OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 27 டிசம்பர், 2010

“பெண் பாதுகாகப்பட வேண்டியவள்"

இஸ்லாம் காட்டும்நெறிமுறை-2


இரண்டாவதாக:-


 
பார்வையை தாழ்த்திக் கொள்ளுங்கள்
ﭧ ﭨ ﭽ وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ
அவர்கள் தங்கள் பார்வையை கீழ்நோக்கியே வைத்து, கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும்.’ (அல்குர்ஆன் 24:31)என்ற இறைவசனத்தின் மூலம் உத்தரவிட்டது.
பாவங்களில் பெரும்பாலனவை பார்வையாலேயே நிகழ்கின்றன. தீய பார்வையால் தீய உணர்வுகள் ஏற்பட்டு பாவமான காரியங்களில் ஈடுபடுகிறார்கள். அந்த தீய உணர்வே ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளவேபார்வையை தாழ்த்தி கற்பைக் காத்துக் கொள்ளவும்என அருள்மறை சுறுகிறது. கண்களினால் விபரீதங்கள் ஏற்படும் என்பதை முன்னெச்சரிக்கை செய்வதற்காகவே, ‘கண்களும் விபச்சாரம் செய்கின்றன. கண்களின் விபச்சாரம் பார்வைஎன்றார்கள் கருணை நபி(ஸல்) அவர்கள். ஜரீர் இப்னு அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம், திடீரெனப்படும் பார்வையைப் பற்றிக் கேட்டபோது, ‘உம் பார்வையை (உடனேயே) திருப்பிக் கொள்ளும்என சட்டெனப் பதில் சொன்னார்கள் திடீர் பார்வை தீய எண்ணம் எதுவுமின்றி ஏற்படுவதால் குற்றமில்லை. அதைத் தொடர்ந்து மீண்டும் பார்க்கும் பார்வைதான் பாவமானது என்றார்கள்.
மனிதன் தான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பொறுப்பேற்கிறான். நிச்சயமாக காது, கண், இருதயம் ஆகிய ஒவ்வொன்றுமே (அதனதன் செயலைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும் (அல்குர்ஆன் 17:36) என்ற இறைவசனம் இங்கு சிந்திக்க தக்கதாகும். பர்தா (ஹிஜாப்)வுடைய ஆயத் அருளப்பட்ட வேளை, ஒரு நாள் நபி நாயகம்(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியரான உம்முஸல்மா(ரலி), மைமூனா(ரலி) ஆகியோருடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே கண் தெரியாத அப்துல்லாஹ் இப்னு உம்முமக்தும் வந்தார்கள். உடனே அவ்விருவரையும் வீட்டினுள் செல்லுமாறு உத்தரவிட்டார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். அவருக்குத்தான் கண் தெரியாதே! எங்களைப் பார்க்கவும் தெரிந்து கொள்ளவும் முடியாதே! யாரஸுலல்லாஹ்!எனக் கேட்டார்கள் மனைவியர் இருவரும். சரிதான்,நீங்களிருவரும் குருடர்கள் இல்லையல்லவா? நீங்கள் அவரைப் பார்க்க மாட்டீர்களா? எனத் திருப்பிக் கேட்டதும் உள்ளே சென்று மறைந்து கொண்டார்கள். (திர்மிதீ, நஸயீ,அபூதாவூது)
இந்த உத்தரவின் மூலம் பெண்கள் அந்நிய ஆண்களைப் பார்ப்பது கூடாததைப் போலவே, ஆண்களும் அந்நியப் பெண்களைப் பார்ப்பது கூடாது என இஸ்லாம் தடைவிதிக்கிறது. இருவரது பார்வையையும் சைத்தான் தன் வலையில் வீழ்த்தப் போதுமானவன். எனவே, தீய உணர்வுகளை ஏற்படுத்தும் பார்வையிலிருந்து தற்காத்துக் கொள்வது ஒவ்வொருவரது கடமையாகும். 





Thanks

இஸ்லாமிய எழுச்சி

கருத்துகள் இல்லை: