உலகிலேயே மக்கா மதீனாவிர்க்கு அடுதபடியாக மிகப்பெரிய
பள்ளிவாசல் என்பது அமீரக அபு தாபியில் அமைந்துள்ள ஷேக் ஜாய்த் பள்ளிதான். இதை
எதற்காக வேண்டுமென்றாலும் அவர்களும் கட்டிக்கொள்ளட்டும் அதை பற்றி நாம் கவலை
படவேண்டாம்.
இந்த பள்ளிவாசல் தொடங்கின நாள் முதல் வருடாவருடம் நோன்பில், பல நோன்பாளிகள் நோன்பு திறக்க இவர்கள் உணவு வழங்கி வருகின்றனர். இங்கே நோன்பு
திறக்க வருபவர்கள் மிகவும் குறைந்த சம்பளத்தில் வேளைபார்க்கும் தொழிலாளிகளில இருந்து, உயர் மட்ட ஆட்காட்கள் மற்றும் பெண்களும் வருகின்றனர். இது என்ன ஒரு பெரிய
விஷயமா? அப்படின்னா இதுக்கு அப்புறம் தான் நீங்க முக்கியமாக கவனிக்கணும்.
அதாவது இங்கே ஒரு நாளைக்கு சுமார் 20000 பேர் நோன்பு திறக்கிறார்களாம்.
அதிலும் வெள்ளிக்கிழமை என்றால் 30000-தை விட அதிகமாம். இவர்கள் அமர்வதார்க்காக இந்த
பள்ளிவளாகத்தில் சுமார் 1500 நபர்கள் உட்காருகின்ற அளவிர்க்காண பத்திர்க்கும் மேற்பட்ட, ஏசி உடன் கூடிய டெண்ட் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மேலும் வருகின்றவர்களுக்கு
டெண்டின் வெளியே உணவு பரிமாறப்படுகின்றது.
இவர்களுக்கான உணவு தயாரிக்க மொத்தம் 6 மணிநேரம் தேவைபடுகின்றதாம்.
சரி இன்னும் என்ன்வெல்லாம் ஒரு நாளைக்கு தேவை படுகின்றது என்று பார்ப்போம்:-
1. தினமும் 10000 முழு கோழி செலவிடபடுகின்றதாம்.
2.
தினமும்
6000 கிலோ அரிசி தேவைபடுகின்றதாம்
3.
தினமும்
10,000 கிலோ ஆட்டிறைச்சி தேவைபடுகின்றதாம்
4.
தினமும்
1000 கிலோ வெள்ளெரிகாயும், கேரட் மற்றும் லெட்யூஸ் இலையும்
தேவையாம்
5.
மேலும்
தினமும் 3000 கிலோ தக்காளியும் வேண்டுமாம்.
6.
இது எல்லாம் இல்லாமல் தினமும் 20000 ஆப்பிள் தேவைபடுகிறதாம்.
7. மேலும் 20000 ஜூஸ் பாக்கெட்களும், தண்ணீர் பாட்டல்களும் விநியோகிப்படுகின்றன.
இது எல்லாமே ஒரு சில அரசாங்க அமைப்புகளால் இந்த நோன்பு மாதம்
முழுதும் வழங்கபடுகின்றது. இதர்க்காக இலவச பேருந்து கூட அரசால் வழங்கப்பட்டுள்ளது என்பது
குறிபிடதக்கது. அது மட்டுமில்லாத இந்த பள்ளியில் இரவு தொழுகை எனபது தராவீஹும் நடைபெறுகிறது.
இதில் மிகவும் அனுபவசாலியான இமாம்களான ஷேக் மிஷரி அல் அபசி அண்ட் இத்ரீஸ் அப்கார் போன்றவர்கள்
தோழவைக்கிறார்கள். இதில் தோராயமாக 10000 நபர்கள் தினமும் கலந்துகொள்கிறார்கள்.
குரானில் நிறைய இடங்களில் இரண்டு விஷயங்கள் சேர்ந்தேதான் வரும், அது தொழுகையும், ஜகாத்தும்தான். அதை இந்த அரபியர்கள்
மற்ற எதை பின்பற்றுகிறார்களோ இல்லையோ இந்த ரெண்டையும் சரியாக செய்கிறார்கள். அதனால்
தான் ஆண்டவன் இவர்களுக்கு குடுத்து கொண்டே இருக்கிறானோ.
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக