28 வது நாளில் பிறை தெரிந்தால்?
மாதம் என்பது 30 நாட்கள் இல்லை என்று கூடுவோர் ஒரு கேள்வியை
கேட்கின்றனர்.
ஷாபான் 30வது நாளில் பிறை வெளிபட்டு
மேகமூட்டும் போன்ற காரணங்களால் தெரியாவில்லிய. இப்பொழுது நாம்
அதை ரமளானின் முதல் நாளாக கணக்கிடமாட்டோம். இதன் பிறகு ராமலனை
தொடருவோம்.
மாதம் என்பது 29 நாட்களும் வரும்
என்ற அடிபடையில் ரம்லான் மாதத்தின் 28வது நாளில் பிறை தென்பட்டால்
என்ன சென்வது என்று கேட்கின்றனர்.
பிறையை கண்ணால் பார்த்து முடிவெடுப்பவர்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை
எப்போதும் ஏற்பட்டதில்லை, ஒரு பேச்சுக்கு இந்த நியாளி ஏற்பட்டால்
என்ன செய்வது என்ற கேள்விக்கு வருவோம்.
ஆய்வாளர்களுக்கு இது எளிதில் தீர்வுகாணக்கூடிய கேள்விதான். சிந்திக்கும் திறனும் மார்க்க அறிவும் அற்றவர்களுக்குத்தான் இது பெரிய விசயமாகத்தோன்றும்.
28
முடிந்து பிறை தென்பட்டுவிட்டதால் – பிறையை நாம்
பார்த்து விட்டதால் மாதம் பிறந்து விட்டது என்பதில் சந்தேகமில்லை, அதே நேரம் மாதத்தில் 29 நாட்கள் இருக்க வேண்டும் 28 நாட்கள் இருக்காது என்ற
ஹதீசையும் நாம் செயல் படுத்த வேண்டும்.
கண்ணால் பார்த்தை மறுக்கவும் கூடாது, 28
நாட்கள் ஒரு மாததிர்க்கு இருக்கவும் முடியாது, இந்த இரண்டில் எதையும் மறுக்காத வகையில் இணக்கமான ஒரு முடிவுக்கு வருவது அவசியமாகும்.
பார்க்கப்பட்ட பிரையின் அடிபடையில் மாதம் பிறந்து விட்டது என்று
முடிவு செய்யவேண்டும். முந்தைய மாதங்களில் நாம் விட்ட
பிழையின் காரணமாக 29 ஐ 28 என்று நாம் முடிவு
செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது என்று விளங்கிக்கொண்டு பின்னர் ஒரு நோன்பை கலா செய்தால்
இரண்டு ஹதீஸ்களும் நடைமுறைக்கு வந்து விடும்.
இதை பின் வரும் ஹதீஸ் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
அபுல் பக்தரீ சயீத் பின் பைர்ரோஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:-
நாங்கள் உம்ராவிர்க்காக (மக்காவிற்க்கு) புறப்பட்டுச்சென்றோம்.. (வழியில்) நாங்கள் “பத்நு நக்லா” எனுமிடத்தில் தங்கியிருந்த
பொது, பிறையை பார்க்க ஒன்று கூடினோம். அப்போது மக்களில் சிலர், அது மூன்றாவது பிறை என்று கூறினார். வேறு சிலரோ (அல்ல) அது இரண்டாவது பிறை
என்று கூறினார். பின்னர் நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை சந்தித்த பொது, “நாங்கள் பிறை பார்த்தோம். அப்போது மக்களில் சிலர்,
அது மூன்றாவது பிறை என்று கூறினார். வேறு சிலரோ (அல்ல) அது இரண்டாவது பிறை என்று கூறினார்”
என்று சொன்னோம். அதற்க்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “எந்த
இரவில் நீங்கள் பிறையை காண்டீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்க்கு
“இன்னா (மாதத்தின்) இன்னா இரவில்” என்று பதிலளித்தோம். அப்போது “பாற்பதற்காகவே பிறையை
அல்லாஹ் சிறிது நேரம் தென்பட செய்கிறான். ஆகவே அது நீங்கள் கண்ட இரவுக்குறியாதே ஆகும்”
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.
நூல்: முஸ்லிம் (1984)
இன்ஷா அல்லாஹ் எனது அடுத்த பதிவு:-
சர்வதேச பிறை சாத்தியமா? சத்தியமா இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக