OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 21 ஜூன், 2011

இது ஒன்றும் புதுசு இல்லை......இருந்தாலும் சொல்லியே ஆகணும்..........


..





பத்திரிக்கை உலகில் இந்த கேட்டகரியில் வரும் ஒரு பத்திரிக்கையுண்டு - தினமலர்!

"உண்மையின் உரைகல்" - இது இப்பத்திரிக்கை தனக்குத் தானே சூட்டிக்கொண்டுள்ள பட்டம்! இதன் யதார்த்த அர்த்தம் தெரிந்துதான் இப்படியொரு பட்டத்தைத் தனக்குத்தானே இப்பத்திரிக்கை சூட்டிக்கொண்டுள்ளதா என்று தெரியவில்லை.

இளைய சமூகத்தைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்குவதில் எனக்கும் ஒரு பங்குண்டு என, ஆபாசத்தையும் நடிகைகளின் முன், பின் பக்கங்களையும் மூலதனமாகக் கொண்டு இயங்கும் மஞ்சள் பத்திரிக்கைகளின் தரத்துக்கு "கோலிவுட் கிசுகிசு", "பாலிவுட் பரபரப்பு" என பக்கங்களை நிறைக்கும் இப்பத்திரிக்கை, "உண்மை" என்பதன் அர்த்தம் தெரிந்திருந்தால் இப்படியொரு பட்டத்தைத் தனக்குத் தானே சூட்டிக்கொண்டிருக்காது!

கிசுகிசுக்களில் "உண்மையை எப்படி உரசிப்பார்ப்பது?", தினமலரின் ஆசிரியர் குழுவுக்கே வெளிச்சம்! இவ்வாறு நடிகைகளின் அந்தரங்கங்களைக் கிசுகிசுவாக எழுதி காசுபார்க்கும் இப்பத்திரிக்கையின் ஆசிரியர்களில் எவருக்காவது பெண் பிள்ளைகளோ சகோதரிகளோ இருக்கின்றனரா என தெரியவில்லை. தெரிந்தால், "தினமலர் ஆசிரியர் குழு வீட்டு கிசுகிசு" என எழுதி காசுபார்க்க முடியுமா என நாமும் முயற்சி செய்து பார்க்கலாம்!

தினமலரின் "உண்மை செய்திகள்" கிசுகிசுக்களில் மட்டுமா நிறைந்துள்ளது? இன்று அது வெளியிட்டுள்ள சர்வதேச செய்திகளில் ஒன்றைப் புகைப்படத்தில் காணுங்கள்.

"கிங் ஃபகத் மருத்துவமனை", சவூதியில் உள்ளது. ஆனால், நம் "உண்மையின் உரைகல்(!)லுக்கு" அது துபையில் உள்ளதாம்! சரி, ஒரு பேச்சுக்கு, இது சவூதி சென்றவர்களுக்கு மட்டும்தான் தெரியும் என்று வைத்துக்கொள்வோம்!

சவூதி எங்குள்ளது? துபையிலா? அல்லது துபை எங்குள்ளது? சவூதியிலா?

சவூதியும் துபையும் வளைகுடா நாடுகளிலுள்ள இரு நாடுகள் என்ற, ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு இருக்கும் சாதாராண புவியியல் அறிவுகூட "உண்மையின் உரைகல்(!)"லான தினமலரின் ஆசிரியர் குழுவுக்கு இல்லை என்பது கேவலத்திலும் கேவலம்! எந்த உலகத்தில்தான் தினமலர் உள்ளது? அது வழங்கும் சர்வதேச செய்திகளின் தரமும் அதிலுள்ள உண்மைத்தன்மையும் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.

ஜனநாயகத்தின் ஒரு தூணான ஊடகத்துக்கு என ஒரு பொறுப்புணர்வு உள்ளது. அதனைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, நடிகைகளின் அந்தரங்கத்தை மேயும் கிசுகிசுக்களையும் அவர்களின் ஆபாச, கவர்ச்சிப்படங்களையும் வைத்து வியாபாரம் செய்யும் நாலாந்திர லெவலிலுள்ள ஒரு பத்திரிக்கையிடம் "உண்மையாவது மண்ணாங்கட்டியாவது"!

வடிவேலுவின் காமடியை மிஞ்சிவிட்ட தினமலரின் இந்தக் கண்டுபிடிப்பை எந்த "உண்மையின் உரைக்கல்லுடன்" உரசிப் பார்ப்பது என்பதை இனி வாசகர்களே தீர்மானித்துக்கொள்ளட்டும்!

கருத்துகள் இல்லை: