OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 28 ஏப்ரல், 2011

இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாருமே இல்லையா?



இந்த பதிவுக்கு இது போன்ற தலைப்பை விட இரண்டு ________ களின்கேம் ஷோ , என்றோ ராஜ் டிவியின் முள்ளமாரித்தனம் என்றோ,தொலைக்காட்சியின் வியாபார விபச்சாரம் என்றோ இன்னும் சில கோபமான தலைப்புகளும் மனதில் எழுந்த போதும் பதிவுலகில் சீரியசான பதிவுகள் படிக்கப்படுவதை காட்டிலும் காமெடியான பதிவுகள் அதிகமாக படிக்கப்படுகின்றது என்ற காரணத்தால் (அல்லது நானே நினைத்துக்கொண்டதால்)இந்த தலைப்பை வைத்து இருக்கின்றேன்.

ராஜ் டிவியில் கீழே உள்ளம் கேம் ஷோ ஐ எப்பவாவது பார்த்து இருப்பீர்கள். படத்தில் காணும் நபர்கள் யார் என்பதை கால் பண்ணி சொன்னால் பணம் 60000 ரூபாய் கிடைக்கும் என்ற தகவலை பெரிய எழுத்திலும், ஒரு காலுக்கு (call-அழைப்பு) 10 கட்டணம் என்பதை சிறிய எழுத்திலும் அமைத்து ஒளிபரப்புகின்றார்கள். ஒரு 100 ரூபாயாவது யாருக்காவது கொடுத்தால் சந்தோசம் தான். ஆனால் இது ஒரு நேரடி ஒளிபரப்பே இல்லை என்பது தான் மிகப்பெரிய அயோக்கியத்தனம்.

ரெகார்ட் செய்த வீடியோ கிளிப்புகளை கொண்டு நேரடி ஒளிப்பரப்புபோன்று ஒளிபரப்பு செய்யப்படுகின்ற இந்த திருட்டுத்தனம் ஏன்? இந்த நிகழ்ச்சி தினமும் குறைந்த பட்சம் 2 முறை அரைமணி நேரம் வீதம் மொத்தம் 1 மணி நேரம் ஒளிபரப்புகிண்டார்கள். ஒரு நாளில் ஒரு நிமிடத்திற்கு இருவர் என்று ஆசைப்பட்டு (பேராசை பட்டு) கால் செய்தால் கூட 60 நிமிடத்திற்கு 120 பேர் வீதம் 1200 ரூபாயை மக்களிடம் இருந்து திருடிக்கொண்டு இருக்கின்றார்கள். பெரும்பாலானவர்களுக்கு இது நேரடி ஒளிபரப்பு அல்ல (live) என்பதே தெரியவில்லை. படிக்க தெரிந்தவர்கள் live என்ற வார்த்தை இருக்கின்றதா என்பதை பார்க்க கூட மனம் வராது.

காரணம் இந்த ரெண்டு ನೈಕಲುಂ பேசுவதை கேட்கும் போது இது நேரடி ஒளிபரப்பு என்று நினைத்து விடுவார்கள். நான் பழகும் மனிதர்களில் தினமும் ஒருவராவது குறைந்தபட்சம் 250 ரூபாயாவது தொலைத்துவிட்டு லைன் கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகின்றார்கள். அப்போதும் அவர்களுக்கு தெரிவதில்லை அவர்கள் ஏமாற்றப்படுவது. மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். லாட்டரியை விட மோசமான ஒன்று இது. அதில் குறைந்த பட்சம் பணத்திற்கு ஒரு சீட்டையாவது தருகின்றார்கள்.

இந்த நிகழ்ச்சியை பார்த்து ஏமாறுபவர்கள் எல்லாம் அதிகம் கல்வி அறிவு இல்லாத, பண வசதி இல்லாத ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தான். இது போன்ற மக்களிடம் இருந்து நேரடியாக திருட திருடர்களுக்கு கூட மனம் வராது. ஆனால் மக்களிடம் நேர்மையாக இருக்க வேண்டிய ஊடகத்துறை இது போன்ற கொள்ளைகளில் ஈடுபடுவது மிகவும் கேவலமான ஒன்று. அப்படி கொள்ளை அடிக்கும் அளவுக்கு பணம் வேண்டும் என்றால் இதோ, ரெகார்ட் கால்ஸ் என்று தெரிந்தே இது மக்கள் ஏமாற்றுகின்றோம் என்று தெரிந்தே இது போல நடிக்கும் இந்த ____ கொண்டு ஆபாச படங்களைஎடுத்து (porngrapy) நடு இரவுகளில் ஒளிபரப்பு செய்து கொண்டு trp ரேட்டை அதிகமாக்கி கொள்ளலாம். விளம்பரங்களின் மூலம் இதைவிட அதிக பணம் கிடைக்கும்.

இதில் ராஜ் டிவி www.vettrimaalai.com என்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து திருடிக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்களின் மின் அஞ்சல் முகவரி customercare@vettrimaalai.com ஆகும். அவர்கள் தான் இந்த தொலைபேசி எண்ணின் மூலம் பணத்தை திருடி ராஜ் டிவிக்கு பங்கு கொடுப்பவர்கள்.

இதை படிக்கும் யாராவது சட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்த முடியுமா என்று முயற்சி செய்து பாருங்கள். குறைந்த பட்சம் அவர்களின் மின் அஞ்சலுக்கு நமது கோபத்தை வெளிபடுத்துவோம். பதிவுலகில் இதை பற்றி அதிகமாக விமர்சித்தால் அது இந்த ராஜ் நிறுவனத்தை சென்று அடையும். அதன் மூலம் அந்த நிறுவனமே இந்த நிகழ்ச்சியை நிறுத்தினால் மட்டுமே இந்த திருட்டை தடுக்க முடியும். இதை இன்டலியில் பாப்புலர் ஆக வேண்டும். அல்லது இதை பற்றிய கட்டுரை அதிகமாக வர வேண்டும்.

குறைந்த பட்சம் இதை காப்பி & பேஸ்ட் செய்து உங்கள் பதிவாக அல்லதுமீள்பதிவாக இடுங்கள்எனது பதிவின் பெயர் போட வேண்டும் என்றஅவசியம் நிச்சயம் இல்லை

இந்த கண் முன்னே நடக்கும் திருட்டை நம்மால் தடுக்க முடியுமா என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுகொள்வோம்.

மேலே படத்தில் உள்ள थिदार्कालाई எங்கேயாவது பார்த்தால் ..........................................! 

கருத்துகள் இல்லை: