OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 20 நவம்பர், 2012

ஆட்டை பார்த்து ஓநாய் அழுததாம்


ஒரு மலாலா என்கின்ற சிறுமியை பாகிஸ்த்தானில் தாலிபான் ஆதரவாளர்களால் சுடப்பட்டப்போது உலகம் முழுவதும் ஒரே மாதிரியான கூக்குரல். கண்ணீர் கதறல்கள். லண்டன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை. சிகிச்சை முடிந்து துபாய்க்கு சுற்று பயணம். ஒரு 13 வயது சிறுமியை தாக்கிய தீவிரவாதிகள் தாலிபான்கள் மனித நேயம் இல்லாதவர்கள். மேலும் ஐய்க்கிய நாட்டு சபைக்கு வந்தது கோபம். அதர்க்காக குழந்தைகள் தினம் மலாலா தினமாக உலகம் முழுபதும் கொண்டாட்டம். வேண்டியதுதான்.



ஆனால் இஸ்ரேலிய பயங்கரவாதிலால் 53 பிஞ்சு குழந்தைகள் குண்டு வீசி தாக்கி மிக கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். பார்ப்போரின் நெஞ்சம் பதறுகிறது. ஆனால் இவர்கள் தீவிரவாதிகள் இல்லை இந்த கோழைகளின் பார்வையில். ஒரு சிறுமிக்காக கண்ணீர் வடித்தவர்கள் யாரும் பிஞ்சு குழந்தைகளின் கொடூர கொலையை கண்டுக் கொல்லவில்லை. மலாலா தினம் கொண்டாடிய ஐய்க்கிய நாட்டு சங்கத்தின் வாயில் புண் ஏற்பட்டுவிட்டது. அவர்களால் பேச இயலவில்லை என்ன செய்வார்கள். இது தான் இவர்களின் மனித நேயம், தரங்கெட்டவர்கள். மனித நேயத்தை பற்றி பேசுகின்றார்கள்.


 உலகை என்னவென்று அறிந்து கொல்லாமலே கொல்லபடும் என் முஸ்லிம் பிஞ்சுக்கள் என்ன பாவம் செய்தது??? நீங்கள் (மாற்று சமுதாயத்தவர்களே)  உங்கள் பிஞ்சு குழந்தைகளை அள்ளி கொஞ்சும் அந்த கணத்தில் என் சமுதாய மக்கள் கொன்று போட்ட பிஞ்சுக்களை அள்ளி கதறுகிறார்களே ஏன் இந்த பாரபட்சம்? ஐம்பது வயதில் கணவனை இழந்து நின்றாலே தாங்க முடியாமல் கதறும் நீங்கள் எங்கே, கன்னிகழியாமலே இறந்து போகும் எனது சமுதாய சகோதரி எங்கே??????????? தொலைகாட்சியில் வரும் அசிங்கங்களையே பார்க்க முடியாமல் வேறு ஒரு சேனல் மாற்றும் நீங்கள் எங்கே, தன் கண் முன்னே தன் தாய்/மனைவி/மகள் என்று பாரபட்சமில்லாமல் கற்பழிக்கபடுவதை பார்க்கும் என் சமுதாய சகோதரன் எங்கே????????

ஆட்டை பார்த்து ஓநாய் அழுததாம். அந்த கதைதான் இவர்கள் செய்வது எல்லாம். இறைவன் இந்த குழந்தைகளுக்காக இருக்கின்றான். இவர்களை பார்த்துக்கொண்டு இருக்கின்றான்.. பலவீனர்களை அவன் கைவிடமாட்டான். இவர்கள் பதில் சொல்ல திணறும் பொது நாம் இவர்களை பார்த்து, இன்று நம்மை பார்த்து சிரித்துக்கொண்டிருப்பவர்களை பார்த்து நாம் சிரிப்போம், இன்ஷா அல்லாஹ். இவர்களுக்காக இறைவனிடம் கையேந்துவோம். மன்றாடுவோம்.

(அதற்காக மலாலா சுடப்பட்டதை ஆதரிக்கவில்லை, அநியாயமாக யார் தாக்கப்பட்டாலும் அதை யார் செய்தாலும் தவறுதான்).  

1 கருத்து:

Unknown சொன்னது…

அண்ணா 2009 இல் எங்கே இருந்தீர்கள் உங்கள் தமிழ் சிறுவர்கள் கொல்லப்படும்போதும் இளம் பெண்கள் கற்பழிக்கப்படும் போதும் எமது ஈழத்தில்............. ஆட்டை பார்த்து ஓநாய் அழுததாம்