OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 23 ஜூன், 2011

இதோ என்னுடைய ஆப்பிள் ஐபோன் பற்றி உங்களுடன் ஓர் பகிர்வு...........


தொலைபேசி ஆடம்பரப் பொருளாக இருந்து அத்யாவசியத் தேவையாக மாறி நீண்ட வருடங்கள் ஆகி விட்டது. தற்போது தொலைபேசி இல்லை என்றால் ஒரு கையே போனது போலத்தான் பலரும் நினைப்பார்கள் அந்த அளவிற்கு நம்முடைய அன்றாடத் தேவைகளில் பின்னிப் பிணைந்து விட்டது. நேரத்தை மிச்சப்படுத்த, வேலையைத் துரிதப்படுத்த என்று அதன் பங்கு மகத்தானது. கால மாற்றத்திற்க்கேற்ப தொலைபேசியின் மீதான தேவைகளின் அளவும் மாறிக்கொண்டே இருக்கிறது.
முதலில் பேச மட்டுமே இருந்தது பின் குறுந்தகவல்கள் (SMS), பாடல் கேட்க, விளையாட தற்போது அலுவலக வேலையையே அதில் உள்ள இணையத்தின் மூலம் முடித்துவிடக்கூடிய அளவிற்கு அதனுடைய பயன்பாடு நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்துகொண்டே இருக்கிறது. இன்னும் வளர்ச்சி பெற்றுக்கொண்டே தான் செல்லும் அதில் எந்த சந்தேகமுமில்லை.
Apple Logo பிரபலமான ஆப்பிள் iPhone ஒரு (சிறு) பார்வை இணையத்துடன் பல தொலைபேசி நிறுவனங்கள் முன்பே பல மாடல்களை அறிமுகப்படுத்தி இருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான iPhone வெளிவந்த பிறகு அனைத்து தொலைபேசிகளையும் சுனாமி போல அடித்து நொறுக்கி அனைவருடைய விருப்பத் தேர்வாக மாறிப்போனது. தற்போது iPhone க்கு பிறகு பல நிறுவனங்கள் அதைப்போல தயாரித்து வெளியிட்டாலும் அனைத்து தொடுதிரை ஸ்மார்ட்ஃபோனுக்கும் முன்மாதிரி என்றால் அது iPhone தான். இதைப்பார்த்தே பலர் தங்கள் தொடுதிரை தொலைபேசிகளை பெரியளவில் தயாரித்து வெளியிட்டனர். அதற்கு முன் ஸ்டிக் கொண்டு பயன்படுத்தும் முறை இருந்தது விரலால் இல்லாமல்.
தற்போது iPhone போட்டியாக Samsung, HTC, Sony என்று பல நிறுவனங்கள் வந்து விட்டன. இருப்பினும் iPhone க்கு என்ற ரசிகர் கூட்டம் தனியாக இருந்து கொண்டு தான் இருக்கிறது.
iPhone பற்றி சில குறிப்புகள்
iPhone 4 பிரபலமான ஆப்பிள் iPhone ஒரு (சிறு) பார்வை உலகில் அதிகளவில் மக்கள் விரும்பும் சாதனங்களில் ஒன்று.
வருடாவருடம் ஜூன் மாதம் புதிய மாடலை வெளியிடும் (இந்த வருடம் தள்ளிப்போகிறது)
தற்போது இருக்கும் மாடல் iPhone 4
அடுத்தது iPhone 5 வருகிறது. இது செப்டம்பர் ல் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
இது iOS என்ற இயங்குதளத்தை (OS) தனது தொலைபேசியில் பயன்படுத்துகிறது.
தொடுதிரை பயன்படுத்த மிகவும் எளிதாக இருக்கும் மற்ற தொலைபேசிகளை ஒப்பிடும் போது.
ஒவ்வொரு முறையும் வெளியாகும் போது அதை வாங்க இரவெல்லாம் வரிசையில் நின்று வாங்க அடிதடியே நடக்கும். தற்போது சீனாவில் வெளியிட்ட போது ஆப்பிள் கடை கூட்ட நெரிசலில் உடைக்கப்பட்டு பெரிய பிரச்சனை ஆனது.
பலரால் உருவாக்கப்பட்ட லட்சக்கணக்கான மென்பொருட்கள் ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கிறது.
சில சிரமங்கள்
இதற்கு என்று உள்ள மென்பொருளை (iTunes) வைத்து மட்டுமே நாம் எதையும் செய்ய முடியும். Adobe Flash பயன்படுத்த முடியாது. ஒரே மாடல் மட்டும் தான்
இதற்கு (iPhone 4 ல் இருந்து) வழக்கமான சிம் கார்டை பயன்படுத்த முடியாது. இதற்கு என்று சிறிய அளவில் வெளியாகிறது இல்லை என்றால் நமது பழைய சிம் கார்டை கட் செய்து பயன்படுத்தலாம் இதை சென்னை போன்ற நகரங்களில் பலர் செய்து தருகிறார்கள்.
பேட்டரி நேரம் திருப்திகரமாக இல்லை.
விலைக் குறைப்பு என்பதே கிடையாது (இது பெரும்பாலான ஆப்பிள் தயாரிப்புகளுக்குப் பொருந்தும்) எப்போதும் ஒரே விலை தான் இருக்கும். இதற்குக் காரணம் தயாரிப்பின் தரம் மற்றும் டிமாண்ட்.
மேற்கூறியவை யாவும் பெரும்பாலானவர்களின் கருத்து இவை போக சிலருக்கு வேறு சில மாற்றுக்கருத்துகள் இருக்கலாம்.
iPhone iOS பயன்படுத்துவது போல மற்ற பல தொலைபேசி நிறுவனங்கள் பல இயங்குதளங்களை பயன்படுத்துகின்றன அதில் பிரபலமானது சிம்பியான் என்ற நோக்கியா இயங்குதளம் மற்றும் Android என்ற கூகுள் இயங்குதளம். சாம்சங், HTC போன்ற தொலைபேசி நிறுவனங்கள் கூகுள் Android இயங்கு தளத்தை பயன்படுத்துகின்றன. இதனால் ஒரு இயங்குதளம் ஆனால் பல தொலைபேசி மாடல்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. 2015 ல் Android இயங்குதளமே உலகளவில் முன்னணி வகிக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இதுபற்றிக் கூற நிறைய விஷயம் உள்ளதால் மற்றொரு பதிவில் விரிவாகக் கூறுகிறேன். எனவே Android ரசிகர்கள் அமைதி காக்க icon smile பிரபலமான ஆப்பிள் iPhone ஒரு (சிறு) பார்வை
ஸ்மார்ட்ஃபோனை வைத்து நீங்கள் பெரும்பாலான பணிகளை செய்யலாம். தற்போது இதில் இணைய வேகத்திற்க்காக 3G உள்ளது விரைவில் 4G வரப்போகிறது. இதன் மூலம் வீட்டுக் கணினியின் வேகத்திற்கு இணையாக நாம் இதில் இணையத்தைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் நம்முடைய அலுவலக மின்னஞ்சல்கள் மற்றும் பல்வேறு பணிகளை இதன் மூலம் செய்ய முடியும். இதன் மூலம் நேரம் மிச்சம் ஆகிறது விரைவாக நமது பணிகளை முடிக்க முடிகிறது. இவை மட்டுமல்லாமல் நம்முடைய ஒவ்வொரு தேவைக்கும் Apps என்று சுருக்கமாக அழைக்கப்படும் Applications மென்பொருள்கள் இருக்கும். இதைப்பயன்படுத்தி நமது வேலையை எளிதாக்கலாம்.
எடுத்துக்காட்டாக செய்தித்தாள்கள் படிக்க, வங்கிப்பணிகளை முடிக்க, ரெயில் PNR நிலை அறிந்து கொள்ள, பேருந்து நேரம் அறிந்து கொள்ள, கிரிக்கெட் நிலவரம் அறிந்து கொள்ள என்று கணக்கில் அடங்கா Apps உள்ளன. இதை நாம் பயன்படுத்திப் பழகி விட்டால் இவை இல்லாமல் இருப்பது என்பது மிகச்சிரமம் என்கிற நிலைக்கு மாறி விடுவோம் அந்த அளவிற்கு பயனுள்ளது. சுருக்கமாகக் கூறினால் இது சிறு கணினி போலவே செயல்படுகிறது. இவை ஆப்பிள் இயங்குதளம் என்றில்லாது பெரும்பாலான Apps கூகுள் நிறுவனத்தின் Android இயங்குதளத்திற்கும் இருக்கும்.
iOS5 பிரபலமான ஆப்பிள் iPhone ஒரு (சிறு) பார்வை விரைவில் வரப்போகும் ஆப்பிள் இயங்குதளம் க்கு தற்போது பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்க்கனவே சோதனை (Beta) அடிப்படையில் developers இதைப் பயன்படுத்திக்கொண்டுள்ளார்கள். ஆப்பிள் நிறுவனம் புதிய பதிப்பில் கிட்டத்தட்ட 200 புதிய வசதிகளை சேர்த்து இருப்பதாக அறிவித்துள்ளது. இதில் சில ஏற்கனவே Android இயங்கு தளத்தில் இருந்தாலும் iPhone பயன்பாட்டாளர்களுக்கு இது புதியது ஆகும்.
இதில் Reminder (Location based), Split keyboard, Camera (Unlock செய்யாமலே படம் எடுக்க முடியும்), Wireless Sync, News Stand, Twitter integration, Notification improvement, Individual calls deletion, iCloud, Safari additional options, Improved mail config, iMessage (between any two iOS devices) ஆகியவை குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஆகும்.
புதிய இயங்குதளம் பதிப்பு 5 ஐ iPhone 3GS and iPhone 4, iPad 1 and 2, and iPod touch 3rd and 4th generation ஆகிய சாதனங்களில் பயன்படுத்த முடியும்.

கொசுறு 1
iPhone பேட்டரியை சேமிப்பது எப்படி? போன்ற சில பயனுள்ள குறிப்புகளை அடுத்த இடுகையில் (Post) கூறுகிறேன். நான் iPhone பயன்படுத்துவதால் இதற்கான குறிப்புகளைக் கூற முடிகிறது ஆனால் Android தொலைபேசிகளுக்குக் கொஞ்சம் ஹோம் வொர்க் செய்ய வேண்டியுள்ளது எனவே அதை தாமதமாக கூறுகிறேன் icon smile பிரபலமான ஆப்பிள் iPhone ஒரு (சிறு) பார்வை  iPhone க்கு எப்படி ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போல கூகுள் Android க்கும் தாறுமாறான ரசிகர்கள் இருக்கிறார்கள். எனக்கும் Android பிடிக்கும் ஆனால் என்னுடைய பெரிய தேவையான தமிழ் இல்லை அதற்கு மாற்று வழியான Opera Mini என்ற உலவி உள்ளது இருப்பினும் அது திருப்திகரமாக இல்லை. தமிழ்க் கொண்டு வந்தால் மேலும் பலர் Android ல் இணைவார்கள் என்பது உறுதி.
கொசுறு 2
நிருபர்கள் பேட்டி எடுக்கும் போது இருக்கும் பல்வேறு செய்தி நிறுவனங்களின் மைக்குகளில் ஒரு செய்தி நிறுவனத்தின் மைக் லோகோ மட்டும் சன் செய்தியில் மறைத்துக் காட்டப்படுகிறது. அது எந்தச் செய்தி நிறுவனம் என்று உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள். ரொம்ப நாளா இருக்கும் சந்தேகம் icon smile பிரபலமான ஆப்பிள் iPhone ஒரு (சிறு) பார்வை
கொசுறு 3
இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் படமாக கோ விளங்குகிறது. செம வசூலாம். அயன் சிங்கம்படத்தின் வசூலையே மிஞ்சி விட்டதாம். சிம்பு ஒரு நல்ல வாய்ப்பை இழந்து விட்டார் ஆனால்வானம் கோ அளவிற்கு வெற்றிப்படம் இல்லை என்றாலும் வெற்றிப்படம் தான். இதன் மூலம் கோடம்பாக்கம் ஹாட் கேக்காக ஜீவா மாறியுள்ளார். தற்போது மிஷ்கின் படத்திலும் கவுதம் மேனன் படத்திலும் நடிக்கப்போவதாக செய்திகள் வருகின்றன.
கொசுறு 4
Android ல் தமிழ் மொழியை கொண்டு வருவதில் கூகுள் தாமதப்படுத்தி வந்தாலும் அதைவிட முக்கியமான ஒரு சாதனையை செய்து இருக்கிறது. Google translate என்ற வசதியை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள் அதாவது கூகுள் சப்போர்ட் செய்யும் மொழிகளை உங்களால் அதில் அனுமதித்துள்ள மொழிகளுள் மாற்றிப்படிக்கலாம் அதாவது எடுத்துக்காட்டாக உங்களுக்கு ஹிந்தி தெரியும் ஆனால் ஆங்கிலம் தெரியாது என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஆங்கிலத்தில் உள்ளதை இதில் காபி செய்து ஹிந்திக்கு மாற்ற முடியும். இதனால் ஆங்கிலம் தெரியாத ஹிந்தி நபர்கள் கூட அதில் உள்ளதை படித்து தெரிந்து கொள்ள முடியும்.
இதைப்போல வசதி தமிழில் இல்லை காரணம் தமிழ் மற்ற மொழிகளைப்போல எளிதாக மாற்றக்கூடியது அல்ல. மிகவும் கடினமான ஒன்றாகும் காரணம் ஒரு வார்த்தைக்கு பல்வேறு அர்த்தங்களை கொண்டது நமது மொழி இதனால் ஒரு தொடர் வாக்கியமாக மொழி மாற்றுவது நடைமுறையில் சிரமம். இதனால் ஹிந்திக்கு எல்லாம் இருந்த வசதி தமிழுக்கு இல்லாமல் இருந்தது எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது ஆனால் கூகுள் இதையும் மாற்றி பெரிய சாதனை புரிந்து இருக்கிறது. இதில் 100% மொழிமாற்றம் செய்ய முடியவில்லை பல்வேறு பிழைகள் மற்றும் தொடர் வாக்கியப்பிழைகள் உள்ளது அதாவது முழுமையான வரியாக இல்லாமல் பிச்சு பிச்சு உள்ளது. இது குறை தான் என்றாலும் இந்த அளவிற்கு முயற்சி செய்ததே மிகப்பெரிய சாதனையாகும். நம்மால் முழுதும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் ஒன்றுமே தெரியாமல் இருப்பதற்கு குத்து மதிப்பாக புரிந்து கொள்ள உதவும். விரைவில் இந்தக் குறைகளை களைய கூகுள் கண்டிப்பாக முயற்சி எடுக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. Hats off to Google!
ஏற்கனவே பல மொழிகள் இதில் பயன்பாட்டில் இருந்தாலும் இதனுடன் தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி மற்றும் குஜராத்தி மொழிகளை சேர்த்துள்ளது. தற்போது 63 மொழிகளை இந்த வசதியின் மூலம் நாம் பயன்படுத்த முடியும். நீங்கள் இதை சோதித்துப் பார்க்க விரும்பினால் http://translate.google.com/ சென்று பார்க்கவும் (Like English to Tamil, Hindi to Tamil). சைனீஸ் மொழியில் என்னுடைய பெயர் வடிவம் 吉裡 ஹி ஹி ஹி icon smile பிரபலமான ஆப்பிள் iPhone ஒரு (சிறு) பார்வை  இரண்டு எழுத்தை எழுதிப்பழகவே இரண்டு நாள் ஆகும் போல இருக்கே!

1 கருத்து:

Unknown சொன்னது…

மறைக்க படும் டீவி கேப்டண்டிவி