OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

கீற்று வலைதளதில் உமர் கய்யானின் உளறல்கள் !!!!!!!!!


இஸ்லாம் சில குற்றங்களுக்கு தூக்குத்தண்டனை விதித்துள்ளது. அந்த தண்டனையை காண்டுமிராண்டி சட்டம் என்று விமர்சித்தவர்கள் கூட இன்றைக்கு இந்தியாவில் அரபு நாடுகள் போல் கடுமையான சட்டம் வேண்டும் என்று சொல்லும் காலகட்டத்தில் கற்றறிந்த ஜவாஹிருல்லாஹ் அவர்கள், மரணதண்டனை எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டு முழங்குகிறார். இதுபற்றி உணர்வு வார இதழும் அவரது இந்த இஸ்லாமிய விரோத செயலை விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ளது. மாமல்லபுரம் விவகாரம் உள்ளிட்ட பல விமர்சனங்களுக்கு நேரடியாக பதிலளித்த ஜவாஹிருல்லாஹ், இந்த தூக்குத்தண்டனை விசயத்தில் தனது நிலைப்பாடு சரிதான் என்பதற்கு இதுவரை நேரடியாக விளக்கமளிக்கவில்லை.


அதே நேரத்தில் உமர்கயான் என்பவர் எழுதி கீற்று இணையதளத்தில் வெளியானதை தமுமுக இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். எழுதியது உமர்கயான் ஆக இருந்தாலும் எப்போது தமுமுக இணையதளத்தில் வெளியாகிவிட்டதோ அப்போதே அது தமுமுக அல்லது ஜவாஹிருல்லாஹ்வின் ஆதரவை பெற்ற ஒன்றாகிவிடுகிறது. எனவே உமர்கயானின் கருத்து ஜவாஹிருல்லாஹ்வின் கருத்தாகவே எடுத்துக் கொண்டு அதில் உள்ள அபத்தங்களை அலசுவோம். ''அந்த மாநாடு சென்னையில் கடந்த ஜீன்மாதம் 2ம் தேதி நடந்தது. அம்மாநாட்டில் அவர் கலந்து கொள்ளும்போதே நாம் நினைத்தோம், 'கொள்கை குன்றுகளின் கடும் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும்' என்று. ஆனால் மாநாடு முடிந்து மிகத் தாமதமாக செய்தி தெரிந்து தற்போது கடும் விமர்சனம் செய்துள்ளார்கள். என்ன வேகம்….! இப்படி ஆரம்பிக்கிறார் உமர்கயான்.

ஜவாஹிருல்லாஹ்வின் தூக்குத் தண்டனை தடுமாற்றம் பற்றி உணர்வு தாமதமாக விமர்சித்துள்ளதாம். உணர்வு தாமதமாக விமரித்ததாகவே இருக்கட்டும். அதற்கு ஆகஸ்டு வந்த பின்னும் ஜவாஹிருல்லாஹ் பதில் சொல்லவில்லையே அது பற்றி உமர்கயான் கேட்பாரா? அடுத்து மரணதண்டனை கூடாது என்ற ஜவாஹிருல்லாஹ்விற்கு வக்காலத்து வாங்கும் உமர்கயான் வைக்கும் வாதங்கள்; ஸ்கார்ட்லார்ந்து போலீசுக்கு இணையான புலனாய்வு புடுங்கிகள் என்று கூறப்படும் தமிழ்நாட்டு காவல்துறையினர் உண்மையான குற்றவாளிகளை விட்டு விட்டு அப்பாவிகள் மீது பொய்வழக்குகள் போட்டு, கடுமையான சித்திரவதைகள் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் என்று ஒன்றை வாங்கியதால், செய்யாத குற்றத்திற்காக இன்று எத்தனை பேர் சிறைகளில் வாடி வருகிறார்கள் மதுரை பாண்டியம்மாள் கொலை வழக்கில் காவல்துறையின் அலட்சியம். காணமல் போன சுஜாதா கொலைவழக்கில் காவல்துறையின் அலட்சியம். உமர்கயான் மேற்கோள் காட்டியுள்ள இந்த மூன்று செய்திகளும் காவல்துறையின் அலட்சியத்தைக் காட்டுகிறது என்றாலும், எல்லாத் துறைகளிலும் தவறு வருவதைப் போல் காவல்துறையிலும் தவறு ஏற்படும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். காவல்துறையின் சில குறைகளை சுட்டிக்காட்டும் உமர்கயான் எத்தனையோ வழக்குகளில் உண்மைக் குற்றவாளிகளை காவல்துறை கூண்டிலேற்றி தண்டனை பெற்றுத் தந்ததை மறக்கலாமா? மேலும் அப்பாவிகள் காவல்துறையால் துன்புறுத்தப்பட்டு குற்றவாளிகள் ஆக்கப்படுகிறார்கள் என்றால் எல்லா வழக்கிலும் அப்பாவிகள் தான் சிக்க வைக்கப்படுகிறார்கள் என்று உமர்கயான் சொல்கிறாரா?
ஒரு சில வழக்குகளில் காவல்துறை இதுபோன்று நடந்திருக்கலாம் அதற்காக ஒட்டுமொத்தமாக காவல்துறை எதோ உண்மைக் குற்றவாளிகளை தப்பிக்க விட்டு விட்டு அப்பாவிகளை தேடித்தேடி குற்றவாளிகளாக ஆக்குவது போல் சொல்வது சரியல்ல. உமர்கயான் சொல்வது போல் சில வழக்குகளில் காவல்துறையின் விசாரணை சரியில்லை என்றால், சில வழக்குகளில் அப்பாவிகள் சிக்க வைக்கப் படுகிறார்கள் என்றால் சம்மந்தப்பட்ட அந்த வழக்கில் உள்ள குறைகளை களைய உமர்கயான் ஜவாஹிருல்லாஹ் போன்றோர் போராடினால் அதை வரவேற்கலாம். அதற்காக சில குறைகள் இருக்கிறது என்பதற்காக மரணதண்டனையே கூடாது என்பதுதான் அறிவுடமையா?
மரண தண்டனையை எதிர் நோக்கி உள்ள அப்சல் குரு வழக்கு. அப்சல் குரு வழக்கில் உமர்கயான் சொல்வதுபோல ஆதாரங்களின் அடிப்படையில் இல்லாமல் கூட்டு மனச்சாட்சி அடிப்படையில் அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது உண்மைதான். அதற்கு உமர்கயான் ஜவாஹிருல்லாஹ் போன்றோர் இந்த அநீதிக் கெதிராக செய்தது என்ன? களமிறங்கி மக்களைத் திரட்டி போராடி இந்த தீர்ப்பை மாற்ற முயற்சித்தால் வரவேற்கலாம். அதை விட்டுவிட்டு அப்சலுக்கு அநியாயமான தூக்குத் தண்டனை என்பதால் இனி எவனுக்குமே தூக்குத் தண்டனை விதிக்ககூடாது என்பதுதான் அறிவுடமையா?
ராசீவ் கொலை வழக்கு. 20 ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கும் மூன்று தூக்குத்தண்டனை கைதிகள். ராஜீவ் கொலைவழக்கில் சம்மந்தப்பட்ட இந்த மூவரும் போலீசால் துன்புறுத்தப்பட்டு குற்றவாளிகளாக ஆக்கப்பட்டவர்கள் என்று உமர்கயான் கூறுகிறார். அவரது ஆசைப்படியே வைத்துக்கொள்வோம். இந்த அப்பாவி{!}கள் மீதான தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்று எப்போது உங்களைப் போன்றவர்கள் குதிக்க கிளம்பினீர்கள்? ஜனாதிபதிஇடம் வழங்கப்பட்ட கருணை மனு தள்ளுபடி ஆன பின் தானே. இந்த மூவரும் அப்பாவிகள் என்ற உமர்கயான் ஜவாஹிருல்லாஹ் போன்றோர் உண்மையாளர்கள் என்றால் இருபது ஆண்டுகளில் இந்த அப்பாவிகள் விடுதலை பற்றி நடத்திய நீதிமன்ற முற்றுகை போராட்டங்கள் எத்தனை என்று சொல்வார்களா?
ஒரு அப்பாவிக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது என்றால், அவர் குற்றவாளி அல்ல என்பதற்கான ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் போராடலாமே தவிர அதற்காக தூக்குத் தண்டனையே என்பது தான் அறிவுடமையா? இந்திய குற்றவியல் நடைமுறைகளும், நீதிமன்றங்களும் அளிக்கும் முரண்பட்ட தீர்ப்புகள். இந்திய நீதிமன்றங்களில் உமர்கயான் சொல்வது போன்ற முரண்பட்ட தீர்ப்புகள் வழங்கப்படுவது உண்மைதான். அதற்கு காரணம் நமது நாட்டின் சட்டத்தில் உள்ள ஓட்டைகள். அந்த ஓட்டையை அடைக்க உமர்கயான் ஜவாஹிருலலாஹ் போன்றோர் போராடினால் வரவேற்கலாம். ஆனால் ஓட்டை வழியாக சிறிது நீர் வெளியேறுவதால் ஒட்டுமொத்த பாதுகாப்பு சுவரையும் உடைப்பேன் என்று கிளம்புவதுதான் அறிவுடமையா?
அடுத்து இந்தியாவை விட்டு விட்டு உலக அளவில் தாவுகிறார் உமர்கயான் உலகில் எங்கு நீதியான ஆட்சி, நீதமான ஆட்சி நடைபெறுகிறது? இறை சட்டங்களை பேண‌க்கூடிய ஆட்சி நடக்கும் ஒரு நாட்டை உங்களால் காண்பிக்க முடியுமா..? என்று கேட்கிறார். இறைச் சட்டங்கள் முழுமையாக எல்லா விசயங்களிலும் இல்லாவிட்டாலும் குற்றவியலில் இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்தும் நாடு சவூதி என்பது உமர்கயானுக்கு தெரியாதா? உடனே சொல்லுவார். அங்கு நீதியில் ஓட்டை இருக்கிறது என்று. ஒரு விஷயத்தை உமர்கயான் மறந்து விட்டார். இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை அமுல்படுத்தும் சவூதி அதிகாரிகளும் மனிதர்கள் தானே தவிர மலக்குகள் அல்ல. எனவே சிற்சில குறைகள் ஏற்படுவது இயற்கை. அதற்காக மரணதண்டனையே கூடாது என்பது அறிவுடமையா?
அய்யா கொள்கைக் குன்றுகளா..! நாங்கள் தெரியாமல்தான் கேட்கிறோம்... இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி முறையா நடைபெறுகிறது? அப்படியே இஸ்லாமிய சட்டங்களை இந்திய நீதிமன்றங்கள் ஏற்று அதன்படியா நீதி பரிபாலனம் செய்கிறார்கள்? அவர்கள் கொடுக்கும் மரணதண்டனை எப்படி சரியாக இருக்கும் என்று எண்னுகிறீர்கள்? இங்கிருக்கும் காவல்துறையினர், அப்படியே இஸ்லாமிய சட்டங்களை ஏற்று இறை அச்சத்துடன் நாளை மறுமை நாளில் கேள்வி கணக்கு உள்ளது, அதனால் பொய்க் கேசு போடக் கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்ட உத்தமர்களா..? இவர்கள் போடும் வழக்கிற்கு எப்படி மரணதண்டனை விதிக்க..? என்று கேட்கிறார் உமர்கயான்.
இதற்கு முந்தைய பாராவில் தான், உலகில் எங்கு நீதியான ஆட்சி, நீதமான ஆட்சி நடைபெறுகிறது? இறை சட்டங்களை பேண‌க்கூடிய ஆட்சி நடக்கும் ஒரு நாட்டை உங்களால் காண்பிக்க முடியுமா..? என்று கேட்டார். அவரது வாதப்படி இந்தியாவில் மட்டுமல்ல; உலகில் எந்த மூலையிலும் மரணதண்டனை கூடாது என்று கூறவேண்டி வரும் என்பதை மறந்து விட்டார். சுருங்கச் சொன்னால் உமர்கயானின் அளவுகோல்படி சட்டத்தில் சில குறைகள் இருக்கிறது. அதை அமுல்படுத்துபவர்களிடம் குறைபாடு இருக்கிறது என்பதற்காக மரணதண்டனை கூடாது என்பது உமர்கயான் மற்றும் ஜவாஹிருல்லாஹ்வின் கருத்து என்றால் இந்தியா மட்டுமல்ல உலகில் எந்த மூலையிலும் எந்த குற்றவாளி மீதும் ஒரு பெட்டிகேஸ் கூட போடமுடியாது என்பதை தெரிந்து கொள்ளட்டும். ஏனென்றால் மரணதண்டனை கைதிகளை கையாளும் அதே சட்டம் தான் அதே அதிகாரிகள் தான் திருட்டு, மோசடி, வழிப்பறி, கற்பழிப்பு, அபகரிப்பு, உள்ளிட்ட சிவில் கிரிமினல் வழக்குகளை கையாள்கிறார்கள். எனவே மரணதண்டனை விசயத்தில் சட்டமும் அதிகாரிகளும் அப்பாவிகளை தண்டிக்கிறார்கள் என்பது உமர்கயான் ஜவாஹிருல்லாஹ்வின் கருத்து என்றால் உலகில் எந்த மூலையிலும் எந்த குற்றத்திற்கும் தண்டனை விதிக்கக் கூடாது என்று போராடுவார்களா? அல்லது மரணதண்டனையை மட்டும் எதிர்ப்போம் மற்ற தண்டனைகளை வரவேற்போம் என்றால் அதில் மட்டும் இந்த சட்டமும் இந்த அதிகாரிகளும் யோக்கியமாக நடந்து கொள்வார்கள் என்று நீங்கள் கருதுவதற்கான சான்று என்ன?
இறுதியாக உமர்கயானுக்கும் அவரது கருத்தை வழிமொழிந்த ஜவாஹிருல்லாஹ்வுக்கும் நாம் கேட்பது; அப்பாவிகள் குற்றவாளிகள் ஆக்கப்படுகிறார்கள் என்பது இந்தியாவில் மட்டுமல்ல; உலக அளவில் ஆங்காங்கே உள்ளதுதானே! அவ்வாறென்றால் உலக அளவில் மரணதண்டனை கூடாது என்பதுதான் உங்கள் கொள்கையா? மரணதண்டனை கைதிகளை கையாளும் அதே சட்டமும் அதே அதிகாரிகளும் தானே மற்ற தண்டனை விவகாரங்களையும் கையாள்கிறார்கள். எனவே மரணதண்டனையில் வரும் தவறு மற்ற தண்டனைகளிலும் அவர்களுக்கு வரும் என்பதால் இனி உலக அளவில் எவனுக்கும் எந்த தண்டனையும் விதிக்கக் கூடாது என்பது தான் உங்கள் கொள்கையா?
1. ஜவாஹிருல்லாஹ் வீட்டிலோ உமர் கயான் வீட்டிலோ ஒரு கொலை நடந்தால் குறையுள்ள இந்த சட்டத்தில் குறையுள்ள இந்த அதிகாரிகளிடத்தில் நீதி கேட்டு செல்ல மாட்டார்களா?
2. ஜவாஹிருல்லாஹ் வீட்டிலோ உமர் கயான் வீட்டிலோ திருட்டு- கற்பழிப்பு நடந்தால் குறையுள்ள இந்த சட்டத்தில் குறையுள்ள இந்த அதிகாரிகளிடத்தில் நீதி கேட்டு செல்ல மாட்டார்களா?
3. ஜவாஹிருல்லாஹ்விடமோ உமர் கயானிடமோ வழிப்பறி நடந்தால் குறையுள்ள இந்த சட்டத்தில் குறையுள்ள இந்த அதிகாரிகளிடத்தில் நீதி கேட்டு செல்ல மாட்டார்களா? ஜவாஹிருல்லாஹ் மீதோ உமர் கயான் மீதோ தாக்குதல் நடந்தால் குறையுள்ள இந்த சட்டத்தில் குறையுள்ள இந்த அதிகாரிகளிடத்தில் நீதி கேட்டு செல்ல மாட்டார்களா?
4. ஜவாஹிருல்லாஹ் மீதோ உமர் கயான் மீதோ எதோ குறையுள்ள இந்த அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, குறையுள்ள இந்த சட்டம் தணடனை விதித்தால் ஏற்க மாட்டேன் என்று சொல்வார்களா?
5. குறையுள்ள இந்த நீதிமன்றத்தில் பாபர் மஸ்ஜித் தீர்ப்பில் நியாயம் கேட்டு ஜவாஹிருல்லாஹ் நிற்கிறாரே அது ஏன்?
இவைகளுக்கெல்லாம் ஜவாஹிருல்லாஹ்வோ, அல்லது அவருக்கு வக்காலத்து வாங்கும் உமர்கயானோ பதில் சொல்லவேண்டும். அதோடு மிக முக்கியமாக எக்காலத்திலும் எங்கோ ஒரு மூலையில் உள்ள மக்களுக்காவது பொருந்தக்கூடிய வேதமான குர்ஆனின் குற்றவியல் சட்டங்கள் இன்றைய காலத்தில் உலகின் எந்த மூலையிலும் உள்ள மக்களாலும் பின்பற்ற முடியாது. எனவே குர்ஆன் இறைவேதமல்ல என்று துணிவிருந்தால் அறிவித்து விட்டு மரணதண்டனை உள்ளிட்ட இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக இந்த இஸ்லாமிய போராளிகள்{!} போராடட்டும். இந்த சமுதாயம் இவர்களை துச்சமென தூக்கிவீசும் இன்ஷா அல்லாஹ்.


//நீதியான சட்டம் இல்லா நாட்டில் மரணதண்டனை ஒரு சார்பானதே!
அது உழைக்கும் மக்களையும், போராடும் போராளிகளையும் ஒழித்துக்கட்டவே என்பதைப் புரிந்து கொள்வோம்.
அநீதியான முறையிலான மரண தண்டனையை மார்க்கத்தின் பெயரால் ஆதரிக்கும் குழப்பவாதிகளை இனம் காண்போம்.//
தெருநாய்கள் முல்லுக்கு அலைவது போன்று, இன்று தெருக்களில் ஓட்டுக்கு அலையும் நீங்கள்  ஒரு இஸ்லாமிய பெயர்தாங்கி அமைப்பீர்க்கு வக்காளத்து வாங்கு நீங்கள் போராளியா? நீங்கள் உழைக்கும் மக்களா? மார்கத்தின் ஆணிவேறான தௌகீத்தான் எங்களுக்கு தடை என்று கூறிய நயவஞ்ச்கர்களுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் குழப்பவாதியா? இல்லை இஸ்லாத்தை அதன் தூயவடிவில் பின்பற்றும் கொள்கை குன்றாகிய நாங்கள் குழப்ப வாதியா?
சிந்திக்கும் திறன் உங்களிடம் இருக்கும் என்று நம்புகின்றேன். 

கருத்துகள் இல்லை: