எதாவது நுண்பொருள் பற்றி பதிவு எழுதவேணும் அப்படிங்கிறது எனது ரொம்ப நாள் ஆசை, அதற்க்கு இதுதான் சரியான நேரம். அதற்காக நான் தேர்வு செய்துள்ளதான் இந்த மைக்ரோசாப்ட் வோர்ட். இது தெரிந்தவர்களுக்கு ஒரு சிறிய விசயமாக தோன்றாலாம், தெரியாதவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.
இந்த மைக்ரோசொப்டின் அலுவலக பொருட்களை பொறுத்தவரை அதிகமாக பயன்படுவது இந்த வோர்ட், எக்ஸ்செல் மற்றும் பவர்பாயின்ட் இதுவாக இருக்க முடியும், இந்தியாவில் இதனுடைய பயன் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை, வளைகுடா நாடுகளை பொறுத்த வரை இதிலே நீங்க புலி என்றால், கண்டிப்பாக நம்ம ஊரு காசுக்கு எப்படியும், ஒரு அறுபதாயிரம் அல்லது எழுபதாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். சரி இதிலே நாம என்னவெல்லாம் செய்யலாம் அப்படின, லெட்டர், மெமோ, பாக்ஸ், நம்முடை சீவி மற்றும் இது போன்ற பேப்பர் வொர்க்ஸ் எல்லாமே இதிலே சாத்தியம். இதிலே நம்முடைய மூளைக்கு அதிகம் வேலை இல்லை என்றாலும், கொஞ்சம் வேலை இருக்கிறது, அது என்னவென்றால். பக்கங்களை அழகு படுத்துவது. நீங்கள் ஒரு லெட்டர் அடிக்கவேண்டும் என்றால், முதலில் உங்கள் லெட்டர் முழுவதும் தட்டச்சு செய்து முடிக்கவேண்டும். பின்னர் அதை சேமிக்கணும், அதற்க்கு பிறகு தான் உங்கள் லெட்டரை அழகு படுத்த வேண்டும்.
பாடம் 1 - எழுத்துகளை வடிவமைத்தல் .
அது எப்படி என்று இப்பொழுது பாப்போம்,முதலில் மைக்ரோசாப்ட் வோர்டை திறந்து கொள்ளவும், நீங்கள் திறந்தவுடன் அது பிளான்க் பேஜ் இல் தான் திறக்கும், அப்படி இல்லை யென்றால் பிளான்க் பேஜ் தேர்வு செய்து கொள்ளவும்,
பின்னர் இங்கே கீழே குடுக்க பட்டுள்ள படத்தினை பெரிதாக்கி அதில் உள்ள வரிகளை முதலில் தட்டச்சு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் உள்ள கமெண்ட்ஸ் பகுதியில் உள்ள மாதிரி செய்து பாருங்கள். ஒவ்வொரு வரியும் வடிவமைக்கும் முன் அந்த வரியை தேர்வு (Highlight) செய்துகொள்ள வேண்டும். எடுத்து காட்டாக முதல் வரியை வடிவமைக்க வேண்டும் யென்றால், அந்த வரியை தேர்வு செய்து விட்டு கம்மேன்ட்சில் உள்ளது போன்று, Format மெனுவிற்கு சென்று அங்கு உள்ள Font என்ற மெனுவை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் அதில் ALL காப்ஸ் என்ற பாக்சை டிக் செய்து விட்டுய் ஒகே குடுக்க வேண்டும். அவ்வளவுதான். இதே போலே மற்றதை முயன்று பாருங்கள். இது மிகவும் எளிதானது. எனது அடுத்த பதிவில் எப்படி பராகளுக்கு இடையில் இடைவெளி விடுவது வரிகளுக்கு எப்படி இடைவெளி விடுவது போன்றவற்றை பார்க்கலாம்.
நாம தெரிஞ்சுகிட்டத நாலு பேருக்கு சொல்லி குடுத்தாதான், நாம தெரிஞ்சுகிட்டதுக்கு மரியாதை.
என்ன நாயகன் பட டயலாக் மாதிரி இருக்கா, நல்லாதானே இருக்கு.........அதான் கொஞ்சம் மாத்திட்டேன்.
1 கருத்து:
thanks for sharing this
கருத்துரையிடுக