OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 21 டிசம்பர், 2010

தொலைகாட்சிபெட்டியும் தொலையாத முன்னேற்றமும்.

கடந்த இரண்டு வருடங்களாக பார்தீங்கன்னா, நாம் காணும் தொலைகாட்சியின் மோகம் நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகிறது. உதாரணமாக Black & White, Color, LCD, PLASMA, HD, Full HD, LED and 3D. இப்படி படி படியாக தொழில்நுட்ப அடிப்படையில் இதன் செயல் பாடுகள் அதிகரித்து கொண்டே  வருகிறது. இதற்க்கு முக்கிய காரணம் மக்களின் ரசனையின் மற்றம் தான். 

HD (High Definition) தொலைகட்சியினை பற்றி பாப்போம், இப்பொழுது பெரும்பாலும், இந்த வகையனா தொலைகாட்சிதான் மக்களை பெரிதும் பாதித்து இருக்கிறது, அப்படி என்னதான் இந்த HD என்கிறீர்களா? இதில் நீங்கள் ஒரு காட்சியை   பார்த்தால்  அது உங்களுக்கு மிகவும் துல்லியமாக காட்ட கூடிய தொழினுட்பத்தின் பெயர்தான் இந்த HD . இதிலே இரண்டு வகை உண்டு, ஒன்று HD மற்றொன்று Full HD . அப்படி என்ன பெரிய வித்தியாசம் என்று பார்த்தால், HD என்பதில், 1080p புள்ளியம் மற்றும் பிளாஸ்மா வில் இருப்பது போன்று 1024X768 புள்ளியம் அல்லது 1366X768 புள்ளியம், மேலும் ஒரு HD tuner  தொழினுட்பம் பொருத்தபட்டிருக்கும். Full HD என்பதில் அப்படி அல்ல, இதுதான் மிக உயர் ரக வண்ணங்களை கொண்டதாகும், அதாவது அதிகபட்சமாக Blue Ray படங்களில் பயன்படுத்த கூடிய 1920 X1080 புள்ளியம் அதில் பயன் படுத்த படுகிறது. யாருக்கு தெரியும், இதை விட கூடுதாலாக இனி வர கூடும்,

இதுதான் இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாடு, உங்களுக்கு முழுமையான ஒரு HD வேண்டுமென்றால் என்னுடைய ஆலோசனை full HD தான். என்ன இது கொஞ்சம் விலை அதிகம். அதுமட்டுமில்லை, இப்போ பார்த்தா, எல்லா ஒளிபரப்பு நிறுவனங்களும் தங்களுடைய ஒளிபரப்பை HD யில் துவங்கி விட்டன உதாரணமாக SUN டைரக்ட், டிஷ் டிவி, VIDECON இது போல நிறைய நிறுவனங்கள் . இதன் தாக்கம் மக்களை பெரிதும் சென்றடைதுள்ளது, அந்த மாதிரியான ஒளிபரப்பை அதன் முழு பரிமாணத்துடன் காண மக்கள் கண்டிப்பாக இந்த தொழிநுட்பத்தில் வந்தாக வேண்டும், அப்படி இல்லையென்றால், அதற்காக அவர் செலவழிக்கும் பணம் வீணே. 




நிலைமை இப்படி இருக்க, இதை பற்றி நம்ம GULF LG Electronics நிறுவன முதன்மையாளர் H .S . Paik   என்ன சொல்லுகிறார் என்று பாப்போம், அதாவது என்னதான் full HDTV வளர்ந்து வந்தாலும், விலை மற்றும் அது கிடைக்ககூடிய கால அளவு இவற்றை பார்த்தால், HDTV தான் விற்பனையில் முன்னிலை வகிக்கின்றது  என்கிறார். அதுவும் சதவிகித அடிப்படையில், 61 .1 சதவிகிதம் HDTV தான் விற்பனையில் உள்ளதாம்,  இதில் full HDTV வெறும் 38 .9 சதவிகிதம் தானாம், மேலும் அவர் கூறுகிறார், அடுத்த ஆண்டிலிருந்து இந்த full HDTV யை முனேற்ற கடுமையாக உழைத்து வருகிறார்களாம் .

நம்ம ஈரோஸ் குரூப் தலைவர் நிரஞ்சன் கிட்வனி என்ன சொல்லுகிறார் தெரியுமா  இந்த HDTV ஆரம்பிக்கப்பட்ட 2006 முதல் 2009 வரை இதை பார்க்க கூடிய மக்களின் சதவிகிதம் வெறும் 5 .8 தான் என்கிறார் உலகம் முழுதும். இது கண்டிப்பாக 2014 -இல்  21 சதவிகிதமாக உயரும் என்று சவால் விடுகிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.

3D டிவி மற்றும் LED ' s
ஒரு காலத்தில் மைடியர் குட்டிசாத்தான் எனும்  படத்தை நாம் 3D கண்ணாடி மூலம் பார்த்து சந்தோசபட்டோம், அதெல்லாம் ஒரு கனவு போல அப்பொழுது. என்னறைக்கு அவதார் திரைப்படம் வந்ததோ மக்களிடம் 3D மோகமும் தொற்றி கொண்டது மறுக்க முடியாத உண்மை.
அதனடிப்படையில் இப்பொழுது இந்த வகையான தொலைகாட்சிபெட்டியும் விற்பனை சந்தையில் பெரும் பதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. திரைப்படங்கள் மட்டும்மில்லை, சோனி நிறுவனத்தில் வீடியோ கேம்ஸ் கூட இப்பொழுது 3D தொழிநுட்பத்தில் வந்து விட்டது மிகவும் விந்தையாக உள்ளது.  இந்த மாதிரியான தொழினுட்பங்கள் அதிகம் விலை போவது அமீரகத்தில் தான் என்று ஒரு குறிப்பு சொல்லுகிறது. 

இன்னும் எதிர்காலத்தில் LG நிறுவனத்தின் கவனம் முழுவதும் ஸ்மார்ட் மற்றும் நானோ டிவி இல் தான் இருக்க போகின்றதாம். 
இதை பற்றிய செய்திகள் வரகூடிய காலங்களில் எனது பதிவுகளில்.

கருத்துகள் இல்லை: