OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 12 டிசம்பர், 2012

இன்றுடன் இரண்டு முடிந்தது:-


நான் பிளாக் எழுத ஆரம்பித்து இன்றுடன் இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன, இந்த இரண்டு வருடங்களில் எனக்கு கிடைத்த இந்த 27,337 பார்வையாளர்கள் குறைவுதான் என்றாலும், எனக்கு நிறைவாகவே உள்ளது. இந்த இரண்டு வருடத்தில் நான் எழுதிய பதிவுகள் மொத்தம் 388, இதையும் சேர்த்து 389. இதில் அதிகமாக 71 பதிவுகள் சமுதாய சிந்தனை என்ற தலைப்பில்தான் எழுதியுள்ளேன், அதற்க்கு பிறகு பார்த்தால் 58 பதிவுகள் சிந்திப்பதற்க்கு என்கின்ற தலைப்பில் எழுதியுள்ளேன், ஆனால் இதுவரை யாரு சிந்திததாக தெரியவில்லை.


இந்த 388 பதிவுகளுக்காக ஆதரவாகவும், எதிர்மறையாகவும் வந்த கருத்துக்கள் மொத்தம் 197. இந்த 197 கருத்துக்களில் ஒரு கருத்துக் கூட என்னுடைய நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து வரவில்லை, கருத்துக் கூட சொல்ல பயப்படும் இந்த நண்பர்களை நினைத்தால் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை.

எனது பதிவுகளில் அதிகமாக வாசிக்கபட்டது இந்திய கிரிக்கெட் சில சகிக்க முடியாத வக்கிரங்கள்  என்கின்ற தலைப்பில் நான் எழுதிய பதிவுதான் மொத்தம் 600 முறை இந்த பக்கம் படிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு இது குறைவாக இருந்தாலும் எனக்கு இது மிக பெரிய வெற்றிதான். கடல் போல காட்சியளிக்கும் இந்த பதிவுலகில் எனக்கும் 28 பேர் தொடர்பவர்களாக இருக்கிறார்கள் என்று நினைத்தால் கொஞ்சம் ஓவர்தானோ என்றுதான் தோன்றுகிறது. இன்னும் சில பேர் தொடர்பவர்களாக இல்லா விட்டாலும், எனது பிளாக்கை குறைந்தது படித்து வருகிறார்கள் அவர்களுக்கு எனது நன்றி.

இந்த பிளாக் ஆரம்பிக்கும் பொது என்னுடன் சேர்ந்து பதிவு எழுதுகிறேன் என்று சொன்னவர்கள், எல்லாம் எங்கே பலிகடா ஆகிவிடுவோமோ என்று பயந்து ஓடிவிட்டார்கள். எனக்கு அவர்களை பற்றி கவலை எல்லாம் இல்லை. பயந்தாங்கொள்ளிகளுடன் கூட்டுவைப்பதை விட, பயம் காட்டுபவர்களுக்கு எதிராக செயல்படுவதே சிறந்தது. நான் இதுவரை சினிமா விமர்சனம் எழுதுவது, கூட்டல் 18 போன்றவற்றை எழுதாவது கூடாது என்கின்ற அடிப்படையை பின்பற்றி வருகின்றேன். ஒரு சில காமெடி பதிவுகளில் வேண்டுமென்றால் சில இரட்டை அர்த்தமுள்ள ஜோக்குகள் இருந்திருக்கும்.

மேலும் என்னுடைய பதிவுகளில் அதிகமாக நமது சமுதாயம் எப்படி எல்லாம் சீரழிகிறது என்பதுதான் உள்நோக்கமாக இருந்து வருகின்றது. இன்னும் சொல்லப்போனால் சில பல சமுதாய துரோகிகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளேன். ஒரு திரைபடத்தின் விமர்சனத்தை ஈ அடிச்சான் காப்பி அடிக்கும் எந்த பதிவரும் என்னுடைய சமுதாய அக்கறையுள்ள எந்த பதிவையும் ஈ அடிக்கவில்லை.

என்னுடைய பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது கடலூர், மனிதன் உயிர்வாழ தகுதியற்ற ஊர்,



இன்று கூடங்குளத்தை எதிர்க்கும் எந்த ஒரு இயக்கத்திர்க்கும் இது ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை. கூடங்குளத்தில் உள்ளவர்கள்தான் மனிதர்களா? கடலூரில் உள்ளவர்கள் என்ன வெறும் மயிர்களா? சமீபத்தில் கூட மிக பெரிய ஒரு தீ விபத்து நடந்தது, இன்னும் என்னவெல்லாம் நடக்க போகின்றது என்பது அந்த இறைவனுக்குதான் தெரியும்.

மேலும் இன்று தமிழகத்தில் சினிமாவில் முஸ்லிம் சமுதாயத்தை மிகவும் கேவ்லமாக சித்தரித்துக் காட்டி அவர்களின் வருமானத்தை பெருக்கி கொள்கின்றனர். இட்டுக் குறித்தும் பல பதிவுகள் எழுதியுள்ளேன், ஆனால் பாருங்க அப்படி காட்டப்படும் படத்தை முஸ்லிம் நண்பனோடு சேர்ந்து பார்க்கும் மாற்று மத நண்பர்களும் கைதட்டுகிறார்கள், அப்போது அந்த முஸ்லிம் நண்பன் படும் பாடு கூட தெரியாத இந்த கேடு கெட்ட ஜென்மங்களை என்ன செய்யலாம்?.

ஆக இந்த பிளாக் ஆரம்பித்து நான் நிறையவே அறிந்துக்கொண்டேன், நிறைய நபர்களை புரிந்தும் கொண்டேன். மனிதர்கள் பலவிதம் என்பார்கள் ஆனால் இங்கே பிளாக் எழுதுபவர்கள் ஒரே விதமாக தான் இருக்கிறார்கள். ஒரு பக்கமாக??? புரிந்தால் சரி.
   

கருத்துகள் இல்லை: