OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 6 டிசம்பர், 2012

வரலாற்றில் கொஞ்சம் கூட உண்மைய காணோம்.



 
வார்த்தைக்கு வார்த்தை பாய் பாய் என்று சொன்ன காலங்கள் போய் இன்று.....
நிமிடத்திற்க்கு ஒரு முறை அப்பாவி முஸ்லீம்களை பார்த்து தீவிரவாதி, தீவிரவாதி என்று சொல்லி சொல்லியே பழகிய மக்கள், உண்மையான தீவிரவாதிகளுடன் தினம் தினம் வாழ்க்கை சக்கரத்தை ஒட்டி கொண்டிருக்கின்றனர். ஆம்.

முஸ்லிம்களின் வனகஸ்தலமான பாபரி மஸ்ஜித் தரைமட்டமாக்கப்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் ஆகின்றன, அன்று அதை இடித்தவர்கள் தீவிரவாதிகளா? இல்லை அதனை பறிகொடுத்த அப்பாவிகள் தீவிரவாதிகளா? குஜராத்தில் ஒரு இனமே கூண்டோடு அழிக்கப்பட்டதே, அதை செய்தவர்கள் தீவிரவாதிகளா? இல்லை அழிந்து போன இனம் தீவிரவாத இனமா?

மதசார்பில்லாத நாடு என்று தன்னை பீத்திக்கொள்ளும் இந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டம் தட்டியே எல்லா செய்திதாள்களும், செய்தி சேனல்களும், ஏன் பெருமளவு வலைபூக்களும் தங்களால் ஆன ஒரு ஊடக விபச்சாரத்தை செய்து வருகின்றனவே, இவர்களை மனிதர்கள் என்பதா? இல்லை மாமா(கள்) என்பதா?.

ஒருவனுக்கு ஒருத்தி என்று வாய்க்கிழிய பேசுகின்ற நாம் தமிழ் நாட்டில், தொலைக்காட்சி ஒன்றில் போனில் பெண்ணிடம் கேட்கிறார்கள், உங்களுக்கு எந்த நடிகர் பிடிக்கும் என்று அதற்க்கு அவள் உடனே ஒரு நடிகரின் பெயரை சொல்கிறாள், இவள்தான் இப்படி என்றாள் இதற்க்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் கணவனும் கூறுகின்றான் ஒரு விபச்சாரியின் பெயரை. மேலும் இந்த நாட்டில் இன்று கள்ள காதலும், லிவிங்க்டுகேதர் என்கின்ற மேற்கத்திய கலாச்சாரம் மேலோங்கி கிடக்கிறதென்றால் அது மிகையாகாது. இன்றைய இளைய தலைமுறை நாளைய இந்தியாவின் தூண்கள் என்று புலம்புகிறார்கள், ஆனால் அவர்கள் வெறும் துரும்புகளாகதான் இருக்கிறார்கள். அதுவும் துருப்பிடித்த துரும்புகள்.     

எண்ணிக்கையில் அடங்கா பல கோடிகளை கொள்ளையடித்த கேடிகள் நிறைந்த இந்த நாட்டில், லஞ்ச்சத்தை திரைப்படங்களில் மட்டுமே ஒழிக்கிறார்கள், ஆனால் அந்த திரைபடத்திர்க்கு u சான்றிதழ் பெறவே லஞ்சம் குடுக்கிறார்கள் இதுதான் இந்த நாட்டின் நிலைமை. மேலும் அரசாங்கத்தின் பெயராலேயே மதுபான கடைகளை நடத்தும் ஒரே நாடு இதுவாகத்தான் இருக்கும். மக்களின் அத்தியாவசியமான மின்சாரத்தை குடுக்காமல், அவர்களுக்கு இலவச மிக்ஸி, கிரைண்டர், தொலைக்காட்சிபெட்டி போன்றவைகளை குடுக்கும் மிக அற்புத அரசாங்கம் நம்ம தமிழக அரசாங்கம்தான். தலைக்கவசம் போடவில்லை என்றால் 1000 ரூபாய் அபராதம், ஆனால் 100 ரூபாய் பிடித்த போலீஸிடம் குடுத்தால், நாம ஜட்டி கூட போட தேவையில்லை. பக்கத்து நாட்டில் கொல்லப்படும் தமிழ் மக்களுக்காக கொடிபிடிக்கும் இயக்காங்கள், அவர்களால், அநியாயமாக கொள்ளப்பட ஒரு இனத்தை பற்றி வாய்திறக்காமல் இருக்கும் மக்கள் வாழும் மிகவும் பெருமைமிக்க நாடு நம் தமிழ் நாடு.

இன்னும் நம்ம ஊடகங்களை எடுத்துக்கொண்டால், முக்கிய செய்தியை சிறிய எழுத்திலும், முட்டாள் செய்தியை பெரிய எழுத்திலும் போட்டு தங்கள் TRP யை உயர்த்துவாதிலேயே குறியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு மக்களின் உயிரோ, மானமோ எதை பற்றியும் கவலை இல்லை. இதற்க்கு உதாரணகள் எல்லாம் தேவையில்லை, இவர்கள் எழுதும் செய்திக்கும், இவர்களின் தலைப்பிர்க்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. இவர்களுக்கு வேண்டியதெல்லாம் எந்த நடிகை எந்த நடிகரோடு சுற்றுகிறாள், அந்த நடிகர் படபிடிப்பில் வழுக்கி விழுந்தார் (இன்று பல பேர் வாழ்க்கையில் வழுக்கி விழுகிறார்கள் அவர்களை தூக்கி விட ஒரு நாதாரி கிடையாது) போன்ற செய்திகள்தான் முக்கியம்.
  
இன்று நான் பாபரி மஸ்ஜித் பற்றி மட்டும்தான் எழுத வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் ஏனோ தெரியலை பல உண்மைகளை உளறிவிட்டேன், உண்மை என்றைக்கும் கசக்கும்தான், அதர்க்காக சொல்லாமல் விட முடியுமா??? என்ன செய்வது இங்கு சைலன்ட் என்பதையே சத்தமாகதானே சொல்ல வேண்டியுள்ளது.



  

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

really nice & informative article. best wishes to write more. our media's are corrupted by money-wise and mentally to increase circulation.

media means politics, cinema, personal affairs.

they do not guide, encourage good activity.