அல்லாஹ் தஆலா இந்த சமுதாயத்திற்கு வழங்கியிருக்கும் அருட்கொடைகளில் மிகப்பெரிய அருட்கொடையாக திருக்குர்ஆன் திகழ்கிறது. அந்த குர்ஆனை ஓதுபவர்களுக்கு பல சிறப்புகளையும் அல்லாஹ் வழங்கியுள்ளான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
யார் அல்லாஹ்வுடைய வேதத்திருந்து ஒரு சொல்லை ஓதுவாரோ அதற்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை என்பது அது போல் பத்துமடங்குவரை உண்டு. ”அஃப் லாம் மீம்” என்பதை நான் ஒரு எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக அப் ஒரு எழுத்து லாம் ஒரு எழுத்துமீம் ஒரு எழுத்து என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), நூல் : திர்மிதீ (2835)
இதே போன்று சில குறிப்பிட்ட சூராக்களுக்கு குறிப்பிட்ட சிறப்புகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பது ஆதாரப்பூர்வமானஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திரு குர்ஆனில் சிறப்பித்து கூறப்படும் அத்தியாயம் தொடர்பாக உள்ள ஹதீஸ்களில் ஆதாரமற்ற ஹதீஸ்கள் அதிகமாக உள்ளது
ஆகவே அவற்றை தவிர்த்து கொண்டு .. ஆதாரமான ஹதீஸை மட்டும் பின்பற்றுவோம்
பகரா அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக வரும் ஹதீஸ்களின் தரத்தை பற்றிப் பாப்போம்
ஆதாரமான ஹதீஸ்கள்
விரண்டோடும் ஷைத்தான்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் உங்கள் இல்லங்களை (தொழுகை ஓதல் நடைபெறாத)சவக் குழிகளாக ஆக்கிவிடாதீர்கள் அல்பகரா எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஓதப்படும் இல்லத்திருந்து ஷைத்தான் வெருண்டோடிவிடுகிறான்.
அறிவிப்பாளர்:அபூஹரைரா(ர)
நூல்: முஸ்லிம் 1430, திர்மிதி 2802, அஹமது 7487 , 8089, 8560, 8681
பரிந்துரை செய்யும் அத்தியாயம்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் குர்ஆனை ஓதிவாருங்கள் ஏனெனில் குர்ஆன் ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும் இரு ஓளிச்சுடர்களான அல்பகரா மற்றும் ஆலு இம்ரான் ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதிவாருங்கள் ஏனெனில் அவை மறுமை நாளில் நிழல்தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும் அல்பகரா அத்தியாயத்தை ஓதிவாருங்கள் அதைக் கையாள்வது வளம் சேர்க்கும் அதைக் கை விடுவது இழப்பைத் தரும் இவ்வசத்தியாயத்திற்கு முன் சூனியக்காரன் செயழந்துபோவார்கள்.
அறிவிப்பாளர் அபூ உமாமா (ரலி)
நூல்: முஸ்ம் 1440 அஹ்மத் 21126, 21136, 21169, 21186
இறைவனிடம் வாதம் செய்யும் சூரா.
நபி (ஸல்) அவர்கள் மறுமை நாளில் குர்ஆனும் அதன்படி செயலாற்றியவருர்களும் அழைத்து வரப்படுவார். அப்போது அல்பகரா அத்தியாயமும் ஆலு இம்ரான் அத்தியாயமும் முன்னே வரும் என்று கூறிவிட்டு இ(வ்விரு அத்தியாயங்களும் முன்னே வருவ)தற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வரும்) மூன்று உவமைகளைக் கூறினார்கள்.அவற்றை நான் இதுவரை மறந்திடவில்லை. அவ்விரு அத்தியாயங்களும் (நிழல் தரும்) மேகங்களைப் போன்று அல்லது நடுவே ஓளியுள்ள இரு கரும் நிழல்களைப் போன்று அல்லது அணி அணியாகப் பறக்கும் இரு பறவைக் கூட்டங்களைப் போன்று (முன்னே வந்து) தம்மைக் கையாண்டவருக்காக (இறைவனிடம்) வாதாடும்.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி)
முஸ்லிம் 1471, திர்மிதி 2808, 16979
ஷைத்தானை விரட்டும் சூரா.
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் அல்லாஹ் வானம் பூமியை படைப்பதற்கு ஆயிரம் வருடத்திற்கு முன்பு ஒரு கிதாபை எழுதினான் அந்த கிதாபிருந்து இரண்டு ஆயத்தை இறக்கி சூரத்துல் பகராவை முடித்திருக்கிறான் எந்த வீட்டில் மூன்று இரவுகள் ஓதப்படுகிறதோ அந்த வீட்டில் ஷைத்தான் நெருங்க மாட்டான்.
திர்மிதி 2882 தாரமி 3253
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக