கடந்த சில வாரங்களாக மிகவும் பிரபலமாக
பேசப்படுவது, ரசிகர்களால் கோயில் கட்டி கும்பிடப்பட்ட முதல் நடிகை என்ற உலக சாதனைக்கு உரித்தான குஷ்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு சினிமா தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் உடுத்தி இருந்த புடவைதான் சர்ச்சைக்கு காரணம்.
அவர் அணிந்து இருந்த புடவையில், கிருஷ்ணபகவான், ராமர் மற்றும் ஹனுமான் ஆகிய கடவுளின் உருவங்கள் இருந்தன.
"திட்டமிட்டே குஷ்பு இந்த புடவையை அணிந்து வந்து இருக்கிறார். யாருமே ராமர் மற்றும் பிரம்மசாரிய கடவுளான அனுமார் ஆகிய உருவங்கள் படைத்த சேலையை அணிவது இல்லை. இப்படி இந்து கடவுள்களை அவமதித்தற்க்காக, அவர் மக்கள் முன் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால்,அவருக்கு எதிராக போராட்டாங்கள் நடத்துவோம்" என்று அறிவித்து இருக்கிறது இந்து மக்கள் கட்சி.
இப்படி உடுத்தி வந்த குஷ்பூவை எதிர்க்கும்
இவர்கள், அந்த புடவையை தயாரித்தவர்களை ஏன் எதிர்க்கவில்லை, ஆஸ்திரேலியாவில் இந்து கடவுள் உருவத்தை போட்டு டு பீசில் காட்சி தந்ததை எதிர்ப்பதில்
நியாயம் இருக்கிறது. ஆனால் புடவை விஷயத்தில் முதலில் இவர்கள் அதனை தயாரித்த மற்றும்
விற்பனை செய்த நிறுவனதினர் மீதுதான் இவர்களின் எதிர்ப்பை காட்டியிருக்க வேண்டும்.
மேலும் உங்கள் எதிர்ப்பை காட்ட வேண்டியவர்களிடம்
காட்டுங்கள், இப்படி திரையில் விபச்சாரம்
செய்யும் ஒருத்தியுடன் காட்டி உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக