OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 18 அக்டோபர், 2011

கடலூர், மனிதன் உயிர்வாழ தகுதியற்ற ஊர்.





இந்த உலகில் மனிதன் உயிர்வாழ மூன்று காரணிகள் இன்றியமையாதது, நீர், காற்று மற்றும் நிலம். இது நாம் எல்லோரும் சிறுவயதிலேயே பள்ளிகூடங்களில் படித்ததுதான். இப்படி மனிதன் வாழ்வதற்கு தேவையான அடிப்படையே மக்களுக்கு சரியாக அமையவில்லை என்றால் அவன் எவ்வாறு உயிர்வாழ முடியும் !!! இந்த உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் இந்த அடிப்படை தேவை சுத்தமாக கிடைகிறதா என்றால் இல்லை என்பதே கிடைக்க கூடிய ஒருமித்த பதிலாக இருக்கிறது. அது ஒரு சிலருக்கே முழுமையாக கிடைகிறது.

நான் இங்கே இந்த உலகத்தில் உள்ள அனைவரையும் பற்றி பேசவரவில்லை...............நான் சொல்லப்போவது எனது பக்கத்து ஊரான கடலூரில் அமைத்திருக்கும் சிப்காட் நிறுவனங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள், மற்றும் அவைகள் ஏற்படுத்தி கொண்டிருக்கும் பாதிப்புகள், இனி எதிர்காலங்களில் ஏற்படுத்த கூடியாபதிப்புகளை பற்றிதான். என்னடா இவன் பக்கத்து ஊரை பற்றி இவனுக்கு என்ன அக்கறை என்று நீங்கள் கேட்கலாம், கண்டிப்பாக பக்கத்து ஊரை பற்றி எல்லாம் அக்கறை படுகின்ற அளவிற்கு நான் ஒன்றும் காந்தி அல்ல...........நானும் ஒரு சாதாரண மனிதன்................பிறகு ஏன் இந்த அலப்பறை என்கிறீர்களா.............இந்த தொழிற்சாலைகளால் பாதிக்கபடுவது.................என்னுடைய சொந்த ஊரான பரங்கிபேட்டை கூட.. 


எங்கள் ஊர் இந்த சிப்காட்டில் இருந்து ஒரு 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நிறுவனங்கள் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு இருபத்தைந்து வருடங்கள் ஓடி விட்டன. இந்த இருபத்தைந்து ஆண்டாக இந்த நிறுவனங்கள் நடத்திய கொலைகள் இன்றுதான்............கேன்சர் என்ற உயிர்கொல்லி நோயாக தெரிய வருகிறது.......ஆம் சமீபகாலமாக கடலூரிலும் சரி, அதை சுற்றி உள்ள ஊர்களிலும் சரி கேன்சரால் மரணமடைவோர் அதிர்கரித்து கொண்டே வருகின்றன..............கடந்த இருபது ஆண்டுகளில் இறந்தவர்கள் எப்படி இறந்தார் என்று கேட்டால் வயதாகிவிட்டது, இல்லை நல்லாத்தான் இருந்தார் தீடிரென்று இறந்துவிட்டார் என்பார்கள், எப்போதாவது ஒரு மாரடைப்பு கேஸ், ஒரு ஆக்சிடென்ட் கேஸ் இதுபோன்று காணப்படும்.................ஆனால் இன்று ஒரு இரண்டு மூன்று வருடங்களாக இறந்தவர்களை பற்றி கேட்டால் வரக்கூடிய ஒரே பதில் அவருக்கு கேன்சர்!!!!!!!!!!!!!!!!!! ஏன் என்னுடைய சொந்தத்திலேயே சமீபத்தில் ஒருவர் இறந்தார்..............அவரும் படாத கஷ்டப்பட்டு.............இறக்கும் தருவாயில் ரத்த வாந்தி எல்லாம் எடுத்துதான் இறந்திருக்கிறார்..................நான் வெளி நாட்டில் உள்ள காரணத்தில் அவரது நல்லடக்கத்தில் கலந்து கொள்ளமுடியவில்லை..............

ஏன் இன்னும் சொல்லப்போனால், சமீபத்தில் கேள்விப்பட்ட அணைத்து இறப்பும் இதே கேன்சர் என்ற கொடிய காரணம்தான். இது எப்படி வந்தது என்னுடைய அழகிய மண்ணில்...........யாரால் வந்தது................இதற்கெல்லாம் விடைதான் என்னுடைய இந்த பதிவு.............!!!!!!!!!!!!!!!!!!!!!

இதற்கெல்லாம் முக்கிய காரணம் இந்த சிப்காட் என்றால் அது மிகையாகாது. கண்டிப்பாக அங்கே இருக்க கூடிய தொழிற்சாலைகள் எல்லாம் கெமிகல் தொழிற்சாலைகள்.........அங்கிருந்து வெளியாகும் கழிவுகள் எல்லாம் நேராக கடலில் கலக்கப்படுகின்றன அதன் பாதிப்பு அந்த பகுதியில் உள்ள மீன்களை பாதிக்கின்றது.........அதனை சாப்பிடும் எங்களை போன்ற மக்களை பாதிக்கின்றது...........ஏன் இன்னும் சொல்லப்போனால் ஏதோ ஒரு ஆய்வு சொல்லுகின்றது. கடலூரும் அதன் சுற்றுவட்டாரமும் மனிதன் வாழ தகுதியற்றது என்று..............எங்கள் அழகிய மன்னனை, எங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த இந்த மண்ணை யார் இந்த நிலைமைக்கு மாற்றியது...............ஏன் மாற்றப்பட்டது.....................மனித உயிர்களை உயிர்கள் என்று பார்க்காமல் ஒரு மயிராய் பிடிங்கி எறிவதற்கு எப்படி இவர்கள் துணிந்தார்கள்........................இதெற்கெல்லாம் ஒரே காரணம் “Money! Money! Money! Money! Money”…………………….

என்னங்க ஏதோ மங்காத்தா பட வசனம் மாதிரி இருக்கா.................எப்படி இருந்தாலும் இதுதான் உண்மை.................அந்த படத்தில் எப்படி பணத்துக்காக கூட இருந்த நண்பர்களை கொலை செய்கிறானோ ஒருத்தன்..............அதே போல பணத்துக்காக பல கிராமங்களையும், பல ஊர்களையும் அழித்து விட்டார்கள், இனியும் அழிப்பார்கள்..............!!! அது எப்படி அரசாங்கம் இதை எல்லாம் எப்படி அனுமதிக்கின்றது என்று கேட்டால்.............இது வேலியே பயிரை மேஞ்சை கதைதான்.......... இது இந்தியா....................அதுவும் தமிழ் நாடு,  என்ன முடியாத அளவிற்கு கோடிகளை கொள்ளை அடித்த கேடிகள் நிறைந்த மாநிலம்..............


SIPCOT (State Industries Promotion Corporation of Tamilnadu)

வாருங்கள் இந்த சிப்காட்டை பற்றி தெரிந்து கொள்வோம் முதலில், 1982 ஆம் ஆண்டுதான் இது முதல் கட்டம் தொடங்கப்பட்டது கடலூரிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் கடற்கரை பக்கமாக கடலூர் - சிதம்பரம் ரோட்டில் பஞ்சாங்குப்பதிலிருந்து செம்மங்குப்பம் வரையிலான சுமார் ஒரு 519 ஏக்கரில் தொடங்கினார்கள். பின்னர் இரண்டாவது கட்டமாக மேலும் ஒரு 200 ஏக்கரையும் ஆக்கிரமித்து கொண்டார்கள். இதற்காக அவர்கள் மக்களிடம் பிளாட்களை ஒரு பிளாட்டிற்கு பதினான்கு லட்சம் குடுத்தார்கள்..........அந்த காலத்தில் அது மிகவும் பெரிய தொகை அதனால் மக்களும் விற்றுவிட்டார்கள்.............அதே போல் அவர்கள் தங்களுக்கென்று தனியாக ஒரு எலக்ட்ரிக்கல் substation ஒன்றையும் உருவாக்கி கொண்டார்கள்.  அதே போல பெரிய அளவிலான தண்ணீர் வசதியும் செய்து கொண்டார்கள். ஆனால் அவர்கள் இன்றைய தேதி வரையில் அவர்கள் நடத்தும் தொழிற்சாலைகளில்  இருந்து வெளியாகும் கழிவுகள், காற்று கழிவுகள். எல்லாம் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்பதற்கு எந்த ஒரு ஆதராதையும் காட்டவில்லை.

இப்படி ஆரம்பித்து போயிட்டிருந்த சமயத்தில், 1999-ம் ஆண்டு தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் அறிக்கை படி சிப்காட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கெமிக்கல்ஸ் தினமும் உபயோகபடுதியதாக கூறுகிறது. 

வருடங்கள் ஓட ஓட அங்குள்ள மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த சிப்காட்டால் சந்திக்க கூடிய பிரச்சினைகளை அரசாங்கத்திடம் புகார் செய்தார்கள் ஆனால் அன்று இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதை தொடர்ந்து 1998-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை Ambient Air Quality Monitoring system என்கின்ற ஒரு அமைப்பு காற்று மாசுபடுதல் மற்றும் நீர் மாசுபடுதல் பற்றி சிப்காட்டை சுற்றி சில சோதனைகள் நடத்தினார்கள் ஆனால் அவர்களின் முடிவுகள் இதுவரை வெளிவரவே இல்லை, அதை பற்றி அவர்கள் யாருக்கும் தெரிவிக்கவும் இல்லை. 

இப்படி இருந்த நேரத்தில் தான் சுற்றுபுறசூழல் மற்றும் மனித உரிமை கழகத்தின் தலைவர்  திரு ஜே. கனகராஜ் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறோயதாவது சிப்காட் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள நிலைமை ஒரு போபாலுக்கு சமம் என்று. மேலும் செம்மங்குப்பம் பிரசிடென்ட் கூறுகையில் "போபாலில் மக்கள் ஒரே நாளில் செத்தார்கள், நாங்கள் இங்கு தினம் தினம் சாகிறோம்" என்கிறார். 

அதுமட்டுமில்லை, அங்குள்ள பெண்கள் கூறுவதாவது " சமைத்த உணவிலும் கெமிகல் வாடை அடிப்பது, அதை உன்ன கூடிய குழந்தைகள் வாந்தி எடுப்பது, மேலும் அங்குள்ள நிலத்தடி நீர் கூட சிகப்பு நிறத்தில் வெளிவருவது போன்றவைகள், இன்னும் மழை நாட்களில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளும் இங்குள்ள வீடுகளில் புகுவது, இதுல மிக கொடுமை என்னவென்றால், இங்குள்ள மக்கள் யாரையும் இங்கே வேலைக்கு அமர்த்துவதில்லை, அதிலும் Tagros தான் மிக மோசமான ஒரு தொழிற்சாலையாக இங்கு கருதபடுகிறது. 

மேலும் கடந்த 2004-ம ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை நடைபெற்ற கெமிகல் வாடை வெளியேற்ற சோதனை படி, 283 வித்தியாசமான கெமிகல் வடிகள் வெளியேறுவதாகவும், அதில் 223 ரொம்ப பயங்கர விளைவுகளை ஏற்படுத்துவதாகவும், 36 உடனடியாக உடலில் நோய்க்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் தெரிவிக்கின்றன. 

மேலும் அங்குள்ள தொழிற்சாலைகள் பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும், அந்த தொழிற்சாலைகள் வெளியேற்றும் துர்நாற்றங்களை பற்றியும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றியும் கீழே பட்டியலிட்டுள்ளேன்.............இதில் உள்ள பல வியாதிகள் அங்கே சுற்றியுள்ள கிராமத்து மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை......... ஏன் என்னை போன்ற படித்தவர்களுக்கு கூட இந்த வியாதிகள் பற்றி அவ்வளவாக தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை...............அவர்களுக்கு தெரிந்தது என்னவோ  வெறும் காய்ச்சலும், சளியும், தலைவளியும்தான்.................




சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகள்:-

1.       EID Parry
2.       ELF Atofina
3.       Vanavil Dyes
4.       Bayer
5.       Shasun Chemicals
6.       Tagros Chemicals
7.       TANFAC
8.       Loyal Super Fabrics
9.       Tantec Agro Chemicals
10.   GSR Chemicals
11.   SPIC Mitocon
12.   Asian Paints (Penta Division)
13.   Pioneer Miyagi


சிப்காட்டில் தொழிற்சாலைகளின் செயல்பாடுகள்.

1.       Pesticide Manufacture and Intermediates
2.       Pharmaceuticals and Intermediates
3.       Chemicals
4.       Plastics
5.       Plastic Additives
6.       Dyes and Intermediates
7.       Textiles

சிப்காட்டில்  இருந்து வெளியேறும் நாற்றங்கள்:

1.       Acid
2.       Ammonia
3.       Burning plastic or electric cable
4.       Burnt body / Burnt gravy
5.       Burnt material
6.       Burnt rice
7.       Burnt rubber
8.       Chikoo
9.       Chilli powder
10.   Crushed neem seed / neem cake / neem oil
11.   Decaying corpse / Dead body
12.   Dead animal
13.   Dough roasted and grounded
14.   Firecracker
15.   Fruit juice
16.   Ground bone
17.   Hospital
18.   Human excreta
19.   Kerosene
20.   Mosquito coil
21.   Nail paint
22.   Paint
23.   Phenyl
24.   Public toilet
25.   Roasted sugar
26.   Rotten eggs
27.   Rotten fruits
28.   Rotten jackfruit
29.   Rotten milk
30.   Sewer / gutter smell
31.   Sour
32.   Sulphur
33.   Sweet and sugarcane like
34.   Spirit / alcohol smell
35.   Urine smell

நாற்றங்களினால் ஏற்படக்கூடிய வியாதிகள் 

1.       Breathing trouble
2.       Suffocation
3.       Nausea
4.       Pain in the chest
5.       Eye irritation
6.       Constriction of throat
7.       Dizziness
8.       Eye burning
9.       Throat burning
10.   Nose irritation
11.   Eye watering
12.   Headache
13.   Vomiting
14.   Induced hunger
15.   Stomach growling
16.   Churning of stomach and vomiting sensation
17.   Stomach discomfort
18.   Nose burning
19.   Vomited
20.   Throat burning and headache
21.   Eyes watering and throat burning
22.   Head swimming
23.   Eyes watering and shortness of breath
24.   Stomach rumbling vomiting and suffocation
25.   Stomach rumbling and headache
26.   Nausea, headache and breathing trouble
27.   Nausea, headache and eye burning
28.   Nausea, dizziness and headache
29.   Headache, nose irritation, throat irritation and breathing trouble
30.   Headache and suffocation.




மேலும் இங்கு ஒரு நாளைக்கு எத்தினை பாதிப்புகள் நடைபெறுகிறது என்பதையும் இங்கு அட்டவணை படுதிள்ளேன்:-

Time
Total Incidents
Intense Incidents
12 midnight to 6am
70
53 (76%)
6am to 12pm
90
67 (75%)
12pm to 6pm
79
67 (85%)
6pm to 12 midnight
44
36 (81%)
Toatl
283
223 (79%)






இதில் எந்த எந்த தொழிற்சாலைகளில் இருந்து என்பதையும் தனியாக அட்டவணை படுதிள்ளேன்:-


Name of the Company
Frequency of Reported Odour Incidents
Percentage of Total
Pioneer Miyagi
84
30%
SPIC
45
16%
Bayer / Atofina
38
13%
Shasun Chemicals
36
13%
Asian Paints
31
11%
Tantech
26
9%
Tagros
12
4%
Others
11
4%

இதில் என்ன என்ன வாடை எந்த எந்த தொழிற்சாலைகளில் இருந்து வருகின்றது என்பதையும் இங்கே வகை படுதிள்ளேன்:-

Name of the Company
Smell of the Chemcial
Asian Paints
Chikoo smell
Pioneer Miyagi
Dead Body or Burning Corpse
Tagros Chemicals
Hospital Smell
Mitocon/SPIC
Urine or Public toilet smell





அங்கு வரக்கூடிய வாடையும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளும்:- 



Sno
Name of the Chemical
Industry
Odour of the Chemical
Health Effects
1
Methanol
Asian Paints, Morgan Ind ltd
Characteristic suffocating odour
Irritation of eyes, skin upper respiratory system, headache, drowsiness, dizziness, nausea, vomiting, visual disturbance, optic nerve damage (blindness), dermatitis
2
Acetaldehyde
Asian paints
Pungent Fruity odour
Irritation of eyes, nose throat, eye skin burns, dermatitis, conjunctivitis, cough, central nervous system depression, delayed pulmonary edema. In animals, kidney, reproductive and transgenerational effects, potential occupational carcinogen
3
Formic Acid
Asian Paints
Pungent penetrating odour
Irritation of eyes, skin, throat, skin burns, detmatitis, discharge of tears, dischargeof thin mucus, cough, breathing difficulty and nausea
4
Ammonia
TANFAC Ind Ltd
Pungent suffocating
Irritation of eyes, nose, throat, breathing difficulty, wheezing, chest pain, pulmonary edema, pink frothy sputum, skin burns
5
Hydro Fluoric Acid
TANFAC Ind Ltd
Strong irritating odour
Irritation of eyes, skin, nose, throat, pulmonary efdema, eye, skin burns, rhinitis, bronchitis, bone changes
6
Toluene
Tantech, Morgan Ind ltd, SPIC Pharma Division
Sweet pungent benzene like odour
Irritation of eyes, nose, weakness, exhaustion, confusion, euphoria, dizziness, headache, dilated pupils, discharge of tears, anxiety, muscle fatigue, insomnia, dermatitis, liver, kidney, lung damage
7
Dichloroethane
Tantech
Chloroform like odour
Irritation of skin, central nervous system depression, liver, kidney, lung damage
8
Nitrobenzene
Tagros Chemicals
Pungent odour like paste shoe polish
Irritation of eyes, skin, anoxia, dermatitis, anemia, methemoglobinemia, in animals, liver, kidney damage, testicular effects
9
Carbon tetrachloride
Tagros Chemicals
Ether like odour
Irritation of eyes, skin, central nervous system depression, nausea, vomiting, liver, kidney injury drowsiness. Dizziness, incoordination, potential occupational carcinogen
10
Epichlorohydrin
SPIC Pharma Div.
Shasun Chemcials
Irritating Chloroform like odour
Irritation of eyes, skin with deep pain, nausea, vomiting, abdominal pain, respiratory distress, cough, cyanosis, reproductive effects, potential occupational carcinogen.
11
Carbon Disulfide
SPIC Pharma division
Ether like smell
Dizziness, headache, poor sleep, weakness, exhaustion, anxiety, anorexia, weight loss, psychosis, ocular changes, coronary hear disease, gastritis, kidney, live, injury, eye, skin burns, dermatitis, reproductive effects

12
Benzene
Shasun Chemicals
Aromatic odour
Irritation of eyes, skin, nose, respiratory system, dizziness, headache, nausea, staggered gait, anorexia, weakness, exhaustion, dermatitis, bone marrow depression, potential occupational carcinogen.
13
Methylene Chloride
SPIC Pharma Division
Shasun Chemicals
Faint sweet odour
Irritation of eyes, skin, weakness, exhaustion, drowsiness, dizziness, numbness, tingling, sensation in limbs, nausea, potential occupationl carcinogen
14
Methyl mercaptan
Shasun Chemicals
Disagreeable odour like garlic or rotten cabbage
Irritation of eyes, skin, nose, throat, hoarseness, cough, loss of smell, eye burns skin blisters
15
Vinyl Acetate Monomer
Morgan Industries ltd
Pleasant fruity odour
Irritation of eyes, skin, nose, throat, hoarseness, cough, loss of smell, eye burns, skin blisters
இவ்வாறு இத்தனை கொடிய விசங்களை கொண்டுள்ள இந்த சிப்காட், கடந்த இருபது வருடங்களாக அங்கு வசித்து வந்த எத்தினை மனிதர்களை கொன்று குவித்து இருக்கும், இன்னும் கொன்று கொண்டே இருக்கும் அது அங்கே இருக்கும் வரை...........................!!!!

அதுமட்டுமிலாமல், இன்று மேலும் கப்பல் கட்டும் துறைமுகம், என்னை சுற்றிகரிப்பு தொழிற்சாலைகள்...........அணுமின் நிலையம் போன்றவைகளும் இதனை சுற்றி இப்போது வந்துவிட்டன...........................

எல்லோரும் கேட்கலாம் இதனால் வேலை வாய்ப்பு கிடைக்குமே என்று.......................இதற்க்கு ஒரே பதில்..................நீங்கள் எல்லாம் சேதுபதி IPS படம் பார்த்து இருப்பீர்கள்...........அதில் கவுண்டர்மனியும், செந்திலும் வைத்து ஒரு ஜோக் வரும் அது ஜோக் என்றாலும் அதுதான் இதற்க்கு பதில்............

அந்த ஜோக் (அதாவது விஜயகாந்த் வீட்டில் வேலை செய்து கொடிருக்கும் கவுண்டர்மணியை கப்பலில் வேலை வாங்கி தருவதாக சொல்லி வேலையை விடவைத்து செந்தில் கூட்டிட்டு போவார்............அதன் பிறகுதான் இந்த உரையாடல்.................படியுங்கள்)

கவுண்டர்மனி: டேய் கப்பல்ல எவ்வளவு சம்பளம்
செந்தில்: மாசம் பத்தாயிரம் தருவாங்கன்னே
கவுண்டர்மனி: அய்யோ பத்தாயிரம்..........!!!!!!!!!!!!!!! டேய் பத்தாயிரம் கொடுக்குற அளவிற்கு அங்கே என்ன வேலை
செந்தில்: அது ஒண்ணுமில்லைன, கப்பல் அது பாட்டு போயிட்டிருக்கும், நடு கடல்ல தீடிரென்று இஞ்சின்லே கோளாறு ஏதாவது ஆயிடுச்சுனா, நீங்க இறங்கி கப்பல தள்ளிவிடனும் அவ்வளவுதாண்ணே
கவுண்டர்மனி: நாங்க இறங்கி கப்பல தள்ளினா, பத்தாயிரத  யாரு உங்க அப்பனா வாங்குவான்...........

இப்படிதாங்க இங்கே உருவாகுற தொழிற்சாலைகளில் வேலை கிடைத்தாலும், சம்பளம் வாங்க நாம இருக்கணுமே..........!!!!!!!!!!!! தினம் தினம் செத்து கொண்டே சம்பாதிப்பதில் என்னங்க வாழ்க்கை........ தற்கொலை செய்வது, இதுவும் ஒன்றுதாங்க...................................சாவு என்றாவது ஒரு நாள் நிச்சயம்..................அதுக்காக அதை நாம் தேடிபோவதில் எனக்கு உடன்பாடில்லை................

அது ஏனோ தெரியவில்லை..ஊருக்கு ஒதுக்கு புறங்களை எல்லாம் விட்டு விட்டு இந்த பணக்கார பைதியன்லும், நம்ம அரசியல் வாதிகளும் மக்கள் குடியிருக்கும் பகுதியிலேயே இது போன்ற தொழிற்சாலைகளை அமைக்கிறார்கள்...............!!!

அவ்வாறு அமைத்து அங்குள்ள மக்களை கொண்டோளித்து பின்பு இவர்கள் பணம் சம்பாதித்து என்ன செய்ய போகின்றார்கள்..................!!!!!!!!!!!!!!!!!!

என்ன செய்வது.......கொடுமையிலும் கொடுமை என்னவென்றால்...........
"சாகும் போது தான் எதனால் சாகிறோம் என்று தெரியாமல் சாகின்றார்கள்"

3 கருத்துகள்:

aotspr சொன்னது…

இதுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

பெயரில்லா சொன்னது…

This is because of lack of awareness amoung the peoples and not join to-gether to fight to government. Due to this reason they still did not get a road the basic requirement for everyone

Last tamilan சொன்னது…

i am very happy u are collected so many information to the society