OnlinePJ

Thanks for Visiting my Page

சனி, 11 டிசம்பர், 2010

கேட்காத சப்தங்கள்

பூ பூக்கும் அந்த நொடியில் பலமான ஓசை எழுவதுண்டாம். எங்கோ படித்த நியாபகம். ஆனால் நம்மால் தான் அதை கேட்க முடிவதில்லை. காரணம் நம் காதுகளால் அந்த அலைவரிசை கூடின ஒலி அலைகளை கிரகிக்க முடிவதில்லை. பொதுவாக 20 Hz முதல் 20 kHz வரையேயான ஒலிகளையே நம் சாதாரண காதுகளால் கேட்க முடியும். அதனால் பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை என எதுகை மோனையோடு பாடி விட்டு அமைதியாகி விடவேண்டியது தான்.

சிறுசுகளுக்கும் பொடிசுகளுக்கும் கேட்கும் சத்தங்கள் கூட நம்மைப் போன்ற முப்பது அல்லது நாற்பது வயதான பெரியவர்களுக்கு கேட்பதில்லை. உதாரணத்துக்கு 15kHzக்கும் மேல் வரும் சத்தத்தை 25 வயதுக்கு மேற்பட்டவர்களால் கேட்க முடியாதாம். கீழ்கண்ட MP3-யை ஓட்டிப் பாருங்கள் (எச்சரிக்கை:மிக அதிக ஓசை எழுப்பும் கிளிப் இது)

Teenager Tone Mp3 Clip

உங்கள் காதுகளில் எதாவது கேட்டால் நீங்கள் 25வயதுக்கும் கீழ்பட்டவர் என அர்த்தம். எதுவும் கேட்காவிட்டால் உங்களுக்கு வயதாகிவிட்டது என அர்த்தம். வகுப்பறையில் ஆசிரியர் காதுகளில் கேட்காமல் ஆனால் தங்களுக்கு மட்டும் கேட்கும் படியான ரிங்டோன் வைக்க தங்கள் கைப்பேசிகளில் பதின்மர்கள் நாடும் MP3 இது. இதையே எதிர்மாறாக பதின்மர்கள் உங்கள் அறையில் நுழைந்து தொல்லை செய்யாதிருக்க இக்கிளிப்பை தொடர்ந்து ஓடவிட்டுக் கொண்டிருக்கலாம். எரிச்சலூட்டும் இந்த ஒலியை கேட்டு சிறுவர்கள் உங்களை நெருங்கவே மாட்டார்கள். நீங்களோ நிம்மதியாக உக்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருப்பீர்கள்.

கீழே வெவ்வேறு அலைவரிசைகளில், வெவ்வேறு கிளிப்கள். எந்த அலைவரிசை வரை உங்களால் கேட்கின்றதுவென பாருங்கள்.என்னால் 14 kHz-யை தாண்டமுடியவில்லை. வயசாகிவிட்டது.

கருத்துகள் இல்லை: