OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

பிறை விசயத்தில் விளையாடும் சைத்தான்கள் – பகுதி 1




பிறை விஷயத்தில் ஏராலாமான கருத்து வேறுபாட்டுகள் சமுதாயத்தில் நிலவுகின்றன வேறு எந்த ஒரு மார்க்க சட்டத்திலும் இல்லாத அளவிர்க்கு வேறுபாடுகள் கானபடுகின்றன. ஒவ்வொருவரும் தான் மனதுக்கு தெரிந்ததை மக்களைடம் சொல்லி குழப்பி வருகின்றனர். தன்னுடைய அறிவுக்கு பாடுவதை எல்லாம் ஏர்க்காமல் நபி மொழியில் இருப்பதை ஒருவர் நம்பினால் அவர் குழப்பம் அடைய மாட்டார். தற்போது சில புதிதாக ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
 அது என்னவென்றால், ஒரு சாரார் ஹிஜ்ரா நாட்காட்டியில் இனி வரும் 30 ஆண்டுகளுக்கு பிறையை கணக்கீட்டு வைத்துவிட்டார்களாம் அதனடிபடையில் இனி இவர்கள் நோன்பு, பெருநாள் போன்றவைகளை கடைபிடிப்பார்களாம், இதை இவர்கள் ஆரம்பித்தும் விட்டார்கள், அதனாலதான் கடந்த சில வருடங்களாக மொன்று நான்கு பெருநாட்கள் உருவாகி மக்களை சீர்குலைத்து வருகின்றது.


இந்த விஷயத்தில் தௌஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு:-
ரமளான் மாதத்தின் துவக்கத்தை முடிவு செய்ய ஷாபான் மாதத்தின் 30வது இரவில் பிறை பார்ப்போம், ஆண்ட்ரூ பிறை தென்பட்டுவிட்டால் ஷாபான் மாதத்தை 29 நாட்களாக கருதி அப்போதிருந்தே ரமளான் மாதம் துவங்கிவிடும். ஆண்ட்ரூ பிறை தென் படாவிட்டால் அண்டைய நாளை ஷாபான் மாதத்தின் 30வது நாளாக கஅணக்கிட்டு அதற்க்கு மருநாளிலிருந்து ரமளான் மாதம் தொடங்கும்.

ஒரு சாராரின் நிலைப்பாடு:-
ஷாபான் மாதத்தின் 30 வது இரவில் பிறை தென்படாவிட்டால் ஷாபான் மாதத்தை 29 நாட்களாக முடிவு செய்ய வேண்டும், அன்றிலிருந்து ரமளான் மாதத்தை துவங்கிவிட வேண்டும், இதுதான் ஒரு சாராரின் நிலைப்பாடு.

இந்த நிலைப்பாடு சரியா? இல்லை சாத்தான்களின் நிலைபாடா?
பிறை தொடர்பாக வந்துள்ள அனைத்து ஹதீஸ்களையும் கவனத்தில் கொண்டால் இந்த கருத்து முற்றிலும் சாத்தான்களின் கருத்து என்பதை அறியலாம். இந்த கட்டுரையில் இவர்கள் வைக்கும் ஒவ்வொரு வாதங்களுக்கும் ஹதீஸ் ஆதாரங்களுடன் பதில் தருகிறோம்.
இப்படிபட்ட தவறான கருத்தை வைப்பவர்கள் மூவத்தா, முஸ்லிம் ஆகிய இரு நூற்களை மட்டும் (அதுவும் மூலத்தை படிக்காமல் மொழி பெயர்ப்பை மட்டும்) படித்துவிட்டு அரைகுறையாக ஆய்வு செய்துள்ளனர். மற்ற ஹதீஸ் நூற்களை தொட்டுக்கூட பார்க்கவில்லை என்பது தெள்ள தெளிவாக தெரிகின்றது, இவ்வாறு செய்யப்பட்ட ஆய்வு எப்படி சரியான ஆய்வாக இருக்க முடியும்?

சாத்தான்களின் புரிதல்;-
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிறையை நீங்கள் காணாதவரை நோன்பு நோர்க்க வேண்டாம். பிறையை நீங்கள் காணாதவரை நோன்பை விட வேண்டாம். உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால் அதை கணித்துக்கொள்ளுங்க.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்:- மாலிக் (557)

இந்த ஹதீஸில் கணித்து கொள்ளுங்கள் என்று நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் ஃபக்தூறு லஹூ என்ற அரபு சொல் இடம்பெற்றுள்ளது. இந்த வார்த்தைக்கு இவர்கள் 29 நாட்களாக குறைத்து பூர்த்தியாக்குங்கள் என்று பொருள் செய்கின்றனர். கதர என்ற சொல்லுக்கு குறைத்தல் என அர்த்தம் இருக்கின்றது என்று கூறி இதற்க்கு ஆதாராமாக சில குர்ஆன் வசனங்களையும் மேற்கோள் காட்டுகின்றனர்.

நமது பதில்:-
முதலில் 29 நாட்களாக என்ற வாசகம் இந்த ஹதீஸில் இல்லவே இல்லை. கதற என்ற வார்த்தைக்கு குறைத்தல் என்ற பொருள் இருந்தாலும், குறைத்து பூர்த்தியாக்குங்கள் என்று இவர்கள் கூறும் அர்த்தம் அறவே இல்லை. குறைத்தல் என்ற பொருள் மட்டும்தான் இருக்கிறது, பூர்த்தியாக்குங்கள் என்பது இவர்களாகவே சேர்த்துக்கொண்டது. ஒரு வார்த்தைக்கு பல பொருட்க்கல் இருந்தாலும் குறிப்பிட்ட இடத்தில் அதன் பொருள் என்ன என்பதை இடம் பொருள் எவளை வைத்துதான் முடிவு செய்ய வேண்டும்.

இதற்க்கு ஆதராமாக அப்துல்லா பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இதே அறிவிப்பு முஸ்லிமில் 1796 வது ஹதீசாக இடம்பெற்றுள்ளது
அதில் தெளிவாக உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால் முப்பதாக கணக்கிட்டுக்கொள்ளுங்கள்என்று.
இந்த அறிவிப்பிலும் ஃபக்தூறு லஹூ என்ற சொல்தான் உள்ளது. இச்சொளுடன் முப்பது நாட்களாக என்ற சொல் இணைத்து கூறப்படுகின்றது. இவர்கள் சொல்லக்கூடியவாறு பொருள் செய்வதாக இருந்தால் முப்பது நாட்களாக குறைத்துக்கொள்ளுங்கள் என்று பொருள் செய்யவேண்டும். அப்படி பொருள் செய்தால் அது மூலைக்கோளாறு உள்ளவர்களின் உலரளாகத்தான் இருக்கும்.
இது மட்டுமின்றி நபித்தோழர் அபூஹுரைரா(ரலி) அவர்கள் வழியாக வந்துள்ள அறிவிப்பில் ஃபக்தூறு என்ற சொல்லுக்கு பகரமாக அக்மிலு இந்தத்த ஷாபான் சலாசீன” (ஷாபான் மாதத்தின் எண்ணிக்கையை முப்பதாக முழுமை செய்யுங்கள்) என்று தெள்ள தெளிவாக கூறப்பட்டுள்ளது.

மேலும் சில ஹதீஸ் ஆதராங்கள்:-
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:-
பிறையை பார்த்து நோன்பு வையுங்கள்; பிறையை பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைபடுத்துங்கள்!
அறிவிப்பவர்:- அபூஹுரைரா (ரலி), நூல்:- புகாரி(1019), முஸ்லிம் (1810), திர்மிதி (624), நஸாயீ (2087), அஹ்மத் (14001), அபூதாவூத் (1980)

பிறை தென்படாவிட்டால் முப்பது நாட்களாக கணக்கிட வேண்டும் என்று நபி அவர்கள் கூறியதாக ஜாபிர்(ரலி), ஆயிஷா (ரலி), அப்துர் ரஹ்மான் பின்  சைத்(ரலி), இப்ன் அப்பாஸ்(ரலி), அபூஹுரைரா(ரலி) மற்றும் இப்ன் உமர்(ரலி) ஆகிய ஏராளமான நபீதோழர்கள் அறிவித்துள்ளார்கள்.
எனவே முப்பதாக கணக்கிடக்கூடாது 29 நாட்களாகதான் கணக்கிட வேண்டும் என்று கூறுவது நிச்சயம் சாத்தான்களின் குரலே ஒழியே வேறொன்றுமில்லை,. மேலும் இது நபிமொழிகளுக்கு எதிரான கருத்தாகும்.
அறிவீனர்கள் வாய்க்கு வந்தவாறு பத்த்குவா கொடுத்து தானும் கேடு மக்களையும் கெடுக்கிறார்கள், இது போன்று சாத்தான்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கத்தான் நபியவர்கள் முனறிவிப்பு செய்தார்கள்.

தொடரும்....................!!!!!!!!!!!!!!!!!!! Thanks to www.onlinepj.com

கருத்துகள் இல்லை: