இந்த ஐ.பி.எல். பல புதிய திறைமகைள இந்திய கிரிக்கெட் உலகுக்கு
அறிமுகப் படுத்தியிருக்கிறது.அதில் முக்கியமானவர் இக்பால் அப்துல்லா.ஷாருக்கின் கே கே ஆருக்காக ஆடுகிறார். இருபத்தொரு வயதாகிறது. இந்தப்போட்டிகளில் மலிங்காவுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்களை எடுத்து பந்து வீச்சாளர்களில் இரண்டாமிடத்தில் இருக்கிறார்.
இவையெல்லாம் இப்போது எல்லோருக்கும் தெரிந்த சங்கதிகள். ஆனால் வெளியில் அதிகம் தெரியாதது அவர் வளர்ந்த விதம்.
அசாம்கர்.உத்தரப்பிரேதசத்திலுள்ள ஒரு சிற்றூர். அதிக வளர்ச்சியைடயாத
இந்த ஊரில் பையன்களுக்கு ஒரே பொழுதுபோக்கு கிரிக்கெட். கையில் கிடைக்கும் கட்டைதான் கிரிக்கெட் பேட் ரப்பர் பந்துதான் கிரிக்கெட் பால். இப்படித்தான் அப்துல்லாவின் கிரிக்கெட் ஆர்வம் தொடங்கியது .
இன்று ஆஸ்திரேலியா வீரர்களையும் திறைமமிக்க இந்திய வீரர்களையும் வீழ்த்தும் சுழற பந்துவீச்சை இங்குதான் பழகியிருக்கிறார்.அப்துல்லாவின் அப்பா மவுல்வி நியாஸ் அகமதுக்கு உள்ளூர்ல சின்னதாய் மளிகைக்கடை சொற்ப வருமானம்.பெரிய குடும்பம். அப்துல்லா ஆறாவது பிள்ளை வறுமையிலும் கிரிக்கெட் மோகம் தீரவில்லை.
அப்துல்லாவுக்கு தினம் அப்பாவிடமிருந்து திட்டுதான். கிரிக்கெட்டே வேண்டாம் என்ற ரீதியில் திட்டுக்கள். அப்துல்லாவின் ஒரே ஆதரவு அவனது அம்மா அஸ்ரா. இந்த சூழலில் உள்ளூர்ல ஒரு கிரிக்கெட் போட்டி. அதில் அப்துல்லா சிறப்பாக ஆட, வேடிக்கை பார்க்க வந்திருந்த மும்பை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் நவ்ஷத்கானின் பார்வை அப்துல்லா மீது விழுந்தது. இந்தக் குட்டிப் பையனுக்கு ஒழுங்கான பயிற்சி தந்தால் நல்ல கிரிக்கெட் வீரனாக வருவான் என்று நினைத்து அப்துல்லாவின் வீட்டு கதைவத் தட்டினார்.
கிரிக்கெட்ட அதுகேல்லான் மகனை அனுப்ப மாட்டேன் அனுப்புவதற்கு கையில் காசும் கிடையாது என்று மறுத்தார் அப்துல்லாவின் தந்தை.ஆனால் மகனுக்காக விடாப்பிடியாக போராடி கையில் கிடைத்த காசையெல்லாம் கொடுத்து கிரிக்கெட் பயிற்சிக்கு மும்பை அனுப்பி வைத்தார் அம்மா.
மும்பையில் ஒரு சின்ன அறையில் பயிற்சியாளரும் அப்துல்லாவும்
தங்கியிருந்தனர். கடுமையான் பயிற்சி. ஜூனியர் பிரிவு போட்டிகளில் பங்கேற்க துவங்கினார் அப்துல்லா. 17 வயதுக்குட்பட்டோர் மும்பை கிரிக்கெட் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து வந்ததுதான் அவர் வாழ்கையில் நிகழ்ந்த முக்கியமான திருப்புமுனை 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பையில் ஆட இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டார் 2008-ல் மலேசியாவில் நடந்த அந்தப்போட்டியில் இந்தியா கோப்பையை வென்றது அப்துல்லா பத்துக்கும் மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்தினார்.அதன் பிறகு
அப்துல்லாவுக்கு ஏறுமுகம்.
உலகக்கோப்பையை வென்றதுகாக கிரிக்கெட் வாரியன் ஆட்டக்காரர்களுக்கு பதினைந்து லட்ச ரூபாய் பரிசாக கொடுத்தது.அப்துல்லாவுக்கு கிடைத்த பணத்தில் பதின்மூன்று லட்ச ரூபாயில் மும்பையில் ஒரு சின்ன ஃப்ளாட் வாங்கினார். இரண்டு லட்ச ரூபாயில் அம்மா, அப்பாவை ஹஜ் புனிதப் பயணத்துக்கு அனுப்பிவைத்தார் அப்ேபாது அப்துல்லா படித்துக்கொண்டிருந்தது பன்னிரண்டாம் வகுப்பு.
என் பையன் கிரிக்கெட்லே இவ்வளவு நல்லா வருவான்னு நினைகில கிரிக்கெட்டை ஒரு சாபம்னுதான் நினைச்சேன். இப்போ அதுவே எங்க குடும்பத்துக்கு வரமா அமைஞ்சுபோச்சு என்று இப்போது மனதார சொல்லுகிறார் தந்தை.‘முன்னலாம் இவன் வாங்குன கோப்பை, பதக்காதைஎல்லாம் ஒளிச்சு வைப்பேன், இவர் பாத்தார்னா திட்டுவார்னு.இப்போ நிம்மதியா இருக்கு. என் பையன்
சாதிச்சிட்டான்’ என்கிறார் அம்மா.ஆனால் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடுவதைத்தான் சாதனையாக நினைக்கிறார் அப்துல்லா.
‘நான் என்னுைடய திறைமைய ெவளிக்காட்டிக்கொண்டிருக்கிறேன்
இந்திய அணியில் ஆட விரைவில் அழைப்பு வரும் என்று நம்புகிேறன்’ என்கிறார் அடக்கமாக.
இறக்கத்திலிருந்து இமயமைல ஏறியவருக்கு எவரெஸ்ட்டைத்தொட
இயலாதா என்ன?.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக