OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 4 ஜூலை, 2011

உட்கார்ந்து யோசிச்சது


தமிழ் வாத்தியார்: 
பாரதியார் மனைவியுடன் திருச்சி சென்றார், இதை கேள்வி வாக்கியமாக மாற்று.
மாணவன்:
பாரதியார் யார் மனைவியுடன் திருச்சி சென்றார்?
வாத்தியார்:??????????????????

ஒரு பேருந்தின் கதறல்:

ஜாதிமதம் பேதமில்லாமல் எல்லோரையும் ஏற்றி செல்லும் என்னை, ஜாதி, மத கலவரம் வந்தால் உயிரோடு கொளுத்துவது என்ன நியாயம்?

விடுமுறை விண்ணப்பம்,

அனுப்புனர்,
நான்தான்
உன் வகுப்புதான்,
உன் பள்ளிகூடம்தான்,

பெறுனர்,
உனக்குத்தான்,
இந்த வகுப்புதான்,
இந்த பள்ளிகூடம்தான்,

மரியாதைக்குரிய ஆசிரியர்,

உன்னாலே என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ, நான் திங்கள் கிழமை பள்ளிக்கு வர மாட்டேன்.

இப்படிக்கு,
நான்தான். 

தேதி: இன்னைக்குதான்
இடம்: இந்த ஊருதான்.

mute க்கும், cute க்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?

கம்முன்னு இருந்தா MUTE
கும்முன்னு இருந்தா CUTE

பணக்காரன் : என்கிட்டே 14 காரு , 12 வீடு  அப்புறம்  கோடிகனகுல  பேங்க்  balance  இருக்கு, உன்கிட்டே என்ன இருக்கு
ஏழை: எனக்கு ஒரு மகன் இருக்கான், அவன் கேர்ள் பிரெண்ட் உன் மகள். 

ஏழைகள் ஜாக்கிரதை.............

கஸ்டமர் ஒருத்தர் கால் சென்டருக்கு கால் பண்றார்;
கஸ்டமர்: என் மொபைல் பில் எவ்வளவு?
கஸ்டமர் சென்ட்: உங்கள் 123 என்கின்ற நம்பரை டயல் செய்தால் உங்கள் current பில் தெரிந்து விடும்.
கஸ்டமர்: கரன்ட் பில் இல்லடி, மொபைல் பில்................. 

ஒரு நாள் ஒரு ஏழை மரம்வெட்டி ஒரு நகரத்துக்கு போனான் உடனே அங்கிருந்த பொண்ணுங்க எல்லோரும் அவன் பின்னாடியே போனாங்க, ஏன் தெரியுமா???

அதான் "AXE" effect!!!!!!!!!!!!!!!!!!!!!
 
ஒரு பன்ச் சொல்லி ரொம்ப நாளாச்சு:

ஓவரா பேசுற வாயும், ராத்திரில கத்துற நாயும் அடிவாங்காம போனதா சரித்திரமே இல்லை:::::::::::::::::சந்தானம் ராக்ஸ்...........................

அப்பாவுக்கும், அம்மாவுக்கும் விவாகரத்து தீர்ப்பு, 5 வருடம் அப்பாகிட்டே, 5 வருடம் அம்மாக்கிட்ட, தவிக்கும் குழந்தையின் பெயர் தமிழ்நாடு"

கடைசியா ஒரு ராக்ஸ்:
ஒரு பேருந்தில்:
பையன்: ரொம்ப நேரமா நிகிரீன்களே கொஞ்சம் உட்காருங்க
பொண்ணு: மிஸ்டர் இதுவே ஒரு கிழவியா இருந்தா இடம் தருவீங்களா
பையன்: அப்போ நீங்க கிழவி இல்லையாஆஆஆஆஆஅ????????????

பையா ராக்ஸ்:

1 கருத்து:

Mohamed Faaique சொன்னது…

விடுமுறை விண்ணப்பம் கலக்கல்...