பொண்ணு, 81 வயசான பொண்ணு.

LKG பையன்1:- மாப்ளே எங்க அப்பா சரியான பயந்தக்கொல்லியா இருக்காருடா
LKG பையன் 2:- எந்த அப்படி சொல்லுற?
LKG பையன்1:- எப்ப ரோடு கிராஸ் பண்ணினாலும் என் கைய்ய இருக்கமா பிடிச்சிருக்கிறார்.

காதலன் : உனக்காக நான் பெத்தவங்களை விட்டு விட்டு வந்துள்ளேன் .
காதலி : போடா .. உனக்காக நான் பெத்ததுகளையே விட்டுடு வந்துருக்கேன் .

பதிலளிக்க முடியாத சில கேள்விகள்.
குடிபோதையில் வண்டி ஓட்ட கூடாதுனா அப்புறம் எதுக்கு பார்(BAR)ல பார்கிங்க்(parking)

மின்சார ரயில் ஏன் ஷாக் அடிப்பதில்லை?

சுவிஸ்ல உள்ள கறுப்புபணத்தை மீட்க முடியாத அரசு வெளிநாட்டில்பணிபுரியும் இந்தியர் அனுப்பும் பணத்தில் மட்டும் அதிக வரி பிடிப்பது ஏன் ?

அதிககட்டனத்தையும் கட்டிவிட்டு பின்பு அந்த பள்ளியை எதிர்த்து போராடுவதை விட அரசு பள்ளியின் தரத்தை உயர்த்த சொல்லி  யாரும் போராடவராதது என ?

டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்'

அமெரிக்க நகர் ஒன்றில், சர்தார் ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சர்தாரும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் சர்தார் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ் , சர்தாரிடம் 'குட் வ்னிங் சார்..'சர்தார் 'குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா?'. போலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'.

சர்தார் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார். போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே சர்தாரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சர்தாரின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்..'

பெண் பீர் குடிக்கும் போட்டோவை கிண்டலடிக்கும் நாம், உணர்வதே இல்லை - எந்த பீரிலும் ஆண்களுக்கு மட்டும் என்று அச்சிடப்படவில்லை!

1 கருத்து:

demo சொன்னது…

தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!

தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....

ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....

அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....


மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
95666 61214/95666 61215
9894124021