OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 21 டிசம்பர், 2010

வாங்க ஆளில்லை... நானோ உற்பத்தி குறைக்கப்பட்டது!





டெல்லி: ரூ 1 லட்சம் கார் என்று அறிமுகப்படுத்தப்பட்டு, இப்போது ரூ 2 லட்சம் விலையில் விற்பனையாகிவரும் டாடா நானோ காருக்கு வாடிக்கையாளர்களிடம் மவுசு குறைந்துவிட்டது.


இதனால் வாங்க ஆளில்லாத நிலை உருவாகியுள்ளது. எனவே நானோ உற்பத்தியை கணிசமாகக் குறைத்துள்ளது டாடா மோட்டார்ஸ்.

குஜராத் மாநிலத்தில் உற்பத்தியாகும் நானோ காரை வாங்க ஆரம்பத்தில் மக்களிடையே பெரிய ஆர்வம் ஏற்பட்டது. ஏராளமானோர் முன்கூட்டியே பதிவு செய்து காரை வாங்கினார்கள். ஆனால் கார் புழக்கத்திற்கு வந்ததற்கு பிறகு இந்த கார் மீது மக்களுக்கு இருந்த மோகம் குறைந்துவிட்டது.


முதலில் நானோ கார் ரூ.1 லட்சம் என்று அறிவித் தாலும் பின்னர் விலை உயர்த்தப்பட்டது. இப்போது ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 88 ஆயிரம் விலையில் விற்கப்படுகிறது.

மேலும் நானோ ஒரு பாதுகாப்பற்ற கார் என்ற எண்ணம் வாடிக்கையாளர்களிடம் உருவாகியுள்ளது. நானோவில் தொடர்ந்து ஏற்பட்ட 6 தீ விபத்துக்கள் மக்களை அலற வைத்துள்ளது. இந்த 6 விபத்துக்களிலும் சில நிமிடங்களில் மொத்த காரும் எரிந்து பஸ்பமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

விலை உயர்வு மற்றும் பாதுகாப்பு [^] குறைபாடு காரணங்களால் நானோ காரை வாங்க மக்கள் [^] அதிக ஆர்வம் காட்டவில்லை. இதனால் விற்பனை நிறுவனங்களிடம் இருந்து குறைந்த அளவு ஆர்டர்களே வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் மொத்தமே 509 கார்கள்தான் விற்பனையாகி உள்ளன.

எனவே உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள் விற்கப்படாமல் தொழிற்சாலையில் முடங்கி கிடக்கின்றன. குஜராத் [^] தில் சனாந்த் தொழிற்சாலை வளாகத்தில் மட்டும் 7 ஆயிரம் கார்களை நிறுத்தி வைத்துள்ளனர்.

கார்கள் விற்பனை குறைந்துவிட்டதால் உற்பத்தி யையும் பெருமளவு குறைத்து விட்டார்கள். முன்பு மாதத்துக்கு 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் கார்கள் வரை உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இப்போது குறைந்த அளவு கார்களே உற்பத்தி செய்யப்படுவதாக கார் தொழிற்சாலை வட்டா ரங்கள் தெரிவித்தன.

கார் விற்பனை குறைந்துவிட்டதால் புதிய திட்டங்களை அறிவித்து கார் விற்பனையை அதிகரிக்க டாடா நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது.

இது பற்றி டாடா நிறுவன வட்டாரங்கள் கூறும் போது ஏற்கனவே நானோ கார்களை வாங்கியவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். கார் விற்பனை கூடங்களை அதிகரிக்க உள்ளோம். இதன் மூலம் நானோ கார் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று டாடா மோட்டார்ஸ் கூறியுள்ளது. விற்பனையைக் கூட்ட புதுப்புது டிவி விளம்பரங்களையும் தயாரித்துள்ளது.

கருத்துகள் இல்லை: