OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 27 டிசம்பர், 2012

2012 இல் நாம் மறந்த சில மறக்கமுடியா நிகழ்வுகள்!!!!!!!!!!!!!!!!





இந்த ஆண்டு என்றில்லை பொதுவாக எல்லா ஆண்டும் நிறைய நல்ல விசயங்களும், அதை நிறைய கேட்ட விசயங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் எனக்கென்னவோ இந்த ஆண்டை பற்றி ஏதோ எழுதவேண்டும் என்று தோன்றியது அதன் வேலிபாடுதான் இந்த பதிவு.

இந்த ஆண்டின் துவக்கமே தானே புயல் என்னும் தமிழக வரலாறு காணாத புயல் தாக்கி தமிழக கடலோர பகுதிகள் அனைத்தும் பெரும் பாதிப்புக்குள்ளாகின, மேலும் அதே ஜனவரி மாதத்தில் சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் ஆங்கில படங்களில் வருவது போன்று ஒரு மிகப்பெரிய கொள்ளை பட்டபகலில் நடந்தேறியது. மேலும் முல்லை பெரியார் போராட்டங்கள். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்கள்.

அடுத்த பிப்ரவரியில் டெல்லியில் உள்ள இஸ்ரேலிய அலுவலகத்தில் வாகன வெடிகுண்டு வெடித்தது. தமிழக மீனவர்களை எத்தனை பேர் கொல்லப்பட்டாலும் கண்டுக்கொள்ளாமல் இருக்கும் தமிழக அரசாங்கத்தை போல் அல்லாமல் தான் மாநில மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலிய சேர்ந்த கப்பல் மாலுமிகளை கேரளா அரசாங்கம் கைது செய்தது.

மார்ச்சை எடுத்துக் கொண்டால், கிரிக்கெட்டில் வங்காள தேச அணியினர், 10 வது ஆசிய கோப்பையில் இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது, கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியம் படுத்தியது என்றால் அது மிகையாகாது. வாழ்த்துக்கள்.

ஏப்ரலில் இப்படியும் ஒரு மனிதன் இருக்க முடியுமா என்னும் அளவிர்க்கு ஒரு கொடூரம் நடந்தது நம்ம கர்நாடகாவில், தன்னுடைய 6 மாத குழந்தையை அதன் தகப்பனே அடித்து கொலை செய்தது.  

மே மாதம் இந்தியாவிலேயே 12 ஆம் வகுப்பிர்க்கானா சிபிஎஸ்ஈ தேர்வில் மொஹம்மத் இஸ்மாத் என்ற முஸ்லிம் மாணவன் முதலிடம் பிடித்தது, இதன் மூலம் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கட்டாயம் வேண்டும் என்பது நிரூபணம் ஆகின்றது.

ஜூலை மாதத்தை எடுத்துக் கொண்டால், அதுவும் கொடூரத்தின் உக்கிரம்தான், நமது சிங்கார சென்னையில் (இந்த பேரை வைத்த்வன் மட்டும் கையில் கிடைக்கட்டும்) 6 வயது சிறுமி, பள்ளி வாகனத்தின் குறைபட்டால் கீழே விழுந்து இறந்தது. தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் தீப்பிடித்து 28 பேர் இறந்தது, இதை எல்லாம் விட கொடுமை புர்மாவில் முஸ்லீம்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டது நாடு கடத்தப்பட்டது.

செப்டெம்பரில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நடந்த போராட்டம் கலாட்டாவாக மாறி போலீஸ் அப்பாவி மக்கள் மீது தடியடி நடத்தியது, சிவகாசியில் பட்டாசு தொழிற்ச்சாலை எரிந்து 50க்கும் மேற்பட்டோர் இறந்தது.

இதுமட்டுமில்லாது முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹமத் நபியை பற்றி இழிவான ஒரு திரைபடத்தை வெளியிட்ட யூதனையும் அதனை அனுமத்தித அமெரிக்காவையும் எதிர்த்து நடந்த போராட்டங்கள், கலவரங்கள் (சென்னையில்). இதை பற்றி வாய்யைக் கூட திறக்காத ஊடகங்கள், வலைப்பூ பதிவாளர்கள் இவர்களை எல்லாம் என்ன செய்ய. மேலும் கடந்த வாரம் நடந்த டெல்லி கற்பழிப்புகள், அதனை தொடர்ந்து ஊடகங்களும், வலைப்பூக்களும் எழுதிவரும் கற்பழிப்பு பதிவுகள்.

தினம் தினம் எத்தினை எத்தினையோ கொலை கற்பழிப்பு நடந்துக் கொண்டுதான் இருக்கின்றது ஆனால் அது எல்லாம் மக்களின் மனதில் பதிந்து பதிந்து வெளியான ஆத்திரமும், ஆதங்கமும் தான் இந்த போராட்டாம்.

இதை எல்லாத்தையும், வாய்யை குடுத்து அதை புண்ணாக்கி கொண்ட இரண்டு பேர் இருக்காங்க

ஒன்று இவரு:



இன்னொன்று இவரு:-



அப்புறம் 2012 ஆம் ஆண்டின் மிக பிரபலமான நபர் ஒருத்தர் இருக்கார் அவர்தான் இவர்:


கருத்துகள் இல்லை: